Advertisment

பாலையின் இதயம் ஹூவர் அணை! (4) - பிரேமா இரவிச்சந்திரன்

/idhalgal/eniya-utayam/heart-desert-hoover-dam-4-prema-ravichandran

ரிசோனாவில் அதிகாலை சூரியன் உதயமாவதைக் காணும் முன்பே அண்டை மாகாணமான நவேடாவின் நகரம் லாஸ் வேகாஸ் செல்ல திட்டமிட்டு இருவழிச் சாலையில் சென்றுகொண்டிருந்தோம். பயண விதிகளைச் சற்றும் பிறழாமல் மதிக்கும் வாகன ஓட்டிகள், சாலையின் குறுக்கே கடப்பதற்காக ஒரு வாகனம்கூட காத்திருக்கவில்லை என்றாலும் கூட, போக்குவரத்தைக் கட்டுப்படுத்தும் தானியங்கி விளக்குகளின் வண்ணங்கள் அறிவிக்கும் விதிகளை பெரிதும் மதிக்கிறார்கள். சிவப்பு விளக்கு பழுதாகி அணையாமல் ஐந்து நிமிடங்கள் எரிந்துகொண்டிருந்தாலும் மிக நீண்ட வரிசையில் காத்திருக்கும் அவர்கள் பொறுமை காக்கிறார்கள்.

ஜன்னலோரக் காட்சிகள் புதுமையான வாகனங்களைக் காண வைத்தன. அரிசோனா வின் பிப்ரவரி மாதத்தின் இதமான குளிர் வெப்பநிலை, ஒரு சிலரை மட்டுமாவது இருசக்கர வாகனத் தில் பயணிக்க வைத்துவிடுகிறது. முன்புறம் இரு சக்கரங் களைக் கொண்டு, பழைய அம்பாசிடர் கார்கள் கொண்டிருந்த வடிவத்தில் பேனட் அமைந்து, பின்புறம் ஒரு சக்கரம் கொண்ட மூன்று சக்கர மோட்டார் வண்டியில் ஒரே ஒருவர் மட்டும் திறந்தவெளியாக அமர்ந்து சென்ற காட்சி கண்களுக்கு வியப்பைக் கொடுத்தது. தனித்துவமான அடையாளமில்லாமல் சாலையோடு பதிந்த மெலிதான ரயில் பாதைகளில் மூன்று அல்லது நான்கு பெட்டிகளைக் கொண்ட ரயில்கள், பேருந்துகளுக்கு இணையாக ஒரே நேரத்தில் அருகருகே பயணிக்கின்றன. அவை சாலையின் குறுக்கே கடக்கும் நிமிடங்களில் சிவப்பு விளக்கு எரிந்து எச்சரிக்கை செய்யும்போது பேருந்துகளை நிறுத்திக்கொள்கிறார்கள்.

Advertisment

das

பாலை நிலத்தில் வளரும் வனங்களே, சாலையின் இருபுறமும் நீண்ட தொலைவு வரை காட்சிகளாகின்றன. ஆண்டுக்கு சுமார் 12 செ.மீ. மழை பெறுகின்ற இந்நிலத்தில் ஜோசுவா மரக்காடுகளின் அழகியக் காட்சியை காணவிருக்கிறோம் என்பதை சாலையோர அறிவிப்புப் பலகை முன்கூட்டியே நமக்கு தெரிவித்து விடுகிறது. நூற்றுக்கணக்கான ஆண்டுகள் வாழும் இம்மரத்தின் ஒவ்வொரு கிளைகளும் ஆயிரக்கணக்கான சிறு இழைகளைக் கொண்டிருக்கின்றன. அதன் கூரிய முட்களானது, பெய்யும் மழைத் துளிகளுக்கு வழிப்பாதை யாக அமைந்து, நீரை தன் வேருக்கு வரவழைத்துக் கொள்கிறது. விதையிலிருந்து முளைக்கும் முதல் 10 ஆண்டுகளில் இம்மரங்கள் ஒவ்வொரு ஆண்டும் 3 செ.மீ வரை வளர்கின்றன. அதன் பிறகு ஆண்டுதோறும் 1.5 செ.மீ உயரம் வளர்ந்து அதிக பட்சமாக 50 அடிகளை எட்டுகின்றன. தண்டுகள் தண்ணீரால் நிரம்பி எளிதில் உடைந்துவிடும்படி உறுதித்தன்மையற்றவை. பரவலாக வளரும் இதன் வேர்களும் ஆழமற்றவை. தனது அருகே மற்றொரு மரத்தை வளரவிடாமல் தனித்து பிழைக்கும்படி சில அடி நிலங்களை பிடித்துக்கொள்கின்றன. சரிய

ரிசோனாவில் அதிகாலை சூரியன் உதயமாவதைக் காணும் முன்பே அண்டை மாகாணமான நவேடாவின் நகரம் லாஸ் வேகாஸ் செல்ல திட்டமிட்டு இருவழிச் சாலையில் சென்றுகொண்டிருந்தோம். பயண விதிகளைச் சற்றும் பிறழாமல் மதிக்கும் வாகன ஓட்டிகள், சாலையின் குறுக்கே கடப்பதற்காக ஒரு வாகனம்கூட காத்திருக்கவில்லை என்றாலும் கூட, போக்குவரத்தைக் கட்டுப்படுத்தும் தானியங்கி விளக்குகளின் வண்ணங்கள் அறிவிக்கும் விதிகளை பெரிதும் மதிக்கிறார்கள். சிவப்பு விளக்கு பழுதாகி அணையாமல் ஐந்து நிமிடங்கள் எரிந்துகொண்டிருந்தாலும் மிக நீண்ட வரிசையில் காத்திருக்கும் அவர்கள் பொறுமை காக்கிறார்கள்.

ஜன்னலோரக் காட்சிகள் புதுமையான வாகனங்களைக் காண வைத்தன. அரிசோனா வின் பிப்ரவரி மாதத்தின் இதமான குளிர் வெப்பநிலை, ஒரு சிலரை மட்டுமாவது இருசக்கர வாகனத் தில் பயணிக்க வைத்துவிடுகிறது. முன்புறம் இரு சக்கரங் களைக் கொண்டு, பழைய அம்பாசிடர் கார்கள் கொண்டிருந்த வடிவத்தில் பேனட் அமைந்து, பின்புறம் ஒரு சக்கரம் கொண்ட மூன்று சக்கர மோட்டார் வண்டியில் ஒரே ஒருவர் மட்டும் திறந்தவெளியாக அமர்ந்து சென்ற காட்சி கண்களுக்கு வியப்பைக் கொடுத்தது. தனித்துவமான அடையாளமில்லாமல் சாலையோடு பதிந்த மெலிதான ரயில் பாதைகளில் மூன்று அல்லது நான்கு பெட்டிகளைக் கொண்ட ரயில்கள், பேருந்துகளுக்கு இணையாக ஒரே நேரத்தில் அருகருகே பயணிக்கின்றன. அவை சாலையின் குறுக்கே கடக்கும் நிமிடங்களில் சிவப்பு விளக்கு எரிந்து எச்சரிக்கை செய்யும்போது பேருந்துகளை நிறுத்திக்கொள்கிறார்கள்.

Advertisment

das

பாலை நிலத்தில் வளரும் வனங்களே, சாலையின் இருபுறமும் நீண்ட தொலைவு வரை காட்சிகளாகின்றன. ஆண்டுக்கு சுமார் 12 செ.மீ. மழை பெறுகின்ற இந்நிலத்தில் ஜோசுவா மரக்காடுகளின் அழகியக் காட்சியை காணவிருக்கிறோம் என்பதை சாலையோர அறிவிப்புப் பலகை முன்கூட்டியே நமக்கு தெரிவித்து விடுகிறது. நூற்றுக்கணக்கான ஆண்டுகள் வாழும் இம்மரத்தின் ஒவ்வொரு கிளைகளும் ஆயிரக்கணக்கான சிறு இழைகளைக் கொண்டிருக்கின்றன. அதன் கூரிய முட்களானது, பெய்யும் மழைத் துளிகளுக்கு வழிப்பாதை யாக அமைந்து, நீரை தன் வேருக்கு வரவழைத்துக் கொள்கிறது. விதையிலிருந்து முளைக்கும் முதல் 10 ஆண்டுகளில் இம்மரங்கள் ஒவ்வொரு ஆண்டும் 3 செ.மீ வரை வளர்கின்றன. அதன் பிறகு ஆண்டுதோறும் 1.5 செ.மீ உயரம் வளர்ந்து அதிக பட்சமாக 50 அடிகளை எட்டுகின்றன. தண்டுகள் தண்ணீரால் நிரம்பி எளிதில் உடைந்துவிடும்படி உறுதித்தன்மையற்றவை. பரவலாக வளரும் இதன் வேர்களும் ஆழமற்றவை. தனது அருகே மற்றொரு மரத்தை வளரவிடாமல் தனித்து பிழைக்கும்படி சில அடி நிலங்களை பிடித்துக்கொள்கின்றன. சரியாக மழை பொழியும் காலங்களில் கிளைகள் பிரிந்து அதில் பூக்கள் பூக்கின்றன. குளிர் காலங்களில் 10 டிகிரி சென்டிகிரேடுக்கும் குறைவான வெப்பநிலையையும் இந்த மரங்கள் சந்திக்க வேண்டியுள்ளதால், பூக்களை மெழுகு போன்ற மேற்பரப்பு காத்துக்கொள்கிறது. பழுத்த பழங்கள் மூன்று மாதங்கள் வரை மரத்தில் இருக்கின்றன. இரவு நேரங்களில் வண்டுகள் மொய்ப்பதும், பூக்களை நாடி பறவைகள் வருவதும், இதன் அழுகிய கிளைகள் கீழே விழுந்து அதன் ஈரத்தில் பல்லிகள் வாழ்வதும் வறண்ட நிலத்தின் வாழ்க்கையாக உள்ளன.

வந்த வழியில் ஒரு சில மாடுகளைத் தவிர வேறு உயிர்களை நாங்கள் காணவில்லை. பெரிய கொம்புகளைக் கொண்ட ஆடுகள் முக்கிய சாலைகளைக் கடக்கும்பொழுது அடிபடாமல் இருக்க இருபுறமும் உயரமான சுவர்களை எழுப்பி யிருக்கிறார்கள். கட்டடங்களின் சுவர்களில் பல்லிகளையும் பாம்புகளையும் விருப்பமாக வரைந்து வைத்திருப்பதில், இவ்வுயிரிகள் இங்கு முக்கியத்துவமாக இருப் பதை அறிய முடிகிறது. இங்குள்ள மரங்களை தகர்த்தாலோ சேதம் விளைவித் தாலோ சட்டப்படி குற்றமென நடவடிக்கை எடுக்கிறார்கள்.

Advertisment

இப்படியான பயணத்தில் பரந்த வானில் உதயமான சூரியன் விரித்த கதிர்கள், கிழக்கு வானம் முழுவதும் விரவியிருந்ததையும், எதிர்ப்புறத்தில் எதிரொளித்ததையும் 360 டிகிரி கோணத்தில் வழிதோறும் காணமுடிந்தது. கான்கிரீட்டு களால் மூடி மறைக்காத பெரிய தோற்றமுடைய சூரியனின் ஒளியானது, நமது கண்களைக் கூசுவதையும் கடந்து, பகல் பொழுது அழகாகத் தெரிந்தது. நான்கு மணி நேரப் பயணத்தில் இடதுபுற ஜன்னலின் காட்சிகளாக பனிப்போர்வையால் மூடிய மலைமுகடுகளையும், வலப்புற ஜன்னலில் பெரும் பாறைகளாலான மலைகளையும் பாலைவனத்தின் கள்ளிச்செடிகளையும் ஒருசேரக் கண்டோம். அரிசோனா - நவேடா மாகாண எல்லை யில் அமைந்திருக்கும் ஹூவர் அணையை, மாகாண எல்லைக்கோடுகள் நேர்கோடாகப் பிரித்திருந்த இடத்தில் இறங்கினோம். விடியலின் சூரியக் கதிர்களையும், உடல் நடுங்கும் குளிரையும் ஒரே சமயத்தில் உணர்ந்தோம். 20% ஈரப்பதத்தில் காற்றின் வறட்சியைத் தாங்குவதற்கு ஏற்ற கவசங்கள் (ள்ன்ய்ஞ்ப்ஹள்ள், ள்ன்ய்ள்ஸ்ரீழ்ங்ங்ய் ப்ர்ற்ண்ர்ய், ப்ண்ல் க்ஷஹப்ம், த்ங்ழ்ந்ண்ய் ங்ஷ்ற்ழ்ஹ) எங்களிடமிருந்தன. இந்த இடத்தில் ஐந்தாறு சிட்டுக்குருவிகளைக் கண்டு மகிழ்ந்தோம். வளமான இந்திய நாட்டில் இக்குருவிகள் ஏன் மறைந்தன என்பதற்கு நாம் கொடுக்கும் காரணங்களை ஏற்க முடியவில்லை.

காரை நிறுத்துவதற்கு நவேடா பகுதியில் பத்து டாலர் கட்டணமும், அரிசோனா பகுதியில் இலவசமென்றும் இருந்ததால் வசதியானதை பயன்படுத்திக் கொண்டோம். வெகு அருகில் எதிரெதிரே அமைந்திருந்த இரு மாகாணங்களின் மணிக்கூண்டுகள் ஒரு மணி நேர வேறுபாட்டில் வெவ்வேறு நேரத்தைக் காட்டின. இணையத்தோடு இணைந்திருந்த எங்களது கைக்கடிகாரம் ஒரு நிமிட நடைப் பயணத்தில் நவேடாவில் ஒரு மணி நேரத்தை குறைவாகக் காட்டியது புதிய அனுபவமாக இருந்தது. பகல் நேர சேமிப்பிற்காக (க்ஹஹ்ப்ண்ஞ்ட்ற் ள்ஹஸ்ண்ய்ஞ்) கடிகாரத்தை ஒரு மணி நேரம் மாற்றியமைக்கும் ஆண்டின் ஆறு மாதங்களில் மட்டும் இங்கு நேர வேறுபாடு இருக்கிறது.

அனுமதிச்சீட்டுகளை பெறுவதற்கு முன்பு பார்வையாளர்களது வாகனங்கள் வெகுவாக பரிசோதிக்கப்பட்டன. வெடிபொருள்களோ, துப்பாக்கிகளோ, உயிரைக் கொல்லும் ஆயுதங்களோ, உணவுப் பொருள்களோ இல்லையென்பதை உறுதி செய்த பின்னரே எங்களை அனுமதித்தார்கள். இப்பகுதி யின் இதயமாக இவ்விடம் பாதுகாக்கப்படுகிறது. வரும் பார்வையாளர்கள் தங்களது எந்த அடையாளங்களையும் அங்கு விட்டுச் செல்லக்கூடாது என்பதில் பாதுகாவலர்கள் கவனமாக இருக்கிறார்கள். இங்கு மட்டுமல்லாமல் தேசிய மயமாக்கப்பட்ட பூங்காக் களிலும், மாகாணங்களின் பராமரிப்பில் இருக்கும் இயற்கை வாழ்விடங்கள் யாவற்றிலும் இதுவே எதிர் பார்க்கப்படுகிறது. எங்களை மிரள வைக்கும்படி சீருடைக் காவலர்கள் உலோக சோதிப் பானைக் (ம்ங்ற்ஹப் க்ங்ற்ங்ஸ்ரீற்ர்ழ்) கொண்டு எங்களையும் எங்களது பொருள்களையும், சோதனையிட்டதால் நாங்கள் காணவிருக்கின்ற அணையின் மீதான எதிர்பார்ப்பும் ஆர்வமும் அதிகமானது.

இரண்டாம் உலகப் போர் நடந்தபோது ஹூவர் அணைக்கு கடுமையான பாதுகாப்புகளை விதித்திருக்கிறார்கள். அதுவே இன்றும் தொடர்கிறது. இதயமற்ற மனிதன் உயிரையிழந்து உடலாகி விடுவான் என்பதாக, இந்த அணை அழிக்கப்பட்டால் பாலைவனப் பிரதேசத்தில் மனித வாழ்வே அற்றுப் போகுமென்பது கண்கூடாகத் தெரிந்தது. அரிசோனா, நவேடா, யூட்டா, நியூ மெக்சிகோ, கொலராடோ, கலிபோர்னியா, மற்றும் வயோமிங் ஆகிய ஏழு மாகாணங்களும் ஹூவர் அணையால் பயன்பெறுகின்றன என்பதை எளிதாக சொல்லிவிட்டு கடந்துவிட முடியாது.

ss

அங்கு பதிந்திருந்த வரலாற்றுத் தகவல்கள் பிரமிக்க வைத்தன.

1930-ஆம் ஆண்டு ஆரம்பித்த அணைக் கட்டுமான வேலையை, ஒரு நாளில் மூன்று பிரிவுகளாகப் பிரித்து பணியாளர்களை வேலைக்கு அமர்த்தி, 24 மணி நேரமும் தொடர்ந்து இயங்கி, ஐந்து ஆண்டுகளில் நிறைவு செய்திருக்கிறார்கள். கான் கிரீட்டுகள் உறுதியாவதற்கு காலங்களை விரயமாக்கா மல் குளிர் நீரைப் பயன் படுத்தி விரைவாக வேலை நடந்திருக்கிறது. கொலராடோ, யூட்டா, வயோமிங் ஆகிய மாகாணங்களில் இருக்கும் மலைகளின் பனி உருகி ஓடுகின்ற கொலராடோ ஆற்றின் நீரானது கிளை களாகப் பிரிந்து பாறைகளை யும் மண்ணையும் அரித்து பல்வேறு கேன்யான்ங் களை (canyons)உருவாக்கி யிருக்கிறது. அந்நீரின் கிளைகளில் ஒன்று பாய்ந்தோடி உருவான பிளாக் கேன் யானின் நுழைவாயிலில் 726 அடி உயரம் கொண்ட சுவரை யெழுப்பி, கொலராடோ ஆற்றைத் தடுத்து நிறுத்தி அன்றைய ஆண்டான 1935 இல் உலகிலேயே மிக உயரமான அணையைக் கட்டிமுடித்திருக்கிறார் கள். இதனால் அப்பகுதியின் நிலப்பரப்பு உடனடி யாக மாற்றம்கொண்டு நீர் பள்ளத்தாக்குகள் படுகை களாக மாறின. தாழ்வான பகுதிகளில் வெள்ளம் நிரம்பி வறண்ட பாறைகளைக் கொண்ட இடங்கள் ஏரிக்கரைகளாக மாறின. 46 பில்லியன் கியூபிக் யார்ட் கொள்ளளவு கொண்ட மெட் ஏரியை (Lake Mead) நாட்டிலேயே மிகப் பெரியதானதாக மனித ஆற்றலால் உருவாக்கியிருக்கிறார்கள். கேன்யான்களை நிரப்புவதால் பிற ஏரிகளை விட அதிக அளவாக 500 அடி ஆழமும், மொத்தத்தில் 550 மைல் அளவு கரையையும் கொண்டு, கொலரோடோ ஆற்றில் திருப்பி விடப்பட்ட நீரோட்டத்தால் இவ்விடம் நிரம்புவதற்கு கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளை எடுத்துக்கொண்டது. இதனால் யு.எஸ்.ஏ. மற்றும் மெக்சிகோ நாடுகள் ஒரு மில்லியன் ஏக்கருக்கு மேல் பாசன வசதியைப் பெறுகின்றன. ஓராண்டில் 4.5 பில்லியன் கிலோ வாட் மின்சாரத்தை ஹூவர் அணையின் நீர்த்தேக்கத்தால் பெறுகிறார்கள். இதனால் 4 லட்சம் அமெரிக்கக் குடும்பங்கள் வாழ்கிறார்கள். மின் உற்பத்தி நிலையங்களை பார்வையிட நமது நாட்டில் பொது மக்களுக்கு அனுமதியில்லை எனும்போது இவர்கள் நம்மைக் கெடுபிடியாக சோதித்த பிறகு, உற்சாகமாக சுற்றிக் காண்பித்து விளக்கமளித்தார்கள். இப்பகுதியில் குளிர்கால விளைச்சலான 80% காய்கறிகளையும் பழங்களையும் இந்த அணை நீரைக் கொண்டு விளைவிக்கிறார்கள். விதவிதமான படகுகளோடு பொழுதுபோக்கு அம்சங்களையும் இந்த ஏரியில் ஏற்படுத்தியிருக்கிறார்கள். நவீன வசதிகளும் கேளிக்கைகளும் மிகுந்த லாஸ் வேகாஸ் மாகாணம் ஹூவர் அணை இல்லாமல் உருவாகியிருக்க முடியாது.

ஏரி உருவாவதற்கு முன்பு அங்கு பௌல்டர் மலையும் (boulder hill) சென்டினல் மலையும் (sentinal hill) இருந்திருக்கின்றன. தற்பொழுது பௌல்டர் மலையின் வடிநிலத்தில் நீர் நிரம்பி 110 மைல் தொடர் நீளமான மெட் ஏரியாக மாறி இம்மலைகளின் மேல்தளங்கள் தீவாகக் காட்சியளிக்கின்றன. இதன் பெயரால் இங்கு கட்டப்பட்ட அணை பௌல்டர் அணை என்று அப்பொழுது அழைக்கப்பட்டிருக்கிறது. பின்னர் 1945-ல் அமெரிக்க ஜனாதிபதி ஹூவரின் நினைவாக அவரது பெயரை இந்த அணைக்கு சூட்டியிருக் கிறார்கள். அணையின் சுவரின் மேல்தளத்தில் அமைந்த பாதையில் 2:00 மணி நேர கால தாமதமாக நெருக்கடியாக சென்ற போக்குவரத்தையும், காற்று மாசுபாட்டையும் தடுக்கும் வண்ணம், அரைக் கோள வடிவ தாங்கியோடு பிளாக் கேன்யானின் குறுக்காக, வட அமெரிக்காவிலேயே மிக நீண்டதாக அரிசோனாவையும் நவேடாவையும் இணைக்கின்ற உறுதியான பாலத்தை வடிவமைத்திருக்கிறார்கள். ராணுவத்தில் விருது பெற்ற 2004 ஆம் ஆண்டில் நாட்டின் சிறந்த குடிமகன்களின் பெயரில் (Mike o’ Callaghan Pat till man) மைக் ஓ காளகன் - பாட் டில் மேன் நினைவுப் பாலம் என்று இது

