மரம் வளர்த்தேன்! மனிதம் வளர்த்தேன... - பொன்னேரி பிரதாப்

/idhalgal/eniya-utayam/i-grew-tree-man-has-cultivated-ponneri-pratap

நிழலின் அருமை வெயிலில்தான் தெரியும் என்பதைப்போல, மரங்களின் மகிமையானது ஆக்சிஜன் காற்றை அதிக மான காசுகொடுத்து வாங்கும் அவலம் அரங்கேறி வரும் இந்த இக்கட்டான காலத்தில்தான் தெரியும். தெரிந்து கொள்ளவும் வேண்டும்.

இயற்கை அனைத்தையும் படைத்தது எனில், அது படைத்தவற்றுள் மரங்களும் அடங்கும். ஆனால், படைத்த இயற்கைக்கு முன்பாகவே கடவுளாக மரங்களைத்தான் நம் ஆதிகாலத்து மக்கள் ஆராதனை செய்தனர். இன்று ஆலயங்களில் காணப்படும் தலவிருட்சங்களே அதற்கு தக்க சான்றுகளாகும்.

மரமானது ஓரறிவு உயிரினமாக இருந்தாலும் அது ஆறறிவு உயிரினமான மனித இனம் இந்த மண்ணில் உயிர்த்திருக்க பல உதவிகளைச் செய்கிறது. அதனாலேயே, உதவி செய்யும் உயர்குணமுடைய ஒருவனிடம் சேரும் செல்வத்தை, ஊர் நடுவேயிருக்கும்"பயன்மரம்" போன்றது என்பதை, "பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றாற் செல்வம் நயனுடையான் கண் படின்" (திருக்குறள்.216) என்று பாராட்டுகிறார் திருவள்ளுவர்.

வானத்தை வசப்படுத்தி மழையை மண்ணுக்கு வருவிப்பதற்காக, இயற்கை நீட்டும் கரங்களே மரங்களாகும்.

இத்தகு மரங்களை வெட்டுவது இயற்கையின் கரங்களை வெட்டி முடமாக்குவதற்குச் சமம். ஆகவே, மரங்களைப் பாதுகாப்பது என்பது இயற்கையின் கரங்களுக்கு கரம் கொடுப்பதை போல.

"நீரினை நிலத்துக்குள் தேடாமல் அதை வானிலிருந்து வரவழைக்க வேண்டும்" என்கிறார் கோ.நம்மாழ்வார். இதனை மரத்தாலன்றி மனிதனாலோ மனித அறிவால் விளைந்த அறிவியலாலோ செய்ய முடியாது என்பதே அந்த அறிவியல் அறிவிக்கும் முடிவு.

38 டிரில்லியன் (1 டிரில்லியன்= 1 இலட்சம் கோடி) பணத்தைச் செலவுசெய்து செயற்கையாகத் தயாரிக்கின்ற ஆக்சிஜனை, மரங்கள் ஆறு மாதத் திற்குள்ளேயே தயார் செய்து அகிலத்தின் தேவைக்காக அளிக் கின்றன.

ஐம்பூதங்களாகிய நிலம், நீர், காற்று, ஆகாயம் மற்றும் நெருப்பு ஆகியவற்றுள் ஒவ்வொன்றையும் காசு கொடுத்து வாங்கும் நிலை ஏற்படுவது என்பது, சீக்கிரம் மனிதகுலம் மரணிப்பதற்கான அறிகுறிகளாகும். ஐம்பூதத்துள் ஒன்றாக விளங்கும் நிலம் விற்பனைக்கு வந்தது. பின், நீரும் விற்பனைக்கு வந்துவிட்டது.

trees

அடுத்து ஆக்ஸிஜனாகிய அடிப்படை சுவாசக் காற்றையும் காசு கொடுத்து வாங்கவேண்டிய கடுமையான சூழல் வந்துகொண்டிருக்கிறது. வந்துவிட்டது. இவையே மனித குலத்தின் வீழ்ச்சிகளாகும். மனித குலத்தைக் காக்க, ந

நிழலின் அருமை வெயிலில்தான் தெரியும் என்பதைப்போல, மரங்களின் மகிமையானது ஆக்சிஜன் காற்றை அதிக மான காசுகொடுத்து வாங்கும் அவலம் அரங்கேறி வரும் இந்த இக்கட்டான காலத்தில்தான் தெரியும். தெரிந்து கொள்ளவும் வேண்டும்.

