பொதுநிலையில் ஜப்பானிய ஹைகூக்கவிதை நெறிமுறைகளோடு நம் தமிழ்க்கவிதைகளை அளவான எல்லைக்குள் ஒப்பிட்டுப் பார்க்கும் முயற்சி இது.
ஹைகூவுக்கு முந்தையகால ஜப்பானியக் கவிதைகளின் பெருந்தொகுப்பாகக் கிடைத்திருக்கும் நூல், கோகின்சு (ஃர்ந்ண்ய் நட்ன்) என்பது. அதனைத் தொகுத்தவர். தி. சுராயுக் என்பவர். உதா (மக்ஹ) (ழ்-887-897) என்னும் அக்கால மன்னன்தான் அத்தொகுப்பை எப்படிச் செய்ய வேண்டும் என்பதற்கு வழிமுறைகள் சொன்னான். அத்தொகுப்பு ஏறத்தாழ 905-ஆம் ஆண்டு வெளிவந்திருக்கவேண்டும்.
பிளம் பூக்கள் சூடிய வசந்த காலத்தை முன்வைத்துத் தொகுக்கவேண்டும். குயிலினப் பறவையாகிய ஹோட்டோடோகிசுவின் (ஐப்ர்ற்ர்ற்ர்ஞ்ண்ள்ன்) இனிய பாடல் தொடரவேண்டும் (கோடைக்காலத்திற்கு உரியது). பிறகு உதிரும் இலைகளைத் திரட்டுதல், பனி பார்த்தல் ஆகியவற்றின் தொடர்ச்சியில் மாரிக் காலம் அமையவேண்டும். அப்புறம் பாராட்டுப் பாடல்கள்-காதல் கவிதைகள் மதச்சார்புப் பாடல்கள் இவை போன்றுள்ள கதம்பத் தன்மையானவற்றைத் தொகுக்கவேண்டும். இவற்றில் இயற்கைப் பருவங்கள் இல்லாமல் இருக்கலாம்.
இத்தகைய தொகுப்பு முறையில் 1100 கவிதைகள் திரட்டப்பட்டன. நூலைப் பிரித்தால்- வசந்தம், கோடை, இலை உதிர்- மாரிப்பருவங்கள்- ஊர்வலம் நடத்த அதன் தொடர்ச்சியில் மற்றயவை வரிசைப்படுகின்றன. இக்கவிதைகள் ஜப்பானிய மொழியில் உள்ள குறுங்கவிதை (தன்கா) வடிவில் அமைந்தவை. அடுத்து வந்த ஐந்நூறு ஆண்டுகளில் திரட்டப்பட்ட இருபத்தைந்து கவிதைத் தொகுப்புகளுக்கு கோகின்சுதான் முன்னோடி. ஜப்பானியக் கவிதைகளில் இயற்கை இடம் பெற்றுத் தொடர்ந்து பல நூற்றாண்டுகள் வரை தனது இடத்தைத் தக்கவைத்துக் கொண்டதை ஜப்பானிய இலக்கிய வரலாறு நமக்கு உணர்த்துகிறது.
இதன்பிறகு ஜப்பானியக் கவிதை உலகில் கொடி உயர்த்தியது விளையாட்டுத்தனம் மிக்க விளையாட்டாகவே மாறிய ரெங்கா அல்லது ஹைகை- நோரெங்கா என்று சுட்டப்படும் நெடிய இணைப்புக் கவிதை. தாழ்நிலையில் இருந்த ரெங்காவுக்குத் தலைநிமிர்வு கொடுத்தவர் மகாகவி பாஷோ.
இப்படி வளர்நிலை கொண்ட இணைப்புக் கவிதை ரெங்காவைப் புகழ் வாய்ந்த- பொருத்தமான ஒரு கவிஞர் தொடங்கி வைப்பார். அப்படித் தொடக்கம் செய்யப்படும் கவிதைப் பகுதிக்கு ஹொக்கு என்று பெயர்,
ஹொக்குவிற்கு ஓர் இலக்கணம் வகுத்தபோது, அதில் இயற்கை சார்ந்த பருவம் குறித்த சொல் இருக்க வேண்டும் என்பது வற்புறுத்தப்பெற்றது. பன்னிரண்டாம் நூற்றாண்டுத் தொடக்கம் முதல் பாஷோ பள்ளியின் இத்தகைய படைப்புக்குப் பெயர் ஹைகை நோரெங்கா என்பதுதான். அதன்பிறகு ஆய்வாளர்கள் ரென்கு (தங்ய்ந்ன்) என்று பெயர் சூட்டினர். பிறகு ஹைகை என்கிற பெயர் பெருவழக்குப் பெற்றது. புதிய சொற்கள். படிமங்கள், எளிநிலை மாந்தர்கள், அருகிய நிலையில் உல்லாசபுரியினர், வாணிகர்கள், படைப் பிரிவினர் இடம் பெற்றதை- வரலாறு சொல்கிறது. காலப் போக்கில் இத்தகைய ஹைகை கைவிடப்பட்டுவிட்டது.
பாஷோ இறந்து இருநூறாண்டுகள் கடந்த நிலையில் ஹைகூ முதல் நால்வரில் கடைத்தம்பிரானாகிய ஷிகி மகவோகா (1867-1902) நிப்பான் என்கிற இதழில் பாஷோ மீது கண்டனக் கணைகளைத் தொடர்ந்து செலுத்தினார். இணைப்புக் கவிதையின் முதல் பகுதியாகிய ஹொக்கு மட்டும்தான் கவிதை; ஹைகை நோரெங்கா- தலைகீழாக நின்றாலும் இலக்கியத் தகுதியைப் பெற முடியாது என்று சாட்டையைச் சுழற்றினார். அவர்தான் ஹொக்கு என்கிற இணைப்புக் கவிதையின் தொடக்கப் பகுதியைத் தனித்தெடுத்து- ஹைகூ என்று பெயர் சூட்டினார். இருபதாயிரம் ஹைகூ எழுதிய வல்லமை மிக்க ஷிகி, ஹை உலகின் மாபெரும் சீர்திருத்தவாதி என்று சொல்லலாம்.
ஹைகூவின் தனிப்பெருஞ்சிறப்பு அதற்குரிய இயற்கையோடு கூடிய உறவும் உணர்வும்தான். இயற்கையை ஜப்பானியர்கள் தமக்கு எதிரான ஆற்றலாகக் கருதுவதில்லை. நிலநடுக்கம், எரிமலை, பெருவெள்ளம் என்று எவ்வளவோ அச்சுறுத்தல்களை இயற்கை ஏற்படுத்துகிறது என்றாலும், அதன் ஆதரவு நிலையிலான நன்மைகளைக் கருதி இயற்கையைப் போற்றுவதே ஜப்பானிய மரபு. இன்னும் சொல்வதெனில் மனிதனை- இயற்கையின் நீட்சியாகவே அவர்கள் எண்ணினர். மனிதனைவிட மனிதனுக்கு இயற்கையா தீமை செய்து விடுகிறது? எனவே ஹைகூவில்- ஹைகூ உணர்வை (ஃண்ள்ங்ற்ள்ன்) இடம் பெறச் செய்வது அவர்களுக்கு இயல்பாக- எவ்வித இடர்ப்பாடும் இன்றி இயலுவதாகிறது.
ஹைகூ எழுத விரும்பும் கவிஞர்கள் நல்ல படிமங்களைத் தேடி இயற்கை உலகுக்குச் சென்று அலைவார்கள். ஆர்வம் ததும்பும் பார்வையைப் படர விடுவர்கள். இப்பயணத்தை ஜின்கோ (ஏண்ய்ந்ர்) என்று கூறுவார்கள். ஹைகூ செவ்வியல் தன்மை பெறுவதற்கு முன்பு எள்ளலும் ஏகடியமும் குதித்துக் கும்மாளம் போடும் ரெங்காவை, எங்கிருந்தும்- சுடுகாட்டில் வட்டம் போட்டு உட்கார்ந்தும், மதுவிற்பனைக் கூடங் களில் மயக்கம் கவ்விய நிலையிலும்- பல்வேறு கோலங் களில் இருந்தும் எழுதியவர்கள்தான் அன்றைய ஜப்பானியக் கவிஞர்கள். ஆனால் அவர்களை இயற்கையும் கவிதையும் திருத்தியபோது ஜப்பானிய மொழியில் ஹைகூ பூத்துக் குலுங்கியது. எனவே இன்றளவும் பருவகாலத்தைக் குறிக்கும் தன்மை ஹைகூவின் உன்னதமான அடையாளமாகக் கருதப்படுகிறது. பருவத்தைக் குறிக்கும் சொல்லை கிகோ (ஃண்ஞ்ர்) என்கின்றனர் ஜப்பானியர். பாஷோ எழுதியுள்ள ஆயிரத்துக்கு மேற்பட்ட ஹைகூக் கவிதைகளில் பத்துக் கவிதைகள்தான் பருவக் குறிப்பில்லாதவையாக இருக்கும் என அறிஞர்கள் ஆராய்ந்து கூறியுள்ளனர்.
பருவக் குறிப்பில்லாத கவிதைகளை அவர்கள் ஜோ (ழர்) என்று பெயரிட்டழைத்தனர். ஜோ என்பதற்குப் பருவமற்றது என்பதுதான் பொருள். ஜப்பானிய மொழியில் முகி (ஙன்ந்ண்) என்பது அத்தகைய கவிதைக்கு இடப்பட்ட பெயர்.
ஹைகூவை - ஓர் அடியில், இரண்டு அல்லது மூன்று அடிகளில் எழுதுவது என்கிற வழக்கம் ஜப்பானியரி டையே இருந்து வந்தது. 5.7.5 என்கிற அசை எண்ணிக்கை கொண்ட மூன்றடிகளை, வண்ணத்தைத் தூரிகையில் தொட்டு ஒற்றை வரியிலும் எழுதிவிடுவார்கள். காலப்போக்கில் ஹைகூ நெகிழ்ச்சியுடையதாகி அசை களில் இருந்த வரையறையைக்கூட அப்படியே பின்பற்ற வேண்டும் என்கிற கட்டாயத்தைக் கைவிட்டுவிட்டது. ஹைகூவைச் செழுமைப்படுத்திய ஷிகி இருபத்தைந்து அசைகள் வரையில் இருக்கலாம் என்று ஹைகூவைத் தாராளமயப்படுத்தியதை- இங்கே. நாம் கருதிப் பார்க்கலாம்.
விதிமுறைகள் நெகிழ நெகிழ எழுதுவோர் எண்ணிக்கை மிகுவதும்- தரத்தின் மீதான கவனம் தளர்வதும் தவிர்க்க முடியாதவை. இதனை ஓர் இலக்கிய விபத்து என்று சொல்லலாமா?
மகாகவி பாஷோ பிறந்த - பழைய இகா மாநிலத்தில் உள்ள யூனோவில் (மங்ய்ர்) ஏற்கெனவே ஜப்பானிய ஹைகூ வளர்ச்சிக்கு முனைப்புடன் பணியாற்றி வந்த நிலையில் - ஹைகூவுக்காக ஆங்கிலப் பிரிவு ஒன்றை உருவாக் கியது. அங்குள்ள ஹை அமைப்பு, உலகம் அளாவிய ஆவலும் ஆர்வமும் ஏற்பட்டு ஹைகூ அமெரிக்காவிலும், கனடாவிலும் அகற்ற முடியாத அழுத்தமான பிடிப்பை ஏற்படுத்தி வைத்ததன் விளைவாக, ஆங்கிலம் ஒருவகையில் அனைத்துலக ஹைகூ மொழியாகி விட்டதென்றே தோன்றுகிறது என்று வில்லியம் ஜே.ஹிக்கின்சன் கூறுகிறார். இன்று குரோசிய மொழியிலும் ரோமானிய மொழியிலும் ஜப்பானிய மொழியிலும் ஹைகூ ஏடுகள் வெளிவருகின்றன. இவற்றிலெல்லாம் அவ்விரு நாட்டுத் தாய் மொழிகளில் இருப்பதோடு, ஹைகூ ஆங்கில மொழிபெயர்ப்பும் கொண்டதாக உள்ளது. ஜப்பானில் வாழும் அயல் நாட்டவர்கள் தம் தாய் மொழியில் ஹைகூ எழுதுகின்றனர் என் றால்- ஜப்பானியர் ஜப்பானிய மொழியில் எழுதுவதுபோல அயல்நாட்டு மொழி களிலும் ஹைகூ எழுதுகின்றனர். இத்தகு வியப்பான நம் விழிகளை அகலப் படுத்தும் ஹைகூச் செய்திகள் வெளி வந்து கொண்டே இருக்கின்றன.
உலக மொழிகள் பலவற்றுள்ளும் ஹைகூக்குள்ள பொருண்மைகள் மாற்றம் அடைந் துள்ளன. எல்லாவற்றி லும் இயற்கைப் பருவம் சுட்டும் சொல்லோ. பருவத்திற்குரிய முதல், கரு, உரிப் பொருள் களோ இருப்பதில்லை; பெருந் தொழில் நிறுவன ஹைகூ (ஈர்ழ்ல்ர்ழ்ஹற்ங் ஐஹண்ந்ன்) என்றும் மிகுபாலியல் ஹைகூ (ஊழ்ர்ற்ண்ஸ்ரீ ஐஹண்ந்ன்) என்றும் கிளை பிரித்து வளர்ந்து வருகின்றன. இன்றைய பெரும்பாலான ஹைகூக் கவிதைகளில் மூன்றடிகள் என்பதும்கூட, ஆங்காங்கே பிறழ்ந்து வருவதையும் நாம் காண்கிறோம். சொல்லுகிற முறை, உத்தி, தொனி, உணர்வு நிலை - இவற்றில் ஹை அடையாளம் தெரிந்தால் போதும் என்கிற நிலைதான் இன்றைய எதார்த்தம்.
எனினும், இயற்கையின் அல்லது ஜென் தத்துவத்தின் இழைகள் குறிப்பாகவோ வெளிப்படையாகவோ இல்லாத ஹைகூக் கவிதைகள் பொலிவும் ஈர்ப்பும் பொன்றியனவாகவே கருதப்படுவது - ஹைகூ பற்றிய ஒரு பொது நிலை மதிப்பீடாக இன்றும் உள்ளது. இயற்கை அல்லது ஜென் இடம் பெறாத இத்தகு படைப்புகளை "சென்ரியு' என்கிற வகைமைக்குள் நாம் சேர்த்து விடலாம். ஜப்பானியர்கள் இயற்கைக்குத் தம் வாழ்வில் பரந்தவெளியைப் படைத்துக்கொள்கின்றனர்.
மேலைநாட்டுக் கவிதைகளில் இயற்கை தனியான பாடுபொருளாக அமைகிறது. அப்படி ஹைகூவைப் படைப்பது - பார்ப்பது ஜப்பானியர் வழக்கம் இல்லை. ஜப்பானில் மதம், காதல், சமூக அங்கதம். தத்துவப் பிரதிபலிப்பு. அறநெறி- எல்லாமே, இயற்கையின் துணைநிலையான நிலையில் ஒளியும் மணமும் உடையனவே. இது குறித்து ஹைகூ ஆய்வாளர் கென்னத் யசுதா "ஜப்பானில் இயற்கையின் மற்றொரு பாடுபொருள் வகையல்ல. மானுடச் செயல்கள், மானுட விவகாரங்கள் எல்லாம் இயற்கையின் அங்கங்களே. மனிதனே இயற்கையின் ஓர் அங்கம் என்றான பிறகு-
அவன் தொடர்பானவை எவ்வகையில் அந்நியமாகிவிடும்' என்று வினா எழுப்புகிறார். ஹைகூக் கவிஞன் மானுடம் மரித்துப் போனவற்றில் மானுடத்திற்கு அயன்மைப்பட்டவற்றில் எப்படி வாழ்வான் என்றும் அவர் வினா எழுப்புகிறார்.
பொதுவாக, இயற்கையோடு மானுட இயற்கையைத் தொடர்புபடுத்துவதுதான் ஹைகூ என்று சொன்னால்- முதன்மையாக மானுட இயற்கையோடு தொடர்பு கொண்டதாய் இருப்பதை சென்ரியு என்று சொல்லலாம் என்று வான்டென் ஹியூவெல் கூறுகிறார்.
எப்படிப்பட்ட மாறுதல்களை ஏற்றுக் கொள்ளும் சூழ்நிலைகள் வந்தபோதிலும்- ஹைகூ தனது உயிர் நாடியாக உள்ள இயற்கையை இழந்துவிடக்கூடாது என்பதில்- ஹைகூவுக்குப் புதிய தடம் போட்ட, கட்டமைப்பு நெகிழ்ச்சிகளுக்கு விட்டுக்கொடுத்த சிகி மிகுந்த அக்கறையுள்ளவராக இருந்துள்ளார்.
இயற்கை, ஹைகூவில் இடம் பெறும்போது, அதன் பயன் என்ன? அல்லது அதன் செயற்பாடு என்ன? செயற்கையாக ஒரு பருவம் குறித்த சொல்லைப் பயன்படுத்தி விட்டால்- அது ஹைகூவின் இலக்கணத் தேவையை நிறைவு செய்தது ஆகிவிடுமா? எனவே இயற்கை வேறு எதற்காகவோ இடம் பெறுகிறது ஹைகூவில். அது எது? இயற்கையின் மூலமாகக் கவிதையில் உய்த்துணர வேறு ஒன்றோ பலவோ உண்டு, நம் அருமைச் சங்கப் பனுவலில் நிறைந்து காணப்படும் இறைச்சி, உள்ளுறை போன்றவை ஹைகூவிலும் உண்டு. இப்படி உய்த்துணர வைக்கும் உணர்வுநிலைத் தூண்டல் (நன்ஞ்ஞ்ங்ள்ற்ண்ஸ்ங்ய்ங்ள்ள்) இயற்கைப் பருவம் குறித்த சொல்லாடலால் நிகழ்வது இரண்டாவது காரணாமாகிறது.
மூன்றாவது காரணம். ஜப்பானியர்களுக்கு இயற்கை மீதான விடுதல் அறியா விருப்பில் கனிந்த காதல் என்று சொல்லலாம். ஏற்கெனவே இது பற்றி இம்முன்னுரையில் குறிப்பிட்டிருக்கிறேன். அறுவடைக்கால நிலாவை நுகர, படகுகளில் ஏறிக் கடல் உலா வருவதும், சிகர உச்சிகளை முத்தமிட்டு, பனிக்கட்டிகளின் படலங்களில் மனம் பறிகொடுத்து மூழ்குவதும், காரிருள் கவ்விய வேளைகளில் பொன்மணிகளைப் போட்டிக்கழைக்கும் மின்மினிகளிடையே மோகங்கொண்டு திரிவதும். மரச்செறிவுமிக்க மலைச் சரிவுகளில், பனி கடித்த மேப்பிள் இலைகளோடு உரையாடுவதும் அவர்கள் வாழ்வின் வனப்பு மிக்க கூறுகள். தவளைகள் குரவில் அவர்கள் காணும் இனிமையும் இசையும் வியக்கத்தக்கவை. இலையுதிர்கால முன்னிரவுப் பொழுதுகளில், பாடும் பூச்சிகளைக் கூண்டில் அடைத்து விற்க வருபவர்களும் - ஆவலோடு அதை வாங்கி- அரிய செல்வமாகக் கொண்டு வீட்டுக்குத் திரும்புபவர்களும் அங்குக் காண்டோர் - "பூச்சிப் பாடலை'த் தாமும் நுகரவே தவிப்பார்கள்.
கையில் எழுதுகோலும், குறுந்தாள்களுமாக அலைந்து பருவகால இயற்கையின் பல வண்ணக் கோலங்களைக் கண்டு கவிதைத் தூண்டுதல் பெற்று - கற்பனையும் உணர்வும் கனத்து வர, கவிதைகளில் அவற்றை இறக்கி வைக்கும் கவிஞர்கள் ஜப்பானில் உண்டு. எண்ணற்றவர்கள் இப்படிப்பட்ட கவிதைப் பசியோடு இயற்கையின் மடியில் இன்பப்பிடியில் கிடக்கும் குறும் பயணத்தை ஜின்கோ (ஏண்ய்ந்ர்) என்று ஜப்பானியம் குறிப்பிடும். கவிதைக்காகப் புறப் பட்டுப் போதல் (டர்ங்ற்ழ்ஹ் ர்ன்ற்ண்ய்ஞ்ள்) என்பதே இதன் பொருள்.
ஜப்பானில் ஓர் ஆண்டில் பருவங்கள் அமைவது பற்றிய குறிப்புகள், அவ்வப் பருவங்களுக்கு உரிய பூக்கள், விழாக்கள், பயிர்கள், தொழில் என்னும் கருப்பொருள் விவரங்களைப் பட்டியலிட்டுக் காட்டும் தொகுப்புகள் உண்டு. இத்தொகுப்பு நூல்கள் கவிதை எழுத விரும்புகின்றவர்களுக்குக் கையேடுகள் போலப் பயன்படுபவை. இக்கையேடுகள் துணையை மட்டுமே கொண்டு ஹைகூ எழுதுகிற கவிஞர்கள் உண்டு. எனவே பெரும்பாலான கடைகளில் இந்நூல்கள் விற்கப்படுகின்றன. அதற்கு சைஜிகி (நஹண்த்ண்ந்ண்) என்று பெயர்.
"ஹைகூப் பருவகாலங்கள்' (பட்ங் ஐஹண்ந்ன் நங்ஹள்ர்ய்ள்) என்னும் நூல் இதுபற்றிய ஏராளமான குறிப்புகளையும் விளக்கங்களையும் தருகிறது. தொல் ஜப்பானியப் படைப்பு களில் பருவகாலங்கள் எப்படி இடம்பெற்று இருக்கின்றன என்பதைச் சொல்வதோடு- ஹைகூவில் இன்றுவரை இயற்கையின் பருவ காலங்கள் எப்படிப் பயன்படுத்தப் படுகின்றன என்பதையும் காட்டுகிறது இந்நூல். இந்நூல் போலவே வேறு பல நூல்களும் ஜப்பானிய மொழியில் வெளிவந்திருப்பதோடு ஆங்கிலத்திலும் பெயர்ப்பாகியுள்ளன. ஜப்பானிய ஹைகூக் கவிஞர்களில் பெரும்பாலானோரிடம் எப்போதும் கையில் அல்லது பையில் சைஜிகி இருக்கும், அதுவும் கவிதைச் சுற்றுலாவுக் குப் போனால் கட்டாயம் எதை எடுத்துச்செல்ல மறந்தாலும் இந்தப் பருவகாலக் குறிப்பேட்டை மறவாமல் எடுத்துச் செல்வர் என்று ஹைகூ ஆய்வாளர் ஹிக்கின்சன் குறிப்பிடுகிறார். பருவகால உணர்வுக்கே கிசெட்சு (ஃண்ள்ங்ற்ள்ன்) என்று ஜப்பானியர்கள் பெயரிட்டிருக்கின்றனர்.
எனவே பருவகாலம் சுட்டும் சொல்லி பருவகாலத் தலைப்பு கள் போலவே பருவகால உணர்வும்- முப்பரிமாணமாக அமைந்து மூவரிப் பாட்டாகிய ஹைகூவை ஈன்றெடுக்கின்றன.
ஆனால் இன்னும் கொஞ்சம் விரிவாக்கினால்- ஒவ்வொரு பருவமும் ஏழு உட்பகுப்புகளைக் கொண்டு பார்க்கத்தக்கதாக இருப்பதை நாம் அறியலாம்.
1. ஜிகோ (ஓண்ந்ர்) பருவம்- தட்பவெப்பம் - காலநிலையோடு தொடர்புடைய அடிப்படையான கூறு.
2. டென்மான் (பஸ்ரீய்ம்ர்ய்) - வானியல் நிலை, காற்று நிலை முதலியன.
3. சிரி (ஈட்ண்ழ்ண்) - நிலம், நீர் முதலிய பூமிப் பரப்புத் தொடர்பு நிலைகள்.
4. கியோஜி (ஏஹ்ர்ஞ்ங்) - கடைப்பிடிகள், வாழ்வியல் விடுமுறைகள் முதலியன.
5. செய்கட்சு (நங்ண்ந்ஹற்ள்ன்) - மனித உழைப்பு, விளையாட்டு, ஓய்வு முதலியன.
