இப்பை இன்னும் ஏத்துக்க முடியலை - உருக வைத்த நினைவாஞ்சலி

/idhalgal/eniya-utayam/i-still-cant-stand-it-melted-memory

சென்னையில் 30-ந் தேதி திரையுலகப் பிரமுகர்கள் பங்கேற்ற நினைவாஞ்சலி நிகழ்ச்சி நடந்தது. பாடகர் சித்ரா, இசையமைப்பாளர் வித்யாசாகர், நடிகர் கார்த்தி, நடிகர் ஜெயராமன், இயக்குர் பி.வாசு, கவிஞர் பிறைசூடன், நடிகர் மயில்சாமி உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு அஞ்சலி உரை நிகழ்த்தினர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய நம் ஆசிரியர் நக்கீரன் கோபால்...

ff

“ஐயன் திருவள்ளுவர், தக்கார் தகவிலார் என்பது அவரவர்/ எச்சத்தால் காணப்படும்ன்னு/ ஒரு குறளை எழுதினார். அதன்படி நம்ம எஸ்.பி.பி. சார், தன் பாடலையும் புகழையும் நினைவு களையும் நம்மிடையே விட்டுவிட்டுப் போயிருக் கார். உலகமே பாராட்டும் ஒரு மாமனிதானாக அவர் நிற்பதைப் பார்க்க முடியுது. அவரோடு பேசிப் பழகி

சென்னையில் 30-ந் தேதி திரையுலகப் பிரமுகர்கள் பங்கேற்ற நினைவாஞ்சலி நிகழ்ச்சி நடந்தது. பாடகர் சித்ரா, இசையமைப்பாளர் வித்யாசாகர், நடிகர் கார்த்தி, நடிகர் ஜெயராமன், இயக்குர் பி.வாசு, கவிஞர் பிறைசூடன், நடிகர் மயில்சாமி உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு அஞ்சலி உரை நிகழ்த்தினர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய நம் ஆசிரியர் நக்கீரன் கோபால்...

ff

“ஐயன் திருவள்ளுவர், தக்கார் தகவிலார் என்பது அவரவர்/ எச்சத்தால் காணப்படும்ன்னு/ ஒரு குறளை எழுதினார். அதன்படி நம்ம எஸ்.பி.பி. சார், தன் பாடலையும் புகழையும் நினைவு களையும் நம்மிடையே விட்டுவிட்டுப் போயிருக் கார். உலகமே பாராட்டும் ஒரு மாமனிதானாக அவர் நிற்பதைப் பார்க்க முடியுது. அவரோடு பேசிப் பழகினவங்க எல்லாம் இங்கே அந்த அனுபவங்களைச் சொல்லிட்டுப்போனாங்க.

எனக்கு அந்த வாய்ப்பு கிடைக்கலை. நான் அவரோட பழகலை. தூரத்தில் இருந்தபடியே அவரோட வாழ்ந்திருக்கேன். அவர் பாடலோட வாழ்ந்திருக்கேன். நம்ம வீட்டு ரேசன் கார்டில் ஒரு ரெண்டு மூணு பேர் மறைஞ்சிருப்பாங்க. சிவாஜி சார் அப்படி ஒவ்வொருவர் வீட்டோடும் ஒன்றியிருந்தார். அவருக்கு அடுத்து நம்ம பாலு சார்தான் அப்படி இருந்தார்.

அவர் இழப்பிலிருந்து யாராலும் மீள முடியலை. எங்க வீட்டம்மாவை அதுல இருந்து என்னால் இன்னும் வெளில கொண்டுவர முடியலை. பாலு சார் ஒரு படத்தில் நடிச்சிருப்பார். பாலு சாருக்கும் லட்சுமி அம்மாவுக்கும் வயதான பாத்திரம் அந்த மிதுனம் படத்தில் அதில் அவர் நடிக்கலை. பாத்திரமாவே வாழ்ந்திருப்பார். இப்ப வீட்டுக்குப் போனாலும் அந்தப் படத்தில் இருந்து ஒரு பிட்டை என் வீட்டம்மா என்னிடம் காட்டி மனம் உருகு வாங்க. அதுல ஒரு குளியல் காட்சியில் அவர் எதையோ முகத்தில் பூசிக்கிட்டு வந்து நடிச்ச காட்சியை... இப்ப நினைச்சாலும் புல்லரிக்கும்.

கடைசியா ஆகஸ்ட் 5-ந் தேதி பாலு சார் ஒரு வீடியோ வெளியிட்டி ருந்தார். அதில், யாரும் எனக்காக வருத்தப்படாதீங்க. எனக்கு ஒன்னும் இல்லை. சளிதான். லேசான காய்ச்சல். ரொம்ப ரொம்ப மைல்டா கொரோனா இருக்கு. நான் ரெண்டு நாள்ல வீட்டுக்கு வந்டுவேன். வீட்ல சிகிச்சை எடுத்துக்கலாம்தான். ஆனா, வீட்ல இருக்கறவங்க, அன்பு காரணமா என்னைத் தனியா இருக்கவிடமாட்டாங்க. அதனால் தான் ஆஸ்பிடலுக்கு வந்தேன்னு பச்சை சட்டை போட்டுக்கிட்டு பாலு சார் அதில் பேசியதை நாம எல்லோரும் பார்த்திருப்போம்.

அதுல அவர் முகத்தில் தெரிஞ்ச தேஜஸ், பிரைட்னஸ் நமக்கு நல்ல நம்பிக்கையைக் கொடுத்துச்சு. 50 ஆவது நாள் இப்படி ஒரு முடிவு. இதை எப்படி ஏத்துக்க முடியும். அதனால் பத்திரிகையாளரா நாம், எஸ்.பி.பி.யின் கடைசி நிமிடம்ன்னு செய்தி வெளியிட்டோம். இங்கே பேசிய டாக்டரும், மறுநாள் பிரஸ் மீட் கொடுத்த தம்பி சரணும், எந்தத் தவறும் நடக்கலை, ரொம்ப நல்ல சிகிச்சை கொடுக்கப்பட்ட துன்னு தெளிவு படுத்தினார். ஆனாலும் அந்த மரணத்தை நம்மால் ஏத்துக்கமுடியலை. எப்படியாவது பாலு சார் மீண்டு வந்துடமாட்டாராங்கிற ஆதங்கம்தான் நமக்கு.

எல்லோரிடமும் அவரை மாதிரி நல்ல பேர் எடுக்க முடியாது. அந்தத் தொலைக்காட்சி சேனல்ல பாட்டுப்பாடும் நிகழ்ச்சியில், கோளாறு சொல்றதுக்குன்னே நாலஞ்சு பேர் உட்கார்ந்து இருப்பாங்க. ஆனா பாலு சார் சின்னக் குழந்தைகளைக் கூட, கோளாறு சொல்றவங்கள்லாம் வெட்கப் படற மாதிரி பாராட்டுவார். சமீபத்த்தில் ஒரு பார்வையிழந்த பாடகரை அவர் கட்டியணைச்சி, என்னை விட நல்லா பாடுரேய்யான்னு அவர் பாடியதைப் பார்த்து நெகிழ்ந்துபோனேன். யார் இப்படி சொல்வா? பாலு சார் தலைக்கு மேல் வைரகிரீடம் இருக்கு. அப்படிப்பட்ட உயரமான மனிதர், எவ்வளவு பணிவா மத்தவங்கக்கிட்ட காட்டினார்.

இங்கே எல்லோரும் தம்பி சரண், எஸ். பி.பி சார் மாதிரி வரனும்ன்னு வாழ்த்தினாங்க. அவர் வருவார். அதுக்கு நக்கீரன் எப்பவும் துணை இருக்கும் என்று எஸ்.பி.பி.க்கு புகழாஞ்சலி செய்தார்.

-தமிழ்

uday011020
இதையும் படியுங்கள்
Subscribe