தனக்குவமை இல்லாத தலைவர் கலைஞர்!

/idhalgal/eniya-utayam/kalaignar-extraordinary-leader

kalaignar

ளக்க முடியாத ஆற்றலால் மூன்று தலைமுறையினரைத் தன் வசமாக்கிக்கொண்ட கலைஞரைப் போல் ஒரு தலைவரை இந்திய அரசியலில் பார்க்கமுடியாது.

அண்ணாந்து பார்க்கிற உயரத்தில், ஆகாயம் அளாவ எழுந்து நிற்கும் பல்கலைக்கழகங்களில் இருக்கும் ஆய்ந்தறிந்த பேராசிரியர்களைவிட, அறிவில், ஆற்றலில் கலைஞர் உயரமானவர்.பாடல் பெற்ற திருமுறைத்தலம் திருக்கோளிலி என்ற திருக்குவளையில் அழுத்தப்பட்ட சமூகத்தில் முத்துவேலர் அஞ்சுகத்தம்மாளுக்கு மகனாக கலைஞர் உதயமானார். அவர் உதித்த அன்று வானவர் யாரும் அவர் மீது மலர்மாரி பொழியவில்லை. அவர் உதயமான அன்று, நாளும் கோளும் இடம் பெயரவில்லை.

அதிசயங்களை நிகழ்த்தப் போகிறவன் உதயமாகி இருக்கிறான். ஆச்சரியங்களை நிகழ்த்தப் போகிறவன் பிறந்திருக்கிறான் என்று யாரும் ஆரூடம் கணிக்கவில்லை.

""சவால்களைச் சந்திக்க வேண்டியது வரும் சங்கடங்களை எதிர்கொள்ள நேரிடும். அறைகூவல்களுக்கு முகம் கொடுக்க வேண்டியது வரும். ஆபத்தைக் கடக்க நேரிடும். தோளில் தொல்லைகள் வந்து உட்காரும். தர்ப்பைகள் வழிமறிக்கும். கனவில் கல் வந்துவிழும்'' -என்றெல்லாம் அந்தக் குழந்தைஎதிர்பார்த்திருக்காது.

தாலாட்டு கேட்டு, தவழ்ந்து, நடை பயின்று, மரங்களின் பெயரையும் மலர்களின் வண்ணத்தையும் அஞ்சுகத்தாய் சொல்லிக் கொடுக்க, சந்திர பிம்பம் போல் வளர்ந்தார்.

அகரம் முதலான தொடக்கக் கல்வியைத் திருக்குவளையில் கற்ற அருந்தவப் புதல்வனை, உயர்நிலைப் படிப்பிற்காக திருவாரூர் பள்ளிக்கு அழைத்துச் செல்லுகிறார் தந்தை முத்துவேலர். பள்ளியின் தலைமை ஆசிரியர் கஸ்தூரி அய்யங்கார் பள்ளியில் இடமில்லை என்றார். தடம் தெரியாமல் தவிக்கிறார் தந்தை. பள்ளியில் சேர்க்காவிட்டால் தெப்பக் குளமான கமலாலயத்தில் விழுந்து உயிரை மாய்த்துக்கொள்வேன் என்கிறார் கலைஞர். கஸ்தூரி அய்யங்காருக்கு அன்றுதான் முதன்முதலாக வியர்த்தது. போராடித் தான் பள்ளியில் மட்டுமல்ல; தாய்த் தமிழகத்து மக்கள் மத்தியிலும் இடம் பிடித்தார்.

காட்டாற்று வெள்ளத்தில் நீந்திக் கரை சேரவும் அக்கினி ஆற்றில் குளித்தெழவும் வாழ்க்கை முழுவதும் அவரால் முடிந்தது. உலகின் சிறந்த வரலாற்று வரிகளுக்கு அப்போதே அவர் வரை விலக்கணம் ஆனார்.தலைவர் கலைஞரிடம் இருந்த தனித்துவமும் மகத்துவமும் அவரைப் புகழின் உச்சிக்குக் கொண்டு சென்றது. புகழ் வரும், போகும்.கலைஞரைத் தஞ்சமடைந்த புகழ் அவர் இருக்கும்போதும் அவருடன் இருந்தது. அவர் இல்லாத போதும் இருக்கிறது. நூற்றாண்டுகளின் வரம்புகளைத் தாண்டி இன்னும் இருக்கும். மங்காத வானமும் நீங்காத மலையும் வற்றாத கடலும் எண்ணமெல்லாம் இனிக்கும் வண்ணத் தமிழும் இருக்கும் வரை இருக்கும்.

