Advertisment

காதலிலும் தத்துவத்திலும் நனைந்த கவிதைகள்!-ஆருர் தமிழ்நாடன்

/idhalgal/eniya-utayam/kaatalailauma-tatatauvatatailauma-nanaainata-kavaitaaikala-araura

விதைகளுக்கிடையே ஒரு கவிதையாய் என் இதயம் கண்டுபிடித்த ஒரு ரசனையான கவிதைக்குப் பெயர் பிருந்தாசாரதி.

Advertisment

வாழ்வின் கணக்குகளால் கூட்டிக் கழிக்க முடியாத ஒரு கந்தர்வக் கணக்கு அவர். கற்பனைகளும் சிந்தனைகளும் தங்களைத் தாங்களே கூட்டிக்கொண்டும் கழித்துக்கொண்டும் வகுத்துக்கொண்டும் அவராய் மாறிவிட்டன. எனவேதான் அவர், இலக்கியத்தின் வரவுக் கணக்கில் லாபக் கணக்காகவே திகழ்கிறார். இவர், கணக்குகளுக்கு அப்பாற்பட்ட கணக்கென்றாலும் இவரிடம் எண்கள் எல்லாம் வரிசையில் நின்று எண்ணங்களாய் மொழிபெயர்த்துக் கொண்ட அழகை "எண்ணும் எழுத்தும்' தொகுப்பில் பார்க்க முடிகிறது.

Advertisment

எண்ணங்கள் எனில் வெற்றான எண்ணங்கள் அல்ல. காதலிலிலும் தத்துவத்திலும் முழுதாய் நனைந்த ஈர எண்ணங்கள். அதனால்தான், இந்த நூலுக்கு அணிந்துரை வழங்கிய கவிக்கோ அப்துல்ரகுமான், இவரை குழலூதும் கண்ணனாகவும் இவரைச் சுற்றி வந்து ஆடும் எண்களை கோபியராகவும் கண்முன் நிறுத்தி ரசித்திருக்கிறார்.

பிருந்தா கையில் எடுக்கும் ஒவ்வொரு எண்ணிலும் எண்ணற்ற எண்கள் பிறக்கின

விதைகளுக்கிடையே ஒரு கவிதையாய் என் இதயம் கண்டுபிடித்த ஒரு ரசனையான கவிதைக்குப் பெயர் பிருந்தாசாரதி.

Advertisment

வாழ்வின் கணக்குகளால் கூட்டிக் கழிக்க முடியாத ஒரு கந்தர்வக் கணக்கு அவர். கற்பனைகளும் சிந்தனைகளும் தங்களைத் தாங்களே கூட்டிக்கொண்டும் கழித்துக்கொண்டும் வகுத்துக்கொண்டும் அவராய் மாறிவிட்டன. எனவேதான் அவர், இலக்கியத்தின் வரவுக் கணக்கில் லாபக் கணக்காகவே திகழ்கிறார். இவர், கணக்குகளுக்கு அப்பாற்பட்ட கணக்கென்றாலும் இவரிடம் எண்கள் எல்லாம் வரிசையில் நின்று எண்ணங்களாய் மொழிபெயர்த்துக் கொண்ட அழகை "எண்ணும் எழுத்தும்' தொகுப்பில் பார்க்க முடிகிறது.

Advertisment

எண்ணங்கள் எனில் வெற்றான எண்ணங்கள் அல்ல. காதலிலிலும் தத்துவத்திலும் முழுதாய் நனைந்த ஈர எண்ணங்கள். அதனால்தான், இந்த நூலுக்கு அணிந்துரை வழங்கிய கவிக்கோ அப்துல்ரகுமான், இவரை குழலூதும் கண்ணனாகவும் இவரைச் சுற்றி வந்து ஆடும் எண்களை கோபியராகவும் கண்முன் நிறுத்தி ரசித்திருக்கிறார்.

பிருந்தா கையில் எடுக்கும் ஒவ்வொரு எண்ணிலும் எண்ணற்ற எண்கள் பிறக்கின்றன. இவரது எண்வெளி, விண்வெளியாய் விரிந்துகொண்டே போகிறது.

ஒன்றில்தான் இருக்கிறது

இன்னொன்றின் உயிர்-

என்கிறார் பிருந்தா. இதில் ஒன்றுக்குள் ஒன்றெனும் புதுக்கணக்கும் மறைந்திருக்கிறது. இந்தக் கணக்கில், காதல் கண் சிமிட்டுவதையும் உயிரியல் கோட்பாடு புன்னகை புரிவதையும், தத்துவம் தவம்மேற்கொள்வதையும் தரிசிக்க முடிகிறது.

சொற்கோப்பைகளுக்குள் இவர் நிரப்பித் தரும் மது, அந்த கோப்பைகளைத் தாண்டியும் பொங்கி வழிவதை உணரமுடிகிறது.

’இணைபிரியா / இரட்டைப் பறவைகளல்ல;/

ஒரே பறவையின்/ இரண்டு இறக்கைகள் நாம்./

என்ற வரிகள் மெல்ல மெல்ல நம் மனவானில் அசையும்போது, காதலிலின் அழகும் தத்துவ நறுமணமும் நம்முள் நிரம்புகிறது.

காதலர்கள் இல்லை என்றால் காதல் எங்ஙனம் சிறகசைக்கும்? இரவு பகல், இன்பம் துன்பம், ஓசை மௌனம் என எல்லாவற்றிற்குமே சிறகுகள் இரண்டாகத்தான் இருக்கிறது.

book

முத்தொழில்’ என்பது இயற்கை அரங்கேற்றும் பிரபஞ்ச நாடகம். இதற்கு கவிதை என்னும் பெயரில் நம் பிருந்தா,

பிறப்பு இருப்பு இறப்பு/ அதன் பாடல் வரிகள்/

நேற்று இன்று நாளை/ அதன் தாள ஒலிலிகள்/

என அதற்கு வசனம் எழுதுகிறார்.

வாழ்வின் பாடலுக்கு காலத்தின் தாளம் என்பது, எவ்வளவு பொருத்தமானது. தாளம் தப்பாத தெளிவான பாடலாக இருப்பதற்கு எவ்வளவு போராட வேண்டியிருக்கிறது.

வாழ்வைப் பற்றி யோசிக்கும் பிருந்தா, உலகமும் உயிர்களும் எப்படித் தோன்றின என்கிற கேள்வியோடு, கற்பனைப் புரவி ஏறுகிறார்.

நிலம், தீ, நீர், வளி, விசும்போடு ஐந்தும்

கலந்த மயக்கம் உலகம்’ -என்கிற தொல் காப்பிய வெளிதாண்டி விரைகிறார். அங்கே, இந்த ஐம்பூதங்களும் தங்களுக்குள் இருப்பது நட்பா? பகையா? என ஒன்றோடொன்று விவாதிக்கின்றன. பிறகு? ‘இந்த உரையாடலைக் / கேட்டுக் கொண்டிருந்த /இயற்கை அன்னை / உடனே அனைத்தையும் / ஒன்றோடொன்று இசைந்திடச் செய்தாள்/ உயிர்கள் பிறந்தன நிலத்தில்/பூதங்கள் ஐந்தும் குடிகொண்டன/ அவற்றின் உடல்களில்/-என்கிறார் பிருந்தா.

முரண்பட்டிருந்த ஐம்பூதங்களையும் சமாதானப்படுத்தி இயற்கையன்னை ஒன்றுசேர்த்ததால் உயிர்கள் பிறந்தன என்று... பிரபஞ்சப் புதிரின் பெருங் கதவைத் தித்திப்பாய்த் திறக்கிறார். சொற்கள் விஞ்ஞானப் புன்னகை புரிகின்றன.

அறிவு, உயர்ந்தது. அதுதான் மனிதனை விலங்கிலிலிருந்து உயர்த்துகிறது. என்றெல்லாம் ஆராதிக்கிறது உலகம். ஆனால், துயரங்களுக்கும் அறிவுதான் வாசலாக இருக்கிறது. அறிவுதான் சூதுவதைச் சொல்லிலிக் கொடுத்துக் கவிழ்க்கிறது. ஆசைகளை ஒளியிலும் இருளிலும் வழி நடத்துகிறது. அதுதான் வாழ்வின் நிலையாமையைச் சிந்திக்க வைத்து, அடுத்த கணத்தின் மீது கவலை வளர்க்கிறது. தூக்கத்தை இழப்பதற்கும், அடுத்தவர் தூக்கத்தையும் வழிப்பறி செய்வதற்கும் அறிவே காரணமாகிறது. அதுவே காயத்தையும் மருந்தையும் தருகிறது. அதனால்தான் அறிவே, உன் மருந்தும் வேண்டாம் எனக்குக் காயமும் வேண்டாம் என்று சொல்லத் தோன்றுகிறது.

இத்தகைய அறிவின் அபாயம் குறித்து, பிருந்தாவும் கவலைப்படுகிறார். அதனால்தான்...

அறிவை மறந்தால்தான்/ தூக்கம் கூட வரும்/

எப்போதும்/ விழித்திருப்பது துக்கம்./

என்கிறார்.

விழித்திருப்பது துக்கம். உறக்கம் வராமல் விழித்திருப்பது மட்டுமல்ல; நாம் உள்ளுணர்வு களால் விழித்திருப்பதும் துக்கம்தான் என்கிறார்.

இந்தத் தொகுப்பின் அத்தனை கவிதைகளோடும் பேசிப் பார்த்து மகிழ்ந்திருக்கிறேன். பல கவிதைகள் பேசாப் பொருளை பேசுவனவாய் இருக்கின்றன.

அவரது ஒவ்வொரு கவிதையிலும் அவர் சொல்வதைத் தாண்டியும் ஏதேதோ இருக்கிறது. பிருந்தாவின் வரிகளிலேயே சொல்வதானால்.. இவை எல்லா வற்றிலும்...

ஏதோ ஒன்று/ இருக்கவே செய்கிறது/

பற்றி இருக்கவும்/

பார்த்து ரசிக்கவும்/ பாராதது போல் / நடித்து ஒதுங்கவும்./

இதில் பாராததுபோல் நடித்து ஒதுங்கவேண்டிய வரிகளும் உண்டா? உண்டு.

நம் அறிவின் எல்லைக்கு அப்பாற்பட்ட எண்ணங்களைத் தூண்டும் வரிகளை என்ன செய்வது? பாராததுபோல் நகர்ந்துவிடுவது மூளைக்குத் தொல்லை இல்லாத வழி.

அப்படியொரு கவிதை வரி இது.

எதை எதையோ/ உருவாக்கி /அடைக்கிறாய் வெற்றிடத்தை/

முடியுமா உன்னால்/ சிறிதளவு வெற்றிடத்தை உருவாக்க?/’

இப்படி இந்தத் தொகுப்பெங்கும் ஆழ்ந்த வரிகளால், ஆச்சரியங்களில் ஆழ்த்துகிறார் பிருந்தாசாரதி.

தமிழ் இலக்கிய வெளியில் ஒரு ஜீவநதியாய் பிரவாகமெடுத்து ஓடிக்கொண்டிருக்கிறார் பிருந்தா. நான் அவரது கரைகளில் நின்று அவரை ரசித்துக்கொண்டிருக்கிறேன். கொஞ்சமும் ஆசை தீராதவனாய்.

Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe