சிற்றம்பலம் : லால்குண்டா: குண்டாந்தடிகளுக்கு அஞ்சாத உரிமைக்குரல் -கோவி. லெனின்

/idhalgal/eniya-utayam/lalgunda-govin-lenin

த்தனை நாள் அந்தப் பகுதி எங்கே இருக்கிறது என்பது சென்னையில் இருக்கும் பலருக்கே தெரியாது. இன்று, தமிழகத்தைக் கடந்து இந்தியாவின் பல பகுதிகளின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது. அது, சென்னையின் ஷாகீன்பாக் எனப் பட்டம் பெற்றுள்ள வண்ணாரப்பேட்டை லால்குன்டா பகுதி.

ஏழை-நடுத்தர முஸ்லிம் மக்கள் அதிகம் வசிக்கும் லால்குன்டாவில் பலரும் உடலுழைப்புத் தொழிலாளர்கள். பிற மதத்தினருடன் நல்லிணக்கத் துடன் வாழ்பவர்கள். அவர்களுக்கு இந்த மண்தான் தாய்மடி. அக்கம்பக்கம் வாழ்கிறவர்கள்தான் உறவினர்கள். நெடுங்காலமாக சொந்தபந்தம்போல வாழ்கிறவர்களுக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தி யுள்ளது, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க. அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டம்.

இந்த சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டது முதலே, ஆதரவும் எதிர்ப்புமாக அரசியல் கட்சிகள் இந்தியா முழுவதும் பிரிந்துநிற்கின்றன. மத்திய ஆட்சியாளர்களும் மாநில ஆட்சியாளர்களும் இந்த சட்டத்தை ஆதரித்து நிற்கிறார்கள். அதிலும், மாநிலத்தை ஆளுகின்ற அ.தி.மு.க.வின் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்கள் 11 பேரும், அ.தி.மு.க.வின் ஆதரவில் மாநிலங்களவை உறுப்பினர் பதவியினைப் பெற்ற பா.ம.க.வுமாக மொத்தம் 12 வாக்குகளின் ஆதரவுதான் இந்த திருத்தச்சட்டம் நாடாளுமன்றத் தில் நிறைவேறுவதற்கு காரணமாக அமைந்தது. இல்லையென்றால், திருத்தச் சட்டம் தோற்கடிக்கப் பட்டிருக்கும்.

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக முதல் எதிர்ப்பு அசாமில் தொடங்கியது. அதன்பின்னர், டெல்லி ஜாமியா பல்கலை, ஜவகர்லால் நேரு பல்கலை எனப் பரவி, இந்தியாவின் அனைத்துப் பெருநகரங்கள், சிறுநகரங்கள் என உரிமைப் போராட்டங்கள் வலுப் பெற்றிருக்கின்றன. பா.ஜ.க.வின் ஆதரவுக் கட்சிகள் பலவும்கூட குடியுரிமை திருத்தச் சட்டத்தை நடைமுறைப் படுத்துவதற்கு முன்புள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள்தொகை பதிவேடு ஆகியவை குறித்து அவசரம் காட்டப்போவதில்லை என அறிவித்துள்ளன.

இடதுசாரிகள் ஆட்சி செய்யும் மாநிலமான கேரளா தொடங்கி காங்கிரஸ் ஆட்சி செய்யும் ஒன்றியப்பகுதி யான புதுச்சேரி வரை பல அரசுகளும் சட்டமன்றத் திலேயே இவற்றை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றி யிருக்கின்றன. அது போன்ற தீர்மானத்தை தமிழ்நாடு சட்டமன்றத்திலும் நிறைவேற்ற வேண்டும் என எதிர்க்கட்சிக

த்தனை நாள் அந்தப் பகுதி எங்கே இருக்கிறது என்பது சென்னையில் இருக்கும் பலருக்கே தெரியாது. இன்று, தமிழகத்தைக் கடந்து இந்தியாவின் பல பகுதிகளின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது. அது, சென்னையின் ஷாகீன்பாக் எனப் பட்டம் பெற்றுள்ள வண்ணாரப்பேட்டை லால்குன்டா பகுதி.

ஏழை-நடுத்தர முஸ்லிம் மக்கள் அதிகம் வசிக்கும் லால்குன்டாவில் பலரும் உடலுழைப்புத் தொழிலாளர்கள். பிற மதத்தினருடன் நல்லிணக்கத் துடன் வாழ்பவர்கள். அவர்களுக்கு இந்த மண்தான் தாய்மடி. அக்கம்பக்கம் வாழ்கிறவர்கள்தான் உறவினர்கள். நெடுங்காலமாக சொந்தபந்தம்போல வாழ்கிறவர்களுக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தி யுள்ளது, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க. அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டம்.

இந்த சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டது முதலே, ஆதரவும் எதிர்ப்புமாக அரசியல் கட்சிகள் இந்தியா முழுவதும் பிரிந்துநிற்கின்றன. மத்திய ஆட்சியாளர்களும் மாநில ஆட்சியாளர்களும் இந்த சட்டத்தை ஆதரித்து நிற்கிறார்கள். அதிலும், மாநிலத்தை ஆளுகின்ற அ.தி.மு.க.வின் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்கள் 11 பேரும், அ.தி.மு.க.வின் ஆதரவில் மாநிலங்களவை உறுப்பினர் பதவியினைப் பெற்ற பா.ம.க.வுமாக மொத்தம் 12 வாக்குகளின் ஆதரவுதான் இந்த திருத்தச்சட்டம் நாடாளுமன்றத் தில் நிறைவேறுவதற்கு காரணமாக அமைந்தது. இல்லையென்றால், திருத்தச் சட்டம் தோற்கடிக்கப் பட்டிருக்கும்.

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக முதல் எதிர்ப்பு அசாமில் தொடங்கியது. அதன்பின்னர், டெல்லி ஜாமியா பல்கலை, ஜவகர்லால் நேரு பல்கலை எனப் பரவி, இந்தியாவின் அனைத்துப் பெருநகரங்கள், சிறுநகரங்கள் என உரிமைப் போராட்டங்கள் வலுப் பெற்றிருக்கின்றன. பா.ஜ.க.வின் ஆதரவுக் கட்சிகள் பலவும்கூட குடியுரிமை திருத்தச் சட்டத்தை நடைமுறைப் படுத்துவதற்கு முன்புள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள்தொகை பதிவேடு ஆகியவை குறித்து அவசரம் காட்டப்போவதில்லை என அறிவித்துள்ளன.

இடதுசாரிகள் ஆட்சி செய்யும் மாநிலமான கேரளா தொடங்கி காங்கிரஸ் ஆட்சி செய்யும் ஒன்றியப்பகுதி யான புதுச்சேரி வரை பல அரசுகளும் சட்டமன்றத் திலேயே இவற்றை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றி யிருக்கின்றன. அது போன்ற தீர்மானத்தை தமிழ்நாடு சட்டமன்றத்திலும் நிறைவேற்ற வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. அ.தி.மு.க. அரசின் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, போராட்டத்தை சில விஷமிகள் தூண்டிவிடுகிறார்கள். முஸ்லிம் சமுதாயத் தினரை தவறாக வழிகாட்டுகிறார்கள். குடியுரிமை திருத்தச் சட்டத்தால் தமிழ்நாட்டில் ஒரு முஸ்லிமாவது பாதிக்கப்பட்டிருக்கிறார்களா சொல்லுங்கள் என்று கோபமாகக் கேட்டார்.

விதைக்காத செடியிலிருந்து காய் பறித்தாயா என்று கேட்பது போல இருந்தது தமிழ்நாடு முதலமைச்சரின் மேதாவித்தனமான கேள்வி. குடியுரிமை திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. எனினும், நடைமுறையில் அதனைச் செயல்படுத்த குடிமக்கள் பதிவேடும், மக்கள்தொகை பதிவேடும் தேவைப்படும். முதலமைச்சர் கோபப்பட்ட நாளில், அவையிரண்டும் நடைமுறைப் படுத்தப்படவில்லை. அவற்றிற்கு எதிராகத்தான் முஸ்லிம் மக்கள் மட்டுமல்ல, அனைத்து மதத்தையும் சார்ந்த இளைஞர்கள், பெண்கள், மாணவர்கள், அரசியல் கட்சியினர், மனித உரிமை அமைப்பினர் உள்ளிட்ட அனைத்துத் தரப்பு மக்களும் போராடு கிறார்கள்.

1955ஆம் ஆண்டில் நேரு ஆட்சிக்காலத் திலேயே இந்திய குடியுரிமை சட்டம் நிறைவேற்றப்பட்டுவிட்டது.

தற்போது அதில்செய்யப்பட்டுள்ள திருத்தத்தில், பாகிஸ்தான்- பங்களாதேஷ்-ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து இந்தியாவுக்கு அகதிகளாக வரும் இந்து, கிறிஸ்தவர், சீக்கியர், சமணர், பவுத்தர் ஆகியோருக்கு குடியுரிமை வழங்க வகை செய்கிறது. முஸ்லிம்கள் திட்டமிட்டுத் தவிர்க்கப்பட்டிருக்கிறார்கள். அகதிகளுக்கு குடியுரிமை வழங்குவதில் மதரீதியான பாகுபாடு காட்டுவது ஐ.நா.மன்றம் உள்ளிட்ட பன்னாட்டு அமைப்பின் விதிகளுக்கு முரணானது. மதச்சார்பற்ற தன்மையை வலியுறுத்தும் இந்திய அரசியல் சட்டத்திற்கு எதிரானது. இதனால்தான் இந்த திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு வலுக்கிறது. தமிழகத்தின் தொப்புள்க் கொடி உறவான (இந்து மதத்தைச் சேர்ந்த) ஈழத்தமிழர்களுக்கும் இந்தத் திருத்தச் சட்டத்தின் மூலம் குடியுரிமை பெறும் வாய்ப்பு பறிபோகிறது.

வெளிநாடுகளிலிருந்து வரும் முஸ்லிம்கள்தானே குடியுரிமை திருத்தச் சட்டத்தினால் தடுக்க- தவிர்க்கப்படுகிறார்கள். இந்தியாவில்-தமிழகத்தில் வாழ்கின்ற முஸ்லிம்களுக்கு பாதிப்பில்லையே என நியாயம் போலத் தோற்றமளிக்கும் ஒரு கேள்வியை மோடி-அமித்ஷாவிலிருந்து எடப்பாடி பழனிச்சாமி- முரளிதரராவ் வரை பலரும் சவால் விட்டுக் கேட்கிறார்கள். தமிழக பா.ஜ.க. சார்பில், இந்தியாவில் எந்த முஸ்லிமின் குடியுரிமை பறிக்கப்பட்டுள்ளது என்பதை நிரூபித்தால் 1 கோடி ரூபாய் பரிசு என சுவரொட்டி ஒட்டப் பட்டுள்ளது.

குடியுரிமை திருத்தச் சட்டத்தை நிறைவேற்றிட வேண்டிய தரவுகள், தேசிய குடியுரிமைப் பதிவேட்டின் வழியாக எடுக்கப்படும். அதுபோலவே, தேசிய மக்கள் தொகைப் பதிவேட்டில் உள்ள தரவுகளும் பயன்படும்.

அசாம் மாநிலத்தில் தேசிய குடியுரிமைப் பதிவேட்டுக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. வங்கதேசத்திலிருந்தும் அண்டை மாநிலங்களிலிருந்தும் அசாம் மாநிலத்திற்கு வந்தவர்கள் பற்றி அறிந்து கொள்வதற்கான பதிவேடு இது. இந்தப் பதிவேட்டுக் கணக்கெடுப்பில் ஏறத்தாழ 12 லட்சம் மக்கள் விடுபட்டிருப்பது தெரியவந்தது. இதில் முஸ்லிம்களும் உண்டு. இந்துக்களும் உண்டு.

பிற மதத்தினரும் அடக்கம்.

வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது நடைபெற்ற கார்கில் யுத்தத்தில் இந்திய மண்ணைக் காக்கப் போராடிய அசாமைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் முகமது சனா உல்லா என்பவர் மோடி பிரதமராக உள்ள காலத்தில் குடியுரிமை அற்றவராக ஆக்கப்பட்டு, சிறைப்படுத்தப்பட்டார் என்பது அண்மையில் நடந்த கொடூர நிகழ்வு. இந்தியாவின் முன்னாள் குடியரசுத்தலைவர் பக்ருதீன் அலிஅகமதுவின் உறவினர்கள் குடியுரிமை மறுக்கப்பட்டுள்ளனர்.

caa

அசாமின் முன்னாள் சயிஷா அன்வரா தைமூரின் பெயரும் தேசிய குடியுரிமைப் பதிவேட்டில் விடுபட்டுள்ளது. அதனால்தான், நாடாளுமன்றத்தில் குடியுரிமை திருத்தச் சட்டம் நிறைவேற்றப் பட்டதும் முதல் எதிர்ப்புப் போராட்டம் அசாமில் தொடங்கியது.

தேசிய மக்கள் தொகைப் பதிவேட்டினைப் போலவே, தேசிய மக்கள்தொகைப் பதிவேடு தொடர்பான மத்திய பா.ஜ.க. அரசின் புதிய படிவமும் இந்திய மக்களை மதரீதியாகப் பிரிக்கின்ற வேலையைச் செய்வதற்கான ஆயுதமாக்கப்பட்டுள்ளது. பொதுவாக, மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்போது பெயர், பாலினம், வயது, முகவரி ஆகியவை பதிவு செய்யப் படும். தற்போதைய படிவத்தில் பிறப்புச் சான்றிதழ், பெற்றோரின் பெயர், பிறந்த இடம், அதற்கான சான்றிதழ் உள்ளிட்டவை கோரப்படுகின்றன. இந்தியாவில் பலருக்கு பிறப்புச்சான்றிதழ் பதிவு கிடையாது.

அத்தகையவர்கள் சந்தேகத்துரியவர்கள் எனப் பதிவு செய்யப்படும் வாய்ப்பு உள்ளது. உரிய சான்றிதழ்கள் இல்லாதவர்களிடம் அவர்கள் கொண்டாடும் பண்டிகைகள் குறித்து கேட்டறிந்து, எந்த ஆண்டு பண்டிகையின்போது பிறந்தார்கள் என கணக்கிடவும் வழி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் எந்தெந்தப் பண்டிகைகள் எப்போது கொண்டாடப்படுகின்றன என்கிற இணைப்பும் மக்கள்தொகைப் பதிவேட்டுடன் வழங்கப்பட்டுள்ளது. அதில், முஸ்லிம்கள் கொண்டாடும் பண்டிகைகள் இடம்பெறவில்லை. எனவே, பட்டியலில் இல்லாத பண்டிகைகளைக் கொண்டாடுபவர்களும் சந்தேகத்துக்குரியவர்களாகப் பதிவு செய்யப்படும் அபாயம் உண்டு.

பதிவேட்டில் சந்தேகத்துக்குரியவர்களாக்கப்பட்ட வர்கள் விசாரணையை எதிர்கொண்டாக வேண்டும்.

தங்கள் குடியுரிமையை இழந்தவர்களாகி, தடுப்பு முகாம்கள் எனப்படும் சிறைகளில் அடைக்கப்படும் அவலம் நேரும். முஸ்லிம்கள் மட்டுமல்ல, பிறமதத்தவரைக்கூட சந்தேகத்திற்குரியவர்கள் எனப் பதிவு செய்து, தடுப்பு முகாமில் தள்ளும் வாய்ப்புண்டு. இந்திய அரசியல் சட்டத்திற்கு எதிரான இந்த மதரீதியான பிரிவை எதிர்த்துதான் போராட்டம் நடைபெறுகிறது. அத்தகைய போராட்டம்தான் லால்குன்டாவில் தொடங்கியது.

குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு ஆதரவான செயல்பாடுகளுக்கு அனுமதி அளிக்கும் காவல்துறை, திருத்தச் சட்டத்தை எதிர்த்து நடைபெறும் செயல்பாடுகளை அனுமதிப்பதில் பெரும் தடைகளை ஏற்படுத்துவது வழக்கமாக உள்ளது. சென்னை வண்ணைப் பகுதி முஸ்லிம்கள் தங்கசாலை ரவுண்டானா அருகே கூடுவதற்கு அனுமதி கேட்ட போது மறுக்கப்பட்டது. இதையடுத்து, லால்குன்டா பகுதியில் பிப்ரவரி 14அன்று பேரணியாகத் திரண்டபோது, காவல்துறையினர் தாக்குதலில் ஈடுபட்டனர். பேரணியில் இருந்த பெண்களை ஆண்காவலர்கள் வலுக்கட்டாயமாக இழுத்துச் செல்லும் காட்சிகள் ஒளிபரப்பாகின. இளைஞர்கள் பலர் மீதும் காவல்துறையினர் தங்கள் பலத்தைக் காட்டினர்.

போராட்டக்காரர்களின் தாக்குதலால் தாங்கள் பாதிக்கப்பட்டதாக காவல்துறை தரப்பில் சொல்லப் பட்டது. இதனையடுத்து, முஸ்லிம் அமைப்பினர் காவல்துறை உயரதிகாரிகளை சந்தித்து நிலைமையை விளக்கினர். காவல்துறை உயரதிகாரிகளுடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்தினார்.

அதன்பிறகுதான், சட்டமன்றத்தில் அவர் கோபம் காட்டிப் பேசினார்.

முதல்வர் பொறுப்பில் இருப்பவரிடம் உரிமைப் போராட்டம் நடத்துபவர்கள் எதிர்பார்ப்பது வெற்றுக் கோபத்தையல்ல. ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளை. குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானமோ, தேசிய மக்கள்தொகைப் பதிவேட்டுக்கு தமிழ்நாட்டில் அனுமதியில்லை என்கிற அறிவிப்பையோ அவர்கள் எதிர்பார்த்தார்கள். அதனை வலியுறுத்தி லால்குன்டா பகுதியில் போராட்டத்தைத் தொடர்ந்தார்கள்.

சி.ஏ.ஏ., என்.ஆர்.சி., என்.பி.ஆர். ஆகியவற்றுக்கு எதிராக தமிழ், ஆங்கிலம், உருது, இந்தி மொழிகளில் முழக்கங்கள் எழுப்பினர். இந்தியாவின் மூவர்ணக் கொடியை உயர்த்திப் பிடித்தனர். ஆண்களைவிட பெண்கள் அதிகளவில் பங்கேற்றனர். சுழற்சி முறையிலான பங்கேற்புடன் 24 மணிநேரமும் போராட்டம் தொடர்ந்தது. தமிழக-இந்திய அரசியல் தலைவர்கள்-மனிதநேயச் செயல்பாட்டாளர்கள் அங்கே வந்து வாழ்த்தினர். போராட்டக்காரர்கள் எந்த மதத்தினர் என்ற பேதம் பார்க்காமல் இந்து மதத்தைச் சேர்ந்த பெண்கள், கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர்கள் எனப் பலரும் நேரில் வந்து ஆதரவு தெரிவித்தனர்.

டெல்லியில் உள்ள ஷாகீன்பாக் பகுதியில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து தொடர்ச்சி யான ஆர்ப்பாட்டம் ஜனநாயக அறவழியில் நடைபெறுவதுபோலவே சென்னை வண்ணையிலும் தொடர்ந்ததால், லால்குன்டா பகுதி சென்னையின் ஷாகீன்பாக் என்ற பட்டத்தைப் பெற்றது.

அடக்குமுறைக்கு அஞ்சிடாமல் உரிமைப் போராட்டத் தில் பங்கேற்றவர்களுக்கு அக்கம்பக்கத்தினர் உணவு, குடிநீர் ஆகியவற்றை வழங்கினர். உழைக்கும் மக்கள் நிறைந்த பகுதி என்பதால், தங்கள் வீட்டில் உணவு சமைப்பதற்காக உலை வைக்கும்போது, போராட்டக்காரர்களுக்கும் சேர்த்து சமைத்தனர்.

போராட்டக் களத்திலேயே வழிபாடு நடைபெற்றது. போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாதபடி கவனித்துக்கொள்ளப்பட்டது. உணவுப்பொருட்கள், குடிநீர் புட்டிகளால் குப்பை சேராதபடி அவற்றை தூய்மை செய்யும் பொறுப்பை இளைஞர்கள் ஏற்றுக்கொண்டனர். சென்னை ஷாகீன்பாக்கின் தாக்கத்தால் தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் ஷாகீன்பாக்குகள் உருவாகின. உரிமைக்குரல்கள் ஓங்கி ஒலித்தன. அதன் உச்சகட்டமாக, பிப்ரவரி 19 அன்று தலைமைச் செயலகத்தை நோக்கி பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இலட்சக்கணக்கான மக்கள் கட்டுக்கோப்புடன் பங்கேற்ற பேரணி சேப்பாக்கத்தில் நிறைவுபெற்றபோது, ஜனநாயகத்தின் மாண்பு வெளிப்பட்டது.

மக்களிடம் ஜனநாயக நெறிமுறை இருக்கிறது? ஆட்சியாளர்களிடம்?

இந்தக் கேள்விக்கான விடையை எதிர்பார்த்துதான் தொடர்கின்றன ஷாகீன்பாக்குகள்.

uday010320
இதையும் படியுங்கள்
Subscribe