ஜயஸ்ரீயின் ஆசை - மாதவிக்குட்டி தமிழில் : சுரா

/idhalgal/eniya-utayam/jayashrees-desire-madavikutty-tamil-sura

திருமணமாகாதவரும் நடுத்தர வயதில் உள்ளவருமான பாஸ்கரமேனன் பல் துலக்குவதற்காக பழுத்த மாவிலையைப் பொறுக்கிக்கொண்டிருந்தார்.

வேலியின் மறுபக்கத்திலிருந்து ஒரு கொலுசின் சத்தம்... ஜயஸ்ரீதான்... காண்ட்ராக்டர் பிள்ளையின் ஒரே மகள். முகத்தில் தூக்கமில்லாததால் உண்டான சோர்வு...

"தேர்வு நல்லா எழுதியிருக்கியா?''- பாஸ்கர மேனன் கேட்டார்.

"ஒரு மாதிரி...'' இளம்பெண் கூறினாள்.

"க்ளாஸ் கிடைக்கும்ல?''

"கிடைக்கலாம்.''

"உனக்கு என்னவா ஆகணும்னு ஆசை? டாக்டரா? எஞ்ஜீனியரா? இல்லா விட்டால்...

ss

ஐ.ஏ.எஸ்.காரியா ஆகணும்னா?'' பாஸ்கர மேனன் கேட்டார். ஜயஸ்ரீ பதில் கூறவில்லை. தன்னுடைய ஆசையை வெளிப்படுத்தினால், பாஸ்கரமேனன் தன்னை எங்கே கிண்டல் பண்ணுவாரோ என அவள் பயந்தாள். "படிப்பை நிறுத்திவிட்டு, ஒரு குடும்பப் பெண்ணாக விரும்புகிறேன்'' என ஒரு பணக்காரரின் மகளால் வெளிப்படையாகக் கூறமுடியுமா? பெண் சமத்துவம் பேசுபவர் கள் அவளைப் பிய்த்தெறிந்துவிட மாட்டார் களா?

‌"ஐ.ஏ.எஸ்.காரியாக இருந்தால், எங்கள் அனைவருக்கும் உதவியாக இருக்கும். பிறகு.... கலெக்டராக இந்த பகுதியில் வாழ்வது... ஹ...ஹ...ஹ...'' பாஸ்கர மேனன் பலமாக சிரித்தவாறு கூறினார்.

"பாஸ்கரன் மாமா... நீங்க பல் தேய்ப்பதற்கு

திருமணமாகாதவரும் நடுத்தர வயதில் உள்ளவருமான பாஸ்கரமேனன் பல் துலக்குவதற்காக பழுத்த மாவிலையைப் பொறுக்கிக்கொண்டிருந்தார்.

வேலியின் மறுபக்கத்திலிருந்து ஒரு கொலுசின் சத்தம்... ஜயஸ்ரீதான்... காண்ட்ராக்டர் பிள்ளையின் ஒரே மகள். முகத்தில் தூக்கமில்லாததால் உண்டான சோர்வு...

"தேர்வு நல்லா எழுதியிருக்கியா?''- பாஸ்கர மேனன் கேட்டார்.

"ஒரு மாதிரி...'' இளம்பெண் கூறினாள்.

"க்ளாஸ் கிடைக்கும்ல?''

"கிடைக்கலாம்.''

"உனக்கு என்னவா ஆகணும்னு ஆசை? டாக்டரா? எஞ்ஜீனியரா? இல்லா விட்டால்...

ss

ஐ.ஏ.எஸ்.காரியா ஆகணும்னா?'' பாஸ்கர மேனன் கேட்டார். ஜயஸ்ரீ பதில் கூறவில்லை. தன்னுடைய ஆசையை வெளிப்படுத்தினால், பாஸ்கரமேனன் தன்னை எங்கே கிண்டல் பண்ணுவாரோ என அவள் பயந்தாள். "படிப்பை நிறுத்திவிட்டு, ஒரு குடும்பப் பெண்ணாக விரும்புகிறேன்'' என ஒரு பணக்காரரின் மகளால் வெளிப்படையாகக் கூறமுடியுமா? பெண் சமத்துவம் பேசுபவர் கள் அவளைப் பிய்த்தெறிந்துவிட மாட்டார் களா?

‌"ஐ.ஏ.எஸ்.காரியாக இருந்தால், எங்கள் அனைவருக்கும் உதவியாக இருக்கும். பிறகு.... கலெக்டராக இந்த பகுதியில் வாழ்வது... ஹ...ஹ...ஹ...'' பாஸ்கர மேனன் பலமாக சிரித்தவாறு கூறினார்.

"பாஸ்கரன் மாமா... நீங்க பல் தேய்ப்பதற்கு பற்பசை பயன்படுத்துவது இல்லையா? மாவிலையைக்கொண்டு தேய்த்தால், பல் வெளுக்குமா?''

அவர் ஒரு மாவிலையைக் கையில் நசுக்கி, அதைக்கொண்டு பற்களைத் துலக்க ஆரம்பித்தார்.

"அதைப் பார்த்துக்கொள்... டூத் பேஸ்ட்டை வைத்து தேய்ப்பவர்களின் பற்களின் வெளுப்பைவிட என் பற்கள் அதிக வெளுப்புடன் இருக்கும்.'' பாஸ்கரமேனன் கூறினார்.

"நான் போகட்டுமா? கோவிலுக்குப்போய் அர்ச்சகரிடம் ஒரு கயிறை வாங்கணும். பூஜை செய்து வைப்பதாக நேற்று சொன்னார்.'' ஜயஸ்ரீ கூறினாள்.

"அங்கேயே நில்லு... எதற்கு பூஜை செய்து, கயிறைக் கட்டணும்?'' பாஸ்கரமேனன் கேட்டார். அவள் பதில் கூறவில்லை.

பின்னால் திரும்பி, ஒரு புன்சிரிப்பைப் பரிசாக அளித்துவிட்டு, வேகமாக நடந்து சென்றாள்.

அமெரிக்காவில் பணி செய்யும் ஒரு எஞ்ஜீனியர் தன்னைப் பார்ப்பதற்காக வரப்போவதாக தன் தந்தை தன் தாயிடம் கூறுவதை அவள் கேட்டாள். அதைக் கேட்டதிலிருந்து ஆரம்பமானதுதான் நெஞ்செரிச்சல்...

பயம்... பதைபதைப்பு.. அவனுக்கு அவளைப் பிடித்துவிட்டால், இந்த மாதத்திலேயே திருமணம் நடந்துவிடும். தெளிவான உச்சரிப்பற்ற ஆங்கிலத்துடன் அவள் வெளிநாட்டிற்கு எஞ்ஜீனியருடன் சேர்ந்து செல்லவேண்டிய நிலை உண்டாகும். பிறகு...

அந்த நவநாகரீக மனிதன் அவளுடைய கிராமத்து பழக்க வழக்கங்களைப் பலமாக விமர்சிப்பான்.

வாழ்க்கை நரகத்திற்கு நிகராக ஆகும்.

அமெரிக்காவிற்குச் சென்று மேற்படிப்பு படித்தே ஆகவேண்டுமென அவன் பிடிவாதமாகக் கூறலாம். ஜயஸ்ரீ பயந்துவிட்டாள்.

அழுவதற்குக்கூட அவளுக்கு தைரியம் வரவில்லை.

அவளுடைய எதிர்ப்பைக்கேட்டு, தாய் கவலைப் பட்டாள்.

"இந்த அளவிற்கு நல்ல ஒரு இளைஞன் இங்குவந்து பெண் கேட்கும்போது, எப்படி வேண்டாம் என்று கூறமுடியும்? அவனுடைய அப்பா கேட்பதே, வெறும் பத்து லட்சம்தான். இருநூறு பவுன் தங்க நகைகளும்... இந்த காலத்தில் கல்லூரியில் பாடம் கற்றுத்தரும் ஆசிரியர்கள்கூட அந்த அளவிற்கு வரதட்சணை கேட்கிறார்கள்.'' தாய்க்கு அழுகையும் சிரிப்பும் சேர்ந்தே வந்தன.

"முட்டாள் பெண்ணே... நல்ல காலம் வர்றப்போ, உட்கார்ந்து அழக்கூடாது. பிறகு... இந்த ஊர்ல எந்த இளம்பெண்ணுக்கு இந்த அளவிற்கு அதிர்ஷ்டம் அடிக்கும்? பார்ப்பதற்கும் நல்லவனா இருக்கான். நீ அந்த வண்ண புகைப்படத்தைப் பார்த்தேல்ல? சுரேஷ் கோபியின் சாயல்ல இருப்பதைப்போல தோணுச்சு. உனக்கு நல்ல... பொருத்தமானவனா இருப்பான்.'' தாய் கூறினாள்.

"எனக்கு மேற்படிப்பு வேண்டாம்.'' ஜயஸ்ரீ கூறினாள்.

"வேண்டாமென்றால், வேண்டாம். வேண்டாம்னு அந்த ஆளுக்கிட்ட வெளிப்படையா சொல்லு. கட்டாயப்படுத்த மாட்டான்.''

‌"நான் அமெரிக்காவிற்குப் போகல...''

"அமெரிக்காவுக்குப் போனால் என்ன? அங்கு உன்னை யாராவது பிடிச்சுத் தின்னுருவாங்களா? அமெரிக்காவில் வசிக்கிறதுக்குக் கொடுத்து வச்சிருக்கணும்.''

எஞ்ஜீனியர் தன் சகோதரனின் டாட்டா எஸ்டேட் காரில் வந்தான்.

புகைப்படத்தில் பார்த்த அழகான இளைஞன்...

அர்ச்சகர் தந்த கயிறை ஜயஸ்ரீ தன் கழுத்தில் கட்டி, வெண்மை நிற பருத்தி புடவையை அணிந்து முன்னறையில் நின்றாள்.

ஈர்க்கக்கூடிய பளிங்குச் சிலை... எஞ்ஜீனியர் புன்சிரிப்பைத் தவழவிட்டான்.

"இருபது நாட்களுக்குள் திருமணத்தை நடத்தணும். விடுமுறை இல்லை.'' அவன் கூறினான்.

"கூடவே ஜயஸ்ரீயைக் கொண்டுபோவீங்க.

இல்லியா?'' தந்தை கேட்டார்.

‌‌"ஆமாம். ஜயஸ்ரீயைக் கொண்டுபோவேன்.

அடுத்த வருடம் ஒரு மாத விடுமுறையில் வர்றோம்.'' இளைஞன் கூறினான்.

ஜயஸ்ரீயின் கண்கள் உயரவேயில்லை.

கன்னங்களில் சிவப்பு நிழலாடியது.

"என்னைப் பிடிச்சிருக்கா?'' இளைஞன் கேட்டான்.

ஜயஸ்ரீ அவனை ஏறெடுத்துப் பார்க்கவேயில்லை.

"இந்த அளவிற்கு வெட்கமா?''

"அவள் இந்த ஊரைவிட்டு எந்தச் சமயத்திலும் வெளியே போனதில்லை. அவளுக்கு சாமர்த்தியம் போதாது. அதெல்லாம் மாறிடும்.'' தந்தை கூறினார்.

"அதையெல்லாம் மாற்றிவிடலாம்.'' இளைஞன் அவளை உற்றுப் பார்த்துக்கொண்டே கூறினான். திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட பிறகு, தோழிகள் அவளைக் கிண்டல் பண்ண ஆரம்பித்தனர்.

உடலுறவு அறிவியலைத் தெரிந்துகொள்வதற்கு சில புத்தகங்களை வாசிக்கும்படி அவர்கள் அவளிடம் கூறினார்கள்.

"நூல் நிலையத்தில் இருக்கும்.'' அவர்கள் கூறினார் கள்.

"உன் புடவையை இந்த ஆளு அவிழ்த்து விடுவான். பிறகு.... பாவாடை, ரவிக்கை....'' ஒருத்தி கூறினாள்.

"அதற்கெல்லாம் நான் சம்மதிக்கமாட்டேன்.''

அவள் கூறினாள்:

"என்னைத் தொடுவதற்கு நான் ஒத்துக்கமாட்டேன்.''

"உன்னை ஷோ கேஸில் காட்சிப் பொருளாக வைத்தி ருப்பதற்கா அந்த ஆளு திருமணம் பண்ணிகொண்டு போறாரு?'' தோழிகள் கிண்டலாகக் கேட்டார்கள்.

"என் சரீரத்தை யாரும் தொடுவதை நான் விரும்பல.''

ஜயஸ்ரீ கூறினாள்.

"நீ என்ன செய்யணும்னு ஆசைப்படுறே? அம்மா வாக ஆகவேண்டாம். அப்படித்தானே? மனைவி யாகவும் ஆகவேண்டாம். வாழ்க்கையின் இறுதிவரை நீ என்ன செய்யணும்னு நினைக்கிறே? பணிசெய்து வாழ்வாயா?'' ‌‌"எனக்கு பணிவேண்டாம். நான் கட்டிலில் கிடந்து டி.வி.பார்ப்பேன்.''

"வாழ்க்கை முடிவதுவரை கட்டிலில் கிடந்து டி.வி.பார்ப்பாயா?''

‌"ம்... டி.வி. பார்ப்பேன்.'' ஜயஸ்ரீ கூறினாள்.

uday010424
இதையும் படியுங்கள்
Subscribe