கலைஞரை ஏற்காதவர்கள் கூட அவர் தோற்காதவர் என்பதை ஒப்புக்கொள்வார்கள். கண்ட களங்கள் அனைத்திலும் வாகை சூடிய வரலாறு கலைஞரின் வரலாறு. அறிஞர் அண்ணா கலைகள் சிரிக்கும் காஞ்சியில் தனது தொட்டில் பிரதேசத்தில், ஆயிரத்துத் தொள்ளாயிரத்து அறுபத்திரண்டில் தோற்றுப் போனார். குலக்கல்வித் திட்டத்திற்குக் கொள்ளி வைத்து ஆறாயிரம் பள்ளிகளைத் திறந்து, இரண்டு பிரதமர்களைத் தீர்மானித்த கர்மயோகி காமராஜர் தான் பிறந்த மண்ணில் விருதுநகரில் வீழ்ந்து போனார், ஆயிரத்துத் தொள்ளாயிரத்து அறுபத்து ஏழில். விவாதப் புலமையும் விவேகத்தின் விளைநிலமுமாக இருந்த அடல்பிகாரி வாஜ்பாயும் ஒருநாள் தோற்றுப் போனார்.

மேருவை நிகர்த்த பண்டித நேருவின் மகளும் இந்தியா பாகிஸ்தான் யுத்தத்தை பத்தே நாளில் சந்தித்துப் பகை முடித்தவரும் பூமிப் பந்தில் ஒரு புதிய நாடு வங்கதேசம் உருவாகக் காரணமாக இருந்தவரும் அதைக் கருவில் சுமந்தவருமான அன்னை இந்திராவும் தோற்றுப் போனார். இந்திய அரசியல் வரலாற்றில் தோற்காத கலைஞரின் வெற்றிக்குப் பின்னால் இன்னும் ஒரு அதிசயம் இருக்கிறது.

சந்தியில் நின்று சத்தம் போடுகிற தி.மு.. தைரியமிருந்தால் சபைக்கு வந்து பேசுங்கள் என்ற காங்கிரசின் சவாலை சந்திக்க வேண்டிய முறையில் சந்திக்கத்தான் தி.மு.. 1957-ல் களம் கண்டது. அண்ணா, கலைஞர் உட்பட 1957-ல் முதல்முறையாக கண்ட களத்தில் 15 பேர் வெற்றி பெற்றார்கள். அண்ணா வகுத்த வியூகமும் அடைந்த வெற்றியும் கண்டு ஆகாயம் வியந்தது. ஆனால் காங்கிரஸ் அதிர்ச்சியில் உறைந்தது.

தி.மு.. பெற்ற வெற்றி இனி தொடர்கதையாகி விடக்கூடாது எனத் திட்டமிட்ட காங்கிரஸ் 1967 பொதுத்தேர்தலின் போது, 57-ல் தி.மு.. வென்ற அந்த 15 தொகுதிகளிலும் தனிக்கவனம் செலுத்தினார்கள். பெரிய நெருக்கடியைக் கொடுத்தார்கள். 1962-ல் 50 சட்டமன்ற உறுப்பினர்கள் திமுகவின் சார்பில் வெற்றி பெற்றாலும் 57-ல் வெற்றி பெற்றவர்கள் அறிஞர் அண்ணா உட்பட 14 பேர் தோற்றுப்போனார்கள். கலைஞர் மட்டுமே தஞ்சைத் தொகுதியில் வெற்றி பெற்றார்.

இந்திய அரசியலில் வெற்றியின் முகமாக ஒரு சில தலைவர்கள் இருந்தாலும் வெற்றியின் முகவரியாக இருந்தவர் கலைஞர். வெற்றி அவரைவிட்டு எப்போதும் விலகியதில்லை. செயற்

இந்திய அரசியலில் வெற்றியின் முகமாக ஒரு சில தலைவர்கள் இருந்தாலும் வெற்றியின் முகவரியாக இருந்தவர் கலைஞர். வெற்றி அவரைவிட்டு எப்போதும் விலகியதில்லை. செயற்கரிய செயல் செய்து வரலாற்றில் சில தலைவர்கள் இடம்பெறுவார்கள். வரும் தலைமுறை தெளிந்து கொள்வதற்கும் தெரிந்து கொள்வதற்கும் சிலர் வரலாற்றை எழுதுவார்கள். நாட்டின் வரலாறு தன் வரலாறாகவும் தன் வரலாறு நாட்டின் வரலாறாகவும் ஒருவருக்குப் பொருந்தி வந்தது என்றால் அவர் தான் கலைஞர். தலைவர் கலைஞருடைய நெஞ்சுக்கு நீதியைப் படித்தால் எழுபத்தைந்து ஆண்டு கால வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.

துணிவையும் தன்னம்பிக்கையையும் மூலதனமாகக் கொண்டு இத்தாலியில் தனது பயணத்தைத் தொடங்கிய மகத்தான தலைவன் மாஜினி தனது இருபத்தாறு வயதில் ""இத்தாலிய இளைஞர் சங்கம்' ஒன்றை நிறுவி ஆதிக்கத்தின் கன்னத்தில் அறைந்தார். ஆனால் தலைவர் கலைஞரோ தனது 15-ஆவது வயதில் தன் உடன் பயின்ற மாணவர்களையும், தான் வசித்த தெருவில் உள்ள வாலிபர்கள் பலரையும் சேர்த்துக்கொண்டு சிறுவர் சீர்திருத்தச் சங்கம் என்ற அமைப்பை ஒரு ஓலைக்குடிசையில் ஆயிரம் கனவுகளோடு தொடங்கினார். சிறுவர் சீர்திருத்தச் சங்கம் தான் ""தமிழ்நாடு' தமிழ் மன்றமாக புதிய வடிவம் கொள்கிறது.

