Advertisment

கோழி முட்டை அளவில் ஒரு பெரிய தானியம்! - லியோ டால்ஸ்டாய் தமிழில் சுரா

/idhalgal/eniya-utayam/large-grain-size-chicken-egg-leo-tolstoy-sura-tamil

ரு நாள் ஒரு ஓடையிலிருந்து சோளத்தைப் போல இருந்த... மத்தியில் கோடு ஒன்றைக் கொண்டிருந்த... ஒரு தானியத்தை சிறுவர்கள் பார்த்தார்கள்.

ஆனால், அது ஒரு கோழி முட்டை அளவிற்குப் பெரியதாக இருந்தது. வழியில் சென்ற பயணி ஒருவர் அதைப் பார்த்தார். அவர் அதை சிறுவர்களிடமிருந்து ஒரு பென்னிக்கு வாங்கி, நகரத்திற்குக் கொண்டு வந்து, ஆர்வத்துடன் அரசரிடம் விற்பனை செய்தார்.

அரசர் தன்னிடமிருந்த அறிவாளிகள் அனைவரையும் ஒன்று சேரும்படி அழைத்து, தன்னிடம் கொடுக்கப்பட்ட பொருள் என்ன என்பதைக் கண்டுபிடிக்கும்படி கூறினார். அறிவாளி மனிதர்கள் அதைப்பற்றிய சிந்தனையில் மூழ்கினார்கள்.

திரும்பத் திரும்ப அது என்ன என்பதைத் தெரிந்துகொள்வதற்கான சிந்தனையில் ஆழ்ந்தார்கள். அதைப் பற்றி அவர்களால் எந்த முடிவிற்கும் வர முடியவில்லை.

Advertisment

ss

இப்படியே ஒருநாள் ஓடி முடிந்தது. அது சாளரத்திற்கு அருகில் வைக்கப்பட்டிருக்க, ஒரு கோழி பறந்து வந்து அதைக்கொத்தியது. அதில் கோழி ஒரு ஓட்டையைப் போட்டது. அந்த காட்சியைப் பார்த்த அவர்கள், அது ஒரு சோள தானியம் என்பதைத் தெரிந்து கொண்டார்கள்.

அறிவாளிகள் அனைவரும் அரசரிடம் சென்று கூறினார்கள்:

"அது ஒரு சோள தானியம்.''

அதைக்கேட்டு அரசர் மிகவும் ஆச்சரிய மடைந்தார். அங்கிருந்த அறிவாளிகளிடம் அப்படிப் பட்ட தானியம் எப்போது, எங்கு விளைந்திருக்கிறது என்பதைக் கண்டுபிடிக்கும்படி உத்தரவு பிறப் பித்தார்.

Advertisment

அறிவாளிகள் மீண்டும் சிந்தனையில் மூழ்கினார்கள். தங்களிடமிருந்த நூல்களில் தேடிப்பார்த்தார்கள்.

ஆனால், அதைப் பற்றிய தகவல் எதையும் அவர்களால் தெரிந்து கொள்ள முடியவில்லை.

அதனால், அவர்கள் மீண்டும் அரசரிடம் வந்து கூறினார்கள்:

"எங்களால் உங்களுக்கு ஒரு பதில் கூற முடியவில்லை.

எங்களுடைய புத்தகங்களில் அதைப் பற்றிய தகவல் எதுவும் இல்லை. நீங்கள் விவசாயிகளைப் பார்த்து கேட்கவேண்டும்.

அவர்களில் சிலர் தங்களின் தந்தை களிடமிருந்து அந்த தானியம் இவ்வளவு பெரிய அளவில் எப்போது, எங்கு விளைந்திருக்கிறது என்பதைத் தெரிந்து வைத்திருக்கலாம்.''

அதைத்தொடர்ந்து தனக்கு முன்னால் ஒரு வயதான விவசாயியைக் கொண்டுவந்து நிறுத்தும்படி அரசர் ஆணையிட்டார்.

அவருடைய சேவகர்கள் அப்படிப்பட்ட ஒரு

அவருடைய சேவகர்கள் அப்படிப்பட்ட ஒரு மனிதரைக் கண்டுபிடித்து, அரசரிடம் அழைத்துக் கொண்டு வந்தார்கள். அந்த மனிதர் வயதில் மூத்தும், வளைந்தும், சாம்பல் நிறத்தில் வெளிறியும், பற்கள் இல்லாமலும் இருந்தார். அரசருக்கு முன்னால் வருவதற்கு இரண்டு ஊன்றுகோல்களின் உதவி அவருக்குத் தேவைப்பட்டது.

தானியத்தை அவரிடம் அரசர் காட்டினார்.

ஆனால், அதைச் சரியாக பார்க்க அந்த கிழவரால் முடியவில்லை. அவர் அதை எடுத்து, தன் கைகளைக் கொண்டு தடவிப்பார்த்தார். அரசர் அவரிடம் வினவினார்:

"பெரியவரே... இந்த தானியம் எங்கு விளைந்தது என்பதை நீங்கள் எங்களுக்குக் கூறமுடியுமா? நீங்கள் இப்படிப்பட்ட தானியத்தை எப்போதாவது வாங்கியிருக்கிறீர்களா? அல்லது... இப்படிப்பட்ட தானியத்தை உங்களின் வயல்களில் விதைத்திருக்கிறீர்களா?''

அரசர் என்ன கூறினாரோ, அதை காதில் வாங்கமுடியாத அளவிற்கு அவரின் கேட்கும் திறன் இருந்தது. மிகவும் சிரமப்பட்டே அவர் புரிந்து கொண்டார்.

"இல்லை...'' -இறுதியில் அவர் கூறினார்: "இப்படிப்பட்ட ஒன்றை நான் எந்தச் சமயத்திலும் என் வயல்களில் விதைக்கவோ அறுவடை செய்யவோ இல்லை. இப்படிப்பட்ட ஒன்றை நான் எந்தச் சமயத்திலும் வாங்கியதும் இல்லை. நாங்கள் தானியத்தை வாங்கும்போது, இப்போது எப்படி இருக்கிறதோ, அதேபோல தானியங்கள் சிறிய அளவிலேயே இருந்தன. ஆனால், நீங்கள் என் தந்தையிடம் கேட்டுப் பார்க்கலாம். இப்படிப்பட்ட தானியம் எங்கு விளைந்தது என்ற விஷயத்தை அவர் கேள்விப்பட்டிருக்கலாம்.''

‌‌அதைத் தொடர்ந்து அரசர் கிழவரின் தந்தையை அழைத்து வருவதற்கு ஆளை அனுப்பினார்.

அவர் கண்டுபிடிக்கப்பட்டு, அரசரிடம் அழைத்து வரப்பட்டார்.

அவர் ஒரு ஊன்றுகோலுடன் நடந்து வந்தார். அவரிடம் அரசர் தானியத்தைக் காட்டினார். அந்த வயதான விவசாயியால் அதை இப்போதும் பார்க்க முடிந்தது. அதை அவர் கூர்ந்து பார்த்தார். அரசர் அவரிடம் கேட்டார்:

"பெரியவரே... இப்படிப்பட்ட‌ தானியம் எங்கு விளைகிறது என்பதை உங்களால் கூற முடியுமா? இதைப் போன்ற ஒன்றை நீங்கள் எப்போதாவது வாங்கியிருக்கிறீர்களா? அல்லது உங்களின் வயல்களில் விதைத்திருக்கிறீர்களா?''

காதில் கேட்பதற்கு சிரமமாக இருந்தாலும், அவருடைய மகன் காதில் கேட்டதைவிட தெளிவாக அவர் அதைக்கேட்டார்.

"இல்லை...''- அவர் கூறினார்: "இந்த மாதிரியான எந்தவொரு தானியத்தையும் என் வயலில் நான் எந்தச் சமயத்திலும் விதைக் கவோ அறுவடை செய்யவோ இல்லை. வாங்குவது என்று எடுத்துக் கொண்டால், நான் எந்தச் சமயத்திலும் எதையும் வாங்கியதில்லை.

என் காலத்தில் பணம் என்பது பயன்பாட்டிலேயே இல்லை. ஒவ்வொரு மனிதனும் தனக்கான தானியத்தைத் தானே வளர்த்தான். ஏதாவது தேவை உண்டாகும்போது, நாங்கள் ஒருவருக்கொருவர் பகிர்ந்துகொள்வோம்.

இப்படிப்பட்ட தானியம் எங்கு விளைந்தது என்று எனக்குத் தெரியாது.இப்போது இருப்பதைவிட, எங்களின் தானியம் அளவில் பெரியதாக இருந்தது. அது அதிகமான மாவைத் தரும். ஆனால், நான் இதைப் போன்ற ஒன்றை எந்தச் சமயத்திலும் பார்த்ததில்லை. எது எப்படியோ... எங்களின் தானியத்தை விட, தன் காலத்தில் தானியம் மிகப்பெரியதாக இருக்கும் என்றும், இப்போதிருக்கும் தானியத்தைவிட அதிகமான மாவைத்தரும் என்றும் என் தந்தை கூறி, நான் கேட்டிருக்கிறேன். நீங்கள் அவரிடம் கேட்பது நல்லது.''

அதைத் தொடர்ந்து அந்த வயதான மனிதரின் தந்தையை அழைத்து வருவதற்கு அரசர் ஆட்களை அனுப்பினார்.

அவரையும் அவர்கள் கண்டுபிடித்து, அரசரிடம் அழைத்துக் கொண்டு வந்தார்கள். அவர் ஊன்றுகோலே இல்லாமல் எளிதாக நடந்து வந்தார். அவரின் கண்கள் தெளிவாக இருந்தன.

அவரின் கேட்கும் சக்தி சரியாக இருந்தது. அவர் நன்கு பேசினார்.

அரசர் அவரிடம் தானியத்தைக் காட்டினார். அந்த வயதான தாத்தா அதைப் பார்த்து விட்டு, தன் கையால் அதைத் திருப்பினார்.

"இந்த மாதிரியான அருமையான தானியத்தை நான் பார்த்து எவ்வளவோ நாட்களாகி விட்டன!''- அவர் கூறினார். அதன் ஒரு சிறிய பகுதியைக் கடித்து, அவர் அதை சுவைத்துப் பார்த்தார்.

‌"இதுவும் அதே வகையைச் சேர்ந்ததுதான்.''- அவர் கூறினார்.

"தாத்தா... என்னிடம் கூறுங்கள்.''- அரசர் கூறினார்: "இப்படிப்பட்ட தானியம் எப்போது, எங்கு விளைந்தது? இதைப் போன்ற ஒன்றை எப்போதாவது நீங்கள் வாங்கியிருக்கிறீர்களா? அல்லது உங்களின் ஏதாவது வயல்களில் விதைத்திருக்கிறீர்களா?''

அதற்கு கிழவர் பதில் கூறினார்:

"என் காலத்தில் இதைப்போன்ற தானியம் எல்லா இடங்களிலும் வளரும். என் இளம் நாட்களில் இப்படிப்பட்ட தானியத்துடன் நான் வளர்ந்திருக்கிறேன். அதை மற்றவர்கள் சாப்பிடும்படியும் செய்திருக்கிறேன்.இப்படிப்பட்ட தானியத்தைத்தான் நாங்கள் விதைத்தோம்... அறுவடை செய்தோம்... கதிரடித்தோம்.''

அரசர் கேட்டார் :

"தாத்தா, என்னிடம் சொல்லுங்க. நீங்கள் இதை எங்காவது வாங்கியிருக்கிறீர்களா? அல்லது... இதை நீங்களே வளர்த்தீர்களா?''

கிழவர் புன்னகைத்தார்.

"என் காலத்தில்...''- அவர் பதில் கூறினார்:

"ரொட்டியை வாங்குவது அல்லது விற்பது போன்ற பாவச் செயலை யாரும் எந்தச் சமயத்திலும் நினைத்துக்கூட பார்த்ததில்லை. பணத்தைப் பற்றி எங்களுக்கு எதுவுமே தெரியாது. ஒவ்வொரு மனிதனும் தனக்குத் தேவையான தானியத்தைச் சொந்தத்தில் வைத்திருப்பான்.''

"அப்படின்னா...

என்னிடம் சொல்லுங்க...

"தாத்தா...''- அரசர் கேட்டார்: "உங்களின் வயல் எங்கு இருந்தது? நீங்கள் இப்படிப்பட்ட தானியத்தை எங்கு வளர்த்தீர்கள்?''

தாத்தா பதில் கூறினார்:

"என் வயல் என்பது கடவுளின் நிலம். நான் எங்கெல்லாம் உழுகி றேனோ, அது என்னுடைய வயல். நிலம் இலவசமானது. யாரும் தங்களுக்குச் சொந்தமானது என்று கூறாத ஒரு பொருள் அது.''

"இன்னும் இரண்டு கேள்விகளுக்கு எனக்கு பதில் கூறுங்கள்.''- அரசர் கூறினார்: "முதல் கேள்வி - அப்போது இப்படிப்பட்ட தானியத்தை வைத்திருந்த பூமி இப்போது அதை வைத்திருக்காமல் ஏன் நிறுத்தி விட்டது? இரண்டாவது கேள்வி - உங்களின் பேரன் ஏன் இரண்டு ஊன்றுகோல்களை பயன்படுத்தி நடந்து வந்தார்? உங்களின் மகன் ஏன் ஒரு ஊன்றுகோலுடன் நடந்து வந்தார்? நீங்கள் எப்படி ஊன்றுகோலே இல்லாமல் நடந்து வந்தீர்கள்? உங்களின் கண்கள் பிரகாசமாக இருக்கின்றன.

உங்களுக்கு பற்கள் முழுவதும் இருக்கின்றன. உங்களின் பேச்சு தெளிவாகவும் செவிக்கு இனிமையாகவும் இருக்கிறது. இந்த விஷயங்கள் எப்படி இப்படி இருக்கின்றன?''

கிழவர் பதில் கூறினார்:

"இந்த விஷயங்கள் இப்படித்தான் இருக்கும். ஏனென்றால்...

தங்களின் சொந்த உழைப்பைக் கொண்டு வாழ்வது என்ற விஷயத்தை மக்கள் நிறுத்திவிட்டார்கள்.

மற்றவர்களின் உழைப்பை நம்பி வாழ ஆரம்பித்துவிட்டார்கள்.

பழங்காலத்தில், கடவுளின் சட்டத்தின்படி மனிதர்கள் வாழ்ந்தார்கள்.

அவர்களுக்குச் சொந்தமானதை மட்டுமே அவர்கள் வைத்திருந்தார்கள்.

மற்றவர்கள் உருவாக்கியவற்றின் மீது அவர்களின் கவனம் சென்றதில்லை.''

_________________

மொழி பெயர்ப்பாளரின் உரை!

ணக்கம்.

இந்த மாத "இனிய உதய'த்திற்காக மூன்று சிறந்த சிறுகதைகளை நான் மொழி பெயர்த்திருக்கிறேன் "கர்த்தரிடம் சுக தூக்கம்' என்ற கதையை எழுதியவர்... கேரள சாகித்ய அகாடெமி விருது பெற்றவரும், மூத்த மலையாள எழுத்தாளருமான உண்ணிகிருஷ்ணன் புதூர்.

இது ஒரு உண்மைக் கதை.

தன் 40 வருட நண்பரான அவுஸேப் என்று அனைவராலும் அழைக்கப்பட்ட ஜோஸப் வாழப் புள்ளியை மையமாக வைத்து இந்தக் கதையை எழுதியிருக்கிறார் உண்ணிகிருஷ்ணன் புதூர்.

உண்மையாகவே நடைபெற்ற சம்பவங்களை வைத்து எழுதப்பட்ட படைப்பு என்பதால், இதில் நிறைந்திருக்கும் உயிரோட்டத்தை இதை வாசிக்கும் அனைவராலும் உணரமுடியும்.

இதில் வரும் அவுஸேப்பை நம்மால் எப்படி மறக்க முடியும்?

"உழைப்பு' என்ற கதையை எழுதியவர்... தேசிய சாகித்ய அகாடெமி விருது பெற்றவரும், கேரள அரசாங்கத்தின் பிரதான செக்ரட்டரியாக பணியாற்றிய ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான மலயாற்றூர் ராமகிருஷ்ணன். கடித வடிவத்தில் எழுதப்பட்டிருக்கும் கதை.

இதில் வரும் வாஸ்வானி உண்மையிலேயே இருந்த கதாபாத்திரமாக இருக்க வேண்டும்.

மலயாற்றூருக்குத் தெரிந்த நபராக அவர் இருக்கலாம் என்பது என் எண்ணம்.

இந்த கதையின் அடிநாதமாக இருக்கும் உண்மையையும் நேர்மையையும் எந்த அளவிற்கு எழுத்தாளர் உயர்வாக மதிக்கிறார் என்பதை நம்மால் உணர முடிகிறது.

கதையின் இறுதிப்பகுதியை வாசிக்கும்போது, நம் கண்கள் நிச்சயம் கசியும்.

"கோழி முட்டை அளவில் ஒரு பெரிய தானியம்' என்ற கதையை எழுதியவர்... உலக புகழ் பெற்ற மாபெரும் எழுத்தாளரான லியோ டால்ஸ்டாய்.

ஒரு சிறுகதையில் எவ்வளவு பெரிய மகத்தான உண்மையைக் கூறுகிறார் டால்ஸ்டாய்!

இது வெறும் கதை அல்ல. வாசிக்கும் அனைவரையும் ஆழமாக சிந்திக்க வைக்கும் பொக்கிஷம் என்று கூறுவதே பொருத்தமாக இருக்கும்.

இந்த கதையை வாசித்து முடிக்கும் யாரும் சந்தோஷ வாழ்க்கை பற்றிய ஆராய்ச்சியில் நிச்சயம் இறங்குவார்கள்.

அதுதான் லியோ டால்ஸ்டாயின் எழுத்தாற்றலுக்குக் கிடைத்த வெற்றி.

நான் மொழிபெயர்த்த இந்த மூன்று சிறுகதைகளும் உங்களுக்கு மாறுபட்ட இலக்கிய அனுபவங்களைத் தரும் என்பதை என்னால் உறுதியாகக் கூறமுடியும்.

"இனிய உதயம்' மூலம் என் அருமையான இலக்கிய ஆக்கங்களை வாசிக்கும் உயர்ந்த உள்ளங்களுக்கு என் இதய நன்றி.

அன்புடன்,

சுரா

uday010225
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe