நேர்காணல் தகழி சிவசங்கரப்பிள்ளை தமிழில் : சுரா

/idhalgal/eniya-utayam/interview

றுதியாக நாளை பயணத்தை ஆரம்பிக்கவேண்டும். அதாவது- பத்தாம் தேதி காலை பத்து மணிக்கு விமானம். பம்பாய் வழியாக டில்லிக்கு சாயங்காலம் போய்ச்சேர்வான். அதற்கு அடுத்தநாள் நேர்காணல். நேர்காணலுக்கு முன்னால் டில்லிலிலியில் இருப்பது ஒரு இரவுதான். நேர்காணல் சம்பந்தப்பட்ட சில சிறியசிறிய முயற்சிகளைச் செய்யவேண்டியதிருக்கிறது. சில ஏற்பாடுகள்...

மிஸ்டர் ரோஸை சரிசெய்யக்கூடிய முயற்சிகளை மாமா செய்துவிட்டார். மிஸ்டர் பானர்ஜி ஒருமாதிரியான மனிதர். உண்மையிலேயே தீர்மா னத்தை எடுக்கவேண்டியவர் பானர்ஜிதான். பானர்ஜியின் முதலாளியாக ரோஸ் இருந்தாலும், பானர்ஜிக்குக்கீழே வேலை பார்ப்பதற்குதான் ஆள் வேண்டும். அப்போது பொருத்தமான ஆளைத் தேர்ந்தெடுக்க வேண்டியது பானர்ஜிதான்.

மிஸ்டர் ரோஸ் பேசமாட்டார். பேசாமல் இருக்கவேண்டியது வர்த்தகத்திற்கு அவசியம். மிஸ்டர் ரோஸ் தாழ்ந்துகொடுப்பார். தனக்கென்று கருத்து இல்லாதவராகிவிடுவார். பானர்ஜி உயர்வார். அதிகாரம் அதிகமாக உண்டாகும். முக்கிய மனிதராவார். ம்... பானர் ஜிக்கு ஒரு மிடுக்கு!

பானர்ஜியின் பதவி மிஸ்டர் ரோஸின் பேனா நுனியில்....

தான் திறமைசாலிலிலி என்ற விஷயத்தை பானர்ஜி ரோஸுக்குப் புரியவைக்கக்கூடிய சந்தர்ப்பம் இது.

அப்போது அமைதியாக இருப்பார்.

அதுதான் வர்த்தகத்தின் விளையாட்டு.

இல்லை... நேர்காணலுக்குள் நுழைந்து வேலை கிடைத்துவிட்டால் மோகன் எப்படி இருப்பான்? இப்படிப்பட்ட விளையாட்டுகளைத்தான் விளையாடுவான். பலவிதப்பட்ட சிறிதும் பெரிதுமான ஏராளமான விளையாட்டுகளை நன்றாக விளையாடும்போது, வர்த்தகமாகிவிடுகிறது. ஆதாயம் உண்டாகிறது. போனஸ் கிடைக்கிறது. வர்த்தகம் வளர்ச்சி பெறுகிறது.

சமூகத்திற்கு சேவை செய்தது மாதிரியும் ஆகிறது!

மோகன் என்ற ஒரு ஆள் நேர்காணலுக்கு இருக்கிறான் என்ற தகவலை பானர்ஜி தெரிந்துகொள்ளவேண்டும். அது முக்கியம்.

குளிர்சாதன வசதி செய்யப்பட்ட அறைக்குள் மோகன் நுழையும்போது, தேர்வு செய்யப்பட வேண்டிய ஆள் வருகிறான் என்று பானர்ஜிக்குத் தோன் றவேண்டும். அதற்கு முன்பு மனுவைப் பார்க்கும்போது, நம்முடைய ஆள் வருகிறான் என்று தோன்றவேண்டும்.

நேர்காணல் முடிந்து செல்லும்போது மிஸ்டர் ரோஸ் கேட்பார்:

"எப்படி மிஸ்டர் பானர்ஜி?'

அந்தக் கேள்வி உண்டாகும் என்பது நிச்சயம். மாமா எழுதியிருக்கிறார். மிஸ்டர் ரோஸும் மோகனின் மாமாவும் இங்கிலாந்தில் இருந்தபோது, நெருங்கிய நண்பர்களாக இருந்திருக்கிறார்கள்.

மிஸ்டர் ரோஸ் "எப்படி மிஸ்டர் பானர்ஜி?' என்று கேட்கும்போது, மிஸ்டர் பானர்ஜி கூறவேண்டும்:

"பரவாயில்லை... நன்றாக இருந்தது. நாம் தீர்மானிக்கலாம் என்று தோன்றுகிறது. வரட்டும்... இரண்டு பேர் உடன் இருக்கிறார்களே! நமக்கு மிகவும் பொருத்தமான ஆள் வேண்டும்.'

மிஸ்டர் ரோஸ் ஒப்புக்கொள்வார். அதுதான் வர்த்தகத்தின் விளையாட்டு.

அப்படியென்றால் பானர்ஜியைப் பிடிக்கவேண்டும்.

அதற்கு ஆள் இருக்கிறது. பானர்ஜியின் மகளுடைய கணவன் குப்தா.... குப்தாவுடன் மோகன் நான்கு வருடங்கள் ஒன்றாகச் சேர்ந்து அமெரிக்காவில் இருந்திருக்கிறான். ஒரே இடத்தில் தங்கினார்கள். பிரியாமல்

றுதியாக நாளை பயணத்தை ஆரம்பிக்கவேண்டும். அதாவது- பத்தாம் தேதி காலை பத்து மணிக்கு விமானம். பம்பாய் வழியாக டில்லிக்கு சாயங்காலம் போய்ச்சேர்வான். அதற்கு அடுத்தநாள் நேர்காணல். நேர்காணலுக்கு முன்னால் டில்லிலிலியில் இருப்பது ஒரு இரவுதான். நேர்காணல் சம்பந்தப்பட்ட சில சிறியசிறிய முயற்சிகளைச் செய்யவேண்டியதிருக்கிறது. சில ஏற்பாடுகள்...

மிஸ்டர் ரோஸை சரிசெய்யக்கூடிய முயற்சிகளை மாமா செய்துவிட்டார். மிஸ்டர் பானர்ஜி ஒருமாதிரியான மனிதர். உண்மையிலேயே தீர்மா னத்தை எடுக்கவேண்டியவர் பானர்ஜிதான். பானர்ஜியின் முதலாளியாக ரோஸ் இருந்தாலும், பானர்ஜிக்குக்கீழே வேலை பார்ப்பதற்குதான் ஆள் வேண்டும். அப்போது பொருத்தமான ஆளைத் தேர்ந்தெடுக்க வேண்டியது பானர்ஜிதான்.

மிஸ்டர் ரோஸ் பேசமாட்டார். பேசாமல் இருக்கவேண்டியது வர்த்தகத்திற்கு அவசியம். மிஸ்டர் ரோஸ் தாழ்ந்துகொடுப்பார். தனக்கென்று கருத்து இல்லாதவராகிவிடுவார். பானர்ஜி உயர்வார். அதிகாரம் அதிகமாக உண்டாகும். முக்கிய மனிதராவார். ம்... பானர் ஜிக்கு ஒரு மிடுக்கு!

பானர்ஜியின் பதவி மிஸ்டர் ரோஸின் பேனா நுனியில்....

தான் திறமைசாலிலிலி என்ற விஷயத்தை பானர்ஜி ரோஸுக்குப் புரியவைக்கக்கூடிய சந்தர்ப்பம் இது.

அப்போது அமைதியாக இருப்பார்.

அதுதான் வர்த்தகத்தின் விளையாட்டு.

இல்லை... நேர்காணலுக்குள் நுழைந்து வேலை கிடைத்துவிட்டால் மோகன் எப்படி இருப்பான்? இப்படிப்பட்ட விளையாட்டுகளைத்தான் விளையாடுவான். பலவிதப்பட்ட சிறிதும் பெரிதுமான ஏராளமான விளையாட்டுகளை நன்றாக விளையாடும்போது, வர்த்தகமாகிவிடுகிறது. ஆதாயம் உண்டாகிறது. போனஸ் கிடைக்கிறது. வர்த்தகம் வளர்ச்சி பெறுகிறது.

சமூகத்திற்கு சேவை செய்தது மாதிரியும் ஆகிறது!

மோகன் என்ற ஒரு ஆள் நேர்காணலுக்கு இருக்கிறான் என்ற தகவலை பானர்ஜி தெரிந்துகொள்ளவேண்டும். அது முக்கியம்.

குளிர்சாதன வசதி செய்யப்பட்ட அறைக்குள் மோகன் நுழையும்போது, தேர்வு செய்யப்பட வேண்டிய ஆள் வருகிறான் என்று பானர்ஜிக்குத் தோன் றவேண்டும். அதற்கு முன்பு மனுவைப் பார்க்கும்போது, நம்முடைய ஆள் வருகிறான் என்று தோன்றவேண்டும்.

நேர்காணல் முடிந்து செல்லும்போது மிஸ்டர் ரோஸ் கேட்பார்:

"எப்படி மிஸ்டர் பானர்ஜி?'

அந்தக் கேள்வி உண்டாகும் என்பது நிச்சயம். மாமா எழுதியிருக்கிறார். மிஸ்டர் ரோஸும் மோகனின் மாமாவும் இங்கிலாந்தில் இருந்தபோது, நெருங்கிய நண்பர்களாக இருந்திருக்கிறார்கள்.

மிஸ்டர் ரோஸ் "எப்படி மிஸ்டர் பானர்ஜி?' என்று கேட்கும்போது, மிஸ்டர் பானர்ஜி கூறவேண்டும்:

"பரவாயில்லை... நன்றாக இருந்தது. நாம் தீர்மானிக்கலாம் என்று தோன்றுகிறது. வரட்டும்... இரண்டு பேர் உடன் இருக்கிறார்களே! நமக்கு மிகவும் பொருத்தமான ஆள் வேண்டும்.'

மிஸ்டர் ரோஸ் ஒப்புக்கொள்வார். அதுதான் வர்த்தகத்தின் விளையாட்டு.

அப்படியென்றால் பானர்ஜியைப் பிடிக்கவேண்டும்.

அதற்கு ஆள் இருக்கிறது. பானர்ஜியின் மகளுடைய கணவன் குப்தா.... குப்தாவுடன் மோகன் நான்கு வருடங்கள் ஒன்றாகச் சேர்ந்து அமெரிக்காவில் இருந்திருக்கிறான். ஒரே இடத்தில் தங்கினார்கள். பிரியாமல் வாழ்ந்தார்கள்.

குப்தாவுக்கு எழுதியிருக்கிறான்.

எனினும் போதாது. ஒருமுறை பார்க்க வேண்டும்.

குப்தா நல்லவன். உற்சாக குணம்கொண்டவன். பூ மெத்தையில் பிறந்தவன். ஆங்கிலத்தில் கூறப் படுவதைப்போல, வாயில் வெள்ளிக் கரண்டியுடன் பிறந்தவன்.

ஒரு அழகான பெண்ணைப் பார்த்தால் அவன் அவளுக்குப் பின்னால் பூமியின் எல்லைவரை செல்வான். இருமாமல்... தொல்லை கொடுக்காமல்...

பர்க்கலியில் இருந்தபோது மூன்று நாட்கள் அவன் காணாமல் போய்விட்டான். மோகன் மிகவும் பதைபதைத்துவிட்டான். அன்று அறிமுகமான ஒரு நண்பனுடன் சேர்ந்து அவன் போயிருக்கிறான். மினியா- போலீஸுக்கு...

மன்னிப்பு கேட்பதற்கு எந்தவொரு தயக்கமும் இல்லை. மிஸ்டர் பானர்ஜியிடம் ஒரு நாளைக்கு எத்தனை முறை மன்னிப்பு கேட்கிறானோ? மனைவியிடமும்...

குப்தா மேஜைக்கு அருகில் அமர்ந்திருந்தபோது, மோகனின் கடிதம் கிடைத்தது. உடனடியாக ஒரு நீண்ட கடிதத்தை எழுதினார். ஒன்பது பக்கங்கள்... டில்லிலிலியில் மோகனுடன் சேர்ந்திருக்கும் சந்தர்ப்பத்தை நினைத்து ஆனந்தம் நான்கு திசைகளிலும்... கட்டாயம் பானர் ஜியை அதைச் செய்யவைப்பான். நந்தினி.... பானர் ஜியின் அன்பான மகள். அவள் கூறுவதற்கு எதிராக பானர்ஜி செயல்படமாட்டார்.

மோகன் நந்தினியைப் பார்த்ததில்லை.

நந்தினிக்கு ஒரு பரிசுப் பொருளை வாங்கிக்கொண்டு செல்லவேண்டும். அது என்னவாக இருக்கவேண்டும்? சரி... சசிகலாவிடம் கேட்கலாம்.

கடிதத்தை எழுதி அனுப்பியபிறகு குப்தா மறந்தி ருப்பான். குப்தாவின் ஒரு நண்பன் வரலாம். அடுத்த நாள் அசோக் ஹோட்டலில் ஒரு இசைக் கச்சேரி இருக்கிறது. அதற்கு அனுமதிச்சீட்டு வேண்டும்.

தொடர்ந்து அனுமதிச்சீட்டிற்கான தேடல்...

அந்த வகையில் நிமிடங்கள், மணிநேரங்கள், நாட்கள் மிகவும் வேகமாகக் கடந்துசென்றன.

குப்தாவை முந்தைய நாள் பார்த்தே ஆகவேண்டும். இப்போதைய திட்டப்படி அதற்கு ஒரு இரவே இருக்கிறது. அந்த இரவில் குப்தா டில்லியில் இல்லாமல் போனால்...?

நந்தினியைப் பார்க்கலாம். அறிமுகப்படுத்திக் கொள்ளலாம்.

மோகனைப் பற்றி குப்தா நாளொன்றுக்கு நூறுமுறை கூறுவான் என்று எழுதுவதுண்டு. ஒரு நாள் நந்தினி குப்தாவிடம் கூறினாள்:

"நீங்கள் விண்ணளவுக்குப் புகழக்கூடிய மோகனை நான் பார்த்ததில்லையே?'

அப்போது நந்தினியை ஆச்சரியப்பட வைப்போம்.

நந்தினி, மிஸ்டர் பானர்ஜியிடம் ஓடுவாள்.

"டாடி! நாளைய நேர்காணலுக்கு ஒரு மிஸ்டர் மோகன் இருக்கிறாரா?'

கேட்டவுடன் பானர்ஜி இவ்வாறு கூறுவதற்கே வழியிருக்கிறது.

"அது உன்னுடைய விஷயமல்ல. தேவையற்றதில் தலையிட வேண்டாம்.'

நந்தினிவிடமாட்டாள். அவள் செல்லமகள். அவள் கொஞ்சுவாள்.

"அது சரியாக இருக்காது டாடி. மோகனுக்கு வேலை தரவேண்டும்.'

"யார் இந்த மோகன்?'

"விநாயக்குடன் அமெரிக்காவில் வசித்த ஆள்'.

கட்டாயம் நந்தினியின் தாய் கூறுவாள்:

"ஓ! எப்போதும் விநாயக் அந்த பெயரைக் கூறுவானே? என்ன விஷயத்தைக் கூறினாலும் மோகன் நுழைந்துவிடுவான்.'

பானர்ஜிக்கு அந்த பெயர் அறிமுகமாகியிருக்குமோ என்னவோ. ஆனால், அந்த புத்திசாலிலிலியான பிஸினஸ் மேனுக்கு ஒரு சந்தேகம் உண்டாகலாம். விநாயக் குப்தாவைப்போல மோகனும் முட்டாளாக இருப் பானோ.

அப்படியென்றால்... பிரச்சினையாகி விடும். வெளுப்பதற்காக தேய்த்தது அழுக்கானதைப்போல...

மோகனைப் புகழ்ந்து ஒரு வர்த்தக நிறுவனத்தில் சேவை புரிந்த சான்றிதழ் இருக்கிறது. அதையும் தாண்டி பெருமைக்குரிய ஒரு கல்வி வரலாறு. குப்தா முட்டாள் என்றால், நண்பன் அவ்வாறு இருக்கவேண்டுமா?

ஆயிரத்து ஐந்நூறு- இரண்டாயிரத்து ஐந்நூறு... இதுதான் சம்பளம். இங்கு எண்ணூறு- ஆயிரத்து முந்நூறு. இங்கிருக்கும் ஐந்நூறு டில்லிலிலியின் ஆயிரத்து ஐந்நூறைவிட மேல். ஆனால், இங்கு ஈர்ப்பதற்கு என்ன இருக்கிறது? நல்ல உணவு வேண்டுமென்றால் நடக்காது. பொழுதுபோக்கிற்கு வழி இருக்கிறதா? இங்கு வாழ்க்கை வெறுப்படைந்துவிடும். வளர்ச்சிக்கான வழி அங்கு... டில்லிலிலியில் தெரியலாம்.

வாடகை இல்லாத வீடு, கார். அது ஒரு பெரிய விஷயம்.

அறிமுக வட்டம் பெரிதாகும்.

அவ்வப்போது வெளிநாடுகளுக்குச் செல்லலாம்.

பெரிய வங்கி சேமிப்பு- அதையும் உண்டாக்கலாம்.

இந்த சாம்பாரும் அவியலும் மாறுமே!

என்ன கூறினாலும், பயணம் ஒரு களைப்படையச் செய்யும் விஷயம்தான். விமானமாக இருந்தாலும்... சாயங்காலம் டில்லிலிலியை அடையும்போது தளர்ந்துபோய் விடுவான். ஜன்பத்தில் ஒரு அறை முன்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. பாலம் விமான நிலையத்தில் இறங்கியவுடன், கோச்சில் கனாட் ப்ளேஸிலிருக்கும் இந்தியன் ஏர்லைன்ஸ் அலுவலகத்திற்குச் சென்றுவிட்டு, ஜன்பத்திற்குச் செல்வது என்றால்... மிகவும் தாமதமாகும். வாடகைக்காருக்கு பதினைந்தோ இருபதோ ரூபாய்களைக் கொடுக்கலாம்.

குப்தாவுக்கு எழுதியிருக்கிறான். ஞாபகத்தில் இருந்தால் அவன் காரில் வந்துசேர்வான். குப்தா வரவில்லையென்றால் அதிகமாக இருட்டுவதற்கு முன்பு குப்தாவின் வீட்டிற்குப் போய்ச் சேரவேண்டும்.

ஒரு நாளுக்கு முன்பே புறப்பட்டிருக்க வேண்டும்.

ஆலுவாய்க்குச் சென்று தந்தையைப் பார்த்துவிட்டு வந்து, ஒரு மணிநேரம்தான் ஆகியிருக்கிறது.

அப்பாவும் அப்போது இப்படித்தான் கூறினார்... ஒரு நாளுக்கு முன்பே கிளம்பியிருக்க வேண்டும். விமானப்பயணச் சீட்டு சீக்கிரம் கிடைக்கவில்லை. ஆனால், அவரைப் பொருத்தவரையில் அந்த பதில் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லை. எந்தவொரு விஷயத்திலும் புறப்படுவது சரியாக திட்டமிட்டபடி இருக்கவேண்டும். எந்தவொன்றிற்கும் ஒரு திட்டம் இருக்கவேண்டும். எது வந்தாலும், அதற்கேற்றபடி செயல்படவும் வேண்டும்.

பால்ய வயதிலிருந்தே தரப்பட்ட ஒரு அறிவுரை இது.

அன்றும் தெளிவாக விளக்கித்தான் அறிவுரையைக் கூறி னார். முந்தைய நாள் இரவில் டில்லிலிலியை அடையவேண்டும்...

பிறகு... குப்தாவைப் பார்க்கவேண்டும்... எதுவும் சரியாக நடக்குமென்று தந்தைக்குத் தோன்றவில்லை.

நடக்கும்... நடக்க வைப்போம்... மோகன் தீர்மானித்தது இப்படித்தான்.

தொலைபேசி மணி ஒலிலிலித்தது. மோகன் ரிஸீவரைக் கையில் எடுத்தான்.

அது ஒரு லைட்னிங் கால். ஆலுவாயிலிலிலிருந்து...

ஆலுவாயிலிருந்து லைட்னிங் கால்! மோகன் பதைபதைத்துவிட்டான். நடுங்கச் செய்யும் தகவல்!

மோகனின் தந்தை மரணடைந்துவிட்டார்!

ஒரு வெறுப்பு தோன்றியது. ஏறிப்படுத்தார். இறந்து விட்டார்!

மோகனின் வளர்ச்சிக்கு தந்தை தடையாக இருந்தாரா? எந்தச் சமயத்திலும் அது உண்டானதில்லை. பிறகு... இது?

அப்பா! எல்லாருக்கும் தந்தை பெரிய உறவுதான். மகனுக்கு எதையுமே செய்திராத மனிதராக தந்தை இருந்தாலும், அப்பா பெரிய உறவுதான். தந்தைக்கு மோகன் ஒரே மகன். வேறு மகனோ மகளோ யாரும் தந்தைக்கு இல்லை.

ஆலுவாயிலிலிலிருந்த வீட்டில் அழுவதற்கு ஒரு ஆள்கூட இல்லை. மரணமடைந்த மனிதரின் வேலைக்காரன் மட்டும் மிகவும் அமைதியாக கண்ணீர் விட்டுக்கொண்டிருந்தான்.

interview

பேரமைதியில் மூழ்கியிருக்கும் வீடு.

இரவு எட்டு மணிக்கு மோகன் வந்தான். உறங்கிக் கொண்டிருப்பதைப்போல படுத்திருந்தார். இறந்து விட்டார் என்று யார் கூறியது? சற்று குலுக்கி அழைத்தால் கண் விழிப்பார். ஒரே மகன் வந்திருக் கிறான். அவருடைய வாழ்வின் உழைப்பு முழுவதும்... அவருடைய அனைத்தும்...

மோகன் ஒரு நிமிடம் அந்த முகத்தையே பார்த்துக்கொண்டு நின்றிருந்தான். கண்கள் நிறைந்தன. மோகன் முகத்தைத் துடைத்துக் கொண்டான்.

அழுவதற்கும் மூக்கைச் சிந்துவதற்கும் நேரமில்லை.

பிணத்தை எரிப்பதற்கான ஏற்பாடுகளை உடனடியாகச் செய்தான்.

ஒரு மனிதர் இறந்துவிட்டால் பிறகு என்ன செய்யவேண்டும்? அந்த சரீரத்தை அடக்கம் செய்யவேண்டும். ஒரு நிமிடத்திற்கு முன்பே அதைச் செய்யவேண்டும். அங்கு படுத்திருக்கும் மனிதர் மூலம்தான் மோகன் இப்படி ஆனான். ஆனால், அவர் இறந்துவிட்டார்.

தகவலைத் தெரிந்துகொண்டார்கள். ஆட்கள் வந்தார்கள். பெரிய ஆட்களும் சிறிய ஆட்களும்... தந்தையின் நண்பர்களான இரண்டு வெள்ளைக்காரர்கள் இருக்கிறார்கள்- ஆலுவாயில்.

அவர்கள் வந்தார்கள்.

மோகன் கைகுலுக்கினான். அவர்கள் இரங்கலை வெளிப்படுத்தினார்கள்- தாழ்வான குரலிலில்.

மோகன் நன்றி கூறினான்.

அதிகாலை இரண்டு மணிக்கு பிண அடக்கம் நடைபெற்றது. இடத்தை மூடும்போது ஒரு கர்மம் இருக்கிறது. அதையும் மோகன் செய்துமுடித்தான். உடனே புறப்பட வேண்டும்.

அப்பா இன்று அப்பா அல்ல. கனல்...

காலை பத்து மணி விமானத்திற்கு பயணச்சீட்டு வாங்கியிருந்தான்.

அப்பா இறந்துவிட்டார். மரணம் எல்லாருக்கும் இருக்கிறது. ஒருவர் இறந்துவிட்டார் என்றாலும், உயிருடன் இருப்பவர்கள் வாழவேண்டுமல்லவா?

மோகன் அறைகள் அனைத்தையும் பூட்டினான். சமையலறையை மட்டும் வேலைக்காரனுக்காகத் திறந்துவிட்டான். அவனிடம் ஐம்பது ரூபாயையும் கொடுத்தான்.

ஐந்து நாட்களுக்குள் மோகன் திரும்பிவிடுவான்.

அங்கு கூடியிருந்தவர்கள் திகைப்படைந்து விட்டார்கள்.

விமானம் உயரும்போது தன் தந்தையை மோகன் நினைத்துப்பார்த்தான். தந்தை இப்போது நினைவில் மட்டுமே... சரி...

அருகிலிலிலிருந்த பயணி மோகனுக்கு நன்கு தெரிந்தவர். ஒரு பெரிய நிறுவனத்தின் நிர்வாகி. அவர் பம்பாய்க்குச் செல்கிறார்.

இந்தியன் ஏர்லைன்ஸில் கூட்டம் அதிகமாக இருப்பதைப் பற்றி அவர் உரையாடலை ஆரம்பித்தார். எனினும் கடுமையான நஷ்டமாம்!

அது நிர்வாகத்திலிலிலிருக்கும் பிரச்சினையால்தான் என்று மோகன் கூறினான். சமீபத்தில் பிரசுரிக்கப்பட்ட கணக்குகளைக் கூறி மோகன் தன்னுடைய வாதத்தை சமர்ப்பித்தான்.

இப்போது சிதை எரிந்துகொண்டிருக்குமோ?

இந்தியாவின் திட்டவரைதல் அறிவியல்ரீதியாக அல்லாதது. அந்த விஷயத்தில் இருவருக்கும் கருத்து ஒற்றுமை இருந்தது. உதாரணத்திற்கு- நம்முடைய உருக்காலைகளில் தயாரிக்கப்படும் இரும்புக்கும் உருக்குக்கும் சந்தை இல்லை. அங்கு உற்பத்தி செய்யப்படும் பொருளை இங்கேயே பயன்படுத்த வேண்டுமென்பதுதான் நோக்கம். பல காரியங்களையும் செயல் வடிவில் கொண்டுவருவதற்குத் தாமதம் உண்டானது. இரும்பு வெறுமனே கிடக்கிறது.

பிலாயில் ஒரு தொழிற்சாலை செயல்படாமல், பணியை நிறுத்தி வைத்திருக்கிறார்கள்.

பம்பாயிலிலிலிருந்து டில்லிலிலிக்குப் பறக்கும்போது மழை பெய்து கொண்டிலிலிருந்தது. டில்லியில் மழை இருக்குமோ?

இப்போது சிதை அணைந்திருக்கும்.

விமானப் பணிப்பெண் அளவான உடலமைப்பையும் அழகான முகத்தையும் கொண்டிருந்தாள். நல்ல முகம்... முகத்திற்குப் பொருத்தமான மூக்கு... பிரகாசமான முகத்தைக் கொண்டவள். அவளுடைய சிரிப்புக்கு ஒரு சிறப்புத்தன்மை இருந்தது.

""சில நிமிடங்களுக்குள் பாலம் விமான நிலையத்தில் நாம் இறங்கப் போகிறோம்.''

விமானப் பணிப்பெண் அறிவித்தாள்.

மணி ஏழரை.

விநாயக் குப்தா வந்திருப்பானா? அப்படியென் றால் அதிர்ஷ்டம்! தந்தையின் மரணத்தைப்பற்றி விநாயக்கிடம் கூறவேண்டுமா?

வேண்டாம்... அவன் உணர்ச்சிவசப்படுவான். ஒரு நிமிட நேரத்திற்காவது... நல்ல ஐஸ்கிரீமைப் பார்த்தால், அதற்கு அடுத்த நிமிடமே அதை வாங்குவதற்காக ஓடுவான்.

அந்த செய்தியை குப்தாவிடம் கூறவேண்டாம்.

குப்தாவும், அருகில் நந்தினியும் நின்றிருந்தார்கள்.

அவள் அழகாக இருந்தாள். சசிகலா வைவிட.. இந்த முட்டாளுக்கு இப்படிப் பட்ட ஒரு பெண் கிடைத்திருக்கிறாளே!

குப்தா மோகனைக் கட்டிப் பிடித்தான்.

மோகன், குப்தாவையும்...

குப்தா கேட்டான்:

""நீ ஏன் சசிகலாவை அழைத்து வரவில்லை?''

""சசிகலாவை அழைத்து வருவதாக நான் எழுதவில்லையே?''

நந்தினி தூய ஆங்கிலத்தில் கூறினாள்:

""விநாயக்கின் திருட்டுத்தனம் வெளியே வந்துவிட்டது. அவ்வாறு மிஸ்டர் மோகன், நீங்கள் எழுதியிருப்பதாக என்னிடம் கூறினார். நான் சசிகலாவை வரவேற்பதற்காக வந்தேன்.''

குப்தா துள்ளிக் குதித்து சிரித்தான்.

நந்தினி தொடர்ந்து கூறினாள்:

""இன்று ஒரு ஆங்கிலப் படம் இருப்பதாகக்கூறி விநாயக் ஓடினார். நான் நீங்கள் வரப்போகும் விஷயத்தை ஞாபகப்படுத்தி, பிடித்து நிறுத்தினேன்.''

மோகன் கூறினான்:

""விநாயக் எப்போதுமே அப்படித்தான்.''

விநாயக் கேட்டான்:

""சசிகலா எப்படி இருக்கிறாள்?''

""நன்றாக இருக்கிறாள்.''

மோகன் அர்த்தம் நிறைந்த சிரிப்பை வெளிப்படுத்தியவாறு தொடர்ந்தான்:

""நாம் ஒன்றாகச் சேர்வோம்.''

""மோகன், உன் அப்பா எப்படி இருக்கிறார்?''

மோகன் சற்று தயங்கினான். கூறினால் என்ன தோன்றும்?

அந்த கேள்வியைக் கேட்காததைப்போல நந்தினியிடம் கேட்டான்:

""விநாயக் இன்று பார்க்க நினைத்திருந்த திரைப்படம் என்ன?''

விநாயக் பதில் கூறினான்:

""ஓ... மோகன்... ஒரு பயங்கரமான திரைப்படம்! சொல்லக்கேட்டேன். கஷ்டம்! இன்று என்னால் அதைப் பார்க்க முடியவில்லை.''

ஆலுவாயில் அந்த சிதையின் நெருப்பும் வெப்பமும் போயிருக்கும்.

மோகன் கேட்டான்:

""நாளையும் இருக்குமா?''

uday010119
இதையும் படியுங்கள்
Subscribe