அதேபோது மாணவ நேசன் என்ற கையெழுத்துப் பிரதியையும் தொடங்கி தன் எண்ணங்களை அதில் எழுத்தாக்கினார்.திராவிட இயக்கத்தின் நாற்றங்கால்களாக விளங்கிய அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் அறிவார்ந்த மாணவர்கள் இரா. நெடுஞ்செழியன், . அன்பழகன், கே.. மதியழகன் ஆகியோரைத் திருவாரூருக்கு அழைத்து வந்து பொதுக்கூட்டத்தை ஏற்பாடு செய்து பேச வைத்தார். அவர்களுக்குரிய பயணச் செலவையும் வழங்கினார்.

பல்கலைக்கழகம் செல்லாத கலைஞர் தான் கனவுகள் காணுகிற கால்ச்சட்டைப் பருவத்தில் மாணவர்களை ஒருங்கிணைத்தார். அப்போது பாவேந்தர் பாரதிதாசனின் ""காலையிளம் பரிதியிலே அவளைக் கண்டேன்' என்ற பாட்டு பாடநூலில் இருந்தது. அந்த பாட்டில் தனது மனதைப் பறிகொடுத்தார் கலைஞர். திடீரென மாவட்டக்கழகத்தில் இருந்து அந்தப் பாடலைக் கற்பிக்கக் கூடாது என்ற ஆணை வந்தது.

மாணவனாக அதுவும் பள்ளி மாணவனாகஇருந்த கலைஞர், ஆணை பிறப்பித்த மாவட்ட நிர்வாகத்தைக் கண்டித்து கண்டனப் பொதுக்கூட்டம் நடத்த முன்வந்தார். கண்டன சொற்பொழிவாற்றிட தலைநகர் சென்னையிலிருந்து டார்பிடோ .பி. ஜனார்த்தனத்தை வரவழைத்தார். டார்பிடோ .பி. ஜனார்த்தனத்தின் பேச்சு மாணவர்கள் மத்தியில் புயலையும் பூகம்பத்தையும் உருவாக்கியது. ஓர் அரசியல் கட்சி செய்ய வேண்டிய வேலையை, ஒரு தமிழ் அமைப்பு மேற்கொள்ள வேண்டிய இமாலயப் பணியை, பள்ளி மாணவர் கலைஞர் செய்தார்.

கண்டனக் கூட்டம் நடத்தியதன் விளைவு கலைஞருடன் பயன்ற கே.ஆர். ரங்கசாமி ""இராம அரங்கண்ணல் ஆனார். வி.கே. சண்முகம் .கோ. மாவெண்கோ ஆனார். சாமிநாதன் அண்ணல் தங்கோவாக மாறினார்.

""தண்பொழிலில் குயில் பாடும் திருவாரூரில்

தமிழ்நாடு தமிழ் மாணவர் மன்றம் காண்

கிளம்பிற்றுக் காண் தமிழ்ச் சிங்கக் கூட்டம்

கிழித்தெறிய தேடுதுகாண் பகைக் கூட்டத்தை''

என்று பாவேந்தரிடமிருந்து வாழ்த்துப்பா வருகிறது. அந்த வாழ்த்து கலைஞருக்குள் ஒரு புதிய வாசலைத் திறந்தது என்றுதான் சொல்லவேண்டும்.கழகம் தொடங்கிய இருபதாண்டு காலத்தில் ஆட்சிக்கு வந்துவிட்டது. இரு ஆண்டுகளுக்குள் அண்ணா கண்மூடிவிட்டார். கல்லறைக் குயிலாகி விட்டார். காலம் கலைஞரின் தோள்களில் முதலமைச்சர் பொறுப்பை ஒப்படைத்தது.

அதிகாரத்தைக் குவித்து வைத்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளை ஆறாவது விரலாக அலட்சியப்படுத்திய, ஒன்றிய அரசையும் சமாளிக்கவேண்டும். அதே நேரத்தில் அண்ணாவிற்குப் பிறகு கழகம் கலகலத்துவிடும் என்று ஆகாதவர்களின் ஆரூடத்தையும் பொய்யாக்கிக் காட்டவேண்டும். இந்த இரண்டு சவால்களை எதிர்கொண்டு வென்றதால் தான் கவிக்கோ அப்துல் ரகுமான் கலைஞரை ""வியப்பின் புதல்வர்' என்று கொண்டாடினார்.

மக்களாட்சித் தத்துவத்தின் மாண்பைப் பாதுகாக்கும் பாதுகாவலராக ஆக்டோபஸ் கரங்கள் கொண்ட வலிமை மிகுந்த எதேச்சதிகாரத்திற்கு எதிராக கலைஞர் நின்றதற்கு வரலாறு பெருமைக்குரிய இடத்தை கலைஞருக்கு மட்டுமே வழங்கும் என்று ""Karunanidhi Man of Destiny

என்ற நூலில் சுவாமிநாதன் குறிப்பிடுகிறார். History will finally credit him alone individual who stood his stand for the defence of Indian Democracy against the total Dictatorship of the ruling Congress"என்ற அவரது பாராட்டு கையெழுத்துப் பிரதியாக தொடங்கிய வாழ்க்கை கல்வெட்டுப் பிரதியாகி விட்டதைத் தான் காட்டுகிறது.

