தலைநிமிர்வும் தலைகுனிவும்!

/idhalgal/eniya-utayam/head-and-bow-down

தலைநிமிர்வு

"பெருமை யுடையவர் ஆற்றுவார் ஆற்றின்

அருமை உடைய செயல்.'

- என்பார் வள்ளுவர்.

அரும்பெரும் சாதனைகளை அதற்குரிய வழிகளில் செய்து முடிக்கும் திறமைசா-களே உலகின் பெருமைக்குரியவர்கள் என்பதுதான் இதன் பொருள்.

அப்படிப்பட்ட திறமையால், நிலவுக்கே சந்திரயான் விண்கலத்தை அனுப்பி, உலகமே பாராட்டும் பெருமைக்குரிய சாதனையை நிகழ்த்தி யிருக்கிறார். அதன் திட்ட இயக்குநரான தமிழகத்தைச் சேர்ந்த நம் விண்ணியல் ஆய்வாளர் வீர முத்துவேல்.

இவரும் இவரது குழுவினரும் சந்திரயான் 3-ஐ நிலவில் தரை இறக்கியதால், இந்தியத் திருநாடே இன்று உலக அரங்கில் தலைநிமிர்ந்து நிற்கிறது.

நிலவின் தென்துருவத்தில் முதன்முத-ல் கால்வைத்துத் தரையிறங்கிய நாடு என்கிற பெயரை இதன்மூலம் இந்தியாவுக்குப் பெற்றுத் தந்திருக்கிறார்கள் நம் விண்ணியல் ஆய்வாளர்கள்.

dd

அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளுக்கு பிறகு, நிலவைத் தொட்ட 4-ஆவது நாடு என்ற பெருமையும் இவர்களால் இந்தியா வுக்குக் கிடைத்திருக்கிறது.

இஸ்ரோவில் எத்தனையோ விஞ்ஞானிகள் இருந்திருக் கிறார்கள்; இருக்கிறார்கள். ஆனால் அங்கிருந்த எவரும் நிகழ்த்தாத சாதனையைத் தொடர்ச்சியாக நிகழ்த்தி இருப்பவர்கள், நம் தமிழர்கள் என்பதை, நாம் மார்தட்டிக்கொண்டு நிமிர்வோடு அறிவிக்கலாம்.

முன்னாள் குடியரசுத் தலைவரான மாமனிதர் அப்துல் கலாம் வழிகாட்டுத-ல், நமது தமிழகத்தைச் சேர்ந்த விண்ணியல் ஆய்வாளர்களான மயில்சாமி அண்ணாதுரை, வனிதா முத்தையா ஆகியோர் தலைமையேற்று விண்ணில் ஏவிய இரண்டு சந்திரயான் விண்கலன்களைத் தொடர்ந்து, தற்போது மூன்றாவது முறையாக நம் விண்ணியல் ஆய்வாளர் வீரமுத்துவேல் தலைமையிலான விஞ்ஞானிகள்,சந்திரயான் 3-ஐ வெற்றிகரமாக நிலவுக்கு அனுப்பி, மகத்தான சாதனையைப் படைத்திருக்கிறார்கள்.

தற்போது சந்திரயான் -3, தனது ஆய்வுகளை நடத்த லேண்டரை நிலவின் முதுகில் வெற்றிகரமாகத் தரையிறக்கி, உலகின் ஒட்டுமொத்த நாடுகளையும் கைதட்ட வைத்திருக்கிறது.

இந்த விண்கலம், ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ராக்கெட் மூலம்

தலைநிமிர்வு

"பெருமை யுடையவர் ஆற்றுவார் ஆற்றின்

அருமை உடைய செயல்.'

- என்பார் வள்ளுவர்.

அரும்பெரும் சாதனைகளை அதற்குரிய வழிகளில் செய்து முடிக்கும் திறமைசா-களே உலகின் பெருமைக்குரியவர்கள் என்பதுதான் இதன் பொருள்.

அப்படிப்பட்ட திறமையால், நிலவுக்கே சந்திரயான் விண்கலத்தை அனுப்பி, உலகமே பாராட்டும் பெருமைக்குரிய சாதனையை நிகழ்த்தி யிருக்கிறார். அதன் திட்ட இயக்குநரான தமிழகத்தைச் சேர்ந்த நம் விண்ணியல் ஆய்வாளர் வீர முத்துவேல்.

இவரும் இவரது குழுவினரும் சந்திரயான் 3-ஐ நிலவில் தரை இறக்கியதால், இந்தியத் திருநாடே இன்று உலக அரங்கில் தலைநிமிர்ந்து நிற்கிறது.

நிலவின் தென்துருவத்தில் முதன்முத-ல் கால்வைத்துத் தரையிறங்கிய நாடு என்கிற பெயரை இதன்மூலம் இந்தியாவுக்குப் பெற்றுத் தந்திருக்கிறார்கள் நம் விண்ணியல் ஆய்வாளர்கள்.

dd

அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளுக்கு பிறகு, நிலவைத் தொட்ட 4-ஆவது நாடு என்ற பெருமையும் இவர்களால் இந்தியா வுக்குக் கிடைத்திருக்கிறது.

இஸ்ரோவில் எத்தனையோ விஞ்ஞானிகள் இருந்திருக் கிறார்கள்; இருக்கிறார்கள். ஆனால் அங்கிருந்த எவரும் நிகழ்த்தாத சாதனையைத் தொடர்ச்சியாக நிகழ்த்தி இருப்பவர்கள், நம் தமிழர்கள் என்பதை, நாம் மார்தட்டிக்கொண்டு நிமிர்வோடு அறிவிக்கலாம்.

முன்னாள் குடியரசுத் தலைவரான மாமனிதர் அப்துல் கலாம் வழிகாட்டுத-ல், நமது தமிழகத்தைச் சேர்ந்த விண்ணியல் ஆய்வாளர்களான மயில்சாமி அண்ணாதுரை, வனிதா முத்தையா ஆகியோர் தலைமையேற்று விண்ணில் ஏவிய இரண்டு சந்திரயான் விண்கலன்களைத் தொடர்ந்து, தற்போது மூன்றாவது முறையாக நம் விண்ணியல் ஆய்வாளர் வீரமுத்துவேல் தலைமையிலான விஞ்ஞானிகள்,சந்திரயான் 3-ஐ வெற்றிகரமாக நிலவுக்கு அனுப்பி, மகத்தான சாதனையைப் படைத்திருக்கிறார்கள்.

தற்போது சந்திரயான் -3, தனது ஆய்வுகளை நடத்த லேண்டரை நிலவின் முதுகில் வெற்றிகரமாகத் தரையிறக்கி, உலகின் ஒட்டுமொத்த நாடுகளையும் கைதட்ட வைத்திருக்கிறது.

இந்த விண்கலம், ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ராக்கெட் மூலம் கடந்த ஜூலை 14 ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. அது ஒன்றரை மாதங்களுக்குள், நிலவின் மீது ஆகஸ்ட் 23 ஆம் தேதி மாலை தனது லேண்டர் மூலம் தரையிறங்கியது. அதி-ருந்து ரோவர் வாகனம் வெளியேறி தனது அளப்பரிய ஆய்வுகளை நடத்தத் தொடங்கியிருக்கிறது. இது மனித குலமே பாராட்டும் சாதனையின் உச்சமாகும்.

இதன் திட்ட இயக்குநரான இருந்து சந்திரயானை விண்ணுக்கு அனுப்பிய பெருமைக்குரிய வீரமுத்துவேல், நம் விழுப்புரத்தைச் சேர்ந்தவர் என்பது பெரும் மகிழ்ச்சிக்குரியது.

ஒரு ரயில்வே ஊழியரின் மகன். அவரது சாதனை இன்று வானை அளந்துகொண்டிருக்கிறது.

நிலவில் பாட்டி வடை சுடும் கதைகளைச் சின்ன வயதில் கேட்டு வளர்ந்த நாம் இன்று, நிலவுக்கே போய் அதன் மீது நிகழும் ஆராய்ச்சியை வீடியோ காட்சிகள் மூலம் காணும் வாய்ப்பைப் பெற்றுப் பூரிக்கிறோம்.

நிலவில் இருந்தபடி தற்போது சந்திரயான் அனுப்பியிருக்கும் புகைப்படங்களை வைத்து, அங்கே உள்ள கனிமங்கள் குறித்து ஆராய்ந்து வருவதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கிறார்கள்.

நமது சந்திரயான், நிலவைப் பற்றி இதுவரை அறியாத பல உண்மைகளைக் கண்டறிந்து உலகிற்குச் சொல்லப்போகிறது.

எனவே சந்திரயான் 3-ன் சாதனைக்கு உழைத்த வீரமுத்துவேல் உள்ளிட்ட இஸ்ரோ விஞ்ஞானிகள் அனைவருக்கும் நம் தமிழகத்தின் சார்பிலான வாழ்த்துப் பூச்செண்டு.

dd

தலைகுனிவு

"வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும்

கோலொடு நின்றான் இரவு."

-என்று இன்னொரு குறளையும் நமக்குத் தந்திருக்கிறார் வள்ளுவர்.

இதன் பொருள், "ஆட்சி அதிகாரத்தை வைத்துக்கொண்டு, மக்கள் பணத்தைக் கொள்ளை யடிப்பவர்கள், ஆயுதத்தோடு வரும் வழிப்பறிக் கொள்ளையர்களுக்குச் சமமானவர்கள்' என்பதாகும்.

வள்ளுவர் சொல்வதுபோல், அதிகாரத்தில் உட்கார்ந்தபடி, ஊழல் என்ற ஆயுதத்தால், மக்களின் வரிப்பணத்தை கொள்ளையடிக்கும் வழிப்பறிக் கொள்ளையர்களாக டெல்- ஆட்சியாளர்கள் இருக்கிறார்கள் என்பதை, சி.ஏ.ஜி. அறிக்கை அண்மையில் வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறது.

ஒரு பக்கம் நம் தமிழன் தலைமை தாங்கி , சந்திரயான் மூலம் இந்தியாவின் சாதனைக் கொடியை பறக்கவிடும் நேரத்தில் இன்னொரு பக்கம் மோடி அரசு, தனது ஊழல் கொடியைப் பறக்கவிட்டு இந்தியாவைத் தலைகுனிய வைத்திருக்கிறது.

பிரதமர் மோடி, இந்த தேசத்தையே வாழ்விக்க வந்த புனிதரைப் போல் பேசுகிறார். தேசத்தின் முன்னேற்றமே தன் முன்னேற்றம் என்று பாவ்லா பண்ணுகிறார். ஆனால், திரைமறைவில் அவர் செய்வதெல்லாம் பித்தலாட்டம்- ஊழல்-அதிகார துஷ்பிரயோகங்கள் தவிர வேறு இல்லை.

மோடியின் ஜாதகம் எப்படிப்பட்டது?

இளம் வயதிலேயே யசோதா பென் என்பவரை திருமணம் செய்துகொண்டு, பின்னர் அவரைப் பிரிந்ததோடு, "எனக்கென்று ஒரு குடும்பம் இல்லை. எதற்கு நான் சொத்து சேர்க்கப் போகிறேன்?' என்று நாடகம் போடும் மோடி, தனது நெருக்கமான நண்பர் அதானிக்கு, துறைமுகங்கள், விமானசேவை உட்பட, தேசத்தின் பெருவாரியான தொழில் நிறுவனங் களை தாரை வார்த்துக்கொண்டே இருக்கிறார். இப்படிப்பட்டவர் ஆசாபாசம் இல்லாதவராம்.

அதேபோல் எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்கள் என்றால், அவர்கள் மீது ஒன்றிய அரசின் புலனாய்வு அமைப்புகளான அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, சி.பி.ஐ. போன்ற புலனாய்வு அமைப்புகளை ஏவி மிரட்டுவதன் மூலம், அதிகார துஷ்பிரயோகத்திலும் தனக்கு ஈடாக யாரும் இல்லை என்று நிரூபித்துக் கொண்டிருக்கிறார் .

இந்த நிலையில், இந்தியாவை மோடி கும்ப-டம் இருந்து மீட்கும் நோக்கத்தில், காங்கிரஸ், தி.மு.க., திரிணாமுல் காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தளம், ஆம் ஆத்மி, சமாஜ்வாடி, கம்யூனிஸ்டு கட்சிகள், தேசிய மாநாட் டுக் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஒன்று கூடி ஒசஉஒஆ என தேசத்தின் பெயரிலேயே ஒரு மாபெரும் கூட்டணியை உருவாக்கி இருக்கின்றன. இதைக் கண்டு, இது ஒரு ஊழல் கூட்டணி என்று கூக்குரல் எழுப்பினார் மோடி.

ஆனால் அவர் எப்படிப்பட்டவர்?அவருடைய ஆட்சி எப்படிப் பட்டது என்பதை, சி.ஏ.ஜி.எனப்படும் "மத்திய தலைமை தணிக் கைத்துறையே' தனது அறிக்கை மூலம் தற்போது ஆதாரப் பூர்வமாக அம்பலப்படுத்தி இருக்கிறது.

dd

அரசு போடும் பட்ஜெட்டும் அதில் ஒதுக்கப்படும் நிதியும் சரியாக நிர்வகிக்கப்படுகிறதா என்பதை கவனிப்பதற்காக உருவாக்கப்பட்ட சுயாட்சி அமைப்புதான் சி.ஏ.ஜி. (Comptroller and Auditor General (CAG) of India). இதன் தலைவராக இருப்பவர் அரசுக்கு கட்டுப்பட்டவர் அல்ல.

அவர் நேரடியாக குடியரசுத் தலைவரின் பார்வையில் வருகிறவர்.

அதனால் சி.ஏ.ஜி. பாரபட்சமில்லாமல் தான் அறிந்ததை பகிரங்கமாகப் போட்டு உடைத்திருக்கிறது.

அண்மையில் அந்த சி.ஏ.ஜி. வெளியிட்டிருக்கும் அறிக்கை, மோடி தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி, 7 விதமான ஊழல் களில் பெரிய அளவில் ஈடுபட்டதை வெளிச்சம் போட்டுக் காட்டி இருக்கிறது.

அதாவது, இந்தப் பித்தலாட்ட மோடி அரசு, தனது பாரத்மாலா திட்டம், துவாரகா விரைவுப் பாதை கட்டுமான திட்டம், சுங்கச் சாவடி கட்டணங்கள், ஆயுஷ்மான் பாரத் திட்டம், அயோத்தியா மேம்பாட்டு திட்டம், கிராமப்புற அமைச் சகத்தின் ஓய்வூதியத் திட்டம், எச்.ஏ.எல். விமான வடிவமைப் புத் திட்டம் என இந்த 7 திட்டங்களிலும் பல ஆயிரம் கோடி ஊழல் செய்திருப்பதாக அது பகிரங்கப்படுத்தி இருக்கிறது.

குறிப்பாக-

= ஆயுஷ்மான் பாரத் என்கிற நோயாளிகளுக்கான காப்பீடு திட்டத்தில் இறந்துபோன நோயாளிகள் 88 ஆயிரத்து 760 பேருக்கு, அவர்கள் இறந்த பிறகும் சிகிச்சை அளிக்கப்பட்டதாகச் சொல்- பல நூறுகோடிகளை விழுங்கி இருக்கிறார்கள்.

= ஆயுஷ்மான் பாரத் என்கிற திட்டத்தில், ஒரே போ- செல்போன் நம்பரைக் காட்டி, ஏழரை லட்சம் பயனாளிகளின் பெயரில் கோடிகோடியாய் சுருட்டி ஏப்பம் விட்டிருக்கிறார்கள்.

= துவாரகா விரைவு நெடுஞ்சாலைத் திட்டத்தின் மூலம் சாலைகளைப் போட்டதில், திட்டமதிப்பீட்டை விட ஏறத்தாழ 300 மடங்கு நிதியை ஒதுக்கி, ஏகத்துக்கும் விழுங்கி இருக்கிறார்கள்.

= நாடு முழுக்க இருக்கும் ஏறத்தாழ 600 சுங்கச்சாவடிகளில் வெறும் 5 சுங்கச்சாவடிகளை ஆய்வுசெய்ததில், விதிகளுக்குப் புறம்பாக, 132 கோடியே 5 லட்சம் ரூபாயை வாகன ஓட்டிகளிடம் இருந்து வசூ-த்து முறைகேட்டை அரங்கேற்றி இருக்கிறார்கள். மிச்ச சுங்கச்சாவடிகளையும் ஆய்வு செய்து இவர்களின் முறைகேட்டைக் கணக்கிட்டால், தலைசுற்றித்தான் விழ வேண்டி இருக்கும்.

= இதேபோல் மோடி அரசு, இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தின் மூலம் அரசுக்கு 159 கோடி ரூபாய் இழப்பை ஏற்படுத்தி இருப்பதாக அந்த அறிக்கை அம்பலப்படுத்தி இருக்கிறது.

= இதுமட்டுமன்றி ஒன்றிய அரசுத் துறைகளில் 7.5. லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்திருப்பதாகவும் சி.ஏ.ஜி அறிக்கை சுட்டிக்காட்டி இருக்கிறது.

= இதுமட்டுமா? தங்களை இந்துத்துவாவின் காவலர்களாகக் காட்டிக் கொண்டு அப்பாவி இந்து மக்களை ஏமாற்றும் மோடி அரசு, அயோத்தியில் ராமாயணம் தொடர்புடைய இடங்களை நவீனப்படுத்தும் திட்டம் என்ற பெயரில் விதிமுறைகளை மீறி ஒப்பந்ததாரர்களுக்கு தேவையற்ற சலுகைகளை அள்ளிக் கொடுத்து, அரசுக்கு 8 கோடி ரூபாய் இழப்பை ஏற்படுத்தியிருக்கிறது என்கிறது அந்த அறிக்கை.

அப்படியென்றால் மோடி அரசு, அவர்களின் இந்துத்துவா கொள்கைக்கே உண்மையாக இருக்கிறதா? என்பது அவர்கள் சதா உச்சரித்துக்கொண்டே இருக்கும் அந்த ராமபிரானுக்கே வெளிச்சம்! ராமனின் நெற்றியிலேயே நாமம் போட்டிருக்கிறார்கள், அந்த கபடதாரிகள்.

-இப்படிப்பட்ட கடைந்தெடுத்த ஊழல் ஆட்சியை நடத்திவரும் "உத்தமரான' மோடிதான், எதிர்க்கட்சிகளின் கூட்டணியை ஊழல் கூட்டணி என்று விமர்சிக்கிறார். பரிசுத்த வேடம் போட்டு இன்னும் வெட்கம் இல்லாமல் மக்கள் முன் உலவுகிறார்.

எதிர்க்கட்சியினரும், பொருளாதார நிபுணர்களும் இந்த ஊழலைக் கடுமை யாகக் கண்டித்து வருகிறார்கள். இன்னும் சிலர் காறித் துப்புகிறார்கள். இவை யெல்லாம் மோடி தரப்புக்குக் கொஞ்சமும் உறைப்பதாகத் தெரியவில்லை.

=

சந்திரயான் சாதனை மூலம் தலைநிமிர்ந்த நம் தேசம், மோடி தலைமை யிலான பா.ஜ.க.அரசின் ஊழல்களால் தலைகுனிவைச் சந்தித்திருக்கிறது. தினை விதைத்தால் தினையை அறுக்கலாம். இவர்கள் வினையையே விதைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

இதற்கான முழுப்பலனையும் வரும் நாடாளுமன்றத் தேர்த-ல் மோடி கும்பல் கட்டாயம் அறுவடை செய்யும்.

ஆதங்கத்துடன்,

நக்கீரன்கோபால்

uday010923
இதையும் படியுங்கள்
Subscribe