சூறாவளிக் காற்றில்... உறூப் தமிழில் : சுரா

/idhalgal/eniya-utayam/hurricane-wind-urub-tamil-sura

ந்த அளவுக்கு ஒரு பயங்கரமான இரவாக அது இருந்தது! சீறியடித்துக் கொண்டிருந்த சூறாவளிக் காற்றால் முழு ஊரும் குலுங்கிக்கொண்டிருந்தது. அந்த இரவு எப்படிப்பட்ட பாதிப்பு களையெல்லாம் கொண்டுவந்து சேர்க்கு மோவென்று அனைவரும் அஞ்சிக் கொண்டிருந்தார்கள். அலைகளுக்குப் பின்னால் அலைகள் என்பதைப்போல, எங்களுடைய வசிப்பிடங்களுக்கு மேலே ஆர்ப்பரித்துச் செல்லும் காற்று... நிலத்தில் சாய்ந்து விழுந்துகொண்டிருக்கும் மரங்களின், வீடுகளின் "சடபட' சத்தம் அவ்வப்போது எங்களை நடுங்கச் செய்துகொண்டிருந்தது. அந்தப் பகுதியில் ஒரு மரம் விழுமோ, இந்தப் பகுதியில் வீட்டின் சுவர் இடிந்து விழுமோ என்று ஒவ்வொரு நிமிடமும் நாங்கள் தவித்துக் கொண்டிருந்தோம்.

திடீரென ஒரு காற்று வந்து எங்களுடைய வீட்டின் கூரையைச் சற்று அசைத்தது. கடவுளே... நாங்கள் நடுங்கிவிட்டோம். தந்தை பதைபதைத்துவிட்டார். தாய் சின்னத் தம்பியை மார்போடு சேர்த்துப் பிடித்துக் கொண்டாள். பாட்டி கடவுள்களின் பெயர்களை முணுமுணுத்துக்கொண்டி ருந்தாள். ஒரு நிமிட நேரத்திற்கு அந்த காற்று ஆபத்து எதுவும் உண்டாக்காமல் கடந்துசென்றது. இவ்வாறு பொழுது புலரும்வரை வரையில் உயிரை வைத்துக் கொண்டு நாங்கள் பொழுதைக் கடத்தி னோம்.

கடல் பகுதியிலிருந்து எங்களுடைய வீட்டிற்கு ஒரு நாழிகை தூரம்தான்... அதனால், பொதுவாகவே நல்ல காற்றுகளுடன் பழகிவிட்டவர்கள் நாங்கள். ஆனால் இந்த காற்று... அது ஒரு சம்ஹார தாண்டவமாக இருந்தது!

பொழுது புலர்ந்தபோது காற்று சற்று அடங்கியிருந்தது. சரியாகக் கூறுவதாக இருந்தால்... பன்னிரண்டு மணிநேர பயங்கர தாண்டவத்திற்குப்பிறகு அது சற்று ஓய்வெடுத்துக்கொண்டிருப்பதைப்போல தோன்றியது.

எங்களுடைய மன நடுக்கம் அப்போதும் நிற்கவில்லை. எங்களுடைய ஒவ்வொரு வரின் சிந்தனையும் வேறு யாரோ இருக்கும் திசையை நோக்கி இருந்தது. உறவினர்களுக்கும் பக்கத்து வீடுகளில் வசிப்பவர்களுக்கும் ஆபத்து ஏதாவது நடந்திருக்குமோ?

எல்லாரும் அமைதியாக ஒருவரின் முகத்தை ஒருவர் பார்த்தவாறு அமர்ந்திருந் தோம். சின்னத்தம்பி மட்டும் குலுங்கிக் குலுங்கி சிரித்தவாறு மடித்துவைக்கப் பட்டிருந்த விரிப்புகளின்மீது விழுந்து புரண்டு விளையாடிக் கொண்டிருந்தான். சூரியன் ஒரு கலப்பையின் உயரத்திற்கு உயர்ந்தது. ஆனால், வெயில் சிறிதும் பிரகாசமில்லாமல் இருந்தது. அது மிகவும் குளிர்ந்துபோய் காணப்பட்டது. ஒரு துணி போர்த்திய பெண்ணைப்போல சூரியன் காரிய மேகங்களுக்குப் பின்னால் மறைந்து நின்றிருந்தது.

நாங்கள் வாசலுக்கு வந்து சுற்றிலும் பார்த்தோம். பரிதாபப்படக்கூடிய வகையைச் சேர்ந்ததாகவும், பயங்கரமானதாகவும் அங்கொரு சூழல் நிலவிக்கொண்டிருந்தது. எங்களுடைய வசிப்பிடத்திற்கு மேற்குப் பகுதி முழுவதும் ஏழைகளான தாழ்த்தப் பட்ட மக்களின் வசிப்பிடங்கள்...

அவற்றில் பெரும்பாலான குடிசைகளின் ஓலைகள் முழுவதும் பறந்துசென்றிருக்க, மூங்கிலும் குச்சிகளும் மட்டுமே இருக்க, எலும்புக் கூடுகளைப்போல அவை தரையில் சாய்ந்துகிடந்தன. அந்தப் பகுதியிலிருந்த மரங்கள் அனைத்தும் குறுக்கும் நெடுக்குமாக விழுந்துகிடந்தன. அவற்றிலிருந்து சிதறிய தேங்காய் குலைகளும் ஓலைகளும் பலாப்பழங்களும் மாங்காய்களும் இங்குமங்குமாக சிதறிக்கிடந்தன.

அரபிக்கடலின் பெரும் பறையடியோசை அப்போதும் செவியில் வந்து மோதிக்கொண்டிருந்தது. என்ன தாங்கிக்கொள்ள முடியாத சத்தம்!

இப்படி சுற்றிலுமிருந்த கவலைப்படக்கூடிய காட்சிகளைப் பார்த்தவாறு நின்றுகொண்டி ருக்கும்போது, நம்முடைய குஞ்ஞிக்கண்ணன் மாஸ்டர் படிகளில் ஏறி வந்துகொண்டிருந்தார்.

"ஆபத்து எதுவும் உண்டாகலையே?'' என்று கேட்டவாறு அவர் வாசலுக்கு வந்தார்.

"இல்ல... அங்க எப்படி?'' நான் கேட்டேன்.

"என் வீட்டுக்கு கெடுதல் எதுவும் உண்டாகல. ஆனா பக்கத்துல இருக்கற பகுதிகள்ல இப்ப குடிசைகள்ல ஒண்ணுகூட பாக்கியில்ல. மரங்களோட விஷயத்தைப்பத்தி சொல்லவே வேணாம். என்ன ஒரு கதை இது... என் மகனே! நீங்க படகைப் பத்திய செய்தியைக் கேள்விப்பட்டீங்களா?''

"படகைப் பத்தியா?''

"ஆமா... இங்கிருந்து தி....க்குப் போகும் படகு முகத் துவாரத்திலிருக்கற ஒரு மேட்டுல போய் சிக்கி நின்னுடுச்சு.''

"உண்மையாவா?''

"ஆமா...'' மாஸ்டர் தொடர்ந்து கூறினார்: "அதுமட்டுமில்ல. அதுல நிறைய பெண்களும் குழந்தைகளும் இருக்காங்களாம்! நான் வழியில கேள்விப்பட்டேன். ஆளுங்க தொடர்ந்து ஓடிக் கிட்டிருக்காங்க. நாம கொஞ்சம் போய் பார்க்கலாம்...''

"சரி...'' நானும் புறப்பட்டேன். நாங்கள் வேகமாக நடந்தோம். வழியில் பார்த்த காட்சிகளைப்பற்றி எதுவுமே கூறுவதற்கில்லை. தெருவில் பல இடங் களிலும் மரங்களும் கம்பிகளும் அறுந்து விழுந்து வாகனப் போக்குவரத்திற்குத் தடைகள் உண்டாகி யிருந்தன.

நாங்களோ... மரக்கொம்புகள்மீது ஏறி இறங்கியும், மரங்களின் கிளைகளை ஒடித்து இறக்கியும் ஒருவகையில் பயணத்தை மேற்கொண்டோம். ஒரு பகுதியிலிருந்த மரத்தின் கிளைகள் ஒடிந்து பறந்து வேறொரு பகுதியில் சென்று விழுந்திருந்தன.

வீடுகளின் வாசல்களில் அமரக்கூடிய இடங்கள் வாய்க்காலில் மூழ்கிக் கிடந்தன. அருகிலிருந்த கால்வாயில் ஒரு மரப்பந்தல் மிதந்து போய்க்கொண்டி ருந்தது.

"கஷ்டம்! இந்த வீடுகள்ல இருந்த ஆட்களோட நிலை எப்படி இருக்கோ? கடவுளுக்கு இப்படி கண் இல்லாமலிருந்தா...'' மாஸ்டர் நீண்ட பெருமூச்சு விட்டார்.

அவர் கூறி முடித்தபிறகு, எங்களுக்கு எதிரே ஒரு தொட்டில் வருவதைப் பார்த்தேன். தூக்கிவந்தவர்கள் முணுமுணுத்துக்கொண்டே வந்ததால், அதற்குள் ளிருப்பது ஒரு உயிருள்ள ஆள் என்பதை நாங்கள் பு

அவர் கூறி முடித்தபிறகு, எங்களுக்கு எதிரே ஒரு தொட்டில் வருவதைப் பார்த்தேன். தூக்கிவந்தவர்கள் முணுமுணுத்துக்கொண்டே வந்ததால், அதற்குள் ளிருப்பது ஒரு உயிருள்ள ஆள் என்பதை நாங்கள் புரிந்துகொண்டோம். அது நெருங்கி வந்து கொண்டிருந்தது. அந்த தொட்டிலுக்குப் பின்னால் மெலிந்து உயரமான ஒரு முஸ்லிம் பெண் வந்து கொண்டிருந்தாள். அவளுடைய இடுப்பில் ஒன்றரை வயதுகொண்ட ஒரு குழந்தை அமர்ந்திருந்தது. பத்து வயதிற்குக்கீழே இருக்கும் வேறு மூன்று குழந்தைகள் அவளுக்குப் பின்னால் இருந்தன.

"என்ன அது?'' நான் மாஸ்டரிடம் கேட்டேன்.

"தெரியல... கேட்போம்.''

குஞ்ஞிக்கண்ணன் மாஸ்டர் அந்த தொட்டிலுக்கு மிகவும் அருகில் நடந்துகொண்டிருந்த ஒரு வெண்ணிற தாடி வைத்திருந்த வயதான முஸ்லிம் மனிதரிடம் கேட்டார். அவர் விஷயத்தைக் கூறினார்.

"என் மாஸ்டரே... அது நம்மோட பீரான் குட்டி இருக்கார்ல? மர வியாபாரி பீரான்குட்டி... ஒரு கல் இடுப்புல விழுந்து உடம்புக்கு முடியாமப் போச்சு.''

எங்களுக்கு விஷயம் புரிந்துவிட்டது. விசாரித்ததில்... அந்த நான்கு பிள்ளைகளுக்கும் ஒரே ஆதரவாக இருப்பவர் வீரான்குட்டி என்பது தெரிந்தது.

