திருவிழாக்கள் எங்கு நடைபெற்றாலும், செல்வான்.
கூட்டத்திற்கும் ஆரவாரத்திற்கும் மத்தியில் சென்று இடத்தைப் பிடிப்பான். இளம் வயதிலிருந்தே இந்த ஒரு ஆர்வம் அவனுக்குள் இருந்து கொண்டேயிருந்தது.
திருவிழாக்களுக்கு முன்னால் சென்று நிற்கக்கூடிய பெரும்பாலான வாய்ப்புகளை அந்தக் காலத்தில் வீணாக்கியதில்லை. மிகப்பெரிய யானைகளின்மீது ஆலவட்டத்தையும், வெண்சாமரத்தையும் பிடித்தவாறு நின்று கொண்டிருக்கும் நபர்களைப் பார்த்து அந்தக்காலத்தில் ஆச்சரியப்பட்ட நிலையில் இருந்திருக்கிறான்.
சிறிய சிறிய திருவிழாக்கள் நடைபெறும் சிறிய சிறிய கோவில்களின் வாசல் பகுதிகளில் சென்று நிற்பதற்கு இப்போதும் ஆர்வம் உண்டு. அந்த ஆர்வம் வரும்போதெல்லாம் நினைவில் மூழ்கிவிடுவான். அப்போது அந்த ஆர்வம் அடங்கிவிடும்.
செம்மணிக்காவு திருவிழாவில் கலந்து கொள்வதற்குத்தான் இறுதியாக சென்றான். அப்போது பத்து... பன்னிரண்டு வயது இருக்கும்.
மூத்தவர்கள் திருவிழாவிற்குச் செல்லும்போது, அவர்களுடன் சேர்ந்து புறப்பட்டு செல்வதற்கு தயாராகி விடுவான். அழைத்துச்செல்வது பெரும்பாலும் அபூர்வம் என்றுதான் கூறவேண்டும்.
செம்மணிக்காவு திருவிழாவிற்கு அழைத்துச் சென்றவள் லட்சுமி அக்கா.
செம்மணிக்காவு திருவிழாவிற்கு லட்சுமி அக்கா புறப்படுவது என்பதே ஒரு விசேஷ செய்திதான். அன்று சீக்கிரமே குளித்து முடிப்பாள். செக்குத் தேங்காய் எண்ணெயைத் தேய்த்துத்தான் லட்சுமி அக்கா குளிப்பாள். லட்சுமி அக்காவின் கூந்தலுக்கு செக்குத் தேங்காய் எண்ணெய்யின் வாசனை எப்போதும் இருக்கும். செக்குத்தேங்காய் எண்ணெய்யின் வாசனை இருக்கக்கூடிய கூந்தலில் தாழம்பூவைச் சொருகி வைத்திருப்பாள்.
தாழம்பூ, செக்குத் தேங்காய் எண்ணெய்...
இவ்விரண்டும் கலந்து உண்டாக்கிய வாசனை நிறைந்திருக்கும், லட்சுமி அக்காவின் தலைமுடியை கையால் தடவி முகர்ந்து பார்ப்பது என்பது அப்போது ஒரு சுகமான விஷயமாக இருந்தது.
பூவாம் குறுந்தலைச் சாற்றை கவனமாக துணியில் நனைத்து உண்டாக்கிய கரிய மையைக் கண்களில் நீளமாகத் தேய்ப்பாள்.
அடர்த்தியான கருப்பு நிறத்திலிருக்கும் மை தேய்க்கப்பட்டு காட்சியளிக்கும் லட்சுமி அக்காவின் கண்களைப் பார்த்தால், முகத்தைக் கண்ணாடியில் பார்ப்பதைப்போல பார்க்கலாம். கறுத்த கண்ணாடித் துண்டைப்போல லட்சுமி அக்காவின் கண்கள் இருப்பதைப் போல எப்போதும் தோன்றும்.யாரைப் பார்ப்பதற்காக லட்சுமி அக்கா அலங்கரித்துக் கொண்டு செல்கிறாள்? செம்மணிக்காவில் குடியிருக்கும் அம்மனை வழிபடுவதற்கா?... அல்லது...
பகல்நேர திருவிழாவிற்கும் இரவு வேளை திருவிழாவிற்கும் துணையே இல்லாமல் லட்சுமி அக்கா தனியாகவே செல்வாள். இரவுப்பொழுதில் போவது குறித்து பயம் உண்டாகாதா? யாராவது லட்சுமி அக்காவை பாதையில் தடுக்க நேர்ந்தால்....?
பாலாழிக்கல்லின் ஒற்றையடிப் பாதையில் இறங்கி, மல்லி வாய்க்காலைக் கடந்து, பூமுள்ளி வயலைத் தாண்டி செம்மணிக்காவை அடையவேண்டும்.
பாலாழிக்கல்லின் ஒற்றையடிப் பாதையில் மோகினிப் பேயைப் பார்த்தவர்கள் இருக்கிறார்கள் என்று கூறுவார்கள்.
மாங்காஞ்சிற கோவிலின் அர்ச்சகர் கேசுக்குட்டி நம்பூதிரியை வழி தவறச் செய்தது பாலாழிக்கல் மோகினிப் பேய்தான். நேரமற்ற நேரங்களில் பாலாழிக்கல் மோகினிப் பேய், பாதை தவறிச் செல்லும் பயணிகளை உரத்த குரலில் அழைத்து பருகுவதற்கு நீர் கேட்டுமாம்! "வீட்டிற்கு வரட்டுமா?'' என்று கேட்குமாம்....!
மோகினிப் பிசாசின் உதடு, குருதி படிந்த பழத்தைப் போல இருக்குமென கூறி, கேட்டிருக்கிறான்.
குருதி படிந்த பழத்தைப் போன்றிருக்கும் உதட்டிலிருந்து வெற்றிலைச் சாறைப் போல ரத்தம் கசிந்துவரும். பச்சைக் குழந்தைகளின் உறிஞ்சிக் குடித்த குருதியே அது என்று சித்தி கூறுவாள். வீடு வீடாக இரவு வேளைகளில் நுழைந்து, தக்க சூழலைப் பார்த்து, யாருக்கும் தெரியாமல் தூக்கிக்கொண்டு வந்து, பாலாமரத்தின் மீது ஏறி, குழந்தையை மடியில் கிடத்தி பால் கொடுக்கும் பாவனையில் ரத்தத்தை உறிஞ்சி குடிக்கும்.
கொஞ்சம் கொஞ்சமாக ரத்தத்தைக் குடித்தது போதுமென தோன்றினால், மெதுவாக மாமிசத்தைச் சாப்பிட ஆரம்பிக்கும். தின்றது போதுமென தோன்றிய பிறகு, மாமிசத்தைக் கீழே போட்டு விடும். பாலா மரத்திற்கு அடியில் எலும்பும் தோலும் தலைமுடிகளும் குவிந்து கிடப்பதை முண்டன் பார்த்திருக்கிறான். பொழுது புலர்வதற்கு முன்பே சாப்பாட்டையும் கலப்பையையும் தூக்கிக் கொண்டு நிலத்திற்கு உழுவதற்காகச் செல்லும் தாழ்த்தப்பட்ட ஜாதியைச் சேர்ந்த முண்டனுக்கு இவற்றையெல்லாம் பார்க்கும்போது, பயம் உண்டாகாதா? சந்தேகங்கள் எழும். என்ன காரணத்தாலோ...
அப்போது கேட்ப

அப்போது கேட்பதற்கு தைரியம் வரவில்லை.
பாலாழிக்கல்லின் மோகினி, குஞ்சு
அம்மாவின் மகள் சௌதுவின் ஆவிதான் என ஆட்கள் நம்புகிறார்கள்.
சௌதுவைப் பார்த்த மெல்லிய ஞாபகம் இருக்கிறது. ஊரின் பேரழகியாக சௌது இருந்தாள்.
பனங்குலையைப் போன்ற கூந்தலை அவிழ்த்து விட்டால், பாதத்தைத் தொட்டு கிடக்கும். சுருள் சுருளாக இருக்கும் முடி... சௌதுவிடம் வெண் கல் பதிக்கப்பட்ட மூக்குத்தியும் கம்மலும் இருந்தன. கழுத்தில் அணிந்திருந்த கருப்பு நிற கயிற்றில் ஒரு கொக்கி உள்ள கால் பவுன் தொங்கிக் கிடந்ததாக கேட்டிருக்கிறான். சௌதுவிற்கு அந்த கால் பவுனை வாங்கிக் கொடுத்தது யார்? கேள்விப்பட்டதுதான்.
ஊரிலேயே பெரிய ஒரு வீட்டைச் சேர்ந்த மீசை வைத்த உண்ணி நம்பூதிரி வாங்கிக்கொடுத்த கால் பவுன்தான் அது என கூறி கேட்டிருக்கிறான்.
சௌதுவிற்கு வயிற்றில் உண்டானது. உண்ணி நம்பூதிரியின் மூலம்தான் கர்ப்பம் தரித்தாள். வெளுத்து..அழகான தோற்றத்தைக் கொண்ட சௌதுவிற்கு வயிற்றில் உண்டானபோது, அவளைக் கொன்றுவிட வேண்டுமென உண்ணி நம்பூதிரிக்குத் தோன்றியது.
கொன்றது உண்ணி நம்பூதிரி அல்ல.
சாமுண்டிக்காவில் உள்ள சாமியாடக்கூடிய வேலப்பர்தான் அடித்துக் கொன்றதாகக் கேள்விப் பட்டான்.
குஞ்சு அம்மாவின் மகள் சௌதாமினியின் ஆவிதான் பாலாழிக்கல்லின் ஒற்றையடிப் பாதையில் இரவு வேளையில் நேரம் கெட்ட நேரத்தில் சுற்றித் திரிந்து கொண்டிருக்கிறது என்ற விஷயத்தை சற்று வளர்ந்த பிறகு தான் புரிந்துகொள்ள முடிந்தது.
பாலாழிக்கல் வாய்க்காலில் வழிப்போக்கர்களை எதிர்பார்த்துக் காத்திருக்கும் சௌதாமினி என்ற மோகினி பிசாசைப் பற்றி கேள்விப் பட்டவை அனைத்தும் உண்மையா? மோகினிப் பேயின் கூந்தல் கால் பாதம்வரை தொங்கிக் கொண்டிருக்கிறது! குஞ்சு அம்மாவின் மகளுக்கு சௌதுவிடம் இருப்பதைப் போன்ற சுருண்ட...சுருண்ட கூந்தல்... சிவந்த..
அழகான உதடுகள்...
மாதுளம் பழத்தைப் போன்ற... தாழம்பூவின் நிறத் திலிருந்த கூர்மையான மார்பகங்கள்...
கழுத்தில் நெருஞ்சிப் பூக்களாலான மாலை.. கைகளில் நெருக்கமாக அணிந்திருக்கும் கருப்பு நிற ரப்பர் வளையல்கள்...
கால்களில் வெள்ளிக் கொலுசு.. கழுத்தில் ஒட்டிக் கிடக்கும் கொக்கி வைத்த கால் பவுன்....
பாலாழிக்கல் மோகினி பிசாசின் தோற்றமும் அலங்காரமும் சௌதாமினியைப் போலவே இருக்குமோ? அந்த காரணத்தால் அது சௌதுதான் என அனைவரும் நம்பினார்கள்.
நீர் பருகாமலே இறந்தது காரணமாக இருக்க வேண்டும் -பாதையில் செல்பவர்களிடம் சௌது நீர் கேட்டுக் கொண்டி ருந்தாள்.
கேசுக்குட்டி நம்பூதிரி இரவில் பூஜையை முடித்து விட்டு, சம்பந்தி வீட்டிற்குச் செல்லும்போது, பாலத்திற்கு அடியில் மோகினி பிசாசைப் பார்த்திருக்கிறார்.
பூதம், ஆவி போன்ற விஷயங்களில் சிறிதும் நம்பிக்கை இல்லாத ஊர்ப் பெரியவரும் பாதையில் ஒரு பெண்ணைப் பார்த்து நடுங்கியிருக்கிறார். மனதில் பல சம்பவங்களையும் நினைத்துக் கொண்டே நடக்கக்கூடிய பெரியவருக்கு முன்னால் ஒருத்தி நின்று கொண்டிருக்கிறாள்! மனதை வசீகரிக்கக்கூடிய புன்சிரிப்புடன்...
கழுத்தில் தொங்கிக்கொண்டிருந்த கால் பவுனை இறுகப் பற்றியவாறு சௌது கேட்டாள்:
"ஏன் இவ்வளவு தாமதம்? என்னை மறந் துட்டீங்களா? ஆத்திட்ட குஞ்சு அம்மாவின் மகள் சௌதுவை...?''
"எனக்கு உன்னையும் தெரியாது. உன் அம்மா வையும் தெரியாது. போ.. எனக்கு முன்னால இருந்து... தேவிடியா!''
பெரியவர் கோபத்துடன் அவளை நிறைய மோசமான வார்த்தைகளால் அர்ச்சித்தார்.
பெரியவர் கெட்ட வார்த்தைகளைக் கூறியபோது, மோகினி பிசாசு தேம்பித் தேம்பி அழுதவாறு பாலத்தின் அடிப்பகுதிக்கு நடந்து சென்று மறைந்தது.
கேசுக்குட்டி நம்பூதிரியைப் பார்த்தபோது, அவரை உண்ணி நம்பூதிரி என தவறாக நினைத் திருக்கிறாள்.
"அவள் ஒரு அப்பிராணி. அதனால்தானே தப்பே நடந்திருக்கு!'' சித்திதான் கூறினாள்.
சௌதுவின் ஆவிதான் மோகினி பிசாசு என சித்தி உறுதியாக நம்புகிறாள்.
அந்த பாதையில்... நடக்க முடியாத வாய்க்காலின் வழியாக லட்சுமி அக்கா திருவிழாவிற்கு அலங்கரித்துக்கொண்டு செல்கிறாள். லட்சுமி அக்காவின் நண்பனான தாழேக்காட்டு அப்பு வாய்க்காலில் எதிர்பார்த்து நின்று கொண்டிருப்பான் என சித்தி கூறுவாள். லட்சுமி அக்காவின் நண்பனாக ஆவதற்கு தாழேக்காட்டு அப்புவிற்கு எப்படி முடிந்தது? எதுவுமே புரியவில்லை.
"அவளுடைய ரகசிய காதலன் அவன்.''
சித்தி பல தடவைகள் கூறியிருப்பதை தன் காதுகளைக் கொண்டு அவன் கேட்டிருக் கிறான்.
"ரகசிய காதலன்னா என்ன சித்தி?''
"உனக்கு எதுக்கு சொல்லணும்? நீயும் முட்டாள்தானே? உன் அப்பா வைப் போலவே நீயும் ஒரு மர மண்டைதான்.''
சித்தி அவனையும் வெறுமனே விடுவதாக இல்லை. கோபம் வந்தால், அனைவரிடமும் அப்படித்தான்.
சித்திக்கும் லட்சுமி அக்காவிற்கும் இடையே மனதளவில் நல்ல உறவு இல்லை. சித்தியைப் பெண் பார்ப்பதற்காக வந்த ராவுண்ணி வாக்கு மாறி லட்சுமி அக்காவைத் திருமணம் செய்து கொண்டார் என்பதுதான் அவளின் குற்றச்சாட்டு.
திருவிழாவிற்கு புறப்பட்டுக்கொண்டு நின்றிருக்கும் லட்சுமி அக்காவின் அழகே சற்று வேறுதான்.
நெற்றியில் இளம் சிவப்பு நிறத்திலிருக்கும் செந்தூரத்திலான ஒரு பெரிய பொட்டு... தலையில் இரவில் மலர்ந்து பறித்தெடுத்த முல்லைப் பூக்களைக் கொண்டு பின்னப்பட்ட மாலையைச் சுற்றி கட்டியிருந்தாள்.
நெசவு செய்த புடவையை அணிந்திருந்தாள்.
மெல்லிய நெசவு செய்த புடவைக்கு நடுவில் மல் துணியாலான துண்டுத் துணியை இறுக்கி கட்டியிருப்பதை பின்னாலிருந்து பார்த்தால், காணலாம். அது ஒரு அழகாகவே இருந்தது- லட்சுமி அக்காவிற்கு. வயலட் நிறத்திலிருந்த சில்க் ரவிக்கையை அணிந்திருந்தாள்.
ரவிக்கையின் அமைப்பைப் பார்த்தால், மார்புக் கச்சையின் வார் இறுக்கமாக இருப்பதைப்போல தோன்றும். ஈர்க்குச்சி அளவு கரை கொண்ட ஜரிகை போட்ட துணியால் மூடப்பட்டிருந்தாள். கையில் தட்டு இருந்தது.தட்டில் தேங்காய்த் துண்டும் வெற்றிலையும் புழுங்கல் அரிசியும் பல்வேறு மலர்களும் கையால் பிடிக்கக்கூடிய கண்ணாடியும்...
செம்மணிக்காவில் ஆயிரக்கணக்கான தட்டுகளை ஏந்தியிருக்கும் கன்னிப் பெண்களின் கூட்டத்தில் கம்பீரமாக நின்று கொண்டிருக்க வேண்டியவள்தான் லட்சுமி அக்காவும். இருட்டில் மின்னக்கூடிய கறுத்த கண்ணாடிப் புட்டியிலிருந்த விழிகளில் மை அழகாகக் காட்சியளித்தது.
லட்சுமி அக்கா அசைந்தால், முல்லை மலர்களின் நறுமணம் பரவும். அருகில் சென்றால், செக்குத் தேங்காய் எண்ணெய்யின் வாசனை வெளிப்படும்.
லட்சுமி அக்காவுடன் சேர்ந்து திருவிழாவைப் பார்ப்பதற்காக புறப்படுவதை சித்தி உள்ளேயிருந்தவாறு பார்த்தாள். வாசலில் இறங்குவதற்கு முன்பே சித்தி உள்ளேயிருந்தே அழைத்துக் கூறினாள்:
"கோபாலா... எனக்கும் ஒரு ரகசிய காதலன் இருந்திருந்தால், நானும் உன்னை திருவிழாவிற்கு அழைத்துச் சென்றிருப்பேன். எனக்கு ரகசிய காதலனோ வெளிப்படையான காதலனோ இல்லை. இதுதான் கடைசியில உண்டானது...''
அந்த குரலில் ஒரு கவலையின் சாயல் இருந்ததோ? அந்த வார்த்தைகளிலிருந்த சோகத்தன்மை... வளர்ந்த பிறகு, நீண்ட நேரம் அமர்ந்து சிந்தனையில் மூழ்க வழி செய்தது... பின் நாட்களில்.
அனைவரும் அறியும்படியும் ரகசியமாகவும் சித்திக்கு யாரிடமிருந்தும் புடவை வாங்குவதற்கான கொடுப்பினை வாய்க்கவேயில்லை என்பது தானே அவ்வாறு கூறியதற்கான அர்த்தம்?
சித்தி கூறியதற்கான அர்த் தத்தைப் புரிந்து கொள்வதற்கான வயது இல்லாத காரணத்தால், எதைப் பற்றியும் சிந்திக்காமல் லட்சுமி அக்காவிற்குப் பின்னால் செம்மணிக்காவில் நடைபெறும் திருவிழாவைப் பார்ப்பதற்காக வெளியேறி நடந்தான். இரவு வேளை... முன்னால் நடந்தாலும், பின்னால் நடந்தாலும் மோகினி பிசாசு வரும். "நீர் பருகுவதற்குத் தருவாயா?'' என்று கேட்கும்.கண்களை உருட்டி விழிக்கும். மின்னிக்கொண்டிருக்கும் விழிகளில் இருந்து நெருப்புப் பொறி தொடர்ந்து வந்து கொண்டிருக்கும்.
குருதியை உறிஞ்சிக் குடிக்கும். தாங்கமுடியாத அளவிற்கு பயம் உண்டானது. பயம் எழுந்ததும், லட்சுமி அக்காவின் கையை இறுகப் பற்றிக்கொண்டான்.
மரக்கிளைகளின் இருட்டிற்குள் இறங்கி நடந்தபோது, இடுப்பை இறுக பிடித்தவாறு நடந்தான்.
"கோபாலா... நீ ஒரு ஆண் பிள்ளைதானேடா? இப்படி பயப்படலாமா?''
பிடித்திருப்பதை இறுக்கும்போது, லட்சுமி அக்கா தைரியத்தை உண்டாக்குவாள்.
பாலாழிக்கல் ஒற்றையடிப் பாதையை அடைந்ததும், பின்னால் திரும்பிப் பார்த்தான். மோகினி பிசாசு வருகிறதா? கால் பவுன் அணிந்திருக் கும் கழுத்து இருட்டில் தெரிகிறதா? இல்லை.. மனதில் அமைதி உண்டானது.
"நீ கொஞ்சம் கூட பயப்பட வேண்டாம். யாரும் உன்னைப் பிடிச்சுத் தின்னுட மாட்டாங்க.''
லட்சுமி அக்கா தைரியத்தை ஊட்டினாள். பூமுள்ளி வயல் கடந்தது.
தூரத்தில் வெளிச்சம் தெரிந்தது. திருவிழா நடைபெறும் இடத்திலிருந்துதான். இயந்திர ராட்டினத் தின் முனகல் சத்தம் காதுகளில் வந்து மோதியது. மனதில் உற்சாகம்... நிறைந்து ததும்பி பிதுங்கி வரும் சந்தோஷம்! மோகினி பிசாசின் பிடியிலிருந்து தப்பித்தாகி விட்டது!
லட்சுமி அக்காவுடன் சேர்ந்து திருவிழா நடைபெறும் இடத்தில் நடந்து பார்த்தான். கிளியை வைத்து எதிர்கால பலன்களைக் கூறும் மூக்குத்தி அணிந்த கறுத்த குறத்திகளின் வரிசையைப் பார்த்தவாறு சிறிது நேரம் நின்றான்.
லட்சுமி அக்கா புடவையின் முந்தானையில் கட்டி வைத்திருந்த பொட்டலத்தை அவிழ்த்து, மூன்று காசுகளை எடுத்து கிளியை வைத்து சீட்டைக் கொத்த வைத்தாள். லட்சுமி அக்காவிற்கு அறிந்து கொள்ள வேண்டிய விஷயம் ஒன்றே ஒன்றுதான். பிள்ளை பெறுவதற்கான அதிர்ஷ்டம் இருக்கிறதா என்பதுதான். வீட்டில் ஏதாவது குறத்தி வந்தாலும், அறிய விரும்புவது அதைத்தான்.
"அம்மா...உங்க மனசுல இருக்கும் ஆசை நிறைவேறப் போகுது. இன்னைக்கிருந்து இருபத்தெட்டு நாட்களுக்குள்...''
கிளியின் அலகிலிருந்து சீட்டையெடுத்து, குறத்தி வாசித்துப் பார்த்து விட்டு கூறினாள்.
"பிள்ளை பெறுவதற்கான அதிர்ஷ்டம் இருக்கிறதா....
குறத்தி?''
மனதிற்குள்ளிருந்த ஆசையை லட்சுமி அக்கா வெளிப்படையாகக் கூறினாள்.
"அம்மா... உங்களுக்கு பத்து பிள்ளைகள் பெறுவதற்கான அதிர்ஷ்டம் இருக்கு.''
பெண்களின் மன அறிவியலைப் புரிந்து வைத்திருக்கும் குறத்தி உறுதியான குரலில் கூறினாள். முட்டை போட தயாரான பெட்டைக்கோழியின் முகத்தைப் போல லட்சுமி அக்காவின் முகம் சிவந்து பிரகாசித்தது.
பத்து பிள்ளைகளைப் பெற்றெடுப்பாள் என குறத்தி கூறுகிறாள்! குறத்தி என்பவள் ஸ்ரீ பார்வதி... பத்து பிள்ளைகளைப் பெறாமற்போனாலும், ஒன்றையாவது பெறாமல் இருக்கமாட்டாள்.
குறத்திக்கு லட்சுமி அக்கா மேலும் மூன்று காசுகளைக் கொடுத்தாள். உள்ளுக்குள் குதூகலமடைந்த லட்சுமி அக்காவின் மனதின் ஆழம், குறத்தி யின் கண்களில் தெரிந்த கேலியில் கரைந்து விட்டிருப்பதைப்போல தோன்றியது. சிறிது நேரம் கட்ட விளையாட்டைப் பார்த்தவாறு நின்று கொண்டிருந்தான்.
"யானை, மயில், குதிரை, ஒட்டகம்... ஒண்ணு வச்சா... மூணு.''
கட்ட விளையாட்டு நடத்துபவன் அர்த்தத்துடன் லட்சுமி அக்கா கேட்கும் வண்ணம் கூறினான். லட்சுமி அக்காவிற்கு பலமாக சிரிப்பு வந்தது. தலையைக் குனிந்தவாறு, கையைப் பிடித்துக்கொண்டு நடந்தாள். ஒரு யானையில் ஒரு அணா வைத்தால் என்ன என தோன்றியது. ஒரு அணாவிற்குப் பதிலாக மூன்று அணாக்கள் கிடைக்குமே! அதை வைத்து ஒரு விசில் வாங்கலாம்.
லட்சுமி அக்காவிடம் கூறிப் பார்த்தான்.
"வேண்டாம்... மகனே. அந்த முஸ்லீம்... திருடன்!''
லட்சுமி அக்கா உற்சாகமூட்டுவதற்கு எதிராக இருந்தாள்.
கண்ணாடி வளையல் விற்கும் செட்டியாரிடம் கொஞ்சம் கண்ணாடி வளையல்களை வாங்கி, லட்சுமி அக்கா கைகளில் அணிந்து கொண்டாள்.பச்சை, சிவப்பு நிறங்களைக் கொண்ட வளையல்களாக இருந்தன.
நான்கு ஜோடி வளையல்களை செட்டியாரே கைகளில் அணிவித்தார்.
மிகவும் மெதுவாகவே செட்டியார் வளையல்களைக் கைகளில் அணிவித்துக் கொண்டிருந்தார்.
கையைப் பலமாக பற்றியபோது, லட்சுமி
அக்காவின் கையை செட்டியார் மெல்ல... மெல்ல
அழுத்துவதைப்போல தோன்றியது. லட்சுமி அக்கா
வின் முகம், எரிந்து கொண்டிருக்கும் மத்தாப்பைப் போல சிவந்தது.
வளையல்களை அணிவித்து முடித்து விட்டு, செட்டியார் லட்சுமி அக்காவின் நெற்றி யிலிருந்த பொட்டையே உற்றுப் பார்த்தார். லட்சுமி அக்கா, செட்டியாரின் வளைந்து கீழ்நோக்கி இறங்கிக்கொண்டிருந்த மீசையை...
வயலின் எல்லையில் அமைக்கப்பட்டிருந்த தேநீர் கடைக்குள் காபி பருகுவதற்காக நுழைந்தார்கள்.
பழ போண்டாவையும் பக்கோடாவையும் தட்டில் கொண்டு வந்து வைத்தார்கள். ஒரு கண்ணாடி டம்ளர் நிறைய பால் கலக்காத காபியையும்... வயிறு நிறைய பலகாரத்தையும் சாப்பிட்டார்கள்.
லட்சுமி அக்கா காபியை மட்டும் பருகினாள். காசை எடுத்துக் கொடுப்பதற்கு முயன்றபோது, "முந்தானையிலேயே இருக்கட்டும்'' என கடைக்காரன் லட்சுமி அக்காவிடம் கூறுவதைக் கேட்டான். சிறிது நேரம் சென்றதும், லட்சுமி அக்கா சிறிய தயக்கத்துடன் கூறினாள்:
"நாம குடிச்சது அப்புவின் கடையில்... அந்த ஆளு நம்மக்கிட்ட காசு வாங்க மாட்டார். தாத்தாவின் காலத்திலிருந்து பழக்கம்.''
தாழெக்காட்டு அப்பு என்பது புரிந்தது. பார்ப்பதற்கு அப்பு... சொங்கி! வெளுத்து... உயரம் குறைந்து... சுருள் முடிகளைக்கொண்ட ஒரு ஆள்! காதில் சிவப்பு நிற கல் பதிக்கப்பட்ட கடுக்கன்!
அவிழ்த்து வைக்கப்பட்ட பொரி மூட்டைகளில் மரக்கால்களை வைத்துக் காத்திருக்கும் வர்த்தகர் களின் ஆரவாரம் காதில் விழுந்தது. "சரக்கு தீரப் போகுது.சகாய விலை..'' ஆட்கள் அருகில் வரும்போது, வியாபாரிகள் உரத்த குரலில் அழைத்துக் கூற ஆரம்பிப்பார்கள்.
"திரும்பிப் போறப்போ, வாங்கிக்கலாமா... கோபாலா?'' லட்சுமி அக்கா கேட்டபோது, சம்மதிப்பதைப் போல தலையை ஆட்டினான்.
பேரீச்சம்பழச் சாறு, வெற்றிலை, விலை மதிப்புள்ள பொருட்கள் விற்பனை செய்யப்படும் கடைகள் ஆகியவற்றைப் பார்த்தவாறு கோவிலின் நடைக்கு வந்து சேர்ந்தார்கள்.
திருவிழா ஆரம்பமாகி விட்டிருந்தது. ஐந்து யானைகள்! பஞ்சவாத்தியம்! திருவிழா களை கட்டி யிருந்தது. பல வர்ணங்களைக்கொண்ட குடைகளின் தலைப்புகள் காற்றில் அசைந்து விளையாடின.
தாம்பாளத் தட்டுகளுடன் வரிசையாக நிற்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.
லட்சுமி அக்கா குளத்தில் இறங்கி, கைகளையும் கால்களையும் முகத்தையும் கழுவினாள். மேல் துணியைச்சரி செய்து விட்டு, மேலே இருந்த கோவிலுக்குச் சென்றாள். அவனைச் சற்று பின்னால் நிற்கச் செய்தாள். தட்டில் வைக்கப்பட்டிருந்த விளக்குகளைப் பற்றவைக்கும் நேரம் வந்துவிட்டது.வரிசை... வரிசையாக அணிவகுத்து நின்றவாறு தட்டுகளை ஏந்தி நின்ற பெண்களின் விளக்குகளுக்கு ஊரின் பெரிய மனிதர் வந்து திரியைப் பற்ற வைத்தார்.
திருவிழா கூட்டம் கீழே இருக்கும் கோவில் பகுதிக்குச் சென்றவுடன், பட்டாசு வெடிக்க ஆரம்பிப்பார்கள்.
சிவப்பு நிற துணியையும் கால்களில் வெங்கலச் சிலம்புகளையும் அணிந்த சாமியாடிகள்... மின்னிக் கொண்டிருக்கும் வாட்களுடன் திருவிழா கூட்டத்திற்கு முன்னால் தலைமுடியை அவிழ்த்து போட்டுவிட்டு அங்குமிங்குமாக நடந்து கொண்டிருந்தார்கள்.
மஞ்சள் தூளையும் மலர் இதழ்களையும் கிண்ணத்தில் வைத்தவாறு சீடர்கள் சாமியாடிகளுக்குப் பின்னால் நடந்தார்கள். சிறிது நேரம் கடந்தால், உத்தரவுகள் தொடங்கும்! ஒரு வருட நிர்வாகத்தின் உயர்வு, தாழ்வுகளைப் பற்றிய அலசல் நடக்கும்.
மேளச் சத்தம் உரத்து ஒலிக்க ஆரம்பித்தது.
சிலம்புகளின் ஓசை காற்றில் கலந்து பலமாக ஒலித்தது.
யானைகளும் ஆண்களும் முன்னோக்கி நடந்தார்கள்.
அவர்களுடன் தாம்பாளத் தட்டுகளும்... பெண்களின் கால் வைப்புகளும் ஒரு சீரான தாளத்தில் கீழே இருக்கும் கோவிலின் பகுதியை நோக்கி செல்வதைப் போல தோன்றியது.
"பூரம்' என்று கூறப்படும் திருவிழா கூட்டம் கீழேயிருக்கும் கோவிலின் பகுதியை அடைந்ததும், வெடிமருந்திற்கு நெருப்பு வைப்பார்கள்.
தாழெக்காடு பகுதியைச் சேர்ந்தவர்களுக்கே வெடிமருந்திற்கு நெருப்பு வைக்கக்கூடிய உரிமை... லட்சுமி அக்காவின் பார்வை அப்புவின் கடையை நோக்கி அவ்வப்போது சென்று விழுந்துகொண்டிருந்தது.
மனதில் பதைபதைப்பு இருக்கலாம்.
பட்டாசின் நுனிப் பகுதிகள் மூங்கில் கொம்புகளில் தொங்கிக் கொண்டிருப்பது தூரத்தில் நின்றுகொண்டிருந்தாலே தெரிந்தது. ஆட்களை விலக்க ஆரம்பித்தார்கள்.
திருவிழா கூட்டம் கீழே வந்து சேர்ந்தது. பற்ற வைத்த ஒரு நெருப்புப் பந்தம் வயல் வழியாக பாய்ந்து சென்றது. எரிய வைத்த அந்த தீப்பந்தத்திலிருந்து ஒரு துண்டுப் பகுதி வெடிமருந்தின் மீது விழுந்ததாகத் தோன்றியது.
கண்களைக் கூசச் செய்யுமளவிற்கு வெளிச்சம் தெரிந்தது. தொடர்ந்து சத்தமும்....
'டெம்....ட்டம்...ட்டம்...
ட்ட... டம்ம்ம்... டம்... ட்ட... டெ...' பட்டாசு வெடித்து முடித்தவுடன் குண்டுகள் வெட்டவெளியில் உயர்ந்து சீறின. வெடித்துச் சிதறியதால் உண்டான சத்தங்களின் அதிர்வு மட்டும் காதில் வந்து மோதியது. காதுகள் மரத்துப் போயின. கண்களைக் கூசச் செய்யுமளவிற்கு வெளிச்சம்! திருவிழா நடைபெற்ற இடம் வெடிமருந்தின் பிரகாச வளையத்தில் ஒரு நெருப்புக் குண்டமாக மாறியது. மூச்சு அடைக்க, பார்த்தான். என்ன நடந்தது என்று யாருக்குமே தெரியவில்லை.
எங்கிருந்தோ கேட்ட ஒரு முனகல் ஒலி, சத்த பிரபஞ்சத்தில் கரைந்து விட்டதைப்போல தோன்றியது.
வெடிக்கும் செயல்கள் நின்றபோது, நெருப்பில் வெந்து எரிந்த ஒரு மனித சரீரத்தை வயல் பகுதியிலிருந்து ஆட்கள் தூக்கியெடுத்து, கோவிலின் நடையில் கொண்டு வந்து கிடத்துவதைப் பார்த்தான். ஒருமுறை எட்டிப் பார்த்தான்.
"அம்மா....!'' ஒரு பெண்ணின் அழுத்திப்பிடித்த அழுகைச் சத்தம் உரத்து உயர்ந்து எழுந்தது.
தாழெக்காட்டு அப்பு வெடி விபத்தில் மரணம்! ஊரெங்கும் அந்தச் செய்தி பரவியது... லட்சுமி அக்கா செம்மணிக்காவு கோவிலின் வாசலில் சிறிது நேரம் தலைசுற்றிக் கிடந்தாள்.
மனிதர்கள் அந்தக் கதைகளையெல்லாம் மறந்துவிட்டார்கள்.
பலருக்கும் இப்போது அது ஒரு பழங்கதை.
செம்மணிக்காவின் பூரம் திருவிழா என்றல்ல.... வேறு எந்த வகையான வெடிகள் வெடிக்கக் கூடிய திருவிழாவையும் பார்க்கக்கூடிய ஆர்வம் அத்துடன் இல்லாமற் போனது.
லட்சுமி அக்கா அதற்குப் பிறகு தாம்பாளத் தட்டைக் கையில் ஏந்தி பார்த்ததேயில்லை.
சித்தி திருமணமாகாமலே இறந்து விட்டாள். இப்போது யாரும்... யாரையும் திட்டுவதில்லை.
சத்தமும், சுறுசுறுப்பும், வெளிச்சமும் இல்லாத வீட்டில் தனித்து இருப்பவளாக....
பெரும்பாலும் முதுமையை அடைந்து விட்ட லட்சுமி அக்கா மட்டும் அழாமலும் சிரிக்காமலும் வாழ்ந்து கொண்டிருக்கிறாள்... அவளைப் பார்ப்பது என்பதே வேதனை தரும் விஷயமாக இருக்கிறது. அதனால், திருவிழா வந்தும், அங்கு செல்லவில்லை.