ஒரு மகத்தான எழுத்தாளருக்கு அவர் மதிப்பை உணர்ந்த இலக்கியவாதிகள் ஒன்றுகூடி எடுத்த இலக்கியத் திருவிழா இது!
ஒரு முழுநாள் கொண்டாட்டமான பொன்னீலன்- 80 விழா நவம்பர்-16 சனிக்கிழமை அன்று திட்டமிடப்பட்டிருந்தது.
அதன்படி முதல் நாள் அதாவது வெள்ளி(15.11.2019) மாலை தோழர் பொன்னீலன் அவர்களின் முற்றத்தில் அவரின் வாசகர்களுக்கான சிறப்பு சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.v சரியாக மாலை 6.00 மணியளவில் எளிமையின் சிகரம் ஐயா நல்லக்கண்ணு வருகைதந்தார். பொன்னீலன் சென்று ஆரத் தழுவி வரவேற்றார். இருக்கையில் அமர்ந்த தும் பொன்னீலன் ஐயாவின் மகள் மருத்துவர் அழகு நீலா, ஜெயராமனை அழைத்து நெல்லையில் இருந்து தான் வாங்கிவந்த அல்வாவை அவர்களிடம் வழங்கினார்.
பொன்னீலன் தனதில்லத்தின் 250 ஆண்டுகாலப் பழமையையும் பாரம்பரியத்தையும், அவர் வீட்டு காம்பவுண்ட் பற்றியும் சிலாகித்து மகிழ்ந்தார். அவர் வாழ்வின் சுவையான செய்திகளை பகிர்ந்து, பல கதைகளுக்கான கருவாகவும், இந்த வீடு இருந்தது பற்றி நினைவுபடுத்தி உரையாடினார்.
நல்லக்கண்ணுவுக்கும் பொன்னீலனுக்கும் இடையிலான 50 ஆண்டுகளுக்கும் மேலான நட்பை

நல்லக்கண்ணுவுக்கும் பொன்னீலனுக்கும் இடையிலான 50 ஆண்டுகளுக்கும் மேலான நட்பை கால இயந்திரத்தில் பயணித்ததுபோல அந்த நாட்களுக்கே சென்று இருவரும் ஒருவர் பற்றி ஒருவர் நினைவுகூர்.ந்து காலத்தில் கரைந்து போயிருந்தனர்.
நல்லக்கண்ணு தயாரித்துத்தந்த சாண்ட்விச்சை அவர் ரசித்துச் சாப்பிட்ட கதையை பெருமையோடு பகிர்ந்து கொண்டிருக்கும்போதே தோழர். ஜோ டி குருஸ் வந்து இயல்பான வசீகர புன்னகை நிறைந்த உரையாடலால் தனது கடல் சார் கப்பல்துறையால் ஆழிசூழ் உலகையும், கொற்கை யையும் படைத்ததைப் பகிர்ந்துகொண்டார்.
சற்றைக்கெல்லாம் பொன்னீலனின் காதலி என அறிமுகப்படுத்தப்பட்ட தோழர் பாரதி மணி வருகைதந்து, அவரை வாஞ்சையாக கட்டித் தழுவி முத்தமிட்டு, முத்தம் பெற்று நிகழ்வைக் கலகலப்பாக்கினார். அதன்பிறகு அந்த இரவு தோழமைகளின் பழைய காலத்திற்கே சென்றது. கேள்விகளுக்கு சுவாரஸ்யம் குறையாமல் நால்வருமே பதிலுரைத்தனர். கதைசொல்லி வனிதா மணி தனது கதையால் அனைவரையும் மீண்டும் குழந்தைப் பருவத்துக்கு அழைத்துச் சென்று கலகலப்பூட்டினார்.
விழாநாள் காலையன்று, நிகழ்வுக்கான கட்டிய மாக அனைவர் செவியிலும் ஓங்கி உரத்து ஒலித்த பறையிசை உற்சாகத்தையும் ஆட்டத்தையும் வரவழைத்தது. விண் அதிர அதிர மேளம் முழங்க எழுத்துலக ஜாம்பவான் பொன்னீலனை பறையிசை முழக்கத்தோடு சந்தனமாலையிட்டு வரவேற்றார் கள். சின்னஞ்சிறு குழந் தையாகி உற்சாகம் பீறிட பறையிசைக்கேற்ப நடனமாடியபடியே தனது இல்லத்து அரசியுடன் கைகோர்த்துக்கொண்டே அரங்கிற்குள் நுழைந்தார்.
தனது மெல்லிய நடனத்தோடு பாரதி மணியைப் பார்த்து அவரோடு கரங்களை உயர்த்திக் கோர்த்து சிறிது ஆட்டத்துக்குப் பின்பு மெல்ல மேடையேறி னார்.
குத்துவிளக்கை கமலா சுந்தர ராமசாமி, ரெங்காபாய் சதாசிவன், தியாகி கோ.முத்துக்கருப்பன், தியாகி. கொடிக்கால் ஷேக் அப்துல்லா ஆகியோர் ஏற்றி வைத்தனர்.
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் தோழர் ராம் தங்கம் வரவேற்புரையாற்றினார்.
நல்லக்கண்ணு விழாவினைத் துவக்கி வைத்து தலைமை உரையாற்றினார்.
""எனக்கும் பொன்னீலனுக்குமான நட்பு 56 வருடத்தைய நட்பு. நாங்கள் அனைவரும் வேட்டியும் சட்டையும் அணிந்திருப்போம். ஆனால் பொன்னீலன் மட்டும் பேண்ட் சர்ட் என சபாரியில் கம்பீரமாக வருவார்.
கட்சியில் இணை ஏற்பு விழா நடத்துகையில், திருமண உறுதிமொழி ஏற்கையில்... உறுதிமொழியை உணர்வுப்பூர்வமாக தோழர்களை, இணையர் களை வாசிக்க வைத்து, அவர்களுக்கிடையில் நேசத்தை உருவாக்கி பேரன்பை விதைப்பவர் பொன்னீலன்.
கையால் எழுதி எழுதி 20 வருடம் ஆய்வு செய்து தரவுகளோடும் புதுப் புது செய்திகளோடும் அவரின் எல்லா படைப்பு களையும் தந்தார்.
அத்துணை படைப்புகளும் கைவிளக்கு வெளிச் சத்தில் எழுதி வெளிவந்தவை'' என்றும் புகழாரம் சூட்டினார்.
சாகித்ய அகாடமி விருதாளர் ஜோ.டி. குரூஸ், ""கடற்கரை மக்கள் மேட்டு நில மக்களை பார்த்து உயரக்காரன் என அழைப்ப தும், மேட்டுநில மக்கள் கடற்கரை மக்களை பார்த்து உயரக்காரன் என்று சொல்வதும் உண்டு. உண்மையில் சொல்லப் போனால் மேட்டுநிலமக்கள் கடற்கரையோர மக்கள் என எல்லோருக்கும் உயரக்காரன் பொன்னீலன்'' என முத்தாய்ப்பாக பேசினார்.
இயக்குநரும் பேச்சாளரு மான பாரதி கிருஷ்ணகுமார் பொன்னீலன் அவர்களின் வாழ்க்கைப்பாதை எனும் நூலில் இருந்து கதை சொல்லி அதன் மூல நூலான பட்ங் ல்ஹள்ள்ஹஞ்ங் ர்ச் ப்ண்ச்ங் எனும் புத்தகத்திலிருந்து பொன்னீலன் அவர்கள் மொழிபெயர்த்து இருந்ததை கதைகள் மூலம் சொல்லச் சொல்ல அரங்கம் பெரும் அமைதியாய் கேட்டுக்கொண்டே இருந்தது.
மலையாள எழுத்தாளர் மனோஜ் குரூர் பேசுகையில் மறுபக்கம், புதிய தரிசனம் போன்ற பொன்னீலன் அவர்களின் நூல்கள் மலையாளத்திற்கு மொழிபெயர்க்கப்பட வேண்டும் என தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
பாவலர் மனுஷி ஆண் படைப்பாளருக்குள் உறங்கிக் கொண்டிருக்கும் பெண்ணை விழித்தெழச் செய்து எழுதியதுதான் சக்தி தாண்டவம் என புகழுரைத்தார்.
பொன்னீலன் 80 எனும் புத்தகத்தை எழுத்தாளர் ராம் தங்கம் தொகுத்திருந்தார். அந்த தொகுப்பை தோழர் நல்லக்கண்ணு வெளியிட எழுத்தாளர் கவிதைக்காரன் இளங்கோ, யாவரும் பதிப்பகம் நிறுவனர் ஜீவகரிகாலன், மொழிபெயர்ப்பாளர் குளச்சல் மு.யூசுப், எழுத்தாளர்கள் ஏக்நாத், லா.ச.ரா. சப்தரிஷி, முத்தாலங்குறிச்சி காமராசு, வழக்கறிஞர் கணபதிசுப்ரமணியம், கதை சொல்லி வனிதாமணி, அருள்வேல், கவிஞர் வீரசோழன்.க.சோ.திருமாவளவன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர் நிறைவுரையாக எழுத்தாளர் ஜெயமோகனும் ஏற்புரையாக தோழர் பொன்னீலன் அவர்களும் பேசினார்கள்.
வாழும் காலத்திலே ஒரு எழுத் தாளன் கொண்டாடப்பட வேண்டும் அந்தவகையில் பொன்னீலன் அவர்களை தமிழகமே கொண்டாடிய பெருநிகழ்வாய் பொன்னீலன் 80 விழா நிகழ்வு அமைந்தது. தமிழ் இலக்கிய நெஞ்சங்களின் இனிய சங்கமமாய் விழா களைகட்டியது.