அவருடைய இடுப்பு எலும்புகள் நொறுங்கிவிட்டன. நாங்கள் எதுவுமே பேசாமல் முன்னோக்கி வேகமாக நடந்தோம். அந்தப் படகு என்ன ஆனது என்பதைப்பற்றி எங்களுக்கு எந்தவொரு தகவலும் கிடைக்கவில்லை. அது சென்று சிக்கிக்கொண்ட மணல்மேடு சிறிது சிறிதாக இறங்கிக்கொண்டிருப்பதாக வழியில் ஒரு போலீஸ்காரர் எங்களிடம் கூறினார்.

குஞ்ஞிக்கண்ணன் மாஸ்டர் சற்று பதைபதைப்பில் இருப்பதைப்போல தோன்றியது. அவர் நடக்கவில்லை. பெரும்பாலும் ஓடிக்கொண்டுதான் இருந்தார். முப்பது பேரின் உயிர் இவ்வாறு ஆபத்திலிருக்கும் சூழ்நிலையில், குஞ்ஞிக்கண்ணன் மாஸ்டரைப் போன்ற நல்ல இதயத்தைக்கொண்ட ஒரு மனிதர் பறக்காமல் இருந்தால்தான் ஆச்சரியம். நானும் கால்களை எட்டி வைத்தேன்.

நாங்கள் ஒரு தேவாலயத்தின் ஓரமாக கடந்து செல்ல வேண்டும். அதன் ஒரு மூலையில் பெரும் பாலான ஓடுகள் பறந்துசென்றிருந்தன. இவ்வாறு சூறாவளிக் காற்று அந்த கடவுளின் இருப்பிடத் தின்மீது எந்தவொரு தனிப்பட்ட கவனத்தையும் காட்டாதது குறித்து எனக்கு ஏதோவொரு சந்தோஷம் தோன்றியது. அந்த தேவாலயத்தின் கல்லறைத் தோட்டத்தில் மூன்றோ நான்கோ குழிகள் தோண்டப்படுவதை நாங்கள் பார்த்தோம். ஒரு பெரிய மரம் சாய்ந்துவிழுந்ததன் காரணமாக மண்ணுக்குக் கீழே போய்விட்ட ஒரு குடும்பத்திற்குதான் அது. ஆமாம்... இரண்டு பிஞ்சுக் குழந்தைகளும் அவர் களுடைய தாயும் தந்தையும்!

"நான்கு குழிங்க... ஒரே நேரத்தில...'' குஞ்ஞிக்கண்ணன் மாஸ்டர் கூறினார்.

நான் எதுவும் கூறவில்லை. படகுத் துறையை நெருங்கியபோது, மக்கள் கூட்டத்தின் ஆரவாரம் கேட்டது. நாங்கள் நீதிமன்றத்தின் நிறத்திலிருந்த தெருவுக்குள் நுழைந்தோம். அங்கிருந்து பார்த்தால் நதி தெரியும்.

மலையிலிருந்து கொட்டிய நீர் வந்து, இரு கரைகளும் நிறைந்து நின்றுகொண்டிருக்கும் அது, ஒரு குருதிப் புயலைப்போலவே தோன்றியது. இடையில் அவ்வப்போது சில வெண்நுரைகள் எலும்புக் கூடுகளைப்போல நீந்தி விளையாடிக்கொண்டிருந்தன.

நாங்கள் படகுத்துறையை அடைந்தோம். அங்கு என்னவொரு மக்கள் கூட்டம்! மணலை அள்ளிப் போட்டால் கீழே விழாது. ஆட்கள் பதைபதைப்பு அடைந்திருப்பதை வெளிக்காட்டும் வகையில் விசேஷ சைகைகளுடன் ஒருவரோடொருவர் தாழ்ந்த குரலில் ஒவ்வொன்றையும் பேசிக்கொண்டார்கள். எல்லோருடைய இந்த "கிசுகிசு' பேச்சுகள் காரணமாக அந்த இடம் ஓராயிரம் தேனீக்களின் கூடு சிதறியதைப்போல சத்தமயமாக இருந்தது.

குஞ்ஞிக்கண்ணன் மாஸ்டர் ஆட்களின் கூட்டத்திற்குள் சிரமப்பட்டு நுழைந்தார். நான் பின்னால்... நாங்கள் ஒருவகையில் படகுத்துறையின் ஓரத்திற்குச் சென்றோம். ஆனால் குஞ்ஞிக்கண்ணன் மாஸ்டர் தோளில் போட்டிருந்த வேட்டி காணாமல் போய்விட்டது. மாஸ்டரோ அதைப்பற்றி சிறிதும் கவலைப்படவில்லை.

திடீரென வந்த ஒரு காற்று எங்களுடைய முகத்தில் ஈரமணலை முழுமையாக அள்ளி எறிந்தது. உண்மையிலேயே எனக்கு பலமாக வலித்தது. நாங்கள் முகத்துவாரத்தைப் பார்த்தோம். அதோ... அந்தப் படகு மணல்மேட்டில் நின்றுகொண்டிருக்கிறது! கரையிலிருந்து அந்த இடம் சுமார் இரண்டரை ஃபர்லாங் தூரத்தில்தான் இருந்தது. ஆனால், அதற்கு மத்தியில் இருப்பதோ சீற்றத்துடன் குதித்துக்கொண்டிருக்கும் அலைகள்! ஒரு பதினைந்து சதுர அடிகள்தான் அந்த தீவுக்கு இருக்கும். அதில் சிக்கி நின்றுகொண்டிருக்கும் படகின் இரு பக்கங்களும் நீருக்குள் இருந்தன. நடுப்பகுதி மட்டும் மணலில் சிக்கிக் கிடக்கிறது. அந்தப் படகின் ஒரு பகுதியை நதியின் செந்நிறத்திலிருந்த நீர் வளையங்கள் தங்களுடைய முரட்டுத்தனமான கழுத்தை உயர்த்தி மோதிக்கொண்டிருந்தன. மறு பகுதியிலோ...

அரபிக்கடலின் யானைக்கு நிகரான நீலநிற அலைகள் உயர்ந்தெழுந்து விளையாடிக்கொண்டிருந்தன. இரு பகுதியிலிருந்தும் உண்டான இந்த தாக்குதலில் அந்த தீவு எவ்வளவு நேரம் தாக்குப் பிடிக்கும்?

s2

பிரம்மாண்டமான அலைகள் எங்களுக்கருகில் சீறிக்கொண்டு வந்தன. அவை எங்களின் கால்களில் வந்து ஒரு சத்தத்துடன் வெடித்துச் சிதறின. மிகப்பெரிய உருவத்தைக்கொண்ட ஒரு ராட்சதன் நீந்திவந்து கரையில் ஏறி வெடித்துச் சிரிப்பதைப்போல தோன்றியது.

ஆனால், இவை எதையும் பார்ப்பதற்கு அப்போது நேரமில்லை. அதோ... அந்தப் படகு ஆபத்திற்கு மத்தியில் நின்றுகொண்டிருக்கிறது. அந்த மணல் மேடோ... ஒவ்வொரு நிமிடமும் கரைந்து கரைந்து போய்க்கொண்டிருக்கிறது. யாருக்கும் யாரிடமும் எதுவுமே கூறமுடியாத நிலை நிலவிக்கொண்டிருந்தது. பலரும் மூச்சைப் பிடித்துக்கொண்டு நின்றிருந்தார்கள். தாங்கள் ஒரு மூச்சுவிட்டால், அந்தப் படகு மேலும் இறங்கிவிடுமோ என்று அவர்கள் பயப்படுவதைப்போல தோன்றியது.

குஞ்ஞிக்கண்ணன் மாஸ்டர் அருகிலிருந்த ஒரு ஆளிடம் கேட்டார்: "அவங்களைக் காப்பாத்தறதுக்கு வழி எதுவும் இல்லியா?''

"என்ன சொல்றீங்க? இந்த காத்தும் அலையும் இப்படி இருக்கறப்ப, எப்படி படகை செலுத்தமுடியும் மாஸ்டர்? ஒரு சாதாரண மனிதன் அங்க போய்ச் சேரமுடியுமா?''

"அலைங்க ரொம்ப அதிகமா இருக்கில்ல?'' மாஸ்டர் கேட்டார்.

"ஆனா, படைச்சவனோட கருணையால அப்படி எதுவும் நடக்காது. எல்லாத்துக்கும் காரணம் கடவுள் தானே?''

அப்போது எங்களுக்குப் பின்னால் நின்று கொண்டிருந்த ஒரு வயதான மனிதர் முன்னால் வந்தார். அவர் மிகவும் கறுத்துப்போய்க் காணப் பட்டார். அதிகமாக கூன் விழுந்திருந்தது. அவரு டைய நீளமான வெண்ணிற தாடியில் சில முடிகள் வெற்றிலை எச்சில் வழிந்து சிவந்திருந்தன. அந்த கிழவரின் ஊன்றுகோலைப் பிடித்திருந்த கைகளை ஒருவித நடுக்கம் சற்று பாதித்திருந்தது. அந்த கிழவரைப் பார்த்தவுடன் எங்களுடன் பேசிக்கொண்டு நின்றிருந்த இளைஞன் அவருக்கு அருகில் சென்றான்: "இக்கா... மாயன்குட்டி அங்க இல்லியா?''

"இருக்கறான் உண்ணீ. இங்க என்ன விசேஷம் முஹம்மது?''

"அந்தப் படகு மண்திட்டுல போய் மாட்டிக்கிச்சு. அதுல குழந்தைங்க, பொம்பளைங்க ஏராளமா இருக்காங்க.''

"உண்மையா உண்ணீ'' அந்தக் கிழவர் பதைபதைப்பு அடைந்தவரைப்போல கேட்டார்: "இவ்வளவு நடந்தும், நீங்க இளைஞனுங்க... இப்படி பார்த்துக்கிட்டு நிக்கிறீங்க?''

"இக்கா... இருந்தாலும் கடலாச்சே!'' அந்த இளை ஞன் தலையைச் சொறிந்துகொண்டே கூறினான்.

"அது சரிதான். ஆனா நாம கடலுக்கு பயப்பட லாமா?''

அந்த வயதான மனிதரின் உரையாடல், அவர் கடலோரங்களில் வசிக்கும் மீனவர்களில் ஒருவர் என்பதை எங்களுக்குப் புரியவைத்தது. ஒருவேளை... இளம்வயதில் தான் இப்படிப்பட்ட எத்தனை ஆபத்துகளிலிருந்து ஆட்களைக் காப்பாற்றிய செயலைச் செய்திருக்கிறோம் என்ற பெருமைதான் அந்தக் கிழவரை இவ்வாறு பேசச் செய்திருக்கவேண்டும். அந்த முதியவர் மாஸ்டரை நோக்கி திரும்பியவாறு கூறினார்: "மாஸ்டர்... நம்மால இதுல ஒரு கையைக்கூட கொடுக்கமுடியாத நிலை வந்திடுச்சு. எங்களோட காலமெல்லாம் கழிஞ்சிடிச்சில்ல..?''

"இனி என்ன வழி இருக்கு பெரியவரே?'' மாஸ்டர் கேட்டார்.

"பார்ப்போம்...'' சிறிது நேரம் சிந்தித்துவிட்டு அந்தக் கிழவர் தொடர்ந்தார்: "முஹம்மது... நீ அந்த மாயனையும் மொய்தீனையும் இங்க வரச் சொல்லு. ம்... முட்டாள் உண்ணி.''

முஹம்மது பாய்ந்து சென்றான். அந்த தீவு அப்போதும் இறங்கிக்கொண்டிருந்தது.

அங்கிருக்கும் ஆட்களைப்பற்றி தெளிவான எந்தவொரு தகவலும் யாரிடமும் இல்லை. பல வகையான கற்பனைகளும் எங்களைச் சுற்றி பரவிக் கொண்டிருந்தன. சிலர் கூறுகிறார்கள்லி அதில் முக்கால் பகுதியினர் பெண்கள் என்று. சிலர்... குழந்தைகள் என்று. இன்னும் சிலர் கூறுகிறார்கள்- எண்ணெய் வியாபாரிகளான சில முஸ்லிம்கள் என்று. எது எப்படியிருந்தாலும், அதில் நிறைய மனித ஆன்மாக்கள் இருக்கும். அவர்களுடைய வாழ்க்கையோ... ஒவ்வொரு நிமிடத்திலும் மேலும்மேலும் ஆபத்தில் சிக்கிக்கிடக்கின்றன. சீக்கிரமாக ஏதாவது செய்யாமல் இருக்கமுடியாது. ஆனால், அந்த அலைகள் ஆர்ப் பரித்துக்கொண்டிருக்கும் கடலில் யார் படகை இறக்கு வார்கள்?

திடீரென பயங்கரமான அழுகைச் சத்தம் எங்களைச் சுற்றிப் பரவியது. ஒரேயொரு அழுகைச் சத்தம். பிறகு... பேரமைதி! ஆட்கள் அந்த படகையே வெறித்துப் பார்த்துக்கொண்டு நின்றிருந்தார்கள். நானும் அந்தப் பக்கம் பார்த்தேன். அங்கே இருந்தவாறு அந்த ஏழைமக்கள் ஆடைகளை உயர்த்தி என்னவோ சைகைகள் காட்டினார்கள். மனித ஆன்மாவின் இறுதித் துடிப்புகள்!

சுழன்றடித்துக் கொண்டிருந்த அலைகளில், அந்தச் சிறிய தீவு தகர்ந்து... தகர்ந்து போய்க்கொண்டிருந்தது.

நாங்கள் பார்த்தவாறு நின்றுகொண்டிருந்தோம்.

ஆமாம்... வெறுமனே பார்த்துக்கொண்டு நிற்பதைத் தவிர, எங்களால் எதுவுமே செய்யமுடியவில்லை.

கஷ்டம்! அதற்குள் தாய்மார்கள் இருப்பார்கள். பள்ளிக்கூடத்திலோ மருத்துவமனையிலோ இருக்கும் தங்கள் குழந்தைகளைப் பார்ப்பதற்காகச் செல்லும் தாய்மார்கள்... இளம்பெண்கள் இருப்பார்கள். அவர்கள் கணவனை நோக்கியோ பணிசெய்யும் இடத்திற்கோ போய்க்கொண்டிருப்பார்கள். அவர்களுடைய மனங்களில் எப்படிப்பட்ட சிந்தனைகளெல்லாம் இருக்கும்! ஒருவேளை என் சகோதரியின் வயதில் உள்ளவர்களும் அந்த கூட்டத்தில் இருப்பார்கள் அல்லவா? சகோதரர்கள் அவர்களை ஆர்வத்துடன் எதிர்பார்த்துக்கொண்டிருப்பார்கள் அல்லவா?

அந்தக் கூட்டத்தில் கிழவர்கள் இருக்கமாட்டார்கள் என்று கூறுவதற்கில்லையே!

அங்கிருக்கும் இளைஞர்களுக்கு அவர்கள்தான் ஆறுதல் கூறிக்கொண்டிருக்க வேண்டும். சுருக்கமாகக் கூறுவதாக இருந்தால்... மனித இனத்தின் எல்லா வயதுகளிலும், எல்லா நிலைகளிலும் உள்ளவர்கள் அதற்குள் இருப்பார்கள்.

அவர்கள்... இதோ... சிறிது நேரத்தில் இறக்கப் போகிறார்கள். கடவுளைத் தவிர வேறொரு துணையற்ற அவர்களுடைய மனநிலை இப்போது எப்படியிருக்கும்? இந்த பயங்கரமான துன்பத்தைப் பார்க்கமுடியாமல் அவர்களில் பலரும் கண்களை மூடிக்கொண்டிருப்பார்களோ? இல்லாவிட்டால்... கண்களை அகலத் திறந்துகொண்டு சுற்றிலும் பார்த்துக்கொண்டிருப்பார்களா? எங்களையும் பார்த்துக்கொண்டிருப்பார்களோ?

மீண்டும் மக்கள் கூட்டத்திற்கு மத்தியிலிருந்து அழுகைச் சத்தம் உயர்ந்தது. அதோ... அவர்கள் மீண்டும் ஆடைகளை உயர்த்திக் காட்டுகிறார்கள். அவர்களுடைய தீவின் மேலும் ஒரு பக்கம் தகர்ந்து விழுந்திருக்க வேண்டும். கடவுளே... நாங்கள் என்ன செய்வது?

ஆட்கள் ஒருவரையொருவர் பார்த்துக்கொண் டார்கள். அந்தக் கூட்டத்தில் படகு செலுத்துபவர்கள் இருப்பார்கள். கப்பலில் பணிசெய்பவர்கள் இருப்பார்கள். ஆனால், அந்தச் சமயத்தில் படகைச் செலுத்துவதற்கான தைரியம் யாருக்குமில்லை. எல்லாரும் மரத்துப்போனவர்களைப்போல இருந்தார்கள். நினைத்துப் பார்த்திராத நேரத்தில் வந்துசேரும் ஒவ்வொரு ஆபத்துகள்!

நேற்று இந்த நேரத்தில் அவர்களும் எங்களைப்போல பாதுகாப்பான நிலையில் இருந்தார்கள். அதிலிருக்கும் ஒவ்வொரு தாய்மார்களும் தங்கள் குழந்தைகளுக்காக உணவை சமைத்துக்கொண்டோ ஆடைகளைத் தைத்துக்கொண்டோ இருந்திருப்பார்கள். ஒவ்வொரு தந்தைகளும் தங்களுடைய குழந்தைகளின் உணவுக்காக பணிகளில் இருந்திருப்பார்கள். அந்த குழந்தைகளோ...

தங்களுடைய வீட்டு வாசல்களில் ஓடித் திரிந்திருப்பார்கள்.

இன்றோ? அந்த அதிர்ஷ்டமற்றவர்கள்... இதோ... மிகப் பெரியதும் ஆழமானதுமான மரணக் குழிக்குள் மூழ்கிமூழ்கிப் போய்க்கொண்டிருக்கிறார்கள். அந்தக் காற்று வீச ஆரம்பித்த நேரத்தில் அவர்கள் ஏன் படகைச் செலுத்தினார்கள்? இல்லையென்றால்... அந்த அதிர்ஷ்டமில்லாத பயணிகள் அந்த மாலை வேளையில் எதற்குப் படகில் ஏறினார்கள்? என்ன கூறுவது? அனைத்தும் கடவுளின் விருப்பம்... அவர் உண்டாக்கிய சுருக்கை அவரே அவிழ்க்கவும் செய்வார். ஆனால், அந்த மேடு கரைந்து கரைந்து போய்க்கொண்டிருக்கிறதே!

மீண்டும் மக்கள் கூட்டத்தின் ஆரவாரம் காதுகளில் விழுந்தது. நாங்கள் திரும்பிப் பார்த்தோம். எங்களுக்கு நெருக்கமாக நின்றுகொண்டிருந்த அந்த வயதான மனிதருக்கருகில் இரண்டு பேர் நிற்பதைப் பார்த்தோம். அந்த முரட்டு மனிதர்கள் கறுத்து இருண்டவர்களாகவும், பலசாலிகளாகவும் இருந்தார்கள். ஒருவன் நல்ல உயரத்தைக் கொண்டிருந் தான். இன்னொருவன் ஒரு குள்ளன். முதல் ஆளுக்கு நாற்பத்தைந்து வயதிருக்கும். இன்னொருவனுக்கு இருபத்தாறுக்குமேல் இருக்காது.

மூத்தவன் கிழவரிடம் கேட்டான்: "என்ன வாப்பா... இங்க நிக்கிறீங்க?''

"ஆமா... இந்த கூட்டத்துல எதுக்கு தாத்தா?'' இளையவனும் கேட்டான்.

"என் மகனே... அந்த படகோட நிலையைப் பார்த்தியா? இப்போ என்ன செய்யணும்?'' அந்த கேள்வியில் அந்தப் படகைக் காப்பாற்ற வேண்டிய முழு பொறுப்பும் தங்களுக்குதான் இருக்கிறதென்பது வெளிப்பட்டது.

உண்மையிலேயே அந்த கிழவரின் நம்பிக்கை அது தான் என்பதை அந்தக் கண்கள் காட்டின.

"வாப்பா... இப்போ படகை எப்படி செலுத்தறது?'' மாயன் கேட்டான்.

"டேய் மாயன்... மண்ணுக்குக்கீழே போன உயிர்கள் இல்லியா? பத்து... முப்பது பேர் அங்க கிடக்கறாங்க...''

உடனடியாக மாயனுக்கருகில் ஆட்கள் கூட்டமாக நின்றார்கள். அந்த மனிதனை உற்சாகப்படுத்த வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருந்தது. ஆனால், சீறி ஆர்ப்பரித்துக்கொண்டிருந்த கடலைநோக்கி சற்று பார்த்தபோது, யாருக்கும் எதுவும் கூறத் தோன்றவில்லை.

அருகில் நின்றிருந்த குஞ்ஞிக்கண்ணன் மாஸ்டர் அந்த கிழவரிடம் கேட்டார்: "படகை செலுத்த இவங்களால இப்ப முடியுமா?''

"செலுத்தாம இப்போ என்ன செய்றது மாஸ்டர்?'' அந்தக் கிழவர் கூறினார்.

"இவங்க உங்களோட பிள்ளைகளா?'' குஞ்ஞிக் கண்ணன் மாஸ்டரால் கேட்காமல் இருக்க முடியவில்லை.

"ஆமா... இந்த மாயன் என்னோட மகன். இன்னொருத் தன் இவனோட மகன். என்னோட பேரன்!''

என்னை மீறி நான் ஒரு நீண்ட பெருமூச்சுவிட்டேன். ஒவ்வொரு நிமிடமும் மக்களின் பொறுமை சோதனைக்குள்ளாகிக் கொண்டிருந்தது. இறுதி யில் குஞ்ஞிக்கண்ணன் மாஸ்டர் கெஞ்சிக் கேட்டுக் கொண்டார்:

"மாயன்... எப்படியாவது... முடியும்னா படகைச் செலுத்துங்க. படைச்சவன் உங்களுக்குத் துணையா இருப்பான்.''

"சரி...'' மாயன் சம்மதித்தான். "படைச்சவன் இல்லியா... மேலே?''

"ஆனா அதிகாரியோட ஒப்புதல் வேணாமா?'' மொய்தீன் இடையில் புகுந்து கூறினான்.

சிறிதுநேர உரையாடல்களை வைத்து... அவர்கள் கேட்பது... துறைமுக கன்ஸரிவேட்டரின் அனுமதி என்பதை எங்களால் புரிந்துகொள்ள முடிந்தது. உடனே எங்களுடைய கூட்டத்திலிருந்து ஒரு ஆள் சைக்கிளை எடுத்துக்கொண்டு அந்த அதிகாரியின் வீட்டைநோக்கிப் பறந்தான்.

மீண்டும் பதைபதைப்பு நிறைந்த ஒரு சூழல் அங்கு எல்லா இடங்களிலும் நிலவியது. நிமிடங்கள் ஒன்று... இரண்டு... மூன்று... இவ்வாறு நகர்ந்து போய்க்கொண்டிருந்தன.

சைக்கிள்காரன் திரும்பி வராமலிருப்பதைப் பார்த்து நாங்கள் மிகவும் குறைப்பட்டுக்கொண்டோம். மீண்டும் சிலர் சைக்கிள்களை எடுத்துக்கொண்டு சென்றார்கள். அருகில் சைக்கிளைப் பிடித்தவாறு நின்றுகொண்டிருந்த ஒரு மத்திய வயது மனிதரிடம் குஞ்ஞிக்கண்ணன் மாஸ்டர் கூறினார்: "நீங்களும் கொஞ்சம் போங்க... சீக்கிரமா திரும்பி வரணும்.''

"என் சைக்கிளை வேணும்னா யாராவது எடுத்துக் கலாம். உடல் நடுங்கறப்போ சைக்கிள்ல நான் ஏறக் கூடாது.''

பிறகும் ஓரிரண்டு நிமிடங்கள் கடந்துசென்றன. படகைக் கொண்டுவந்து கட்டினான். அந்த வேலை யைச் செய்தது மாயன்தான். மொய்தீன் அவனுக்கு உதவினான்.

அப்போது முதலில் சென்ற சைக்கிள்காரன் பறந்து வந்து சேர்ந்தான். மாஸ்டர் கேட்டார்: "அனுமதிச் சீட்டு எங்கே?''

அந்த இளைஞனால் மேலும் கீழும் மூச்சுவிட்டுக் கொண்டே பேசமுடியவில்லை. அவன் ஒப்பித்தான்:

"அந்த ஜந்து தரல. அவர் சாப்பிட்டுமுடிச்சு இங்க வருவாராம்...''

"என்ன?'' மாஸ்டர் பதைபதைப்புடன் கேட்டார்: "நீ அவர்கிட்ட நிலைமைய முழுசா சொல்லலியா?''

"சொன்னேன். அந்த நாசமாப்போற ஆளு தர வேணாமா? அந்த ஆளோட பொறுப்பு என்னன்னு அவருக்குத் தெரியுமாம்...''

உடனே ஆட்கள் ஆரவாரம்செய்ய ஆரம்பித் தார்கள்.

"அவனைப் பிடிச்சு நாலு கொடுத்திருக்கலாம்ல?''

"அந்தப் பன்னிய குத்திக் கொல்லணும்.''

"அந்த சைத்தானைப் பிடிச்சு இந்த கடல்ல மூழ்கடிக்கணும்.''

இப்படி இன்னும்... இறுதியில் இந்த அளவுக்கு நடந்தபிறகு, எதுவும் செய்யமுடியாமல் போய்விடுமோ... குஞ்ஞிக்கண்ணன் மாஸ்டர் மாயனை அழைத்துக் கூறினார்: "நீங்க படகைச் செலுத்துங்க. இதனால வர்ற வழக்கை நான் பார்த்துக்கறேன்.''

மாயன் தயங்கி நிற்பது தெரிந்தது. ஆரவாரித்து இறைந்துகொண்டிருக்கும் கடலைப் பார்த்து அந்த ஆளுக்கு பயமில்லை. ஆனால் அரசாங்கம்! அது இன்னொரு விஷயமாயிற்றே!

அப்போது அங்கு நின்றுகொண்டிருந்த இளைஞர் களான அரசாங்கப் பணிகளில் இருப்பவர்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து மாயனுக்கும் அவனுடைய மகனுக்கும் தைரியமூட்டினார்கள். அதிர்ஷ்டம் என்றுதான் கூறவேண்டும்... அவர்கள் படகைச் செலுத்த ஒப்புக்கொண்டார்கள்.

அந்த மேடு அப்போதும் கிடந்து அலைபாய்ந்து கொண்டிருந்தது. அதற்குள் இருந்த ஆன்மாக்களோ? அவை உருகிக்கொண்டிருக்க வேண்டும்.

மாயன் வடமேற்கு திசையை நோக்கித் திரும்பி முழங்காலிட்டான். பிறகு... வாப்பாவின் கையை சற்று பற்றி "வாசனை பிடித்தான்.' இறுதியாக துடுப்பை எடுத்துக்கொண்டு படகில் தாவி ஏறினான்.

மொய்தீன் எதிர் தலைப்பகுதியில் அமர்ந்து சுக்கானைப் பிடித்துக்கொண்டான். படகு அகன்றது. யாரும் எதுவும் பேசவில்லை. மூச்சைக்கூட விடவில்லை. உண்மையிலேயே மிகவும் பயங்கரமான ஒரு காட்சியாக இருந்தது அது.

அலைகள் அவர்களின் படகை பத்து பதினைந்து அடி உயரத்திற்குக் கொண்டுசெல்கின்றன. திடீரென கீழ்நோக்கி கொண்டுசெல்கின்றன. அலைகளுக்குப் பின்னால் சென்ற அவர்களின் படகை சில நேரங்களில் ஓரிரண்டு நிமிடங்களுக்குப் பார்க்கவே முடியவில்லை. மீண்டும் அவர்கள் மேலே வருவார்கள். தைரியசாலிகளான அந்த மனித ஆன்மாக்கள் மரணத்தைக் கடந்து சென்றன.

ஒவ்வொரு முறையும் அவர்கள் அலைகளுக்குப் பின்னால் போகும்போது, நாங்கள் நடுங்கினோம்.

அங்கு நின்றுகொண்டிருக்கும் ஆயிரக்கணக் கான இதயங்களிலிருந்தும் ஒரே பிரார்த்தனை வெளியே வந்தது: 'கடவுளே... அவங்களைக் காப்பாத்தணும்.' "அல்லா... அவங்களுக்குத் துணையா இருக்கணும்!' கடவுள் இந்தப் பிரார்த்தனையைக் கேட்பாரல்லவா?

