சோளகர் தொட்டி’ நாவல் வெளிவந்து இருபது ஆண்டுகளை எட்டப் போகிறது. இந்தியாவின் வடகிழக்கு, மத்தியக் கிழக்குப் பகுதி பழங்குடிகள் அழிகுடிகளாக மாற்றப் படுவதுபோல், தமிழ்நாட்டில் பழங்குடி களுக்கு நேர்ந்த துயர்மிகு நிலையினை இந்நாவல் உரத்த குரலில் பேசியது. இது மனித உரிமை கோரலின் எழுத்துப்பதிவு. “இந்நாவலில் வரும் அந்த பழங்குடி மக்கள், அவர்களால் தொட்டி என்றழைக் கப்படும் அவர்களது சிற்றூர், அடர்ந்த வனம், அந்த சூழல்கள் இவைகளே என் நாவலுக்கு உயிர் தந்தவை. நான் சுமந்த அம்மக்களின் கதைகள் பாறையை விட கனமானவை. இருளைவிட கருமை மிக்கவை. நெருப்பினைவிட வெப்ப மானவை. பல சமயங்களில் நான் உள் வாங்கியவற்றைச் சுமக்கும் பலமற்றவ னாய் இருப்பதை உணர்ந்திருக்கிறேன். ஆனால் அவற்றுள் சிலவற்றையாவது பதியாமல் விட்டுவிட்டால் கால ஓட்டத் தில், பின்னொரு காலத்தில், நான் சுமக்க இயலாத அவை கற்பனையாகக்கூட கருதப்படும் என ‘சோளகர் தொட்டி’ என்னுரையில் ச.பாலமுருகன் சுட்டுவார்.
சோளகர் தொட்டி (2004) தமிழ் எழுத்துப் பரப்பில் அதிர்ச்சி தந்த படைப்பு. இது ஆவணமா? படைப்பிலக் கியமா? என்றெல்லாம் விவாதம் எழுந்தது. அதுவரை ‘வீரப்பன் தேடுதல் வேட்டை’ என ஒரு சமூகக் கொள்ளையனை மையப்படுத்தி மட்டுமே அறிந்த ஒரு நடப்பை, அதற்குள் இருக்கும் ஓர் ஆதிகுடியின் அழிவை, வலியை, துயரத்தை, சமவெளி மனிதர்கள், அரசதிகாரம் ஆகியவற்றின் கோர முகத்தை பொதுவெளிக்குக் கொண்டு வந்த உயிர்ப்புமிக்க எழுத்தாவணம் சோளகர் தொட்டி. ச.பாலமுருகன் வழக் கறிஞர்; மனித உரிமைச் செயற்பாட் டாளர்; இடதுசாரி; மலைவாழ் மக்களு டன் பயணிப்பவர். அவர் தன் அனுபவங் களை ஓர் ‘சமூக விமரிசனமாக’ இந்நாவலில் முன்வைக்கிறார்.
‘சோளகர்’ தமிழ்நாட்டின் முப்பத்தாறு வகை பழங்குடிகளுள் ஓர் இனத்தவர். சோலைகளை ஆள்பவர்கள் சோலையர்கள் - சோளகர்கள் ஆனார்கள். தமிழ்நாட்டில் ஈரோடு, சத்தியமங்கலம், பர்கூர் பகுதிகளில் வாழ்கிறார்கள். கர்நாடக மலைப்பகுதிகளிலும் இவர்கள் இருக்கிறார்கள்.
சந்தனக்கடத்தல் வீரப்பன், அவனது கூட்டாளிகள் ஆகியோரைப் பிடிக்க அமைக்கப்பட்ட, இராணுவம், காவல்படை ஆகியவற்றால் பெரும் பாதிப்புக்குள்ளான மக்கள் சத்தியமங்கலம் பகுதி ‘சோளகர்’ இன மக்கள். அவர்களின் வாழிடமே தொட்டி. இந்தப் பின்புலத்தில் இந்நாவல் உருவாகி உள்ளது.
நாவல் இரண்டு பாகங்களாக அமைந்துள்ளது. முதல் பாகம் சோளகர் எனும் பழங்குடி மக்களின் வாழ்வியலை ஒருவித இனவரைவு ஆவணமாக’ முன்வைக்கிறது. பிறப்பு முதல் இறப்பு வரையான வாழ்க்கை வட்டச் சடங்குகள், நம்பிக்கைகள், வேட்டை வாழ்க்கை, உணவு, உடை, புழங்கு பொருள்கள், வள உறவுகள் உள்ளிட்ட வாழ்வியலையும் பண்பாட்டையும் மிக இயல்பாகப் பதிவுசெய்கிறது. சமவெளி மனிதர்கள் வனத்தில் வாழ்ந்த சோளகர்களின் நிலங்களை அபகரிக்கத்தொடங்குவது, வீரப்பனின் நடமாட்டம் மற்றும் அவனின் செயல்பாடுகள், வீரப்பனைத் தேடிவந்த காவல்துறையின் கட்டுப்பாடுகள், அச்சுறுத் தல் காரணமாக காடே சரணம் என்று வனத்தை தன் வாழ்வாதார மாகக் கொண்ட மக்கள் தங்கள் ‘தொட்டிக்’குள்ளேயே முடங்கிப் போவதோடு முதல் பாகம் நிறைவுறுகிறது.
இரண்டாவது பாகம், இவையெல்லாம் நடந்தவையா? என மனச் சீர்குலைவைத்தரும் வகையில் அமைந்த சோளகர் மக்களின் இன்னல்கள். வீரப்பன் மற்றும் அவனது கூட்டாளிகளின் தலைமறைவுப் பகுதியாக இப்பகுதி அமைந்ததால் தொடங்குகிறது சிக்கல். வீரப்பன் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட இராணுவம், காவல்படை போன்றவை தங்களின் பணியில் வெற்றிபெற முடியாத நிலை ஏற்படுகிறது. அத்தருணத் தில் இங்கு நிலையாக வாழும் சோளகர்களை வீரப்பனைப் பிடிக்கப் பகடைக்காய் ஆக்கு கிறார்கள். நாளடைவில் இவர் களை வீரப்பனோடு தொடர்பு படுத்துகிறார்கள். வீரப்பன் படை எனச் சொல்லி போலியாக ‘பச்சைநிற’ உடை உடுத்தி அப்பாவி மக்களைச் சுட்டுக் கொல்கிறார் கள். கைது செய்கிறார்கள். விசாரணை என்ற பெயரில் கொடிய சித்திரதைச் செய்கிறார்கள். பெண்களை, குழந்தைகளை பாலியல் வல்லுறவு செய்கிறார்கள். குடும்பங்களை, உறவுகளைச் சிதைக்கிறார்கள். காணாமல் அடிக்கிறார்கள். இருப்பிடங்களைச், சொத்துக்களைச் சூறையாடுகிறார்கள். அந்நியப் படையெடுப்பு, ஆக்கிரமிப்பு மாதிரி ஒரு தவறும் செய்யாத அப்பாவி மக்கள் காவு கொள்ளப்படுகிறார்கள். சட்டம், நீதி எதுவும் எட்டிப்பார்க்க முடியாத நிலையில் செய்வதறியாது மக்கள் திகைத்துநிற்கிறார்கள். கொலைகள், தற்கொலைகள், வன்கொடுமைகள்
சோளகர் தொட்டி’ நாவல் வெளிவந்து இருபது ஆண்டுகளை எட்டப் போகிறது. இந்தியாவின் வடகிழக்கு, மத்தியக் கிழக்குப் பகுதி பழங்குடிகள் அழிகுடிகளாக மாற்றப் படுவதுபோல், தமிழ்நாட்டில் பழங்குடி களுக்கு நேர்ந்த துயர்மிகு நிலையினை இந்நாவல் உரத்த குரலில் பேசியது. இது மனித உரிமை கோரலின் எழுத்துப்பதிவு. “இந்நாவலில் வரும் அந்த பழங்குடி மக்கள், அவர்களால் தொட்டி என்றழைக் கப்படும் அவர்களது சிற்றூர், அடர்ந்த வனம், அந்த சூழல்கள் இவைகளே என் நாவலுக்கு உயிர் தந்தவை. நான் சுமந்த அம்மக்களின் கதைகள் பாறையை விட கனமானவை. இருளைவிட கருமை மிக்கவை. நெருப்பினைவிட வெப்ப மானவை. பல சமயங்களில் நான் உள் வாங்கியவற்றைச் சுமக்கும் பலமற்றவ னாய் இருப்பதை உணர்ந்திருக்கிறேன். ஆனால் அவற்றுள் சிலவற்றையாவது பதியாமல் விட்டுவிட்டால் கால ஓட்டத் தில், பின்னொரு காலத்தில், நான் சுமக்க இயலாத அவை கற்பனையாகக்கூட கருதப்படும் என ‘சோளகர் தொட்டி’ என்னுரையில் ச.பாலமுருகன் சுட்டுவார்.
சோளகர் தொட்டி (2004) தமிழ் எழுத்துப் பரப்பில் அதிர்ச்சி தந்த படைப்பு. இது ஆவணமா? படைப்பிலக் கியமா? என்றெல்லாம் விவாதம் எழுந்தது. அதுவரை ‘வீரப்பன் தேடுதல் வேட்டை’ என ஒரு சமூகக் கொள்ளையனை மையப்படுத்தி மட்டுமே அறிந்த ஒரு நடப்பை, அதற்குள் இருக்கும் ஓர் ஆதிகுடியின் அழிவை, வலியை, துயரத்தை, சமவெளி மனிதர்கள், அரசதிகாரம் ஆகியவற்றின் கோர முகத்தை பொதுவெளிக்குக் கொண்டு வந்த உயிர்ப்புமிக்க எழுத்தாவணம் சோளகர் தொட்டி. ச.பாலமுருகன் வழக் கறிஞர்; மனித உரிமைச் செயற்பாட் டாளர்; இடதுசாரி; மலைவாழ் மக்களு டன் பயணிப்பவர். அவர் தன் அனுபவங் களை ஓர் ‘சமூக விமரிசனமாக’ இந்நாவலில் முன்வைக்கிறார்.
‘சோளகர்’ தமிழ்நாட்டின் முப்பத்தாறு வகை பழங்குடிகளுள் ஓர் இனத்தவர். சோலைகளை ஆள்பவர்கள் சோலையர்கள் - சோளகர்கள் ஆனார்கள். தமிழ்நாட்டில் ஈரோடு, சத்தியமங்கலம், பர்கூர் பகுதிகளில் வாழ்கிறார்கள். கர்நாடக மலைப்பகுதிகளிலும் இவர்கள் இருக்கிறார்கள்.
சந்தனக்கடத்தல் வீரப்பன், அவனது கூட்டாளிகள் ஆகியோரைப் பிடிக்க அமைக்கப்பட்ட, இராணுவம், காவல்படை ஆகியவற்றால் பெரும் பாதிப்புக்குள்ளான மக்கள் சத்தியமங்கலம் பகுதி ‘சோளகர்’ இன மக்கள். அவர்களின் வாழிடமே தொட்டி. இந்தப் பின்புலத்தில் இந்நாவல் உருவாகி உள்ளது.
நாவல் இரண்டு பாகங்களாக அமைந்துள்ளது. முதல் பாகம் சோளகர் எனும் பழங்குடி மக்களின் வாழ்வியலை ஒருவித இனவரைவு ஆவணமாக’ முன்வைக்கிறது. பிறப்பு முதல் இறப்பு வரையான வாழ்க்கை வட்டச் சடங்குகள், நம்பிக்கைகள், வேட்டை வாழ்க்கை, உணவு, உடை, புழங்கு பொருள்கள், வள உறவுகள் உள்ளிட்ட வாழ்வியலையும் பண்பாட்டையும் மிக இயல்பாகப் பதிவுசெய்கிறது. சமவெளி மனிதர்கள் வனத்தில் வாழ்ந்த சோளகர்களின் நிலங்களை அபகரிக்கத்தொடங்குவது, வீரப்பனின் நடமாட்டம் மற்றும் அவனின் செயல்பாடுகள், வீரப்பனைத் தேடிவந்த காவல்துறையின் கட்டுப்பாடுகள், அச்சுறுத் தல் காரணமாக காடே சரணம் என்று வனத்தை தன் வாழ்வாதார மாகக் கொண்ட மக்கள் தங்கள் ‘தொட்டிக்’குள்ளேயே முடங்கிப் போவதோடு முதல் பாகம் நிறைவுறுகிறது.
இரண்டாவது பாகம், இவையெல்லாம் நடந்தவையா? என மனச் சீர்குலைவைத்தரும் வகையில் அமைந்த சோளகர் மக்களின் இன்னல்கள். வீரப்பன் மற்றும் அவனது கூட்டாளிகளின் தலைமறைவுப் பகுதியாக இப்பகுதி அமைந்ததால் தொடங்குகிறது சிக்கல். வீரப்பன் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட இராணுவம், காவல்படை போன்றவை தங்களின் பணியில் வெற்றிபெற முடியாத நிலை ஏற்படுகிறது. அத்தருணத் தில் இங்கு நிலையாக வாழும் சோளகர்களை வீரப்பனைப் பிடிக்கப் பகடைக்காய் ஆக்கு கிறார்கள். நாளடைவில் இவர் களை வீரப்பனோடு தொடர்பு படுத்துகிறார்கள். வீரப்பன் படை எனச் சொல்லி போலியாக ‘பச்சைநிற’ உடை உடுத்தி அப்பாவி மக்களைச் சுட்டுக் கொல்கிறார் கள். கைது செய்கிறார்கள். விசாரணை என்ற பெயரில் கொடிய சித்திரதைச் செய்கிறார்கள். பெண்களை, குழந்தைகளை பாலியல் வல்லுறவு செய்கிறார்கள். குடும்பங்களை, உறவுகளைச் சிதைக்கிறார்கள். காணாமல் அடிக்கிறார்கள். இருப்பிடங்களைச், சொத்துக்களைச் சூறையாடுகிறார்கள். அந்நியப் படையெடுப்பு, ஆக்கிரமிப்பு மாதிரி ஒரு தவறும் செய்யாத அப்பாவி மக்கள் காவு கொள்ளப்படுகிறார்கள். சட்டம், நீதி எதுவும் எட்டிப்பார்க்க முடியாத நிலையில் செய்வதறியாது மக்கள் திகைத்துநிற்கிறார்கள். கொலைகள், தற்கொலைகள், வன்கொடுமைகள் பெருகி கலவர நிலமாக தொட்டி தூக்கம் தொலைத்து வானம் பார்த்து நிற்கிறது. ஆதிகுடிகளின் துணிச்சலும் தீராத நம்பிக்கையும் அவர்களின் இருப்பை நிலைகொள்ள வைக்கிறது. இப்படி இரண்டாம் பாகம் அமைகிறது.
இந்நாவலில் நாயகன், நாயகி, வில்லன் என்றெல்லாம் இல்லை. வனமும் பழங்குடிச் சோளகர்களும்தான் நாயகர்கள். அரசும் காவல்படையும்தான் வில்லன்கள். அந்த வகையில் இது ஒரு சமகால சமூக ஆவணம். பழங்குடிகளின் உரிமைக்குரல்.
சிக்குமாதா துணிச்சலான வேட்டைக்காரன். வேட்டையின்போது தன்மீது பாயவந்த கரடியைச் சுட்டுக்கொன்றதற்காக நிர்வாணமாக் கப்பட்டு வனக்காவலர்களிடம் அடி உதைப்பட்டான். சிக்குமாதாவின் மரணத்திற்குப் பின் அவனது தம்பி கரியன், சிக்குமாதாவின் மனைவியோடும் குழந்தைகளோடும் பரிவுடன் நடந்துகொண்டான். கரியனுக்கும் அவனது அண்ணி கெம்பம்மாவிற்கும் நெருக்கம் ஏற்பட்டது. அவள் ஊர்ப்பஞ்சாயத்தைக் கூட்டித் தனக்குக் கொழுந்தன் கரியனைக் கட்டிவைக்குமாறு கேட்கிறாள். கரியனும் சம்மதிக்கிறான். ஊரார் திருமணத்தை நடத்தி வைக்கின்றனர். இது சோளகர்களின் மரபு. போலியான சமவெளி மனிதர்களிடமிருந்து மாறுபட்ட திறந்த தன்மை கொண்ட வழக்கம் இது. கரியன் - கெம்பம்மா திருமண நிகழ்வை அப்படியே நோக்கலாம். இது சோளகர்களின் திருமண முறை.
திருமணம்
“கெம்பம்மாவின் குடிசையின் வாசலில் வெள்ளை நாகமரத்தின் ஒன்பது கவைக் குச்சிகளையும், ஒன்பது பச்சை மூங்கில்களையும் சேர்த்து ஆள் உயரத்தில் பந்தல் போடப்பட்டிருந்தது. அந்தப் பந்தலில் மேல் பரப்பு முழுவதும் நாகமரத்தின் இலைகளை நிரப்பி இருந்தார்கள். கரியன் புது ஆடை அணிந்திருந்தான். அவனது தலையைச் சுற்றிலும் மணம் பரப்பும் காட்டு மல்லிகையினை சரம்போலக் கட்டி, தோள்கள் வரை தொங்கவிட்டிருந்தார்கள். மணமகன் கரியன் மாப்பிள்ளையாகப் பெண்ணின் வீட்டிற்கு வரவேண்டி பீனாச்சியும், தப்பும் இசைக்கப்பட்டன”.
மாப்பிள்ளை ஊர்வலம் சற்றுத்தூரம் நீளமானதாக இருக்கவேண்டி கரியனை மணிராசன் கோயில் பக்கம் கூட்டிச்சென்று திரும்பவும் தொட்டியில் கெம்பம்மாவின் குடிசைக்கு அழைத்து வந்தார்கள். தொட்டியின் சிறுவர்கள் பீனாச்சி, தப்பு இசைக்குத் தக்கபடி குதிப்பதற்காக அங்குமிங்கும் ஓடினார்கள். தொட்டியினர் கரியனுக்குப் பின்னே வந்தனர். கரியன் கெம்பம்மாவின் குடிசையின் முன்பு நிறுத்தப்பட்டான். கரியனுக்குப் பக்கத்தில் இருந்த பெண் கையில் இருந்த மூங்கில் தட்டில் சீலையும், கண்ணாடி சீப்பும், வெற்றிலை பாக்கும், தாலியும் வைத்திருந்தாள். கோல்காரன் அவனது மூதாதையர்களின் கோலைத் தூக்கிப் பிடித்தவாறு வந்திருந்தான். நாக இலைப் பந்தலில் கரியனை உட்கார வைத்தனர்.
பின்பு, மணமகள் கெம்பம்மா வின் உறவினர்கள் இருட்டறை யிலிருந்து வந்திருந்தாலும் ஜோகம்மாள் மணப்பெண் தோழியாக வந்து கரியனுக்குக் கருப்பு மற்றும் வெள்ளைப் பொட் டுக்களை முகத்தில் வைத்தாள். “கோமாதா மனம் குளிர்ந்தாள். அடுத்தது நடக்கட்டும்” என்றான் கோல்காரன் சென்நெஞ்சா.
அதன் பின்பு, கெம்பம்மா வின் குடிசை வாசலில் மூங்கிலை வெட்டிச் செய்யப்பட்ட உழக் கான மானா வெட்டியில் குப்பை களை நிரப்பி வைத்தார்கள். கரியனை அந்த உழக்கைப் பார்க்காமல் வந்து பின்னங் காலில் அதனை மூன்று முறை உதைக்கும்படி செய்தார்கள். குப்பைகள் கீழே கொட்டியது. “திருஷ்டி கழிந்ததப்பா” என்றான் கோல்காரன்.
கரியன், கெம்பம்மாவின் குடிசைக்குள் சென்றான். அங்கு கெம்பம்மாவும் தலை முழுவதும் காட்டு மல்லிகைச் சரத்தால் தனது முகத்தை மறைத்திருந்தாள். கரியன் அவனது சுண்டு விரலைக் கெம்பம்மாவின் சுண்டு விரலுடன் கோர்த்து அவளை நாக இலையி லான பந்தலுக்கு அழைத்து வந்தான்.
கோல்காரச் சென்நெஞ்சா இடுப்பில் ஒரு கோவணத்தை மட்டும் கட்டிக்கொண்டு பூஜை செய்தான். சாம்பிராணி யின் மணமும், புகையும் சூழ்ந்தது.
தொட்டியின் பெண்கள் ஒரு சேரப் பாடினார்கள்.
“சோபாக்கி சோயண்ணா
ஒந்துண்டேயான கண்டே
சந்திர சூரியர் கண்டே
செரு உண்ட ஏன கண்டே
பசவண்ணனே கண்டே
ரெண்ட யானை கண்டே
ஏ முதல் சர்ப்பனக் கண்டே
கோல்காரன் பாடலின் இறுதியில், சோபாக்கி சோயண்ணா என்றான்.
கோல்காரன் தனது மூதாதையரின் தடியை உயர்த்திப்பிடித்து மந்திரத்தை முணுமுணுத்தபின், கரியனைத் தாலிகட்டக் கூறினான். கரியன் கெம்பம்மா வின் கழுத்தில் தாலி கட்டினான். பிறகு மணமகள் வீட்டின் உணவானது அரிசிச் சோற்றில் வெல்லத் தையும், புளியங்கொட்டையையும் சேர்த்துச் சமைத்துக் கொண்டு வரப்பட்டிருந்தது. அதனைக் கெம்பம்மாவின் தாய்மாமன் உச்சீரான் கரியனுக்கு ஊட்டினான்.
அதற்குப் பிறகு, கோல்காரன் சென்நெஞ்சா பெண்ணின் பரிசப்பணம் ரூபாய் பன்னிரண்டை வெற்றிலை, பாக்கு, தேங்காயுடன் புகையிலை வைத்துக் கொத்தல்லி யிடம் கொடுத்தான். கொத்தல்லி அந்தப் பணத்தை இடுப்பில் செருகிக்கொண்டு புகையிலையையும், வெற்றிலையையும் வாங்கி வாயில் அடக்கிக் கொண்டு மற்றவர்களுக்குக் கொடுக்கக் கூறினாள். அப்போது தம்மய்யா அவனது தாயிடமும் கரியனிடமும் போகமறுத்து அழத் துவங்கவே, கரியன் அவனை வாங்கித் தன் மடியில் வைத்துக்கொண்டான். அருகிலிருந்த அவனது தாய் தலைமுழுவதும் பூக்கட்டியிருப்பதைப் பார்த்து அந்தப் பூவைப் பிடித்து இழுத்தான். கூடாது என்றதும் கெம்பம்மா அன்போடு கரியனைப் பார்த்துச் சிரித்தாள்.
…தேக்குமர இலைகளைச் சிறு குச்சிகளால் பிணைத்து உருவாக்கப்பட்டிருந்த இலையில் அரிசிச் சோறும் காரமான ஆட்டுக்கறிக்குழம்பும் பரிமாறப் பட்டன. ஆர்வத்துடன் அந்த உணவை ஒரு பருக்கை கூட விடாமல் சுவைத்தனர். அரிசி உணவு சாப்பிடுவது வருடத்தில் எப்போதாவது நிகழ்வது என்பதால் அதனை வாயில் அசைபோட்டுச் சுவைத்து விழுங்கினார்கள்.
கறியின் காரம் குறைவதற்குள்ளேயே ஆண்கள் களிமண் புகைப்பானில் கஞ்சாவை நிரப்பி, புகையை இழுத்துக்கொண்டு மகிழ்ந்தனர். கொத்தல்லியும் கோல்காரனும் புகையை இழுத்துக்கொண்டார்கள்.
அங்கு மகிழ்ச்சி நிறைந்திருந்தது. அன்றிரவு தொட்டி யின் மையத்தில் உக்கடத்தீ ஏற்றப்பட்டது. அதனைச் சுற்றிலும் ஆண்களும், பெண்களும் உட்கார்ந்து கொண்டார்கள். மீண்டும் அரிசிச் சோறும், கறிக் குழம்பும் சூடு செய்து பரிமாறினார்கள். அதன் பின்பு, அங்குக் கருகிய கஞ்சா புகை சூழ்ந்தபோது தப்பின் வாசிப்பும் பீனாச்சியின் நாதமும் எழுந்தன. பெண்களும் ஆண்களும் வட்டமாய் நெருப்பைச் சுற்றிலும் நின்று ஆடினார்கள்.
அப்போது கரியனை, கெம்பம்மாவின் குடிசை யில் விட்டுக் கதவைத் தாழிட்டிருந்தார்கள். கரியன் கெம்பம்மாவிடம் நெருங்கும்போது வெகு கூச்சப் பட்டான். கரியனை அவளின் மதர்த்த மார்புகள் நசுக்க நெஞ்சோடு அணைத்துக்கொண்டாள். (பக்.53-56) இப்படியாகத் திருமணமும், விருந்தும், முதல் கூடுகையும் நாவலில் சுட்டப்படுகின்றது.
சித்திரவதைகள்
விசாரணை என்ற பெயரில் நடந்த மனித உரிமைப் பறிப்பு அத்துமீறல்கள் பலவும் நாவலில் அப்படியே பதிவாகியுள்ளன.
“குன்றியின் லிங்காயத்து வளவில் அந்த இருண்ட அதிகாலை மூன்று மணி சுமாருக்கு போலீசின் பூட்ஸ் சப்தங்களைத் தொடர்ந்து நாய் குரைப்பு சப்தம் அங்கிருந் தவர்களின் தூக்கத்தைக் கலைத்தது. அங்கிருந்து வீடுகளில் மல்லியின் குடிசையைத் தேடிப்பிடித்து ஒரு தட்டுத் தட்டினார்கள். பின், கதவை ஒரு உதை கொடுத்துத் திறந்த போலீசார் உள்ளே சென்று சிக்கைய தம்பிடியைத் தேடினார்கள். மல்லி கலவரமடைந்து கலைந்து கிடந்த சேலையைச் சுருட்டி எழுந்து நின்றாள் பீதியுடன். அப்போது அந்த போலீஸ்காரன் அவளது முடியைப் பிடித்து வீட்டிலிருந்து வெளியே இழுத்து வந்தான். அவளின் பின்னே மல்லியின் கணவன் வீரபத்திரன் வந்தான்.
“உங்க அப்பன் தானே சிக்கையதம்பிடி?”
மல்லி அமைதியாகத் தலையாட்டினாள்.
“எங்கே அவன்?” என்றான் சிங்கப்பன் இன்ஸ்பெக்டர்.
