காலை நாளிதழ்கள் அனைத்தையும் வாசித்து முடித்துவிட்டு, வாசலில் சாய்வு நாற்காலியில் அவர் சாய்ந்து அமர்ந்திருந்தார். என்ன காரணத்தாலோ உலகம் இன்று எப்போதும் இருப்பதைவிட பிரகாசமாகவும் அழகாகவும் இருப்பதைப்போல அவருக்குத் தோன்றியது. அதிகமான வெப்பமும் இல்லை. குளிர்ச்சியும் இல்லை... சிறிய ஒரு சாரல்மழைக்குப் பிறகு சூரியனின் சுகமான பிரகாச கீற்றுகள் எல்லா இடங்களிலும் பரவிக்கொண்டிருந்தன. இலைகளின் நுனிகளில் கீழே உதிர்ந்து விழலாமா வேண்டாமா என்ற சந்தேகத்துடன் நீர்த்துளிகள் தங்கி நின்றுகொண்டிருந்தன.

முன்பு எப்போதோ வாசித்து மறந்துவிட்ட ஒரு கவிதையின் வரிகளை அவர் மனதில் முணுமுணுத்துக் கொண்டிருந்தார்.

"மனமே என்றும் பிரகாசம்

இந்த உலகே என்றும் பேரழகு...'

Advertisment

இவ்வாறு "என்றும் பேரழ'கைப் பற்றி மனதில் முணுமுணுத்துக் கொண்டிருந்தபோது அவருக்கு திடீரென்று தோன்றியது.

ஏன் ஒரு சிறிய நடை சென்றுவிட்டு வரக்கூடாது? இப்போது... இந்த காலை வேளையிலேயே... டாக்டரும் சொல்ல ஆரம்பித்து சில நாட்கள் ஆகிவிட்டன- "நீங்க இப்படியே சாஞ்சு உட்கார்ந்து வாசிச்சிக்கிட்டோ எதையாவது எழுதிக்கிட்டோ இருப்பதால எந்தவொரு பிரயோஜனமும் இல்ல. நல்ல உடல்நலம் வேணும்னா நடக்கணும்.... நடக்கறதுதான் ஒரு மனிதனை...'

அப்போது டாக்டரைத் தடுத்தவாறு அவர் கூறுவார்: "டாக்டர்... உங்களுக்கு என்ன தெரியும்? நான் முன்ன பல கிலோமீட்டர் நடையில்ல... ஓட்டமே ஓடியிருக்கேன் ஓட்டம்னா...'

Advertisment

அப்போது டாக்டர்:

"அதெல்லாம் பழைய விஷயம். நான் இப்போதைய விஷயத்தைச் சொல்றேன். ஓட எதுவும் வேண்டாம். நடந்தா போதும். ரொம்ப "ப்ரிஸ்க்' கா... இப்போ உங்களுக்கு நோய் இல்ல. மனைவிக்குதான் நோய்.... இப்படி எதுவுமே செய்யாம உட்கார்ந்திருந்தா நாளைக்கு நீங்களும்...'

அன்பு காரணமாகத்தான் டாக்டர் இப்படியெல்லாம் கூறுகிறார்' என்ற விஷயம் அவருக்குத் தெரியும் அதனால்... இன்றிலிருந்து... ஆரம்பத்தில் மார்க்கெட் வரை... இல்லாவிட்டால் ஸ்டேடியத்தின் மூலைவரை... பிறகு கொஞ்சம் கொஞ்சமாக...

protest

இப்படியெல்லாம் சிந்தனையில் மூழ்கியபோது, புதிதாக ஒரு உற்சாகம் வந்து சேர்ந்திருப்பதைப்போல அவர் உணர்ந்தார்.

அவர் உள்ளே சென்று மனைவியிடம் கூறினார்:

""நான் கொஞ்சம் மார்க்கெட்வரை போயிட்டு வர்றேன். நாக்பூர் ஆரஞ்சு சீஸனாச்சே! கிடைச்சா கொஞ்சம் வாங்கலாம்.''

மனைவி சந்தேகத்துடன் அவரைப் பார்த்தாள். ""இன்னிக்கு தேவையா? இன்னிக்கு நகரத்தில போராட்டமும் எதிர்ப்பை வெளிப்படுத்துற ஊர்வலமும் இருக்கே?''

அப்போதுதான் அவர் நினைத்துப் பார்த்தார்- உண்மைதானே?

