Advertisment

இரும்பைக் கண்டுபிடித்தவன் தமிழன்! - முதல்வர் மு.க. ஸ்டாலின் பிரகடனம்!

/idhalgal/eniya-utayam/inventor-iron-was-tamilian-chief-minister-mk-stalins-declaration

வையெல்லாம் வெறும் உயர்வுநவிற்சி வரிகளல்ல, உண்மையான வரிகளென்பதை மெய்ப்பிக்கும்விதமாக, 5,300 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழ் நிலப்பரப்பில் இரும்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தமிழ் நிலத்திலிருந்துதான் இரும்பின் காலம் தொடங்கியது என்பதை தொல்லியல் துறை ஆய்வின் ஆதாரத்துடனும் பெருமிதத் துடனும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரகடனப்படுத்தியுள்ளார்!

தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பில் ‘இரும்பின் தொன்மை’ என்ற நூல் வெளியீட்டு நிகழ்ச்சி, சென்னை கோட்டூர்புரம், அண்ணா நூற்றாண்டு நூலகக் கலையரங்கில், ஜனவரி 23, வியாழனன்று நடைபெற்றது. அப்போது, நூலினை வெளியிட்டும், தொல்லியல் துறை சார்பில், 5,914 சதுர மீட்டர் பரப்பளவில் ரூ.17 கோடியே 10 லட்சம் மதிப் பீட்டில் அமைக்கப்படவுள்ள கீழடி திறந்தவெளி அருங்காட்சியகம், 2,325 சதுர மீட்டர் பரப்பளவில் ரூ.22 கோடியே 10 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்படவிருக்கும் கங்கைகொண்ட சோழபுரம் அருங்காட்சி யகம் ஆகியவற்றிற்கு அடிக்கல் நாட்டியும், கீழடி இணையதளத்தைத் துவக்கி வைத்தும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

Advertisment

cm

அப்போது அவர், "கல் தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளொடு முன் தோன்றிய மூத்தகுடி நமது தமிழ்க்குடி என்று பெருமைபொங்க நாம் சொன்னபோது, வெற்றுப்பெருமை பேசுகிறார்கள் என்று சிலர் விமர்சித்தார்கள். அதற்குக் காரணம், தமிழ்ச் சம

வையெல்லாம் வெறும் உயர்வுநவிற்சி வரிகளல்ல, உண்மையான வரிகளென்பதை மெய்ப்பிக்கும்விதமாக, 5,300 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழ் நிலப்பரப்பில் இரும்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தமிழ் நிலத்திலிருந்துதான் இரும்பின் காலம் தொடங்கியது என்பதை தொல்லியல் துறை ஆய்வின் ஆதாரத்துடனும் பெருமிதத் துடனும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரகடனப்படுத்தியுள்ளார்!

தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பில் ‘இரும்பின் தொன்மை’ என்ற நூல் வெளியீட்டு நிகழ்ச்சி, சென்னை கோட்டூர்புரம், அண்ணா நூற்றாண்டு நூலகக் கலையரங்கில், ஜனவரி 23, வியாழனன்று நடைபெற்றது. அப்போது, நூலினை வெளியிட்டும், தொல்லியல் துறை சார்பில், 5,914 சதுர மீட்டர் பரப்பளவில் ரூ.17 கோடியே 10 லட்சம் மதிப் பீட்டில் அமைக்கப்படவுள்ள கீழடி திறந்தவெளி அருங்காட்சியகம், 2,325 சதுர மீட்டர் பரப்பளவில் ரூ.22 கோடியே 10 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்படவிருக்கும் கங்கைகொண்ட சோழபுரம் அருங்காட்சி யகம் ஆகியவற்றிற்கு அடிக்கல் நாட்டியும், கீழடி இணையதளத்தைத் துவக்கி வைத்தும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

