கனகாம்பரம் - எஸ்.கெ.பொற்றெக்காட் தமிழில் : சுரா

/idhalgal/eniya-utayam/kanakambaram-sk-pothekkad-tamil-sura

யில் பாதைக்கு அருகில் அணிவகுத்து வரும் அந்த வாத்துகளின் கூட்டத்தைப் பார்த்ததும் கார்த்தியாயினி கேசவனை நினைத்தாள். இப்போது கேசவன் காஷ்மீரின் ஏதாவது மலையோரத்தில் அணிவகுப்பு முடிந்து முகாமிற்குத் திரும்பிக்கொண்டிருப்பான்.

கேசவனின் இறுதிக் கடிதத்திலிருந்த சில வரிகளை அவள் மனப்பாடம் செய்துவைத்திருந்தாள்.

"பிரியமானவளே...

பனி நிறைந்திருக்கும் மலைப் பகுதியில் பயிற்சிமுடிந்து திரும்பிவரும்போது என் நெஞ்சிற்கு வெப்பம் தருவது உன் புன்னகை தவழும் முகத்தைப் பற்றிய நினைப்புதான். உன் கூந்தலில் சூடியிருக்கும் அந்த கனகாம்பரப் பூக்களை நினைக்கும்போது என் இதயம் உணர்ச்சிவசப்படுகிறது. உன் பழைய வீட்டின் வாசலி-ருக்கும் அந்த கனகாம்பரச் செடி வளர்ந்து வருகிறதா? நம்முடைய மணமாலையைத் தயார் செய்யும்போது, அதிலிருந்து ஒரு கனகாம்பர மலரை கட்டாயம் சேர்க்கவேண்டும்...'

நல்ல இலக்கிய மொழியில் இப்படியொரு கடிதத்தை எழுதுவதற்கு கேசவனால் இயலாது என்ற விஷயம் அவளுக்குத் தெரியும். கேசவன் நான்காவது வகுப்பு வரையே படித்திருக்கிறான். ஆனால், மலையாளத்தில் வாசித்து நல்ல பழக்கமிருக்கிறது.

குறிப்பாக... கவிதைகள். கேசவன் கவிதை உச்சரிப்பதைக் கேட்டால், உணர்ச்சிவசப்படும் இளம்பெண்கள் தலைகுனிந்து விடுவார்கள்.

ss3

சங்ஙம்புழையின் கவிதைகள் முழுவதையும் கேசவன் மனப்பாடம் செய்து வைத்திருக்கிறான். அவளுக்கு அனுப்பக்கூடிய கடிதங்களில் முக்கால் பகுதி சங்ஙம்புழயின் கவிதையாகத்தான் இருக்கும். ஆனால், இப்படி உரைநடையில் கவித்துவத் தன்மைகொண்ட ஒரு வெளிப்பாட்டுடன் கேசவனின் கடிதம் வருவது இதுவே முதல்முறை. யாராவது நண்பர்கள் சொல்லிக் கொடுத்திருக்கலாம். கதை எழுதும் திறமைகொண்ட பட்டாளக்காரர்கள் சிலர் இருப்பார்களே! இல்லாவிட்டால்...

ஏதாவது புதினத்திலிருந்து எடுத்து எழுதியதாக இருக்குமோ? இல்லை.. அப்படியிருக்க வழியில்லை. அந்த கனகாம்பரத்தைப் பற்றிய ஆசை புதுமை யானது.

அதைப் பற்றிய ரகசியம் அவளுக்கும் கேசவனுக்கும் மட்டுமே தெரியும். யார்கூறி எழுதியிருந்தாலும் சரி... கேசவனின் இதயத்தை அந்த கடிதத்தில் அவள் கண்டாள்...

திடீரென தலைவராக நடந்துசென்று கொண்டிருந்த வாத்து தன் கூட்டத்திலிருந்து விலகி அருகிலிருந்த குளத்தை நோக்கி ஒரு குதி குதித்தது. அதைத் தொடர்ந்து பின்னால் வந்துகொண்டிருந்த வாத்துகளும் சிறகுகளை விரித்து கலபிலா என்று சலசலத்தவாறு அந்த சேறு நிறைந்த குளத்திற்குள் சிதறிப் பாய்ந்தன.

வாத்துகளின் கூட்டத்தைக்கொண்டு வந்த மேய்ப்பவன் ஆழ்ந்த தொழில் அக்கறையுடன் நின்றவாறு விழித்துக்கொண்டிருந்தான். நாசமாய் போன வாத்துகள்!

நல்ல வேடிக்கை! கார்த்தியாயினி வாயை மூடிக்கொண்டு சிரித்தாள். அவள் அங்கு நீண்டநேரம் நின்றவாறு அந் சேறு நிறைந்த குளத்தில் நடக்கும் கோலாகலங்களைப் பார்த்து ரசிக்க ஆரம்பித்தாள்.

வாத்துகள் நீரில் நடனமாடிக்கொண்டிருந்தன.

அந்த சேறு நிறைந்த குளத்தில் திடீரென ஆம்பல்கள் பூத்ததைப்போல இருந்தது. குளத்தின் கரையில் நிறைய பூத்து நின்றுகொண்டிருக்கும் முருங்கை மரம், தலையில் காயம் உண்டாகி சரீரம் முழுவதும் ரத்தம் வழிய நின்றிருக்கும் சாமியாடியை ஞாபகப்படுத்தியது. திடீரென அவள் தன் தந்தையை நினைத்துப் பார்த்தாள்.

அவளுடைய தந்தை ஒரு கோவிலின் சாமியாடியாக இருந்தார்.

இடுப்பில் சிவப்பு வண்ணத் துணியைச் சுற்றி கையில் வாளைச் சுழற்றியவாறு தந்தை சாமியாடுவதும், தலையை குனிந்து தன் நெற்றியில் காயம் உண்டாக்கிக்கொண்டு முகத்திலும் மார்பிலும் ரத்தம் வழிய நிற்பதைக் பார்த்து தான் "என் அப்பா...'

என்று உரத்த குரலில் கத்தியதும், அவளுடைய தாய் அவளை வாரித் தூக்கி காவுக்குப் பின்னாலிருக்கும் கள்ளிப்பாலை மரத்திற்கருகில் வேகமாகக் கொண்டு சென்றதும் அவளுடைய நினைவில் ஆழமாகத் தங்கிக் கிடக்கின்றன.

பதின்மூன்று வருடங்களுக்கு முன்னால் நடைபெற்றது.

அப்போது அவளுக்கு ஆறு வயது. மேற்கு திசையிலிருக்கும் வயலுக்கு அப்பாலுள்ள தென்னந் தோப்புகளுக்கு மேலே இருந்தவாறு மறைந்து கொண்டிருக்கும் சூரியன் அந்த முருங்கை மரத்தின் நெற்றியில் மஞ்சள் பொடியைச் சிதறவிட்டுக் கொண்டிருந்தது. பற்றியெரிந்து அணைந்த நெருப்ப

யில் பாதைக்கு அருகில் அணிவகுத்து வரும் அந்த வாத்துகளின் கூட்டத்தைப் பார்த்ததும் கார்த்தியாயினி கேசவனை நினைத்தாள். இப்போது கேசவன் காஷ்மீரின் ஏதாவது மலையோரத்தில் அணிவகுப்பு முடிந்து முகாமிற்குத் திரும்பிக்கொண்டிருப்பான்.

கேசவனின் இறுதிக் கடிதத்திலிருந்த சில வரிகளை அவள் மனப்பாடம் செய்துவைத்திருந்தாள்.

"பிரியமானவளே...

பனி நிறைந்திருக்கும் மலைப் பகுதியில் பயிற்சிமுடிந்து திரும்பிவரும்போது என் நெஞ்சிற்கு வெப்பம் தருவது உன் புன்னகை தவழும் முகத்தைப் பற்றிய நினைப்புதான். உன் கூந்தலில் சூடியிருக்கும் அந்த கனகாம்பரப் பூக்களை நினைக்கும்போது என் இதயம் உணர்ச்சிவசப்படுகிறது. உன் பழைய வீட்டின் வாசலி-ருக்கும் அந்த கனகாம்பரச் செடி வளர்ந்து வருகிறதா? நம்முடைய மணமாலையைத் தயார் செய்யும்போது, அதிலிருந்து ஒரு கனகாம்பர மலரை கட்டாயம் சேர்க்கவேண்டும்...'

நல்ல இலக்கிய மொழியில் இப்படியொரு கடிதத்தை எழுதுவதற்கு கேசவனால் இயலாது என்ற விஷயம் அவளுக்குத் தெரியும். கேசவன் நான்காவது வகுப்பு வரையே படித்திருக்கிறான். ஆனால், மலையாளத்தில் வாசித்து நல்ல பழக்கமிருக்கிறது.

குறிப்பாக... கவிதைகள். கேசவன் கவிதை உச்சரிப்பதைக் கேட்டால், உணர்ச்சிவசப்படும் இளம்பெண்கள் தலைகுனிந்து விடுவார்கள்.

ss3

சங்ஙம்புழையின் கவிதைகள் முழுவதையும் கேசவன் மனப்பாடம் செய்து வைத்திருக்கிறான். அவளுக்கு அனுப்பக்கூடிய கடிதங்களில் முக்கால் பகுதி சங்ஙம்புழயின் கவிதையாகத்தான் இருக்கும். ஆனால், இப்படி உரைநடையில் கவித்துவத் தன்மைகொண்ட ஒரு வெளிப்பாட்டுடன் கேசவனின் கடிதம் வருவது இதுவே முதல்முறை. யாராவது நண்பர்கள் சொல்லிக் கொடுத்திருக்கலாம். கதை எழுதும் திறமைகொண்ட பட்டாளக்காரர்கள் சிலர் இருப்பார்களே! இல்லாவிட்டால்...

ஏதாவது புதினத்திலிருந்து எடுத்து எழுதியதாக இருக்குமோ? இல்லை.. அப்படியிருக்க வழியில்லை. அந்த கனகாம்பரத்தைப் பற்றிய ஆசை புதுமை யானது.

அதைப் பற்றிய ரகசியம் அவளுக்கும் கேசவனுக்கும் மட்டுமே தெரியும். யார்கூறி எழுதியிருந்தாலும் சரி... கேசவனின் இதயத்தை அந்த கடிதத்தில் அவள் கண்டாள்...

திடீரென தலைவராக நடந்துசென்று கொண்டிருந்த வாத்து தன் கூட்டத்திலிருந்து விலகி அருகிலிருந்த குளத்தை நோக்கி ஒரு குதி குதித்தது. அதைத் தொடர்ந்து பின்னால் வந்துகொண்டிருந்த வாத்துகளும் சிறகுகளை விரித்து கலபிலா என்று சலசலத்தவாறு அந்த சேறு நிறைந்த குளத்திற்குள் சிதறிப் பாய்ந்தன.

வாத்துகளின் கூட்டத்தைக்கொண்டு வந்த மேய்ப்பவன் ஆழ்ந்த தொழில் அக்கறையுடன் நின்றவாறு விழித்துக்கொண்டிருந்தான். நாசமாய் போன வாத்துகள்!

நல்ல வேடிக்கை! கார்த்தியாயினி வாயை மூடிக்கொண்டு சிரித்தாள். அவள் அங்கு நீண்டநேரம் நின்றவாறு அந் சேறு நிறைந்த குளத்தில் நடக்கும் கோலாகலங்களைப் பார்த்து ரசிக்க ஆரம்பித்தாள்.

வாத்துகள் நீரில் நடனமாடிக்கொண்டிருந்தன.

அந்த சேறு நிறைந்த குளத்தில் திடீரென ஆம்பல்கள் பூத்ததைப்போல இருந்தது. குளத்தின் கரையில் நிறைய பூத்து நின்றுகொண்டிருக்கும் முருங்கை மரம், தலையில் காயம் உண்டாகி சரீரம் முழுவதும் ரத்தம் வழிய நின்றிருக்கும் சாமியாடியை ஞாபகப்படுத்தியது. திடீரென அவள் தன் தந்தையை நினைத்துப் பார்த்தாள்.

அவளுடைய தந்தை ஒரு கோவிலின் சாமியாடியாக இருந்தார்.

இடுப்பில் சிவப்பு வண்ணத் துணியைச் சுற்றி கையில் வாளைச் சுழற்றியவாறு தந்தை சாமியாடுவதும், தலையை குனிந்து தன் நெற்றியில் காயம் உண்டாக்கிக்கொண்டு முகத்திலும் மார்பிலும் ரத்தம் வழிய நிற்பதைக் பார்த்து தான் "என் அப்பா...'

என்று உரத்த குரலில் கத்தியதும், அவளுடைய தாய் அவளை வாரித் தூக்கி காவுக்குப் பின்னாலிருக்கும் கள்ளிப்பாலை மரத்திற்கருகில் வேகமாகக் கொண்டு சென்றதும் அவளுடைய நினைவில் ஆழமாகத் தங்கிக் கிடக்கின்றன.

பதின்மூன்று வருடங்களுக்கு முன்னால் நடைபெற்றது.

அப்போது அவளுக்கு ஆறு வயது. மேற்கு திசையிலிருக்கும் வயலுக்கு அப்பாலுள்ள தென்னந் தோப்புகளுக்கு மேலே இருந்தவாறு மறைந்து கொண்டிருக்கும் சூரியன் அந்த முருங்கை மரத்தின் நெற்றியில் மஞ்சள் பொடியைச் சிதறவிட்டுக் கொண்டிருந்தது. பற்றியெரிந்து அணைந்த நெருப்பைப்போல மேற்கு ஆகாயத்தின் மூலையில் சிதறிக் கிடக்கும் சில மேகக் கூட்டங்கள் மறைந்து போய்க்கொண்டிருந்தன.

வாத்துகளை மேய்ப்பவன் சீழ்க்கையடித்துப் பார்த்தான். வாத்துகள் கவனிக்கவில்லை.

சேற்றில் அலகுகளை வைத்து அசைத்துக்கொண்டும் சிறகுகளை விரித்து நீரில் வட்டமிட்டுக்கொண்டும் அவை விளையாடிக்கொண்டிருந்தன. வாத்துகள் கரைக்கு ஏறிவருவதைப்போல தெரியவில்லை என்பதை உணர்ந்தவுடன் வாத்து மேய்ப்பவனுக்கு கோபம் உண்டானது.

பெண்ணொருத்தி அருகில் நின்றுகொண்டிருக்கிறாள் என்ற சிந்தனையே இல்லாமல் அந்த முட்டாள், வாயில் வந்த கெட்ட வார்த்தைகள் பலவற்றையும் சத்தமாகக் கூறிக்கொண்டிருந்தான். வேட்டியை மேல்நோக்கி இழுத்துக்கட்டி குளத்தில் இறங்கி குச்சியை வீசியவாறு ஒரு வாட் போரை நடத்தினான்.

வாத்துகள் குளிப்பதை நிறுத்திவிட்டு கூட்டமாக கரையில் ஏறின. தலைவனான வாத்து எதுவுமே நடக்காததைப்போல நேராக ரயில் மேட்டில் ஏறி, நண்பர்களுடன் பட்டாள முறைப் படி அணிவகுப்பை நடத்தியது.