எங்களுக்கு அருகிலேயே அசைவற்று நின்று கொண்டிருந்த அவர்களுடைய வயதான தந்தையின் அப்போதைய முக வெளிப்பாடு எப்படி இருந்தது என்பதைப் பார்ப்பதற்கு என்னால் முடியவில்லை.

அவர் மூச்சு விடுகிறாரா?

இறுதியாக... அதோ... அவர்களுடைய படகு அந்தத் தீவை நெருங்கி... நெருங்கி சென்றுகொண்டிருக்கிறது!

இன்னும் பத்து அடிகளே இருக்கின்றன. இன்னும் ஐந்து அடிகள்... அதோ...

அவர்கள் அங்குபோய் சேர்ந்துவிட்டார்கள். எது எப்படியோ... நாங்கள் சற்று கரைந்துபோய் மூச்சு விட்டோம்.

ஆனால், ஆபத்து அப்போதும் அதே நிலையில்தான் இருந்தது என்றல்ல... மேலும் அதிகமாகிவிட்டிருந்தது. மேலும் இரண்டு ஆன்மாக்களை அந்த மரணப் பரப்பிற்கு வீசி எறிந்திருக்கிறோமே!

நிமிடங்கள் கடக்க கடக்க... எங்களுடைய பதைபதைப்பு அதிகரித்தது. ஒரு பதினைந்து நிமிடங்கள் இவ்வாறு கடந்திருக்க வேண்டும்.

அவர்களுடைய படகு அசைந்தது. அதில் நிறைய ஆட்கள் இருக்கிறார்கள் என்பதை எங்களால் பார்க்க முடிந்தது. இந்தமுறை மேலும் ஆபத்தானதாக இருந்தது. ஏராளமான ஆட்களை ஏற்றிக் கொண்டுவரும் அந்தப் படகு அங்கு இருக்கக்கூடிய அலைகளைக் கடந்துதான் வரவேண்டும் என்பதைப் பற்றி நினைத்தபோது, என் ஆர்வம் பெரும்பாலும் செத்துவிட்டது. நான் அப்படியே பார்த்துக்கொண்டு நின்றிருந்தேன்.

எதுவுமே புரியாமல்... தொடும் உணர்வுகூட இல்லாமல்...

மழை சாரலாக கொஞ்சம் விழுந்து கொண்டிருந்தது.

ஆனால், ஒருவர்கூட குடையை விரித்துப் பிடிக்கவில்லை. அதைப் பற்றிய ஒரு சிந்தனையே அப்போது உண்டாகவில்லை. கடல் காற்று எங்களை மரத்துப்போகச் செய்திருந்தது. குஞ்ஞிக்கிருஷ்ணன் மாஸ்டர் நடுங்கிக் கொண்டிருந்தார்.

திடீரென எங்களுக்கு அருகிலிருந்து ஒரு குரல் கேட்டது: "மகாசக்திகளே... எங்களை ஏமாத்திட்டீங்களா?''

அது- அந்த வயதான தந்தையுடையது.

அதோ.... அந்தப் படகு ஒரு அலையின் சுழலில் சிக்கியிருக்கிறது! இரண்டு நிமிட நேரத்திற்கு ஊசி விழுந்தால் கேட்குமளவுக்கு பேரமைதி... மீண்டும் அந்தப் படகின் தலைப்பகுதி வெளியே வந்தது. அவர்கள் பறந்து வந்துகொண்டிருக்கிறார்கள்.

அந்தப் படகிலிருந்த ஆட்களை எங்களால் நன்றா கப் பார்க்கமுடிந்தது. அவர்களின் தலைகளை தனித்தனியாகப் பார்க்கமுடிந்தது. இப்போது அதிலிருந்த பெண்களையும் குழந்தைகளையும் ஆண்களையும் அடையாளம் காண முடிந்தது. மாயனின் துடுப்பு பிடித்த கையின் சதைகள் வேகமாக செயல்பட்டுக் கொண்டிருந்தன. அவர்கள் அருகில் வந்துவிட்டார்கள்.

படகு பாய்ந்துவந்து கரையில் ஏறியது. மக்கள் கூட்டம் உரத்த குரலில் ஆரவாரித்தது. குஞ்ஞிக்கண்ணன் மாஸ்டர் தன் குளிர்ந்து நடுங்கிக்கொண்டிருந்த கைகளால் மாயனின் கையிலிருந்து துடுப்பை வாங்கினார். மாயனோ, சுண்டு விரலால் நெற்றியிலிருந்த வியர்வையைத் துடைத்தான். சொட்டுசொட்டாக விழுந்துகொண்டிருந்த அந்த வியர்வைத் துளிகள் முத்துமணிகளைவிட அழகானவையாக எங்களுக்குத் தோன்றின.

அந்த இரண்டு வீரர்களையும் கட்டிப்பிடிக்க வேண்டும் என்று எனக்குத் தோன்றியது. மாஸ்டரோ... அதைச் செயல்படுத்தினார்.

ஒன்றரை மணி நேரத்திற்குப் பிறகு... நாங்கள் திரும்பிச் செல்லும்போது, துறைமுகத்தின் கன்ஸர்வேட்டர் படகுத்துறைக்கு வருகிறார்.

அவரை என்ன செய்யவேண்டுமென்று எனக்கு நன்றா கத் தெரியும். ஆனால், பி.ஏ.வில் தேர்ச்சிபெற்ற ஒரு அதிகாரியின் பண்பாடும், இதய நெகிழ்வும், சேவை மனப்பாங்கும் கேள்வி கேட்பதற்கு அப்பாற்பட்டவை என்பதை நான் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டுமல்லவா?

uday011221
இதையும் படியுங்கள்
Subscribe