பல வருடங்களுக்குமுன்பு மாக்னெஸ் என்ற பெயரைக்கொண்ட ஒரு ஆட்டிடையன் இருந்தான்.
மாக்னெஸ்ஸின் ஒரு செம்மறி ஆடு காணாமல் போய்விட்டது.
அவன் அதைத் தேடி மலைகளின் பக்கம் சென்றான். வெறும் கற்கள் மட்டுமே நிறைந்திருக்கும் ஒரு பிரதேசத்தை அடைந்தான். அந்த கற்களின்மீது நடந்தபோது, தன் பூட்ஸ் கற்களில் ஒட்டிப்பிடிப்பதைப் போல அவனுக்குத் தோன்றியது. அவன் அவற்றைக் கையால் தொட்டுப் பார்த்தபோது, அவை வறண்டு போய் இருப்பதையும், கையில் ஒட்டிப்பிடிக்கவில்லை என்பதையும் கவனித்தான். அவன் மீண்டும் நடக்க ஆரம்பித்தபோது, காலணிகள் கற்களில் ஒட்டிப்பிடிக்க ஆரம்பித்தன.
அவன் தரையில் அமர்ந்து ஒரு பூட்ஸைக் கழற்றி கையில் பிடித்தவாறு, அதை வைத்து கற்களில் தொட்டான்.
தன் தோலாலோ காலணியின் அடிப்பகுதியைக் கொண்டோ தொட்டபோது, கற்கள் ஒட்டிப்பிடிக்கவில்லை. ஆனால், பூட்ஸின் ஆணிகளை வைத்து கற்களைத் தொட்டபோது, அவை ஒட்டிப்பிடித்தன.
இரும்பாலான நுனிப் பகுதியைக் கொண்ட ஒரு பிரம்பு மாக்னெஸ்ஸிடம் இருந்தது.
பிரம்பால் கற்களைத் தொட்டபோது, அவை ஒட்டிப் பிடிக்கவில்லை.
ஆனால், இரும்பாலான நுனியைக்கொண்டு தொட்டபோது, அது ஒட்டிப் பிடிக்க, அதைப் பிரிப்பதற்கு மிகவும் சிரமப்பட வேண்டியதிருந்தது.
மாக்னெஸ் கற்களைப் பார்த்தபோது, அவை இரும்பைப்போல இருப்பதை கவனித்தான்.
அவன் அந்த கல்லின் சில துண்டுகளை எடுத்து வீட்டிற்குக் கொண்டு சென்றான்.
அப்போதிருந்து அந்த கற்களைப் பற்றிய அறிவு உண்டாக, அவற்றை மாக்னெட் (காந்தம்) என்று அழைக்க ஆரம்பித்தான்.
2
பூமியில் இரும்புத் தாதுவுடன் சேர்ந்தே காந்தம் இருக்கும்.
இரும்புத் தாதுவில் காந்தம் இருப்பதாக இருந்தால், அந்த இரும்பு தரமான ஒன்றாக இருக்கும். காந்தம், இரும்பைப்போல தோன்றும்.
காந்தத்தில் ஒரு இரும்புத்துண்டை வைத்தால், அந்த இரும்புத் துண்டு மற்ற இரும்புத் துண்டுகளை ஈர்க்க ஆரம்பிக்கும்.
காந்தத்தில் ஒரு இரும்பு ஊசியை வைத்து, சிறிது நேரம் கடந்தால், அந்த இரும்பு ஊசி காந்தமாக மாறி விடும். தொடர்ந்து...
இரும்பை ஈர்க்க ஆரம்பித்துவிடும். இரண்டு காந்தத்தின் நுனிகளை நெருக்கமாகக் கொண்டு வந்தால், காந்தத்தின் ஒரு நுனி இன்னொரு காந்தத்திலிருந்து விலக முயற்சிப்பதைப் பார்க்கலாம். அதன் ஒரு நுனி ஈர்ப்பதையும் பார்க்கலாம்.
அந்த காந்தத் துண்டை இரண்டாக ஆக்கினால், ஒவ்வொரு துண்டின் ஒரு முனை மற்ற காந்தங்களை ஈர்க்க, இன்னொரு முனை விலக முயற்சிக்கும்.
காந்தத்தின் துண்டுகளை மீண்டும் துண்டுபோட்டால், இதேதான் நடக்கும்.
பிறகும் எத்தனை தடவைகள் துண்டாக்கினாலும், இதைப்போல நடப்பதைப் பார்க்கலாம்.
காந்தங்களின் ஒரே முனைகளுக்கு இடையே விலகுவது நடக்கும். நேரெதிர் முனைகளுக்கு இடையே ஈர்ப்பது நடக்கும். காந்தத்தின் ஒரு நுனி தள்ளி விலக்குவது போலவும், இன்னொரு நுனி இழுத்து நெருக்கமாக்கிக் கொள்வது போலவும் செயல்படுகின்றன.
காந்தத்தை எந்த வகையில் துண்டாக்கினாலும், அதன் ஒரு பகுதி கழியைப் போலவும், இன்னொரு பகுதி தட்டைப் போலவும் இருப்பதாகக் கருதலாம்.எந்த வகையில் நெருக்கமாக இருக்கும்படி செய்தாலும், ஒரு கழியும் தட்டும் இணைந்து விடும். ஒரு கழியும் இன்னொரு கழியும்... அல்லது...
ஒரு தட்டும் இன்னொரு தட்டும் சேரவே சேராது.
3
ஒரு ஊசியை காந்தத்திற்கு அருகில் சிறிது நேரம் வைத்து, அதற்கும் காந்த சக்தியை வரவழைத்து, ஒரு ஆணியின் மத்தியில் இணைத்து, சுதந்திரமாக செயல்படும் நிலையில் ஆக்கினால், அதன் ஒருமுனை தெற்கு திசை நோக்கியும், இன்னொரு முனை வடக்கு திசை நோக்கியும் திரும்புவதைப் பார்க்கலாம்.
எத்தனையோ வருடங்களுக்கு முன்பு காந்தத்தைப் பற்றிய அறிவு இல்லாமலிருந்த காலத்தில், ஆட்கள் கடலில் மிகவும் தூரத்திற்குச் செல்லமாட்டார்கள். அவர்கள் கடலில் மிகவும் தூரமாகச் செல்லவேண்டிய வேளையில்,
அதாவது....
கரை தெரியாத அளவிற்கு தூரத்தை நோக்கிச் செல்லும்போது, எங்கு செல்லவேண்டும் என்பதை அறிந்துகொள்வதற்காக நட்சத்திரங்களையும் சூரியனையும் நம்பியிருந்தார்கள். ஆனால், இருள் பரவும்போது, சூரியனையோ நட்சத்திரங்களையோ பார்க்கமுடியாமல் இருக்கும் நிலையில் எந்த திசையை நோக்கிப் போகவேண்டும் என்பதை அறிந்துகொள்ளமுடியாத நிலை இருந்தது. காற்று, கப்பலை பாறைகள் நிறைந்திருக்கக் கூடிய இடத்தில் கொண்டுபோய்விட்டு, அது தகர்வதற்குக் காரணமாக இருந்தது.
காந்த சக்தி படைத்த ஊசியைப் பயன்படுத்தி அவர்களால் கரையிலிருந்து மிகவும் நீண்ட தூரத்திற்குச்செல்லவும், பல புதிய கடல்களைக் கண்டுபிடிக்கவும் முடிந்தது.
கப்பல்களில் எப்போதும் ஒரு காந்த ஊசி இருக்கும் (வடக்கு நோக்கி யந்திரம்).
அதேபோல கப்பலின் தளத்தில் ஆங்காங்கு கட்டப்பட்டிருக்கும்...
அளக்கக்கூடிய வடம் இருக்கும். அந்த வடத்தின் கட்டு அவிழும்போது, கப்பல் எவ்வளவு தூரம் பயணித்திருக்கிறது என்பதை அறிந்துகொள்ள முடியும். அந்தவகையில் கப்பலில் கடல் பயணம் செய்யும்போது, அவர்கள் எந்த இடத்தில் இருக்கிறார்கள் என்பதையும், கரையிலிருந்து தூரத்தில் இருக்கிறார்களா என்பதையும், எந்த திசையை நோக்கி போகிறார்கள் என்பதையும் அறிந்துகொள்ளமுடிந்தது.