இயற்கை அனைத்தையும் படைத்தது எனில், அது படைத்தவற்றுள் மரங்களும் அடங்கும். ஆனால், படைத்த இயற்கைக்கு முன்பாகவே கடவுளாக மரங்களைத்தான் நம் ஆதிகாலத்து மக்கள் ஆராதனை செய்தனர். இன்று ஆலயங்களில் காணப்படும் தலவிருட்சங்களே அதற்கு தக்க சான்றுகளாகும்.

மரமானது ஓரறிவு உயிரினமாக இருந்தாலும் அது ஆறறிவு உயிரினமான மனித இனம் இந்த மண்ணில் உயிர்த்திருக்க பல உதவிகளைச் செய்கிறது. அதனாலேயே, உதவி செய்யும் உயர்குணமுடைய ஒருவனிடம் சேரும் செல்வத்தை, ஊர் நடுவேயிருக்கும்"பயன்மரம்" போன்றது என்பதை, "பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றாற் செல்வம் நயனுடையான் கண் படின்" (திருக்குறள்.216) என்று பாராட்டுகிறார் திருவள்ளுவர்.

வானத்தை வசப்படுத்தி மழையை மண்ணுக்கு வருவிப்பதற்காக, இயற்கை நீட்டும் கரங்களே மரங்களாகும்.

இத்தகு மரங்களை வெட்டுவது இயற்கையின் கரங்களை வெட்டி முடமாக்குவதற்குச் சமம். ஆகவே, மரங்களைப் பாதுகாப்பது என்பது இயற்கையின் கரங்களுக்கு கரம் கொடுப்பதை போல.

"நீரினை நிலத்துக்குள் தேடாமல் அதை வானிலிருந்து வரவழைக்க வேண்டும்" என்கிறார் கோ.நம்மாழ்வார். இதனை மரத்தாலன்றி மனிதனாலோ மனித அறிவால் விளைந்த அறிவியலாலோ செய்ய முடியாது என்பதே அந்த அறிவியல் அறிவிக்கும் முடிவு.

38 டிரில்லியன் (1 டிரில்லியன்= 1 இலட்சம் கோடி) பணத்தைச் செலவுசெய்து செயற்கையாகத் தயாரிக்கின்ற ஆக்சிஜனை, மரங்கள் ஆறு மாதத் திற்குள்ளேயே தயார் செய்து அகிலத்தின் தேவைக்காக அளிக் கின்றன.

ஐம்பூதங்களாகிய நிலம், நீர், காற்று, ஆகாயம் மற்றும் நெருப்பு ஆகியவற்றுள் ஒவ்வொன்றையும் காசு கொடுத்து வாங்கும் நிலை ஏற்படுவது என்பது, சீக்கிரம் மனிதகுலம் மரணிப்பதற்கான அறிகுறிகளாகும். ஐம்பூதத்துள் ஒன்றாக விளங்கும் நிலம் விற்பனைக்கு வந்தது. பின், நீரும் விற்பனைக்கு வந்துவிட்டது.

trees

அடுத்து ஆக்ஸிஜனாகிய அடிப்படை சுவாசக் காற்றையும் காசு கொடுத்து வாங்கவேண்டிய கடுமையான சூழல் வந்துகொண்டிருக்கிறது. வந்துவிட்டது. இவையே மனித குலத்தின் வீழ்ச்சிகளாகும். மனித குலத்தைக் காக்க, நிலம், நீர், காற்று போன்றவற்றை முறையே பேணவேண்டும். அதற்கு மரவளர்ப்பே மாமருந்து. அதற்கென புதிதாக மரங்களை நடுவதை விட, இருக்கின்ற மரங்களை பாதுகாப்பதே முறையான முதல்வழியாகும்.

ஏனெனில், நாடு முழுவதும் மரம்நடு விழாக்கள் மங்காமல் நடந்துவருகின்றன. இது தேர்தல் வாக்குறுதி களைப்போல் ஒருநாள் கூத்தாகவே நடைபெற்று அடுத்த நாளே காற்றில் விடப்படுகின்றனவே தவிர, காப்பாற்றப்படுவதில்லை. ஆகவே, புதிதாக மரத்தை நடாமல் இருக்கின்ற மரங்களை காப்பதே, விழுதுக்கு விசிறிவீசுவதை விட்டுவிட்டு வேருக்கு நீர் ஊற்று வதைப் போலாகும். ஏனெனில், நன்கு வளர்ந்த ஒரு மரமானது, ஓராண்டிற்கு 117 கிலோ ஆக்சிஜனை அள்ளித்தருகிறது. நன்கு வளர்ந்த இரண்டு மரங்கள், ஒரு குடும்பத்திற்கான ஒட்டுமொத்த ஆக்ஸிஜன் தேவையையும் நிறைவுசெய்கின்றன என்பது சில ஆய்வுகளின் முடிவுகளாகும்.

"குளம்தொட்டு கோடுபதித்து வழிசீத்து

உளந்தொட்டு உழு வயலாக்கி வளந்தொட்டு

பாடுபடும் கிணற்றோடு என்றிவ்வைம்பான் படுத்தான்

ஏகும் சுவர்க்கத்து இனிது"

என்ற பாடலில் சிறுபஞ்சமூலமானது குளம் வெட்டுதல், வாய்க்கால் அமைத்தல், கிணறு வெட்டுதல், வயலமைத்தல் மற்றும் மரம் நடுதல் ஆகிய ஐந்து செயல்களைச் செய்பவனுக்கு சொர்க்கம் கிடைக்குமென்று சொல்கிறது. ஆனால் மேற்கண்ட நான்கு செயல்களுக்கும் அடிப்படையாக மரமே திகழ்வதால் மரம் நட்டாலே சொர்க்கம் கிடைக்கு மென்பது என் கருத்து. மேலும், மற்ற நான்கு செயலையும் செய்வதைவிட மரம் நடுதலென்பது அனைவராலும் எளிமையாக செய்யக்கூடிய மாபெரும் அறமாகும்.

உதாரணமாக தீபாவளியன்று பல வெடி வைத்துக்கொண்டாடும் நாம், ஒரு செடிவைத்து சேவை செய்யலாம்.

நம்மைப் பாதுகாக்கும் நாம் மரங்களைப் பாதுகாத் தால் பல்வேறு நன்மைகள் நமக்குண்டு. மரங்களே பூமி வெப்பமயமாதலை தடுக்கும் தடுப்பு மருந்துகளாகவும் காற்றின் சுத்திகரிப்பு நிலையங்களாகவும் நீர்த் தேவையை நிறைவேற்ற, மழையை வருவிக்கும் வசீகரங்களாகவும் விளங்குகின்றன.

ஆகவே, மரங்களின் இருப்பை அதிகரிப்பதும் பாதுகாப்பதுமே மனித இனத்தைப் பாதுகாப்பதற்கான மாபெரும் வழி.

ஆனால், வழி என்ற பெயராலேயே மனிதன் மரங்களை வெட்டி, சாலைகள் அமைத்து நான்கு வழிச்சாலை, எட்டுவழிச்சாலை என்ற பெயரில் தன் வசதிகள் அதிகரித்த வெற்றியைக் கொண்டாடுகிறான்.

இந்த இழிநிலையை,

"மரங்களெல்லாம் மரணம் ;

நான்கு வழிச்சாலைகள் ஜனனம்;

அவற்றின்மீது வாகனங்களெல்லாம் பயணம்;

வாகனத்தின் பின்புறத்தில் ஒரு வசனம்;

மரம் வளர்ப்போம் மழை பெறுவோம் என்று" என்ற கவிதை எடுத்தியம்புகிறது.

இப்படித்தான் வாழவேண்டும் என்று மனிதனுக்கு வாழக் கற்றுக் கொடுப்பவை மரங்கள். திருமண இல்லத்தில் வரவேற்க, வாசலில் நின்று தன் குலைகளைக் காட்டி, "நீங்களும் எங்களைப்போல் கூட்டமாகக் கூடி வாழுங்கள்" என்று வகுப்பெடுக்கும் வாழை மரங்களின் ஒவ்வோர் உறுப்புகளும் உபயோகம் மிக்கவை.

அதன் அங்கங்கள் அனைத்துமே பயன்படக்கூடியவை. நாமும் வாழை மரத்தைப் போன்று அனைவருக்கும் பயன்பட்டு வாழவேண்டும் என்பதற்காகத்தான் "வாழ்க்கை" என்ற சொல்லானது "வாழை" என்ற சொல்லிலிருந்து வந்துள்ளது. தன்னம்பிக்கை என்ற உணர்வு குறைந்துகொண்டு வரும் நம் முன்னர், வெட்டியவுடனே துளிர்த்து தன் தன்னம்பிக்கைக் காட்டுவதும் வாழைமரங்கள்தான்.

தன் காலில் உப்புநீரையோ அல்லது கழிவு நீரையோ எதைப் பாய்ச்சினாலும் அதனை உடல் வழியாக உறிஞ்சி, தன் தலையின் வழியாக இனிமையான இளநீராகத் தரும் தென்னைமரங்கள், நமக்கு நன்றியுணர்வை கற்றுத்தரும் அன்னை மரங்களாகும். இதனை , "நன்றி ஒருவர்க்கு செய்தக்கால் அந்நன்றி என்று தருங்கொல் என வேண்டாலி நின்று தளரா வளர்தெங்கு தாளுண்ட நீரைத் தலையாலே தான் தருதலால்" என்று பாடும் ஔவையார், ஒருவருக்கு உதவியைச் செய்துவிட்டு அது எப்போது திரும்பிவரும் என்று எதிர்பார்க்காதே, தென்னை மரத்தைப் பார்த்துத் தெளிவுகொள் தெரிவிக்கிறார். இதுமட்டுமா? தென்னை மரத்தின் கன்றை "தென்னம்பிள்ளை" என்று அழைப்பதும் தன் பிள்ளையாகவே கருதுவதும் மரபுத் தமிழனின் மாண்பாகும். ஆனால், பெற்ற பிள்ளையை விடவும் தென்னம்பிள்ளைகள் கடமை உணர்ச்சியில் தேர்ந்தவையாகும்.

இதனை அயல்நாட்டில் வாழும் தன் மகனுடன் பெற்றோர் மனம்விட்டுப் பேசுவதாக ஒரு கவிதை பேசுகிறது. இதோ அந்தக் கவிதை,

"மகனே நீ பிறந்த அன்று

நம் தோட்டத்தில் நட்டோம் ஒரு தென்னங்கன்று;

எங்கள் வியர்வையால் நீ வளர்ந்தாய் ;

நாங்கள் வார்த்த தண்ணீரால் தென்னையும் வளர்ந்தது.

நீ இன்று அயல்நாட்டில் சம்பாதிக்கும் பணம்

உனக்கு மட்டுமே பயன்படுகிறது.

ஆனால், தென்னை மரமோ

எங்களுக்கு சுவை நீரும் சுபநிழலும் தந்துதவுகிறது.

ஒரு நாள் நீ ஈமெயிலில் மூழ்கி இருக்கிறபோது எங்களை ஈ மொய்த்த செய்தி உன்னை வந்துசேரும்.

அதற்கும் நீ வராமல்போகலாம்; அப்போதும் இந்த தென்னை மரமே எங்களுக்கு இறுதி மஞ்சமாகும்."

என்ற இந்தக் கவிதை "பிள்ளையைப் பெற்றால் கண்ணீரு தென்னையை பெற்றால் இளநீரு" என்ற வாசகத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது.

ஆகவே, இப்படி வையத்துள் வாழ்வாங்கு வாழும் மரங்களை தெய்வத்துள் வைக்கப்பட தேர்வு செய்வது தேவையாகும். அதன்பொருட்டே தெய்வ வழிபாடுகளில் மரத்திற்கு முன்னிடம் கொடுத்தது நம் தமிழ் மரபு.

வாகை மரத்தை "கடவுள் வாகை" என்றும், வேப்பமரத்தை "தெய்வம் சான்ற பராரை வேம்பு" என்றும் சிறப்பிக்கிறது சங்க இலக்கியம். இன்றும் வேப்ப மரத்தையும் அரச மரத்தையும் வேங்கை மரத்தையும் ஆண்டவனாகவே ஆராதிக்கின்றோம்.

இப்படி இறைவனாக வழிபடப்படும் மரங்கள் இயற்கை கொடுத்த வரங்களாகும். என்றாலும் இந்த மரங்கள் தருகிற வரங்களும் ஏராளம். குறிப்பாக, குழந்தை வரத்தை மரமும் மனிதனுக்கு வழங்கி மலட்டுத்தன்மையைப் போக்குகிறது. அரசமரம் வெளியிடும் செரிடோன் என்ற வாயுவை சுவாசித்தால் பெண்ணினது கரு, பாங்குடன் காக்கப்படும் என்பது அறிவியல் உண்மை. அதன்பொருட்டு பெண்கள் அரச மரத்தை சுற்றும் வழக்கம் நம் ஆன்மீகத்தில் உருவாக்கப் பட்டுள்ளது. அவ்வாறு சுற்றும்போது காலைநேரத்தில் மட்டுமே செரிடோன் வாயு வெளிவருவதால் அரச மரத்தை காலை நேரத்தில் மட்டுமே சுற்றவேண்டும் என்பது நினைவில் கொள்ளவேண்டிய ஒன்றாகும்.

மனிதனின் பிறப்பிலிருந்து இறப்பு வரை ஏராளமான பொருட்களைத் தருகின்ற தருக்கள் தாராளகுணம் மிக்கவை.

அதனாலேயே சங்ககாலப் பெண்மணி ஒருத்தி, தன் தோழியரோடு விளையாடும்போது மண்ணில் புதைத்த புன்னைவிதை மரமாக விளைந்ததால் அதற்கு நெய்யும்பாலும் கலந்த நீரினைப் பெய்து வளர்த்தாள். அதைக்கண்ட அவளின் தாய், "இது உன்னைவிடச் சிறத்தது. மேலும் இம்மரம் உன் தங்கையைப் போல" என்று மரத்தை உயர்திணையாக உயர்த்திச் சொல்கிறாள். அதனால் தன் தங்கையாகவே எண்ணி வளர்க்கப்பட்ட அந்தப் புன்னைமரத்தின் அருகில் தன் காதலனைக் காண நாணுகிறாள்.

இதனை, "விளையாடு ஆயமொடு வெண்மணல் அழுத்தி, மறந்தனம் துறந்த காழ்முளை அகைய, நெய்பெய் தீம்பால் பெய்தினிது வளர்த்தது;

நும்மினும் சிறந்தது நுவ்வையாகும் என்று அன்னை கூறினள் புன்னையது நலனே.