ஆனால்... பிறகு அவர் கூறினார்:

""போராட்டமும் ஊர்வலமும் அங்க... கலெக்டர் அலுவலகத்திற்கு முன்னால்தானே? நான் அங்க போகலையே! பிறகு... இப்பெல்லாம் போராட்டமும் ஊர்வலமும் இல்லாம ஒரு நாளாவது இருக்கா? இதையெல்லாம்

நினைச்சுக்கிட்டு வெளியே எப்படி போகாம இருக்கமுடியும்? அது முடியாத விஷயம். நாமெல்லாம் இப்படி பயந்துகிட்டு அடங்கி ஒதுங்கியிருப்பதாலதான்...''

இளம்வயதில் சுதந்திரப் போராட்டத்தில் கலந்துகொண்டதையும், போலீஸிடம் அடி வாங்கியதையும், சிறைக்குச் சென்றதையும்...

அப்போது அவர் நினைத்துப் பார்த்தார்.

""அதெல்லாம் ஒரு காலம்!''

""என்ன சொல்றீங்க?''

அவர் கூறினார்:

""ஒண்ணுமில்ல... நான் இப்படி ஒவ்வொன்னையும் நினைச்சு...''

மனைவி கூறினாள்:

""சீக்கிரமா வந்துடணும்.''

அவர் தலையை ஆட்டினார்.

சாலைக்குச் சென்று மார்க்கெட்டை நோக்கி நடந்தபோது, அவருடைய கையில் காய்கறி, பழங்களை வாங்கிவருவதற்கான, காக்கிநிறத் துணியாலான பை இருந்தது.

மார்க்கெட்டை அடைந்தபோது அவர் பார்த்தார். பெரிய... பளபளப்பான நாக்பூர் ஆரஞ்சுகள்! அவரை எதிர்பார்த்துக்கொண்டிருப்பதைப்போல... எப்போதும் வாங்கக்கூடிய கடையாக இருந்ததால் அவர் விலையெதுவும் பேசவில்லை.

இரண்டு கிலோ ஆரஞ்சுப்பழங்களை வாங்கிக்கொண்டு அவர் திரும்பினார்.

திரும்பியபோது, அவருக்கு ஒரு சிறிய தவறு உண்டாகிவிட்டது.

பலவற்றையும் சிந்தித்தவாறு, நடைபெற்ற- முக்கியமாக இளம்வயதில் நடைபெற்ற போராட்டச் செயல்களை நினைத்தவாறு அவர் கலெக்டரேட்டிற்குச் செல்லும் சாலையின் வழியாக நடந்தார். அவர் அதை அறிந்திருக்கவில்லை. ஆனால், கலெக்டரேட்டுக்கு ஒரு பர்லாங் முன்னால் சென்றதும் அவர் அதிர்ச்சியடைந்துவிட்டார். அங்கு முழுவதும் ஆரவாரமாக இருந்தது. ஆட்கள்... கோஷங்கள்... போலீஸ்... தடுப்புகள்...

ஒரு சிறிய போர்க்களத்தைப் போலவே இருந்தது.

திடீரென்று ஒரு காவல்துறை வாகனம் சீறிப்பாய்ந்து வந்து அவருக்கு முன்னால் சில அடி தூரத்தில் நின்றது.

வண்டியிலிருந்து வெளியே இறங்கிய இளைஞரான போலீஸ் அதிகாரி அவரை நோக்கி கைத்துப்பாக்கியை நீட்டியவாறு உரத்த குரலில் கூறினார்:

""ஸ்டாப்...''

அவர் அதிர்ச்சியடைந்து நின்றார்.

போலீஸ் அதிகாரி அவருடைய பைக்கு நேராக சுட்டிக்காட்டியவாறு உரத்த குரலில் கத்தினார்.

""வாட் ஈஸ் தட்? என்ன அது?''

அவர் மெதுவாகக் கூறினார்:

""ஆரஞ்சு.. நாக்பூர் ஆரஞ்சு...''

போலீஸ் அதிகாரி கூறினார்:

""புட் இட் டவுன்... புட் இட் டவுன்... கீழே வை...'' வெடிபொருளுக்கு அருகில் வருவதைப்போல மிகுந்த கவனத்துடன் போலீஸ் அதிகாரி இரண்டடிகள் முன்னோக்கி வந்தார். பிறகு... கேட்டார்:

""ஆரஞ்ச்... ஆரஞ்ச்? வேர் ஈஸ் தி ரெஸிப்ட்...? இன்வாய்ஸ்? கமான்... ஷோ மீ...''

அவர் திகைப்படைந்து நின்றாரே தவிர, எதுவுமே கூறவில்லை.

இரண்டு கிலோ ஆரஞ்சு வாங்கியதற்கு ரசீதா? இன்வாய்ஸா?

அந்த ஆளுக்கு பைத்தியம் பிடித்துவிட்டதா?

சாலையின் இன்னொரு பக்கத்திலிருந்து தொலைக்காட்சிக்காரர்கள் இவற்றையெல்லாம் கேமராவில் பதிவு செய்துகொண்டிருந்தார்கள்.

அப்போதுதான் அது நடந்தது.

எங்கிருந்தோ பறந்துவந்த ஒரு கல் அவருடைய நெற்றியில் பட்டது.

பிறகு... அவருக்கு எதுவுமே ஞாபகத்தில் இல்லை.

நினைவு வந்தபோது, அவர் பார்த்தார்-

அவர் மருத்துவமனையில் இருந்தார். அங்கு நோயாளியான அவருடைய மனைவியைத் தவிர எல்லாரும் இருந்தார்கள். மருமகன் சோமன், சோமனின் மனைவி மீனு, பத்திரிகையாளர்களான தினகரன், மோகன்ராஜ்... பிறகு... ராமச்சந்திரனும் டாக்டரும்.

டாக்டர் கூறினார்:

""இல்ல... பயப்படுறதுக்கு எதுவுமே இல்ல... இன்னைக்கே வீட்டுக்குப் போகலாம்.''

டாக்டர் சொல்லிமுடிப்பதற்கு முன்பே கலெக்டர் வந்தார்.

டாக்டருடன் பேசிவிட்டு, கலெக்டர் அவருக்கு அருகில் வந்தார்.

""ஸாரி சார்... இப்படியெல்லாம் நடந்ததுக்காக நான் ரொம்ப வருத்தப்படுறேன். முதலமைச்சர் கூப்பிட்டார். இப்போ கவலைப்படுறதுக்கு எதுவுமில்லைன்னு நான் சொன்னேன். உங்களையும் அழைக்காம இருக்கமாட்டார். ஒருவேளை... வந்தாலும் வரலாம்.''

தொடர்ந்து மிகுந்த வெறுப்புடன்

அவர் தனக்குப் பின்னால் அட்டென்ஷனில் நின்றுகொண்டிருந்த போலீஸ் அதிகாரிகளிடம் கேட்டார்:

"அந்த பையை நல்லா சோதிச்சுப்

பார்த்தீங்களா? அதுல வெடிகுண்டோ... வேறு ஏதாவது வெடி பொருட்களோ...

கலெக்டர் கூறி முடிப்பதற்கு முன்பே போலீஸ் அதிகாரி கூறினார்:

""நோ... சார்.''

""பிறகு... என்ன இருந்தது?''

""ஆரஞ்சு இருந்தது சார். நாக்பூர் ஆரஞ்சு... நான் நினைச்சேன்...''

கலெக்டர் கூறினார்:

""எங்கே அது?''

போலீஸ் அதிகாரி பையை முன்னால் நகர்த்தி வைத்தார்.

கலெக்டர் அதிலிருந்து ஒரு ஆரஞ்சுப் பழத்தை எடுத்து திருப்பியும் புரட்டியும் பார்த்துவிட்டுக் கேட்டார்:

""இதுதான் வெடிகுண்டு... இல்லையா?''

போலீஸ் அதிகாரி கூறினார்:

""ஸாரி சார்... நான் நினைச்சேன்...''

கலெக்டர் மிகவும் மெதுவாக தனக்குத்தானே கூறிக்கொள்வதைப்போல கூறினார்:

""என்ன சொன்னாலும் ஒரு "ஸார்.... ஸாரி சார்...'' உத்தர்கண்டிலிருந்தும் இமாச்சலிலிருந்தும் வந்து, இங்கிருக்கும் மொழியையும் மனிதர்களையும் "பொல்யூட்' செய்யும்... எனக்கே வெறுத்துப்போச்சு... இன்னிக்கு முழுவதும் சேனல்கள் ஆரஞ்சு பாம்... இனி நாளை பத்திரிகைகள்... முடியல...

முடியல...''

கலெக்டர் வெறுப்புடன் எழுந்துசென்றபோது, மீண்டும் அவரிடம் கூறினார்:

"நான் இப்போ போறேன். அலுவலகத்தில நிறைய வேலை இருக்கு. பிறகு... சார்... நீங்க முழுமையா குணமானபிறகு வீட்டிற்குத் திரும்பிப்போனா போதும்.''

எதையோ நினைத்ததைப்போல கலெக்டர் இதையும் சேர்த்துக் கூறினார்:

""முதலமைச்சர் கூப்பிட்டா, இந்த ஆளைப்பற்றி எதுவும் சொல்லாதீங்க. ஆள் ஒரு அறிவில்லாத வனா இருந்தாலும், அப்பாவி...''

அவர் சிரித்துக்கொண்டே தலையை ஆட்டினார்.

ப்