பேரா. தொ.பரமசிவன் அழகர் கோயில் பற்றி ஆய்வு செய்தபோது, விஜயரங்க சொக்கன் காலமான கி.பி. 1706-1732-க்கு இடைப்பட்ட காலமே மதுரைவீரன் காலம். கிறித்துவப் பாதிரியார் மார்ட்டின் அடிகளார். கி.பி. 1700, 1709 ஆகிய வருடங்களில் எழுதியுள்ள கடிதங்களையும் மதுரை வீரன் கதைப்பாடலையும் ஆதார மாகக் காட்டுகிறார்.

த.கண்ணா கருப்பையா என்பவர் ‘ மதுரைவீரன் வழிபாட்டு மரபுகளும் வழக்காறுகளும் என்னும் ஆய்வு செய்தவர், திருமலை நாயக்கரின் காலம்தான் (கி.பி. 1623-59) மதுரை வீரன் காலம் என்பார்.

திருமலை நாயக்கர் காலம்தான், நாயக்கர்- கள்ளர்கள் மோதலுக்கான தீவிரத் தன்மையாகக் கருதப் படுவதால் திருமலை நாயக்கர் காலமே மதுரைவீரன் காலமாக இருக் கவேண்டும் என்பார் மு.ஏழுமலை.

கி.பி.17-ஆம் நூற்றாண்டில் திருச்சி மாவட்டத்தில் பொம்மண்ணன் என்ற பாளையக்காரர் ஆட்சி செய்தார். அவருடைய தேசத்தில் சின்னான்- செல்லி என்ற அருந்த திய தம்பதிகள் வேலை செய்து வந்தனர். இத்தம்பதிகளுக்கு வீரன் என்ற மகன் பிறந்தார். வீரன் அழகானவர், நல்ல உடற்கட்டு உள்ளவர், வீரமும் வலிமையும் திறமையும் புத்திக்கூர்மையும் உள்ளவர். பிறர் நலனுக்காக உழைக்கும் இனிய பண்புள்ளவர். அநீதியைத் தட்டிக்கேட்கும் நேர்மையானவர்.

Advertisment

இவர் பொம்மண்ணன் மகள் பொம் மியைக் காதலித்தார். எனினும் இருவருக்கும் இடையிலுமான சாதி வேறுபாடுகளுக்கு அஞ்சி, பொம் மியுடன் வீரன் திருச்சிக்குச் சென்று ‘விஜயரங்க நாயக்கர்’ படையில் வீரராகச் சேர்ந்துள்ளார். இக்கால கட்டத்தில் மதுரையில் திருமலை நாயக்கர் ஆட்சி செய்துள்ளார் (1623-1659). இவர் ஆட்சி செய்த பகுதியில் பிறமலைக் கள்ளர்கள் தொந்தரவு மிக அதிகமாக இருந்துள்ளது. இவர்களை அடக்கு வதற்கு ஏற்ற தளபதி ஒருவரை அனுப் பும்படி திருமலை நாயக்கரிடம் கேட்டதற்கிணங்க, விஜயரங்க நாயக்கர் வீரனை அனுப்புகிறார்.v வீரன் கள்ளர்களை அடக்கி வெற்றிபெற்றுச் சிறப்பு பெறுகிறான்.

திருமலை நாயக்கனின் பல காதலிகளில் (சுமார் 200 காதலிகள் இருந்த தாக வரலாறு கூறுகிறது. அருந்த தியர் வாழும் வரலாறு, ப.61). வெள் ளையம்மாளைக் காதலித்த குற்றத் திற்காக ஒரு காலும் ஒரு கையும் வெட்டப்பட்டு இறக்கிறார். பொம் மியும் வெள்ளையம்மாளும் உடன் கட்டை ஏறினர் என்பதுவே வாய் மொழி வரலாறு. (பாலை ப. 335-336) நிலவுடைமை சமூகத்தில் ஆதிக்க சாதியினர், இத்தகைய தெய்வங் களின் தோற்றம் குறித்த கதைகளில் மாறுதல்களை நிகழ்த்தி அவர்களுக்கு முற்பிறப்பு ஒன்றை உருவாக் கியுள்ளனர். சான்றாக மதுரை வீரன், காத்தவராயன் என்ற இரு வீரர்களின் பிறப்பில் ஏற்படுத்திய மாற்றங் களைக் குறிப்பிடலாம்.

அருந்ததியர் (சக்கிலியர்) சாதியில் பிறந்த வீரப்பன்/ வீரையன் என்ற இளைஞன் தன் பெயருக்கேற்றவாறு வீரனாகத் திகழ்ந்து கொலையுண்டு இறந்துபோனான். பின் மதுரை வீரன் என்ற பெயரில் தெய்வமாக வணங்கி வந்தனர். அருந்ததியர் சமூகத்து வீரன் ஒருவன் தெய்வமானதை ஏற்றுக்கொள்ளவும் முடியாமல் தடுத்து நிறுத்தவும் முடியாமல் மேட்டிமையோர் மதுரைவீரன் வரலாற்றில் சில மாறுதல்களைச் செய்துள்ளார்.

Advertisment

1. காசியை ஆண்ட மன்னருக்குப் பிறந்த குழந்தையை சோதிடரின் அறிவுரைப்படி காட்டில் கொண்டு விட அக்குழந்தையை அருந்ததி சாதிப் பெண்ணொருத்தி எடுத்து வளர்க்கிறாள். இக்குழந்தையே மதுரைவீரன்.v 2. சிவனின் வியர்வையில் தோன்றிய வீரபத்திரரே மதுரை வீரனாகப் பிறந்தார்.

3. முருகனின் தளபதியான வீரபா குத் தேவர் பார்வதியின் சாபத்தால் மதுரைவீரனாகப் பிறந்தார்.

இவற்றுள் முதல் மாறுதல் மதுரை வீரனது சாதியிலிருந்து அவனைத் துண்டித்து அரச குடும்பத்துப் பிறப்பை வழங்குகின்றது. எம்.ஜி.ஆர் நடித்த "மதுரைவீரன்' திரைப்படம் இம்மாறுதலை ஏற்றுக் கொண்டுள்ளது. அடுத்த இரண்டு மாறுதல்களும் அருந்ததியர் சமூகத் தின் வீரத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்கிய மதுரைவீரனை அவனது சாதியிலிருந்து துண்டித்துப் புராணப் பாத்திரமாக மாற்றிவிடு கின்றன என்பார் ஆ.சிவசுப் பிரமணியன் (நாட்டார் வழக்காற் றியல் அரசியல், ப. 46-47)

இந்த மதுரைவீரன் கதை நாடு

முழுவதும் தெருக்கூத்து, நாடகம், வில்லுப்பாட்டு வடிவில் காலங்கால மாகவே நடந்து வருகிறது. இப்போதும் தென்மாவட்டத்து திருவிழாக்களில் மதுரைவீரன் கூத்து நடத்துவது வழக்கத்தில் இருக்கவே செய்கிறது. இதை, அந்தந்த தெய்வீகத் திருமகனுக்குச் செய்யும் திருப்பணியாகவே கருதுகின்றனர்.

அவன் அவர்களது குலதெய்வ மாகவே கொண்டாடப்படு கிறான்.

இப்படத்தின் மாபெரும் வெற்றியின் மூலமாகத் தென் மாவட்டத்து மக்களின் கண்களில் வாழும் மதுரை வீரனாக எம்.ஜி.ஆர் காட்சி தந்தார். அந்தப் பகுதியெங்கும் உள்ள அடித்தட்டு வர்க்கத்தின் ஆழமான அன்பையும் அசைக்கவே முடியாத அடர்த்தியான செல்வாக் கையும் எம்.ஜி.ஆர் பெற இப்படம் உதவியது என்பார் பாலபாரதி (தமிழ் சினிமா 80-மி, ப.169)

மதுரைவீர சுவாமிகதை

இது புகழேந்திப் புலவரால் எழுதப்பட்டதாக நம்பப்படுகிறது. 1979-ல் பி.இரத்தின நாயகர் அன்ட் சன்ஸ் வெளியிட்டுள்ளது. 1875-ல் சுந்தர முதலியாரும் 1887-ல் அருணாசல முதலியாரால் நூறாண்டாகத் தொடர்ந்து வரும் மதுரைவீர சுவாமி கதைப் பதிப்பே மக்கள் ஏற்றுக்கொண்டது எனலாம்.

மதுரைவீரன் அம்மானை

1978-ல் அ.விநாயகமூர்த்தியால் பதிப்பிக்கப்பெற்றது. இந்த ஏடு திருநெல்வேலி மாவட்டம் கடையநல்லூருக்கு அருகாமை யிலுள்ள மங்களபுரத்தில் கிடைத்தது. இது 1835-ல் எழுதப்பட்டது. 1858-ல் மீண்டும் எழுதப்பட்டது.

வீரையன் அம்மானை

1979-ல் அ.மா. பரிமளத்தால் பதிக்கப்பெற்றது. இது தஞ்சை சரசுவதி மகால் நூல் நிலைய வெளியீடு. இதில் பொம்மியை மதுரைவீரன் சிறை எடுத்தது வரைதான் உள்ளது. முழுமைபெறாத பிரதி. எவரால் எழுதப்பட்டது என்றும் தெரியவில்லை.

ஸ்ரீ மதுரைவீர சுவாமி பராக்கிரமம்

1913-ல் வெளிவந்துள்ளது. இதன் ஆசிரியர் அயன்புரம் வரகவி இரத்தின கிராமணி ஆவார். இதனைப் புலமை உலகம் ஏற்றுக்கொண்டது. நாரதர் திருமலை நாயக்கருக்குக் கூறுவதுபோல் அமைந்துள்ளது.

மருதைவீரன் சரித்திரம்

1952-ல் வெளிவந்த சிறு நூல். இதன் ஆசிரியர் அரிதாஸ் திரு வேங் கடம்பிள்ளை. எட்டுப் பக்கங்களில் 192 அடிகளில் உள்ளது. மன்மதன் ரதிக்கு மதுரைவீரன் கதையைக் கூறுவதாக இந்நூல் அமைந் துள்ளது.

மதுரைவீரன் நாடகம்

1870-ல் குட்டி உபாத்தியாயரால் எழுதப்பட்டு வெளிவந்தது. இவரது ஊர் தோணி. 1870-ல் இருமுறையும் 1880-ல் ஒரு முறையும் அச்சா கியுள்ளது. பின்னர் கோகுலாபுரம் சரவணபண்டிதர், வீரணன் தோட்டம் சரவண முதலியார், மாதர் பூதிஸ்பரர் சுவாமியாலும் தனித் தனியாகப் பரிசோதிக்கப்பட்டு முறையே சித்தர் வீராசாமி நாயுடு வால் அச்சாக்கப்பட்டது.

மதுரைவீரய்யன் நாடகம்

1928-ல் சாலை. கிருஷ்ணப்பிள்ளை எழுதிட வெளிவந்தது. இதனைக் கடலூர் முருகேச முதலியார் பதிப் பித்துள்ளார். இது மதுரை வீர நாடகத்தையே பெரிதும் பின்பற்றிச் செல்கிறது.

தமிழ்நாட்டில் மதுரைவீரன், பவளக்கொடி, நல்லதங்காள், ஆரவல்லி சூரவல்லி, காத்தவராயன், சித்திராங்கி போன்றோரின் கதைகள் வாய்மொழிக் கதைகளாகப் பலகால மாக நாட்டு மக்களிடையே உலவி வந்தவை. பத்தொன்பதாம் நூற்றாண்டில் இக்கதைகளே முதன்முதலில் நாடகமாயின. ஒரே கதை பல்வேறு ஆசிரியர்களால் சிறுசிறு மாற்றங்களுடன் நாடக உறவு பெற்றது. சான்றாக. மதுரை வீரன் கதை, மதுரைவீர விலாசம் என்ற பெயரில் அழகிய சுந்தரம் பிள்ளை என்பவராலும், மதுரைவீர விலாசம் (புதியது) என்ற பெயரில் குட்டி உபாத்தியாயராலும் மதுரைவீர நாடக அலங்காரம் என்ற பெயரில் ஏகாம்பர முதலியாராலும் நாடகமாக்கப்பட்டது’’ என்று தமிழ் நாடக வரலாறு நூலில் (ப.200) சக்திப்பெருமாள் குறிப்பிடு கிறார்.

திண்டுக்கல் மாவட்ட கொடை ரோடு - ராசதானி கோட்டைத் தனிக் கிராமத்தில் 19.6.92-லும் பள்ளப் பட்டி - பாரதிபுரத்தில் 12.6.92-லும் மதுரைவீரன் நாடகம் நிகழ்த்தப் பட்டது. திண்டுக்கல் அங்கு விலாச நிறுவனம் சார்பாக 7.10.85-லும் நாடகம் நிகழ்த்தப்பட்டது.

சேலம் மாவட்டத்தில் மதுரை வீரன் கதையை வழிபாட்டின்போது தெருக்கூத்தாக நடத்துகின்றனர்.

திருச்சி, பெரியார் ஆகிய மாவட்டங் களில் மதுரைவீரன் நாடகம் தொடங்கும் முன்பு, நாயக நடிகர் வேடமணிந்து, அறுபத்துநான்கு மற்றும் முப்பத்திரண்டு தீப்பந் தங்களை உடலில் கட்டி, வேட் டையாடி, கோயிலைச் சுற்றி வந்து, வீரமண்டியிட்டு, சேவலை வாயில் வைத்துக் கடித்துப் பலிவாங்கிய பின்பு நாடக மேடை ஏறுவார் (பேட்டி - த. கண்ணா கருப்பையா)

19.10.91-லிருந்து ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை மட்டும் மாலை 6.45 முதல் 7.00 வரை மதுரை வானொலியில் ஒலிபரப்பப்பட்டது. 5 வாரங்கள் திண்டுக்கல் பாலகவி வேங்கடாச்சலம் குழுவினரால் நடிக்கப்பட்டது.

1939-ல் டி.பி.ராஜலட்சுமியின் ராஜம் டாக்கிஸ் நிறுவனமும் ராஜு பிலிம்ஸும் தயாரித்த ‘மதுரை வீரன்’ வெளிவந்தது. வி.ஏ. செல்லப்பாதான் மதுரை வீரன். டி.பி.ராஜலட்சுமி பொம்மி. இதனை ஒரு வெற்றிப் படம் என்பார். டி.பி.ராவ். பி.வி.ராவ் இயக்கியிருந்தார்.

இதன் கதை விவரம் தெரிய வில்லை. பாடல்களை டி.பி.ராவே இயற்றி இசை அமைத்து பாடி, நடித்திருந்தார்.

ஆசை வச்சேன் எம்மேலே - நான் ஆளானேன் மாசி மாசம் என்ற பாடல் அன்றைய ரசிகர் களைப் பித்தாக்கிற்றாம். வலுவான கதை, திறமையான நடிகர்கள், ரசிகர் களுக்கேற்ற பாடல்கள் போன்றவற் றால் இப்படம் வெற்றிப்படமா யிற்று.

கிருஷ்ணபிக்சர்ஸ் சார்பில் 1956-ல் லேனா செட்டியார் தயாரிக்க டி.யோகானந்த் இயக்கினார். கண்ண தாசன் திரைக்கதை, வசனம் எழுதி னார். அவருடன் உடுமலையும் மருதகாசியும் பாடல்கள் எழுதிட ஜி. இராமநாதன் இசையமைத்தார். எம்.ஜி.ஆர் வீரனாகவும் பானுமதி பொம்மியாகவும் பத்மினி வெள்ளையம்மாளாகவும் நடித் திருந்தார்.

சுப்பு அண்ட்கோ, பழநிசெட்டி யார் லேனாவுக்கு வட்டிக்குத் தந்து மதுரைவீரனைப் படம்பிடிக்கச் சொன்னார். 2 ஆண்டுகளில் படம் உருவானது. யார் யாரோ எழுதிப் பார்த்து தேறாமல் கண்ணதாசன் கைக்கு இறுதியில் வந்ததாம் வசன வாய்ப்பு.

கிருஷ்ணா பிக்சர்ஸ் லேனா செட்டியாருக்கு அதுவரையிலும் காணாத லாபத்தை யோகானந்த் பெற்றுக் கொடுத்தார் என்று அன்றைய தின, வார, மாத இதழ்கள் பாராட்டு மழை பொழிந்தன.

எம்.ஜி.ஆரை மக்கள் திலகம் ஆக்கிய படமிது. இவரது திரை வரலாற்றில் வசூலில் மாபெரும் வெற்றியைத் தந்த முதல் படமிது. மக்களும் எம்.ஜி.ஆரை வாழும் மதுரை வீரனாகவே கண்டனர். அடித்தட்டு வர்க்கத்தின் ஆழமான அன்பையும்- அடர்த்தியான செல்வாக்கையும் இதனால் பெற்றார்.

இது ஒரு கோடி ரூபாய்க்கு மேல் வசூலான படம். தமிழகத்தில் 40-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் முதன் முறையாக நூறு நாட்களுக்கு மேல் ஓடிய பெருமையைத் தந்தது. டூரிங் டாக்கீஸ்களிலும் 50-க்கும் மேற் பட்ட நாட்கள் ஓடியது. மதுரை மாநகர் சென்ட்ரல் திரையரங்கில் 200 நாட்கள் ஓடி இமாலய சாதனை படைத்தது. வெற்றி விழாவில் 2 லட்சம் மக்கள் கூடி, வெள்ளிக் கேட யமும் வீரவாளும் எம்.ஜி.ஆருக்கு பரிசாக வழங்கினர்.

“16-ஆம் நூற்றாண்டில் மதுரையில் நாயக்கர் வம்சம் ஆட்சி செலுத்தியது. அதிலே இது திருமலை நாயக்கரின் காலத்திய கதைதான். வாரணாசிப் பாளையத்தில் ஆரம் பித்து மதுரையில் முடியும் இந்தக் கதைக்கு மதுரை வரலாற்றில் ஏராள மான சான்றுகள் உண்டு. இது முழுக்க முழுக்க சரித்திரக் கதைதான்’’ என்கிறது திரைப்படம். இது பொய். சினிமாவுக்காகச் சிதைக்கப்பட்ட கதை. இந்தப் படத்தின் வெற்றிக்குப் பிறகு எம்.ஜி.ஆர். தன் படங்களில் இரண்டு நாயகிகளைச் சேர்த்துக் கொண்டாராம். கண்ணதாசனின் கதை, வசனம் இப்படத்தில் இலக்கியத் தென்றலாய் வீசியது. இதன்மூலம் இவரைத் திரையுலகம் திரைவசன கர்த்தாவாகவும் ஏற்றுக்கொண்டது. எம்.ஜி.ஆரோடு கலைவாணரும் இணைந்த முதல் படம் இதுவா கத்தான் இருக்கவேண்டும்.

dd

“சிக்கலான கதையை, மக்கள் ஜீரணித்து, ஏற்றுக்கொண்டு, ஏகோ பித்த வெற்றியைத் தேடித் தந்ததற்கு காரணமே கவியரசரின் திரைக்கதை அமைப்பும் கருத்தைக் கவரும் வச னங்களுமே எனலாம். தாழ்த்தப்பட்ட ஓர் இனத்தின் பெருமையை, அருமை யாக உயர்த்திக் காட்டி, தமிழ்த் திரை யுலகில் அரும்பெரும் சாதனையை நிகழ்த்திக் காட்டிய வரலாற்றுக் காவியம் என்பார் கவிஞர் எஸ்.பி.ராஜா. (கண்ணதாசன் பார்வையில் எம்.ஜி.ஆர்., ப.23)

மதுரை வீரன் திரைக்கதை கழுத்தில் மாலையுடன் குழந்தை பிறந்ததால், நாட்டுக்கு ஆகாது என்கிறார், ஜோதிடர். அதைக் கேட்டு, குழந்தையைக் காட்டில் விட்டு விடுகிறார் அரசர். குழந்தையை, செருப்பு தைக்கும் தொழிலாளியும் அவர் மனைவியும் (என்.எஸ். கிருஷ்ணன் - டி.ஏ.மதுரம்) எடுத்து ‘வீரன்’ என்று பெயரிட்டு வளர்க் கிறார்கள். வீரன் வளர்ந்து வீரமிக்க இளைஞன் (எம்.ஜி.ஆர்) ஆகிறான்.

ஒரு சமயம் அரசகுமாரி பொம் மியை (பானுமதி) ஆற்று வெள்ளத் திலிருந்து காப்பாற்றுகிறான். அவள் வீரனைக் காதலிக்கிறாள். பொம் மியின் முறைமாமன் நரசப்பன், பொம்மியைக் காவலில் வைத்து, கட்டாய திருமணத்துக்கு ஏற்பாடு செய்கிறான். ஆனால் வீரன் தக்க தருணத்தில் பொம்மியைக் காப் பாற்றி, சிறை எடுத்துச் செல்கிறான்.

அவனுடைய வீரத்தை மெச்சிய விஜயரங்க சொக்கன், பொம்மி வீரனுக்கே உரியவள் என்று தீர்ப்பு கூறுகிறான். பொம்மியை மணக்கி றான், வீரன். திருமலை நாயக்கனுக்கு (ஓ.ஏ.கே. தேவர்) தளபதியாக நியமிக் கப்படுகிறான். மதுரையில் சங்கிலிக் கருப்பன் (சாண்டோ சின்னப் பாதேவர்) தலைமையில் இயங்கிய அழகர் மலை கள்வர் கூட்டத்தை ஒழிக்கிறான். அரசவை நர்த்தகி (பத்மினி) வெள்ளையம்மாளை வீரன் காதலிக்கிறான். வீரனுக்கு எதிராக நரசப்பனும் (டி.எஸ். பாலையா) குடிலரும் (டி.கே.ராமச்சந்திரன்) சதி செய்கிறார்கள். அவனைப் பற்றி திருமலை மன்னரிடம் பொய்க் குற்றச்சாட்டுகளைச் சுமத்து கிறார்கள். இதனால் வீரனைக் குற்ற வாளி என்று மன்னர் தீர்மானித்து, மாறுகால், மாறு கை வாங்க உத்தரவிடுகிறார். வீரன் கொலைக் களத்துக்கு இழுத்துச் செல்லப்படு கிறான். அவனது ஒரு கையும் காலும் துண்டிக்கப்படுகின்றன. அவன் இருக்கும் இடத்துக்குப் பொம்மியும் வெள்ளையம்மாளும் ஓடி வந்து அவனுடன் உயிர் துறக்கிறார்கள். (மதுரை வீரன் - கதை வசனம், ப.21-22)

“மதுரை மற்றும் தென்மா வட்டங்களின் வீரம் செறிந்த தெய்வீகக் கதாநாயகன் குழந்தை களுக்குத் தைரியமூட்டுவதற்கு மதுரை வீரன் கதையைச் சொல்வார்கள். இன்றும்கூட சில ஊர் அம்மன் கோவில்களில் மதுரை வீரன் உருவ வழிபாடு மற்றும் மதுரை வீரன்போல் வேடமணிந்து பாடுவதும் ஆடுவதும் பிரபலமான ஒன்று. சின்னவர் எம்.ஜி.ஆர். அவர்களிடம் மதுரை வீரன் கதையை என்னுடைய தந்தை கவியரசு கண்ணதாசன் எடுத்துச் சொல்லியபோது எம்.ஜி.ஆர். அன்று இருந்த நிலையில் இந்தக் கதாபாத் திரம் ‘நெகட்டிவ் ரோல்’ போல இருப் பதாக எண்ணி சற்று தயக்கம் காட்டி னார். ஆனாலும் கவியரசர் மதுரை வீரன் அருமை பெருமைகளைப் பற்றி எடுத்துச் சொல்லி ‘சின்னவர்’ இந்த ‘மதுரை வீரன் வேடத்தில் நடித்தால் தென் தமிழகம் முழுவதும் அது பல தலைமுறைக்கும் பேசப்பட்டு அவருக்குப் பெருமைசேர்க்கும் ஒரு படமாக அமையும் என்று சொன் னார். கவிஞர் வாக்கு பொய்யாகாது என நம்பி சின்னவர் மதுரை வீரனாக நடித்தார். படமும் வெற்றிப்படமாக அமைந்தது. ஆம். உண்மைதான் கவியரசரின் அந்த வார்த்தை களின்படி தலைமுறை தாண்டி பேசப் படும் திரைப்படமாக விளங்குவது’’ என்பார் திரு.காந்தி கண்ண தாசன்.

கதை மாற்றங்கள்

1. தாழ்ந்த குலத்தைச் சேர்ந்த வீரன் ஒருவன் மன்னரது மகளைக் கடத்திச் சென்று மணந்தான் என்றவாறு 1956-ல் கண்ணதாசன் கதை எழுதியிருந்தார். ஆனாலும் காட்டில் கண்டெடுத்த அப்பிள்ளைக்குத் தெய்வீக வரம், சக்தியாக இருக்கிறது என்பதையும் அந்தப் பிள்ளையும் ஒரு வழியில் ராஜவாரிசுதான் என்பதையும் கவிஞர் கதையாக அளந்திருந்தார் என்பார் முனைவர் ஆர்.கே. அழகேசன் (வெற்றித் திரைப்படங்கள் 100 -மி, ப. 199)

2. மனைவியும் காதலியும் கண்ணகிபோல மாறி மாறிப் பேச, அரசன் செய்தது குற்றமென்று அசரீரி சொல்ல, குடிகேடிகளை அரசன் கொல்லப்போக, ஏசுநாதர்போல, "இன்னதென அறிகிலர் இவர் செய்த பிழையை மன்னா மன்னியுங்கள்' என்று வீரன் கூறி மாண்டு போக, தேவ லோகத்திற்கு தேவியர் இருவர் சூழ வீரனை தேவகன்னிகள் அழைத்துச் செல்ல, படம் சுபத்தில் முடிந்ததாகக் கதையைக் கட்டியிருந்தார் கண்ண தாசன் (ப.202)

3. எம்.ஜி.ஆர். ஒரு சில படங் களில்தான் இறந்ததுண்டு. அப்படி அமைப்பதை எம்.ஜி.ஆரும் ஏற்க வில்லை. மக்களும் விரும்ப மாட்டார்கள். எனவே கதை, துன்பத் தில் முடியா வண்ணம் உருவாக் கினர். ஆகவே வீரன் இறந்த பிறகு சொர்க்கலோகம் போனதாகக் காட்சியை அமைத்து வசூலிலும் தயாரிப்பாளர்கள் வெற்றி கண்டனர்.

4. இளவரசி பொம்மி, தன்னை ஆற்றுவெள்ளத்திலிருந்து மீட்ட வீரனை விரும்பினாள். இருவரது காதலையும் தளபதி நரசப்பன் கெடுக்க முனைந்து விஜயரங்க சொக்கநாத மன்னரிடம் குற்றஞ் சுமத்தினான்.

5. திருமலை மன்னன் வெள்ளையம்மாளைக் கெடுக்க நினைக்க வீரன் அவளைக் காப்பாற் றுகிறான். மன்னனோ வெள்ளையம் மாளைச் சிறை எடுத்தான். வீரன் வீட்டில் திருட்டுச் சொத்து இருந்தது, திருடர் தலைவனுக்கும் வீரனுக்கும் உறவுண்டு எனக் குற்றம் சாட்டி மாறுகால் மாறுகை வாங்கி விட்டான்.

6. காசிநாட்டினை வாரணாசி பாளையம் என்று கூறும் செயதுங் கராசன், பரராசவேந்தன், நாரா யணன், குணசேகர மகாராசன் என்று பிற ஊடகங்கள் கூற திரைப் படத்தில் காசி மன்னனை துளசி மகராசன் என்றே குறிப்பிடும்.

7. வீரன் ஆற்று வெள்ளத்தில் சிக்கிய நிலையில் பொம்மியை காப் பாற்றுதல், வீரன் மானைத் தேடி வேட் டையாடி வருதல், வீரன் குடியிருக்கும் சேரிக்கு அவனது உடல்நலம் விசாரிக்கப் பொம்மி வருதல், வீரன் பொம்மிக்கு ஆபத்தான நேரத்தில் பெரியவர் ஒருவர் உதவுதல், திருமலை வெள்ளையம்மாளிடம் தன் காதலை வெளிப்படுத்தல், வீரன் விட்டுச் சென்ற விருது அடை யாளத்தைப் பொம்மியிடம், வெள்ளையம்மாள் வந்து கொடுத்தல், பொம்மி கோபம் கொள்ள வீரன் அவளைச் சமாதானப்படுத்துதல், குடிலன் முனிவர் வேடம் தரித்து பொம்மியிடம் வீரன் - வெள்ளை காதலை வெளிப்படுத்தல் போன்றவை திரைப்படத்துக்கே உரியன.

8. குற்றவாளிகளைப் புகழும் கதைப்பாடல்கள் (இஹப்ப்ஹக்ள் ஏப்ர்ழ்ண்க்ஷஹ்ண்ய்ஞ் ஈழ்ண்ம்ண்ய்ஹப்) என்று மதுரை வீரன் கதைப்பாடல்களைப் பற்றி மு.அருணாசலம் குறிப்பிடுகிறார் (இஹப்ப்ஹக் ல்ர்ங்ற்ழ்ஹ்). எனினும் திரைப் படம் எம்.ஜி.ஆரை மட்டுமன்று மதுரைவீரனையும் மக்கள் திலகம் ஆக்கிற்று. வீரனை சுத்த வீரதீர பராக்கிரமனாகக் காட்டிற்று.

9. திரைப்படத்தின் பாதிப் பினை, வாய்மொழி கதைப் பாடல் மற்றும் வானொலி வடிவ நாடகத்தில் காணமுடிகிறது. திரைப் படமானது உடைமை வர்க்கத்தி னருக்கும் உழைக்கும் வர்க்கத்தி னருக்கும் உயர்சாதிக்கும் தாழ்த்தப் பட்டவர்களுக்கும் இடையே தோன்றிய முரண்பாடுகளையும் போராட்டங்களையும் வெளிப் படுத்துகிறது. கீழ்சாதிக்காரர்கள் தங்களது வலிமை, திறன், ஆற்றல் ஆகியவற்றால் மக்களிடையே செல்வாக்கு பெற்றால் அவனால் தங்களது பதவிக்கும் செல்வாக் குக்கும் ஆபத்து வந்துவிடக் கூடா தென்று எண்ணி அவனை ஒழித்து விடுவதற்குப் பல முயற்சிகள் செய்துள்ளனர் என்பதைத் திரைப் படம் மறைமுகமாக வெளிப்படுத்து கிறது எனலாம். அதே சமயம் திருமலை மன்னரின் களங்கத்தைத் துடைத்துச் சமநிலை தேட முயன்றுள்ளது.

10. திரைப்படம் எடுக்கப்பட்ட காலம் பழமையான கருத்தை எதிர்த்துப் புதிய கருத்துகள், குறிப் பாக திராவிட முன்னேற்றக் கழகம் உருவான காலம். எனவே, இயக்கக் கருத்தியல்களைப் பிரச்சாரம் செய்தனர். எம்.ஜி.ஆரின் ஆளுமை பாதிக்கப்படாதவாறு மாறுகால், மாறுகை வாங்கப்பட்டதை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்களோ எனத் தயங்கி, அனுதாபமாக மாற்றியிருப்பார்கள். மதுரைவீரன் வெற்றியைத் தொடர்ந்து எம்.ஜி.ஆருக்கு ஊர்தோறும் ரசிகர் மன்றங்கள் தோற்றுவிக்கப்பட்டன. ஏற்கனவே மிக வேகமாக வளர்ந்து கொண்டிருந்த தி.மு.கழகத்தில் சக்திவாய்ந்த தலைவராக உருவாகத் தொடங்கினார். எம்.ஜி.ஆர். வசூல் சக்கரவர்த்தி ஆனார். மதுரைவீரனும் திராவிட இயக்கமும் கண்ணதாசன் திரைக்கதை உரை யாடல் எழுதி ஓகோவென்று ஓடிய படம் மதுரைவீரன். இந்தப் படம் வசூலை வாரிக் குவித்தது மட்டு மல்ல படத்தின் கதாநாயகனையே தமிழ்நாட்டின் மாவீரனாக்கி விட்டது. தமிழகமெங்கும் விழாக்கள் நடைபெற்றன. 1956-ல் வெளிவந் தபோது நெரிசலில் மிதிபட்டு மரணத்தைத் தழுவிக்கொண்ட தமிழர்களும் உண்டு.

தமிழகத்தின் சிறு தெய்வ வழிபாட்டில் கற்பனையான- மனிதனான மதுரைவீரன் கடவுளாக் கப்பட்டுவிட்டான் என்பது பல வியப்புகளில் ஒன்றாகும். வரலாற்றுச் சான்றின்படி தமிழ்நாட்டில் அத்தகைய மனிதன் ஒருவன் வாழ வில்லை. இருப்பினும் ஒரு கதை பின்னப்பட்டு மதுரைவீரன் தென்தமிழ்நாட்டில் வாழ்ந்ததாகக் கூறுவதோடு பாடல்களையும் புனைந்து பாடி வருகிறார்கள். அந்தக் கதையைச் சற்று நவீனமாக்கித் திரைக்கதை அமைத்து மக்கள் பார்க் கும்படி, இரசிக்கும்படி செய்தார் கவிஞர் என்பார் அருணன்.

இப்படம் வெளிவந்த நாள்களில் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆரும் கவிஞர் கண்ணதாசனும் தி.மு.க.வில் உறுப்பினர்கள். தி.மு.கழகம் சமூகச் சீர்திருத்த இயக்கமாகவும் பகுத்தறிவு இயக்கமாகவும் இருந்துவந்ததால் அது சார்ந்த கருத்துகளைத் திரைப் பட பாடல்கள் மூலமாகவும் உரை யாடல்களின் மூலமாகவும் மக்களுக்கு எடுத்துச்சொல்லுவது வழக்கமாக இருந்துவந்தது. கதையின் வீர சாகசம், நடிப்பு, பாட்டு இவை மக்களிடையே ஊடுருவிப் பாய்ந்து நின்றுவிட்டன. கலைஞர் தமது பேனா வன்மையால் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆரை மலைக்கள்ளன் வரை நகர்த்தினார். கவிஞர் கண்ணதா சனின் எழுத்துக்களும் பாடல்களும் எம்.ஜி.ஆரை மேலும் உயர்த்தக் காரணமாயின. இறுதிக் காட்சியில், மதுரை வீரனின் மாறுகை, மாறுகால் வாங்கப் பட்டு உயிர் பிரிந்துவிடுகிறது. அப்போது அவர் இறைவனாகி மேலுலகம் செல்லுகிறார். இக்காட்சி திரையில் காட்டப்படும்போது, "கடமையிலே உயிர்வாழ்ந்து, கண்ணியமே கொள்கையென மடிந்த மதுரைவீரா' என்ற பாடல் ஒலித்தது. மதுரைவீரன் மேலுலகம் செல்லு கிற காட்சியில் எம்.ஜி.ஆருக்குப் பதிலாக டூப் போட்டு படம் எடுத் தனர். ஏனென்றால் படம் வெளிவந்த காலகட்டத்தில் மேலுலகம் போன்றவற்றில் தி.மு. கழகத்தினர் நம்பிக்கை இல்லாதவர்களாக இருந்தார்கள். சிவாஜிகணேசன் திருப்பதிக்குச் சென்று சாமி கும்பிட்டு வந்தார். அந்தக் காலத்தில் தி.மு.க தலைவர்கள் கோவிலுக்குப் போவதில்லை. ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்று அண்ணா நாத்திகவாதத்தை கைவிட்டிருந்தாலும் கோவிலுக்குப் போவதில்லை. பிள்ளையாரையும் உடைக்கமாட்டோம். பிள்ளையாருக் குத் தேங்காயும் உடைக்க மாட் டோம் என்று பேசி வந்த காலமது. அந்த நிலையில் சிவாஜி திருப்பதிக்குப் போனது சலசலப்பை ஏற்படுத்தியது கலைஞரும் சிவாஜியும் ஒன்றுசேர்ந்து கொண் டார்கள். எம்.ஜி.ஆர். என்னை அழைத்தார். ‘தன்னுடைய படங்களுக்கு எல்லாம் நான்தான் எழுதவேண்டும்’ என்றார்.

சிவாஜி எதிரி ஆனதால் தான் இப்படியொரு சந்தர்ப் பம் கிடைத்தது என்று நானும் மகிழ்ச்சியடைந்தேன். அப்பொழுது எம்.ஜி.ஆர் நடித்த ‘மதுரைவீரன்’ படத்துக்கு மட்டும்தான் வசனம் எழுதிக்கொண்டு இருந்தேன். அந்தப் படத்துடன் வேறு சில படங்களுக்கும் எம்.ஜி.ஆர் சிபாரிசு செய்தார்' என்று எழுதியிருக் கிறார் கண்ணதாசன்.

1956-ல் ‘மதுரைவீரன்’ வந்து விட்டான். எம்.ஜி.ஆருக்கே கிராமப் புற மக்கள் நெஞ்சில் நீங்கா இடம் பெற நல்ல வாய்ப்பு கிடைத்தது. மதுரைவீரன் தலித் மக்கள் மத்தி யிலிருந்து தோன்றிய தலைவன்.

மதுரைவீரனாக எம்.ஜி.ஆர். தோன்றவும் தங்களின் தற்கால நாயகன் இவனே என்று அந்த மக்கள் நம்பத் தலைப்பட்டார்கள்.

எம்.ஜி.ஆரின் சினிமா மற்றும் அரசியல் வெற்றிக்கு அடித் தளம் போட்டுத் தந்த படம். அடுத்த மாதமே தி.மு.க.வின் இரண்டாவது மாநில மாநாடு திருச்சியில் நடை பெற்றபோது அதில் எம்.ஜி.ஆர். பங்கேற்றார். அவரை வீரனாகவே பார்த்திருப்பார்கள் தி.மு.க. தொண்டர்கள். 1957-ல் நடக்கவிருந்த தேர்தலில் பங்கேற்பது என்று தி.மு.க முடிவுசெய்தது. சினிமா கலைஞர் களைத் தேர்தல் பிரச்சாரத்திற்கு அழைத்தார் அண்ணா என்பார் அருளன் (எம்.ஜி.ஆர். -நடிகர் முதல் வரானது எப்படி?)

தி.மு.க.வின் புரட்சி நடிகரான எம்.ஜி.ஆர். சாமியாகி தேவ லோகம் செல்லும் காட்சியில் நடிக்கமாட்டேன் என்று மறுத்து விட்டார். தயாரிப்பாளரோ, “இந்தக் காட்சிதான் முக்கியமானது.

‘டூப்ளிகேட்’ போட்டு காட்சியை எடுத்து விடட்டுமா?’’ என்று கேட்டார். நம்ம வீரனும் படம், வெற்றி, பணம், வருவாய் போன்றவற்றை எண்ணிப் பார்த்து சம்மதித்து விட்டார்.

படம் ரிலீசாவதற்கு முன் மீண்டும் அதிபர் லேனா செட்டியாருக்கும் எம்.ஜி.ஆருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. உடுமலை நாராயண கவி எழுதிய, பாற்கடல் அலைமேலே பாம்ப ணையின் மேலே பள்ளிகொண்டாய் ரங்கநாதா - உந்தன் பதமலர் நிழல்தேடி பரவசமோடு பாடிக் கதிபெறவே ஞானம் நீதா வேதா.

என்ற பாடலை எம்.எல்.வசந்த குமாரி பாட பத்மினி நடனம் ஆடியி ருந்தார். தி.மு.கழகத்தில் சேர்ந்து விட்ட காரணத்தால் இப்பாடல் தன் கொள்கைக்கு முரண்பட்டது என்று எம்.ஜி.ஆர். கருதினார். எனவே, பாடல் காட்சியை நீக்கிவிடும்படி பட அதிபரிடம் எம்.ஜி.ஆர். வற்புறுத் தினார். பாடலைவிட, பத்மினியின் நடனம் அருமையாக அமைந் திருந்தது. அதை நீக்கிவிட பட அதிபர் லேனா செட்டியாருக்கு மனமில்லை. எம்.ஜி.ஆர். எதிர்ப்பையும் மீறி படத்தை வெளியிடவும் விரும் பவில்லை. எனவே, அவர் ஒரு யுக்தி செய்தார். நடன காடசியை மட்டும் தனியாக வெட்டி எடுத்தார். தனியாக சென்சார் சர்டிபிகேட் வாங்கினார். இடைவேளை முடிந்ததும் தனியாக இந்த நடனத்தைத் திரையிட்டு, நிலைமையைச் சாமர்த்தியமாகச் சமாளித் தாராம். (தமிழ் சினிமா வரலாறு - மி, ப. 230)

பகுத்தறிவு கருத்துக்கு ஆட்பட்டு எம்.ஜி.ஆர். நடிக் கமறுத்த செய்தி அந்நாள் களில் மக்களால் பெரிதும் பேசப்பட்டது. எம்.ஜி.ஆர். மாபெரும் புரட்சிக்கார ராக மதிக்கப்பட்டார்.

மதுரைவீரன் கதை ஏற்புடையதா என்றுகூட மக்கள் பார்க்கவில்லை. தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள் படத்தோடு தொடர்பு உடையவர்களாக இருக்கிறார்கள் என்பதை அறிந்துகொண்ட மக்கள் மதுரைவீரனுக்கு ஆதரவு அளித் தார்கள். இப்படத்தின் உரையாடல் புத்தகங்கள் ஆயிரக்கணக்கில் விற்ப னையாகின. போலிப் பதிப்பகங் களும் அச்சிட்டு இப்புத்தகங் களை விற்பனை செய்தன. இது குறித்து கவிஞர் பத்திரிகை களில் விளம்பரம் செய்யும் அளவிற்கு போலிப் பதிப்பகங்களின் புத்தக விற்பனை அதிகமாயின என்பார் திருநாவுக்கரசு. (திராவிட இயக்கமும் திரைப்பட உலகமும், ப.151-154)

தற்போது தி.நகர் தணிகாசலம் செட்டித் தெருவில் இருக்கும் கிருஷ்ணன் கோவில்தான் படநி றுவன ஆபீஸ். அங்கு இருந்த ப்ரீவியூ தியேட்டரில் எம்.ஜி.ஆர். அமர்ந்திருந் தார். உடுமலை நாராயணகவியும் லேனா செட்டியாரும் வந்து மதுரை வீரன் கடவுளாகும் காட்சியை எடுக்கவேண்டுமே என்று கேட்க, எம்.ஜிஆர்., "எனக்கு ஒன்றும் ஆட்சேப னையில்லை. ஆனால் அதில் நான் நடித்தால் கெட்ட பெயர் வந்து விடும். நீங்கள் டூப் போட்டு எடுத்துவிடுங்கள்' என்றார். மறுநாள் பரணி ஸ்டுடியோவில் அக்காட்சி படமாக்கப்பட்டது. எம்.ஜி.ஆர். அதை ஏற்றுக்கொண்டார்’’ என்பார் முக்தா வி.சீனிவாசன் (தமிழ்த் திரைப்பட வரலாறு, ப.111-112) முதலமைச்சர் வீரன் தளப தியாக பதவி ஏற்கும் விழாவில், "கடமை கண்ணியம் கட்டுப்பாடு ஆகியவற்றை அடிப்படையாகக்கொண்டு இந்தச் சோழ மண்டலத்தை நீ காப்பாற்றுவாயாக!' என்று கூறி வீரவாள் வழங்குகிறார். பட வெற்றி விழாவிலும் வீரவாளை எம்.ஜி.ஆர். பெற்றார். நிழலை நிஜமாக்கியது திராவிட இயக்கம். சாதி என்பது மனிதன் வகுத்த அநீதி. அதை மாற்றிக் கொள்வதுதான் நீதி. பொம்மிக்கு நட்சத்திர தோஷம் இருப்பதாகச் சொல்கிறார்.

நட்சத்திரத்திற்குத் தானே மாமா தோஷம். பொம்மிக்குத் தோஷமில்லையே. போன்றவை சீர்திருத்த உணர்வுகளுடன் கண்ண தாசன் உரையாடல்களை எழுதினார். என்றாலும் கதை முடிவில் அசரீரி பேசி அரசன் மனம் மாறி யதாக அமைத்தது ஆச்சர்யமே. காரணம் எம்.ஜி.ஆர். இறுதியில் இறந்ததாகப் படம் முடிந்தால் படம் வெற்றி பெறாது. எனவேதான் இந்த பகுத்தறிவுக் கொள்கைக்கும் மீறிய செயலாகும்.

தமிழ்த்திரை உலகின் முதல் வண்ணப்படமான "அலிபாபாவும் 40 திருடர்களும்' திரைப்படமும், அதைத் தொடர்ந்த வெளியான "மதுரை வீரனும்' எம்.ஜி.ஆர் ரசிகர்கள் என்றும் மறக்கமுடியாத திரைக்காவியங்கள் - எம்.ஜி.ஆரைப் புகழேணி யில் உச்சிக்குக் கொண்டு சென்ற கலை ஓவியங்கள். 1956-ஆம் ஆண்டு வெளிவந்த ‘மதுரைவீரன்’ ஒரு கோடி ரூபாய்க்கும் மேலாக வசூல் செய்த முதல் தமிழ்த் திரைப்படம் என்ற பெருமையைப் பெற்றது. தாழ்த்தப்பட்ட ஓர் இனத்தின் அருமை பெருமைகளை உயர்த்திக்காட்டிய ‘மதுரைவீரன்’ படமே கண்ணதாசனது திரையுலக வாழ்க்கையில் முதல்வெற்றிப் படமாக அமைந்தது, என்பார் சித்ரா லட்சுமணன். (80 ஆண்டுகால தமிழ் சினிமா 1831-2011, ப.508)

இறுதிக் காட்சியில் சின்னானோ, "என் மகன் செத்தும் சாகாத நிலையை அடைஞ்சிட்டானே! இதோ பாரு நாட்டுக்கு உழைக்கிற நல்லவங் களைத்தான் இப்படி எல்லாரும் வணங்குவாங்க. பாரு ராஜா கூட வணங்குறாரு.. எல்லாரும் வீரனை வணங்குறாங்க... பாத்தியா.. நீயும் மனசைத் தேத்திக்க...' என்று கூறி அனைவரும் சிலைகள்மீது பூ தூவுகின்றனர். படத்தின் இறுதிக் காட்சியில் மதுரைவீரன் மட்டுமன்று எம்.ஜி.ஆரும் தெய்வமாகி விடுகிறார்.

தமிழக மக்களின் தலைவராகி முதல்வராகி இரத்தத்தின் இரத்தமாகி, இறுதியில் இதய தெய்வம் ஆகிவிட்டார்.

வில்லன்களை விரட்டி விரட்டி அடித்தவர்கள்; புல்லர்களைப் புரட்டிப் புரட்டி அடித்தவர்கள். இருவரும் வீரர்கள், தீரர்கள். பெண்களை ஈர்த்தவர்கள், பெண்தெய்வங்களின் காவல் தெய்வங் களாய் காத்தவர்கள். ஒருவர் மதுரைவீரன்.

இன்னொருவர் மதுரையை மீட்டவர்.