சராசரி முதல்வர்களுக்கு மத்தியில் சரித்திரம் படைத்த முதல்வராக, தனித்திறம் படைத்த முதல்வராக கலைஞர் உயர்ந்தார். 1973 ஆம் ஆண்டு ஆத்தூர் அறிஞர் அண்ணா திறப்பு விழாவில் கலந்துகொண்ட காலம் சென்ற பாதுகாப்புத்துறை அமைச்சர் பாபு ஜெகஜீவன் ராம், ""அண்ணா அவர்களின் இழப்பில் விடப்பட்ட இடைவெளியை கலைஞர் வந்து நிரப்பி இருப்பது எங்களுக்கெல்லாம் ஆறுதலைத் தருகின்ற ஒன்றாகும்'' என்றார்.

ஆட்சித் தலைவராகவும் கட்சித் தலைவராகவும் இருந்து, அடுத்தடுத்து அவர் மேற்கொண்ட நடவடிக்கைகள் அரசியல் பார்வையாளர்களை வியப்பில் ஆழ்ந்தியது.""கேட்டிலும் உண்டு ஓர் உறுதி' என்றான் வான்புகழ் வள்ளுவன். தமிழர்களை இருட்டில் இருந்து வெளிச்சத்திற்கும் பள்ளத்தில் இருந்து சமவெளிக்கும் பழமையில் இருந்து புதுமைக்கும் பத்தாம் பசலித் தனத்தில் இருந்து பகுத்தறிவு புரிக்கும் இட்டுச் சென்ற கலைஞரின் கழக ஆட்சி 1976 ஜனவரி 31ல் கலைக்கப்பட்டது. கழகம் கரைந்து விடவில்லை. கலைஞர் கலங்கிவிடவில்லை. கழகத்தின் மான மறவர்கள் மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு காராக்கிரகத்தில் அடைக்கப்பட்டார்கள்.

கொட்டியும் ஆம்பலுமாக இருக்க வேண்டியவர்கள் பழமரம் தேடும் பறவைகள் ஆனார்கள். லத்திக்கு நகம் முளைத்தது. சென்னை சிறைச்சாலை அடக்குமுறையின் கொள்ளிடம் ஆனது. அண்ணன் ஸ்டாலினைக் குறிவைத்து சிறைச்சாலையில் தாக்கினார்கள். அண்ணன் ஸ்டாலின் மீது வீசிய அம்பை கழகத்தின் கொள்கை பரப்புச் செயலாளர் சிங்கம்போல் முழங்கும் சிட்டிபாபு தாங்கிக்கொண்டார்.

முதல் உலகப் போரின்போது என்ன நடக்கும் என்பதை ஜெர்மன் மன்னன் இரண்டாம் வில்லியத்திற்கு, ஜெர்மன் பிரதமராக இருந்த பிஸ்மார்க் எச்சரித்ததால் பிஸ்மார்க் பதவி இழந்தார். உயிருக்கு உயிராக இருந்த உற்ற நண்பர்களின் நட்பை இழந்தார். நட்பைவிட நாட்டின் மரியாதை காப்பாற்றப்பட வேண்டும் என்றார் பிஸ்மார்க்.

அந்த காலகட்டத்தில் பிஸ்மார்க்கின் பிள்ளைகள் கொடுமைக்கு ஆளாகவில்லை. ஆனால் கலைஞரின் குடும்பமே கொடுமைக்கு ஆளானது. கலைஞருக்கு நேர்ந்த கொடுமை இன்னொரு தவைருக்கு நேர்ந்திருந் தால் காணாமல் போயிருப்பார்கள். கண்டுபிடித்துத் தாருங்கள் என்று விளம்பரம் செய்யவேண்டிய நிலைமை வந்திருக்கும். ஆனால் கலைஞர் கையில் கழகக் கொடியை ஏந்தியவராக அண்ணா சாலையில் அண்ணாசிலைக்கு அருகில் நெருக்கடியை எதிர்த்து துண்டுப் பிரசுரங்களை வழங்கினார். அதிர்ச்சி அவரை நெருங்க முடியாமல் அதிர்ச்சி அடைந்தது.

சங்க காலம் என்ற தங்க காலத்தில் புவியாண்டவர்கள் கவி வேந்தர்களாகவும் இருந்தார்கள். சோழ மன்னர்கள் நலங்கிள்ளியும் நெடுங்கிள்ளியும் புவியரசர்களாக மட்டுமல்ல கவியரசர்களாகவும் சுடர் விட்டவர்கள். அந்த சோழ வள மரபில் வந்த தலைவர் கலைஞர் அந்த மரபிற்கு மணி மகுடம் வைத்ததுபோல் இலக்கிய உலகில் தன் கொடியை உயரப் பறக்கவிட்டார். தீர்ந்து போகாத திராவிட இயக்கத்தின் வெற்றிக்கும் பெற்றிக்கும் கலை இலக்கியத்தைப் பயன்படுத்தி வெற்றிகண்டவர் அண்ணா என்றால், அந்த வெற்றியை அண்ணாவிற்குப் பிறகு தனதாக்கிக் கொண்டவர் கலைஞர் மட்டும்தான்.

திரைப்படத்தில் வசனம் எழுதுவதற்குக் கலைஞர் பேனா ஏந்துவதற்கு முன்னால் மணிப்பிரவாள நடையே வசனங்களில் ஆட்சி செய்தது. திரைப்படங்களில் வசனங்களைவிட பாடல்தான் சினிமாவின் வெற்றிக்குக் காரணமாக அமைந்தது. திரைப்படம் முழுவதும் பாடல்களே பூரணமாக ஆக்கிரமித்து இருந்தது. அந்த நாளில் சூப்பர் ஸ்டாராக கருதப்பட்டவர் தியாகராஜ பாகவதர். வெள்ளித் திரையில் தியாகராஜர் தோன்றுவதைக் காண ரசிகர்கள் தவமிருந்த காலம் அந்தக்காலம். ஒரு தீபாவளிக்கு திரைக்கு வந்த தியாகராஜ பாகவதரின் ஹரிதாஸ் படம் மூன்று தீபாவளியைப் பார்த்தது. பாகவதரின் பாட்டுக்காகவே படம் ஓடியதை வசனத்திற்காகவும் படம் ஓடும் என்று நிரூபித்தவர் கலைஞர்.

தன்னை மறந்து தூங்கிய தமிழனை வசனத்தால் தட்டி எழுப்பியவர் கலைஞர். அவருடைய வசனத்தில் குருதியும் கொட்டியது குற்றாலமும் கொட்டியது. கலைஞர் வசனத்தால் துரும்பாக இருந்த இளைஞர்கள் இரும்பானார்கள். இரும்பாக இருந்தவர்கள் ஆயுதமாக அவதாரமெடுத்தார்கள். ஆண்டாண்டு காலம் ஆண்டவன் பெயராலும் ஆதிக்கத்தின் பெயராலும் ஏய்த்த கூட்டம் கலைஞரின் வசனத்தைக் கேட்டு குலை நடுங்கியது. உலை நெருப்பானார்கள் தமிழர்கள். ""புலிக்கு ஆட்டை இரையாகப் படைத்தவன் பெயர்தான் ஆண்டவன் என்றால் ஆண்டவன் அவ்வளவு இரக்க மற்றவனா? என்று கலைஞர் கேட்ட கேள்விக்கு இன்றுவரை பதில் கிடைக்கவில்லை.

மந்திரிகுமாரி நாயகன் மூலமாக கலைஞர் முழங்குகிறார். ""சிங்கங்கள் உலவும் காட்டிலே சிறுநரிகள் உலவுவது போல நமது நாட்டைச் சுற்றித் திரிகிறது ஒரு சோதாக் கும்பல், எண்ணிக்கையிலே குறைந்திருக்கும் இதயமற்ற கூட்டம் வஞ்சகத்தால் வாழ்கிறது. அனாதைகளின் ரத்தத்தை அள்ளிக் குடிக்கிறது. உழைப்பாளிகளின் ரத்தத்தை உறிஞ்சிக் குடிக்கிறது. நாட்டிலே ஆட்சி நடக்கிறதா என்று கேள்வி கேட்கும் அளவுக்கு அவர்கள் அட்டகாசம். அவர்கள் சிலர். நாம் பலர். அவர்கள் சூழ்ச்சிக்காரர்கள் நாம் சூரர்! சிங்கத் தமிழர்களே! சீறி எழுங்கள்'' என்கிறார்.

""வானத்தை முட்டும் மாளிகைகள் மானத்தை இழந்த மனிதர்கள். உயர்ந்த கோபுரங்கள். தாழ்ந்த உள்ளங்கள்' என்று பராசக்தி படத்திலே வருகின்ற வசனத்தில் நெருப்பு பள்ளி கொண்டிருந்தது. அரசாங்கத்தை அச்சம் துரத்தியது. பராசக்திக்கு தடை போடலாமா? என்று யோசித்தார்கள். படத்தைக் கண்டே அரசாங்கம் பயந்தது. கலைஞரின் அனலும் கனலும் கக்கும் வசனத்தைக் கண்டு தான் பயந்தது. காடுகளையும் மலைகளையும் தாண்டி நதி ஒன்று நடைபோடுவது. போன்று தடையைத் தாண்டி பராசக்தி திரையரங்குகளில் ஓடியது.

விழித்துக்கொண்டது தமிழகம். விழி பிதுங்கியது ஆதிக்கம். பராசக்தி படம் சிவாஜி கணேசன் என்ற கலைக் கருவூலத்தைத் தமிழ்நாட்டிற்குத் தந்தது. மந்திரிகுமாரி, மன்னாதி மன்னன் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரைத் தந்தது.அழிந்து போன தமிழர்களின் அடையாளத்தை மீட்டெடுக்கும் இமாலயப் பணிக்கு முயற்சிகளை விரித்தால் ஆயிரம் பக்கங்கள் எழுதவேண்டும். வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறும் நல்லுலகம் என்று ஒல்காப் பெரும்புகழ் தொல்காப்பியன் சொல்லிவைத்தான். மொழிவாரி மாநிலங்கள் அடையும்முன்பே வடவேங்கடத்தை இழந்துவிட்டோம். கன்னியாகுமரியையும் கபளீகரம் செய்ய இந்து- இந்தி- இந்தியா என்ற பெயரால் நிறுவ நினைத்தவர்கள் விவேகானந்தரைப் பயன்படுத்திக் கொண்டார்கள்.

விவேகானந்தா கேந்திரம் ஒன்றை நிறுவி கன்னியாகுமரி கடலுக்கு மத்தியில் இருக்கிற கற்பாறையில் விவேகானந்தர் தவம் செய்த இடம் என்று சொல்லி, கடலுக்கு நடுவில் கற்பாறையில் விவேகானந்தர் பெயரால் மண்டபம் எழுப்பிவிட்டார்கள். மண்டபத்திற்குப் போவதற்கு படகுப் போக்குவரத்தையும் தொடங்கிவிட்டார்கள். நீலக்கடல் ஓரத்தில் குமரி எல்லையை அவர்கள் எல்லை என்று காட்டுகிற முயற்சியில் இனப்பகைவர்கள் வெற்றி பெற்றார்கள் என்றுதான் சொல்லவேண்டும். இதை வெல்லவேண்டும் என்று சிந்தித்தவர் மட்டுமல்ல அதில் வெற்றி பெற்றதுதான் கலைஞரின் வாழ்நாள் சாதனை.

அவர்கள் விவேகானந்தரைப் பயன்படுத்திக் கொண்டார்கள். கலைஞரோ நம் ஊனில், உயிரில், உணர்வில் நிறைந்திருக்கிற வான்புகழ் வள்ளுவனை அதற்குப் பயன்படுத்திக் கொண்டார். டெல்லியில் இருந்து இந்தியாவைப் பார்க்கவேண்டும் என்பதை வேலைத் திட்டமாகக் கொண்டவர்களுக்கு இனி கன்னியாகுமரியில் இருந்துதான் இந்தியாவைப் பார்க்கவேண்டும் என்பதைப் புரிய வைக்க கடலின் நடுவில் 133 அடி உயரமான சிலையை நிறுவினார். மண் செழிக்க மழை பொழிவது போல் மனித மனம் செழிக்க, ’பிறப்பொக்கும் எல்லாஉயிருக்கும் என்றதிருக்குறளைத் தமிழகத்தின் அரசியல் குறியீடாக்கியது தலைவர் கலைஞரின் வாழ்நாள் சாதனை.

தமிழ் தகத்தகாயமென ஒளிர வேண்டும் என்பதில் அண்ணாவுக்கு இருந்த ஈடுபாடு கலைஞருக்கும் இருந்தது. தனித்தமிழ் இயக்கம் பிறந்த காலத்தில் பிறந்தவர் என்பதாலோ என்னவோ தனித்து இயங்கும் வல்லமை உள்ள தமிழ் மொழியை பார்க்கும் இடம் எல்லாம் பளிச்சிடச் செய்தார். அக்கிராசனாரை அவைத்தலைவர் என்றும் காரியதரிசியை செயலாளர் என்றும் பொக்கிஷதாரரை பொருளாளர் என்றும் விவாக சுபமுகூர்த்தப் பத்திரிகையைத் திருமண அழைப்பிதழ் என்றும் சபாநாயகரை பேரவைத் தலைவர் என்றும் மந்திரியை அமைச்சர் என்றும் அழகு தமிழில் அண்ணா மாற்றினார். தம்பி கலைஞரோ அடையாறு பசுமை வழிச்சாலையில் அமைச்சர்கள் தங்குகிற இல்லங்களின் பெயர்களில் தமிழ் இல்லை. ஹோலிங்ஹாம் இல்லத்தைத் தாமரை என்றும் ரிவர்சைட் இல்லத்தை பொன்னி என்றும், கிரீன்வேஸ் இல்லத்தை அன்பு என்றும், கிரான்ஸி இல்லத்தை மல்லிகை என்றும், கங்லையர் மோகனாவை பூம் பொழில் என்றும் பிரிட்ஜ் ஹவுû சுடர் என்றும், கிராண்டேர் இல்லத்தை காஞ்சி என்றும் ஷெர்வெல் இல்லத்தை குறிஞ்சி என்றும் விஜய விஹார் இல்லத்தை பொதிகை என்றும் அடையாறு ஹவுû மருதம் என்றும் மாற்றிய கலைஞரின் தமிழ்க் காதலை தாய்த் தமிழகம் எப்போதும் நினைவில் வைத்திருக்கும்.

மகளிருக்கு உரிய மதிப்பு தரப்படுவதில்லை. கணவனை இழந்த பெண்கள் படும் துயரம் சொல்லும் தரமன்று. விதவை என்று அழைக்கிறார்கள். பொட்டு வைக்கக்கூட அனுமதி இல்லை. என்று ஒரு நிகழ்வில் ஒருவர் பேசினார். கலைஞர் உடனே எழுந்து விதவைக்கும் பதில் கைம்பெண் என்று எழுதுங்கள். இரண்டு பொட்டு வைக்கலாம் என்றார். அப்போது அங்கே கை தட்டும் ஓசை கடலோசை போல் கேட்டது.ஈரோட்டுக் குருகுலத்தில் கல்வி கற்றவர் கலைஞர்.""பாராட்டிப் போற்றி வந்த பழமை லோகம்.ஈரோட்டுப் பூகம்பத்தால் இடியுது பார்' என்று கலைஞர் எழுதிய கவிதையை, பெரியார் தொண்டர்கள் அன்றும் இன்றும் மனனம் செய்து வைத்திருந்தார்கள். தந்தை பெரியாரிடம் கற்றுக்கொண்ட துணிவு, இடரும் இன்னலும் அவரைச் சேருகிற பொழுதெல்லாம் அவருக்குக் கை கொடுத்தது. கை விலங்குகளை மாலைகளாக மாற்றிய மாயக்காரர் கலைஞர். கைவிலங்கு இடப்பட்ட போதெல்லாம் உடைந்து போய் உட்காரமாட்டார். அதை உரமாகவும் வரமாகவும் ஏற்றுக்கொண்டு எழுச்சி பெறுவார். 1953-ல் கல்லக்குடி போராட்டத்தில் தண்டவாளத்தில் தலைவைத்துப் படுத்துக் கைதானார். அன்றிருந்த அரசு அவரை 6 மாதம் சிறை வைத்தது.

அப்போதுதான் தி.மு.கவின் கவனத்திற்குரிய தலைவரானார் கலைஞர். ஆதிக்க இந்தியை எதிர்க்கும் போரில் 1965-ல் கைது செய்து பாளைச் சிறையில் அதுவும் தனிமைச் சிறையில் தவிக்க தவிக்க அடைத்து வைத்தார்கள். என் தம்பி சிறை வைக்கப்பட்டிருக்கும் இந்த இடம் தமிழர்கள் யாத்திரை மேற்கொள்ளவேண்டிய புனிதமான திருத்தலம் என்றார் அண்ணா. அண்ணாவின் பாராட்டில் இன்னும் உயரமானார். அகவை முதிர்ந்த 78ஆவது வயதில் 2001 ஜூன் 30ல் நடுநிசியில் நந்தவனத்திற்குள் நாய் நுழைந்தது மாதிரி, கரும்புக் கொல்லைக்குள் காட்டெருமை புகுந்தது மாதிரி, கலைஞர் ஓய்வெடுக்கும் அறைக்குள் அத்துமீறி நுழைந்து ஜெயலலிதாவின் காவல்துறை கலைஞரை இழுத்துச் சென்ற காட்சியைப் பார்த்து, நாடே நடுங்கியது.

துன்பத்தின் மடியில் இருந்த அந்த கவலைப் பொழுதில் ஒரு தாளை நீட்டி, கைது குறித்து எதையாவது எழுதுங்கள் என்றார். அவர் ஒரு பத்திரிகையாளர் என்பதைப் புரிந்து கொண்ட கலைஞர் சிரித்தவாறே ""அநீதி வீழும்; அறம் வெல்லும் என்று எழுதிக் கையெழுத்திட்டார். இந்தத் துணிவு கலைஞரைத் தவிர இன்னொருவருக்கு வராது.ஒருவரைப் பாராட்டுவதில் கூட கஞ்சத்தனம் காட்டும் தந்தை பெரியார், கலைஞரைப் பற்றி எழுதுகிறார். ""அண்ணா அவர் களுக்குப் பிறகு தமிழ்நாட்டைத் திறம்பட ஆண்டுவரும் கருணாநிதி உழைப்பால் உயர்ந்தவர். தொண்டால் வளர்ந்தவர்.

பிற்படுத்தப்பட்ட வகுப்பில் தோன்றி சமுதாய மேம்பாட்டுக் காக பாடுபட்டு, பல தியாகங்களைச் செய்து முன்னேறியவர். இன்று தமிழகத்தை முன்னேற்றி வருபவர். அண்ணாவின் மறைவுக்குப் பின் நமக்கும் கிடைத்த மாபெரும் சொத்தாகவே கலைஞரைக் கருதுகிறேன். அண்ணாவின் மறைவிற்குப் பின் ரேடியோவில் அண்ணாவைப் பற்றி அவர் பாடிய கவிதையைக் கேட்ட பொழுதுதான் அவர் எவ்வளவு பெரிய புலவராக வளர்ந்திருக்கிறார் என்று என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. உடனே டெலிபோனில் கூப்பிட்டு ""ஐயா நீங்கள் இவ்வளவு பெரிய புலவர் என்பதை இப்பொழுது தான் தெரிந்து கொண்டேன்' என்று பாராட்டினேன். இவ்வளவு நெருங்கிப் பழகிய என்னாலேயே அவருடைய திறமைகளை எல்லாம் உணர்ந்து கொள்ள முடியவில்லை. அப்படி எந்தத் துறையிலும் பிரகாசமாக விளங்குகிறார் கலைஞர் கருணாநிதி.

கலைஞர் கருணாநிதி எந்தெந்த வகையில் எதிர்ப்புகள் வந்தாலும் அவைகளைச் சமாளித்து தி.மு..வின் தொண்ட ராகப் பணியாற்றும் கழகத் தலைவர் இவரைப் போலக் கட்சிக்கு பணியாற்றும் ஆள் கிடைப்பது அபூர்வம்' என்று கலைஞரைப் பாராட்டுகிறார் பெரியார். யாரையும் பாராட்டுவதில் உடன்பாடில்லாத தந்தை பெரியார், கலைஞரை இந்த அளவுக்குப் பாராட்டுகிறார் என்றால், கலைஞரை அவரின் பரிமாணத்தை இனி யாரால் சொல்ல முடியும்.அழுத்தப்பட்ட சமூகத்தில் பிறந்து தனது அறிவால், ஆற்றலால் அயராத உழைப்பினால், அணுகு முறையினால், இடும்பைக்கு இடும்பை கொடுத்த சால்பால், அசாதாரணமான துணிவால், அனைவரையும் அரவணைத்துச் சென்ற தோழமையால், ஆட்கொண்ட இயக்கத்தின் மீதும் தலைவர் மீதும் வைத்திருந்த பற்றால், பாசத்தால் தன்னை நிலை நிறுத்திக்கொண்ட கலைஞரின் சாதுர்யமும் சாணக்கியமும் வரலாற்றில் அபூர்வமாகக் கருதப்படும்.

உடன்பிறப்பே! என விழித்து கழகத்தவர்களுக்கு எழுதிய கடிதம் ஒரு வரலாற்று ஆவணம். 21 தொகுப்புகளாக வந்திருக்கும் தம்பிக்கு அண்ணா எழுதிய மடல்கள் ஒரு வரலாற்றுப் பேழை. 1928 கால கட்டத்தில் சிறையிலிருந்த பண்டித நேரு தனது பத்து வயது பாச மகள் இந்திரா பிரியதர்சினிக்கு எழுதிய கடிதங்கள், இன்று உலகச் சரித்திரமாக கருதப்படுகிறது. மூவாத் தமிழறிஞர் டாக்டர் மு.. தம்பிக்கு, தங்கைக்கு என்று எழுதிய கடிதங்களும், இலக்கிய வீதியில் இன்றும் உலா வருகின்றன.

மாசற்ற தன் மனைவியின் மறைவிற்குப் பிறகு வே.சாமிநாத சர்மா பிரிவாற்றா மையில் எழுதிய கடிதங்களைப் படித்தால் கண்கள் கலங்கும். கவலை நம்மைக் கவ்வும். 1968ல் அக்டோபர்த் திங்கள் 22ல் ஒரு திருமணச் செய்தியோடு உடன் பிறப்பே என விழித்து முரசொலியில் எழுதத் தொடங்கிய கலைஞர், நினைவு தடுமாறுகிற வரை எழுதினார். நூறாண்டு கண்ட திராவிட இயக்கத் தோழர்களைக் கடிதத்தால் ஆற்றுப் படுத்தினார். கடிதம்மூலம் தொண்டர்களை அறிவுறுத்தினார். ஆயிரம் பிறைகண்ட இயக்கத்தை தான் எழுதிய கடிதத்தின் மூலம் இயக்கினார்.

அரை நூற்றாண்டு கால காலக் கருவூலமாக அந்தக் கடிதங்கள் பதிவாகி இருக்கின்றன. கலைஞருக்கும் களமாடும் தொண்டர்களுக்கும் உறவுப் பாலமாக கலைஞரின் கடிங்களே இருந்தன. அரசு ஆணைகூட நடைமுறைக்கு வர நான்கு நாட்கள் தேவைப்படும். கடிதம் மூலம் உடன்பிறப்புகளுக்கு அவர் போடும் உத்தரவு உடனே நடைமுறைக்கு வரும். அதனால் கலைஞரை ""தனக்குவமை இல்லாத தலைவர்' என்று கொண்டாடுகிறோம்.

சனாதனக் கிடங்கில் வைதீகப் பள்ளத்தாக்கில் தமிழர்களைத் தள்ள எத்தனிக்கும் சங்பரீவார் சக்திகளை மோதி மிதிக்க, இன்னும் கலைஞர் நமக்கு தேவைப்படுகிறார். திராவிட இயக்கக் கோட்டையில் இன எதிரிகளை எதிர்கொள்ள கலைஞரை ஆயுதமாக ஏந்துவோம். நூற்றாண்டு நிறைவுவிழா காணும் கலைஞரின் காவியப் புகழ் காரும் கடலும்

இருக்கும் வரை நிலைத்திருக்கும். கலைஞர் புகழ்வாழ்க!

-நாவுக்கரசர் நாஞ்சில் சம்பத்

Iniya Udhaiyam 01.06.2024
இதையும் படியுங்கள்
Subscribe