jaya

ந்தப் படத்தைக் கூர்ந்து பாருங்கள்.

2016 டிசம்பர் 5-ஆம் தேதி இரவு இறந்ததாகச் சொல்லப்பட்ட ஜெயலலிதாவின், ஃப்ரீசர் பாக்ஸ் படத்தைத்தான் நீங்கள் மேலே பார்க்கிறீர்கள்.

ஆறு அடி நீளமுள்ள இந்த ஃப்ரீசர் பாக்ஸில் வைக்கப்பட்ட ஜெ.வின் உயரத்தைக் கவனியுங்கள்.

Advertisment

அவரது உடலின் அளவையும் பெட்டியின் நீளத்தையும் கண்களால் அளந்து, மனதால் கணக்குப்போட்டுப் பாருங்கள்.

ஜெ.வின் உடல், மூன்றரை அடிகூட இல்லை என்பது தெரியும்.

ஒரு குறுமுனி போல், போன்சாய்த் தாவரம்போல் ஆக்கப்பட்ட நிலையில் இருக்கிறார் ஜெ.

Advertisment

ஜெ.வின் தலைப் பகுதியிலும் கால் பகுதியிலும் இருக்கும் பெட்டியின் வெற்றிடமே, ஜெ.வின் உயரம் மூன்றரை அடிகூட இல்லை என்பதைச் சொல்கிறது.

5.5. அடி உயரமுள்ள ஜெ.வின் மிச்ச உயரம் என்ன ஆனது? அது எப்படி மாயமானது?

இதுதான், அன்றிலிருந்து நக்கீரன் எழுப்பிவரும் கேள்வி.

vipsஜெயலலிதா நக்கீரனுக்கு எதிராக இருந்தவர். அவர் பதவியில் இருந்தபோதெல்லாம், நக்கீரனை நசுக்குவதிலேயே குறியாக இருந்தவர். நக்கீரனுக்குப் பல்வேறு இடர்களைத் தந்தவர். நக்கீரனும் அவரை விட்டுவிடவில்லை.

அவரது ஊழல் முகம் உட்பட அத்தனை இருட்டு முகத்தையும் தொடர்ந்து நக்கீரன் கிழித்தெறிந்தபடியேதான் இருந்தது.

நக்கீரனுக்கும் ஜெ.வுக்குமான பகை என்பது, சொந்தப் பகை அல்ல. சொத்துத் தகராறோ பங்காளிச் சண்டையோ இல்லை. அவருக்கும் நக்கீரனுக்குமான யுத்தம், சர்வாதிகாரத்துக்கும் நீதிக்குமான யுத்தம். பொய்மைக்கும் உண்மைக் குமான யுத்தம்.

இப்படி ஜெ.வோடு நக்கீரன் தொடர்ந்து முரண்பட்டாலும், அவரது மரணம் என்பது நக்கீரனுக்கும் வருத்தத்தைதான் தந்தது.

காரணம், அவர் தமிழகத்தின் முதல்வர். விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அவர் எல்லாருக்குமான முதல்வர். அதனால் அவரது நலன்மீது அனைவருக்கும் அக்கறை உண்டு.

ரத்த உறவுகள் துரத்தியடிக்கப்பட்டு, மன்னார்குடி வகையறாக்களின் பிடியிலிருந்த நிலையில், ஜெயலலிதா மர்மமாய் மரணத்தைத் தழுவியிருக்கிறார்.

எனவே, அவரது மரணத்தில் இருக்கும் மர்மங்கள் வெளிப்பட வேண்டும் என்ற எண்ணம், நக்கீரனுக்கு வந்தது. அதுகுறித்த உண்மைகளைத் தோண்டித் துருவுவது என்பது ஒரு புலனாய்வுப் பத்திரிகைக்கான தார்மீகக் கடமையுமாகும்.

தமிழகத்தில் எத்தனையோ தலைவர்கள் நோயுற்று இறந்திருக்கிறார்கள். ஆனால் எந்தத் தலைவர்களின் நோயும் சிகிச்சை முறைகளும் இந்த அளவுக்கு மறைத்து வைக்கப்படவில்லை.

2016 செப்டம்பர் இரவு கார்டனில் ஜெ.வுக்கு என்ன நடந்தது அவர் எதனால்? எந்த நிலையில் அப்பல்லோவில் அட்மிட் செய்யப்பட்டார்? என்பதற்கே இன்னும் தெளிவான விடை யாருக்கும் கிடைக்கவில்லை.

மருத்துவமனைவியில் ஜெ.வுக்கு என்ன மாதிரியான சிகிச்சைகள் கொடுக்கப்பட்டன என்பதற்கும், எதனால் அவர் மரணமடைந்தார் என்பதற்கும் நம்பக்கூடிய காரணங்கள் சொல்லப்படவில்லை.

நினைவிழந்த நிலையிலே ஜெ. அட்மிட் செய்யப்பட்டார். அட்மிட் ஆவதற்கு ஒருவாரம் முன்பிருந்தே அவர் காய்ச்ச லால் பாதிக்கப்பட்டிருந்தார். சர்க்கரை நோயின் தாக்குதலும் நோய்த்தொற்றும் இருந்தது என்றும் பின்னர் சொன்னார்கள். அப்படியெனில் போயஸ்கார்டனில் இருந்த, முதல்வருக்கான மருத்துவ டீம் என்ன செய்துகொண்டிருந்தது என்பதற்கும் விடையில்லை.

ஜெ. அட்மிட் செய்யப்பட்ட நொடியிலேயே, அப்பல்லோ மருத்துவமனையையே இரும்புத்திரை போட்டு மறைத்தார்கள்.

ஜெ. அப்பல்லோவுக்குக் கொண்டுவரும் முன்பாகவே மருத்துவமனையின் வெளியேயும் உள்ளேயும் இருந்த கண் காணிப்புக் கேமராக்கள் அனைத்தும் திட்டமிட்டு அணைக்கப்பட்டு விட்டன. இது எதற்காக என்பதற்கு சரியான விடையில்லை. ஜெ.வின் அமைச்சரவை சகாக்களுக்கும், தலைமைச் செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுக்கும்கூட அவரைப் பற்றிய முழுமையான உண்மை எதுவும் தெரியாமல் பார்த்துக்கொண்டார்கள். ஜெ.வின் ரத்த உறவுகளையும் மன்னார்குடி தரப்பு நெருங்கவிடவில்லை.

கவர்னர், மத்திய மந்திரிகள் என எவர் வந்தபோதும், மாநிலத்தின் முதல்வரான ஜெ.வைப் பார்க்க அனுமதிக்கவில்லை.

ஜெ.வால் ஒதுக்கிவைக்கப்பட்ட மன்னார்குடித் தரப்பினர், அவர் சுயநினைவோடு இருந்தவரை, அவர் கண் எதிரில்கூட வரமுடியவில்லை. ஆனால் அவர் அப்பல்லோவில் அட்மிட் ஆனவுடனேயே, அவர்கள் அத்தனை பேரும் அப்பல்லோவை முற்றுகையிட்டார்கள். மருத்துவமனையே அவர்கள் கட்டுப்பாட்டுக் குள் வந்தது.

நன்றாக இருக்கிறார். அரசு அதிகாரிகளோடு ஆலோசிக்கிறார். அறிக்கையை டிக்டேட் செய்கிறார்.

இடைத்தேர்தல் படிவங் களில் கைநாட்டு வைத்தார். இட்லி சாப்பிடுகிறார்.

வாக்கிங் போகிறார்.