“எங்கப்பனை நான் கடைசியாகப் பார்த்து மூனு
மாசமிருக்கும். அதுக்குப் பின்னாடி அவங்க எங்கேன்னு
சத்தியமாத் தெரியாது.” எனக் கையெடுத்துக் கும்பிட் டாள்.
மல்லியின் தொடையில் ஒரு உதை கொடுத்தான் இன்ஸ்பெக்டர். கீழே விழுந்த அவளை வீரபத்திரன் தூக்கி நிறுத்தினான்.
“எங்கேடி ஒளிச்சு வெச்சுக்கிட்டு நாடகம் போடுகிறாய்?” என்று மீண்டும் அவளது முடியைப் பிடித்து இழுத்து அவளை நின்றுகொண்டிருந்த ஜீப்பின் அருகில் கொண்டு நிறுத்தினான்’. (ப.141)
“ஜீப் போய்க் கொண்டிருந்தபோது இன்னமும் இருட்டு அதிகமாகவேயிருந்தது. வாகனத்தின் முன் இருக்கையில் உட்கார்ந்திருந்த இன்ஸ்பெக்டர் பின்னே உட்கார்ந்திருந்த மல்லியின் மார்பைக் கையை நீட்டிப்பிடித்தான். அவளது ஜாக்கெட்டு கள் கிழிந்து அவள் வலிதாங்க முடியாமல் கதறினாள்.”
“தனது கண்ணெதிரே மனைவியின் மாரைப்
பிடித்துக் கொண்டிருந்த இன்ஸ்பெக்டரின் கைகளைப்
பிடித்துக் கண் கலங்கியவாறே, வேண்டாங்கய்யா”
என்று இன்ஸ்பெக்டரின் கைகளைப்பிடித்து விடுவிக்கப் பார்த்தான் வீரபத்திரன். அப்போது பக்கத்திலிருந்த போலீஸ்காரன், இன்ஸ்பெக்டரின் கையைத் தொட்டுவிட்டதால், கோபம் கொண்டு வீரபத்திரனின் முகத்தில் குத்தினான். அவன் முகத்தைப் பிடித்துக்கொண்டு தலையைக் கீழே குனிந்த வெகுநேரம் கழித்தே சிங்கப்பனின் பிடியை அவளது மாரிலிருந்து தளர்த்தினான். மல்லி, வீரபத்திரனின் மூக்கில் வழிந்த ரத்தத்தைத் தன் சேலை முந்தியில் துடைத்துவிட்டு, தலையில் கையை வைத்து அழுதபடியே வந்தாள்”. (ப.142)
விசாரணைக்கு அழைத்துப்போகும் வழியில் கணவன் முன்னிலையில் மல்லியை கரும்புக்காட்டிற் குள் இழுத்து சின்னாபின்னாமாக்குகிறான் இன்ஸ் பெக்டர்.
“உண்மையை எப்படி வாங்கறதுன்னு எனக் குத் தெரியும்” எனப் பற்களைக் கடித்துக்கொண்டு வேனிலிருந்துவர்களின் பார்வையிலிருந்து மறைந்து போகுமளவு அவளைக் கரும்புக் காட்டிற்குள் இழுத்துச் சென்றான். பின்னர், சுற்றிலும் நோட்டமிட்டான். மல்லி தனக்கு ஏதோ நிகழப்போகிறது என யூகித்து அவனிடம் கையெடுத்துக் கும்பிட்டாள். அந்த வயல் நிலம் நீர் பாய்ந்து ஈரமாகியிருந்தது. “படுடீ” என அவளைக் கீழே தள்ளினான். அவள் முதுகுப்பகுதி முழுவதும் மண் சகதி ஒட்டிக் கொண்டது. அவன், கண நேரத்தில் தன்னை அரைகுறை அம்மணமாக்கி, அவள் மீது பாய்ந்தான். அவளுக்குள் பேரிடி இறங்கி வாழ்வு சூன்யமாவதை உணர்ந்தாள்”. (ப.147)
போலீஸிடம் சிக்கியிருந்த புட்டனின் புலம்பல்
“எனக்குத் தெரிஞ்சதைச் சொல்லிட்டேன். எனக் குத் தெரியாத்தைச் சொல்லுன்னு அடிச்சு சித்திர வதை செய்வதைவிட, ஒரே அடியில கொன்னுட்டா நிம்மதியாயிருக்கும். என்னாலே முடியலே சாமி. என்னோட காட்டுக்குள்ளே வந்த சோளகனைச் சொல்லுங்கறாங்க. என் சிரமம் என்னோட மடியட்டும்.
என் ஈரம்மாவை ஆறுமாச கர்ப்பிணியா விட்டுட்டு வந்துட்டேன். அவகிட்ட சொல்லிடு சிவண்ணா. நான் திரும்பி வரமாட்டேன்னு. எனக்காக்க காத்திருக்க வேண்டாம்னு. எனக்கு என் குழந்தை முகம் கண்ணுக் குள்ளே வருது. அவளை வளர்க்க முடியாதவனா ஆயிட்டேன்’. (ப.157)
சித்திரவதைகள் பலவிதம்
“இனிமே உன்னால எதையும் உன் பெருவிரலாலே பிடிக்க முடியாது. நாலுநாளா பெருவிரலை வளைத்து மணிக்கட்டோட கட்டினதோட மகிமை. தாயோழி! எந்தத் துப்பாக்கியை இனிப் பிடிப்பீங்க. எந்தக் கையாலே அரிசி வாங்கிக் கொடுப்பீங்கடா” (ப.164) என்று அவனை முறைத்தான். (ப.164)
மனிதர்களுக்குத்தான் நியதி. மிருகங்களுக்கு?
அதுவும் அதிகாரம் கையிலுள்ள மிருகங்களுக்கு?
“நடுத்தர வயதுக்கார போலீஸ், குழந்தையின் தலைமுடியைப் பிடித்து தூக்கி வெளியே வீசினான். அது திண்ணையில் விழுந்து கதறியது. ‘என் குழந்தை எனப் பதறினாள் ஈரம்மா. குண்டு போலீஸ்காரன் அவளின் மாரைப் பிடித்துக் கொண்டான். இளைய போலீஸ்காரன் உட்புறம் கதவைச் சாத்தித் தாளிட்டான். ஈரம்மாளுக்கு நடக்கப்போவது புரிந்தது.”
“நான் கர்ப்பவதிங்க, ஆறு மாதம் கர்ப்பமாயிருக்கிறேன்” என்று குண்டு போலீஸ்காரனின் கால்களைப் பிடித்துக்கொண்டு கெஞ்சினாள்.
“வீரப்பனிடம் படுக்கும்போது மட்டும் எதுவுமில்லையா?”என்றான் நடுவயதுக்காரன்.
“அதற்குள் மூன்று போலீஸ்காரர்களும் தங்களின் உடைகளைக் களைந்தெறிந்து, அம்மணமாய் நின்றார் கள். ஈரம்மாளின் சேலையை உருவி எறிந்து, மேலாடைகளைக் கிழித்து அவளையும் அம்மணமாக்கி விட்டிருந்தார்கள். அவள் புடைத்த வயிறுகாட்டி கைகால்களை ஆட்டித் தப்பித்துக் கொள்ளப் பார்த்தாள். குண்டு போலீஸ்காரனும், நடுவயதுக் காரனும் அவளைக் கீழே படுக்கவைத்து, தங்களின் கால்களை அவள் கைமீது ஏறி நின்று அழுத்திக் கொண்டிருந்தார்கள். முதலில் இளையவன் அவளின் சிசுதாங்கிய வயிற்றை அழுத்தி அவள்மீது பாய்ந்தான். அவளின் சப்தம் அதிகரிக்கவே, அவள் கைமீது நின்றிருந்த குண்டன் அவளது முகத்தில் காலால் அழுத்தி னான். அவள் மூச்சுத் தினறி அமைதியானாள். பின்பு குண்டன் பாய்ந்தான் அவளது முகம், உதடு, மார்புகள் கடிபடுவதை உணர்ந்தாள். அடுத்து மீசைக்காரன். மீண்டும் அது தொடர்ந்தது”. (பக்.169-170)
“அறையின் கான்கிரீட் கூரையில் மாட்டப் பட்டிருந்த இரண்டு தண்ணீர் இரைக்கும் உருளையில் கயிறுகள் தொங்கவிடப்பட்டிருந்தன. அறை முழுவதும் மின்சார ஒயர்கள் ஆங்காங்கே ஒரு சிறிய இரும்புப் பெட்டியில் இணைக்கப்பட்டிருந்தன. அந்த இரும்புப் பெட்டியில் ஒரு கைப்பிடி சுற்றப்படும் வகையில் இருந்தது. அதிகாரி அறையில் போடப்பட்டிருந்த நாற்காலியில் உட்கார்ந்துகொண்டு, கெம்பனைக் கயிற்றில் கட்ட உத்தரவிட்டான். கெம்பனின் கையை முதுகில் பின்னே மடக்கி இரண்டையும் நேரே நீட்டியபடி இணைத்து உருளையுடன் இருந்த கயிற்றில் கட்டிவிட்டு பின் அவனின் தோள்களின் மூட்டுக்களை அழுத்தித் திருப்பினார்கள் இரண்டு போலீசார். அவன் வலியால் துடித்தான். அவனின் கைகள் இரண்டும் நெஞ்சுக்கு முன்பு நேரே நீட்டப் படுவது போல முதுகுப் பக்கம் நீட்டியிருந்தது. பின் அவனின் கால்களைச் சேர்த்து மற்றொரு உருளையிலிருந்த கயிறில் கட்டினர்”. (ப.205)
நினைக்கவே அச்சம் தருகிறது.
அடியும் வலியும் தாங்க முடியாமல் மலம் வெளியேறுகிறது. “டேய் அறைக்குள்ளேயே பீயை இருந் திட்டையா? அதைத் தின்னுடா’ என்றான் அதிகாரி.
அதிகாரிக்கு அந்த அளவு கோபமூட்டக் கூடியவனாக கெம்பனிருந்ததால், நின்று கொண்டிருந்த போலீஸ் கெம்பனின் முடியைப் பிடித்து முகத்தைக் கடுமையாக்கிக் கொண்டு, “தின்னுடா பீயை” என்று மலம் சிதறிய பக்கம் அவனை இழுத்தான்.
கெம்பன் சிதறிய மலத்தைக் கையில் எடுத்து கண்களை மூடிக்கொண்டு வாயில் திணித்துக் கொண்டான். அவன் கண்ணில் மரணத்தின் பீதி தென் பட்டது. உடனே அவன் அறைக்கு வெளியே இழுத்துப் போகும்போது வாந்தியெடுக்கும் சப்தம் கேட்டபோது, கண்களை இறுக்கமாக மூடிக்கொண்டிருந்த மாதியை கீழே இறக்கி நிற்கச் சொன்னான். அவள் ஒட்டுத் துணியற்றவளாய் கூச்சத்தில் கைகளையும், கால்களையும் மாராப்பாக்கி நெளிந்தாள்.
“எங்கேடி உன் புருஷன்?” என்றான் அதிகாரி.
“தெரியாதுங்க”
“இவளுக்கும் கரண்ட கொடுங்க” என்று உத்தர விட்டான். அவள் அச்சத்தில் பின்னே நகரும்போது போலீஸ்காரன் மெக்கர் பெட்டியிலிருந்து மின் ஒயரை எடுத்து அவள் முன்னே வந்தான். பின்னே நகர்ந்தவள் சுவரில் முட்டி நின்றாள். அவளது காதுகளில் இரண்டு கிளிப்புகளும், அவளின் மார்புக் காம்புகளில் இரண்டும், பிறப்பு உறுப்பில் ஒன்றும் மாட்டப்பட்டது. மாதி கையெடுத்துக் கும்பிட்டாள். பலனில்லை. போலீஸ்காரன் மெக்கர் பெட்டியின் கைப்பிடியை நான்கு சுற்று சுற்றினான். பின், அதன் கருப்புநிறப் பொத்தானை அழுத்தினான்.
“அட சாமி…” என அவள் அறை முழுதும் திக்கற்று ஓடினாள்… அவள் தன் உடலில் நரம்புகள் ஆங்காங்கே தலைமுதல் பாதம் வரை வெடித்துச் சிதறச் செய்யுமளவு வலியையும் அதிர்வையும் அனுபவித்துத் தரையில் விழுந்தாள்.
“இவ பொண்ணை இழுத்தாங்கடா” என்றான் அதிகாரி…. (பக்.206-209)
இவ்வளவு கொடிய தண்டனைகள், அடக்குமுறைகள் எல்லாம் எந்தக் குற்றமும் செய்யாத சோளகர்களுக்கு, அவர்கள் செய்த குற்றம் இந்த வனத்தின் மக்களாகப் பிறந்ததுதான். உடல் உறுதிமிக்கவர்கள் மட்டுமல்ல உள்ள உறுதியும் உடையவர்கள்.
“உன் தைரியத்தை நான் விரும்பினேன். உன்னைக் கூண்டுலே அடைச்சாலும் நீ சிங்கம்தான்னு நான் நினைக்கிறேன். நான் பட்ட கஷ்டத்தினாலே நான் களைப்படைந்து விட்டேன் நம்ம குடும்பமும் சிதைந்து போச்சி. இதுக்குச் சீக்கிரம் முடிவு வரணும்” என்று ஜோகம்மாள் உட்கார்ந்திருந்த கட்டிலில் தன் தலையை இடித்துக்கொண்டாள் மாதி.
“நான் தலமலை அதிரடிப்படை முகாமுக் குப் போய்ச் சரணடையட்டுமா?” என்றான் சிவண்ணா.
“நீ உயிரோட இருக்கணும். நீ இருக்கேங்கற நம்பிக்கையிலேதான் நான் அத்தனை கொடுமை களையும் தாங்கிக்கொண்டேன். என் உடம்பு வலி கண்டாலும் என்னாலே உழைக்க முடியும். வாழமுடியும். நான் உன் மாதிரி ஆம்பிளையா இருந்திருந்தா மாதேஸ்வரன் மலையிலிருந்து உயிரோட திரும்பி வந்திருக்க முடியாது. போலீசுகிட்டே போகாதே. என் உயிர் நீ என்றாள்”.
“நான் திரும்பி வந்துடுவேன் தாயி, அதுவரைக்கும் நீ உயிரோட இருப்பே” என்றான் சிவண்ணா. பின் மாதியிடம் “நான் தைரியமாயிருக்கேன். நீதான் எனக் குக் காவல் தெய்வம். எல்லாம் பாத்துக்க” என்று அவள் கையைப் பிடித்துச்சொல்லிவிட்டு எழுந்தான். (ப.237)
“சிவண்ணாவை நான் காட்டிக்கொடுக்கணுமா? நான் இந்தக் குலத்தின் தலைமகன் என்பது இந்தப் போலீஸ்காரர்களுக்கு எங்கே தெரியும்?” என்றான் கொத்தல்லி. மாதி அவனைப் பார்த்தாள். அவனது கையைப் பிடித்துக்கொண்டாள். (ப.239)
இந்த நம்பிக்கைதான் அவர்களின் வாழ்வு. உன்னிச் செடிகளில் வண்ண வண்ண மலர்கள் பூத்துக் குலுங்குவதோடு நாவல் நிறைவடைகிறது.
இது பழங்குடிகளின் வாழ்வை அறியச் செய்யும் முயற்சி. சோளகர்களின் மொழியும், வழக்காறுகளும், பண்பாடும் நூலில் தென்படுகின்றன. அரசதிகாரமும், அடக்குமுறைகளும் மனித உரிமைகளைக் காலில் போட்டு மிதிக்கும் அவலத்தை நுட்பமாகச் சொல்லி நாகரிகச் சமூகத்தின் முகத்தில் அறைகிறது நாவல்!.
சோளகர்தொட்டி, நாவல்
ச. பாலமுருகன்,
வனம் வெளியீடு,
17, பாவடித்தெரு,
பவானி-638301,
முதல்பதிப்பு-2004