அம்ம! நாணுதும், நும்மொடு நகையே"

(நற்றிணை.172) என்ற அடிகள் எடுத்தியம்புகின்றன. இதில் மரங்களை சகோதரத்துவத்துடன் நடத்திய சங்ககாலத் தமிழரின் வாழ்வு வெளிப்படுகிறது.

இதுமட்டுமா? மான உணர்வு வந்ததும் ஆதாமும் ஏவாளும் மறைந்து நின்றது மரத்திற்குப் பின்புறத்தில்தான். மானம் மட்டுமன்றி கல்வி கற்கவும் மரங்களே தாய்மடி தந்துள்ளன. அவ்வகை யில், தத்துவத்தைக் கற்றுத்தருவதற்கு மரங்களே கல்விக்கூடங்களாக விளங்குகின்றன. சனகாதி முனிவர் களுக்கு அறம் சொல்ல சிவபெருமான் அமர்ந்தது கல்லால மரத்தின் கீழ்தான். இதனை, "கல்லாலின் புடையமர்ந்து நான்மறை கீழ் ஆறங்கம் கற்ற கேள்வி" என்ற சுட்டுகிறது.

தத்துவத்திற்கு போதிமரத்தையும் உடம்பின் உறுதியை சொல்லும்போது தேக்குமரத்தை உதாரண மாகக் காட்டும் நாம், ஒருவர் செய்த உதவியை எப்படி எடுத்துக்கொள்ள வேண்டும்? என்பதற்கும் பனைமரத்தையே அளவுகோலாக்குகிறோம்.

இதனை, "தினைத்துணை நன்றி செய்யினும் பனைத்துணையாக் கொள்வர் பயன்தெரி வார்" என்ற திருக்குறளின்மூலம் தெரிந்து கொள்ளலாம்.

மங்கல நிகழ்வுகளில் வருங்காலத் தலைமுறை தழைக்க வேண்டுமென்பதற்காக "ஆல்போல் தழைத்து" என்றும் "மூங்கில்போல் சுற்றம்சூழ" என்றும் வாழ்த்தும் நாம், மரங்களின் தலைமுறை தழைக்கவேண்டும் என்று நினைக்கத் தவறுகிறோம்.

மரத்தின் பரம்பரை வாழ்ந்தால்தான் மனிதப் பரம்பரை வாழும்.

மனிதனின்றியும் மரங்கள் வாழும். ஆனால், மரங்களின்றி மனிதனால் வாழவே முடியாது.

இது எழுதப்படாத சாசனமாகும். இப்படி எழுதுவதற்கும்கூட ஒரு காலத்தில் ஓலைகளைத் தந்த பனை மரங்கள்தான் இன்றுவரை நிலத்தடி நீர் வளத்தை பாதுகாத்துக் கொண்டுக்கின்றன. ஆனால், மனித இனமோ மண்ணின் மடியை அறுத்துக் குடிப்பது போல, அதிக அளவிலான ஆழ்துளைக் கிணறுகள் அமைத்து அகிலத்தை அசிங்கப்படுத்துகிறது.

ஆகவே, மரத்தை மறத்தலாகாது.

மரம் தருகின்ற பயன்களை கவிப்பேரரசு வைரமுத்து "உண்ணக் கனி,

ஒதுங்க நிழல், தடவத் தைலம், தாளிக்க எண்ணெய்" என்று நீளும் ஒரு பட்டியலிடுகிறார்.

நாளை மகாத்மாவின் பிறந்தநாள் என்றால், இன்றே கடைக்குச் சென்று மதுவை வாங்கிவைக்கும் வி(இ)ழிப்புணர்வு மிக்க இவ்வுலகில் நாளைக்கு நாம் வாழவேண்டும் என்பதற்காக மரத்தினை வாழவைப்போம்.

"உலகம் வளர்க்கும் உபாயம் அறிந்து

மரம் வளர்த்தேன் மனிதம் வளர்த்தேனே"

என்று தருமந்திரம் பாடுவோம்.

uday011123
இதையும் படியுங்கள்
Subscribe