Advertisment

மதுரையில் ஒரு சங்கப் புலவர் -பொற்கைப் பாண்டியனுடன் ஒரு நேர்காணல்

/idhalgal/eniya-utayam/interview-bungalow-pandian-madurai

ண்மைக் காலமாக அதிகம் பேசப்படும் கவிஞர், "மீண்டும் சங்கப் புலவர்கள்' என்ற நிகழ்வுகள் மூலம் சங்க இலக்கியங்களை வளரும் இளம் கவிஞர்களிடம் கொண்டு சேர்ப்பவர், நூற்றுக்கணக்கான கவிஞர்களுக்கு மேடை வாய்ப்புத் தருபவர் மதுரை கவிஞர் பொற்கைப் பாண்டியன். அவருடன் ஒரு நேர்காணல்...

உங்கள் ஊர் குடும்பம் பற்றிச் சொல்லுங்கள்?

Advertisment

ஊர் புல்வாய்க்கரை, நரிக்குடி ஒன்றியம் விருதுநகர் மாவட்டம். அப்பா இராமச்சந்திரன், அம்மா செம்பாயி அம்மாள். மனைவி பூங்கொடி, மகள் தாமரை, மகன் தொல்காப்பியன், விவசாயக் குடும்பம், தற்போது வாழ்வது மதுரையில்.

கவிதை ஆர்வம் வந்தது எப்படி?

எம் அம்மாயிமார்கள், அம்மா, சின்னம்மா மார்கள் பாடிய தாலாட்டுப் பாடல்கள் மூன்று வயதில் என் மூளைக்குள் உட்கார்ந்தன.

வண்டாடப்பூ மலர- உன்னை

வையகத்தார் கொண்டாட

செண்டாட செடி மலராட- உன்னை

தேசத்தார் கொண்டாட

என அவர்கள் பாடியது இன்றளவும் என்னுள் ஒலித்துக்கொண்டிருக்கிறது.

எங்கள் ஊர் ஒயிலாட்டப் பாடல்கள், நாடகப் பாடல்கள், கிராமத்து மனிதர்களின் எகனை, (எதுகை, மோனை) மொகனைப் பாடல்கள், நான் கொண்ட பிள்ளைக் காதல் பாடல்கள் போன்றவை என்னை வார்த்தெடுத்தன.

Advertisment

இலக்கண இலக்கியங்களில் சிறப் பாக விளங்குகின்றீர்கள் இந்த ஆற்றல் எப்படி வந்தது?

வழிகாட்டிகளாக அமைந்த ஆசிரியப் பெருமக்களையே இது சேரும். என் தமிழாசிரியர் சடாச்சரம் அவர்களும், என் ஆன்மிக குருநாதர் சண்முகநாத பிள்ளை அவர்களின் வழிகாட்டலும் என்னை ஊக்கப் படுத்தின.

ஒருவர் இலக்கண இலக்கியங் களின் குரு. மற்றொருவர் தேவாரம், திருவாசகம் சைவ, வைணவ நூற்களை அறிமுகப்படுத்தியவர்.

இலக்கியங்களைக் கடகட வெ

ண்மைக் காலமாக அதிகம் பேசப்படும் கவிஞர், "மீண்டும் சங்கப் புலவர்கள்' என்ற நிகழ்வுகள் மூலம் சங்க இலக்கியங்களை வளரும் இளம் கவிஞர்களிடம் கொண்டு சேர்ப்பவர், நூற்றுக்கணக்கான கவிஞர்களுக்கு மேடை வாய்ப்புத் தருபவர் மதுரை கவிஞர் பொற்கைப் பாண்டியன். அவருடன் ஒரு நேர்காணல்...

உங்கள் ஊர் குடும்பம் பற்றிச் சொல்லுங்கள்?

Advertisment

ஊர் புல்வாய்க்கரை, நரிக்குடி ஒன்றியம் விருதுநகர் மாவட்டம். அப்பா இராமச்சந்திரன், அம்மா செம்பாயி அம்மாள். மனைவி பூங்கொடி, மகள் தாமரை, மகன் தொல்காப்பியன், விவசாயக் குடும்பம், தற்போது வாழ்வது மதுரையில்.

கவிதை ஆர்வம் வந்தது எப்படி?

எம் அம்மாயிமார்கள், அம்மா, சின்னம்மா மார்கள் பாடிய தாலாட்டுப் பாடல்கள் மூன்று வயதில் என் மூளைக்குள் உட்கார்ந்தன.

வண்டாடப்பூ மலர- உன்னை

வையகத்தார் கொண்டாட

செண்டாட செடி மலராட- உன்னை

தேசத்தார் கொண்டாட

என அவர்கள் பாடியது இன்றளவும் என்னுள் ஒலித்துக்கொண்டிருக்கிறது.

எங்கள் ஊர் ஒயிலாட்டப் பாடல்கள், நாடகப் பாடல்கள், கிராமத்து மனிதர்களின் எகனை, (எதுகை, மோனை) மொகனைப் பாடல்கள், நான் கொண்ட பிள்ளைக் காதல் பாடல்கள் போன்றவை என்னை வார்த்தெடுத்தன.

Advertisment

இலக்கண இலக்கியங்களில் சிறப் பாக விளங்குகின்றீர்கள் இந்த ஆற்றல் எப்படி வந்தது?

வழிகாட்டிகளாக அமைந்த ஆசிரியப் பெருமக்களையே இது சேரும். என் தமிழாசிரியர் சடாச்சரம் அவர்களும், என் ஆன்மிக குருநாதர் சண்முகநாத பிள்ளை அவர்களின் வழிகாட்டலும் என்னை ஊக்கப் படுத்தின.

ஒருவர் இலக்கண இலக்கியங் களின் குரு. மற்றொருவர் தேவாரம், திருவாசகம் சைவ, வைணவ நூற்களை அறிமுகப்படுத்தியவர்.

இலக்கியங்களைக் கடகட வென்று மனப் பாடமாகச் சொல்லும் உத்தி எப்படி வந்தது?

உத்தி எல்லாம் ஒன்றும் இல்லை. மூன்று வயதிலிருந்தே கேட்டவற்றில் கவனம், வாசிப்பதில் கவனம் என கவனித்ததுதான், அந்த உத்தி. தொடர்ந்து கவியரங்குகளில் கலக்கு கிறீர்கள், இதுவரை எத்தனை கவியரங்குகள் நடத்தியிருக்கின்றீர்கள்?

எண்ணவில்லை. தோராயமாக மூவாயிரத் திற்கும் மேல் இருக்கும். அவ்வளவும் மக்கள் முன்னிலையில்தான். கிராமம், தெருக்கள், நாடக மேடைகள், கோவில் விழாக்கள், காதணி விழாக்கள் என வெகுஜன மக்களைக் கவியரங்கு கேட்க வைத்ததும், வைத்துக்கொண்டிருப்பதும் எம் சாதனைகள் எனச் சொல்லலாம்.

உங்கள் முதல் கவியரங்கம் எங்கே, யார் தலைமையில் நடந்தது?

மதுரையில் மீரா தலைமையில் கவிதைப் போட்டியில் பரிசு பெற்றேன். பாராட்டியவர் முன்னாள் சபாநாயகர். அமைச்சர் மறைந்த காளிமுத்து பாண்டியனின் வாள்வீச்சு போன்ற வார்த்தைகள் இருந்ததாகப் பாராட்டினார். நான் பாண்டியனுக்கு முன்னால் பொற்கையை இணைத்துக்கொண்டேன். அன்று முதல் இராஜேந்திரன் என்ற நான், பொற்கைப் பாண்டிய னானேன்.

dd

மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையிலிருந்து வெளிவந்த, வருகின்ற மீனாட்சி மருத்துவ மலரின் இணையாசிரியர், மகிழ்ச்சி இதழின் ஆசிரியர். ஒரு கவியரங்கில் என் கவிதையைக் கேட்ட நிறுவனர் டாக்டர். ந. சேதுராமன், எனக்கு இப்பணியைக் கொடுத்தார். அவர் மகன் தலைவர் குருசங்கர், அதே தமிழ் உணர்வோடு இன்றளவும் என்னை ஆற்றுப் படுத்துவதால் 27 ஆண்டுகளாக இங்கு தமிழ்ப்பணி செய்கிறேன். மருத்துவமனையில் தமிழ்ப்பணி செய்வது நானாகத்தான் இருப்பேன்.

அண்மையில் உங்கள் இலக்கியப்பணி சங்க இலக்கியத்தில் வேகம் எடுத்ததன் நோக்கம் என்ன?

முகநூல் வந்தபின் நிறைய கவிஞர்கள் உருவாகி உள்ளனர். வெளியேயும் தெரியவந்தனர். அவர்களில் வளரும் கவிஞர்களுக்கு நம் தமிழின் வேர்களான சங்க இலக்கியங்களை அறிமுகப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் பொற்கைப் பாண்டியன் கவிதா மண்டலம் என்ற ஒரு அமைப்பை ஏற்படுத்தி "மீண்டும் சங்கப்புலவர்கள்' என்ற முழக்கத்துடன் அகம், புறம் உள்ளிட்ட செவ்வியல் இலக்கியங்களை அந்தந்தப் புலவர்களாகவே மாறி தம் பாணியில் கவிபாடச் செய்கிறோம். இதற்கு வரவேற்பு எப்படி?

மதுரை உலகத்தமிழ்ச் சங்கத்தில் துவங்கிய முதல் நிகழ்வினை, சென்னை கமலாஸ் சினிமா அதிபர் வி.என்.சி.டி. வள்ளியப்பன், துவக்கி வைத்தார்.

அமைச்சர் மாண்புமிகு ஆர்.பி. உதயகுமார் வாழ்த்துரை வழங்க 100 கவிஞர்கள் சங்கப்புலவர்களாக உருமாறிப் பாடினார்கள்.

இரண்டாம் நிகழ்வை திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியின் உறுப்பினர் டாக்டர். ப. சரவணன் துவங்கி வைக்க 100 புலவர்கள் புறநானூறு பாடினார்கள்.

மூன்றாம் நிகழ்வை திருச்சியைச் சேர்ந்த திருமதி.கவி செல்வா, ஏற்பாட்டில் துவங்கி வைக்க, மாநிலங் களவையின் உறுப்பினர் திருச்சி. சிவா வாழ்த்துரை வழங்க 100 கவிஞர்கள் அகநானூறு பாடினார்கள்.

நான்காம் நிகழ்ச்சியை மதுரை மதச்சார்பற்ற ஜனதா கட்சியின் ஜான்மோசஸ் துவங்கி வைக்க 100 கவிஞர்கள் தமிழ்நாடு பொன்விழா என்ற தலைப்பில் பாடினார்கள்.

இடையிடையே சங்க இலக்கியம், மண்ணும் மக்களும் என்ற தலைப்புகளில், கவியரங்குகள் என மக்களின் அமோக வரவேற்புடன், தொடர்ச்சியாக மண்டலம் தன் பயணத்தில் தொடர்ந்து தமிழ்ச் சொந்தங்களை நோக்கி பயணிக்கிறது.

கவிதா மண்டலம் என்ற சொல் எப்படி உருவாக்கினீர்கள்?

பாரதியிடம் கடன் வாங்கினேன். சுப்ரமணிய பாரதி கவிதா மண்டலம் என்பது போல, பொற்கைப் பாண்டியன் கவிதா மண்டலம் எனத் துவங்கினேன்.

கூடலை நோக்கி அந்நாள் புலவர்கள் கூடியதுபோல மீண்டும் சங்கப் புலவர்களை மதுரையில்கூட வைத்தது எம் சிறப்பு.

நீங்கள் எழுதிய நூல்கள் எத்தனை அதில் உங்களுக்குப் பிடித்தவை எவை?

இதுவரை 14 நூல்கள் எழுதியுள்ளேன். அதில் எங்கள் ஊருக்கு தன் தங்கைக்காக மன்னர் திருமலை வாய்க்கால் அமைத்த செவிவழிச் செய்தியை "நூபுர கங்கை' என்ற வரலாற்றுப் புதினமாக்கினேன்.

மருது சகோதரர்களின் சுதந்திரப் போராட்டத்தை மையப்படுத்தி "மருதுகாவியம்' என்ற வசன கவிதை நூல் எழுதினேன். உள்ளங்கள் "பேசும் மொழி' என்று காமத்துப் பாலைக் கவிதையாக்கினேன்.

பாவை இலக்கணத்தோடு தமிழ்ப்பாவை என்ற தமிழர்களின் பண்பாட்டு வேர்களை அடையாளப்படுத்தும் நூல் எழுதினேன். கவிதைக்கு மெய்யழகு என்ற கவிதை நூல், என் கிராமத்து மக்களை மையப்படுத்தி, அவர்களின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு படைத்த கண்மாய்க்கரை மனிதர்கள் என, நான் படைத்திட்ட நூல்களில் எனக்குப் பிடித்த நூல்கள்.

உங்கள் கவிதைப் பயணத்திற்கு முன்னோடிகள் என்று எவரைக் குறிப்பிடுகின்றீர்கள்?

தமிழ்ப் பற்றை ஊட்டிய பாவேந்தர், தமிழர்ணவை ஊட்டிய கலைஞர், கவிதை வெறியை ஊட்டிய கண்ணதாசன் இவர்கள் என் நன்றிக்குரியவர்கள்.

சிறந்த நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் உள்ளீர்கள். நிகழ்ச்சித் தொகுப்பில் உங்கள் சாதனைகளைப் பாராட்டியவர்களை சொல்லலாமா?

பட்டியலிட்டால் நீளும். தமிழகத்தின் எல்லாத் துறைகளின் ஆளுமையை என் நிகழ்ச்சித் தொகுப்பை வியந்து ரசித்துள்ளார்கள். இந்திய நாட்டின் முதல் குடிமகனாகவும், மாணவச் செல்வங்களின் ஆசானா கவும் இருந்து நம் நாட்டை வல்லரசாக்கும் பொறுப்பு மாணவர்களுடையது என்று மாணவர்களோடு மாணவர்களாக வாழ்ந்து மறைந்த, மக்களின் ஜனாதிபதி மாண்புமிகு ஏ.பி.ஜே. அப்துல் கலாம் மதுரை வருகையின்போது நான்கு முறை அவர் கலந்துகொண்ட நிகழ்வைத் தொகுத்து வழங்கியுள்ளேன்.

அய்யா அவர்கள் தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனை நிகழ்ச்சிக்கு வருகை தந்தபோது "புலவரய்யா நொறுக்குகின்றீர்கள்' என்ற பாராட்டியது சாகித்ய அகாடமி விருதை எல்லாம் மிஞ்சியது. என் வாழ்நாள் பேறாக அவர் வாழ்த்திப் பாராட்டியது என்றும் என் மனதை விட்டு நீங்கா இடம்பெற்றது.

தற்போது நீங்கள் எழுதி வெளியிட இருக்கும் நூலினைப் பற்றி சொல்லுங்கள்?

தமிழர்கள் வீழ்ந்ததும், எழுந்ததும் பற்றிய கருப்பொருளுடன் "ஆண்ட மண்' என்ற கவிதைக் காவியம் வெளிவர இருக்கிறது. என் நூல்களின் மணி மகுடமாக இந்த நூல் விளங்கும். தங்களை எப்படி கோடம்பாக்கம் அழைக்காமல் இருக்கிறது?

அழைக்காமல் இல்லை, அங்கேயும் கால் தடம் பதித்துள்ளேன். விரைவில் அது பற்றிய செய்திகள் வரும் என்று காத்திருக்கின்றேன். வந்தவுடன் கண்டிப்பாக தங்களை அலைபேசியில் அழைத்து உங்களோடும், நம் தமிழ்ச் சொந்தங்களுடனும் பகிர்ந்துகொள்கின்றேன்.

உங்கள் தமிழ் இலக்கிய எழுத்துப் பணியில் அடுத்த இலக்கு?

தமிழர்களின் செவ்வியல் இலக்கியமான சங்க இலக்கியங்களை தமிழர்களிடம் கொண்டு சேர்க்கும் நிகழ்வுகளைத் தொடர்ந்து நடத்துவேன்.

இதில் பின் வாங்க மாட்டேன். சங்கப்புலவர் களை விஞ்சிய புலவன் உலகில் எங்கும் இல்லை.

ஒப்பனையும், கற்பனையும் அற்ற நம் வாழ்வியல் நூல் இவை என்று ஒட்டுமொத்த தமிழர்கள் உணரும்படிச் செய்வதே எம் இலக்கு.

சந்திப்பு : சுந்தர் கே. சங்கர்

uday010220
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe