சட்டம்: காக்கிகள் கைகளில் சிக்கிய கொலைக் கருவி? -கோவி.லெனின்

/idhalgal/eniya-utayam/law-killing-tool-hands-khakis-glenin

ப்படிப்பட்ட கொடூரமான காவல்துறையினர் இந்த அநியாயமான இரட்டைப் படுகொலையை 2020ஆம் ஆண்டில் நடத்துவார்கள் என்பதை அறிந்து என்றைக்கோ, ‘சாத்தான்’குளம் எனப் பெயர் பெற்றுவிட்டதோ அந்த ஊர்?

தந்தையையும் மகனையும் காவல் நிலைய சித்திரவதையில் கொடுமையாகத் தாக்கி, குற்றுயிராக்கி, சிறையில் அடைத்து, அவர்கள் உடல்நலன் குன்றி, மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு, ஒருவர் பின் ஒருவராக இறந்த செய்தி அறிவிக்கப்பட்டது என்பது தமிழ்நாட்டில் காவலர்கள் சட்டத்தை எப்படிக் கையாள்கிறார்கள் என்பதை வெட்ட வெளிச்சமாக்கிவிட்டது.

dd

உயிரைப் பறிக்கின்ற அளவிற்கு அப்பாவும் மகனும் செய்த கொடுந்தவறு என்னவென்றால், ஊரடங்கு நேரத்தில் கடையைத் திறந்து வியாபாரம் செய்தார்கள் என்பதுதான்.

அதற்காகத்தான் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ரத்தம் சொட்டச் சொட்ட சித்திரவதை செய்யப்பட்டு, இரட்டை உயிர்கள் காவு வாங்கப்பட்டுள்ளன.

கொலைகார காவல் அதிகாரிகள் தப்பிக்க நினைத்தனர்,

அரசாங்கம் காப்பாற்ற முயன்றது, அமைச்சர்கள் இந்தக் கொடூரத்திற்கு நியாயம் கற்பித்தனர். எல்லாவற்றையும் மீறி, ஒட்டுமொத்த மக்களின் எதிர்ப்புக் குரலும்-கண்டனமும், நீதிமன்றத்தின் அக்கறையான விசாரணையும், உண்மையை அம்பலப்படுத்தவிட்டன. இதில் நக்கீரன் இதழின் பங்கு மகத்தானது.

முதல்முறையாக காவலர்களின

முதல்முறையாக காவலர்களின் அத்துமீறலை பொதுமக்கள் ஒரே குரலில் கண்டித்திருப்பது, சாத்தான்குளம் கொடூரத்தில்தான். ஏனென்றால், இத்தனை காலமாக காக்கி உடுப்பு என்றால் பொதுமக்களுக்கு ஒரு மரியாதை உண்டு. அது கம்பீரமான உடுப்பு என்கிற பார்வை உண்டு. குற்றங்கள் புரிந்தோருக்கு உடனடி தண்டனை வழங்காமல் நீதிமன்றம், வழக்கு, மேல்முறையீடு, விடுதலை எனத் தொடரும் சட்ட நடைமுறைகளால் பொதுமக்களுக்கு ஏற்பட்டிருந்த அதிர்ச்சியும் அயற்சியும் காவலர்களே சட்டத்தைக் கையில் எடுத்துக்கொள்ளும்போது அதனை வரவேற்கும் மனநிலையைக் கொடுத்தது.

dd“நான் போலீஸ் அல்ல... பொறுக்கி’’ என காக்கி உடுப்பு அணிந்த சினிமா கதாநாயகன் பேசிய வசனத்திற்கு அரங்கம் அதிர்ந்தது. உண்மையான போலீஸ் அதிகாரிகளும் இப்படித் தான் இருக்கவேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக மாறியது.

“வழக்கு நடத்தி, தண்டனை வாங்கிக்கொடுத்து, சிறையில் அடைத்து, மக்களின் வரிப்பணத்தில் மூன்று வேளை சோறு போட்டு செலவழிப்பதைவிட, ஒரேயொரு துப்பாக்கித் தோட்டாவுக்கான செலவு மிகக்குறைவுதான்’’ என்றபடி வில்லனை சுடுகின்ற திரைப்பட நாயகனின் ‘என்கவுண்ட்டருக்கு ஏகோபித்த வரவேற்பு கிடைத்தது. இதே வரவேற்பு நடைமுறையிலும் கிடைத்தது.

தெலங்கானாவில் பாலியல் குற்றவாளிகள் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டபோது பொதுமக்களிடம் ஆதரவு அலை எழுந்தது. இதுபோல மற்ற குற்றவாளிகளின் கதையையும் முடிக்கவேண்டும் என்பது அவர்களின் எதிர்பார்ப்பாக அமைந்தது. விசாரணை இன்றி தண்டனை தரும் வகையில் சட்டத்தைத் தன் கையில் எடுத்துக்கொள்ளும் காவல்துறையினர், அந்த அளவுகோலை எல்லாத் தரப்புக்கும் சரியான முறையில் துலாக்கோல் போல பயன்படுத்துகிறார் களா என்பதை பொதுமக்கள் இத்தனை காலம் கவனிக்கத் தவறியிருந்தனர்.