கார்த்தியாயினி அந்த வாத்து மேய்ப்பவனின் வாயிலிருந்து வந்து காதில் விழுந்த சில புதிய வார்த்தைகளை நினைத்து தன்னையறியாமலே மீண்டும் சிரித்துவிட்டாள்.

"இந்த அளவுக்கு சிரிச்சு கிறங்குற வகையில என்ன நடந்தது?''

வாத்து மேய்ப்பவனின் முரட்டுத்தனமான குரல். அவன் பின்னால் வருவதை அவள் கவனிக்கவில்லை. கார்த்தியாயனி உண்மையிலேயே என்னவோபோல ஆகிவிட்டாள். வெளிறிப்போன முகத்தைக் குனிய வைத்தவாறு பாதையோரத்தில் அவள் விலகி நின்றாள்.

வாத்துக்காரன் அவளைத் தாண்டிச் சென்றபோது, முழுமையாக ஒருமுறை திரும்பிப் பார்த்தான்.

கார்த்தியாயனியின் அசாதாரணமான முக அழகில் அந்த வாத்துகளை மேய்ப்பவன் தடுமாறி விழுந்து விட்டான் என்பதைப்போல தோன்றியது. அவன் ஏதோ நடந்துவிட்டதைப்போல அந்த இடத்திலேயே நின்றவாறு பையிலிருந்து ஒரு பீடியைத் தடவி எடுத்து உதட்டில் வைத்து நெருப்பு பற்ற வைக்க ஆரம்பித்தான்.

அவனுடைய அந்த நின்றுகொண்டிருக்கும் முறையும் சாய்ந்த பார்வையும் கார்த்தியாயனிக்கு சிறிதும் பிடிக்கவில்லை.

அவளுடைய மனதிற்குள் பயம் நிறைந்த சிந்தனைகள் நுழைந்துகொண்டிருந்தன. ஆளரவமற்ற பாதை...

தூரத்திலிருந்துகூட யாரும் வருவதாகத் தெரியவில்லை.

"வீடு எங்க இருக்கு?''

வாத்து மேய்ப்பவனின் அந்த ஆர்வமான கேள்வியும் சிருங்கார புன்சிரிப்பும் அவளை வெறுப்படையச் செய்தன. அவள் எதுவும் பேசுவதற்கு நிற்காமல் வேண்டுமென்றே நடந்தாள். ஹும்! இந்த காட்சியைச் சற்று பார்ப்பதற்கு இங்கு கேசவன் இருந்திருக்க வேண்டும்!

வாத்துக்காரனும் அவளுடன் சேர்ந்து வேகமாக நடந்தான்.

வாத்துகளின் கூட்டம் ஒரு நூறடி தூரத்தை அடைந்து விட்டிருந்தது.

புதிதாக உருவாகிக் கொண்டிருந்த எர்ணாகுளம்-

கொல்லம் ரயில் பாதை அது. பாலங்கள் கட்டப்பட்டு, மேடுகள் உயர்த்தப்பட்டு, இரும்புத் துண்டு கள் பொருத்தப்பட்டு, அவற்றின் மீது துரும்பு பிடித்த ரயில் தண்டவாளங்கள் அமைக் கப்பட்டு விட்டன.

செம்மண், கற்கள் ஆகியவற்றின் குவியல்களும் மிச்சம் மீதிகளும் அங்குமிங்குமாக பாதைக்கருகில் சிதறிக் கிடந்தன.

அங்கு பாதையின் இரு பக்கங்களிலும் தாழ்ந்து பரந்துகிடக்கும் சதுப்பு நிலங்கள். இங்குமங்குமாக மீன் ரத்தத்தைப்போன்ற சிவந்த நீர் தேங்கிக்கிடக்கும் குட்டைகளும், நாயுருவிச் செடிகள் நிறைந்த புதர்களும், கால்நடைகளின் கால்தடங்கள் பதிந்து கிடக்கும் அந்தச் சதுப்பு நிலங்களுக்கப்பால் நெல் வயல்கள், தென்னந் தோப்புகள் ஆகியவற்றின் பசுமை பரவிக் கிடந்தன.

"தன்னந்தனியா இப்படி எங்க போறே?'' வாத்துக்காரன் விடுவதாக இல்லை. அவன் அவளுக்கு மிகவும் அருகில் பின்னால் நின்றுகொண்டு காதில் முணுமுணுப்பதைப்போல கேட்டான்.

கார்த்தியாயனி வாய் திறக்கவில்லை. உடனடியாக வாத்து மேய்ப்பவனின் முக வெளிப்பாடு மாறியது. "ஓஹோ... ஊமையா?'' அவன் பார்வை தெரியாதவனைப் போல "ப்ப...ப்ப...ப்ப..ப்ப... " என்று சில வினோத் சத்தங்களை உண்டாக்கினான். கைகளைக்கொண்டு சில சைகைகளையும்...

கார்த்தியாயனி குலுங்கிக் குலுங்கி சிரித்தாள்.

தன்னுடைய வித்தை பலித்திருக்கிறது என்ற வெற்றிப் பெருக்குடன் சற்று மிடுக்காக இருப்பதைப் போல காட்டிக்கொண்டு அந்த வாத்து மேய்ப்பவன் அவளை மோகத்துடன் வெறித்துப் பார்த்துக்கொண்டு நின்றிருந்தான்.

அந்த வாத்து மேய்க்கும் மனிதனிடம் இந்த அளவுக்கு ரசிப்புத் தன்மையை அவள் எதிர்பார்க்க வில்லை. அவளுடைய பதைபதைப்பும் வெறுப்பும் அந்தக் குலுங்கல் சிரிப்பில் கரைந்து போயின.

அவனுடைய சேட்டைகளை நினைத்து நினைத்து அவள் சத்தமாகச் சிரித்தாள்.

கார்த்தியாயனிக்கு சிறிய அளவில் ஒரு கூச்சம் உண்டாகாமல் இல்லை. என்ன கூறவேண்டுமென்ற நிச்சயமில்லாமல் அவள் தூரத்தில் பார்த்தவாறு தயங்கி நின்றுகொண்டிருந்தாள்.

அந்த நேரத்தில்தான் கீழேயிருந்த சதுப்பு நிலத்தின் வரப்பு வழியாக ரயில் பாதைக்கு ஏறிவரும் ஒரு பெண்ணின் உருவம் தெரிந்தது. கார்த்தியாயனிக்கு முன்னால் அவள் ஏறி வந்துகொண்டிருந்தாள். கார்த்தியாயனி இனம்புரியாத ஒரு பதைபதைப்புடன் அந்தப் பெண்ணையே வெறித்துப் பார்த்தாள். வந்துகொண்டிருந்த பெண்ணின் முகத்தில் ஒரு புன்சிரிப்பு... வாஞ்சை நிறைந்த ஒரு புன்சிரிப்பு தவழ்ந்தது.

வாத்துக்காரனும் அந்தப் பெண்ணையே வெறித்துப் பார்த்தான். அவன்தான் முதலில் பேசினான்:

"இல்ல.... இது யாரு? அம்மிணி அம்மாவா? இதென்ன புதுசா இருக்கு? அம்மிணி அம்மா. நீங்க எப்படி இங்கவந்து சேர்ந்தீங்க?''

கார்த்தியாயனியிடம் வெளிப்படுத்திய அதே புன்சிரிப்பை வாத்துக்காரனின் முகத்திலும் பதியச் செய்தவாறு அந்தப்பெண் கூறினாள்:

"இது என்னோட ஊரு. புரியுதா? குமாரா...

நீயும் கூட்டமும் இங்கதான் முகாம் அடிச்சிருக் கீங்களா?''

வாத்துக்காரன் பதிலெதுவும் கூறவில்லை. அவன் அந்த இரு பெண்களையும் மாறிமாறிப பார்த்து ஆச்சரியப்பட்டுக் கொண்டிருந்தான். ‌

அங்கு வந்துசேர்ந்த பெண்ணுக்கு முப்பது வயதிற்குமேல் இருக்காது. வெளுத்த... மெலிந்த.. சற்று ஈர்க்கக்கூடிய தகுதிகொண்ட அழகி. நீண்ட முகம்... நீண்டு நல்ல அழகாக இருக்கும் மூக்கு. சற்று தட்டையான... அதேநேரத்தில், ஒட்டிப்போனதைப் போல தோன்றாத கன்னங்கள்... நன்கு சிவந்த உதடுகள்... அழகாக முன்னோக்கி தள்ளியிருக்கும் பற்களின் வரிசை... மைதேய்த்த விரிந்த விழிகள்... சுருண்ட தலைமுடி.. அங்கு நின்றுகொண்டிருக்கும் இளம்பெண்ணின் அச்சு அசல்!

மஞ்சள் நிறத்திலிருந்த சில்க் ரவிக்கையையும் ஜரிகை போட்ட மேற்துணியையும் அணிந்து நின்றுகொண்டிருந்த அந்தப் பெண்ணின் முகத்தில் மறைந்துகொண்டிருக்கும் சூரியனின் இறுதி ஒளி கிரணங்கள் வந்து விழுந்தபோது, அவள் அந்த இளம்பெண்ணைவிட அழகானவளாகத் தோன்றினாள்.

"குமாரா.. என்ன விழிச்சு பார்த்துக்கிட்டிருக்கே?'' அந்தப் பெண் மார்பிலிருந்த ஜரிகை போட்ட மேற்துண்டை அலட்சியமாக சரிசெய்தவாறு கூறினாள்: "இங்க நின்னுக்கிட்டிருக்கிறது என் மகள். புரியுதா?''

ஏதோ உணர்ச்சியை அடக்குவதற்காக கை விரலைக் கடித்து சுவைத்தவாறு அவள் கார்த்தியாயனியின் முகத்தையே ஓரக் கண்களால் பார்த்தாள்.

கார்த்தியாயனியின் முகம் மலர்ந்தது. அவள் உதட்டைக் கடித்தவாறு தலையை குனிந்த நிலையில் நின்றுகொண்டிருந்தாள்.

ஆமாம்... உண்மைதான். முன்னால் நின்றுகொண்டி ருப்பது அவளைப் பெற்ற தாய்தான். மறுப்பதற் கில்லை.

ஆனால், ஐந்து வருடங்களுக்குமுன்பு நடைபெற்ற அந்தச் சம்பவம்... அதை மறக்கமுடியாது. மகளையும் கணவனையும் உதறிவிட்டு, ஒரு ஆசாரியுடன் சேர்ந்து ரகசியமாக ஓடிப்போன தேவடியாள்தான் முன்னால் நின்று கொண்டிருக்கிறாள். ஐந்து வருடங்களுக்குப்பிறகு இன்று முதல்முறையாக அவள் தன் அன்னையைப் பார்க்கிறாள்.

இதற்கிடையில் என்னவெல்லாம் நடந்திருக்கின்றன! நீதிமன்ற குமாஸ்தாவும் சாமியாடியுமான தந்தை இறந்துவிட்டார்.

அவர்களுடைய வீட்டையும் மனையையும் எர்ணாகுளம்-

கொல்லம் ரயில்வேக்காரர்கள் வாங்கிக்கொண் டார்கள். (நல்ல ஒரு தொகை அதற்குப் பதிலாக கிடைத்தது). அவள் பள்ளி இறுதி வகுப்பில் தேர்ச்சி பெற்றாள். கேசவனுடன் காதல் வயப்பட்டாள்.

பயிற்சி முடிந்து ஒரு ஆசிரியையாக ஒரு தூரத்து உறவைச் சேர்ந்த வயதான பெண்ணின் வீட்டில் போய் தங்கினாள். இன்று இதோ அந்த தாய் எதுவுமே நடக்காததைப்போல மகளைத் தேடிவந்திருக் கிறாள்.

இந்தத் தாய் எங்கிருந்தாள்? இந்தத் தாயைப்பற்றிய சில செய்திகளை யாரோ கூறி அவள் கேட்டிருக் கிறாள்.

காதலனான ஆசாரிக்கு மனைவியும் நான்கு குழந்தைகளும் ஊரில்... காயம்குளத்திலோ வேறு எங்கோ இருக்கிறார்களாம். அவன் தள்ளிக்கொண்டு வந்த சரக்கை ஒரு வாடகை வீட்டில் தங்கவைத்தான். அங்கு சில ஊரின் முக்கிய புள்ளிகளும் நாடக கம்பெனிகளில் இருப்பவர்களும் வந்து தொல்லைகள் கொடுக்க ஆரம்பித்தார்கள். ஆசாரி தனியாக நின்று போராடிப் பார்த்தான். போராடி மோதியபோது அவன் உளியால் ஒருவனைத் தீர்த்துக் கட்டிவிட்டான். காவல் துறையும் நீதிமன்றமும் உள்ளே வந்தன. ஆசாரிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

அதற்குப்பிறகு இந்தத் தாய் எப்படி வாழ்ந்தாள்? யாருக்குத் தெரியும்? இந்த வாத்துக்காரனுக்குத் தெரிந்திருக்கலாம்.

ஆனால், தெரிந்துகொள்ள வேண்டாம். அதுதான் நல்லது.

கார்த்தியாயனியின் மனதில் இந்த சிந்தனைகள் அனைத்தும் பந்தயக் குதிரைகளைப்போல பாய்ந்து சென்றன. அவளுக்கு அழுகை வந்தது. மகளின் விழிகள் ஈரமாவதை அம்மிணி அம்மா பார்த்தாலும், அதை கவனிக்காததைப்போல அவள் வாத்துக்காரனிடம் கேட்டாள்:

"எங்க போச்சுடா உன் காவல் படை?''

குமாரன் அப்போதுதான் தன் வாத்துகளைப் பற்றி நினைத்தான். அவன் அம்மிணி அம்மாவின் முகத்தைப் பார்த்து சிருங்கார உணர்வுடன் ஒரு சைகை செய்து குச்சியை நீட்டியவாறு வாத்துகளின் கூட்டம் சென்றவழியில் வேகமாகச் சென்றான்.

தாயும் மகளும் இரண்டு சிக்னல் தூண்களைப்போல அங்கு நின்றிருந்தார்கள். நிமிடங்கள் கடந்தன.

"கார்த்தியாயனீ...'' நெகிழ்ச்சி நிறைந்த ஒரு அழைப்பு.

கார்த்தியாயனி பேசவில்லை. முகத்தை உயர்த்தவில்லை.

கன்னங்களில் வழிந்த கண்ணீரைத் துடைக்க வுமில்லை.

குருத்தோலையால் அலங்கரிக்கப்பட்ட ஒரு புதிய ஓலைக் குடையைத் தோளில் தூக்கிவைத்தவாறு கூன்விழுந்த முதுகு நடுங்க, ஒரு சிறிய உருவம் அவர்களுக்கருகில் ரயில் தண்டவாளத்தைக் கடந்து வந்தது. பாணன் வேலு. வேலுவுக்கு தொண்ணூறு வயது தாண்டியிருக்கவேண்டும். நினைவுதெரிந்த காலத்திலிருந்தே கார்த்தியாயனி இப்படிப்பட்ட ஒரு காய்ந்த மாமிசத் துண்டாகத்தான் அவனைப் பார்த்து வந்திருக்கிறாள்.

ஏதோ கோவிலில் நடைபெறும் நிகழ்ச்சியைப் பார்ப்பதற்காக குடையை எடுத்துக்கொண்டு அந்த அப்பிராணி மனிதன் புறப்பட்டிருக்கிறான்.

அவன் மிகவும் அருகில் வந்து சுருக்கங்கள் விழுந்து தொங்கிக்கொண்டிருந்த கண்களை உயர்த்தி இருவரையும் சற்று பார்த்தான். ஆள் யாரென அடையாளம் தெரியாவிட்டாலும் ஆச்சார வார்த்தையைக் கூறிவிட்டு, கீழேயிருந்த நிலத்தை நோக்கி மெதுவாக ஊர்ந்து இறங்கிச் சென்றான்.

கோவிலில் திருவிழா நடைபெறும் காலம்... தங்களுடைய பழைய கோவிலில் திருவிழா நடைபெறும் காட்சிகள் அம்மிணி, கார்த்தியாயனி.. இருவரின் மனதிலும் வலம்வந்தன. இடுப்பில் சிவப்புநிறத் துணியைச் சுற்றிக்கொண்டு நெற்றியிலிருந்து ரத்தம் வழிய நின்றுகொண்டிருக்கும் உறுதியான உடலைக்கொண்ட ஒரு மனிதன் கையில் வாளைச் சுழற்றியவாறு இருவரின் இதய வாசல்களிலும் சாமியாடியவாறு வந்தான்.

அருகிலிருந்த புதருக்குள்ளிருந்து ஒரு குளக்கோழி ஓசை உண்டாக்கியவாறு பறந்தது.

கார்த்தியாயனி கணுக் கையால் கன்னங்களைத் துடைத்துவிட்டு ஒரு நீண்ட பெருமூச்சை விட்டவாறு கீழுதட்டை மெதுவாகக் கடித்துக்கொண்டே முன்னோக்கி நடந்தாள். அம்மிணி அம்மாவும் அவளைப் பின்பற்றினாள்.

கீழேயிருந்த நிலத்தில் சேறு நிறைந்த நீர் தேங்கிநிற்கும் குட்டைகளில் ஆயிரக்கணக்கில் வானவில்கள் தெரிந்தன.

வயலின் கரையிலிருந்த வீடுகளிலிருந்து இரவு உணவு சமைக்கும் புகை வானத்தை நோக்கி நீல பட்டுகளை வீசியெறிந்துகொண்டிருந்தது.

அந்தவகையில் அவர்கள் அந்த புதிய ரயில் பாதையின் வழியாக ஒரு ஃபர்லாங் தூரம் ஊர்ந்து ஊர்ந்து நடந்தார்கள். அவர்கள் திடீரென நின்றார் கள். தங்களின் பழைய வசிப்பிடத்தில் அவர்கள் கால்களை வைத்திருந்தார்கள்.

அந்த இடங்கள் அனைத்தும் ரயில்வேயின் கட்டுப்பாட்டிற்குள் வந்து முற்றிலும் மாறிவிட்டி ருந்தன.

தென்னைகளையும் மரங்களையும் வெட்டி அவற்றின் வேர்ப் பகுதிகளைப் பெயர்த்தெடுத்து, குழிகளை மண்ணிட்டு மூடி இடத்தை சமப்படுத்தி வைத்திருந்தார்கள்.

வாசலில் முருங்கை மரம் நின்றிருந்த இடத்தில் கருங்கற்கள் குவியலாகக் கிடந்தது. எனினும், வீட்டின் கால்பகுதி இடிக்கப்படாமல் நின்றுகொண்டிருந்தது...

இரண்டு அறைகளும் ஒரு துண்டு திண்ணையும். ஒரு அறை பூட்டப்பட்டிருந்தது.

அலவாங்குகளையும், மண்வெட்டிகளையும், பிற பணி செய்யக்கூடிய கருவிகளையும், கொஞ்சம் சிமெண்ட் கோணிகளையும் அதில் பாதுகாத்து வைத்திருந்தனர்.

கார்த்தியாயனியின் தந்தையின் பூஜையறை அது.

இன்னொரு அறையின் முன்பக்க சுவரை இடித்து அகற்றிவிட்டு, அதற்குள் ஃபிஷ் ப்ளேட்டுகளை அடுக்கி வைத்திருந்தார்கள். அதன் பின்பக்க சுவரில் கார்த்தியாயனியின் தந்தை கரிக்கட்டையால் எழுதிவைத்த ஏதோ கணக்கு அழிந்து கிடக்கிறது. அந்த அடையாளங்களுக்குக் கீழே "அம்மு பலாவைத் திருடிட்டா' என்றவொரு புதிய பகுதிச் செய்தியை யாரோ பெரிய எழுத்தில் கரியைக்கொண்டு எழுதி வைத்திருக்கின்றனர்.

அம்மிணி அம்மா மிதித்து நின்றுகொண்டிருந்தது அவளுடைய படுக்கையறையின் தரை. ஒரு ரயில் அதன் வழியாக கடந்து செல்கிறது.

அவள் அந்த பழைய காலங்களை நினைத்துப் பார்த்தாள். பதினாறு வயதில் அவளை அங்கு திருமணம் செய்து, கொண்டு வந்தார்கள்.

அவளுடைய திருமண வாழ்க்கை நடைபெற்ற அறை அது. ஐந்தாறு வருடங்கள் ஆகியும் அவளுக்கொரு குழந்தை பிறக்கவில்லை.

எப்படிப்பட்ட நேர்த்திக் கடன்களையும் வழிபாடுகளையும் அவள் செய்தாள்! இறுதியில் திருமணம் முடிந்து பத்து வருடங்களுக்குப்பிறகு அவள் கர்ப்பம் தரித்தாள்... இந்த கார்த்தியாயனியை. இருபது வருடங்களுக்கு முன்பு நடைபெற்ற சம்பவமது. இப்போது அவளுக்கு வயது நாற்பத்தாறு கடந்துவிட்டதென்பது அதிகமாக யாருக்கும் தெரியாது.

இன்னும் சில மாதங்கள் கடந்தால், அவளுடைய கட்டில் கிடந்த இந்த இடத்திற்கு மேலே ஆயிரக்கணக்கான பயணிகளை ஏற்றிக்கொண்டு கொல்லத்திற்குச் செல்லும் புகைவண்டி சீழ்க்கை எழுப்பியவாறு ஓடிக்கொண்டிருக்கும்.

ஃபிஷ் ப்ளேட்டுகள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் அந்த அறைக்குள் அவள் சற்று எட்டிப்பார்த்தாள். தன்னுடைய ரகசிய காதலனுடன் சுகம்கண்ட அறை அது. அவன் இப்போது சிறையறைக்குள் கிடந்து நரகத்தை அனுபவித்துக்கொண்டிருக்கிறான்.

கார்த்தியாயனியின் கண்கள் அங்கிருந்த கனகாம்பரச் செடிகளின்மீது பதிந்து நின்றுகொண்டிருந்தன.

வாசலி-ருந்த மற்ற எல்லா செடிகளையும் பிடுங்கி நீக்கியிருந்தனர். ஆனால், ஆச்சரியம் என்றுதான் கூற வேண்டும். அந்த கனகாம்பரம் அங்கு தனியாக எஞ்சி நின்றுகொண்டிருக்கிறது.

நாகாசுர குழலின் தோற்றத்தில் காவி நிறத்தில் சிறிய மலர்கள் அதில் நிறைய மலர்ந்து காணப் பட்டன.

கேசவனின் முதல் காதல் கடிதம்... அதில் பெரும் பகுதி சங்ஙம்புழயின் கவிதைகளைக் கொண்டிருந்தது. அவள் பார்ப்பதற்காக அந்த செடிக்குள்தான் அவன் வைத்திருந்தான்.

கேசவன் அவளை முதல் முறையாக முத்தமிட்டதும் அந்த பூச்செடிகளை சாட்சியாக நிறுத்திதான்.

அதை நினைத்தபோது கார்த்தியாயனியின் இதயம் உணர்ச்சிவசப்பட்டது. அந்தச் செடிக்கு அருகில் சிக்னல் தூணுக்கான ஒரு குழி பாதி தோண்டப் பட்டிருந்தது.

கேசவனின் கடிதத்திலிருந்த வரிகளை அவள் நினைத்துப் பார்த்தாள்: "நம்முடைய மணமாலையைத் தயார் செய்யும்போது, அதிலிருந்து ஒரு கனகாம்பர மலரை கட்டாயம் சேர்க்கவேண்டும்..'

அந்தச் செடியைப் பெயர்த்துக்கொண்டு போய் தான் வசிக்கும் இடத்தில் நட்டு வளர்க்க வேண்டும்.

கார்த்தியாயனி குனிந்தமர்ந்து அந்தச் செடியின் அடிப் பகுதியைத் தோண்ட ஆரம்பித்தாள்.

அவளுடைய கைகள் நடுங்கிக்கொண்டிருந்தன.

"நான் பிடுங்கித் தர்றேன். நல்ல அழகான ஒரு பூச்செடி...''

பின்னாலிருந்து யாரோ கூறினார்கள். அவள் திரும்பிப் பார்த்தாள். அந்த வாத்துக்காரன் குமாரன் புன்சிரிப்புடன் நின்றுகொண்டிருந்தான்.

வாத்துகளை எங்கோ ஒதுங்கியிருக்கச் செய்து விட்டு அவர்களைத் தேடி அவன் ஓடி வந்திருக் கிறான்.

வேர்களுக்குக் கேடு வராத வகையில் அடிப் பகுதியை முழுமையாகப் பெயர்த்து செடியைப் பிடுங்கி அவன் கார்த்தியாயனியின் கையில் கொடுத்தான். அந்த கனகாம்பரச் செடியைக் கையில் வைத்துக்கொண்டு, காஷ்மீர் மலையோரத்திலுள்ள பட்டாள முகாமில் தளர்ந்துபோய் படுத்துக் கிடக்கும் கேசவனை நினைத்தவாறு கார்த்தியாயனி வீட்டிற்குத் திரும்பினாள்.

ஏதோ ரகசிய உரையாடலை நடத்தியவாறு அம்மிணி அம்மாவும் குமாரனும் கார்த்தியாயனிக்குப் பின்னால் நடந்து போய்க்கொண்டிருந்தார்கள்.

uday010423
இதையும் படியுங்கள்
Subscribe