Advertisment

cm

அப்போது அவர், "கல் தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளொடு முன் தோன்றிய மூத்தகுடி நமது தமிழ்க்குடி என்று பெருமைபொங்க நாம் சொன்னபோது, வெற்றுப்பெருமை பேசுகிறார்கள் என்று சிலர் விமர்சித்தார்கள். அதற்குக் காரணம், தமிழ்ச் சமுதாயத்தில் வந்துபுகுந்த இழிவுகளும் - அதனால் ஏற்பட்ட தேக்க நிலையும்தான். இந்த இடைக்கால இழிவுகள் நீங்க, காலம்தோறும் எண்ணற்ற புரட்சியாளர்கள் தோன்றினார்கள். அய்யன் வள்ளுவர், வள்ளலார் தொடங்கி, அயோத்திதாசப் பண்டிதர் என அந்தப் பட்டியல் நீளமானது. அவர்களின் தொடர்ச்சி யாகத்தான் பகுத்தறிவையும் இனமான உணர்வையும் ஊட்டினார் தந்தை பெரியார்! பேரறிஞர் அண்ணா தன்னுடைய சிந்தனையாலும், நா நயத்தாலும் தட்டியெழுப்பினார். சங்க இலக்கியத்தில் சொல்லப்பட்ட நம்முடைய வாழ்வியலை திராவிட இயக்க மேடைகள்தோறும் எடுத்துச் சொன்னோம்!

முத்தமிழறிஞர் கலைஞர், "இமயவரம்பினிலே வீரம் சிரிக்கும், இங்கு வீணை நரம்பினிலே இசை துடிக்கும், அதுவும் மானம் மானம் என்றே முழங்கும்!' என்று சங்கத்தமிழைச் சாறெடுத்து நம்முடைய வரலாற்றை எடுத்துச்சொன்னார்.

Advertisment

இந்த இலக்கியப் பெருமைகளை மெய்ப்பித்து, தமிழினத்தின் புதையுண்ட வரலாற்றை மீட்டெடுத்து, அறிவுலகத்துக்கு அறிவிக்க வேண்டுமென்றே நம்முடைய உழைப்பைச் செலுத்திவருகிறோம்.

அந்த உணர்வோடு தான், தொன்மையும் திண்மையும் வளமையும் பெருமையும் கொண்ட தமிழ்நாட்டின் சிறப்பை வெளிப்படுத்தும் விழாவே இது! இந்த விழாவில் முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிடப் போவதாக சொல்லியிருந்தேன். தமிழின் தொன்மையை உலகிற்கே சொல்லும் ஒரு மாபெரும் ஆய்வுப் பிரகடனத்தை இப்போது நான் அறிவிக்கப்போகிறேன். தமிழ் நிலப்பரப்பிலிருந்துதான் இரும்பின் காலம் தொடங்கியது. இந்திய நாட்டுக்கு மட்டுமல்ல, உலகிற்கே மீண்டும் சொல்கிறேன், தமிழ் நிலப்பரப்பிலிருந்துதான் இரும்பின் காலம் தொடங்கியது என்ற மாபெரும் மானுடவியல் ஆய்வுப் பிரகடனத்தை இந்த நிகழ்ச்சி வாயிலாக அறிவிக்கிறேன்!

தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளின் மூலம் அண்மையில் கிடைக்கப் பெற்ற காலக்கணக்கீடுகள், இரும்பு அறிமுகமான காலத்தை கி.மு.4000 ஆண்டின் முதற்பகுதிக்குக் கொண்டு சென்றுள்ளன. தென்னிந்தியாவில், குறிப்பாகத் தமிழ்நாட்டில் 5300 ஆண்டுகளுக்கு முன்னர் இரும்பு அறிமுகமாகியிருக்க வேண்டும் என்று உறுதியாகக் கூறலாம். இதனை ஆய்வு முடிவுகளாகவே நான் அறிவிக்கிறேன். தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையால் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளில் சேகரிக்கப்பட்ட மாதிரிகள், உலகின் தலைசிறந்த ஆய்வகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. புனே நகரிலுள்ள பீர்பால் சகானி தொல்அறிவியல் நிறுவனம், அகமதாபாத் நகரிலுள்ள இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகம் ஆகிய தேசிய அளவில் புகழ்பெற்ற ஆய்வு நிறுவனங்களுக்கும், பன்னாட்டு அளவில் உயரிய நிறுவனமான அமெரிக்க நாட்டு புளோரிடா மாநிலத்திலுள்ள பீட்டா ஆய்வகத்திற்கும் மாதிரிகள் பகுப்பாய்வுக்கு அனுப்பிவைக்கப்பட்டன.

தேசிய நிறுவனங்களில் ஓ.எஸ்.எல். பகுப்பாய்வுக்கும், பீட்டா ஆய்வகத்தில் கதிரியக்க காலப் பகுப்பாய்வுக்கும் ஒரே தாழியிலுள்ள மாதிரிகள் அனுப்பிவைக்கப்பட்டன. இத்தகைய மூன்று நிறுவனங்களிடமிருந்து ஒரே மாதிரியான பகுப்பாய்வு முடிவுகள் பெறப்பட்டன. இந்த ஆய்வுகளைக் கூர்ந்து ஒப்பாய்வு செய்ததில் ஒரே மாதிரியான முடிவுகள் கிடைக்கப்பெற்றன. தற்போது கிடைத்துள்ள கதிரியக்கக் காலக் கணக்கீடுகள் மற்றும் ஞநக பகுப்பாய்வு காலக்கணக்கீடுகளின் அடிப்படையில் கி.மு. 3500 முற்பகுதிக்கு முன்பே தென்னிந்தியாவில் இரும்பு அறிமுகமாகிவிட்டது என்பதை முன்வைக்கின்றன. இந்த பகுப்பாய்வு முடிவுகள் இந்தியாவில் உள்ள தொல்லியல் அறிஞர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டன. இவர்கள் அனைவரும் இரும்பின் தோற்றத்தையும், பண்டைய தொழில்நுட்பத்தைப் பற்றியும் ஆய்வு செய்துவரும் அறிஞர் பெருமக்களாவார்கள். இவை அனைத் தையும் தொகுத்துத்தான் ‘இரும்பின் தொன்மை’ என்ற நூல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்திய அளவில் மட்டுமல்ல, உலகளவில் இரும்புத் தாதுவிலிருந்து இரும்பினைப் பிரித்தெடுக் கும் தொழில்நுட்பம் தமிழ் நிலப்பரப்பில்தான் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்பதனை பெருமிதத்துடன் கூறுவோம். அதாவது 5,300 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ் நிலப்பரப்பில் இரும்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதை அறிவியல் அடிப்படையில் நிறுவியுள்ளோம் என்பதை மட்டற்ற மகிழ்ச்சியுடன் உலகிற்கு அறிவிக்கிறேன். இது தமிழுக்கும், தமிழினத்துக்கும், தமிழ்நாட்டுக்கும், தமிழ் நிலத்துக்கும் பெருமை. உலக மானுட இனத்துக்கு தமிழ்நிலம் வழங்கிய மாபெரும் கொடை என்றே இதனை நாம் கம்பீரமாகச் சொல்லலாம்.

தமிழ்நாட்டில் நகர நாகரிகமும், எழுத்தறிவும் கி.மு. 6-ஆம் நூற்றாண்டில் தொடங்கியது என்பதை கீழடி அகழாய்வு முடிவுகள் நிறுவியுள்ளன. பொருநை ஆற்றங்கரையில் 3,200 ஆண்டுகளுக்கு முன் வேளாண் பயிர்த்தொழிலில் நெல் பயிரிடப்பட்டுள்ளது என்பதை சிவகளை அகழாய்வு முடிவு வெளிப்படுத்தியது. தமிழ்நாட்டில் இரும்பின் அறிமுகம் 4,200 ஆண்டுகளுக்கு முன்பே இருந்ததை கிருஷ்ணகிரி மாவட்டம் மயிலாடும்பாறை அகழாய்வின் மூலம் தமிழ்நாடு சட்டமன்றத்தின் வாயிலாக நான் உலகிற்கு அறிவித்தேன். தமிழ், தமிழ் நிலம், தமிழ்நாடு குறித்து நாம் இதுவரை சொல்லி வந்தவை ஏதோ இலக்கியப் புனைவுகள் அல்ல. அரசியலுக்காகச் சொன்னவை அல்ல. வரலாற்று ஆதாரங்கள், உலக அறிஞர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டவை!” என்று பெருமிதத்துடன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். இந்த விழாவில் அமைச்சர்கள் துரைமுருகன், தங்கம் தென்னரசு, ஆர்.ராஜேந்திரன், அர.சக்கரபாணி, மா.சுப்பிரமணி, பி.கே.சேகர்பாபு, மேயர் பிரியா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இரும்பின் பயன்பாட்டை உலகுக்கே அறிமுகப்படுத்திய தமிழினத்தை சேர்ந்தவர்கள் என்று கர்வத்தோடு இனி நாம் சொல்லிகொள்ளலாம்!

இந்தக் கண்டுபிடிப்பின் மூலம் தமிழக வரலாற்றின் ஆழமும் அகலமும் இன்னும் நீளும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது.

uday010225
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe