சிறிய கண்கள் மெதுவாகத் திறந்தன. வெளிச்சத்தில் கூசியதைப்போல உடனடியாக அவை மூடிக்கொண்டன. ஒரு நீண்ட சோம்பல் முறித்தல்... விழிப்பு, உறக்கம் ஆகியவற்றின் எல்லையில் ஒரு நிமிடம்...
உறக்கம் விடைபெற்றுக்கொண்டது. விழிப்பு வந்து சேரவுமில்லை.
சுருக்கியிருப்பதை விரிக்காத சிறிய கைகளைக்கொண்டு கசக்கிக் கசக்கி மீண்டும் கண்களைத் திறந்தான். சுற்றிலும் சூனியம். மரத்துப்போன அமைதி. மறைந்துபோன ஒரு இனிய கனவின் போதை அந்தக் கண்களில் பதிந்து நின்றிருந்தது.
நினைவும் மறதியும் சேர்ந்து அழகான கன்னங்களில் நிழலை உண்டாக்கின. நினைத்துப் பார்த்திராத செயல் பாட்டைக் கண்டு திகைப்புண்டானது. யாரையோ எதற்கோ எதிர்பார்த்துக்கொண்டிருப்பதைப்போல அமைதியற்று அவன் சற்று படுத்திருந்தான். சிரிக்கக்கூடிய ஒரு முகம், இனிய ஒரு தீண்டல், மென்மையான தாலாட்டு... கனவு களால் உண்டாகக்கூடிய சந்தோஷத்தைவிட சுகமான அந்த அனுபவங்கள்... இல்லை- அது அங்கில்லை.
கண்களைத் திறந்து நான்கு பக்கங்களிலும் பார்த்தான். கைகளையும் கால்களையும் தரையில்படச் செய்து அடித்தான். பொறுமையற்று சில சத்தங்களை எழுப்பினான். இவ்வளவு நாட்களுக்கிடையில் தான் கற்ற வித்தைகள் அனைத்தையும் வெளிப்படுத்தினான். எனினும், பயனில்லை. அழகான அந்த முகமும் கொஞ்சக்கூடிய அந்த கைகளும் தூரத்திலேயே இருந்தன. அவனுக்கு அழுவதில் அந்த அளவுக்கு ஆர்வம் உண்டாகவில்லை. அதுவும்... நிறைய புன்னகைகள் மலர்ந்த ஒரு அருமையான தூக்கத்திற்குப் பிறகு... அலட்சியமாக சற்று நெளிந்துபுரண்டான். பிறகு ஏதோ உணர்வால் தூண்டப்பட்டதைப்போல பிஞ்சு விரல்களை வாயில் வைத்து சூப்பி சுவைக்க ஆரம்பித்தான்.
அமைதியான சூழல்... இனம்புரியாத தனிமை... சுற்றிலும் அவன் கண்களை செலுத்தினான். கண்களைச் சுருக்கி ஒருவகையான கையற்ற நிலையில் சுற்றிலும் உள்ளவற்றைப் பார்த்துக்கொண்டிருந்தான். சுவரிலிருந்த முகம் பார்க்கும் கண்ணாடியில் வெளிச்சம் விழுந்து பிரதிபலிப்பதைப் பார்த்தவாறு சிறிது நேரம் படுத்திருந்தான்.
இதற்கிடையில் நேரம் காட்டும் கடிகாரம் "டிக்... டிக்...' என்று ஆடிக்கொண்டிருந்தது. சலனமற்றதிலிருந்து சலனத்தை நோக்கிப் பதிந

இதற்கிடையில் நேரம் காட்டும் கடிகாரம் "டிக்... டிக்...' என்று ஆடிக்கொண்டிருந்தது. சலனமற்றதிலிருந்து சலனத்தை நோக்கிப் பதிந்தன அந்த கண்கள். அரை நிமிடம் தாண்டவில்லை. கொடியில் கிடந்த சிவப்புப் புடவையின் அடர்த்தியான நிறம் அவனுடைய கண்களில் பதிந்தது.
அனைத்துமே புதுமைகள்...
அனைத்துமே அற்புதங்கள்... எந்த ஒன்றிலுமே அவனுடைய கண்கள் தங்கிநிற்கவில்லை. எதுவுமே புரிய வில்லை.
அவனுடைய மூக்கிற்கு முன்னால் சிறிய இரைச்சலுடன் பொன் நிறத்திலிருந்த ஒரு வண்டு பறந்து வந்தது. மெல்லிய வெளிச்சத்தில் ஒரு பிரகாச வட்டத்தை உண்டாக்கியவாறு சுற்றிச்சுற்றி அது மேல்நோக்கி உயர்ந்துகொண்டிருந்தது. மீண்டும் திரும்பி இறங்கி அவனுடைய செவியைச்சுற்றி வட்டம் போட்டுவிட்டு, மேல்நோக்கிச் சென்று, மேற்கூரையிலிருந்து தொங்கிக்கொண்டிருந்த ஒரு சிலந்தி வலையில் சிக்கிக்கொண்டது. பார்த்துப் பார்த்து கண்கள் வலித்தபோது, தளர்வடைந்து சற்று பெருமூச்சு விட்டான். அவன் தலையைத் திருப்பிக் கொண்டான்.
சம்பவங்கள் நிறைந்த நான்கைந்து நிமிடங்கள்... பிறகும் கீழே... அந்த அறையின் மூலையில்... அந்த பெரிய கட்டிலுக்கும் பெட்டிக்கும் மத்தியில் அசாதாரணமான ஒரு புதிய சத்தம். அவனை சிரிக்கவைக்கும் தாயின், அழவைக்கும் வேலைக்காரியின் சத்தத்தைவிட மெல்லியது அது. சற்றுமுன்பு அறிமுகமான அந்தப் பொன்வண்டின் முனகலைவிட கனமானது.
பதைபதைப்புடன் அவன் அங்கு மிங்குமாகத் திரும்பினான். ஒரு பூனை... மினுமினுக்கும் கண்களையும், கருத்த கழுத்தைச் சுற்றியிருக்கும் வயிற்றின் அடிப்பகுதியையும், வெள்ளைநிறப் புள்ளிகளையும்கொண்ட ஒரு தடிமனான ஆண் பூனை.
சந்தோஷப் பெருக்குடன் ஒரு சத்தத்தை உண்டாக்கியவாறு அவன் கைகளையும் கால்களையும் அசைத்தான். தான் பார்த்த பொருட்கள் அவனுக்குப் பிடித்திருந்தன என தோன்றியது. அதைப் பிடிப்பதற்காக அந்த பிஞ்சுக் கைகள் நீண்டன. சரிந்து... பாதி சரீரம் கவிழ்ந்து... முழங்கால்களை ஊன்றி, குதித்து...
அந்த முயற்சியில் போர்வை முழுவதும் நீங்கிவிட்டது. அழகிய சரீரம் தரையில் பட்டு வேதனையை உண்டாக்கியது. எனினும், அவன் மேலும் சத்தம்போட்டு சிரித்துக்கொண்டிருந்தான். எந்த அளவுக்கு அற்புதமான ஒரு காட்சி! என்ன ஒரு சத்தம்!
ஆனால் அந்தப் பூனை இவையெதையும் கவனிக்கவே இல்லை. இப்படியொரு விஷயம் அங்கு நடந்துகொண்டிருக்கிறது என்ற உணர்வே அதற்கில்லை. ஒரு சுவாரசியமான சத்தத்துடன் வாலைச் சுழற்றி, செவியைக் கூர்மைப்படுத்திக்கொண்டு... அந்தப் பெட்டிக்கு மத்தியிலிருந்த ஒரு பூச்சியின்மீது இலக்கு வைத்து... ஒரு உடனடி பாய்ச்சல்.... ஒன்றிரண்டு புட்டிகள் உடைந்தன. ஒரு தகரப்பெட்டி கீழே விழுந்தது. சில நொடிகளில் பூச்சியை வாய்க்குள்ளாக்கிக்கொண்டு பூனை வேகமாக வெளியே ஓடியது.
இப்படி ஒரு காட்சி நடந்துமுடிந்தது. எனினும், அவனுக்கு மொத்தத்தில் ஒரு உற்சாகம் உண்டானது. தகரப் பெட்டியின் படபட ஓசை... பூனையின் குட்டிக்கரணம்... இறுதியில் மின்னல் வேகத்திலிருந்த அதன் ஓட்டம்...
கழுத்தைத் திருப்பி... முதுகை வளைத்து... முடிந்தவரைக்கும் சிரமப்பட்டு அவன் அந்த கதவுக்கு நேராகத் திரும்பத் திரும்பப் பார்த்தான். இல்லை.... அதன் நிழல்கூட இல்லை. புதிதாக எதுவுமில்லை.
அப்படிப் படுத்திருப்பதில் அவனுக்கு வெறுப்புண்டானது. தனிமையாக... எந்த அளவுக்கு சுகமாக இருந்தாலும், இடுப்புப்பகுதி முழுவதும் எப்படியோ ஈரமாகிவிட்ட இந்த விரிப்பில் இனி என்ன வேண்டும்? அழவேண்டுமா? உதடுகளைச் சற்று மலரச்செய்து ஒரு மெல்லிய முனகலைப் போல ஆரம்பித்தான். முடியாது... அது முடியாது. இந்த இடைவெளியில் அவன் நிறைய... நிறைய அழுது முடித்துவிட்டான். நிறைய சிரிக்கவும் செய்தான். இவை இரண்டையும் தவிர இன்னொரு வழியில்லையா?
பூனையின் பராக்கிரமங்களுக்கு மத்தியில் திரும்பிக்கொண்டும் புரண்டுகொண்டும் தனக்கே தெரியாமல் அவன் பாதியாகக் கவிழ்ந்திருந்தான். புதிய ஒரு ஆசை. இடது முழங்கையைத் தரையில் வைத்து, வலது தோளை சிரமப்பட்டு உயர்த்தி ஒரு திருப்புதல்!
ஆமாம்... அது சரியாக நடந்துவிட்டது. கடந்த ஓரிரண்டு மாதங்களில் அவன் இதைக் கற்றிருக்கிறான்.
தரையில் மூக்கு படாமல், கழுத்து சாயாமல் ஒரு சேவலைப்போல அவன் இப்போது தலையை உயர்த்தியிருக்கலாம். என்னவொரு பெருமை!
வெற்றிப் பெருக்குடன் அவன் உரத்து சிரித்தான். தரையிலிட்டு அடித்தடித்து, சிவந்த கைகளுக்கு இரண்டு மடங்கு சிவப்புண்டானது. இந்த சந்தோஷத் திளைப்பில் தானே அறியாமல் நெற்றியை இருமுறை தரையில் மோதச் செய்துவிட்டான். எனினும், அவன் அழவில்லை. கன்னம் தரையில் படும்படி தலையைச் சாய்த்து சோர்வடைந்ததைப்போல சற்று படுத்தான். அப்படி படுத்தபோதுதான் அதைக் கண்டு பிடித்தான்.
சற்று தூரத்தில் ஒரு மைபுட்டி. அந்தப் பூனை தள்ளிவிட்டு விழுந்ததாக இருக்கலாம். சிவந்து சிதறிப் பரவிய ஒருவகையான திரவத்திற்கு மத்தியில் கிடக்கும் அதைத் தேடி எடுத்தால், நல்ல ஒரு தமாஷான சம்பவமாக இருக்கும். அந்தவகையில் கைக்கு எட்டாத ஒரு பொருளுக்காக அந்த வாழ்க்கையில் முதல் வளர்ச்சியை அவன் ஆரம்பித்து வைத்தான்.
கையைநீட்டி உயர்த்திப் பார்த்தான். கால்களை சிரமப்பட்டு எழச்செய்தான். கைகளையும் கால்களையும் இணைத்து இயக்கினான். ஓரடி முன்னோக்கி நகர முயற்சிக்கும்போது, இரண்டடிகள் பின்னால் சென்றான். தன்னுடைய சிறிய படுக்கையிலிருந்தும் அந்த மை புட்டியிலிருந்தும் விலகி விலகி, சேறும் நீரும் இருக்கும் அந்த வெறும் நிலத்தில் அவன் மூன்றுமுறை வட்டம்போட்டு சுற்றிவந்தான். பிறகு... வருவது வரட்டுமென்ற பிடிவாதத்துடன் மேலுமொரு முறை முயற்சித்தான்.
ஆசை... ஆசை... முன்னோக்கிப் பாயவேண்டுமென்ற ஆசை... மைபுட்டி மறைந்ததும், தகரப்பெட்டி மட்டுமே முன்னால்... அதுவும் மாறியது. அவனுடைய ஒரு பழைய விளையாட்டு பொம்மை... இவ்வாறு சிதறிக்கிடக்கும் பல பொருட்களில் ஒன்றிலிருந்து இன்னொன்றிற்கு குறிவைத்து அவன் நகருவான். ஒவ்வொன்றும் கையில் கிடைத்ததைப்போன்ற போக்கு....