அழைக்கப்படுகிறது. கேன்யான் பகுதியில் வீசும் வேகமான காற்றின் பலத்தை தாங்கும்படி உறுதியான இரும்புகளாலும் கான்கிரீட்டாலும் இப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலத்திற்கு சொந்தமான தாவரங்களை இயன்றவரை இடப்பெயர்வு செய்தும் விதைகளை சேமித்தும் பாதுகாத்திருக்கிறார்கள். அங்கு வாழ்ந்த மக்களின் அழிக்கப்பட்ட நகரங்களின் அடையாளங்கள் இன்றும் நீரின் அடியில் மூழ்கியிருக்கின்றன. கட்டுமானப் பணியின் பொழுது ஐந்திற்கும் மேற்பட்ட ரயில் பாதைகள் போடப்பட்டு மணல்களையும் கற்களையும் சிமெண்டுகளையும் சுமந்து வந்த ரயில்கள், நகரத்திற்கும் கட்டுமான இடத்திற்கும் தொடர்ந்து இயங்கி வந்திருக்கின்றன. இந்த ரயில் பாதைகள், கட்டுமானப் பணியின்பொழுது இயங்கி வந்த கான்கிரீட் தொழிற்சாலைகளென யாவும் இப்போது நீருக்கடியில் இருக்கின்றன. அதிக வெப்பநிலையைக் கொண்ட இப்பாலைவனப் பகுதியில் இவை யாவற்றையும் வடிவமைத்து இயல்புக்கு மாறாக மனித வாழ்க்கையை ஏற்படுத்த கட்டமைத்தபோது, வெப்பம் தாங்க முடியாமல் இறந்தவர்களும் சிலர். கல்லாலான மலைப் பகுதியில் கயிறுகளை இடுப்பில் கட்டிக்கொண்டு பணியாளர்கள் எப்படியெல்லாம் வேலை செய்தார்கள் என்பதற்கான மாதிரி சிலையாக கல்லில் தொங்கியவாறே ஒரு மனிதச் சிலையை வடிவமைத்திருக்கிறார்கள். சுற்றுலாவாக வந்து வேடிக்கை பார்ப்பவர்கள் வெயில் தாங்காமல் உடல்நலம் கெட்டுவிடக்கூடாது என்பதற்காக தொப்பியும், குளிர் கண்ணாடியும் அணிந்து கொள்ளவும், உடலின் மீது சன்ஸ்கிரீன் களை தடவிக்கொள்ளவும் அவ்வப்போது இடைவெளியோடு நீரை அருந்தவும் எச்சரிக்கைப் பலகைகள் வைக்கப்பட்டிருக்கின்றன.

நாங்கள் சென்றிருந்த பிப்ரவரி மாத குளிர் காலத்திலும் அதனைக் கடைப்பிடிக்க வேண்டி யிருந்தது.

அதிக சம்பளத்திற்காக வேலை வாய்ப்பைத் தேடி இங்கு வந்து உழைத்த பணியாளர்கள் தங்குவதற்காக, இவ்விடத்தில் ஒரு முழு நகரத்தையே அமைத்துக் கொடுத்திருக்கிறார்கள். குடும்பங்களோடு முதன்முதலில் குடியேறியவர்கள் இவர்கள். பலரது உழைப்பிற்கும் தியாகத்திற்கும் பிறகே சில வசதிகளைப் பெறுகிறோம். அரிசோனா மாகாணம் அதனால்தான் உயிர் வாழ்கிறது. ஹூவர் அணையால் உருவான அருகேயுள்ள நவேடா மாகாணத்தின் லாஸ் வேகாஸ் நகரத்தைப் பார்த்த பொழுது, கண்களுக்கு குளிர்ச்சி இருந்தாலும் எங்களுக்கு அதிர்ச்சியும் காத்திருந்தது.

uday010125
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe