"தவமறைந்து அல்லவை செய்தல் புதல்மறைந்து
வேட்டுவன் புள்சிமிழ்த் தற்று.'
-என்பது வள்ளுவரின் வாய்மொழி.
புதருக்குள் ஒளிந்துகொண்டு பறவைகளை வேட்டையாடுவதுபோல், துறவிகள் என்ற முகமூடிக்குள் சிலர் ஒளிந்துகொண்டு, மனிதர்களை வேட்டையாடலாம். அவர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்று, இந்தக் குறள் மூலம் வள்ளுவர் நம்மை எச்சரிக்கிறார்.
இந்தக் குறள் கபட வேடதாரியான ஈஷா மைய ஜக்கியை யும், அவரது கும்பலையும் சுட்டிக்காட்டுவதுபோல் அமைந்திருக்கிறது.
ஜக்கியை மகானாகவும், பெரிய மனிதனாகவும் கற்பனை செய்துகொண்டிருந்த பலருக்கும் நடுவே, அவரது ஆன்மீக முகமூடிகள் டார் டாராய்க் கிழிந்து தொங்குகிறது. அவரது யோக்கியதை அம்பலப்பட்டு வருவதைப் பார்த்து எல்லோரும், காறித் துப்பிக்கொண்டு இருக்கிறார்கள்.
ஜக்கியின் மனைவி?
அவரது அத்தனை அயோக்கியத்தனங்களை யும் வெளிக்கொண்டு வந்ததில் நம் நக்கீரனுக்குப் பெரும்பங்கு உண்டு. ஜக்கியின் மனைவி விஜி, 97 ஜனவரியில் மர்மமாக மரணமடைந்தபோது, யோகா மூலம் அவர் சமாதி அடைந்துவிட்டதாகக் கதைவிட்டார் ஜக்கி. அவரது மாமனார் கங்கண் ணாவோ, தன் மகளை ஜக்கி கொன்றுவிட்டார் என்று கதறித் துடித்தார். ஜக்கியின் இந்த க்ரைம் பற்றி அப்போதே நம் நக்கீரன் கேள்வி எழுப்பி அம்பலப்படுத்தியது.
அதேபோல், வெள்ளியங்கிரி அடிவாரத்தில் உள்ள தனது ஈஷா ஆசிரமத்தை விரிவாக்குவதாகச் சொல்-க் கொண்டு, அருகில் இருந்த மலைவாழ் மக்களின் பட்டா நிலங்களையும் வனப்பகுதிகளை யும், யானை வழித் தடங்களையும் ஜக்கி இஷ்டத் துக்கும் ஆக்கிரமித்தார். முறையான அனுமதிகள் இன்றி வனப்பகுதியில் கட்டிடங்களையும் மானா வாரியாகக் கட்டினார்.
இப்படிப்பட்ட ஜக்கியின் அத்துமீறல்களையும், ஈஷாவில் அவர் அரங்கேற்றிய மாபாதகங்களை யும் உடனுக்குடன் நக்கீரன் வெளிப்படுத்திக் கொண்டே இருந்தது. குறிப்பாக, யோகா கற்கும் ஆசையில் ஈஷாவுக்குச் செல்லும் இளம்பெண் களை வசியப்படுத்தி, மொட்டை யடித்து, அவர்களை ஜக்கி ஆட்டி வைப்பதையும்- ஈஷாவின் கொடுமைகளை எதிர்த்து நின்ற அதன் ஊழியர்களும், இளம் பெண்களும் மாயமாக்கப்படுவது குறித்தும் - ஈஷா மையத்திற்குள் ளேயே மின் தகனமேடையை அந்த வில்லாதி வில்லன் உருவாக்கியது குறித்தும்கூட, நக்கீரன் தொடர்ந்து ஆதாரத்துடன் பகிரங்கப்படுத்தியது.
ஈஷா பள்ளியின் வல்லுறவுக் கொடூரங்கள்
இந்த நிலையில், ஜக்கியின் ஈஷா மையத்தில் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் பா-யல்ரீதியான டார்ச்சர் கொடுக்கப்படுவது குறித்த தகவல்கள் வர, அதையும் நாம்தான் நக்கீரன் யூ டியூப் சேனல் மூலம் அண்மையில் அம்பலப்படுத்தினோம்.
இதன் பிறகே ஈஷாவால் பாதிக்கப்பட்டவர்களும் அவர்களது குடும்பத் தினரும் இப்போது தைரியமாக வாய் திறக்க ஆரம்பித்திருக்கிறார்கள்
"தவமறைந்து அல்லவை செய்தல் புதல்மறைந்து
வேட்டுவன் புள்சிமிழ்த் தற்று.'
-என்பது வள்ளுவரின் வாய்மொழி.
புதருக்குள் ஒளிந்துகொண்டு பறவைகளை வேட்டையாடுவதுபோல், துறவிகள் என்ற முகமூடிக்குள் சிலர் ஒளிந்துகொண்டு, மனிதர்களை வேட்டையாடலாம். அவர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்று, இந்தக் குறள் மூலம் வள்ளுவர் நம்மை எச்சரிக்கிறார்.
இந்தக் குறள் கபட வேடதாரியான ஈஷா மைய ஜக்கியை யும், அவரது கும்பலையும் சுட்டிக்காட்டுவதுபோல் அமைந்திருக்கிறது.
ஜக்கியை மகானாகவும், பெரிய மனிதனாகவும் கற்பனை செய்துகொண்டிருந்த பலருக்கும் நடுவே, அவரது ஆன்மீக முகமூடிகள் டார் டாராய்க் கிழிந்து தொங்குகிறது. அவரது யோக்கியதை அம்பலப்பட்டு வருவதைப் பார்த்து எல்லோரும், காறித் துப்பிக்கொண்டு இருக்கிறார்கள்.
ஜக்கியின் மனைவி?
அவரது அத்தனை அயோக்கியத்தனங்களை யும் வெளிக்கொண்டு வந்ததில் நம் நக்கீரனுக்குப் பெரும்பங்கு உண்டு. ஜக்கியின் மனைவி விஜி, 97 ஜனவரியில் மர்மமாக மரணமடைந்தபோது, யோகா மூலம் அவர் சமாதி அடைந்துவிட்டதாகக் கதைவிட்டார் ஜக்கி. அவரது மாமனார் கங்கண் ணாவோ, தன் மகளை ஜக்கி கொன்றுவிட்டார் என்று கதறித் துடித்தார். ஜக்கியின் இந்த க்ரைம் பற்றி அப்போதே நம் நக்கீரன் கேள்வி எழுப்பி அம்பலப்படுத்தியது.
அதேபோல், வெள்ளியங்கிரி அடிவாரத்தில் உள்ள தனது ஈஷா ஆசிரமத்தை விரிவாக்குவதாகச் சொல்-க் கொண்டு, அருகில் இருந்த மலைவாழ் மக்களின் பட்டா நிலங்களையும் வனப்பகுதிகளை யும், யானை வழித் தடங்களையும் ஜக்கி இஷ்டத் துக்கும் ஆக்கிரமித்தார். முறையான அனுமதிகள் இன்றி வனப்பகுதியில் கட்டிடங்களையும் மானா வாரியாகக் கட்டினார்.
இப்படிப்பட்ட ஜக்கியின் அத்துமீறல்களையும், ஈஷாவில் அவர் அரங்கேற்றிய மாபாதகங்களை யும் உடனுக்குடன் நக்கீரன் வெளிப்படுத்திக் கொண்டே இருந்தது. குறிப்பாக, யோகா கற்கும் ஆசையில் ஈஷாவுக்குச் செல்லும் இளம்பெண் களை வசியப்படுத்தி, மொட்டை யடித்து, அவர்களை ஜக்கி ஆட்டி வைப்பதையும்- ஈஷாவின் கொடுமைகளை எதிர்த்து நின்ற அதன் ஊழியர்களும், இளம் பெண்களும் மாயமாக்கப்படுவது குறித்தும் - ஈஷா மையத்திற்குள் ளேயே மின் தகனமேடையை அந்த வில்லாதி வில்லன் உருவாக்கியது குறித்தும்கூட, நக்கீரன் தொடர்ந்து ஆதாரத்துடன் பகிரங்கப்படுத்தியது.
ஈஷா பள்ளியின் வல்லுறவுக் கொடூரங்கள்
இந்த நிலையில், ஜக்கியின் ஈஷா மையத்தில் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் பா-யல்ரீதியான டார்ச்சர் கொடுக்கப்படுவது குறித்த தகவல்கள் வர, அதையும் நாம்தான் நக்கீரன் யூ டியூப் சேனல் மூலம் அண்மையில் அம்பலப்படுத்தினோம்.
இதன் பிறகே ஈஷாவால் பாதிக்கப்பட்டவர்களும் அவர்களது குடும்பத் தினரும் இப்போது தைரியமாக வாய் திறக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.
அந்த வகையில், கடந்த 17 ஆம் தேதி, யானினி என்பவர் தனது கணவர் சத்ய நரேந்திராவுடன் ஹைதராபாத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து, ஈஷாவின் "லீடர்ஷிப் அகடமி' பள்ளியில் சேர்க்கப்பட்ட தனது 13 வயது மகனை, அங்கிருந்த ஆசிரியர்கள் தினசரி வல்லுறவு செய்து கொடுமைப்படுத்திய துயரத்தை விவரித்தார். அதோடு, அங்கு நடக்கும் பா-யல் கொடுமைகள் குறித்த ஆவணங்களை சேகரிப் பதற்காக, ஈஷாவில் கொஞ்ச நாள் தன்னார்வலர் போர்வையில் தான் தங்கியிருந்ததாகவும் அந்தத் தாய் தெரிவித்த போது, அவரது வ-யின் தீவிரம் அங்கிருந்தவர்களுக்குத் தெரிந்தது.
ஆசிரியர்களால் சிதைக்கப்பட்ட சிறுமி
அவர் பேட்டி கொடுத்துக்கொண்டிருக்கும்போதே, அவரது வாட்ஸ் அப்பிற்கு வந்த மற்றொரு பெண்மணி, ஈஷா பள்ளியில் சேர்க்கப்பட்ட தனது 8 வயது மகளை, அங்கிருந்த சக்தி என்ற உடற்கல்வி ஆசிரியன், தினசரி பா-யல் வல்லுறவு செய்ததாகக் கண்ணீருடன் தெரிவித்து பதைபதைப்பை அதிகரித்தார். இது குறித்து மற்றொரு ஆசிரியரிடம் முறையிட்டபோது அந்தக் கேடுகெட்டவனும் தன் பங்கிற்கு, அந்த 8 வயதுக் குழந்தையிடம் அத்துமீற ஆரம்பித்துவிட்டானாம். இதையெல் லாம் பொறுக்கமுடியாமல் அந்த ஜக்கியிடமே, அந்தப் பெண்மணி நேரில் தெரிவித்தபோது, அந்தக் கேடுகெட்ட கபடச் சாமியார் கொஞ்சமும் அலட்டிக்கொள்ளாமல் "இந்தப் பிரச்சினையை என் காலடியில் விட்டுவிட்டுப் போ. இதைப் பெரிதுபடுத்தாதே' என்று உபதேசம் செய்தாராம். இதையெல்லாம் கேட்டு, ஆன்மீகவாதிகளே பகீரில் ஆழ்ந்திருக்கிறார்கள்.
வாயடைக்க முயலும் ஈஷா
அதுமட்டுமா? இப்படி பத்திரிகையாளர்களிடம் வாட்ஸ் அப் மூலம், தன் மகளுக்கு நேர்ந்த கொடுமையைச் சொன்ன அந்தப் பெண்ணை, ஈஷா சார்பில் தொடர்புகொண்ட அபர்ணா என்பவர், "ஈஷாவுக்கு எதிராகப் பேசலாமா? இதன் மூலம் ஈஷாவைத் தோலுரிக்கும் நக்கீரனுக்கு, நீ உள்ளடக்கம் கொடுக்கலாமா? இது ஈஷாவைப் பாதிக்காதா?' என்றெல்லாம் எச்சரிக்கை செய்திருக்கிறார்.
பாதிக்கப்பட்டவர்கள் தங்களுக்கு எதிராக வாய்திறந்தால் அவர்களை அடக்கிவைக்க, இப்படி மறைமுக மிரட்டலையும் விடுத்துவருகிறது ஈஷா. ஆனாலும், ஈஷாவின் அழுகல் நாற்றம் வெளியே வருவதை யாரால் தடுக்க முடியும்?
இந்த நிலையில், ஈஷாவிடம் நீதிகேட்டு ஒரு பெண் பிள்ளையின் அப்பா எழுதிய கண்ணீர்க் கடிதம், நம் நக்கீரனின் பார்வைக்கு வந்தது. அந்தக் கடிதம், ஈஷா ஆட்களால் அக்கா என்று அழைக்கப்படும், ஜக்கியின் பெண் தோழிக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. அவர், அதை ஈஷா பள்ளிகளின் பொறுப்பாளரான மா பிரதியுதா என்பவருக்கு அனுப்ப, அவரோ அதை சாமுண்டி என்பவருக்கு பார்வேர்டு செய்திருக்கிறார் என்பதும் தெரியவந்தது.
அரை நிர்வாண தீட்சை
அதே மின்னஞ்ச-ல், பள்ளி சார்பில் குறிப்பெழுதிய ஒருவர்... ஈஷா நடத்தும் பள்ளிகளில் தீட்சை என்ற பெயரில் தினசரி அதிகாரி 3 மணிக்கே பெண் பிள்ளை களை குளித்துவிட்டு வரச்சொல்வதையும், அப்படி அவர்கள் குளிக்கும்போது, அவர்களை மேலாடை அணியவிடாமல் அரை நிர்வாணமாக இருக்கச் செய்வதையும், கீழாடையையும் டிரான்ஸ்பரண்டாக அணியச் செய்வதையும் குறிப்பிட்டுவிட்டு, இதையெல்லாம் அந்தப் பெண் பிள்ளைகள் வெளியே சொன்னால், அது நம் மையத்துக்கு ஆபத்தாகிவிடுமே என்று ஜக்கியை எச்சரித்திருக்கிறார்.
இதன் மூலம் ஈஷா மையத்தில் சிறுமிகளுக்கு மானபங்கக் கொடுமை இழைக்கப்படுவதும் உறுதியாகி இருக்கிறது. இதைவிடவும் ஒரு அதிரவைக்கும் ஆதார வீடியோ நம் கைக்கு வந்தது.
ஜக்கியின் விரல் வித்தை
அதில், முற்றிலும் இருள் விலகாத நேரத்தில் ஒரு இளம்பெண்ணைத் தரையில் படுக்கவைத்து, அவரை கைகளாலும் கால் கட்டை விரலாலும் கண்ட இடத்திலும் அழுத்தி, தன் வக்கிரத்தை எல்லாம் அரங்கேற்றுகிறார் அந்தக் கேடு கெட்ட கிழட்டு ஜக்கி. இதையும் நாம் நக்கீரன் யூடியூப் சேனல் மூலம், ஈஷாவுக்கு எதிரான ஆதாரமாக வெளியே கொண்டு வந்திருக்கிறோம். எந்த மறைப்பு மில்லாத திறந்த வெளியிலேயே இப்படி ஆட்டம் போடும் இந்த ஜக்கி, அறைக்குள் அகப்படும் பெண்களை எப்படியெல்லாம் நடத்துவார்? என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும்.
ஜக்கியின் இப்படிப்பட்ட தனியறை லீலைகள்
எப்படி இருக்கும் என்பதற்கு, அமெரிக்கா புலனாய்வுத் துறையிடம் அண்மையில் கொடுக்கப்பட்டிருக்கும் ஒரு பெண்மணியின் புகாரே, சாட்சியாக அமைந்தி ருக்கிறது.
பெண்ணைச் சீரழித்த ஜக்கி
2000ஆம் ஆண்டுவாக்கில், குடும்பப்பிரச்சினையில் தான் இருந்தபோது, தனது தோழி ஒருவர் மூலம் ஜக்கியை சந்தித்ததாகவும், அவரைப் பார்த்த ஜக்கி, கோவை ஆசிரமத்திற்கு வந்தால் அவரது தோஷத்தை எடுப்பதாகவும் கூறினாராம். அதன்படி கோவை ஈஷா மையத்துக்கு அந்தப் பெண் சென்றபோது, அவரது உடம்பில் சந்தனத்தைப் பூசி, அவரை மெல்-ய ஆடையுடன் ஜக்கியின் அறைக்குள் தள்ளினார்களாம். அவருக்கு எதையோ குடிக்கக் கொடுத்த ஜக்கி, மயி-றகால் அவர் உடலை வருடிக் கொடுத்துவிட்டு, "நானே சிவன்... ஆ-ங்கனம் செய்வோம் வா' என்றபடி, அரை மயக்கத்தில் இருந்த அவரைச் சீரழித்தாராம். இதை எல்லாம் புகாராக அமெரிக்க உளவுத்துறையிடம் கொடுத்திருக்கும் அந்தப் பெண், "அவன் ஒரு அரக்கன்' என்று அந்தப் புகாரில் குறிப்பிட்டிருக்கிறாராம்.
இப்படிப்பட்ட பா-யல் புகார்கள் ஜக்கியை நோக்கி இப்போது, அமெரிக்காவிலும் அணிவகுத்து வரும் நிலையில், ஆயுத சப்ளை, தீவிரவாதத் தொடர்பு, சிறுமிகளை சட்டவிரோதமாக அடைத்து வைத்தல் உள்ளிட்ட புகார்களும் அங்கே குவிந்து வருவது, ஈஷா கும்பலை நடுங்க வைத்து வருகிறது.
நக்கீரனை மிரட்டும் ஈஷா
இப்படி ஜக்கி தொடர்பான அத்தனை க்ரைம் நடவடிக்கைகளையும் நாம் அம்பலப்படுத்தி வருவதால், ஜக்கியின் கொஞ்சநஞ்ச முகமூடியும் கிழிந்து தொங்குகிறது. இதனால் நம் மீது கடும் கோபமடைந்திருக்கும் ஈஷா தரப்பு, இதைத் தொடர்ந்து 26 ஆம் தேதி ஜக்கியின் ஈஷா பவுண்டேசன், தனது டிவிட்டர் பக்கத்தில் நமக்கு மிரட்டல் விடுத்திருக்கிறது. "மஞ்சள் ஊடகப் பிரச்சாரகர்' என்று நம்மைப் பற்றி ஆத்திரத்தோடு குறிப்பிட்டிருக் கும் அவர்கள், ஈஷாவின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கிறோம் என்று காமெடி பண்ணியிருக்கிறார்கள். நற்பெயர் இருந்தால்தானே அதைக் களங்கபடுத்த முடியும்?
அதுமட்டுமல்ல, அவர் களிடம் இருந்து நாம் பணம் பறிக்க பலவருடங்களாக முயற்சிப்பதாகவும் அந்த வெத்துவேட்டுகள், நம் பக்கம் கேமராவைத் திருப்பப் பார்க்கிறார்கள். ஆதார மில்லாமல் நம் மீது மண்ணை வாரி இறைப்பதாக நினைத்துக்கொண்டு, தங்கள் தலையிலேயே அதைப் போட்டுக்கொள்கிறார்கள். இது உண்மை யென்றால், அந்தப் பலவருடங்களில் ஒருதடவை கூட ஏன் நமக்கெதிராக நீதிமன்றத்துக்குப் போகவில்லை? இதுபோன்ற டுபாக்கூர் குற்றச் சாட்டுகளை அங்கே வைக்கமுடியாது என்பதுதானே உண்மை?
ஜக்கியின் ஆபாச முகமூடியை நாம் வீடியோ ஆதாரங்களுடன் கிழித்ததைத் தாங்கமுடியாத அந்த போ- ஆன்மீகக் கும்பல், "இந்தத் தாக்குதல்கள் பாரதத்தின் ஆன்மீக மரபு மற்றும் எங்கள் கொள்கைகளின் மீதானது என்பதை நாங்கள் அறிவோம்.' என்று பதறி இருக்கிறார்கள்.
இதில் எங்கே பாரதத்தின் ஆன்மீக மரபை நாம் தாக்குகிறோம்?
தீட்சை என்ற பெயரில் பெண் பிள்ளைகளை நிர்வாணப்படுத்துவதும், தோஷம் போக்குவதாகச் சொல்- குடும்பப் பெண்களை சீரழிப்பதும், அவர்கள் மீது "கட்டைவிரல்' வித்தைகளால் வக்கிரங்களை அரங்கேற்றுவதும்தான், பாரதத்தின் ஆன்மீக மரபு என்று அவர்கள் சொல்ல வருகிறார்களா?
எது ஆன்மீக மரபு?
ஜக்கியின் அசிங்கம் பிடித்த வேலைகளை பாரதத் தின் ஆன்மீக மரபு என்று அவர்கள் சொன்னால், அதுதான் பாரதத்தின் ஆன்மீக மரபுக்கு அசிங்கம்! கடைசியாக, அந்த டிவிட்டர் கடிதத்தில் எனக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்போகிறோம் என்றும் "பூச்சாண்டி' காட்டியிருக்கிறார்கள்.
இதைத்தான் நாமும் எதிர்பார்க்கிறோம்.
அப்படியாவது அவர்களின் அத்தனை ஆபாச லீலை களும் எல்லை மீறிய திருவிளையாடல்களும் நீதிமன்றத் தின் பார்வைக்கு வரவேண்டும் என்று விரும்புகிறோம்.
ஜக்கி, முழுதாக அம்பலப்பட்டிருக்கிறார். அதனால் அவர் தரப்புக்கு நம் மீது கோபம் வருகிறது. இதுவே நமது அதிரடியான களப்பணி, தரமானது என்பதை உணர்த்துகிறது.
ராமகிருஷ்ணர், விவேகானந்தர், வள்ளலார் போன்ற உயர்ந்த ஞானிகளால், இந்தியாவின் ஆன்மீக மரபு ஒரு பக்கம் உயர்ந்துகொண்டே இருக்க, இன்னொரு பக்கம் ஜக்கியைப் போன்ற கழிசடைகளால் ஆன்மீகமே அசிங்கப்பட்டு வருவது வருத்தத்திற்குரியது.
ஒரு நிஜத்தின் நிஜ முகம்
உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நீதியரசர் தனஞ்சய யஷ்வந்த் சந்திரசூட் 2022 நவம்பரில் பொறுப்பேற்றுக்கொண்டார். இவரது பதவிக்காலம் சில நாட்களில் முடிவதால், அடுத்த தலைமை நீதிபதியாக ராஜேஷ் கன்னாவின் பெயரை ஜனாதிபதி திரௌபதி முர்மு அறிவித்திருக்கிறார்.
பதவி நிறைவை எட்டும் நீதியரசர் சந்திரசூட், ஒரு சர்ச்சைக்குரிய வழக்கை விசாரித்த அமர்வில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அயோத்தியில் 16 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பாபர் மசூதி, கடந்த 1992 ஆம் ஆண்டு டிசம்பர் 6 ஆம் தேதி இந்துத்துவா கும்பலால் அடாவடியாக இடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து பெரும் கலவரம் வெடித்ததும் ஏராளமானவர்கள் கொல்லப்பட்டதும் தனிக்கதை.
மசூதி இடிக்கப்பட்ட அந்த இடம் யாருக்கு சொந்தம்? என்பது தொடர்பான வழக்கு நீண்ட காலமாக நடந்து வந்த நிலையில், 2019 நவம்பர் 9ஆம் தேதி, பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில், ராமர் கோவிலைக் கட்டிக் கொள்ளலாம் என்கிற தீர்ப்பை அப்போதைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான உச்சநீதிமன்ற அமர்வு வழங்கியது. அந்த அமர்வில் இடம்பெற்ற 5 நீதிபதிகளில் இந்த சந்திரசூட்டும் ஒருவர்.
அந்த வழக்கின் போக்கு குறித்தும், தீர்ப்பு குறித்தும் நாம் கருத்து எதையும் சொல்ல வரவில்லை. அதுகுறித்த தேவையும் இப்போது இல்லை.
இதெல்லாம் பழைய கதை என்றபோதும், அந்த சர்ச்சைக்குரிய தீர்ப்பை வழங்கிய நீதிபதிகளில் ஒருவரான சந்திரசூட், அந்தத் தீர்ப்பு பற்றிய நினைவுகளை அண்மையில் தனது சொந்த ஊரான பூனேயில் பகிர்ந்துகொண்டார். அப்படிப் பகிரும்போது-
"இந்த வழக்கில் தீர்வு காண்பதற்காக பிரார்த்தனை செய்தேன். தீர்ப்பை அறிவிப்பதற்கு முன், கடவுள் நம்பிக்கை அடிப்படையில் ஒரு வழியைக் கண்டேன். தெய்வத்தின் முன் அமர்ந்து, ஒரு தீர்வை தர வேண்டும்
என்று பிரார்த்தனை செய்தேன். அதன் அடிப்படையில் தீர்வு கிடைத்தது' என்று திருவாய் மலர்ந்திருக்கிறார். இதன்மூலம், இந்து மதத்தின் மீதும் கடவுள் மீதும் தனக்கிருக்கும் நம்பிக்கையை அவர் உறுதிப்படுத்தி இருக்கிறார்.
அதாவது, மதம் சார்ந்த வழக்கில், ஒரு மதத்தின் நம்பிக்கையாளராக இருந்துகொண்டு, அவர் தீர்ப்பை வழங்கியிருக்கிறார் என்றால் அது எப்படி நடுநிலைத் தீர்ப்பாக இருக்கமுடியும்?
ஒரு வழக்கை சட்டத்தின் வழியிலும், ஏனைய வழி காட்டுத் தீர்ப்புகளின் போக்கிலும் அணுகவேண்டிய அவர், சோழி உருட்டாத குறையாய் கடவுளிடம் கருத்துக்கேட்டேன் என்பது எப்படி சரியாக இருக்க முடியும்?
இவர் தலைமை நீதிபதியாகவும் அமர்ந்திருப்ப தால், இவரிடம் வந்த மத ரீதியான மற்ற வழக்குகள் என்ன பாடுபட்டிருக்கும்? நினைக்கும்போதே, கவலை ஏற்படுகிறது.
-ஆதங்கத்தோடு,
நக்கீரன்கோபால்