கவிக்கோ! தமிழுக்குக் கிடைத்த தத்துவ ஞானி! -ஆளுர் தமிழ்நாடன்

/idhalgal/eniya-utayam/kavikko-tamil-philosopher-allur-tamil-nadu

விக்கோ அப்துல்ரகுமான், தமிழ்க் கவிதை உலகில், புதிய புதிய கதவுகளைத் திறந்தவர். அவர் திறந்தது வாசற் கதவுகளை அல்ல; பிரபஞ்சக் கதவுகளை. அவற்றை தனது கேள்விகளால் ஆன வசீகரச் சாவிகளால் அவர் திறந்தபடியே இருந்தார். இந்தத் திறப்பின் மூலம் அவர் தத்துவ தரிசனங்களில் மூழ்கினார். தான் தரிசித்த தத்துவங்களை நமக்கும் காட்ட முயன்றார். அதற்கான களம்தான் அவரது கவிதைகள். அவர் மறைந்தாலும் அவர் தன் கவிதைகளால் வாழ்ந்துகொண்டிருக்கி றார். அவர் அவருடைய கவிதைகளின் மூலம் நம்மெதிரே இயங்கிகொண்டே இருக்கிறார்.

ஆழங்களின் ரசிகர்!

உலகத் தத்துவ ஞானிகளின் வரிசையில் தனக்குத்தானே ஒரு சிம்மாசனத்தைத் தன் கவிதைகளால் போட்டுக்கொண்டவர் ரகுமான். அவரது சிந்தனைகள் புரியாப் புதிர்களை நோக்கிப் பயணித்தபடியே இருக்கின்றன. ’அப்துல்ரகுமான் எழுத்துக்களில் ஞானம் கனிந்து வழிகிறது என ‘முத்தங்கள் ஓய்வதில்லை’ தொகுப்பிற்கு அணிந்துரை வழங்கிய வலம்புரிஜான், அவரை அடையாளம் கண்டு ஆனந்தித்தார்.

ரகுமான் ஆழங்களின் ரசிகர். உயரங்களின் உபாசகர். எனவே அகலங்களையும் அவரால் அனாயசமாக அளக்கமுடிகிறது. இந்த அனுபவத்தின் மூலம் வாழ்க்கையையும் இயற்கையையும் பிரபஞ்சத் தையும் அவற்றின் புதிர்களையும் அளந்தபடியே இருக்கிறார் ரகுமான்.

எதையும் ஆழ்ந்து நோக்குவது, எதிலும் ஆழ்ந்து பயணிப்பது, எல்லாவற்றிலும் அதன் ஆழங்களில் சஞ்சரிப்பது என அவரது அகவெளிப் பயணமும் தேடலும் நீண்டுகொண்டே இருக்கிறது.

’ஒருசொல்லை அரை மைல் குடைந்து பொருள் பார்க்கும் அளப்பரிய அறிவாற்றல் கொண்டவராக’ ரகுமானை வியந்து ரசிக்கிறார், ’காக்கைச் சோறு’க்கு அணிந்துரை வழங்கிய ஔவை நடராசன். உண்மைதான் ‘பிழைப்பு’ என்கிற ஒற்றைச்ச

விக்கோ அப்துல்ரகுமான், தமிழ்க் கவிதை உலகில், புதிய புதிய கதவுகளைத் திறந்தவர். அவர் திறந்தது வாசற் கதவுகளை அல்ல; பிரபஞ்சக் கதவுகளை. அவற்றை தனது கேள்விகளால் ஆன வசீகரச் சாவிகளால் அவர் திறந்தபடியே இருந்தார். இந்தத் திறப்பின் மூலம் அவர் தத்துவ தரிசனங்களில் மூழ்கினார். தான் தரிசித்த தத்துவங்களை நமக்கும் காட்ட முயன்றார். அதற்கான களம்தான் அவரது கவிதைகள். அவர் மறைந்தாலும் அவர் தன் கவிதைகளால் வாழ்ந்துகொண்டிருக்கி றார். அவர் அவருடைய கவிதைகளின் மூலம் நம்மெதிரே இயங்கிகொண்டே இருக்கிறார்.

ஆழங்களின் ரசிகர்!

உலகத் தத்துவ ஞானிகளின் வரிசையில் தனக்குத்தானே ஒரு சிம்மாசனத்தைத் தன் கவிதைகளால் போட்டுக்கொண்டவர் ரகுமான். அவரது சிந்தனைகள் புரியாப் புதிர்களை நோக்கிப் பயணித்தபடியே இருக்கின்றன. ’அப்துல்ரகுமான் எழுத்துக்களில் ஞானம் கனிந்து வழிகிறது என ‘முத்தங்கள் ஓய்வதில்லை’ தொகுப்பிற்கு அணிந்துரை வழங்கிய வலம்புரிஜான், அவரை அடையாளம் கண்டு ஆனந்தித்தார்.

ரகுமான் ஆழங்களின் ரசிகர். உயரங்களின் உபாசகர். எனவே அகலங்களையும் அவரால் அனாயசமாக அளக்கமுடிகிறது. இந்த அனுபவத்தின் மூலம் வாழ்க்கையையும் இயற்கையையும் பிரபஞ்சத் தையும் அவற்றின் புதிர்களையும் அளந்தபடியே இருக்கிறார் ரகுமான்.

எதையும் ஆழ்ந்து நோக்குவது, எதிலும் ஆழ்ந்து பயணிப்பது, எல்லாவற்றிலும் அதன் ஆழங்களில் சஞ்சரிப்பது என அவரது அகவெளிப் பயணமும் தேடலும் நீண்டுகொண்டே இருக்கிறது.

’ஒருசொல்லை அரை மைல் குடைந்து பொருள் பார்க்கும் அளப்பரிய அறிவாற்றல் கொண்டவராக’ ரகுமானை வியந்து ரசிக்கிறார், ’காக்கைச் சோறு’க்கு அணிந்துரை வழங்கிய ஔவை நடராசன். உண்மைதான் ‘பிழைப்பு’ என்கிற ஒற்றைச்சொல்லுடன், மாணிக்கவாசகரை அழைத்துக்கொண்டு ஆழ ஆழங்களுக்குள் பயணிக்கிற வித்தை ரகுமானுக்கு மட்டுமே சாத்தியம். ’ஈகை வான் கொடி’ என்கிற இளங்கோவடிகளின் உருவகத்துக்குள் உட்கார்ந்துகொண்டு இவர் நடத்தியிருக்கும் ஆலாபனை, ஆகாயத்துக்கு அப்பாலும் இழைந்தபடியே இருக்கிறது.

ஆழத்தை எல்லாவற்றாலும் அளந்துவிட முடியாது. உயரம் ஒன்றால்தான் ஆழத்தை அளக்க முடியும். அதேபோல் உயரத்தை, உயரத்தால் மட்டும்தான் அளக்க முடியும். ரகுமான் எல்லா வகையிலும் உயரமானவராக இருப்பதால், உயரங்களையும் ஆழங்களையும் ஒரே சேர அவரால் அளக்கமுடிந்தது. எதைத் தொட்டாலும் அதைப் ’பாதாதி கேசம்’வரை தன் கவிதைகளால் விசாரிக்கிறவர் அவர்.

தத்துவ பூமி!

நமது நாடு தத்துவ பூமி என்று வர்ணிக்கப்படுகிறது. அதிலும் நம் தமிழகம் தத்துவ ஞானிகள் மலிந்த மெய்வனம் என்று கொண்டாடப்படுகிறது. சங்க காலத்திலேயே ’யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்றெல்லாம் தமிழரின் தத்துவங்கள், உலகத் தத்துவங்களாய்ப் பளீரிட்டன. ’ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்’ என ஏக இறைவனை அவை ஆராதித்தன. ‘புனல்வழிப் படூவும் தெப்பம் போல’ என இறைமையால் தீர்மானிக்கப்படுவதாக நம்பப்பட்ட ஊழ்வினை குறித்தெல்லாம் கூட அவை யோசித்தன. ’மற்றொன்று சூழினும் தான் முந்துறும்’ என தமிழரின் சிந்தனை, விதிவழியேயும் நடந்தது.

காவிய நாயகியான மணிமேகலை வஞ்சிமாநகரில் நிகழ்ந்த தத்துவ தர்க்க நிகழ்ச்சிகளில் பங்கு பெற்றதை யும், அங்கே அளவைவாதி, சைவவாதி, வைணவவாதி, பிரம்மவாதி, வேதவாதி, ஆசீவகவாதி, நிகண்டவாதி, பூதவாதி என பல்வேறு தத்துவங்களை வாதிடுவோர் கலந்துகொண்டதையும் மணிமேகலைக் காப்பியம் பெருமிதமாய்ச் சொல்கிறது.

‘வாழ்வை ஆராய்ந்த தத்துவஞானிகள் இங்கே நிறைந்திருந்ததை இவையெல்லாம் காட்டுகின்றன. அங்கங்கே தத்துவப் போர்கள் நிகழ்ந்ததையும் சிந்தனைப் பரல்கள் தெறித்ததையும் நமது இலக்கியங்கள் ஆர்வமுடன் பதிவுசெய்திருக்கிருக்கின்றன.

kk

போதாக்குறைக்கு, இறைக்கோட்பாடு குறித்து ரிக்வேதம், (பிரக்ஞானம் பிரம்மம்) தூய அறிவே இறைவன் என்கிறது. யஜுர் வேதம் (அகம் பிரம்மாஸ்மி) கடவுள் நமக்குள்ளே இருப்பதாக அறிவிக்கிறது. சாமவேதமோ (தத்வமஸி) நீயே இறை என்கிறது. அதர்வண வேதமோ (அயம் ஆத்மா பிரம்மம்) ஆன்மாதான் இறைவன் என்று அறிவிக்கிறது.

இதற்கிடையே ஜீவாத்மா வேறு பரமாத்மா வேறு என்கிறது துவைதக் கோட்பாடு. பரமாத்மாவும் ஜீவாத்மாவும் வேறு வேறல்ல; ஒன்றே என்கிறது அத்வைதக் கோட்பாடு. ஜீவாத்மா சிறப்பான முயற்சிகளின் மூலம் பரமாத்மாவை அடைவதாகச் சொல்கிறது வசிஷ்டாத்வைத கோட்பாடு.

இப்படி தத்துவங்கள் எல்லாம் ஒன்றோடு ஒன்று முரண்படுகிறது. முட்டி மோதுகிறது.

ஒன்றை ஒன்று குழப்பம் என்று கருதுகிறது. இத்தகைய குழப்பங்களுக்குள் ஆழ்ந்து போகாமல், கவிக்கோ அப்துல்ரகுமான், இறைமையையும் வாழ்வையும் பிரபஞ்சப் புதிர் களையும் ஏன்? எப்படி? எதனால்? என கேள்விகளால் விசாரிக்கிறார். கேள்விகளுக்கு பதில் கிடைப்பதுதான் இயல்பு. இவரது சில கேள்விகளுக்கு கேள்விகளே பதிலாகக் கிடைக்கும்.

’கரைக்கே அழைக்கும் விளக்கு

எனக்குத் தேவையில்லை’

-என்கிற பறவையின் பாதை’ தொகுப்பில் இருக்கும் ’வெளிச்சம்’ என்ற கவிதை யைப் படிக்கிற போது , கரைக்கு அழைக்காமல் விளக்கு, வேறு எங்கே அழைக்க வேண்டும்? என்ற கேள்விதான் பதிலாகக் கிடைக்கும்.

இருள்கசியும் புதிர்கள்!

கேள்விகளை அகல் விளக்குகளாக ஏந்திக்கொண்டு இருள் கசியும் புதிர்களின் வழியே அவர் கவிதைகளோடு சஞ்சாரம் செய்தார். அவர் நடத்தியது காலவெளிப் பயணம்.

அது கடல்போல் விரிந்த வெளி. கரைகளற்ற வெளி. உள்ளுறையும் படிமமும் முரணும் அவரது பயணத்தில் அழகிய துடுப்பாக அசைந்தன. இப்போதும் அசைகின்றன. ரகுமானின் முதல் தொகுதியான ‘பால்வீதி’யிலேயே அவரது தத்துவப் பயணம் தொடங்கிவிட்டது.

’ஆதியிலே வார்த்தை இருந்தது. அது தேவனாய் இருந்தது. தேவன் வார்த்தை யாயிருந்தார்’ என பைபிள் பேசிய தத்துவத்தை,

’என் ஆறாவது

விரல் வழியே

சிலுவையிலிருந்து

வழிகிறது ரத்தம்,

என் மாம்சம்

வார்த்தை ஆகிறது’

-என ரகுமானின் பால்வீதி முகப்புக் கவிதை கொஞ்சம் விஸ்த்தாரமாக, விஞ்ஞானத்தைக் கலந்து பேசியது.

ரத்தத்தில் நமது ஜீன்கள் எனப்படும் உயிர்மம் இருக்கிறது. மாமிசமாக இருக்கும் நமது உடலிலும் மரபணுக்கள் உள்ளன. இவைதான் நமது சிந்தனைகளின் வழியாக நம்மை நம் எழுத்துக்களுக்குக் கடத்துகிறது. எனவே, ’என் எழுத்துக்களில் நான் முழுமையாய் இருக்கிறேன்’ என்று நமக்கு உணர்த்தவே, ரத்தத்தை சிந்தனையாகவும் மாமிசமாகிய உடலை வார்த்தையாகவும் குறியீடாக்குகிறார் ரகுமான். இங்கு மெஞ்ஞானத்தையும் விஞ்ஞானத்தையும் சங்மமிக்கவைத்து ரசனைமிருந்த ரசவாதத்தை நடத்தியிருக்கிறார் ரகுமான். தனது ஆறாவது விரலாகிவிட்ட எழுதுகோல் மூலம் கவிதை என்ற பெயரில் தானே வெளிப்படு வதாகவும் இதன் மூலம் ரகுமான் அழுத்தமாய் உணர்த்தினார்.

இறைவனிடம் விசாரணை!

ரகுமான் ஏக இறைக் கோட்பாட்டில் நம்பிக்கை உடையவர்.

இறைவன் ஓருவனே என்பதும் அவனே எல்லாவற்றையும் படைத்தவன் என்பதும் அவரது நம்பிக்கை. எனினும் இறைவன் என்பதற்காக அவனை சும்மாவிட்டுவிட முடியாது. வள்ளுவன் விட்டனா? ’பரந்து கெடுக’ என அவனைச் சபிக்கவில்லையா? அவன் மரபில் வந்த ரகுமான் மட்டும் இறைவனை சும்மா விட்டுவிடுவாரா? தனது தத்துவங்களுக்கு ஆதார சுருதியாக இருக்கும் கேள்விகளை அவனை நோக்கியும் வீசுகிறார் ரகுமான். கொஞ்சம் கறாராகவே. எப்படி?

‘நீ அன்பு என்றால், இந்தப் பகை யார்?

நீ சாந்தி என்றால் இந்த வெறி யார்?

நீ ஆனந்தம் என்றால் இந்தத் துயரம் யார்?

நீ சுந்தரம் என்றால் இந்த அசிங்கம் யார்?

நீ உன்மை என்றால் இந்தப் பொய் யார்?

நீ ஒளி என்றால் இந்த இருள் யார்?’

-என்றெல்லாம் கேள்விகள் எழுப்பி, தித்திப்பாய்த் திடுக்கிட வைக்கிறார். இது ‘ஆலாபனை’ த் தொகுப்பில் இருக்கும் ’தவறான எண்’ என்கிற கவிதையில் எழுப்பப்பட்ட ஞானக்கேள்விகள்.

அவன் பகல் என்றால், இரவும் அவன்தான். அவன் மலர் என்றால், முள்ளும் அவன்தான் என்பது அவருக்கு நன்றாகத் தெரியும். எனினும் செல்லச் சண்டை இடுவதுபோல், இறைமையையே கேள்விக்குள்ளாக்கி கிறுகிறுக்க வைக்கிறார்.

கேள்வி எழுப்புவது என்பதே ஒருவகைக் கண்டனம்தான். படைப்பின் பாரபட்சத்தை கண்டிக்கும் உரிமை கவிஞனுக்குக் கண்டிப்பாக உண்டு. அதனால்தான் இறைவனைக் குற்றக்கூண்டில் ஏற்றிக் கேள்விகளால் தன் கண்டனத்தை மேற்கண்டபடித் தெரிவிக்கிறார் ரகுமான், வாழ்வின் மறுபக்கத்தை உணர்த்தும் ரகுமானின் இத்தகைய தத்துவக் கேள்விகள், அறிவுக்கு ஆனந்தத்தைத் தரக்கூடிய கேள்விகள்.

ரகுமானின் கவிதைகளுக்கு ஆதார ஆணிவேராக இருப்பது தத்துவமே. காதலோ, சமூகமோ, அரசியலோ, அவரது எந்தக் கிளையைத் தொட்டுத் தடவிச் சென்றாலும் அது தத்துவ வேர்களில்தான் போய் முடிகிறது. ரகுமானின் கவிதையோ கட்டுரையோ ரகுமான் எழுத்துக்களின் அடிநாதம் தத்துவம்தான். தத்துவம், ரகுமானின் தனித்துவம். அவரது சகல நூல்களிலும் இதை நாம் உணர்ந்துய்யலாம்.

uday010620
இதையும் படியுங்கள்
Subscribe