சாகசம் நிறைந்த இந்த கடுமையான முயற்சியில் பிஞ்சு சரீரம் தளர்ந்துபோனது. கைகளும் கால்களும் குழைந்தன. தலையை ஒரு பக்கமாக சாய்த்துக்கொண்டு தரையில் அவன் படுத்தான். இப்போது அவனுக்கு முன்னால் இலக்கு எதுவுமில்லை. அந்த பழைய நினைவு முன்பிருந்ததைவிட பலமாக எழுந்தது. யாரையோ எதற்கோ எதிர்பார்ப்பதைப்போல சிறிது வெறுப்புடன் கீழுதட்டை நீட்டிவிரித்து "ம்மா...'' என்றழைக்கும்போது, ஒரு மெல்லிய தேம்பல். இடுப்பைப் பின்னோக்கி நகர்த்தி முழங்கால்களை மடக்கி வைத்துக்கொண்டு மனக் குழப்பத்துடன் அவன் சற்று நெளிந்தான். அற்புதம்! நெஞ்சும் வயிறும் தரையில் படாத ஒரு புதிய வகையான நிலை.
வினோதமான கண்டுபிடிப்பால் உண்டான ஆவேசம் அப்படிப் படுத்தநிலையில் அவனுக்கு உண்டானது. இடது உள்ளங்கையை விரித்தூன்றி, முதலில் சற்று எழுந்து பார்த்தான். தொடர்ந்து வலக்கையையும் தலையையும் ஒரே நேரத்தில் உயர்த்தினான். ஆஹா... ஆடியாடி அலைபாய்ந்து கொண்டிருந்தான் என்றாலும், இறுதியில் அவனால் அதைச் செய்யமுடிந்தது.
சோதனை... சோதனை... ஏராளமான சோதனைகளின் மூலம்தானே வாழ்வின் வளர்ச்சியே இருக்கிறது! எந்தத் தோல்வியும் அங்கு தோல்வியல்ல. எந்த பின்னோக்கிப் பயணித்தலும் அங்கு பின்னோக்கிப் பயணித்தல் அல்ல. எந்த வெற்றியும் முழுமையானதல்ல. ஒன்றிலிருந்து இன்னொன்றுக்கு... அதிலிருந்து இன்னுமொன்றுக்கு... இப்படி மாற்றங்களின் ஒரு தொடர்ச்சிதான் மனித வாழ்க்கை.
கை குழைந்து சாய்ந்து விழுந்தால் என்ன? கால்வழுக்கி தரையில் விழுந்தால் என்ன? இறுதியில் அவன் அந்த நிலையை உறுதிப்படுத்திக்கொண்டான். பயந்து பயந்து நிமிர்ந்து, ஆடியாடி பின்னால் சாய்ந்து... பின்பகுதியைத் தரையில் வைத்து பலசாலியென ஒரு வகையில் இருத்தலின் ஆரம்பத்தைத் தொட்டான்.
வெற்றியால் உண்டான சந்தோஷம் காரண மாக முதலில் அவன் உரத்த குரலில் சிரித்தான். வீழ்ச்சியைப் பற்றிய பயத்தால் பின்னர் சிறிது அழுதான். தன்னைத் தாங்குவதற்கோ, தன்னைப் பாராட்டுவதற்கோ யாரையோ எதிர்பார்த்துக்கொண்டு அந்த கண்கள் வெம்பி மலர்ந்தன. அதோ... அந்த நபர் அருகிலேயே இருப்பதைப் பார்க்கிறோமே! அவனுடைய சாமர்த்தியத்தைப் பார்த்து பெருமைப்பட்டு, பலவீனத்தை கவனித்து, ஒவ்வொரு அசைவையும் பார்த்துப் புன்னகைக்கும் அவனுடைய முழு அபய மையமான பிரியத்திற்குரிய வடிவம்... இவ்வளவு நேரமும் நடைபெற்ற வெற்றி- தோல்விகளையும், அதற்கு மத்தியில் உண்டான சோகங்களையும், சந்தோஷங்களையும் அனைத்தையும் மறந்துவிட்டு அவன் கையை நீட்டினான். "ம்மா..!'' அந்தச் சிறிய குரலில் கவலையும், சந்தோஷமும், குறையும், வருத்தமும்... உலகத்திலுள்ள அனைத்து உணர்வுகளும் அடங்கியிருந்தன. அம்மாவின் பாராட்டு முத்தங்களில் திளைத்து, அமிர்தம் நிறைந்த அந்த மார்பில் சாய்ந்தபோது, அவனுக்கு இது மட்டுமே நினைவில் இருந்தது: வாழ்வென்பது ஒரு பாலாறு. அதில் கரைந்து சேரும் ஒரு இனிய முத்தம்தான் அவன்.