எனது விருதை திராவிட இயக்கத் தலைவர்களுக்கு சமர்ப்பிக்கிறேன் என்கிறார், இந்த ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டிருக்கும் எழுத்தாளர் இமையம்.
எழுத்தாளர் இமையம் எழுதிய "செல்லாத பணம்' புதினத்திற்காக, அவருக்கு இந்த ஆண்டுக்கான சாகித்ய அகடமி விருது 12-ஆம் தேதி அறிவிக்கப்பட்டிருக்கிறது.
சாகித்ய அகடமி, மேல்வர்க்கத்துக்கு மட்டுமே ஒரு காலத்தில் கிடைத்து வந்தது. அதனால் சர்ச்சைகளுக்கும் அது ஆளானது உண்டு. இப்போது அண்மைக்காலமாக தனது பார்வையை விசாலமாக்கிக் கொண்டிருக்கும் சாகித்ய அகாடமி, இந்த வருடம் பக்கா தி.மு.க.காரரும் ஒடுக்கப்பட்டவர்களுக்காக எழுதிவருகிறவருமான எழுத்தாளர் இமயத்துக்கு, இந்த வருட விருதை அறிவித்து ஆச்சரியமூட்டியிருக்கிறது.
இமையம், கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். அண்ணாமலை என்ற இயற் பெயரைக் கொண்ட இவர் 1964-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 10 ஆம் தேதியன்று கடலூர் மாவட்டம், திட்டக்குடி வட்டம், கழுதூரில் பிறந்தவர்.
தான் பார்த்த, பழகிய, வாழ்ந்த கிராமத்தையும், கிராமத்து ஒடுக்கப்பட்ட மக்களையும் தனது கதைகளில் உயிர்ப்பாக சித்தரிப்பதில் இமையம் வல்லவர். சாதி ஒடுக்குமுறைகளையும், கிராமத்துப் பெண்களுக்கு நேரும் பாலிலியல் ஒடுக்குமுறைகளையும் ஆணாதிக்க அவலங்களையும், சமூக ரீதியாக நிகழ்த்தப்படும் வக்கிரங்களையும், தொடர்ந்து தனது படைப்புகளில் தோலுரித்துக் காட்டிவருகிறவர் இவர்.
""சமூகத்தின் சிறுபான்மை மக்களைப் பற்றி எழுதும் நான் சாதிய அடையாளத்தை ஏற்றுக் கொள்வதில்லை. என் எழுத்துகள் சாதியை அழிக்க வேண்டுமே தவிர, சாதியத்தை வளர்த்தெடுக்க ஒரு சிறிதும் பயன்படாது. விமர்சகர்கள் வேண்டுமானால் என்னைத் தலிலித் எழுத்தாளர் என்று சொல்லிலிவிட்டு போகட்டும். எனக்கு அதைப்பற்றிக் கவலைப்பட வில்லை'' -என்று பிரகடனம் செய்யும் நெஞ்சுரம் மிக்கவர்.
சிறந்த பேச்சாளராகவும் திகழும் இமையம், தான் நினைத்ததை அப்பட்டமாகச் சொல்லும் துணிச்சல் மிக்கவராகவும் இலக்கிய உலகில் வலம் வருகிறார். 94-ல் வெளிவந்த இவரது "கோவேறு கழுதைகள்' தமிழ் இலக்கிய உலகின் பார்வையை இவர் பக்கம் திருப்பியது. அதைத் தொடர்ந்து மண்பாரம், ஆறுமுகம், செடல், மாரியம்மன் வீடியோ தொகுப்பு, கொலை சேவல், சாவுச் சோறு என பல்வேறு புதினங்களையும் குறு நாவல்களையும் சிறுகதை களையும் எழுதி பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறார்.
இவரது "பெத்தவன்' குறும்புதினம், அதைப் படித்த பெண்களின் கண்ணீரில் அதிகம் நனைந்திருக் கிறது. இவரது ஒவ்வொரு படைப்பும் நிகழ்வின் நகலாக இருப்பது இவரது பலம் இவரது படைப்பு கள் பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பாராட்டுதல்களையும் பெற்றிருக்கின்றன.
இந்த விருதுச் செய்தி வந்தவுடனேயே நாம் இமையத்தைத் தொடர்பு கொண்டோம். அப்போது அவர் மகிழ்ச்சியோடும் நெகிழ்ச்சியோடும்...
""இந்த விருதை நீதிக்கட்சியைத் தொடங்கிய தலைவர்களுக்கும், திராவிட இயக்கத் தலைவர்களுக்கும் சமர்ப்பிக்கிறேன். ஏனென்றால் அவர்களால்தான் நம் மண் நிமிர்ந்தது. குறிப்பாகச் சொல்ல வேண்டுமா னால் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, டாக்டர் கலைஞர், டாக்டர் அம்பேத்கர் ஆகியோருக்கு இந்த விருதை சமர்ப்பிப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். ஏனென்றால் இவர்கள் ஊட்டிய உணர்வுதான் என்னை எழுதவைத்துக்கொண்டிருக்கிறது. ஒடுக்கப் பட்டவர்களுக்காக வாதாட வைக்கிறது.'' என்றார் உற்சாகமாக.
ஒரு நேர்காணல் என்றதும், "இது தேர்தல் நேரமாச்சே. தேர்தல் முடிஞ்சி வச்சிக்கலாமா?' என்றார் ஒரு கட்சிக்காரராக.
மீண்டும் இரண்டு நாள் கழித்து அவரைத் தொடர்புகொண்டு ""உங்கள் சாகித்ய அகடாமி விருது... எந்த அளவுக்கு வாழ்த்துக்களைக் குவித்துக் கொண்டிருக்கிறது?'' என்றோம்.
அப்போதும் அவர், தலைவர் (ஸ்டாலிலின்)
வாழ்த்து கிடைத்ததில் மகிழ்ச்சியில் திளைக்கிறேன்.
அக்கா கனிமொழி எம்.பி.தான் என்னைத் தலைவரிடம் குடும்பத்தோடு அழைச்சிக்கிட்டுப் போனாங்க. தலைவர் மகிழ்ச்சியோடு, தொடர்ந்து எழுதுங்கன்னு வாழ்த்தி னார். அதேபோல் கனிமொழி அக்காவும் மனம் நிறைந்த வாழ்த்தைத் தெரிவித்து, ஒரு உயர்ந்த பரிசுப் பொருளையும் அளித்தார். கழகப் பிரமுகர்கள் பலரும், என்னை அன்போடு வாழ்த்தினார்கள். வேட்பாளரான என் அண்ணனுடன் பிரசாரத்துக்குப் போகும்போது மாணவர்களும் இளைஞர்களும் என்னை அடையாளம் கண்டு வாழ்த்துகி றார்கள். மனம் அதில் மகிழ்ந்தாலும் கவனம் முழுக்க தேர்த லிலிலேயே இருக்கிறது. ஆட்சி மாற்றம் வரனும். அப்பதான் தமிழகம் விடியும்'' என்றார் உற்சாகம் இழக்காமாலே. ’"உங்களுக்கான சாகித்ய விருதை திராவிடத் தலைவர் களுக்கு சமர்ப்பிக்கிறேன்னு சொன்னீங்களே?' என்றோம்.
ஒரு கணம் நிதானித்தவர் "திராவிட இயக்கச் சித்தாந்தத்தை நம்புகிறவன் நான். திராவிட இயக்கத் தலைவர்கள் இல்லை என்றால் தமிழ்ச் சமூகத்தின் முகவரியே முழுதாக உருக்கெட்டுப் போயிருக்கும். நீதிக்கட்சிதான், தமிழக அரசியலை வேறு திசையில், மறுமலர்ச்சிப் பாதையில் திருப்பியது. அதன் தொடர்ச்சி யாகத்தான் தந்தை பெரியார் என்ற மாமேதை, நம் அறிவுக் கிழவர், இந்த மண்ணை மடமை இருளில் இருந்து மீட்டு, பகுத்தறிவால் சலவை செய்தார்.
அவரில்லை என்றால், 500 ஆண்டுகளுக்குப் பின்னால் நம் தமிழகம் இருந்திருக்கும். அவர் வழிவந்த அண்ணாவும் கலைஞரும் தமிழகத்தை பல வகையிலும் உயர்த்தினார் கள். என் எழுத்துக்களுக்கான கருவறை கலைஞரிடம் இருந்தது. அவரது தமிழ் என் உள்ளத்தை நிமிர வைத்தது. புது ரத்தத்தை எனக்குள் அது பாய்சியது. ஒடுக்கப்பட்டவர்களுக்காகவும் பாமர மக்களுக்காகவும் அவரது பேனா சுழன்ற வேகத்தைப் பர்த்துத் திகைத்துப் போனவன் நான். அவரது மொழி ஆளுமையும் படைப்புத் திறமையும் ஆச்சரியங்களின் ஆச்சரியம். தமிழிலக்கிய உலகத்தை அம்மாஞ்சிகள் கையில் இருந்து மீட்டு, இன்று அதை அறிவுலகமாக விரியச்செய்தவர்கள் என்றால் அண்ணாவும் கலைஞரும்தான். மன உறுதியோடும் திராவிட ஈரத்தோடும் என் எழுத்துப் பயணம் தொடர்கிறது. என் படைப்புகள் தமிழிலக்கியப் பெருவெளியில் தவிர்க்க முடியாதவை என்பதால், எனக்கு சாகித்ய அகடமியைக் கொடுத்திருக்கிறார் கள்' என்று தன்னம்பிக்கையுடன் முடித்துக் கொண்டார்.
திராவிட இயக்கத்தைச் சேர்ந்த எழுத்தாளர் இமையத்துக்கு சாகித்ய அகாடமி கொடுக்கப்பட்டிருப்பது பொருத்தமானது. இது ஒடுக்கப்பட்டவர் களுக்காக வாதாடும் அவரது எழுத்துக்குக் கிடைத்திருக்கிற மரியாதை. மனிதநேயம் ததும்பும் அவரது படைப்புகளுக்கு கிடைத்திருக்கிற ஒத்தடம். அவரது திராவிட இயக்கச் சிந்தனைக்குக் கிடைத்திருக்கிற வெற்றி!
-நாடன்