6. தோபட்சு (உர்க்ஷன்ற்ள்ன்) - பாலூட்டிகள். பறவைகள். மூட்டைப்பூச்சிகள், புழுக்கள் முதலியன.
7. சோக்குபட்சு (நர்ந்ன்க்ஷன்ற்ள்ன்) - பூக்கள், மரங்களின் தளிர்கள், கடல் களைகள் முதலியன.
ஜப்பானியர்கள் புத்தாண்டுப் பிறப்பையும் இயற்கை யின் ஒரு பருவத்திற்குரிய பெருமையுடையதாய் அதனைச் சமன்படுத்தி அதற்கும் பட்டியலைத் தொகுத்துக் கொடுத் திருக்கின்றனர்.
மேற்குறித்த கருப்பொருள்களைக் கொண்ட சைஜிகி, ஹைகூ புனைவோர் கைகளில் இருப்பதால், இருக்கும் இடத்தில் இருந்து கொண்டே ஹைகூ எழுத முற்படுபவ ரைத் தடுக்கமுடியாவிட்டாலும் - நேரிடை அனுபவ மான இயற்கையில் இதயம் கரைந்து எழுதப்படும் கவிதை யின் உயிர்ப்பை உணர்வுச் சிலிர்ப்பை இழந்து அவர்கள் ஹைகூ சோகை படிந்தே இருக்கும்.
உலகில் மற்ற நாடுகளிலும் இத்தகைய பருவகாலச் சொல் திரட்டு நூல் தயாரிக்கும் பணி தொடர்ந்ததையும் ஹைகூ வரலாறு நமக்கு உணர்த்துகிறது.
இங்கிலாந்தில் நான்கு பருவங்கள் குறித்த சொல் திரட்டு முயற்சி மேற்கொள்ளப்பட்டது. மரபான முன்னே நாம் கண்ட ஏழு வகைப் பிரிவுகளில் 1405 பதிவுகள் செய்யப்பெற்றுள்ளன. அவற்றுள் பருவங் குறிக்காதனவாக (70) 450 பதிவுகள்: உள்ளன. விலங்குகள். தாவரங் கள், வீடு, ஆடைகள், உணவு, போக்குவரத்துச் சாதனங் கள், கல்வி, தொழில், திருமணம். மதம். விளையாட்டுகள், பொழுதுபோக்குகள், தொன்மங்கள், மரபுகள் ஆகிய பிரிவுகளில் அவற்றை அடக்கினர்.
இப்படிப்பட்ட பருவச் சொல் திரட்டுகள்- பிரேசில், அர்ஜன்டைனா உட்படப் பல நாடுகளிலும் உருவாக்கப் பட்டதாகத் தெரிகிறது. அமெரிக்காவிலும், ஹவாய்த் தீவிலும் இம்முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதுண்டு.
1980-இல் ஆங்கில ஹைகூவில் பருவகாலச் சொற்களின் திரட்டு - யுகி தீய்கீ (வன்ந்ண் பங்ண்ந்ங்ன்) குழுமத் தால் வெளியிடப்பட்டது. அதன் பதிப்பாசிரியர் ஜின் - இச்சி சகுமா என்பவர்.
இப்படிப்பட்ட முயற்சிகளின் ஊடாக, 1992-இல் வெளிவந்த "ஒரு ஹைகூ உயிரினக் காட்சிச் சாலை' என்னும் நூலும் நம் கவனத்துக்கு உரியது. இந்நூலில் நடப்பன, பறப்பன. தவழ்வன, நீந்துவன என்கிற பிரிவுகளில் உயிரினங்கள் பற்றிய கருத்துகளையும் அவை ஹைகூவில் இடம் பெற்றிருக்கும் சிறப்பையும் கண்டு நாம் வியப்படை யாமல் இருக்க முடியாது. இந்நூலின் முன்னுரையை இவ்வளவு விரிவாக நான் எழுதக்காரணம், நம் தமிழ் மொழியில் தொல் இலக்கணமாகிய தொல்காப்பியத்தை நம் ஹைகூக் கவிஞர்கள் கட்டாயம் பயில வேண்டும் என்பதை வலியுறுத்திச் சொல்லவேண்டும் என்பதுதான். தொல்காப்பியம் கற்று நம் காலத்திற்கு ஏற்றபடி திணைக்கோட்பாட்டை விரிவுபடுத்திக் கொள்ளலாம் என்பதைச் சுட்டிக்காட்டுவதும் என் நோக்கம். நம் மண்ணுக்கேற்றபடி ஹைகூவை வளர்த்தெடுக்க இத்தகைய முயற்சி மிக மிகத்தேவை. மலையாள மொழிக் கவிஞரும். ஆங்கிலப் பேராசிரியருமான அய்யப்பப் பணிக்கர் தொல்காப்பியத் திணைக்கோட்பாட்டின் வழியில் உலக இலக்கியங்களைப் பார்க்கமுடியும் என்று கூறுகிறார். தொல்காப்பியத்தின் பொருளதிகாரம் திராவிட அழகியலுக்குத் தமிழ் செய்த கொடை என்று உச்சிமேல் வைத்து மெச்சுகிறார்.
