Advertisment

ஓநாய்கள் அவற்றின் குட்டிகளூக்கு கற்றுத் தருவது எப்படி? - லியோ டால்ஸ்டாய் தமிழில் : சுரா

/idhalgal/eniya-utayam/how-do-wolves-teach-their-cubs-leo-tolstoy-tamil-sura

நான் ஒரு பாதையின் வழியாக நடந்து போய்க்கொண்டிருந்தேன்.

அப்போது பின்னாலிருந்து ஒரு உரத்த சத்தம் கேட்டது. சத்தம் எழுப்பியவன் ஆடு மேய்க்கும் பையன். அவன் எதையோ சுட்டிக்காட்டியவாறு வயலின் வழியாக ஓடிக் கொண்டிருந்தான்.

நான் பார்த்தபோது, வயலின் வழியாக இரண்டு ஓநாய்கள் ஓடிக் கொண்டிருந்தன.

அவற்றில் ஒன்று முழுமையாக வளர்

நான் ஒரு பாதையின் வழியாக நடந்து போய்க்கொண்டிருந்தேன்.

அப்போது பின்னாலிருந்து ஒரு உரத்த சத்தம் கேட்டது. சத்தம் எழுப்பியவன் ஆடு மேய்க்கும் பையன். அவன் எதையோ சுட்டிக்காட்டியவாறு வயலின் வழியாக ஓடிக் கொண்டிருந்தான்.

நான் பார்த்தபோது, வயலின் வழியாக இரண்டு ஓநாய்கள் ஓடிக் கொண்டிருந்தன.

அவற்றில் ஒன்று முழுமையாக வளர்ச்சியடைந்தது.

Advertisment

இன்னொன்று... குட்டி. குட்டி ஓநாய் ஒரு இறந்த ஆட்டுக் குட்டி யைக் கவ்வியவாறு போய்க்கொண்டிருந்தது.

ss

அதன் கால்களை பற்களால் இறுக பற்றியிருந்தது. மூத்த ஓநாய் அதற்குப் பின்னால் ஓடிக்கொண்டிருந்தது.

ஓநாய்களைப் பார்த்ததும், நான் அவற்றிற்குப் பின்னால்... ஆடு மேய்க்கும் சிறுவனுடன் சேர்ந்து ஓடியவாறு உரத்து சத்தம் எழுப்பவும் செய்தேன்.

எங்களுடைய உரத்த சத்தத்தின் காரணமாக ஆட்கள் நாய்களுடன் வந்து சேர்ந்தார்கள்.

நாய்களையும் ஆட்களையும் பார்த்தவுடன், மூத்த ஓநாய் தன் குட்டியின் அருகில் ஓடியது. தொடர்ந்து இறந்த ஆட்டை அதன் வாயிலிருந்து பிடுங்கியெடுத்து தன் தோளில் வைத்து, பலமாக கடித்துப் பிடித்துக் கொண்ட நிலையில்... இரு ஓநாய்களும் முடிந்தவரைக்குமான வேகத்தில் ஓடி பார்வையிலிருந்து மறையவும் செய்தன.

நடந்தது என்ன என்பதை சிறுவன் கூறினான். மலையின் சந்துக்குள்ளிருந்து ஓடிவந்த பெரிய ஓநாய், ஆட்டுக்குட்டியைப் பிடித்துக்கொன்று, கவ்விச் சென்றிருக்கிறது.

உடனே ஓநாய் குட்டி ஓடிச் சென்று பெரிய ஓநாயின் வாயிலிருந்து ஆட்டுக் குட்டியைக் கடித்து இழுத்திருக்கிறது.

பெரிய ஓநாயோ... ஆட்டுக்குட்டியைக் கவ்வுவதற்கு குட்டி ஓநாய்க்கு அனுமதி தந்திருக்கிறது.

தொடர்ந்து அதற்குப் பின்னால் ஓட்டம்....

ஆபத்தை கண்களுக்கு முன்னால் பார்த்தபோது மட்டுமே பெரிய ஓநாய் தன் குட்டிக்கு கற்றுத்தருவதை நிறுத்திவிட்டு, தானே ஆட்டுக்குட்டியைக் கவ்விச் சென்றிருக்கிறது.

uday011123
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe