ஆடுவோமே பள்ளு பாடுவோமே
ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று’’
என்று பாடிப் பரவசப்பட்டார் பாரதியார். ஆனால் அந்த ஆனந்த சுதந்திரத்திற்காக நாட்டு மக்கள் பாடியதும் ஆடியதும் பல்வேறு தளங்களில் போராடியதும் போரடி யவர்களைப் பாராட்டியதும் வாய் மொழிவரலாறுகளாகத் தமிழ் நாட்டுப்புற இலக்கியங்களில் பரவலாகக் காணக்கிடைக்கின்றன. மகாத்மாவுக்கும், மன்னர்களுக் கும் முன்னரே இந்திய விடுத லைப் போராட்டத்தின் முளை களாக, மொட்டுகளாக, வேர்களாக, விடியல் கீற்றுகளாகத் தமிழ் மண்ணில் நிகழ்ந்ததை நினைவு படுத்தும் முயற்சியே இக்கட்டுரை.
அந்நிய ஆட்சி வெள்ளையர் ஆட்சியிலே விவசாயம், கைத்தொழில் இரண்டும் நசுக்கப்பட்டன. காஞ்சி புரம் பட்டு நெசவுத்தொழிலும் டாக்காவில் மஸ்லீன் தொழில் செய்தவர்களின் கட்டைவிரல் களைத் துண்டித்தனர். இதில் சோகம் கலந்த வேதனை. ஆட்டுத்தோல் கதை வெறுப் புணர்வால் தோன்றியது. வெள்ளை யர் வியாபாரம் செய்ய நவாப்பிடம் இடம் கேட்டபோது “எவ்வளவு இடம்?’’ என்று கேட்டானாம். அதற்கு ‘ஆட்டுத்தோல் அளவு இடம்போதும் என்றார்களாம். கிடைத்ததும் தோலை விரித்து விரித்து இந்தியாவையே அபகரித் துக்கொண்டனர்.
“மதபக்தி தேசபக்தி அறவே ஒழித்தார்கள்
மஸ்லீன் நெய்தவர் கைவிரல் அறுத்தார்கள்
இதமுறும் கைத்தொழில் எல்லாம் கெடுத்தார்கள்
எமன்போல் இந்தியாவில் வந்து அழைத்தார்கள்
ஆட்டுத் தோலுக்கு இடம் கொடுத்தாலே
வந்தது மோசம்
அந்நிய ஆட்சியாலே நாடு முச்சூடும்
ஆச்சுதே பெரும்நாசம்’’ (கா.இ.க., ப.22)
என இவற்றை இப்பாடல் கூறுகிறது.
கிழக்கிந்திய கம்பெனியராகிய வெள்ளையர்கள் தங்கள் வசதிக்காகவே அணைகளைக் கட்டினர். சாலைகள் அமைத்தனர், புகைவண்டி விட்டனர், மின்சாரம் கொண்டுவந்தனர். இவை நாட்டுப் புறத்து மக்களுக்கு வியப்பளித்தன. “இன்னும் என்ன செய்தானையா இந்த வெள்ளையக்காரன்? என்று வியந்தனர். “செத்தா பிழைக்க வைப்பான் சீமை வெள்ளைக்காரன் மகன்’’ என வாயாரப் போற்றுகின் றனர். நம்மதுரை’’ என்று புளகாங்கி தம் அடைந்தனர்.
“நாட்டைக் கெடுக்க வந்த
நாடோடி வெள்ளையன்’’ (பு.நா.பா., ப.32)
என வெள்ளையனை நாடோடி அதாவது பரதேசி என்ற வசை உள்ளது.
“முக்கலச் சாராயம் - பறங்கி
முந்நூறு கோழிமுட்டை
அத்தனை தின்றாலும் - பறங்கி
வெத்திலை தின்னாப் போல’’ (காதல் வாழ்வு, ப.146-147)
என்ற பாடலில் பறங்கிப்பழம் போன்ற ‘பறங்கி’ என்ற வசையும் உள்ளது.
“ஐ பை அரைக்கா பக்கா நெய்
வெள்ளைக் காரன் கப்பலிலே
தீயைக் கொளுத்தி வை (பறளியாற்று மாந்தர். ப.85)
என்ற சிறுவர் பாடலில் வெள்ளைக்
காரன் கப்பலைக் கொளுத்த வேண்டும் என்ற கோபம் வெளிப் படுகிறது. பாட்டு விளையாட்டு என்றால் செயல் ‘வினையே’ தான்.
“நமது நாட்டைக் கெடுக்கிறாரே
நாடோடி வெள்ளையர்
சுயராஜ்யம் வேண்டும் என்றால்
சூழ்ந்து புகுந்து அடிக்கிறாரே’’
என்பது கோலாட்டப்பாட்டு. வௌள்ளையரை நாடோடி என்றும் நாடோடிகளின் நாட்டாண்மை தாங்க முடியவில்ல என்று குறிப்பிடுகின்றனர். (வி.வே., ப.2)
பழமொழி மக்களின் மொழி. இது முணுமுணுப் பாகவும் முறைப்பாகவும் முழக்கமாகவும் வெளிப் படுவதுண்டு. மக்கள் வெள்ளையரின் சுரண்டலை - சூதை-சூட்சுமத்தை அறிந்து கொண்டனர்.
“கும்பினி கோழிமுட்டை
குடியானவ அம்மிக்கல்ல உடைக்கும்’’
என்று முணுமுணுத்தனர்.
“துரைகளோடே சொக்காட்டான் ஆடினால்
தோற்றாலும் குட்டு ஜெயித்தாலும் குட்டு’’
என்ற பழமொழி வெள்ளையரின் சூட்சுமத்தைப் புரிந்து கொண்டிருக்கிறது.
“பறங்கிக்குத் தெரியுமா சடங்கும் சம்பிரதாயமும்’’ என்று மக்கள் முறைத்தனர். காரணம் அவர்கள் நமது கலாச்சார வேர்களுக்குள் கால் வைத்ததை இவர்களால் பொறுக்க முடியவில்லை.
“ஊசி நுழையா காட்டில்
ஒரு துரை போகிறான்
அவன் யார்?’’ (த.வி., ப.49)
என்ற விடுகதைக்கு விடை புகை. துரை எங்கும் நுழைவான் எப்பொழுதும் நுழைவான் எப்படியேனும் நுழைவான். புகையும் வௌஙிளை, துரையும் வெள்ளை. எவ்வளவு பொருத்தமான விடுகதை.
“வெள்ளைக்காரன் கை
மண்ணுக்குள்ளே
அது என்ன?’’ (த.வி.ப.240)
என்ற விடுகதைக்கு விடை முள்ளங்கி. முள்ளங்கியின் வெண்மை நிறம் வெள்ளையரின் கை போன்ற வண்ணமும் வடிவமும் இதையும் மீறி இதற்குள் “அவனது கை மண்ணுக்குள்’’ என்பதில் கோபம் உள்ளது. “உன் கையை முறிச்சி அடுப்புல வைக்க’’ என்பது நாட்டுப்புறக் கோபம்; “மண்ணாப் போ’’ என்பது சாபம்.
வெள்ளை எதிர்ப்பு
கும்பினி கொடுமைகளைக் கடற்கரை பரதவர்களும் எதிர்க்கின்றனர்.
“மண்ணாப் போவான் வெள்ளைக்காரன்
மதிப்பழிவான் வெள்ளைக்காரன்’’
என்று சபிக்கின்றனர். (சங்கறுக்கும் எங்கள் குலம், ப.25)
வெள்ளையர்களுக்குக் கோட்டை, கொத்தளம், கூடாரம் அமைக்க கடற்கரையே வசதியாக இருந்தது. மீனவர்களையும் மீனவக் குடிசைகளோடு அவற்றில் படர்ந்த சுரை, பூசனி, மரம் அனைத்தையும் அப்புறப்படுத்தினர்.
மீனவர்கள் மறுத்த போதும் கும்பினியர் சுட்டனர். ஒண்டவந்த பிடாரிகள் ஊர்ப்பிடாரிகளை விரட்டிய கதைதான்.
“ஓரான் ஓரான் தோட்டத்திலே
ஒருவன் போட்டானாம் வௌஙிளரிக்காய்
காசுக்கு ரெண்டு விற்கச் சொல்லி
காகிதம் போட்டானாம் வெள்ளைக்காரன்
வெள்ளைக்காரன் பணம் வெள்ளிப்பணம்
வேடிக்கை செய்யுது சின்னப்பணம்
வெள்ளிப் பணத்துக்கு ஆசைப்பட்டு
விதி குலைஞ்சாளாம் வீராயி (காதல் வாழ்வு, ப.148)
என்பது சுண்ணாம்பு இடிப்போர் பாட்டு. இதில் சுண்ணம் இடிப்பதோடு கும்பினியின் அதிகாரத்தையும் விதி குலைஞ்ச வீராயிகளையும் இடிக்கின்றனர். வெள்ளையரின் வியாபாரப் புத்தியையும் அடக்கு முறையையும் பாலியல் சுரண்டல்களையும் காட்டும் பாடல் இது. எவனோ ஊரான் போட்ட வெள்ளரிக்காய்க்கு எங்கோ இருக்கும் வெள்ளைக்காரன் விலை வைப்பதா. (இது இன்றைய கார்ப்பரேட்காரர்களுக்கும் பொருந்தும் தானே.)
“வேலா மரத்தடியே
வௌஙிளகாரங் கூடாரம்
வேதம் படிக்கச் சொல்லி
வெளுக்கிறானே வெள்ளைக்காரன்
எலந்த மரத்தடியே
இங்கிலீஸ்காரங்க கூடாரம்
இங்கிலீசுப் படிக்கச் சொல்லி
இளுக்கிறானே வெள்ளைக்காரன் (கொங்கு 98 ப.30)
இது பர்கூர் அடிவாரத்தில் பாடப்படுகிறது. இதில் படித்த மக்களை வெள்ளைக்காரர்கள் தமது மதத்தில் சேரச் சொல்லி அடித்து அச்சுறுத்துகிறார்கள். மொழி ஆதிக்கத்துக்காக ‘இங்கிலிசு’ படிக்க வைக்கிறான்.
பூலித்தேவனால் தொடங்கிவைக்கப்பட்ட விடுதலைப் போராட்டம் திருநெல்வேலிச் சீமை எங்கும் புரட்சிக் கனலை எழுப்பியது. 1750லிருந்தே திருநெல்வேலி மாவட்டத்தின் மலைச் சீமையில் பூலித்தேவர் தலைமையில் நெற்கட் டான் செவ்வலில் முகிழ்த்தது. பின் அதன் எழுச்சி இராமநாத புரத்தில் படர்ந்து சிவகங்கையில் 1772 இல் கொழுந்து விட்டு எரிந்து 1790-க்குப் பின் பாஞ்சாலங்குறிச்சியில் புயல் வேகத்தில் ஆர்ப்பரித்து எழுந்தது. அதன் இறுதிக் கொடுங்கனல் 19-ஆம் நூற்றாண்டின் முதலிரண்டு ஆண்டுகளில் பாஞ்சாலங்குறிச்சியையும் சிவகங்கை யையும் உட்கொண்டு, பின் தென்தமிழகமெங்கும் சுழன்று எரிந்தது. அடுத்த 50 ஆண்டுகளில் தென்னகமெங்கும் பரவி இந்திய மாநிலமெங்கும் விடுதலைப் போர் இயக்கங்களை வளர்த்தது என்று பேரா.கா.
அப்பாத்துரை கூறுவது குறிப்பிடத் தக்கது. (மா.பூ., ப.471)
விடுதலைப் போர்கள்
1955 - பூலித்தேவன் லி அலெக்சாண்டர் ஹெரான்
1967 - மருத நாயகம் லி கம்பெல்
192 - முத்துவடுக நாதர் லி ஜோசப் ஸ்மித்
1995 - முத்துராமலிங்க சேதுபதி லி ஜோசப் ஸ்மித்
1999 - கட்டபொம்மன் லி பானர்மேன்
1801 - மருதுபாண்டியர் லி மேஜர் வெல்ஷ்
1806 - வேலூர் சிப்பாய் லி கலகம்
இவ்வாறு தமிழ்நாட்டில் ஏழு போர்கள் பிரிட்டிசாருக்கு எதிராக நிகழ்த்தப்பட்டன. முதல் போரிலேயே பிரிட்டிஷார் தோற்றனர்.
பூலித்தேவன்
ஆங்கிலேயரின் ஆட்சிக் காலத்தை, பிரிட்டிசு ஆட்சியின் எழுச்சிக் காலம் (1740-1765), பிரிட்டிசு ஆட்சியின் வளர்ச்சி காலம் (1765 - 1798) என்று பிரிக்கலாம். பிரிட்டிஷ் எழுச்சியின் எழுச்சிக் காலத்தில் ஆங்கிலேயர்களுக்கும் பிரெஞ்சுக்காரர்களுக்கும் மூன்று கர்நாடகப் போர்கள் நடைபெற்றன. இந்திய நாட்டின் பெருஞ்செல்வம் வெளியேற்றப்பட்ட பொருளாதாரச் சீர்குலைவு ஏற்பட்டது. நாகரிகம், கலை, பண்பாடு நாளுக்கு நாள்மறைந்து இந்திய பொருளாதார வரலாற்றின் இருண்டகாலம், என்று கூறப்பட்டது. இந்தக் காலத்தில் பூலித்தேவன் வாழ்ந்துவந்தான்.
தூத்துக்குடியில் டச்சுக்காரர்களின் முத்துக் கொள்ளையைத் தடுத்தான். ஆர்க்காடு நவாப் முகமது அலி, கும்பினியரைத் திருநெல்வேலிச் சீமையில் கப்பம் வசூலிக்க கும்பினியத் தளபதி அலெக்சாண்டர் கெரானை அனுப்பி வைத்தான். இந்திய நாட்டை அடிமையாக்க ஏற்பட்ட, முதல் சாசனம் இதுதான். கெரானுடன் அலியின் அண்ணன் மாபூசுக்கானும் யூசுப்கானும் (மருதநாயகம்) உடன் சென்றனர். 1755 இல் நடைபெற்ற முதல் படையெடுப்பு?
திண்டுக்கல் லட்சுமணநாயக்கன் கெரானை எதிர்க்க முடியாமல் முதலில் அடிபணிந்தான். மதுரையில் நபிகான் கட்டாக்கும் முடோமியாவும் ஓடி ஒளிந்தனர். பாஞ்சாலங்குறிச்சியில் கட்ட பொம்முவின் பாட்டனார், பொல்லா பாண்டியன் சீர்வரிசையும் சிறிது கப்பமும் கட்டினான். பிணைக் கைதிகளாக மகனையும் தம்பியையும் பிடித்ததும் முழு தொகையையும் கட்டி முடித்தான்.
கப்பமாக ஒரு நெல்லைக் கூடக் கட்ட மறுத்த தால் பூலித்தேவன் ஊர் நெற்கட்டான் செவ்வல் ஆனது.
கோட்டை முற்றுகையில் கெரான் தோற்கடிக்கப் பட்டான்.
“கர்னல் கீரான் என்பவனாம் - வெள்ளைக்காரப் படையின் தளபதியாகும்
கும்பியைப் படையும் பீரங்கியும் - கொண்டுமே
கோட்டையைத் தகர்க்க ஆணையிட்டான்
சீறியே பூலி வாள் எடுத்தார் - வீரச்
சிங்கம் போலவே போர்த்தொடுத்தார்
காலங்கள் அறிந்து கும்பினியப் - படையை
கண்ட துண்டங்கள் செய்தாரே’’
என்ற கும்மிப் பாடல் கூறும்.
இப்படிப்பட்ட வரலாற்று வீரர்களையும் அவர் களைப் பற்றிய நாட்டுப்புறப் பாடல்களையும் மக்கள் விரும்பினர். வீரர்களின் வாய்மொழி வரலாறுகளைக் கோவில் திருவிழாக்களில் ஆடியும் பாடியும் கூத்தாக நிகழ்த்தியும் வந்தனர். வட்டாரத் தலைவர்களைப் போற்றியும் புகழ்ந்தும் வாழ்த்தியும் வணங்கியும் வந்தனர். கட்டபொம்மு கதைகளைக் கோவில்பட்டி வட்டார கம்பளத்தார்களும் பூலித்தேவன் கதைகளைச் சங்கரங்கோவில் வட்டார மறவர்களும் கும்மி, கூத்து என நிகழ்த்தினர். கும்பினியர் வந்தால் கொஞ்சம் மாற்றியும் மறைத்தும் அவர்கள் அகன்றதும் விரித்தும் விளக்கியும் கொண்டாடினர்.’’
இது மக்களிடம் நல்ல செல்வாக்கைப் பெற்றிருந்தது. நாட்டை அந்நியரிடம் இருந்து காக்க வேண்டும் என்ற விடுதலை உணர்வை வளர்த்தது. பூலித்தேவன் கதை கும்மி, தாலாட்டு, தெம்மாங்கு, வண்ணக் கோடாங்கி, பொலி, சிந்து என விரிந்து கிடக்கின்றன.
ஒயில் கும்மி ஆசிரியர் சண்முகச்சாமி. ஒயில் கும்மி ஆட்டத்தை செண்பகாபுரத்திலுள்ள மக்கள் சண்முகத்தேவர் தலைமையில் ஆடி வருகின்றனர். ஆண்டுதோறும் கோவில் திருவிழாவில் ஆடிப்பாடுவர். சமீபத்தில் கார்த்திகைச்சாமி, அ.கிருஷ்ணத்தேவர், இ.முத்தையாத் தேவர் ஆகியோர் இறக்க, தற்போது தங்கவேல் தேவர் தலைமையில் நடந்து வருகிறது. இங்கு சாமியாத்தேவர் முதல் மு.முத்துப்பாண்டியன் வரை இருபதுபேர் இவ்வாட்டத்தில் சிறந்து விளங்குகின்றனர்.
மாவீரன் பூலித்தேவனின் தோற்றத்தைக் குறித்து, “ஆறடி உயரமடா என் கண்ணே - பூலி
அர்ச்சுனன் போல் வீரனடா
சோதி போல் முகமிருக்கும்’’ - என்ஐயா
சுதந்திரம் போல் கையிருக்கும்
கார்மேக வண்ணமடா என்ஐயா - மார்பு
கவசம் போல்திண்ணமடா’’ என்பார் முனைவர் ந.இராசையா (வி.வே.த.,ப.39)
“சங்கரன் கோமதி பாருங்கடி - மன்னன்
சரண் அடைந்ததைக் கேளுங்கடி பூசை அறையில் செய்யாகமடி - அங்கே பூலித்தேவர் மெய் யோகமடி பொன்விலங்கு உடைந்திடவே பூத உடலும் மறைந்திடவே பூலிசங்கரன் ஆளான வெள்ளையன் பொறி கலங்கியே போனான்’’ என்னும் வெள்ளையப்பன் கும்மிப்பாடல் கூறும் கும்பினியர் பூலித்தேவரைக் கைது செய்ய சூழ்ச்சி செய்தனர். ஆரணிக் கோட்டையின் தலைவன் அனந்த நாராயணன் என்பவனின் அரண்மனைக்கு வரவழைத்து செய்தனர். பாளையங்கோட்டைக்குச் செல்லும் வழியில் சங்கரன்கோவிலுக்குள் சென்று வழிபட்டார். கும்பினியர் புடை சூழ உடனிருந்தனர். பெரிய புகைமண்டலம் தோன்றிட, தேவர் சிவனொடு கலந்தார். அதனால் பூலிசிவஞானம் ஆனார் என நாட்டுப்புறக்கதைகள் கூறுகின்றன என்பார் முனைவர் ந.இராசையா (மாமன்னன் பூலித்தேவன், ப.195) கி.பி. 1768 ஆம் ஆண்டு தை மாதம் 17-ஆம் தேதி புதன் கிழமை அரங்கேற்றப்பட்டது. “புறங்கொண்ட முத்துக் கறுப்பன் ஈன்ற பாலகனும் கொக்கலிங்கம் பக்தியாகத் துதித்து தரங்கொண்ட பூலிமகராசன் காதை - சாற்றினோம் கும்மிபாடி அங்கேற்றினோம்’’ என்ற விநாயகர் துதி கூறும். இப்பாடல் ஆறுமுக நாதனால் சொக்கலிங்கத்திற்கு 1898 இல் உரைக்கப்பட்டது. சொக்கலிங்கம் சண்முகச்சாமிக்கு 1943 இல் பாடலை எடுத்துரைத்தார். “பூலித்தேவர் என்பவராம் என்ஐயா புகழ்நிறைந்த மன்னவராம் பக்திமணம் வீசி நின்று என்கண்ணே-சிவன் பரமபதம் சேர்ந்தாரோ. என்பது பூலித்தேவன் தாலாட்டு. இதில் பூலித்தேவனின் சிவபக்தி சொல்லப்பட்டு உள்ளது. (மா.பூ., ப.448) பூலித்தேவனுக்கும் ஆங்கிலேயருக்கும் நடைபெற்ற போரில் வீரர்களின் மனைவியர் தாலிகளை அகற்றினர். ஒருநாள் போரில் 11 படி தாலிகள் அறுந்து விழுந்தன. தாலிகளை இழந்த வீராங்கனைகளுக்குத் தக்க மானியங்களை வழங்கி கௌரவித்தார் வீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தினார். இது இந்த வட்டாரத்தில் மட்டும் உள்ள செய்தியாகும் (மா.பூ., ப.697) “பொலியோ பொலி பூலிநாட்டில்பொலியோ பொலி பொலிபொலி என்று சொன்னால் பூலிநாட்டில் பொலி நெல்லும் குவியும் பூலி பூலி என்று சொன்னால் புலி வாயும் ஒடுங்கும்’’ என்ற பாடலில் புலியை வென்றது உரைக்கப்பட் டுள்ளது. (மா.பூ., ப.697) “மறத்திமகன் பூலி - கொண்டையங்கோட்டை மறத்திமகன் பூலி அஞ்சாத மறத்திமகன் பூலி ஆப்பநாட்டு மறத்திமகன் பூலி பூலி என்று சொன்னால் - காட்டில் புலிவாயும் ஒடுங்கும்’’ என்பது வண்ணக் கோடங்கிப் பாடல். இதில் இவன் புலியை வென்று அடக்கிய செய்தி கூறப்பட்டுள்ளது. மருதநாயகம் “சண்டாள மருதநாயகம் பிள்ளை அவன் சாதியிலே வெள்ளாளன் பிள்ளை படுக்கறது பறச்சேரி மேடை குடிக்கிறது கூந்தப்பனை கள்ளு கடிக்கிறது கருவாட்டு மண்டை இருக்கிறது இழுவக்குடித் திண்ணை’’ என்பது நெல்லைப்பகுதியில் பாடப்படும் நாட்டுப் புறப்பாடல். இதனை எங்கள் ஊரில் கிறுக்காசாரி ஒருவர் பாடிக்கொண்டிருப்பதை நானே பல முறை கேட்டிருக்கிறேன். இவர் இறுதிவரை பிரிட்டிஷாரின் காவல் ஆள். பின்னர் பிரஞ்சுக்காரன் ஏவல் ஆள். பிரிட்டிஷாரிடம் தோற்று தூக்கில் இடப்பட்டார். இவர் தியாகியா? துரோகியா? கட்டபொம்மு கட்டபொம்மனைத் தூக்கிலிட்ட பிறகு, கோட்டையை இடித்து தரைமட்டமாக்கினர். உழுது விதைத்தனர். உறவினர்களை ஆளில்லாத தீவுகளுக்கு அனுப்பினர். வரலாற்று ஆவணங்களை அழித்தனர். நிலப்படம் வரையும்போது பாஞ்சாலங்குறிச்சியைப் பாழ்நிலம் என்று காட்டினர். ஆதாரங்களை அழித்தாலும் அவனது நினைவுகளை அழிக்க முடியவில்லை. அவனது தியாகம் மக்களிடையே எழுச்சியை உண்டாக்கியது. இவ்வெழுச்சி பரவி விடுதலைப்படை திரண்டு பாளை சிறையிலிருந்து ஊமைத்துரையை விடுவித்தது. அவன் மீண்டும் கோட்டை கட்டிப் போர் செய்ய வெள்ளையர் வெல்கின்றனர். எனினும் வீரர்களைப் பற்றிய கதைகளும் பாடல்களும் பரவின. கூத்துகளை வெள்ளையர் தடைசெய்ய பாட்டும் கதையும் சாகவில்லை. இவ்வாறு மக்கள் வீரர்களின் நினைவு களைப் பாதுகாக்க எழுப்பிய நினைவுச் சின்னங்கள் நாடோடிப் பாடல்களே ஆகும். அவைச் சரித்திரச் சான்றுகள் என்று ஒப்புக் கொள்ளப்படாவிட்டாலும் இவ்வீரர்களைப் பற்றி மக்களுடைய நோக்கு என்ன என்று எடுத்துக்காட்டும் சாதனங்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது என்பார் பேரா.நா. வானமாமலை. (கட்டபொம்மன்கதைப் பாடல், முன்னுரை) ஆட்சியாளரைப் பேட்டிகாண கட்டபொம்மன் படைகள் புடை சூழச் சென்றான். “ஆனை பரிசேனை ஒட்டகையும் அதின் மேலாக பேரிகை தான் முழங்க மானா பரனான கட்டபொம்முதுரை வார சிங்காரத்தைப் பாருங்கள்’’ என்ற கும்மி கூறும். (வி.வே.த., ப.75) “வானம் பொழிய முப்போகம் விளையுது மன்னனென்ன காணிக்கு ஏது பணம்? காலமழையிலே முப்போகம் விளையுது கொற்றவன் காணிக்கு ஏது பணம்? மாரிகள் பெய்தும் பெய்யாமலும் போவதை மாற்றுதற்கோ கப்பம் வாங்குகிறீர்?’’ என்று ஜாக்சன் மேஜர் துரையிடம் கேட்பதாக ‘கட்டபொம்மு துரை கதை’ கூறும். சுந்தரலிங்கம் கட்டபொம்முவின் படை வீரர், தளபதி என்றும் கூறுவர். “கட்டக் கருப்பன் சுந்தரலிங்கம் மட்டில்லாப் பேருங்கொடுத்தானடா ஆயிரம் கம்பளம் நூறு பரிவாரமதற்கு நீயொரு வீரனடா’’ (கொங்கு 98 ப.30) என்று கட்டபொம்மு கதைப்பாடல் கூறும் (வி.வே.த.ப.90) வரலாறு என்பது வேந்தர்களின் வரலாற்றினை எழுதிச்செல்ல, வாய்மொழி வரலாறும் அதற்கான நாட்டுப்புற இலக்கிய வழக்காறுகளும் மாந்தர்களின் வரலாற்றினைப் பாதுகாக்கும்.