மொழியின் நாகரிகம்...

/idhalgal/eniya-utayam/language-civilization

ந்திய மொழிகளிலேயே மிக அதிகமாக தமிழில்தான் ஹைகூ கவிதைகள் எழுதப்பட்டு தொகுப்பு நூல்களும் வெளிவந்த வண்ணம் உள்ளன. 1916-ஆம் ஆண்டு தமிழில் பாரதியார் ஹைகூ கவிதைகளை ‘ஜப்பானியக் கவிதை’ எனும் தலைப்பில் சுதேசமித்திரன் இதழில் அறிமுகப்படுத்தினார். அதன் ஒரு நூற்றாண்டு நிறைவை ஒட்டி இந்த ஆண்டு முழுவதும் தமிழகத்தின் பல்வேறு நகரங்களிலும் விழாக்கள் கொண்டாடப்பட்டன. கடந்த 08.04.2018 அன்று கும்பகோணம் சிவகுருநாதன் செந்தமிழ் நூல் நிலையத்தில் "ஹைகூ நூற்றாண்டு நிறைவு' நினைவாக மிகப் பெரிய இலக்கிய விழா நடைபெற்றது.

விழாவில் ஹைகூ நூல் வெளியீடு, அறிமுகம், சிறந்த ஹைகூ கவிதை நூல்களுக்குப் பரிசளிப்பு, ஹைகூ கவியரங்கம், சிறப்பு சொற்பொழிவு என பல்வேறு நிகழ்சிகள் நடைபெற்றன.

language

விழாவுக்குத் தலைமை வகித்த சாகித்ய அகாடமி சென்னை அலுவலக செயல் அலுவலர் முனைவர் அ.சு.இளங்கோவன் தமிழ்க்கவிதை மரபை எடுத்துரைத்து இயற்கையை ரசிப்பது, வியப்பது, பாதுகாப்பது போன்ற அம்சங்களில் தமிழ்க் கவிதை மரபும் ஜப்பானியக் கவிதை மரபும் ஒன்றிணையும் புள்ளியை விளக்கினார்.

வரவேற்புரை நிகழ்த்திய சிவகுருநாதன் செந்தமிழ் நூல் நிலையத்தின் அறங்காவலரும், பச்சையப்பன் கல்லூரியின் முன்னாள் தமிழ்த்துறைப் பேராசிரியருமான இராம.குருநாதன், “""இந்த விழாவை இந்த நூலகத்தில் நடத்துவதற்கு ஒரு காரணம் இருக்கிறது. சிவகுருநாதன் நூலகத்தில் நாற்பதாயிரம் நூல்கள் இருக்கின்றன. ஆனால் வந

ந்திய மொழிகளிலேயே மிக அதிகமாக தமிழில்தான் ஹைகூ கவிதைகள் எழுதப்பட்டு தொகுப்பு நூல்களும் வெளிவந்த வண்ணம் உள்ளன. 1916-ஆம் ஆண்டு தமிழில் பாரதியார் ஹைகூ கவிதைகளை ‘ஜப்பானியக் கவிதை’ எனும் தலைப்பில் சுதேசமித்திரன் இதழில் அறிமுகப்படுத்தினார். அதன் ஒரு நூற்றாண்டு நிறைவை ஒட்டி இந்த ஆண்டு முழுவதும் தமிழகத்தின் பல்வேறு நகரங்களிலும் விழாக்கள் கொண்டாடப்பட்டன. கடந்த 08.04.2018 அன்று கும்பகோணம் சிவகுருநாதன் செந்தமிழ் நூல் நிலையத்தில் "ஹைகூ நூற்றாண்டு நிறைவு' நினைவாக மிகப் பெரிய இலக்கிய விழா நடைபெற்றது.

விழாவில் ஹைகூ நூல் வெளியீடு, அறிமுகம், சிறந்த ஹைகூ கவிதை நூல்களுக்குப் பரிசளிப்பு, ஹைகூ கவியரங்கம், சிறப்பு சொற்பொழிவு என பல்வேறு நிகழ்சிகள் நடைபெற்றன.

language

விழாவுக்குத் தலைமை வகித்த சாகித்ய அகாடமி சென்னை அலுவலக செயல் அலுவலர் முனைவர் அ.சு.இளங்கோவன் தமிழ்க்கவிதை மரபை எடுத்துரைத்து இயற்கையை ரசிப்பது, வியப்பது, பாதுகாப்பது போன்ற அம்சங்களில் தமிழ்க் கவிதை மரபும் ஜப்பானியக் கவிதை மரபும் ஒன்றிணையும் புள்ளியை விளக்கினார்.

வரவேற்புரை நிகழ்த்திய சிவகுருநாதன் செந்தமிழ் நூல் நிலையத்தின் அறங்காவலரும், பச்சையப்பன் கல்லூரியின் முன்னாள் தமிழ்த்துறைப் பேராசிரியருமான இராம.குருநாதன், “""இந்த விழாவை இந்த நூலகத்தில் நடத்துவதற்கு ஒரு காரணம் இருக்கிறது. சிவகுருநாதன் நூலகத்தில் நாற்பதாயிரம் நூல்கள் இருக்கின்றன. ஆனால் வந்து படிக்கத்தான் ஆள் இல்லை. இந்நூலகத்தைத் தொடங்கிய எங்கள் தாத்தா சிவகுருநாதன் இதை மக்கள் பயன்படுத்தும் நோக்கில்தான் தொடங்கினார். அவரைத் தொடர்ந்து வந்த சாமிநாதன் நூலகத்தைப் பேணி வளர்த்தார். ஆனால் அப்போதெல்லாம் பெருமளவில் வாசகர்கள் வந்து பயன்பெற்றனர்.

இப்போது படிக்க வருபவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்து விட்டது. எனவே வாசகர்களை இந்நூலகத்தை நோக்கி அழைக்கவே இவ்விழாவை இங்கே பிரம்மாண்டமாக நடத்த எண்ணினேன்.''

இங்கே வருகை புரிந்த கவிஞர் ஈரோடு தமிழன்பன், இயக்குனர் பிருந்தா சாரதி, சாகித்ய அகாடமி அ.சு.இளங்கோவன், பேராசிரியர் எஸ்.ஏ.சங்கரநாராயணன், வருகை புரிந்திருக்கிற கவிஞர்கள், பத்திரிக்கையாளர்கள் வாசகர்கள் அனைவராலும் இது சாத்தியமாயிற்று. அரங்கு கொள்ளாமல் வீதி வரை நிற்கும் மக்கள் கூட்டத்தைப் பார்ப்பதற்கு மனமகிழ்ச்சியாக இருக்கிறது. தொடர்ந்து இங்கு மாதந்தோறும் இலக்கிய விழாக்கள் நடைபெறும்,’’ என்றார் அடுத்து ஹைகூ கவியரங்கம் ஒவ்வொரு கவிஞரும் ஐந்து ஹைகூ கவிதை வாசிக்கலாம் என்ற வேண்டுகோளுடன் தொடங்கியது. இயக்குனர் பிருந்தா சாரதி கவிதை வாசித்தலைத் தொடங்கி வைத்தார். தொடர்ந்து கவிஞர்கள் நா.விஸ்வநாதன், ஆடலரசன், நிர்மலா, தாமோதரக் கண்ணன், குமரேசன் கிருஷ்ணன் உள்ளிட்ட இருபதுக்கும் மேற்பட்ட கவிஞர்கள் ஹைகூ கவிதைகளை வாசித்தனர். காவிரிப் பிரச்சனை, சுற்றுச்சூழல், இயற்கை பாதுகாக்கப்படாமை போன்ற சமூகப் பிரச்சனைகளும், இயற்கை நேசம் எல்லைகடந்த மானிடம் போன்ற பரந்த பொருளிலும் கவிதைகள் இடம்பெற்றன.

பின் சென்ற ஆண்டு வெளிவந்த முனைவர் ஔவை நிர்மலாவின் ‘"நற்றமிழ் துளிப்பா நானூறு', குமேரேசன் கிருஷ்ணனின் ‘ "நிசப்தங்களின் நாட்குறிப்பு', முனைவர் இரா.தமிழரசியின் ‘மகரந்தம் மறைந்த மொட்டு’, முனைவர் மருதம் கோமகனின் ‘"அம்மாவின் முத்தம்', கவிஞர் காரை இரா.மேகலாவின் ‘"கிணற்றுக்குள் நிலா', முனைவர் மா.தாமோதரக் கண்ணனின் "சாமுராய்' ஆகிய ஹைக்கூ நூல்களுக்கு மதிப்புறு பரிசு வழங்கப்பட்டது.

தொடர்ந்து வந்த பேராசிரியர் எஸ்.ஏ.சங்கரநாராயணன் வாசிக்கப் பட்ட பல கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிடத்தக்கவை என்று கூறி ஈரோடு தமிழன்பனின் ஹைகூ பணியினை பாராட்டி அவரது கவிதை நயங்களை எடுத்துரைத்தார் நிறைவாக ஈரோடு தமிழன்பன் ‘ஹைகூ அனுபவமும் புரிதலும்’ என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.

""சிறந்த முறையில்.. சிந்திக்கிற எழுதுகிற பெருமைக் குரிய மண் கும்பகோணம். பல்வேறு பணிகளுக்கிடையே கவிதை எழுதுவது பெரிய செயல். கவிதை படிப்பதை கேட்க மக்கள் வரவேண்டும். இது மேலை நாட்டில் உண்டு. பாப்லோ நெருடா படிக்கும் கவிதையைக் கேட்க ஒரு இலட்சத்துக்கும்மேல் மக்கள் கூடினர். மனிதனின் நாகரிகத்தை மொழி காட்டும். மொழியின் நாகரிகத்தைக் கவிதை காட்டும். பத்து பறவைகள் வளர்த்தால் நீங்கள் பறவை ஆக முடியாது.

language

ஆனால் பத்து நூல் படித்தால் நீங்கள் 11வது நூலாக ஆகலாம் - புத்தகம் படிப்பதும், படைத்தவனை நேசிப்பதும் நாகரிகத்தின் அடையாளம்.

பாரதி தமிழுக்கு ஜப்பானியக் கவிதை வடிவமான ஹைகூவை அறிமுகப்படுத்தினார். பாரதிதாசனும் ஹைகூ முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். புதியனவற்றை ஏற்க வேண்டும் என தொல்காப்பியமே கூறுகிறது.

ஜப்பானில் ஹைகூ என்பது ஒரு கலாச்சாரம்... வாழ்வியல்.. தேனீர் அருந்தும் கோப்பையில் கூட ஹைகூ எழுதி வைப்பார்கள். மரணத்தின்போதுகூட ஹைகூ எழுதிவிட்டு சாவார்கள். வாழ்க்கை மனிதனை ஏமாற்றும் ஆனால் மரணம் ஏமாற்றாது. பொய் சொல்லாது. வாழ்வை அனுபவிப்பது போல ஜப்பானி யர்கள் மரணத்தையும் அனுபவித்தார்கள்.

கவிஞன் பேருணர்வும் பெருங்கருணையும் கொண்டவன். இதுதான் ஜென் தத்துவத்தின் அடிப்படை. இதைத் தங்கள் கவிதையில் கொண்டுவந்தார்கள் ஜப்பானியர்கள்.

தவளை தண்ணீரில் குதித்தது

ப்ளக்...ப்ளக்...ப்ளக்..

என்ற பாஷோவின் கவிதைக்கு நூற்றுக்கணக்கான அர்த்தங்களை உலகம் முழுவதும் எழுதுகிறார்கள்.

கவிதை அனுபவத்தில் இருந்து வரவேண்டும். ஒரு கவிதையிலிருந்து மற்றொரு கவிதை எழுதுவதால் ஒரு பயனும் இல்லை. அதில் உயிர் இருக்காது. "காக்கை குருவி எங்கள் ஜாதி' என பாரதிதான் பாடமுடியும்.

ஹைகூ எழுதுவதற்கு ஹைகூ நுணுக்கங்களை அறியவேண்டும். ஹைகூவில் பெயர்ச் சொற்கள் அதிகம் வரலாம். வினைச் சொற்கள் நிகழ் காலத்தில் மட்டுமே வரவேண்டும், புனைவுத் தன்மை வரக்கூடாது. உவமைகள் தவிர்க்கப்பட வேண்டும். தலைப்பு வைக்கக் கூடாது. படங்கள் இல்லாமல் இருப்பது சிறப்பு.

நம்முடைய பிருந்தா சாரதியின் ‘"மீன்கள் உறங்கும் குளம்'’ தொகுதியில் இருந்து ஒரு ஹைகூ சொல்கிறேன்.

நதியில் மிதந்து செல்கிறது

பழுத்த இலை

நிறைவான பயணம்.

ஒரு இலை பழுத்து உதிர்கிறபோதே அது நிறைவான வாழ்வை வாழ்ந்து முடித்துவிட்டது என்பதை உணரமுடிகிறது. ஒரு கோடை, ஒரு வசந்தம், ஒரு மழைக்காலம் எல்லாம் பார்த்து இலையுதிர் காலத்துக்கு வந்துவிட்டது. பல மாற்றங்களை வாழ்வில் பார்த்துவிட்டது. மரத்துக்குப் பயன்கொடுத்தது. பறவைகளின் இசையைக் கேட்டது. காதலை பார்த்தது. நிழல் கொடுத்தது. இனி அதற்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லை. பழுத்து இயல்பாக காற்றில் உதிர்கிறது. அதுவும் நதியில் விழுந்து பயணம் செய்கிறது. கவிஞர் இங்கே மிதந்து செல்கிறது என்று எழுதியிருக்கிறார். நீந்துகிறது என்று எழுதவில்லை. நதியின் போக்கில் செல்கிறது. எந்த எதிர்ப்பும் இல்லை. இன்னொன்று கவிஞர் நினைத்தாரா என்று தெரியவில்லை. நதியும் நிறைவான பயணம்தான் செய்கிறது. இரண்டும் கடலை நோக்கிப் பயணம் செய்கின்றன. இது ஒரு நிறைவான அனுபவம்.

கவிதைளைக் கேட்க இவ்வளவு பேர் திரண்டு வந்திருக்கிறீர்கள். இவ்வளவு கவிஞர்கள் கவிதை வாசிக்கிறீர்கள். மகிழ்ச்சியாக இருக்கிறது. உங்கள் ஒவ்வொருவரையும் பாராட்டுகிறேன். படைப்புகளையும் படைப்பாளிகளையும் கொண்டாடுவது நாகரிக சமுதாயத்தின் அடையாளம்.''’

நூலகத்தின் செயலாளர் தயாளன் நன்றி உரை கூற விழா நிறைவுற்றது.

இதையும் படியுங்கள்
Subscribe