முயல்களும் ஓநாய்களும் - லியோ டால்ஸ்டாய் தமிழில் : சுரா

/idhalgal/eniya-utayam/hares-and-wolves-leo-tolstoy-tamil-sura

முயல்கள் இரவில் மரத்தின் தோலைச் சாப்பிடுகின்றன. குளிர் காலத்தில் முயல்கள் நிலத்தில் வரகையும் புற்களையும் சாப்பிடும். தானியம் மிதிக்கும் இடத்தில், முயல்கள் தானியங்கள் வைக்கப்பட்டிருக்கும் இடத்திலிருந்து தானியத்தைச் சாப்பிடும். இரவுப்பொழுதில் முயல்கள் கடந்து செல்லும் இடத்தில்... பனியில்... ஆழமான கால் அடையாளங்களைப் பார்க்கலாம

முயல்கள் இரவில் மரத்தின் தோலைச் சாப்பிடுகின்றன. குளிர் காலத்தில் முயல்கள் நிலத்தில் வரகையும் புற்களையும் சாப்பிடும். தானியம் மிதிக்கும் இடத்தில், முயல்கள் தானியங்கள் வைக்கப்பட்டிருக்கும் இடத்திலிருந்து தானியத்தைச் சாப்பிடும். இரவுப்பொழுதில் முயல்கள் கடந்து செல்லும் இடத்தில்... பனியில்... ஆழமான கால் அடையாளங்களைப் பார்க்கலாம்.

மனிதர்களும் நாய்களும் ஓநாய்களும் நரிகளும் மலைக்காகங்களும் கழுகுகளும் முயல்களை வேட்டையாடுகின்றன... அதிகாலையில் கால் அடையாளங்களைப் பார்த்து முயலைப் பிடிப்பதற்கு வழி இருக்கிறது. ஆனால், தெய்வம் அதைக் கோழையாகப் படைத்துவிட்டது. இந்த கோழைத்தனம்தான் அதைக் காப்பாற்றுகிறது.

ss

இரவில் காட்டின் வழியாகவும் நிலத்தின் வழியாகவும் சிறிதும் பயமே இல்லாமல் முயல் கடந்துசெல்கிறது. போகும் வழியில் அதன் கால் அடையாளங்கள் பதிந்திருக்கும்.

அதிகாலை வரும்போது, எதிரிகளின் சத்தத்தை அது கேட்க ஆரம்பிக்கிறது.

குதிரை வண்டிகளின் முனகல், ஆட்களின் சத்தம், காட்டின் வழியாகப் பாய்ந்துசெல்லும் ஓநாய்களின் சத்தம் ஆகியவற்றைக் கேட்கும்போது, பயத்துடன் முயல் இடைவெளிவிட்டு இரு பக்கங்களுக்கும் தாவும்.

அது முன்னோக்கி குதித்து... பிறகு எதற்கோ பயந்து... திரும்பி... வந்த வழியிலேயே ஓடும். மீண்டும் வேறு எதையோ கேட்கும்போது, அது எதிர்பக்கமாக தாவி, வந்த வழியிலிருந்து விலகி ஓடும். மீண்டும் ஏதாவது சத்தத்தைக் கேட்கும்போது, முயல் பின்னால் திரும்பி, இன்னொரு பக்கமாக குதிக்கும். அதிகாலை வரும்போது, அது ஓய்வெடுக்கும்.

காலையில் முயலின் கால் அடையாளங்களைப் பின்தொடர்வதற்கு வேட்டைக்காரர்கள் முயற்சிக்கும்போது, இரு பக்கங்களிலும் இருக்கக்கூடிய கால் அடையாளங்களைப் பார்த்து, முயலின் புத்திசாலித்தனத்தை நினைத்து ஆச்சரியப்பட்டு நிற்பார்கள். ஆனால், முயலோ... புத்திசாலித்தனம் எதையும் காட்டுவதற்கு முயற்சிக்கவில்லை. அனைத் தையும் பார்த்து அதற்கு பயம் என்பதே உண்மை.

uday011024
இதையும் படியுங்கள்
Subscribe