வள் தன்னுடைய கணவரை அலுவலகத்தில் கொண்டுபோய் விட்டுவிட்டு, வீட்டை நோக்கி காரை ஓட்டியவண்ணம் திரும்பிக் கொண்டிருந்தாள். பாலத்தை நெருங்கியபோது அவள், தன் வழியை மறித்தவாறு சாலையில் வரிசையாக நின்றுகொண்டிருந்த ஐந்து ஆட்களைப் பார்த்ததும் பயத்துடன் காரை நிறுத்தினாள். அவர்கள் போலீஸ்காரர்கள் என்பதை அவள் புரிந்துகொண்டாள்.

அவர்களில் ஒருவர் அவளுக்கு அருகில் நகர்ந்து நின்றுகொண்டு கேட்டார்:

""இப்படித்தான் வண்டி ஓட்டுறதா?''

பதைபதைப்பு காரணமாக சிறிது நேரத்திற்கு அவளால் எதுவும் பேசமுடியவில்லை. அவருடைய முகம் இரக்கமே இல்லாமல் இருந்தது. அவள் கூறினாள்... மிகவும் தாழ்ந்த குரலில்: ""நான் ரொம்ப மெதுவாத்தானே ஓட்டினேன்?''

Advertisment

""நான் சொல்றது அதுவல்ல.'' அந்த போலீஸ்காரர் கூறினார்.

""நான் என்ன தவறு செஞ்சேன்?'' அவள் கேட்டாள்.

அவர் மற்றவர்களிடம் ஒரு சைகை காட்டியவாறு, காரில் அவளுக்கு இடது பக்கமிருந்த இருக்கையில் ஏறி அமர்ந்தார். மற்றவர்கள் பின்னிருக்கையில் ஏறி அமர்ந்தார்கள்.

Advertisment

""ஓட்டு...'' அவளுக்கு அருகில் அமர்ந்திருந்த மனிதர் கூறினார்: ""நான் சொல்ற வழியில ஓட்டு... நாம காவல் நிலையம்வரை கொஞ்சம் போவேண்டியிருக்கு.''

""காவல் நிலையமா? நான் என்ன செஞ்சேன்? எதுவும் செய்யலிலியே! நீங்க ஏன் என்னை அங்க கூட்டிப் போறீங்க?''

அவளுடைய குரலிலில் ஒரு பதைபதைப்பு கலந்திருந்தது. போலீஸ்காரர்கள் மௌனமாக இருந்தார்கள். இறுதியில் சிவப்புநிற சுவர்களைக் கொண்டிருந்த ஒரு இரண்டு தள கட்டடத்திற்கு முன்னால் அவர்கள் அவளிடம் வண்டியை நிறுத்தும்படி கூறினார்கள்.

அவர்கள் எல்லாரும் அவளுடன் சேர்ந்து வெளியே இறங்கினார்கள்.

""வா...'' ஒரு ஆள் கூறினார்: உன்னுடைய புகார்களையெல்லாம் உள்ளே உட்கார்ந்திருக்கிறவர்கிட்ட சொல்லு.''

அவள் பின்னோக்கித் திரும்பிப் பார்ப்பதற்கு முயற்சித்தபோது, அவர் அவளுடைய கையை இறுகப் பிடித்தார். அவளுடைய முஷ்டிக்குள் தன்னுடைய கை விரல்கள நொறுங்கிக் கொண்டிருப்பதைப்போல அவள் உணர்ந்தாள்.

அங்கு எங்கேயும் வேறு போலீஸ்காரர்களை அவள் பார்க்கவில்லை. அவர்கள் நடந்து படிகளின் கீழ்ப்பகுதிக்குப் போய் நின்றார்கள்.

அந்த மூலையில் யாரோ வெற்றிலை போட்டுத் துப்பியது காய்ந்து கிடந்தது. படிகளின் இடது பக்கத்திலிருந்த கவரில் வங்க மொழியில் என்னவோ எழுதி வைத்திருந்தார்கள்.

அவள் படிகளில் ஏறியபோதும், அந்த போலீஸ்காரர் தன்னுடைய பிடியை விடவில்லை. அவளுடைய கண்களிலிலிருந்து கண்ணீர்த் துளிகள் அரும்பி விழுந்துகொண்டிருந்தன.

""அழறியா...'' அவர் கேட்டார். ""தப்பு செஞ்சிட்டு இப்போ அழறியா?''

""நான் என்ன தப்பு செஞ்சேன்?'' அவள் கேட்டாள்: ""எந்த சட்டத்தின் அடிப்படையில நீங்க என்னை இங்க கூட்டிவந்திருக்கீங்க?''

""நியாயம் கேட்க வந்திருக்கியா.'' அவர் ஒரு அசிங்கமான சிரிப்புடன் கூறினார். பின்னால் வந்துகொண்டிருந்தவர்களும் சிரித்தார்கள்.

அவள் ஒரு பெரிய தளத்தை அடைந்ததும், நடப்பதை நிறுத்தினாள். அங்கு அடர்த்தியான நீலநிறத்தைக் கொண்ட திரைச்சீலைகள் தொங்கிக் கொண்டிருந்த சாளரக் கதவுகள் இருந்தன. ஒரேயொரு மேஜையோ நாற்காலிலியோ... எதுவுமே அந்த அறையில் இல்லை. அழகான ஒரு பெண்ணின் ஒரு வண்ணபடம் மட்டும் சுவரில் தொங்கிக்கொண்டிருந்தது.

""இப்போ வந்துருவார்.'' ஒரு போலீஸ்காரர் அவளிடம் கூறினார்.

""யாரு?''

அவர் அதற்கு பதில் கூறவில்லை. ஒரு மனிதர் பைக்குள்ளிருந்து விலங்கை எடுத்து அவளுடைய கைகளில் காட்டினார்.

""என் கணவருக்கு ஒரு ஃபோன் பண்ணுங்க.''

அவள் கூறினாள்: ""அவர் இங்க வரட்டும்.''

""எதற்கு கணவர்? தப்பு செஞ்சது கணவர் இல்லியே? நீதானே குற்றத்தைச் செய்த?''

""என்ன குற்றம்?''

""யோசிச்சு பார்.''

அவர்கள் அவளை அந்த அறையின் மத்தியில் நிறுத்திவிட்டு அங்கிருந்து சென்றார்கள். அவள் தன்னைத்தானே சமாதானப்படுத்திக் கொள்ள முயற்சித்தாள். இதெல்லாம் ஒரு கனவு... தான் என்ன தவறு செய்தோம்? எதுவுமே இல்லை... அதனால் இதெல்லாம் ஒரு கெட்டகனவாக மட்டுமே இருக்கவேண்டும். ஆனால், அவளுடைய கைகள் வலிலித்தன. அவள் மீண்டும் அழ ஆரம்பித்தாள்.

""வந்தாச்சு... இல்லையா? நான் காத்திருந்தேன்.''

திடீரென்று அங்கு நுழைந்தவாறு ஒரு நடுத்தர வயது கொண்ட மனிதர் கூறினார். அவர் உயரம் குறைந்த, தடிமனான சரீரத்தைக் கொண்டவராக இருந்தார்.

""நீங்க யார்?'' அவள் கோபத்துடன் கேட்டாள்.

""யார்னு கேக்குறியா? ஹ... ஹ... இவள் கேட்கறதைக் கேட்டீங்களா?'' அவர் பின்னால் திரும்பிப் பார்த்தவாறு கூறினார். உடனடியாக போலீஸ்காரர்கள் கதவுக்கு அருகில் தோன்றினார்கள். அவர்களின் ஒருவர் கூறினார்:

""இவர் எங்களோட எஜமான்.''

""இன்ஸ்பெக்டரா?''

அவள் கேட்டாள்.

அவர்கள் தலையைக் குலுக்கினார்கள். எஜமான் என்று கூறப்பட்ட மனிதர் வெள்ளைநிற கால்சட்டையையும், மேலே இரண்டு பொத்தான்கள் விழுந்திருந்த ஒரு நீலநிற சட்டையையும் அணிந்திருந்தார். அவருடைய பற்கள் வெற்றிலைக் கறை படிந்து, கறுத்து, அசிங்கமாகக் காணப்பட்டன. அவள் வெறுப்புடன் பின்பக்கமாக நகர்ந்து சுவரின்மீது சாய்ந்து நின்றாள்.

அவர் கேட்டார்:

""அப்படின்னா... நீ குற்றத்தை ஒத்துக்கிட்ட...

இல்லிலையா?''

kalyani

""என்ன குற்றம்? நான் காரை ஓட்டியபடி வந்துக்கிட்டிருந்தேன். இந்த போலீஸ்காரங்க என்னுடைய வழியை மறிச்சு நின்னுக்கிட்டு, என்னை காரை நிறுத்தும்படி செஞ்சாங்க. பிறகு எந்தவொரு காரணமும் சொல்லாம இங்க கூட்டிக்கிட்டு வந்தாங்க. இந்த விஷயம் என் கணவருக்குத் தெரிஞ்சா....''

""கணவர்! உனக்கும் கணவன்னு ஒருத்தன் இருக்கானா கல்யாணி?'' அவர் கேட்டார்.

""நான் கல்யாணி இல்ல.'' அவள் கூறினாள்.

""எனக்கு உன்னைத் தெரியாதுன்று தீர்மானிச்சிட்டியா?'' அவர் கேட்டார்.

""உங்களுக்கு என்னவோ தவறு நேர்ந்திருக்கு!''

அவள் கூறினாள்: ""என்னை விட்டுடுறதுதான் நல்லது.''

""இவளுக்கு மூணுமாத கடும் தண்டனை.''

அவர் கூறினார். போலீஸ்காரர்கள் முன்னால் வந்து, அவளைப் பிடித்து இழுத்தவாறு ஒரு கூடத்தின் வழியாக வேறொரு அறைக்குள் கொண்டு சென்றார்கள். அது ஒரு இருள்நிறைந்த சிறிய அறை... அதற்கு சாளரங்கள் எதுவுமே இல்லை என்பதை அவள் தெரிந்துகொண்டாள்.

""உன் ஆடைகளை இங்க தா.'' ஒரு போலீஸ்காரர் கூறினார்.

""அது எதுக்கு?'' அவள் கேட்டாள்.

""இங்க சீருடை தருவாங்க. அதுதான் இனி உன்னுடைய ஆடை...''

அவள் அழ ஆரம்பித்தாள். ""என்னால் அதைச் செய்ய முடியாது.'' அவள் கூறினாள்.

""உனக்கு வெட்கம்னு ஒண்ணு எப்போ வந்தது... கல்யாணி?'' அவர்களில் ஒருவர் கேட்டார்.

""நான் கல்யாணி இல்ல.'' அவள் பதைபதைப்புடன் கூறினாள்.

""என் பேரு. அம்மிணி... நான் மிஸ்டர் மேனனோட மனைவி.''

""மனைவி! அவர் கிண்டலாகக் கூறினார். அவர் கைவிலங்கைக் கழற்றிவிட்டு அவளை வெறுமனே இருக்கச் செய்தார். அவர்கள் அவளுடைய ஆடைகளைச் சுருட்டி எடுத்தவாறு, கதவை அடைத்துவிட்டு வெளியேறிச் சென்றார்கள். தொடர்ந்து அவளுக்கு அந்த அறையில் எதையும் பார்ப்பதற்கே முடியவில்லை. அதுவொரு இருட்டறையாக இருந்தது. அவள் கைகளைக் கொண்டு தடவியவாறு ஒரு சுவரைக் கண்டுபிடித்தாள். அதில் சாய்ந்தவாறு அவள் அந்தத் தரையில் அமர்ந்தாள்.

அப்போது அவள் முணுமுணுத்தாள். இது எதுவுமே உண்மை அல்ல. இது வெறும் ஒரு கெட்ட கனவு மட்டுமே. தன்னை எதற்கு போலீஸ்காரர்கள் பிடிக்கிறார்கள்? நாளைக் காலையில் கண்விழிக்கும் போது, தான் இதைப் பற்றி கணவரிடம் கூறவேண்டும்...

பிறகு...

திடீரென்று கதவு மீண்டும் திறக்கப்பட்டது.

ஒரு டார்ச் விளக்குடன் ஒரு போலீஸ்காரர் அவளை நோக்கி வந்தார்.

""இதைக் குடிச்சிட்டுப் படு... நாங்க சீருடை கொண்டு வந்து தர்றோம்.'' அவர் பைக்குள்ளிருந்து ஒரு புட்டியை வெளியே எடுத்தவாறு கூறினார்.

""எனக்கு எதுவும் வேணாம்.'' அவள் தன்னுடைய கைகளால் சரீரத்தை மறைப்பதற்கு முயற்சித்தவாறு கூறினாள்.

""குடி...'' -அவர் கூறினார். பிறகு அவள் தயங்கவில்லை. அந்த புட்டியை எடுத்து, அதிலிருந்த கசப்பான திரவத்தை முழுவதுமாகக் குடித்துத் தீர்த்தாள்.

போலீஸ்காரர் அங்கிருந்து சென்றார்.

தொடர்ந்து நீண்டநேரத்திற்கு அவள் எந்தவொரு சலனமும் இல்லாமல் அந்தத் தரையில் படுத்திருந்தாள். தன்னுடைய சரீரத்தை ஒரு உறை என்பதைப்போல வீசியெறிந்தவாறு, தான் அந்த இருட்டில் எழுந்து பறப்பதைப்போல அவளுக்குத் தோன்றியது.

கதவு திறக்கப்படும் சத்தத்தைக் கேட்டதும் அவள் எழுந்து அமர்ந்தாள். திடீரென்று அந்த அறையில் மின்விளக்கின் வெளிச்சம் பரவியது. அவள் கூச்சத்தால் கண்களை மூடிக்கொண்டாள்.

""அம்மிணீ... நீ இதைச் செய்வேன்னு நான் நினைக்கல.''

அவளுடைய கணவர் கூறினார். அவள் கண்களைத் திறந்து அவரைப் பார்த்ததும், சந்தோஷத்தால் மதியை மறந்த ஒரு குரலில் கூறினாள்:

""வந்துட்டீங்க இல்லிலியா? என்னை சீக்கிரம் கூட்டிட்டுப் போங்க..''

அவர் எதுவும் கூறவில்லை. அவளுடைய கண்கள் அப்போது அறையின் இன்னொரு பக்கத்தில் போய் பதிந்துகொண்டிருந்தன. அவளும் அந்தப் பக்கம் பார்த்தாள். ஒரு மனிதர் அங்கு... கட்டிலில் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தார்.

""எனக்கு கடிதங்கள் கிடைச்சப்பவும் நான் நம்பல.'' அவளுடைய கணவர் கூறினார்: ""தொலைபேசியில இப்போ ஒரு தகவல் கிடைச்சப்போகூட நான் நினைச்சேன்... யாரோ விளையாடுறாங்கன்னு. நீ ஒரு விலைமாதுன்னு நான் எந்த சமயத்திலும் நினைச்சதே இல்லை.''

""நீங்க என்ன சொல்றீங்க?'' அவள் கேட்டாள்: ""நான் என்ன செஞ்சேன்னு நீங்க சொல்றீங்க? என்னை போலீஸ்காரங்க இங்க கூட்டிட்டு வந்தாங்க...''

அவர் எதுவுமே கூறாமல், வேகமாக அறைக்கு வெளியே சென்றார்.

""போகாதீங்க... நான் சொல்றதைக் கேளுங்க...''

அவள் கூறினாள்.

அவருக்குப் பின்னால் ஓடுவதற்கு அவளை அவளுடைய வெட்கம் அனுமதிக்கவில்லை. அவள் கூடத்திலிலிருந்த ஒரு தூணின் மறைவில் நின்றவாறு சத்தமாக தேம்பித்தேம்பி அழ ஆரம்பித்தாள்.

""நீ ஏன் இந்த அளவுக்கு கவலைப்படுறே?''

அறிமுகமான அந்த குரலைக் கேட்டு அவள் திரும்பிப் பார்த்தாள். எஜமான் என்று கூறப்பட்ட அந்த மனிதர் ஒரு புன்சிரிப்புடன் தன்னை நோக்கி வந்துகொண்டிருப்பதை அவள் பார்த்தாள். அவள் மீண்டும் அழ ஆரம்பித்தாள்.

""நீ ஏன் அழற கல்யாணீ?'' அவர் கேட்டார்: ""உன் கணவர்னு சொல்லப்படுற அந்த மனிதன் போய்ட்டான்னா? உனக்கு நான் இல்லியா? நம்முடைய காதல் உறவு எந்த அளவுக்குப் பழையது! அது இருக்கும்போது என்ன காரணத்துக்காக நீ கவலைப்படணும்?''

""நீங்க என்னவோ சொல்றீங்க...'' அவள் கூறினாள். ""நான் கல்யாணியே இல்ல... நான் அம்மிணி...''

""நீ கல்யாணிதான்...'' அவர் சிரித்துக்கொண்டே கூறினார்: ""நீ என்றும்... என்றும்... என்னோட கல்யாணிதான்.''

சோர்வு காரணமாக மூடிக்கொண்டிருந்த கண்களுடன் அவள் அந்த உரோமம் இல்லாத முகத்தையே பார்த்தாள்.

""நான் கல்யாணியா?'' அவள் கேட்டாள்.

""ஆமாம்... நீ கல்யாணிதான்...''

அவள் சுய உணர்வை இழந்து தரையில் விழுந்தாள்.