*தங்கள் இலக்கியப் பயணத் துக்கான தொடக்கம் எங்கிருந்து தொடங்கி யது?
கல்லூரிக் காலங்களில் ஒன்றிரண்டு கவிதை எழுதிய துண்டு. கண்ண தாசன், ஜெய காந்தன், சுஜாதா போன்றோர் களின் படைப்பு களை வாசித்ததுண்டு. 1990-களின் தொடக்கம். வார இதழ்கள் வாசிக்கும் பழக்கம் இருந்ததால் கே. ஜி. எப். பழனிசாமி பெங்களூர், லட்சுமி செங்குட்டுவன், ரேவதிப் பிரியன் ஈரோடு என்னும் பெயர்களை அடிக்கடி பார்ப்பதால் நாமும் எழுதினால் என்ன என்னும் ஏற்பட்டது. அப்போது சேலம் மாவட்ட வாசகர் பேரவைக் கூட்டம் நடத்துவது அறிந்து கலந்து கொண்டேன். அதன்பிறகு முதலில் கடிதமே எழுதினேன். முதல் கடிதமே ஆனந்த விகடனில் வெளியானது. அதே போல் என் முதல் புதுக் கவிதையும் ஆனந்த விகடனிலேயே வெளியானது. அதற்கு முன்பு ஒர் காதல் கவிதை காதம்பரியில் வெளியானது. தொடக்க காலத்தில் வணிக இதழ்களிலேயே எழுத்துகள் வெளியாயின . மெல்ல மெல்ல சிற்றிதழ் பக்கம் எழுதுவது தொடர்ந்தது. இன்றும் தொடர்கிறது. கவிதை, கட்டுரை, விமர்சனம் என என் உலகம் விரிந்தது.
* ஒரு படைப்பாளரான நீங்கள் எப்போது விமர்சகர் ஆனீர்கள்?
முதலில் கவிதைகள் எழுதினேன். வாசகர் கடிதங்கள் எழுதினேன். 1990-களின் தொடக்கத்தில் இலக்கிய உலகில் பிரவேசித்த நேரத்தில், 1990-களின் இறுதியில் சேலத்தில் இருந்த இளம் படைப்பாளிகள் அனைவரோடும் இணைந்து 'உளி ' என்னும் சிற்றிதழ் நடத்தினோம்.
எழுத்துச் சிற்பிகள் இயக்கத்தின் உறுப்பினர் களுக்கு மட்டும் விநியோகிக்கப்பட்ட உளி பின் பரவலாக்கப்பட்டது. இதழுக்கு வந்த நூல்களுக்கு விமர்சனம் எழுத வேண்டும் என்று முடிவெடுக்கப் பட்டு விமர்சனம் என்னும் பெயரில் ஒரு சிறு கட்டுரை எழுதினேன். இதுவே விமர்சனப் பணியின் தொடக்கம். 1999ஆம் ஆண்டு கவிஞர் பாலா தலைமையில் ஒரு விமர்சனக் கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டது. ஏற்பாடு செய்தவர் சேலம் கவிஞர் தமிழ்நாடன். நான் உடனிருந்தேன். ஒவ்வொரு நூலையும் ஒவ்வொருவர் விமர்சிக்க ஒவ்வொரு பெயராக சொல்லி வந்தார். கவிஞர் க. சக்கரபாணியின் இன்று தென்றல் வீசுகிறது என்னும் கவிதைத் தொகுப்பை விமர்சிக்க என் பெயரைச் சொன்னார். முதலில் தயங்கிய நான், பின் ஏற்று கவிஞர் பாலா தலைமையில் என் விமர்சனத்தை வைத்தேன்.
2003ஆம் ஆண்டு ஒரு ஹைக்கூ மாநாட்டில் எழுத்தாளர் விழி. பா. இதய வேந்தனின் 'தலித் அழகியல் ' தொகுப்பு கிடைத்தது. அது விமர்சனம் எழுதத் தூண்டியது. அதற்கு வரவேற்பும் கிடைத்தது. சற்றும் எதிர்பாராதவிதமாக எழுத்தாளர் சுப்ர பாரதி மணியன் அவரின் ' தேநீர் இடைவேளை 'தொகுப்பினை அனுப்பி வைத்து விமர்சனம் எழுதி அனுப்பக் கோரியது ஓர் அங்கீகாரமாகவே இருந்தது. இங்கிருந்தே என் விமர்சனப் பணி தொடங்கியது. ஏறத்தாழ ஆயிரம் நூல்களுக்கு விமர்சனம் எழுதி இருப்பேன். விமர்சனத் தொகுப்பு களும் வந்துள்ளன.
* சிற்றிதழ்களை அதிகம் நேசிக்கும் தாங்கள், அவற்றின் இப்போதைய போக்கு குறித்து என்ன நினைக்கிறீர்கள்?
இலக்கியத்தை வளர்த்து எடுப்பதில் , முன்னெடுத்துச் செல்வதில் முக்கிய பங்களிப்புச் செய்தவை சிற்றிதழ்களே. இவை அதன் ஆர்வலர் களால் தொடங்கப்பட்டு, படைப்பாளிகளிடமிருந்து படைப்புகள் பெறப்பட்டு இயங்கி வருகிறது. சிற்றிதழ்

இலக்கியத்தை வளர்த்து எடுப்பதில் , முன்னெடுத்துச் செல்வதில் முக்கிய பங்களிப்புச் செய்தவை சிற்றிதழ்களே. இவை அதன் ஆர்வலர் களால் தொடங்கப்பட்டு, படைப்பாளிகளிடமிருந்து படைப்புகள் பெறப்பட்டு இயங்கி வருகிறது. சிற்றிதழ் நடத்துபவர்களின் மன நிலையையும் மன உறுதியையும் பொறுத்தே தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. சிற்றிதழ்களுக்கு போதிய படைப்புகள் குறிப்பிட்ட காலத்தில் வருவதில்லை. தேவையான சந்தாக்களும் வந்து சேர்வதில்லை. இதனால் தொடர்ந்து நடத்தமுடியாத சூழல் உள்ளது. மாதா மாதம் கொண்டுவருவது பெரும் சிரமம் என்பதால் சில இதழ்கள் காலாண்டு இதழாகவும் இன்னும் சில எண்வழிச் சிற்றிதழாகவும் கொண்டுவரப் படுகின்றன. சிற்றிதழ்கள் பல அற்ப ஆயுளிலேயே முடிந்துவிடுவது இலக்கிய சோகமாகும். வானம் பாடி, கசட தபற, முன்றில் என எண்ணற்ற சிற்றிதழ்கள் நின்று போனாலும் இன்றும் பேசப்படுகின்றன. பரந்தாமனின் அஃ சிற்றிதழ்களில் குறிப்பிட வேண்டிய ஒன்று. சிற்றிதழ்களின் சிறப்புக் கருதி மக்களிடம் கொண்டு போக வேண்டுமென விசும்பு என்னும் ஒரு சிற்றிதழ் மூலம் அறுபதுக்கும் மேற்பட்ட சிற்றிதழ்களை மாதந்தோறும் அறிமுகப்படுத்தினேன். சோதனைகளை எல்லாம் தாண்டி பயணம், கல்வெட்டு பேசுகிறது, சங்கு , தாழம் பூ, புன்னகை, தமிழ்ப் பல்லவிபோன்ற இதழ்கள் தொடர்ந்து சாதனை படைத்து வருவதைப் பாராட்ட வேண்டும்.
* வணிக இதழ்களுக்கு மத்தியில் இலக்கியச் சிற்றிதழ்களின் பங்கு என்னவாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?
வணிக இதழ்களின் நோக்கம் வேறு. அதை விமர்சிக்கக்கூடாது. சிற்றிதழ் என்பது இலக்கிய வாதிகளால் இலக்கியத்துக்காக நடத்தப்படுவது. இதன் முக்கிய நோக்கமே இலக்கியம் வளர்ப்பதுதான். இலக்கிய வாதிகளை உருவாக்குவதுதான். எழுத்து, மணிக்கொடி, நடை, வானம்பாடி, கசடதபற, குருசேத்ரம், அன்னம், மனிதன் போன்ற இதழ்கள் அப்பணியையே செய்தன. தற்போது வந்துகொண்டு இருக்கும் கணையாழி, காலச் சுவடு, உயிர்மை, தாமரை, செம்மலர், புதிய கோடாங்கி, உயிர் எழுத்து, இனிய உதயம் ஆகியவையும் இலக்கியமே செய்து கொண்டு வருகின்றன. இனிவரும் இதழ்களும் அதையே செய்ய வேண்டும்.
* தற்போதைய சூழலில் எந்த ஒரு சமுதாய அரசியல் நிகழ்வுகளிலும் எழுத்தாளர்கள் பங்கு கொள்ளாமல் ஒதுங்கியே உள்ள மந்தநிலை காணப்படுகிறதே.. ஏன்?
அவ்வாறு சொல்ல முடியாது. இன்னும் சில அமைப்புகள், சில எழுத்தாளர்கள் மக்களோடு மக்களாக நின்று சமுதாய நிகழ்வுகளில் பங்கு எடுத்துக்கொள்வது உண்டு. ஆனால் இவைகள் பேசப்படுவதில்லை. மேலும் எழுத்தாளன் என்பவன் சமூகத்தின் ஓர் அங்கமே. சமுதாயத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டிய பொறுப்பு எழுத்தாளனுக்கு உள்ளது. ஓர் எழுத்தாளன் சமூகத்தின் முன்மாதிரியாக இருக்க வேண்டும். ஆனால் நல்ல படைப்பாளிகளில் சிலர் சமூகம் அங்கீகரிக்காத காரணத்தால் சற்று விலகியே உள்ளனர். இவ்வாறான படைப்பாளிகள் சோர்வடையக் கூடாது. தொடர்ந்து பங்காற்ற வேண்டும். சமூகமும் எழுத்தாளர்களை அங்கீகரிக்க வேண்டும். குறிப்பாக சமூகத்திற்காக எழுதும் எழுத்தாளர்களை அங்கீகரித்துச் செல்ல வேண்டும்.
* தமிழிலக்கிய வளர்ச்சிக்கு புதுக்கவிதைகள் எந்த அளவிற்கு உதவுகிறது?
இலக்கியம் இரண்டாயிரமாண்டு பாரம்பரியமிக்கது எனினும் பாடலே தொடக்கமாய் இருந்தது. 1850-களி லேயே உரைநடை அறிமுகமாயிற்று. மகாகவியின் பிரவேசத் திற்குப் பின்னரே இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மரபிலிருந்து மாறுபட்டு கவிதை படைப்பதில் ஒரு புது மாறுதல் ஏற்பட்டது. கவிஞர் ந பிச்சமூர்த்தி அவர்களால் நவீனப்படுத்தப்பட்டது. பின்னர் அதுவே 1960-களில் புதுக்கவிதை, புதிய அலைகளை இலக்கியத்திற்கு கொண்டு வந்தது. புதுக்கவிதையின் தாக்கம் எல்லையற்று விரிந்தது. சமூகப் பிரச்சனைகளை பேசியது. விழிப்புணர்வு ஏற்படுத்தியது. ஏராளமான படைப்புகளையும் படைப்பாளர்களையும் இலக்கிய உலக சிம்மாசனத்தில் அமர்த்தியுள்ளது. எனவே தமிழிலக்கிய வளர்ச்சிக்கு புதுக்கவிதையின் பங்கு அளவிடற்கரியது. புதுக்கவிதையின் வளர்ச்சி தமிழிலக்கியத்தின் வளர்ச்சியாகும். இரண்டையும் பிரித்துப் பார்ப்பது தவறு.
* புதுக்கவிதைகளில் தங்களுக்கு ஈர்ப்பு ஏற்படக் காரணம் என்ன?
ஒவ்வொருவருவருக்கும் ஒவ்வொரு ரசனை இருக்கும். ஒவ்வொன்றில் ஈடுபாடு இருக்கும். எனக்கு கதை, கவிதை வாசிப்பில் ஈடுபாடுஇருந்தது. நூல்கள் சேகரிப்பில் இருந்தது. கவிதை மீது கூடுதலாக இருந்தது. கவிதையைத் தொடர்ந்து வாசிக்க வாசிக்க அது கவிதை எழுதுவதில் கொண்டுவந்து நிறுத்தியது. கவிதையிலே எண்ணத்தை சுருக்கமாகக் கூற முடிந்தது. கவிதைதானே நமது மரபு?
* நீங்கள் கவிதை எழுதுவதன் நோக்கம் தற்போது நிறைவேறியுள்ளதா?
கவிதை எழுதுவதன் நோக்கம் ஒவ்வொரு கவிஞருக்கும் ஒவ்வொரு மாதிரி இருக்கும். பாரதிக்கு சுதந்திரம் நோக்கமாக இருந்தது. நோக்கம் நிறைவேறியது. சுதந்திரத்தின் நோக்கம் நிறைவேறியதா என்பது வேறு கதை. பாரதிதாசனுக்கு தமிழ் முன்னேற் றம் நோக்கமாக இருந்தது. இன்று ஏராளமான கவிஞர்கள். அனைவரின் நோக்கமும் ஒன்றாக இருக்க முடியாது. என் சமூகத்தைப் பாடுவது, சமூகத்திற்காக பாடுவது. மேம்பாடு அடைய வேண்டும் என்பது விருப்பம். சமூகத்தை அடையாளப் படுத்தும் கவிஞனை சமூகம் அடையாளம் காண்பதில்லை. எனினும் எழுதுவது தொடர்கிறது. நோக்கம் நிறைவேறும் என்னும் நம்பிக்கை இருக்கிறது.
* உங்களுடைய படைப்பு ஆளுமை வீரியத்துடன் செயல்படுவது கவிதையிலா? கட்டுரையிலா? விமர்சனத்திலா?
படைப்பு என்பது கவிதை, கதை என்றே குறிப்பிடப்படுகிறது. கட்டுரையும் விமர்சனமும் படைப்பு என்று ஏற்றுக் கொள்வதில்லை. எழுதியவரைப் பொருத்த வரை அவை படைப்பு என்றே கருதப்படுகிறது. மேலும் ஆளுமை என்பது மிகப் பெரிய சொல். அந்த அளவிற்கு நான் வளரவில்லை என்றே குறிப்பிடவேண்டும். கவிதை, கட்டுரை, விமர்சனம், எழுதும்போது ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு மனநிலை வேண்டும். கவிதைக்கு உணர்வு தேவை. கட்டுரைக்கு உழைப்பு தேவை. விமர்சனத்திற்கு ஊக்குவிப்பு தேவை. மூன்றும் மூன்று விதமான நிலையில் எழுதப் படுகிறது. ஒவ்வொன்றிலும் ஒவ்வொருவிதமான வீரியம் வெளிப்படும். அதனால் எதில் அதிக வீரியம் என்று பிரித்துக் கூறமுடியாது.
* உங்கள் படைப்புகளுக்கு விருது கிடைத்திருக்கிறதா? விருதுகள் குறித்து..?
என் முதல் தொகுப்பு ' சின்ன சின்ன ஆசை' என்னும் ஹைக்கூ தொகுப்பாகும். இத்தொகுப்பின் அடிப்படையிலேயே ' கவிஞர் எழுஞாயிறு இளைஞர் இலக்கிய விருது' 1996ஆம் ஆண்டு கிடைத்தது. இது எனக்கு வழங்கிய முதல் விருது மட்டுமல்ல அவர் தந்த முதல் விருதும் அதுவே.
அடுத்து 'இயல்பு' என்னும் புதுக்கவிதைத் தொகுப்பிற்கு சிற்பி அறக்கட்டளை பரிசு 2000ஆம் ஆண்டு கிடைத்தது. இதுவும் இளைஞர்களுக்காக தரப்பட்ட முதல் விருது. ஏற்கனவே கூறிய '' பெண் கவியுலகம் ' தொகுப்புக்கு திருப்பூர் தமிழ்ச் சங்க விருது கிடைத்தது.' பிற ' என்னும் ஹைக்கூத் தொகுப்பிற்காக தாராபாரதி அறக்கட்டளை விருது தரப்பட்டது. கவிதைக்காக திருவனந்த புரம் தமிழ்ச் சங்க விருது உள்பட பல கிடைத் துள்ளன. படைப்பு தவிர இலக்கிய சேவைக்காகவும் தொண்டுக்காகவும் பல விருதுகள். அதில் சேலத் திலுள்ள அன்பாலயம் என்னும் தொண்டு நிறுவனம் வழங்கிய 'கவிப்பேரரசு வைரமுத்து விருது'ம் ஒன்று. எல்லா விருதுகளும் பரிசுகளும் எனக்கு வழங்கப் பட்டதே தவிர எதுவும் வாங்கப்பட்டது இல்லை. சமீபத்தில் புதுச்சேரியில் வாணிதாசன் பெயரில் ஒரு விருது அவர் பெயரன் முருகன் தருவதாக தெரிவித்தார். அடுத்து ஈரோடு தமிழன்பன் பெயரில் ஒரு விருது தெரிவித்தார் கவிஞர் அமிர்த கணேசன். கவிஞர் நாமக்கல் நாதன், கவிஞர் கவிமுகில் ஆகியோரும் விருது தருவதாக அழைத்தனர். ஆனால் அன்புடன் தவிர்த்து விட்டேன். தற்போது விருதுக்கோ பரிசுப் போட்டிக்கோ புத்தகங்கள் அனுப்புவதும் இல்லை. விண்ணப்பிப்பதும் இல்லை. காரணம் விருதுகள் மீது முழு நம்பிக்கை இல்லை.
* ஒவ்வொரு விருது வழங்கப்படும்போதும் சர்ச்சைகள் எழுவது ஆரோக்கிய சூழலா? அல்லது சர்ச்சைகளுக்குரிய படைப்புகளுக்கு விருது வழங்கப்பட்டுள்ளதா?
விருது என்பது பெருவாரியான கருத்துகளின் அடிப்படையில் வழங்கப்படுபவர்களின் ரசனையை பொருத்தது. எந்த ஒரு படைப்பும் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது அல்ல. எல்லோரும் ஏற்றுக்கொண்ட படைப்பும் இதுவரை இல்லை. பாரதியும் பாரதிதாசனுமே இன்று மறுபரிசீலனைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். ஆனால் இன்று விருது வழங்கப்பட்டவுடன் விமர்சிப்பது என்பது வழக்கமாகி விட்டது. இதை ஒரு முறையாகவே செய்து வருகின்றனர்.
விருது வழங்கியவர்கள் கடமைப்பட்டவர்கள் போலவே விமர்சிப்பவர்களும் கடமையாகவே செய்துவருகின்றனர். இதில் நூல் மீதான விமர்சனத் தைவிட ஆள் மீதான விமர்சனமே அதிகம். காழ்ப்புணர்ச்சியே மிகுதி. விருது பெறுபவர்களை வாழ்த்தும் உள்ளம் சுருங்கிவிட்டது. படைப்புகள் விமர்சிக்கப்படும் வேளையே ஆரோக்யமான சூழல் ஆகும். விருதும் தரம் பார்த்து வழங்கப்படுவதில்லை. நபர் பார்த்தே வழங்கப்படுகிறது.
* பல்வேறு படைப்புகள் வெளியிட்டுள்ளீர். படைப்புகள் ஒவ்வொன்றும் வெளிவரும் பொழுதும் எத்தகைய மனஉணர்வு ஏற்பட்டது ?
படைப்பு என்பது ஆழ்மனத்தில் இருந்து வருவதாகும். படைப்பை உருவாக்கும்போது ஒரு படைப்பாளியின் மனநிலை பிரசவித்த தாயின் மனநிலையை ஒத்திருக்கும். குழந்தையைத் தாய்த் தடவித் தடவி பார்ப்பதுபோல் மகிழ்வை ஏற்படுத்தும். படைப்புக்களை இதழ்களுக்கு அனுப்பி வைத்துவிட்டு அது வெளியாகும் வரை மனம் படபடக்கும். வெளியானதைக் கண்டுவிட்டால் மனம் அடையும் மகிழ்விற்கு எல்லையே இல்லை என்று கூறலாம், வெளிவராத போது சற்று வருத்தம் ஏற்படுதையும் ஒப்புக்கொள்ள வேண்டும். வெளியான கவிதைகளைத் தொகுத்து தொகுப்பாக்கி அது வெளியாகும் போதும் மனம் பரவசம் அடையும்.. அது அடுத் தடுத்த படைப்புகளுக்கு அச்சாரமாக இருக்கும்.
எழுதியதை அச்சில் பார்ப்பதே எப்போதும் ஒரு சந்தோசம்தான் என்பதை எந்த படைப்பாளியும் மறுக்க மாட்டான். அவ்வாறு மகிழ்ச்சி அடையாத வன் ஒரு படைப்பாளியாக இருக்க முடியாது. எழுதி வெளியானதை எவரேனும் பாராட்டி விட்டாலும் மனம் நெகிழும்.
*மாவட்ட ரீதியாக சிறுகதைகளைத் தொகுத்து வெளியிட்டு வருகிறீரே.. அந்த எண்ணம் எப்படி ஏற்பட்டது?
தொடக்க காலத்தில் தஞ்சைச் சிறுகதைகள், நெல்லைச் சிறுகதைகள் என தொகுப்புகள் வந்துள்ளன. தமிழகம் தாண்டியும் பெங்களூர் சிறுகதைகள், டில்லி சிறுகதைகள், ஹைதரபாத் சிறுகதைகள் எனவும் தொகுப்புகள் வந்துள்ளன. தஞ்சை, நெல்லை சிறுகதைத் தொகுப்புகள் பிரிக்கப்பட்ட மாவட்டங்களாக இருந்தன. இதனால் சேலம் மாவட்டத்திற்கு மட்டும் ஒரு சிறுகதைத் தொகுப்பு கொண்டு வர முடிவுசெய்து சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் சிறுகதைகள் திரட்டிக் கொண்டுவந்தேன். மற்ற மாவட்டங்கள் குறித்து சிந்திக்கவில்லை. எனினும் அருகாமையி லுள்ள ஈரோடு மாவட்டத்திற்கு நண்பரும் எழுத்தாளருமான சந்திரா மனோகரனை தொகுக்கச் சொல்லி எழுத்தாளர்கள் பட்டியலையும் தந்தேன். ஒரு மாத முயற்சிக்குப் பின் அவரால் இயலவில்லை என தெரிவித்ததால் நானே அப்பணியைத் தொடர்ந்தேன். அம்முயற்சியில் சேலம், ஈரோடு, திருப்பூர், நாமக்கல், தர்மபுரி, காஞ்சிபுரம், திருச்சி ஆகிய மாவட்டச் சிறுகதைத் தொகுப்புகள் வந்துள்ளன. புதுக்கோட்டை, பெரம்பலூர், கிருஷ்ணகிரி, மயிலாடுதுறை வர உள்ளன. தேனி, கோவை சிறுகதைகள் தயாரிக்கப்பட்டுள்ளன. இதனிடையே சிங்கப்பூர் சிறுகதைகளும் ஹைதராபாத் சிறுகதைகளும் தயார் நிலையில் உள்ளன. இவை தவிர திருநங்கையர் சிறுகதைகள், நெசவுச் சிறுகதைகள், பாரதி பற்றிய சிறுகதைகள் ஆகியவையும் வந்துள்ளன. இதற்காக நிவேதிதா பதிப்பகத்தார் திருமதி தேவகி இராமலிங்கம் அவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். சிறுகதை எழுத்தாளர்களுக்கும் நன்றி சொல்ல வேண்டும். மாவட்டத்திலுள்ள எல்லா சிறுகதையாளர்களையும் கொண்டுவரமுடியவில்லை கொண்டுவரமுடியவில்லை என்பது ஒரு குறையாகவே உள்ளது.
* தமிழ் இலக்கியத்தில் சிற்றிதழ்களின் பங்கு எவ்வாறு உள்ளது?
தமிழ் இலக்கியம் என்பது சிற்றிதழ்கள் இல்லாமல் சாத்தியமில்லை. சிற்றிதழ்களே இலக்கியத்தை வளர்த்து எடுத்து வருகின்றன என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். இயக்கம் சார்ந்த சிற்றிதழ்களாக இருந்தாலும் இலக்கியம் சார்ந்த சிற்றிதழ்களாக இருந்தாலும் இலக்கியம் வளர்த்தே வந்துள்ளன. வானம்பாடி, கசடதபற என பல இதழ்கள் குறிப்பிடத்தக்கவை. இன்றும் கணையாழி, தாமரை, செம்மலர், காலச் சுவடு, உயிர்மை, உயிர் எழுத்து, இனிய உதயம் என தற்போதும் பேரிதழ்களாக இருந்தாலும் சிற்றிதழ் என்னும் அளவுகோலிலேயே செயல்பட்டு வருகின் றன. இலக்கியம் மட்டுமே இச்சிற்றிதழ்களின் நோக்கம்.
*தற்போதைய இலக்கியப் போக்கு எவ்வாறு உள்ளது?
இலக்கியம் பொதுவாக இருந்தாலும் இலக்கிய வாதிகள் பலவாக இருக்கிறார்கள். பல திசைகளில் இயங்குகிறார்கள். ஒருவரை ஒருவர் பாராட்டும் நோக்கில் செயல்படாமல் பாரபட்சமான மனப்பான்மையுடனே செயல்படுகிறார்கள். எல்லோரிடமும் இலக்கியம் இருக்கிறது. எவரும் எவரையும் புறக்கணிக்கக் கூடாது. இலக்கியம் என்னும் ஒரு குடையின்கீழ் எல்லோரும் இருக்கவேண்டும். இயங்க வேண்டும். இலக்கியம் படைக்க வேண்டும். இலக்கை எட்ட வேண்டும்.