சாதாரண ரவுடிகள் கைது செய்யப்பட்டு காவல் நிலையத் திற்கு அழைத்துச் செல்லப்பட்டால், அங்கே உள்ள பாத்ரூமில் வழுக்கி விழுந்து கைகளை உடைத்துக் கொண்டதாக ஒரு படம் மறுநாள் வெளியிடப்படும். அண்மைக்காலமாகத் தமிழ்நாட்டில் இப்படி பல கைதிகள், காவல்நிலைய கழிவறையில் வழுக்கி விழுந்திருக்கிறார்கள். அதே கழிவறையைப் பயன்படுத்தும் காவலர்களும் அதிகாரிகளும் ஒரு முறைகூட வழுக்கி விழுந்ததில்லை. ஏனென்றால், அவர்களின் காக்கி உடுப்பும்-கறுப்பு ஷூவும் அத்தனை வலிமையாக அவர்கள் வழுக்கிவிழாதபடி காப்பாற்றி விடும்.

காவலர்கள் வழுக்கிவிழாமல் இருப்பதைக்கூட அவர்கள் மிக கவனமாக இருக்கிறார்கள் என எடுத்துக் கொள்ளலாம். ஆனால், அதே காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைக்கப்படும் பெரிய தாதாக்கள், பெரிய இடத்துடன் தொடர்புடையவர்களில் யாரும்கூட அந்த கழிவறையில் இதுவரை வழுக்கி விழுந்ததில்லை. காவலர்களைப் போலவே செல்வாக்கு மிக்க குற்றவாளிகளும் பாதுகாப்பாக விசாரணையை எதிர்கொண்டு, பத்திரமாகத் திரும்புகிறார்கள். அல்லது சிகிச்சை எடுக்க வேண்டுமென மருத்துவமனையில், காவல்துறையினரின் உதவி-ஒத்துழைப்புடனேயே அனுமதிக்கப்பட்டு ஓய்வெடுக்கிறார்கள். அவர்களுக்கு சேவை செய்யும் காவல்துறையினரும் உண்டு.

குற்றச்செயல்களில் ஒரே அளவாக இருந்தாலும் எளிய குற்றவாளிகளுக்கான தண்டனையை காவல்துறையே, தான் வலிந்து எடுத்துக்கொண்ட சட்ட அதிகாரத்தின் மூலம் வழங்கி விடுகிறது. வலிமையானவர்கள் என்றால் நீதிமன்றத்தில்கூட நிரூபிக்க முடியாத அளவுக்கு குற்றவாளிகளுக்கு காவல்துறை துணைபோகிறது. இது குறித்து, இத்தனை காலம் கேள்வி எழுப்பாததன் விளைவுதான், சாத்தான்குளம் காவல் நிலையத்தில் நடந்த காக்கி கொடூரம்.

ddலத்தி என்பது கத்தியைவிட பயங்கரமான ஆயுதம் என்பதும், அது உடலின் மறைவான பகுதிகளுக்குள்ளும் ஊடுருவி, உயிரை மெல்ல மெல்ல உருவி எடுத்துவிடும் என்பதும் சாத்தான்குளம் வாயிலாக பொதுமக்களுக்குத் தெரிய வந்திருக்கிறது. கடையில் வியாபாரம் செய்த அப்பா மீதும் மகன் மீதும் போலீஸ் சொன்ன குற்றச்சாட்டு பொய்யானது.

அவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் சொல்லப்பட்ட காரணங்களும் தவறானவை. காவல்துறையினர் குறிப்பிட்ட நாள்-நேரம் ஆகியவற்றில் என்ன நடந்தது என்பதை சி.சி.டி.வி. காட்சிகள் மவுன சாட்சிகளாக இருந்து உரக்கச் சொல்லிவிட்டன.

காவல்துறையின் கொடூரமான கவனிப்பில் அப்பாவுக்கும் மகனுக்கும் எங்கெல்லாம் காயம் ஏற்பட்டது என்பதை நக்கீரன் வெளியிட்ட மருத்துவக் குறிப்பு அம்பலப்படுத்திவிட்டது. மிச்சம் மீதி இருந்த உண்மைகளையும் மொத்தமாக நீதித்துறை நடுவரிடம் வாக்குமூலமாக அளித்துவிட்டார் தலைமைக் காவலர் ரேவதி.

தமிழ்நாட்டில் ஒரு சாத்தான்குளம் அல்ல, ஏராளமான சாத்தான்குளங்களை காவல்துறையினர் உருவாக்கி வைத்திருக்கிறார்கள். எளியவர்களைப் பாதுகாக்கவேண்டிய சட்டத்தையே அந்த எளியவர்களைக் கொல்கின்ற ஆயுதமாகக் கையில் எடுத்திருக்கிறார்கள். அதற்கு போலீஸ் நண்பர்கள் என்ற பெயரில் அதிகாரப்பூர்வ ரவுடிப் பட்டாளத்தையும் உருவாக்கி வைத்திருக்கிறார்கள். கம்பீரமான காக்கி உடுப்பு, மனித மிருகங்கள் அணியும் உடுப்பாக மாறிவருகிறதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

சட்டத்தின் ஓட்டைகளால் செல்வாக்கு மிக்க குற்றவாளிகள் தப்பிப்பதையே தொடர்ந்து பார்த்து வரும் பொதுமக்களுக்கு, நீதியின் மீதான நம்பிக்கை குறையும்போது, காவலர்களே அதைக் கையில் எடுப்பதை வரவேற்கிறார் கள். தாமதிக்கப்படும் நீதியைவிட கொடூரமானது, காக்கிகள் தாங்களா கவே கையில் எடுத்துக் கொள்ளும் நீதி. அது, அப்பாவிகளுக்கு எதிரான கொலைக்கருவி. தமிழகம் இப்போது தான் இந்த உண்மையை மெல்ல உணரத் தொடங்கியுள்ளது.

uday010720
இதையும் படியுங்கள்
Subscribe