னஷ்யாம், என் இதயம் எனும் பூங்காவில் நீ ஒரு குயில் என்பதைப் போல குடியிருந்து விட்டாய். நீண்ட தூக்கத்தில் மூழ்கிக் கிடந்த மாடுகள் உன் இசையின் இனிமையில் கண் விழித்து, என் பூஜை விளக்கின் வெளிச்சத்தில் என் எதிர்காலத்தை சிறைப் படுத்தி வைத்திருக்கிருக்கின்றன. அது மரணத்தின் ஒரு கண். உண்மையின் நிரந்தர காட்சி.... வாழ்வு என்பது உண்மையானது.

வாழ்வு என்பது நீரும் உயிரணுவும் குருதியும்... மரணம் என்பது வறட்சி... மரணம் என்பது பிணவறைக்குப் பின்னால் நின்றுகொண்டிருக்கும் சொந்தத்தின் முதல் தேம்பல்...

ஷ்யாம்... ஓ...

கனஷ்யாம்..

Advertisment

வார்த்தைகளைக்கொண்டு நான் உன் நிர்வாணத்தை மறைக்கிறேன்.

ss

பாடல்களைக்கொண்டு உனக்காக ஒரு ஆகாயத்தை நான் படைக்கிறேன்.என் இசை, கடல்களில் கட்டப்பட்டுக் கிடக்கும் நடனங் களை விடுதலை பெறச் செய்கிறது. நான் அவனைக் காதலித்தது...

கண் பார்வையற்றவனுக்கு முன்னால் நூறு ரூபாய் நோட்டை நீட்டுவதைப்போல இருந்தது. காரணம்- அவன் என்னுடைய காதலை நம்பவில்லை. விளக்குகளை எரிய வைத்து நான் கிரீடையில் ஈடுபட்டேன்.

அவனுக்குள் அன்றும் என்றும் இருளே நிறைந்திருந்தது. இரண்டு காய்ந்த சுள்ளிக்குச்சிகளை சேர்த்து வைத்து உரசி நெருப்பு உண்டாக்குவதைப்போல எங்களுடைய சரீரங்கள் புதிய ஒரு உயிரைப் பிறக்கச் செய்தன. நாங்கள் கனவில் வாழ்ந்து கொண்டிருந்தோம்.

எங்களுடைய மொழி கனவின் மொழியாக இருந்தது. நிரந்தரமற்ற கடல்பரப்பைப் போன்றது மனிதனின் விதி என்பதை மன்னன் புரிந்து கொண்டான். அவன் கூறினான்: "விளக்குகளை அணை...''

காதலின் குளிர்காலத்தில் ஒரு பறவையைப்போல நான் வெப்பப் பகுதிகளுக்குப் பறந்து தப்பினேன். அதுதான் என் இயல்பாக இருந்தது.காலையில் மூன்று மணிக்கு நான் தனி கனவுகளிலிருந்து ஒரு தேம்பலுடன் கண் விழித்தேன்.

பாலைவனத்தில் வெயிலில் கிடந்து வெளுத்து வெடிக்கும் எலும்புகளைப் போல என் தனிமை இருந்தது. என் கணவன்... வாயில் உறக்கத்தின் வெப்பத்தைக் கொண்டிருந்த கணவன் என்னை முத்தமிட்டவாறு கூறினான்: "பயப்படாதே... அது கனவு மட்டுமே...

நான் உனக்கு அருகில் எப்போதும் இருப்பேன்.'' ஆனால், அவன்

நீயாக இருந்தால், நீ அவனாக இருந்தால்... யார் யாரைக் காதலிப்பது?

யார் சரீரம்? யார் ஆன்மா? எத்தனை உருவங்களை நீ எடுத்திருக்

கிறாய்! எத்தனை பெயர்களால் நீ வாழ்த்தப்படுகிறாய்! உன் அழகான

தோற்றத்தையும் உன் பெயரையும் நான் உன்னைவிட அதிகமாக காதலிக்கிறேனோ?

தொப்புள்கொடி சுருங்கி உதிர்கிறது. ஆனால், பிணைகள் வந்து சேர்கின்றன. புதிய கட்டுகள்... புதிய வேதனைகள்...

கனஷ்யாம்... என் புதிய சமாதானத்தை ஒரு பச்சைக் குழந்தையைப்போல நான் மார்பில் வைத்துக்கொண்டு நடப்பேன். துறவிகள் உன்னைப்பற்றி என்னிடம் பேசினார்கள்.

விருந்தாளிகள் அனைவரும் சென்றபிறகு, பாத்திரங்கள் கழுவி முடிக்கப்பட்ட பிறகு, அடைக்கப்பட்டிருந்த வாசல் கதவின் அடிப்பகுதியின் வழியாக ஒரு பலமான காற்றைப் போல உன்னைப் பற்றிய நினைவு என்னிடம் வந்து சேர்ந்தது. ஓ... ஷ்யாம்... என் கனஷ்யாம்... ஒரு மீனவனைப்போல நீ என் மனமெனும் ஆழக்கடலில் வலையை வீசியிருக்கிறாய்.

ஆசைக்குள்ளான மீன்களைப்போல இன்று வார்த்தைகள் உன்னை நோக்கி ஓடிவந்து சேர்கின்றன....