பிசியோதெரபி எடுத்துக் கொள்கிறார் என நாளுக்கு ஒரு தகவலை வெளியிட்டு விட்டு, கடைசியில் அவர் அட்மிட் ஆன 75-ஆம் நாள், அதாவது 2016 டிசம்பர் 5-ஆம் தேதி அவரைப் பிணமாகத்தான் காட்டினார்கள்.

அதிலும், 6 அடி நீள முள்ள ஃபிரீசர் பாக்ஸில், மூன்றரை அடி உயரம்கூட இல்லாத ஜெ.வின் உடலைக் காட்டினார்கள். அதைப் பார்த்தபோதே, நக்கீரன்தான், ஜெ.வின் கால்கள் எங்கே? என்று முதன்முதலில் கேள்வி எழுப்பியது. ஒருவர் மரணமடைந்தால் உயிர் போகும். உயிரோடு அவரது உயரமும் காணாமல் போய்விடுமா?

இதுகுறித்து தொடர்ந்து நக்கீரன் கேள்வி எழுப்பியும், ஜெ.வின் விசுவாசிகள் என்று சொல்லிக்கொண்ட வர்களே அது பற்றிக் கவலைப்படவில்லை. ஜெ.வின் கால் எங்கே என்று எவரும் கேள்வி கேட்கவில்லை.

அண்மையில், முன்னாள் சபாநாயகர் பி.ஹெச். பாண்டியனின் மகனான வழக்கறிஞர் மனோஜ் பாண்டியன், ஜெ.வின் கால்கள் குறித்த சந்தேகத்தை, ஆறுமுகம் கமிஷனில் எழுப்பியிருக்கிறார். அவர் ஜெ.வின் உயரத்தை அருகிலிருந்து பார்த்தவர். அதேபோல் ஃப்ரீசர் பாக்ஸில் வைக்கப்பட்டிருந்த ஜெ.வின் சிறிய உடல் பாகத்தையும் பார்த்தவர். அதனால், தன் மனதில் இது தொடர்பாக இருந்த அதிர்ச்சியை, கமிஷனில் வெளிப்படுத்தியிருக்கிறார்.

நக்கீரனில் இது தொடர்பாக எழுதப்பட்ட கட்டுரைகளையும், என் யு டியூப் உரையில் இது தொடர்பாக நான் எழுப்பிய கேள்விகளையும்கூட மனோஜ் பாண்டியன், விசாரணைக் கமிஷனின் கவனத்துக்குக் கொண்டு போயிருக்கிறார்.

எனவே, ஜெ.வின் கால்கள் குறித்த சந்தேகத்துக்கு விசாரணைக் கமிஷன் விடைதேடவேண்டும்.

ஜெ.வின் உடலை தன் டீமோடு எம்பாம் செய்த டாக்டர் சுதா சேஷையன்கூட இது குறித்த உண்மைகளை வெளிப்படுத்தவில்லை. தேர்தல் படிவங்களில் ஜெ.விடம் சசி தரப்பு கைநாட்டு பெற்றபோது, தான் உடனிருந்ததாகச் சொல்லும் டாக்டர் பாலாஜியும், ஜெ.வின் உயரம் எப்படி குறைந்தது என்பதற்கான விளக்கத்தைத் தரவில்லை.

ஜெ.வின் மர்ம மரணம் குறித்து விசாரிக்கும் நீதிபதி ஆறுமுகம் கமிஷனாவது, ஜெ.வின் கால்கள் குறித்த மர்மத்தையும், ஜெ. உடலின் உயரம் எப்படி குறைந்தது என்பதற்கான விடையையும் கண்டறிந்து, மக்களின் சந்தேகத்தைத் தீர்க்கவேண்டும்.

இது, நீதியின்மீது நம்பிக்கை வைத்து, விசாரணைக் கமிஷனிடம் நாம் வைக்கும் வேண்டுகோள். இது ஒட்டுமொத்த தமிழ்மக்களின் வேண்டுகோள்.

-எதிர்பார்ப்போடு,

நக்கீரன் கோபால்