மயான தேசமா இந்தியா?

/idhalgal/eniya-utayam/india-land-dead

ருவினை யென்ப உளவோ கருவியான்

காலம் அறிந்து செயின்.

-என்பது வள்ளுவர் வாக்கு.

தேவையான உபகரணங்களுடன், உரிய நேரத்தில் செயல்பட்டால், எல்லாவற்றையும் வென்று விடலாம் என்பது பொருள். ஆனால் இதையெல்லாம் செய்யாததால் டெல்லியில் கோலோச்சும் அதிகார பீடம் தோற்றுப்போய் நிற்கின்றன.

india

கொரோனாவை ஒடுக்க உரிய தடுப்பூசிகள் கையில் இருந்தும், நோய்களை கட்டுப்படுத்தும் மருந்துகள் இருந்தும், தேவைக்கும் அதிகமாக ஆக்சிஜனைத் தயாரிக் கும் வல்லமை இருந்தும், போதுமான மருத்துவக் கட்டமைப்புகள் இருந்தும், அதை உரியபடி, உரிய நேரத்தில் பயன்படுத்தாததால், இந்தியாவையே இன்று மயான பூமியாக மாற்றிவிட்டது மோடி தலைமையிலான மத்திய அரசு. எங்கும் இல்லாத அளவிற்கு இந்தியாவில் கொரோனா கோரத் தாண்டவம் ஆடுகிறது. யாருக்கு என்ன ஆகுமோ? என்ற அச்சத்திலும் துயரத்திலும் மக்கள் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்தியாவின் தலை நகர மான டெல்லியே மரண பீதியில் உறைந்திருக் கிறது. பார்க்கும் திசைகளில் எல்லாம் அங்கே ஆம்புலன்ஸ்கள் அலறுகின் றன. மருத்துவமனைகள் எல்லாம் நோயாளிகளால் நிரம்பி வழிகின்றன. உள்ளே இடம் கிடைக்காத நோயாளிகள் அவற் றின் வாசல்களில் மூச்சுத் திணறலுடனும் பரிதவிக் கிறார்கள். எந்தப் பக்கம் பார்த்தாலும் ஓலமும் ஒப்பாரியும் கேட்கிறது. மருத்துவமனை களில் இருந்து சடலங்கள் வெளியே வந்துகொண்டே இருக்கின்றன.

ஆந்திர மாநிலம் மண்டசா மண்டல் கிராமத் தைச் சேர்ந்த ஒரு

ருவினை யென்ப உளவோ கருவியான்

காலம் அறிந்து செயின்.

-என்பது வள்ளுவர் வாக்கு.

தேவையான உபகரணங்களுடன், உரிய நேரத்தில் செயல்பட்டால், எல்லாவற்றையும் வென்று விடலாம் என்பது பொருள். ஆனால் இதையெல்லாம் செய்யாததால் டெல்லியில் கோலோச்சும் அதிகார பீடம் தோற்றுப்போய் நிற்கின்றன.

india

கொரோனாவை ஒடுக்க உரிய தடுப்பூசிகள் கையில் இருந்தும், நோய்களை கட்டுப்படுத்தும் மருந்துகள் இருந்தும், தேவைக்கும் அதிகமாக ஆக்சிஜனைத் தயாரிக் கும் வல்லமை இருந்தும், போதுமான மருத்துவக் கட்டமைப்புகள் இருந்தும், அதை உரியபடி, உரிய நேரத்தில் பயன்படுத்தாததால், இந்தியாவையே இன்று மயான பூமியாக மாற்றிவிட்டது மோடி தலைமையிலான மத்திய அரசு. எங்கும் இல்லாத அளவிற்கு இந்தியாவில் கொரோனா கோரத் தாண்டவம் ஆடுகிறது. யாருக்கு என்ன ஆகுமோ? என்ற அச்சத்திலும் துயரத்திலும் மக்கள் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்தியாவின் தலை நகர மான டெல்லியே மரண பீதியில் உறைந்திருக் கிறது. பார்க்கும் திசைகளில் எல்லாம் அங்கே ஆம்புலன்ஸ்கள் அலறுகின் றன. மருத்துவமனைகள் எல்லாம் நோயாளிகளால் நிரம்பி வழிகின்றன. உள்ளே இடம் கிடைக்காத நோயாளிகள் அவற் றின் வாசல்களில் மூச்சுத் திணறலுடனும் பரிதவிக் கிறார்கள். எந்தப் பக்கம் பார்த்தாலும் ஓலமும் ஒப்பாரியும் கேட்கிறது. மருத்துவமனை களில் இருந்து சடலங்கள் வெளியே வந்துகொண்டே இருக்கின்றன.

ஆந்திர மாநிலம் மண்டசா மண்டல் கிராமத் தைச் சேர்ந்த ஒரு பெண்மணி, அங்குள்ள மருத்துவமனை வாசலிலேயே இறந்து போக, சடலத்தை எடுத்துச் செல்ல ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் கிடைக்கவில்லை. வேறு வழியின்றி டூவீலரின் நடுவில் அவரை உட்காரவைத்து, அவரது மகன்கள் அப்படியே மயானத்திற்குக் கொண்டு சென்றார்கள். இப்படிப்பட்ட செய்திகள் கதிகலங்க வைக்கின்றன.

இவ்வளவு துயரங்களுக்கும் அவலங்களுக்கும் சூத்திரதாரியாக இருப்பவர், சாட்சாத் நிர்வாகத் திறனற்ற பிரதமரான மோடிதான்.

d

அறிவியல் பூர்வமாக சிந்திப்பதற்கு பதிலாக... ஒட்டுமொத்த இந்திய மக்களையும் கை தட்டச் சொல்லியும்- விளக்கேற்றச் சொல்லியும்- தேசத்தையே மூடர்களின் கூடமாக்கிவிட்டார் மோடி. அவர் தலைமையிலான காவி அரசால், இந்தியாவின் தலைநகரமே மயானக் கொட்டகை யாக மாறிவிட்டது.

மகாராஷ்டிர மாநிலம் நாக்பூர் இந்திரா காந்தி மருத்துவமனயில் கொரோனா பாதிப் போடு அட்மிட் ஆகி, ஆக்சிஜன் கொடுக்கப் பட்டு வந்த 85 வது முதியவர் நாராயணன், 40 வயது நோயாளி ஒருவருக்கு படுக்கை கிடைக்காத தைப் பார்த்து, தனது படுக்கையை அவருக்குக் கொடுக்கச் சொல்லிவிட்டு, வீட்டுக்குக் கிளம்பிவிட்டார். அடுத்த மூன்றாவது நாள் அவர் உயிர் பிரிந்துவிட்டது. தன்னைவிட இளம் வயதுள்ள ஒருவர் வாழவேண்டும் என்று உயிர்த் தியாகம் செய்த அந்த முதியவரின் மனிதா பிமானத்தை எப்படிப் பாராட்டுவது? அருக்கு இருக்கும் இரக்கத்தில், லட்சத்தில் ஒரு பங்கு கூட அதிகார மமதை கொண்ட மோடிக்கு இல்லை.

*

தடுப்பூசி கிடைக்கா மல் எல்லா மாநிலங்களிலும் மக்கள் தவிக்கிறார்கள். ஆனால் மோடி அரசு ’வேக்சின் மைத்ரி ‘ என்ற திட்டத்தின் படி, 84 நாடுகளுக்கு 6.45 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்கள் ஏற்றுமதி செய்திருக்கிறது. மருத்துவமனைகளில் அட்மிட் ஆன கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் கிடைக்கவில்லை. ஆனால் மோடி அரசோ ஆக்சிஜன் விவகாரத்திலும் விளையாட்டுக் காட்டுகிறது. மருத்துவமனைகளுக்குப் போக வேண்டிய கொரோனா தடுப்பூசிகளும், சிகிசைக்குத் தேவையான ரெம்டெசிவிர் போன்ற மருந்துகளும், ஆக்சிஜன்களும், கள்ளச்சந்தை வியாபாரி களிடம் ஏகத்துக்கும் புழங்கு கின்றன. அப்பாவி மக்களுக் கும், அன்றாடம் காய்ச்சி களுக்கும் நடுத்தர வர்க்கத்தி னருக்கும் இவை எளிதில் கிடைப்பதில்லை. அதனால் அவர்கள் மரணத்தோடு போராடிக் கொண்டிருக்கி றார்கள்.

மத்தியில் சிந்திக்கத் தெரியாத ’அறிவு ஜீவிகள்’ அதிகாரத்தில் இருப்பது போலவே, இங்கே, எல்லாவற்றிலும் கமிஷன் அடிக்கத் தெரிந்த, எடப்பாடி தலைமையிலான ’ஊழல் வல்லுனர் கள்’ அதிகாரத்தில் இருந்ததால், எல்லாம் ஏடாகூடமானது. கொரோனா தடுப்புக்காக ஒதுக்கப்பட்ட கோடிக்கணக்கான நிதியை முடிந்தவரை சுருட்டினார்கள். இந்த நிலையில் தேர்தலை அறிவித்து, பிரசாரக் கூட்டங்களில் மக்கள் பெருமளவில் கூடும் நிலையை ஏற்படுத்தி, கொரோனா பரவலைத் தீவிரப் படுத்திவிட்டார்கள். அதன் விளைவுதான் இன்றைய டேஞ்சரஸ் நிலை.

d

இந்தியாவின் கொரோனா பாதிப்பு இரண்டு கோடியை நெருங்கிவிட்டது. தினசரி சராசரியாக 4 லட்சம் பேர் பாதிப்புக்கு ஆளாகி றார்கள். நம் தேசத்தில் கொரோனா ஏற்படுத் திய மரண எண்ணிக்கை 2 லட்சத்து 10 ஆயிரத்தை எட்டி விட்டது. தமிழகத்திலோ இதுவரை கொரோனாவை ஒடுக்காத எடப்பாடியால் தினசரி பாதிப்பு என்பது 20 ஆயிரத்தை எட்டிவிட்டது. மொத்த கொரோனா நோயாளி களின் எண்ணிக்கை ஏறத்தாழ 12 லட்சம் பேர். இதுவரை ஏறத்தாழ 15 ஆயிரம் பேரின் உயிர் பறிபோயிருக்கிறது. இதற்காக மோடியும் எடப்பாடியும் கொஞ்சம் கூட வருந்த வில்லை.

அனைத்துத் துறையைச் சேர்ந்தவர் களையும் தமிழகம் அன்றாடம் இழந்து கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு நாள் விடியலும் இங்கே துயரச் செய்திகளுடன் விடிகின்றன.

*

உலக சுகாதார அமைப்பின் தலைவரே டெட்ரோஸ் ஆதனே, “'இந்தியாவில் நிலவும் சூழலை பார்க்கும் போது நெஞ்சம் பதறுகிறது.” என்கிறார். ஆனால் மோடிக்கு அந்தக் கவலை இல்லை. இப்போது ஆக்சிஜன் பற்றாக் குறையை வைத்து, மோடி அரசு ஸ்டெர்லைட்டுக்கு சாதகமாக நாடகம் ஆடுகிறது.

ஆக்சிஜனை நாங்கள் தயாரித்துத் தருகிறோம் என்று ஸ்டெர்லைட் பேருக்கு அறிவிக்க, மோடி அரசு, எடப் பாடி அரசுக்குப் பச்சைக்கொடி காட்டியது. இதைத் தொடர்ந்து 4 மாத காலத்துக்கு ஆக்சிஜனைத் தயாரிக்கலாம் என்ற அனுமதி, ஸ்டெர்லைட்டுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. இது சரியா? ஸ்டெர்லைட்டால் உடனடியாக ஆக்சிஜனைத் தயாரிக்க முடியுமா? அதற்கான கட்டமைப்பு அதனிடம் இருக்கி றதா? மத்திய அரசு வழக்கறிஞர் வைத்தியநாதனே உச்ச நீதிமன்றத்தில்... ”வேதாந்தா நிறுவனத்திடம் தாயாரிக் கும் ஆக்சிஜனை திரவ ஆக்சிஜனாக மாற்றும் உள் கட்டமைப்பே இல்லை என்றும் அதை உருவாக்க குறைந்த பட்சம் 9 மாத காலம் ஆகும் என்றும் தெரிவித்திருக்கிறார். அப்படியிருக்க வேதாந்தாவுக்கு கொடுக்கப்பட்ட 4 மாத அவகாசத்தில், அது எப்படி ஆக்சிஜனைத் தயாரிக்கும்? ஆக்சிஜனைத் தயாரித் தாலும் அவற்றைக் கொண்டு சொல்ல இரும்பு கலன்களோ, கண்டெய்னர்களோ அந்த ஆலையிடம் இல்லை.

india

துருப்பிடித்துக் கிடக்கும் அந்த ஆலையின் எந்திரங் களை, ஆக்சிஜன் தயாரிப்பு என்ற சாக்கில், ஓட வைத்து அந்த ஓட்டத்தை நிரந்தரமாக்கிவிடலாம் என்று கனவு காணுகிறார்கள், வேதாந்தாவிடம் பொறுக்கித் தின்னும் அரசியல் சகுனிகள். அதிகார வெறி-மக்களைப் பற்றிய அக்கறை இன்மை- நிர்வாகச் சீர்கேடு - ஊழல் தாண்டவம் -வன்ம அரசியல் - ஆகியவற்றைக் கையாளும் டெல்லியின் அதிகார பீடம், நாட்டையே சுடுகாடாக்க முனைகிறது.

இந்த நிலையில் தமிழகத்தில் அதிரடியாய் ஆட்சி மாற்றம் அரங்கேறியிருக்கிறது. இங்குள்ள டெல்லி அடிமைகள் துரத்தப்பட்டு, மு.க.ஸ்டாலின் தலைமை யிலான தி.மு.க.வின் திராவிட ஆட்சி மலர்ந்திருக் கிறது. சட்டமன்றத்திலும் நாடாளுமன்றத்திலும் வலிமை பெற்றிருக்கும் தி.மு.க. மூலம், தமிழகம், வெளிச்சத்தை நோக்கி நகரும் என்ற நம்பிக்கை எல்லோரின் மனதிலும் பிறந்திருக்கிறது. ஒரு மகத்தான மாற்றத்துக்காகக் காத்திருப்போம்.

-நம்பிக்கையோடு

நக்கீரன்கோபால்

uday010521
இதையும் படியுங்கள்
Subscribe