குறிஞ்சிப்பூனை -உறூப் தமிழில்: சுரா

/idhalgal/eniya-utayam/kurichappanai

நிலவு நிறைந்திருந்த ஒரு இரவுவேளையாக அன்று இருந்தது. நம் மனதிலிருக்கும் பெரிய நிழல்களைக்கூட தனக்குள் பிடித்திழுத்து வைத்துக்கொள்ளும் அளவுக்கு பலமான பிரகாசப் பரவல்... நானும் என்னுடைய நண்பர் குட்டிசங்கரனும் சேர்ந்து கடற்கரையை நோக்கிச் சென்றுகொண்டிருந்தோம். அதுவரை இயந்திரங்களின் பயங்கரமான சத்தத்திலும் பணியாட்களின் புகார்களுக்கு மத்தியிலும் தன்னையே ஆழமாகப் புதைத்து மூடிக்கொண்டிருந் தவனுக்கு, தன்னுடைய தலையெழுத்தைத்தவிர வேறெதையும் திட்டுவதற்கு சந்தர்ப்பம் கிடைக்காததால் கோபத்தால் ஆக்கிரமிக்கப்பட்டவனுக்கு அந்த அளவுக்கு மனநிம்மதி அளிக்கும் வேறொன்று இருப்பதற்கு வாய்ப்பே இல்லை.

நாங்கள் கடற்கரையிலிருந்த பாதையை நோக்கித் திரும்பினோம். அருகிலிருந்த கொப்பரைத் தொழிற்சாலையிலிருந்து நாழிகை மணி அடிப்பதை நான் எண்ணினேன்.

""மணி ஒன்பதாகிட்டது.''

""அது நிரந்தரமானது.'' குட்டிசங்கரன் கூறினார். எங்களுக்கு அன்று சற்று சுற்றித்திரிய வேண்டியதற்கான நாள். நாங்கள் மணல்வெளியை நோக்கி இறங்கும் போது, ஒரு இளைஞனும் இளம்பெண்ணும் பாதையை நோக்கி ஏறி வந்தார்கள். அவர்களுக்கு எதிரே சைக்கிளின் சக்கரத்தை உருட்டியவாறு ஒரு முஸ்லிம் சிறுவன் வந்துகொண்டிருந்தான். திடீரென்று அவனுடைய கையிலிருந்த குச்சி சக்கரத்திலிருந்து தெறித்தது. சக்கரம் உருண்டு... உருண்டு அந்த இளம்பெண்ணின் காலில் சென்று மோதியதும், அவள் பின்னோக்கித் துள்ளிக் குதித்ததும் ஒரு நிமிடத்திற்குள் நடந்துமுடிந்தது. அந்த இளைஞன் குலுங்கிக் குலுங்கி சிரித்தான்.

அவளும் பற்களைக் காட்டினாள். எனினும், தன்னுடைய சக்கரத்தை எடுத்துக்கொண்டு வேறொரு பாதையில் அடித்தவாறு போய்க் கொண்டிருந்த அந்தச் சிறுவனை பயங்கர கோபத்துடன் சற்று திரும்பிப் பார்க்காமல் இருப்பதற்கு அவளால் முடியவில்லை. இளைஞன் மீண்டும் சிரித்தான். அவர்கள் இருவரும் சந்தோஷத்துடன் கடந்து சென்றார்கள். நாங்கள் அதைப் பார்த்தவாறு நின்றுகொண்டிருந்தோம். கடலை நோக்கி நடந்தபோது குட்டிசங்கரன் கூறினார்:

""அதிர்ஷ்டசாலிங்க!''

""என்ன காரணம்?'' நான் கேட்டேன்.

""ஒண்ணுமில்ல... அதிர்ஷ்டசாலிங்க!''

""உங்களுக்கு அவங்களைத் தெரியுமா?''

""இல்லை...'' என் நண்பர் கூறினார்.

அவர்களைத் தெரியாது. எனினும், அவர்களை அதிர்ஷ்டசாலிகளாகக் கருதுவதில் அவர் சிறிதளவில்கூட கஞ்சத்தனம் காட்டவில்லை. அது நல்ல விஷயம்...

""அவங்க தம்பதிகளா இருந்தா...'' நான் கூறினேன்:

""தவறான முகவரியோட பயணிக்கிறாங்க... மாறா, காதலி- காதலனா இருந்த ஒரு மரியாதையோட நடந்துக்கிறாங்க...''

என் நண்பர் புன்னைகைத்தார். நாங்கள் ஓரிடத்தில் அமர்ந்தோம். வெண்ணிலவின் வெளிச்சத்தில் ஒளிர்ந்துகொண்டிருக்கும் அந்த பரந்து கிடக்கும் மணல்வெளி மிகவும் கம்பீரமான வெளியாக இருந்தது. கடலின் அலைகள் பலமாக உயர்ந்துகொண்டும், உடைந்து தகர்ந்து தாழ்ந்துகொண்டும் இருந்தன.

அவை கரைக்கு வந்து குலுங்கிக்குலுங்கி சிரித்தவாறு கிடந்து உருள்வதைப் பார்க்கும்போது, திருவாதிரை கொண்டாட்டத்தைப் பார்ப்பதற்காக வந்திருக்கும் இளம்பெண்களைப் பற்றிய நினைவில் நாம் மூழ்கிவிடுவோம்.

குட்டிசங்கரன் மிகவும் அமைதியாக இருந்தார்.

நானும்... கடந்த காலத்தின் இனிய நினைவுகளையும் எதிர்காலத்தின் சந்தோஷம் நிறைந்த எதிர்பார்ப்பு களையும் சேர்த்து வைத்து நினைத்தவாறு மனம் அவ்வாறு நீண்ட தூரம் பயணித்துக்கொண்டிருந்தது. தெளிவான, இசைத்தன்மை கொண்ட சில நிழல் கீற்றுகள் என் மனதில் ஒவ்வொன்றாக வந்து சேர்ந்தன. ஒவ்வொன்றாக அகன்றுசென்றன.

""குட்டிசங்கரா...'' நான் அழைத்தேன்.

""என்ன?''

""நான் ஒண்ணு கேட்கட்டுமா?''

""சரி...''

""நீங்க எப்போதாவது காதல் வசப்பட்டு கஷ்டப்பட்டிருக்கீங்களா?''

அவர் தலையை உயர்த்தி என்னைப் பார்த்தார். நான் கேள்வியை மீண்டும் கேட்டேன்.

""நான்...'' குட்டிசங்கரன் சிந்தித்தவாறு பதில் கூறினார்: ""காதல் வசப்பட்டு கஷ்டப்பட்டதில்லை. இருந்தாலும்...''

""இருந்தாலும்...''

""ஒரு காலத்தில எனக்கு காதல்ங்கற சிந்தனை இல்லாமலிருந்ததால கஷ்டம் வந்திருக்கு.''

""உண்மையாவா?'' அவ்வாறு ஒருமுறை கேட்காமல் இருக்கமுடியாது. மென்மையான உணர்வுகளுக்குச் சிறிதுகூட இடமில்லாதது குட்டிசங்கரனின் இதயம் என்பதுதான் நாங்கள் நண்பர்களாக இருந்த காலத் திலிருந்தே நான் கொண்ட கருத்து.

""அது எப்போ?''

""சொல்றேன்...'' என் நண்பர் தொடர்ந்தார்: ""இதுவரைக்கும் நானும் சிந்திச்சிக்கிட்டிருந்தது அதைப் பத்தித்தான். சுவாரசியம் உண்டாகுது. நான் சொல்றேன்...''

நான் ஆர்வம் கொண்டவனானேன். முல்லைப்பூ மாலைகள் அணிந்த அலைகள் எவ்வளவு வேகமாக ஓடி... ஓடி வந்துகொண்டிருக்கின்றன! குட்டிசங்கரன் ஆரம்பித்தார்: ""இப்பவும் நல்லா ஞாபகம் இருக்கு... இளமைக் காலத்துக்குப் பிறகு நடந்த பல விஷயங்களையும் நான் மறந்திருக்கேன். ஆனா, பால்ய காலத்து நினைவுங்க சுடலையில வைச்சுத்தான் பிரிஞ்சு போகும். ஒரு அரைக்கால் சட்டையையும் பொத்தான் இடா

நிலவு நிறைந்திருந்த ஒரு இரவுவேளையாக அன்று இருந்தது. நம் மனதிலிருக்கும் பெரிய நிழல்களைக்கூட தனக்குள் பிடித்திழுத்து வைத்துக்கொள்ளும் அளவுக்கு பலமான பிரகாசப் பரவல்... நானும் என்னுடைய நண்பர் குட்டிசங்கரனும் சேர்ந்து கடற்கரையை நோக்கிச் சென்றுகொண்டிருந்தோம். அதுவரை இயந்திரங்களின் பயங்கரமான சத்தத்திலும் பணியாட்களின் புகார்களுக்கு மத்தியிலும் தன்னையே ஆழமாகப் புதைத்து மூடிக்கொண்டிருந் தவனுக்கு, தன்னுடைய தலையெழுத்தைத்தவிர வேறெதையும் திட்டுவதற்கு சந்தர்ப்பம் கிடைக்காததால் கோபத்தால் ஆக்கிரமிக்கப்பட்டவனுக்கு அந்த அளவுக்கு மனநிம்மதி அளிக்கும் வேறொன்று இருப்பதற்கு வாய்ப்பே இல்லை.

நாங்கள் கடற்கரையிலிருந்த பாதையை நோக்கித் திரும்பினோம். அருகிலிருந்த கொப்பரைத் தொழிற்சாலையிலிருந்து நாழிகை மணி அடிப்பதை நான் எண்ணினேன்.

""மணி ஒன்பதாகிட்டது.''

""அது நிரந்தரமானது.'' குட்டிசங்கரன் கூறினார். எங்களுக்கு அன்று சற்று சுற்றித்திரிய வேண்டியதற்கான நாள். நாங்கள் மணல்வெளியை நோக்கி இறங்கும் போது, ஒரு இளைஞனும் இளம்பெண்ணும் பாதையை நோக்கி ஏறி வந்தார்கள். அவர்களுக்கு எதிரே சைக்கிளின் சக்கரத்தை உருட்டியவாறு ஒரு முஸ்லிம் சிறுவன் வந்துகொண்டிருந்தான். திடீரென்று அவனுடைய கையிலிருந்த குச்சி சக்கரத்திலிருந்து தெறித்தது. சக்கரம் உருண்டு... உருண்டு அந்த இளம்பெண்ணின் காலில் சென்று மோதியதும், அவள் பின்னோக்கித் துள்ளிக் குதித்ததும் ஒரு நிமிடத்திற்குள் நடந்துமுடிந்தது. அந்த இளைஞன் குலுங்கிக் குலுங்கி சிரித்தான்.

அவளும் பற்களைக் காட்டினாள். எனினும், தன்னுடைய சக்கரத்தை எடுத்துக்கொண்டு வேறொரு பாதையில் அடித்தவாறு போய்க் கொண்டிருந்த அந்தச் சிறுவனை பயங்கர கோபத்துடன் சற்று திரும்பிப் பார்க்காமல் இருப்பதற்கு அவளால் முடியவில்லை. இளைஞன் மீண்டும் சிரித்தான். அவர்கள் இருவரும் சந்தோஷத்துடன் கடந்து சென்றார்கள். நாங்கள் அதைப் பார்த்தவாறு நின்றுகொண்டிருந்தோம். கடலை நோக்கி நடந்தபோது குட்டிசங்கரன் கூறினார்:

""அதிர்ஷ்டசாலிங்க!''

""என்ன காரணம்?'' நான் கேட்டேன்.

""ஒண்ணுமில்ல... அதிர்ஷ்டசாலிங்க!''

""உங்களுக்கு அவங்களைத் தெரியுமா?''

""இல்லை...'' என் நண்பர் கூறினார்.

அவர்களைத் தெரியாது. எனினும், அவர்களை அதிர்ஷ்டசாலிகளாகக் கருதுவதில் அவர் சிறிதளவில்கூட கஞ்சத்தனம் காட்டவில்லை. அது நல்ல விஷயம்...

""அவங்க தம்பதிகளா இருந்தா...'' நான் கூறினேன்:

""தவறான முகவரியோட பயணிக்கிறாங்க... மாறா, காதலி- காதலனா இருந்த ஒரு மரியாதையோட நடந்துக்கிறாங்க...''

என் நண்பர் புன்னைகைத்தார். நாங்கள் ஓரிடத்தில் அமர்ந்தோம். வெண்ணிலவின் வெளிச்சத்தில் ஒளிர்ந்துகொண்டிருக்கும் அந்த பரந்து கிடக்கும் மணல்வெளி மிகவும் கம்பீரமான வெளியாக இருந்தது. கடலின் அலைகள் பலமாக உயர்ந்துகொண்டும், உடைந்து தகர்ந்து தாழ்ந்துகொண்டும் இருந்தன.

அவை கரைக்கு வந்து குலுங்கிக்குலுங்கி சிரித்தவாறு கிடந்து உருள்வதைப் பார்க்கும்போது, திருவாதிரை கொண்டாட்டத்தைப் பார்ப்பதற்காக வந்திருக்கும் இளம்பெண்களைப் பற்றிய நினைவில் நாம் மூழ்கிவிடுவோம்.

குட்டிசங்கரன் மிகவும் அமைதியாக இருந்தார்.

நானும்... கடந்த காலத்தின் இனிய நினைவுகளையும் எதிர்காலத்தின் சந்தோஷம் நிறைந்த எதிர்பார்ப்பு களையும் சேர்த்து வைத்து நினைத்தவாறு மனம் அவ்வாறு நீண்ட தூரம் பயணித்துக்கொண்டிருந்தது. தெளிவான, இசைத்தன்மை கொண்ட சில நிழல் கீற்றுகள் என் மனதில் ஒவ்வொன்றாக வந்து சேர்ந்தன. ஒவ்வொன்றாக அகன்றுசென்றன.

""குட்டிசங்கரா...'' நான் அழைத்தேன்.

""என்ன?''

""நான் ஒண்ணு கேட்கட்டுமா?''

""சரி...''

""நீங்க எப்போதாவது காதல் வசப்பட்டு கஷ்டப்பட்டிருக்கீங்களா?''

அவர் தலையை உயர்த்தி என்னைப் பார்த்தார். நான் கேள்வியை மீண்டும் கேட்டேன்.

""நான்...'' குட்டிசங்கரன் சிந்தித்தவாறு பதில் கூறினார்: ""காதல் வசப்பட்டு கஷ்டப்பட்டதில்லை. இருந்தாலும்...''

""இருந்தாலும்...''

""ஒரு காலத்தில எனக்கு காதல்ங்கற சிந்தனை இல்லாமலிருந்ததால கஷ்டம் வந்திருக்கு.''

""உண்மையாவா?'' அவ்வாறு ஒருமுறை கேட்காமல் இருக்கமுடியாது. மென்மையான உணர்வுகளுக்குச் சிறிதுகூட இடமில்லாதது குட்டிசங்கரனின் இதயம் என்பதுதான் நாங்கள் நண்பர்களாக இருந்த காலத் திலிருந்தே நான் கொண்ட கருத்து.

""அது எப்போ?''

""சொல்றேன்...'' என் நண்பர் தொடர்ந்தார்: ""இதுவரைக்கும் நானும் சிந்திச்சிக்கிட்டிருந்தது அதைப் பத்தித்தான். சுவாரசியம் உண்டாகுது. நான் சொல்றேன்...''

நான் ஆர்வம் கொண்டவனானேன். முல்லைப்பூ மாலைகள் அணிந்த அலைகள் எவ்வளவு வேகமாக ஓடி... ஓடி வந்துகொண்டிருக்கின்றன! குட்டிசங்கரன் ஆரம்பித்தார்: ""இப்பவும் நல்லா ஞாபகம் இருக்கு... இளமைக் காலத்துக்குப் பிறகு நடந்த பல விஷயங்களையும் நான் மறந்திருக்கேன். ஆனா, பால்ய காலத்து நினைவுங்க சுடலையில வைச்சுத்தான் பிரிஞ்சு போகும். ஒரு அரைக்கால் சட்டையையும் பொத்தான் இடாத சட்டையையும்தான் நான் பொதுவா அணிஞ்சிருப்பேன். அந்த சட்டையோட பை எந்தச் சமயத்திலும் காலியா இருக்காது. தீப்பெட்டி படங்களும், கூழாங்கல்லுகளும், வேலைக்காரப் பெண்ணோட மகன் குஞ்ஞு கொண்டு வந்து பரிசா தந்த ஒரு கவணும், அக்காவோட பெட்டியிலிருந்து திருடியெடுத்த சிகரெட் பெட்டியால செய்யப்பட்ட ஒரு அடுப்பும், மாமா அப்பம் வாங்கறதுகாகத் தந்த காசும், பெரியப்பாவின் விசிறியிலிருந்து தனியா பிரிச்செடுத்த ஈர்க்குச்சியும், "டவல்' னு பெயர் சூட்டப்பட்ட ஒரு துணித்துண்டும்... எல்லாம் சேர்ந்து என் சட்டையோட பை வீங்கிக் காணப்படும். அது அப்படி வீங்கி இருக்கணும். இல்லைன்னா... எனக்கு ஒரு மனத்திருப்பதி உண்டாகாது.

நான் ஒரு பெரிய குறும்புக்காரனா இருந்தேன். இருந்தாலும் என்னை எல்லாருக்கும் பிடிச்சிருந்தது. ஊரில் உள்ளவங்க என்னை "குட்டிசங்கரன்'னும், என் தாய் "குழந்தை...'ன்னும் கூப்பிடுவாங்க. அப்பா ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு பேரைச் சொல்லி அழைப்பார். நான் எல்லாத்தையும் கேட்டுக் கிட்டிருந்தேன்.

அந்த வகையில... இனிமையான ஒரு காலகட்டம்... ஒருநாள் நான் வாசல்ல நின்னு குளிச்சுக்கிட்டிருந்தேன். திடீர்னு பெரிய அத்தை வாசற்படியைக் கடந்து வந்துக்கிட்டிருக்காங்க. அவங்ககூட வேறு ஆளுங்களும் இருந்தாங்கனு ஞாபகம். அத்தை எங்க வீட்டிலிருந்து தன்னோட வீட்டுக்குப்போய் மூணு மாசங்களுக்கும் அதிகமா ஆகிட்டது. பிரசவத்திற்காகப் போனவங்க... அவங்களோட கையில அசைஞ்சுக்கிட்டிருந்த ஒரு சிறிய மாராப்பு இருந்தது.

"குழந்தை... இந்த பையில என்ன இருக்கு?' வீங்கியிருந்த என் பையைப் பார்த்தவாறு அத்தை கேட்டாங்க.

"இதுவா?' நான் பையை மேலும் பிடிச்சு வீங்கச் செய்தேன்.

"ஆமா!'

"இதுல ஒரு யானைக் குட்டி இருக்கு அத்தை. பாருங்க இதோட தும்பிக்கையை...' நான் பையிலிருந்து பல் விழுந்த ஒரு சாவியின் தலைப் பகுதியை மேலும் கொஞ்சம் வெளியே காட்டினேன்.

எல்லாரும் குலுங்கிக்குலுங்கி சிரிச்சாங்க.

"அத்தை... உங்களோட கையில என்னை இருக்கு?' நான் அந்த அசைஞ்சிக்கிட்டிருக்குற மாராப்பு சேலையைச் சுட்டிக் காட்டினேன்.

"இது யானைக்குட்டி எதுவுமில்லை பெரியவரே!' அத்தை சிரிச்சாங்க.

"இதுவொரு குறிஞ்சிப் பூனை. உனக்காக கொண்டு வந்திருக்கேன்.'

எல்லாரும் மீண்டும் விழுந்துவிழுந்து சிரிச்சாங்க.

நாங்க உள்ளே போனோம். அங்க அத்தை யோட குறிஞ்சிப் பூனையை நான் முதல்முறையாப் பார்த்தேன். அது... வெள்ளை வெளேர்னு இருந்த ஒரு பெண் குழந்தை. கையையும் காலையும் அசைச்சு விளையாடிக்கிட்டிருந்தது. கண்ணில் மை தீட்டியிருந்தாங்க. நல்ல அழகான குழந்தை!

அவ தொட்டில்ல படுத்து கையையும் காலையும் அசைச்சு விளையாடிக்கிட்டிருந்தா. நான் அந்த தொட்டிலை மெதுவாக ஆட்டி விட்டுக்கிட்டிருந்தேன். அப்போதெல்லாம் எனக்கு ரொம்ப பெருமையா இருந்தது. வீட்ல எனக்கும் கீழே ஒரு ஆள் இருக்கே! என்னை "அத்தான்'னு அழைக்கக்கூடிய ஒரு ஆள்...

அவள் வளரட்டும். பாவாடையும் ரவிக்கையும் அணிஞ்சு, இந்த வீடு முழுக்க நடப்பா. அப்போ நான் அவகிட்ட பலவற்றையும் உத்தரவிடுவேன். "லட்சுமி... கொஞ்சம் தண்ணி எடுத்துக்கிட்டு வா... என் கால்சட்டையையும் சட்டையையும் கொண்டு வா...' இப்படி ஒவ்வொன்றையும்... சொன்னபடி நடக்கலைன்னா திட்டுவேன். அதற்குப்பிறகும் பின்பற்றி நடக்கலைன்னா அடிப்பேன்.

காலம் கடந்து போச்சு. அவ பாவாடையும் ரவிக்கையும் அணிஞ்சு நடக்க ஆரம்பிச்சா. ஆனா, அப்போ அவகிட்ட எதையும் சொல்றதுக்கு எனக்கு விருப்பம் உண்டாகல. அவளால எனக்கு பெரிய அளவுல தர்மசங்கடமான நிலைமை உண்டாச்சு. நாங்க ரெண்டுபேரும் ஒண்ணா இருக்கறதைப் பார்த்துக்கிட்டு வந்த பக்கத்து வீட்டைச் சேர்ந்த ஒரு பெண் உடனே சொன்னா: "புருஷனும் பொண்டாட்டியும் சேர்ந்து உட்கார்ந்து என்ன சிந்திக்கிறீங்க?'

எனக்கு தாங்கமுடியாத அளவுக்கு கோபம் வந்துச்சு. அதுல அவமானப்படுற அளவுக்கு ஏதோ இருக்குன்னு ஒரு எண்ணம் உண்டானது. வீட்டிலிருப் பவங்களோ அதை ஏத்துக்கிட்டு பாடினாங்க. அத்தை பெரிய அளவுக்கு சந்தோஷ குணம் கொண்டவங்க. அவங்க லட்சுமியைப் பிடிச்சு மடியில உட்கார வைப்பாங்க. பிறகு... வாசல்ல ஏதோ தொல்லையில்லாத விளையாட்ல ஈடுபட்டிருக்குற என்னை "கணவரே'ன்னு அழைக்குமாறு கத்துக் கொடுப்பாங்க. அதைக் கேட்டதுதான் தாமதம்... அந்த மூதேவிப்பெண் கூப்பிடுவா: "என் கணவரே...!'

எனக்கு கோவம் வரும். நான் ஓடிப்போய், அத்தை தடுத்து நிறுத்துறதப் பொருட்படுத்தாம, அவளுடைய தலையைப் பிடிச்சு ஒருமுறை குலுக்குவேன். உடனடியா அவளுடைய அழுகைத் சத்தம் கேட்கும்: "பே...'

அப்போ பாட்டியும் அத்தையும் சேர்ந்து பஞ்சாயத்துக்கு வருவாங்க. "குட்டி... நீ ஏன் அந்தப் பெண்ணை இப்படி வேதனைப்படுத்துறே?' பாட்டி விசாரணையை ஆரம்பிப்பா.

"அவ ஏன் தேவையில்லாததையெல்லாம் சொல்றா?' நான் வாதம் செஞ்சுக்கிட்டு நின்னுக்கிட்டிருப்பேன்.

"அவ சொன்னா, உன்மேல ஒட்டிக்குமா? நீ ஒரு பெரிய போக்கிரிப்பயலா இருக்கே?'

நான் பொறுமையா சகிச்சுக்குவேன்.

பிறகு அத்தைதான் சமாதானப்படுத்துறதுக்கு வருவாங்க... "அது அந்த அளவுக்கு பெரிய விஷயமில்ல. குட்டி... நீ நல்லா திட்டி வளர்த்துக்கோ. புருஷங்க பொண்டாட்டிகளை திட்டுறது சாதாரணமா நடக்கக் கூடியதுதானே?'

அத்தைய அடிச்சுக்கொல்லணும்போல எனக்குத் தோணுச்சு. ஓ... ஒரு பொண்டாட்டி! இப்படியொரு தங்கக்கட்டி இருப்பாளா? நான் உரத்த குரல்ல கூறினேன்: "அத்தை, உங்க மகள் இங்க யாருக்கும் வேணாம்'.

"வேணாம்...' அத்தை ஆரம்பிப்பாங்க: "இனி வேணும்னு சொல்லமாட்டியே? அவ வளரட்டும். மணி மாதிரி பொண்ணாவா. அப்போ... குட்டி... நீ பின்னால நடப்ப. அத்தை... லட்சுமியை எனக்குத் தரமாட்டீங்களா... தரமாட்டீங்களா அத்தைன்னு... அப்போ தொடுறதுக்கு வாய்ப்பு கிடைக்காது. பார்த்துக்கோ.'

எல்லாரும் குலுங்கிக் குலுங்கி சிரிச்சாங்க. லட்சுமி கூட! நான் அங்கிருந்து ஓடிப்போயிட்டேன்.

இப்படிப்பட்ட நூறு சம்பவங்கள் இல்லியா நடந்திருக்கு. ஒவ்வொரு சம்பவம் முடியறப்பவும் லட்சுமிமேல இருந்த வெறுப்பு கூடிக்கிட்டே வந்தது. லட்சுமியோ அதுக்கெல்லாம் அசையாம இருந்தா. ஒரு வெட்கம்கூட இல்லியே.

அஞ்சாவது அறைக்குள்ள நடந்துக்கிட்டிருந்த இந்த உரையாடல் கொஞ்சம் வாசலுக்கும் வந்தது.

ஒரு நாள் மாமா லட்சுமிகிட்ட சொல்றதைக் கேட்டேன்.

"பெண்ணே... உன் புருஷன் எங்கே? அந்த போக்கிரி!'

"குட்டி அத்தானா?' அவ உடனடியாகக் கேட்டா. அந்த அசிங்கம் பிடிச்ச பெண்ணுக்கு வெட்கமே இல்லை.

"ஆமாம்...' மாமா அதுக்கு பதில் சொன்னபடி நின்றிருந்தார்.

"குட்டி அத்தான் மாடியில் இருக்காரு. பிறகு... குட்டி அத்தான் போக்கிரி ஒண்ணும் இல்லப்பா.'

அவளுடைய ஒரு புகழ்ச்சி வார்த்தை! நான் போக்கிரியா இருந்தா அவளுக்கென்ன பாதிப்பு? நான் போக்கிரிதான்- அது என்னோட விருப்பம்!

அவளால பெரிய தொல்லையா இருந்தது.

அந்த பாழாய்ப் போன பெண் எனக்கு இப்படிப்பட்ட ஒரு கெட்ட பேரை உண்டாக்கி வச்சிட்டாளேங்கற எண்ணம் இருந்தது.

என் வீட்டுக்குள்ள லட்சுமி ஏன் இப்படி அடைஞ்சு கிடக்கிறா! தன்னோட வீட்டுக்குப் போகக்கூடாதா? குளிக்கக்கூடிய இடத்திலும், கோவிலுக்குப் போறப்பவும், சாப்பிட உட்காரும்போதும், படிக்கறதுக்கு உட்கார்ற இடத்திலும்னு எல்லா இடங்களிலும் இந்தப் பெண் இருந்தா. எதுக்கு? எனக்கு கெட்ட பேரை உண்டாக்கித் தர்றதுக்கு... நான் எவ்வளவு மோசமான வார்த்தைகள்ல திட்டினாலும், கீறினாலும், கிள்ளினாலும், அடிச்சாலும் லட்சுமி விலகிச் செல்ல மாட்டா. சேறு நிறைஞ்ச குளத்தில கல் எறிஞ்சதைப்போல, அப்போதைக்கு கொஞ்சம் விலகி நிப்பா! பிறகும் கிட்ட வருவா. இது ஒரு பெரிய பிரச்சினையா இருக்குது.

sss

நான் ஆங்கிலப் பாடப் புத்தகங்களை வாசிக்கும்போது மேஜைக்கு பக்கத்துல வந்து, தாடையில கையை வச்சு, என் வாயையே தொடர்ந்து கண்களை விரிய வச்சிக்கிட்டு பார்த்துக்கிட்டு நிற்கறதால அவளுக்கு என்ன கிடைக்குது? இது ஒரு பெரிய பிரச்சினையா இருக்கே!

அவளை தொந்தரவு செய்யக்கூடிய எந்தவொரு வாய்ப்பையும் நான் வீணாக்கறதில்ல. அவளுடைய பாவாடையும் ரவிக்கையும் உலரப்போட்டிருக்குற இடத்துக்குப்போய், அதில் எங்காவது சிறிய ஒரு கிழிசல் இருக்கறதைப் பார்த்தா அந்த கிழிசலை மேலும் கொஞ்சம் பெரிசாக்கறது, அவளுடைய புதிய சிலேட் பென்சிலை நானே உடைச்சு வைக்கறது. தலைமுடி பின்னை எடுத்து கிணத்துக்குள்ள போடுறது... இப்படி பலவகையில... அந்த பாழாய்ப் போன பெண் என் தொல்லைங்களைத் தாங்கிக்க முடியாம, இங்கிருந்து புறப்பட்டுப் போகணும்.

மனைவியாம்... மனைவி! என்ன ஒரு தங்கக்கட்டி!

தொல்லை அதிகரிச்சுக்கிட்டே வந்தது. அவளும் பள்ளிக்கூடத்திற்கு வர ஆரம்பிச்சா. நான் அவளை அழைச்சிக்கிட்டுப் போகணும். வீட்டுக்கு கொண்டு வந்து சேர்க்கணும். சில வேளைகள்ல அவ புறப்படுறதுக்கு முன்னே, நான் புத்தகத்தை எடுத்துக்கிட்டு நடக்க ஆரம்பிச்சிடுவேன். ஒரு நாளாவது இந்த தொல்லை இல்லாமலிருக்குமே! நான் அவளோட வேலைக்காரன் இல்ல. அதை அவ புரிஞ்சிக்கணும்.

இப்படி பலவும் நடந்து டிச்சு'' என் நண்பர் சற்று நிறுத்தினார். அருகிலிருந்து கொப்பரைத் தொழிற்சாலையிலிருந்த மணி அடித்தது.

""மணி பத்தாகிட்டது.''

""அது நிரந்தரமானது.'' குட்டி சங்கரன் கூறினார்.

நீலநிறப் பாவாடையை அணிந்து, சிரித்து மகிழ்ந்து நடக்கும் ஒரு இளம்பெண்ணைப்போல ஒரு சிறிய அலை எங்களுக்கு அருகில் வந்தது. சந்திரன் மேலும் சற்று பிரகாசமானதைப்போல தோன்றியது. என் நண்பர் தொடர்ந்து கூறினார்: ""அந்தக் காலம் அப்படியே கடந்துபோனது. நான் வளர்ந்தேன். அவளும். ஆனா என் மன நிலையில் எந்தவொரு மாறுதலும் உண்டாகல. இளமை அவகிட்ட உண்டாக்கிய மனரீதியான மாறுதல்களை நான் பார்த்துக் கிட்டிருந்தேன். அந்த கன்னங்கள்ல பன்னீர் இதழ்களையும், கண்கள்ல நீலத் தாமரை இதழ்களையும் வேண்டுமானா பார்க்கலாம். ஒன்னரை மணி நேரம் செலவழிச்சு இட்ட அந்த வட்டமான செந்தூரப் பொட்டு உண்மையிலேயே அவளோட நெத்திக்கு ஒரு நல்ல அழகைத் தந்தது. நீலநிறக் குஞ்சங்கள்ல அழகு சேர்த்த முல்லை மாலையை உண்மையிலேயே பாராட்டணும். அதனால? நான் அவளை விரும்பணும்னு இல்லியே!

என் வீட்லயிருக்கும் மத்த இளம்பெண்களைத் தாண்டி லட்சுமிகிட்ட எந்தவொரு சிறப்புத் தன்மையையும் நான் பார்க்கல. லட்சுமியோட நல்ல குணங்களும் கெட்ட குணங்களும் ஒரே மாதிரி எனக்குத் தெரியும். அவகிட்ட எந்தவொரு புதுமையையும் என்னால பார்க்க முடியல.

இருந்தாலும், அத்தைக்கும் மத்தவங்களுக்கும் அந்த எதிர்பார்ப்பு இருந்தது. அது வேதனை தரக்கூடியதாவும் இருந்தது. நான் ரொம்ப அதிகமா பயந்தது லட்சுமியோட நடவடிக்கைகள்ல காணப்பட்ட குறிப்பிடத்தக்க விஷயங்கள்தான். பல வேளைகள்ல அவ பாடப் புத்தகங்களோட என் அறைக்குள்ள நுழைஞ்சு வந்து கேட்டா: "குட்டி அத்தான்... இதை சொல்லித்தாங்க.'

என்ன ஒரு தொல்லை! மாமாகிட்டயோ அப்பாகிட்டயோ அவள் கேட்கலாம். நான் அந்த வேண்டுகோளை மறுத்தா, உடனே அவ அத்தையை சிபாரிசுக்கு அழைச்சிக்கிட்டு வருவா.

"குட்டி... அந்த பாடத்தை அவளுக்குக் கொஞ்சம் சொல்லிக்கொடு.'

"அத்தை, எனக்கு தலைவலி... மாமாகிட்ட கேட்கட்டும்.' நான் விலகி நிக்கதுக்கு முயற்சிப்பேன்.

"அப்பா சும்மாவே கோபப்படுவாரும்மா.' அவள் இடையில புகுந்து சொல்லுவா. அந்தப் பெண்ணை ஒரு அடி கொடுக்கணும்போல எனக்குத் தோணும்.

"குட்டி... நீ கொஞ்சம் சொல்லிக் கொடு. நீ சொல்லித்தந்தா இனிப்பு கூடுமில்லியா?' அத்தையின் மெருகு சேர்த்த வார்த்தை அது.

சொன்னது அத்தையா இல்லாமலிருந்தா நான் மறுத்திருப்பேன். என்ன செய்றது?

ஒரு நாள் லட்சுமி என் அறைக்குள்ள நுழைஞ்சு வந்து கேட்டா: "குட்டி அத்தான்... இந்த புத்தகத்தை வாசிச்சிருக்கீங்களா?'

"என்ன புத்தகம்?'

"ரோமியோ அண்ட் ஜூலியட்... வாசிச்சிருக்கீங்களா?'

"ஆமாம்'.

"குட்டி அத்தான்... உங்களுக்கு ரோமியோவையா... ஜூலியட்டையா... இவங்கள்ல யாரை அதிகமா பிடிக்கும்?'

"ரெண்டு பேரையுமே பிடிக்கல'.

"ரெண்டு பேரையுமா?'

"ரெண்டு பேரையும்...'

"குட்டி அத்தான்... உங்களால ஒரு ஆளைக்கூட புரிஞ்சிக்க முடியாது'.

அவ என் அறைக்குள்ளிருந்து முகத்தை இறுக வச்சிக்கிட்டு வெளியே போனா. நான் வாய்விட்டு சிரிச்சேன்.

இப்படி பல சம்பவங்கள் இருக்கு. அவளுக்கும் அந்த எதிர்பார்ப்பு இருந்திருக்குமோ! இருந்திருந்தாலும், அந்த எதிர்பார்ப்புக்கு என்மேல கொண்ட அன்பு தூண்டுதலாக இருந்திருக்காதுங்கறதுதான் என் எண்ணம். அவ அதுவரை வாழ்ந்தது என வீட்ல. இனிமேலும் அங்கேயே வாழ்ந்துகிட்டிருக்கலாம்ங்கற ஒரு ஆசையே அது.

எது எப்படியிருந்தாலும்... நான் அதுல அலட்சியமா இருந்தேன். ஒரு நினைப்பு மட்டும் இருந்தது. அவளை யாராவது கல்யாணம் செஞ்சுக்கிட்டா?

இறுதியில அது வந்தது. லட்சுமிக்கு ஒரு திருமண ஆலோசனை வந்தது. அழகான தோற்றத்தைக் கொண்டவனும் நல்ல குணங்களைக் கொண்ட வனுமான அந்த இளைஞன். ""மிஸ்டர் ராகவனை உங்களுக்குத் தெரியாதா?''

""தெரியாது.'' நான் கூறினேன்.

""ராகவனுக்கு நல்ல குணம்... ""எனக்கு ரொம்ப சந்தோஷம் உண்டானது. ஆனா, அங்கும் ஒரு நகைச் சுவையான விஷயம்... அத்தைக்கும் மத்தவங்களுக்கும் விருப்பமில்ல. அவங்க இப்படி சொல்றதை நான் கேட்டேன்: "அது எதுவுமே வேணாம். குட்டி இல்லையே... அவன் இருந்தா போதும்.'

விஷயம் கொஞ்சம் பிரச்சினைக்குரியதா ஆகிட்டதே!

எது எப்படியிருந்தாலும், நான் கருத்தை வெளிப்படையா சொல்ல வேண்டியதிருக்கு. சித்திதான் இந்த விஷயத்தை எங்கிட்ட கொண்டுவந்தாங்க. நான் உடனே அதுக்கு மறுப்பு தெரிவிச்சேன்: "சித்தி...

எனக்கு கல்யாணமும் வேணாம்... மண்ணாங்கட்டியும் வேணாம். தயவுசெஞ்சு நீங்க அந்தப் பெண்ணை கல்யாணம் செஞ்சு கொடுத்திருங்க.'

"இப்போ வேணாம்னா வேணாம். வேணும்னு தோணுறப்போ போதும்.' அத்தை கூறியது இதுதான்.

"எனக்கு லட்சுமியை வேணாம்... வேணாம்...' நான் உறுதியான குரலில் கூறினேன்.

வீட்ல எல்லாருக்கும் கொஞ்சம் கவலை உண்டாச்சு. அவங்க லட்சுமியை மிஸ்டர் ராகவனுக்கு கல்யாணம் செஞ்சு கொடுக்கவும் செஞ்சாங்க.

அப்பாடா! என் சுமை இறங்கியதே!

இருந்தாலும், அவளை கணவன் வீட்டுக்கு கூட்டிக்கிட்டுப்போனபோது, என் இதயத்தில ஒரு அசைவு உண்டாச்சு- ஒரு தனிமையுணர்வு! நீண்ட காலமா நிலைச்சு நிற்கும் ஒரு எதிரியை இழந்தாலும், இப்படிப்பட்ட ஒரு அனுபவம் ஒரு ஆளுக்கு உண்டாகும்ங்கற சூழல் வரலாம்.

வாசற்படியில் வச்சு அவ அத்தைகிட்ட இப்படி சொன்னா: "அம்மா... நீங்க வர்ற வாரம் வர்றீங்கள்ல? குட்டி அத்தானோட அங்க வாங்க!'

அத்தை என் முகத்தையே பார்த்தாங்க.

அவங்களோட கண்கள்ல ஒரு தர்ம சங்கடமான நிலை நிழல் பரவியிருந்ததே!

நாட்கள் பாய்ஞ்சு பாய்ஞ்சு போய்க்கிட்டிருந்தது. சூழ்நிலைகள் பழகிய விஷயங்களாயிட்டன. அப்போ அரசியல் விஷயங்கள்ல ஆழமா இறங்கியிருந்த நான் மத்த எல்லாத்தையும் மறந்துட்டேன். சொற்பொழிவுகள், ஊர்வலங்கள், பிரச்சார வேலைகள், வெளியூர்கள்ல காங்கிரஸ் முகாம்ல உள்ள தூக்கம், நிச்சயமற்ற அன்றாடச் செயல்கள், கதர் விற்பனை... என் வாழ்க்கை இந்த ஆரவாரத்திற்குள்ள இருந்தது. இதற்கிடையில வீட்ல ஒன்றோ ரெண்டோ முறை லட்சுமியைப் பத்திய பேச்சுகள் என் காதுல விழுந்துச்சு. அது அங்கேயே வத்திப் போகவும் செஞ்சது. மூணு மாசம் கடந்தபிறகு, அரசியல் குற்றத் திற்காக நான் சிறையில் அடைக்கப்பட்டேன். மூணு வருஷ சிறை வாழ்க்கை..."" என் நண்பர் நிறுத்தினார். ஏதோ ஆழமான நினைவுகள் அவரை பேரமைதியில் மூழ்க வைத்தன. கரைக்கு வந்து அமர்ந்து செல்லக்கூடிய கடலலைகள், அடக்க முடியாமல் அழுதவாறு படுக்கையில் கவிழ்ந்துவிழும் ஒரு பெண்ணை என் மனதில் வரைந்தன. அந்த பூநிலவு வெளிச்சத்தில் குட்டிசங்கரனின் வெண்மைநிற கதர்சட்டை மேலும் சற்று வெளுத்துக் காணப்பட்டதாக எனக்குத் தோன்றியது.

கொப்பரைத் தொழிற்சாலையின் நாழிகை மணி அடிப்பதை நான் எண்ணினேன். ""மணி பதினொன்னா யிருச்சு.''

""அது நிரந்தரமானது..."" குட்டிசங்கரன் கூறினார். என் நண்பர் தொடர்ந்து கூறினார்: ""நான் சிறையில அடைக்கப்பட்டேன்னு சொன்னேனில்லையா?

நான் சிறையிலி−ருந்து வந்த நாளைப் பத்தி சிந்திக்க முடியாது. என் இதயம் ரொம்ப அதிகமா பக்குவப்பட்டிருந்தது. உண்மையான அன்பு நிறைஞ்ச செயலுக்கும், ஒரு வார்த்தைக்கும் அந்த அளவுக்கு நான் ஏங்கிக்கிட்டிருந்தேன். வீட்டுக்குப் போகும் ஒரு குற்றவாளியோட மனநிலையில நான் இருந்தேன். நான் அங்கிருந்த எல்லாரையும் எந்த அளவுக்கு வேதனைப் படுத்தியிருக்கேன்!

கூடத்திற்குள்ள நுழைஞ்சேன். அங்க தொங்கவிடப் பட்டிருந்த தொட்டில்ல ஒரு பெண் குழந்தை கையையும் காலையும் அசைச்சுக்கிட்டு விளையாடிக்கிட்டிருந்தது. கூடத்தில யாருமில்ல. அடுத்த அறையிலிலிருந்து பேச்சு கேட்டுக்கிட்டிருந்தது. நான் அந்த தொட்டிலுக்கு பக்கத்துலபோய் நின்னேன். வெளுத்த ஒரு பெண் குழந்தை... கண்ணுல மை பூசப்பட்டிருந்தது. நல்ல... அழகான குழந்தை... பத்து... இருபது வருஷங்களுக்கு முன்ன கடந்துபோன ஒரு காட்சி திடீர்ன்னு எனக்கு முன்னால தோணுச்சு... ஒரு குறிஞ்சிப் பூனை!

அடுத்த அறையிலிருந்து ஒருத்தி வெளியே வந்தா. அது... லட்சுமி!

"என் கடவுளே! யார் இது? குட்டி அத்தான்தானே?" நான் அவளைக் கொஞ்சம் பார்த்தேன். அவ முழுமையான ஒரு குடும்பத்து நாயகியாகிவிட்டிருந்தா.

"லட்சுமீ.... இந்த குழந்தை...?"

"இதுவா? இது... என் குழந்தை. பேரு... பாலா.. ரெண்டு நாளா ஜலதோஷம். சிறிய அளவுல காய்ச்சலும்... இன்னைக்கு கொஞ்சம் குளிப்பாட்டினேன்.

குட்டி அத்தான்... உங்களைப் பார்த்துட்டு கண்களை விரிய வைக்குது. என்ன பிடிவாதம் தெரியுமா? அழ ஆரம்பிச்சா... பிறகு நிறுத்துறதே இல்லை.' அவ குழந்தையை வாலிரி எடுத்துக்கிட்டே தொடர்ந்து சொன்னா:

"குட்டி அத்தான்... நீங்க ரொம்பவும் கறுத்துட்டீங்களே! காபி வேணுமா? அம்மா மாடியில படுத்து தூங்கிக்கிட்டிருப்பாங்க.'

"லட்சுமி...' நான் கூப்பிட்டேன்.

"என்ன... குட்டி அத்தான்?'

அவ என் முகத்தையே பார்த்தா. அந்த குழந்தையை இடுப்பில வச்சுக்கிட்டு கள்ளங்கபடமில்லாத தன்மையோட என் முகத்தையே பார்த்துக்கிட்டு நின்னிருக்கும் அவளை நான் பார்த்தேன். பாவம்... அவளுக்கு நான் எந்த அளவுக்கு தொந்தரவு கொடுத்திருக்கேன்?

"லட்சுமி... நீ ஒரு அம்மாவாகிட்ட இல்லையா?'

"ஆமா... ஒரு குழந்தை இருக்குதே!' அவ சிரிச்சிக்கிட்டே சொன்னா...

"எனக்கு குழந்தை இல்லை.'

"குட்டி அத்தான்... நீங்க சம்மதிச்சா...' அவ நிறுத்திக்கிட்டா. அந்த வார்த்தை என் இதயத்திற்குள்ள நேரா வந்து குத்திச்சு.

நாங்க ஒருத்தரையொருத்தர் கண்களுக்குள்ள பார்த்துக்கிட்டோம். நான் அவளுடைய கையிலிருந்து குழந்தையை வாங்கினேன். அந்த குழந்தையை வாங்கும்போது, அவளையும் கட்டிப் பிடிச்சு அணைக்கணும்னு என் இதயம் ஏங்கிச்சு. ஆனா, அவ வேறொரு மனிதனோட தர்மபத்தினி ஆச்சே! முன் எந்த சமயத்திலும் லட்சுமியை நான் இந்த அளவுக்கு பேரழகியா பார்த்ததில்ல. இந்த அளவுக்கு இதயத்தில் சந்தோஷம் நிறைஞ்சவளா பார்த்ததில்ல. இந்த அளவுக்கு நல்ல ஒரு வாழ்க்கைத் தோழியாகவும் பார்த்ததில்ல. இப்படிப்பட்ட நிலையில நான் இனி ஒருமுறைகூட அவளைப் பார்க்காம இருக்கணும். வாழ்க்கையில இந்த அளவுக்கு ரொம்ப சந்தோஷம் நிறைஞ்ச, இந்த அளவுக்கு அதிக வேதனை நிறைஞ்ச ஒரு நிமிஷத்தை நான் அனுபவிச்சதில்ல... இதுதான் என் காதல். அது ஒரு இடி மின்னலைப்போல இருத்தது. மேகங்கள் படர்ந்த ஒரு இதயத்தைப் பிளந்துக்கிட்டு பிரகாசிச்சது. மேகங்கள் படர்ந்த ஒரு இதயத்தைப் பிளந்துகிட்டு மறைஞ்சது.

அந்தப் பெண் குழந்தை என் கையில் படுத்து அழுதது. லட்சுமி கையை நீட்டினா. நான் குழந்தையைக் கொடுத்தேன். ஆனா, அவளுடைய முகத்தைப் பார்க்கல.''

என் நண்பர் நிறைவு செய்தார். நிலவு உச்சியில் இருந்தது. தலையில் வெண்ணிற ஆடை அணிந்து ஏதோ கல்லறைக்கு வரிசை வரியாக வரக்கூடிய பெண்களைப்போல, அவை ஒன்றிக்குப்பிறகு ஒன்றாக வந்து வணங்கின.

கொப்பரைத் தொழிற்சாலையில் மணி அடித்தது. ""மணி பன்னிரண்டு!'' நான் ஆச்சரியப்பட்டேன்.

என் நண்பர் மிகவும் அமைதியாக இருப்பதைப் பார்த்து நான் கேட்டேன்: ""அப்படின்னா... இது நிரந்தரமானது இல்லியா?''

""ஏ.... ஏ... ஏ... ஆமாம்.. ஆமாம்... நிரந்தரமானது.''

uday010519
இதையும் படியுங்கள்
Subscribe