பொருள் என்பதே முதல், கரு, உரிப்பொருள் என வகுத்துக் காட்டும் தொல்காப்பியர்- அவற்றுள் முதற் பொருளாவது, நிலமும் காலமும் என இருவகைப்படும் என்பார்.
பேரியற்கையின் உயிர்த்தளமாக இருப்பன இடமும் பொழுதும் (நல்ஹஸ்ரீங் ஹய்க் பண்ம்ங்) அல்லாது வேறு என்ன? நிலம் என்பது ஐவகைப்படும். முல்லை, குறிஞ்சி, பாலை, மருதம், நெய்தல் என்னும் இம்முறை வைப்புப் பற்றிக் கருத்து மாறுபாடுகள் இருப்பினும்- இவ் ஐவகைப் பிரிவுகளில் உலகப் பரப்பின் எந்தப் பகுதியையும் அடக்கிவிடமுடியும். காலமாகிய பொழுதைச் சிறு பொழுது, பெரும்பொழுது என்று இருபாற்படுத்தினர் நம் முன்னோர். ஒரு நாளுக்கு உரியன சிறு பொழுதுகள்: ஓராண்டிற்கு உரியன பெரும்பொழுதுகள் என்று பாகுபடுத்தினர். இப்படியான நிலமும் பொழுதும் கருக்கொண்டு உருவான பொருள்கள் கருப்பொருள்கள் என்றும்; இவற்றின் பின்னணியில் மானுட வாழ்வியக்க மாக இருப்பன உரிப்பொருள்கள் என்றும் கூறப்படும். ஜப்பானியக் கவிஞர்களுக்கு எப்படி அவர்களுடைய பருவக் குறிப்புச் சொல் திரட்டுப் பயன்படுமோ அவ்வாறு பயன்படவல்லது தமிழில் உள்ள முதல். கரு, உரிப்பொருள் பற்றித் தொல்காப்பியம் தரும் பட்டியல்.
தமிழில் நம் மரபுவழி உதவியோடு ஹைகூவைப் படைக்க நம் கவிஞர்கள் முன்வந்தால் பாராட்டலாம். நகரியமான வாழ்வில், இயந்திரத் தொழிற்பெருக்கமும் நுகர்பொருள் நாட்டமும் மேலோங்கிய நிலையில் - இயற்கை மடியிலிருந்து தூக்கி எறியப்பட்ட தமிழனுக்கு ஹைகூவின் படைப்பின்பம், படைப்புணர்வு யாவும் அந்நியப்பட்டுவிட்டன. ஆனால் ஜப்பானில் இன்னும் அவர்களுடைய இதயத்தில் இயற்கை தடிப்பதை நுகர்ந்த வண்ணம்- உணர்ந்த வண்ணம் அவர்கள் வாழ்வோட்டம் அமையாமல் இல்லை. நம் தமிழில் மிகச்சிறந்த ஹைகூக் கவிஞர்கள் இருக்கின்றனர். உலக அளவிலான போட்டி யில் வெற்றிபெற்ற மு.முருகேஷ்போல இன்னும் எத்தனையோ பேர் தாகத்தோடும் தணியாத வேகத் தோடும் ஹைகூ படைத்து வருகின்றனர், பட்டியலிட்டால் இன்றியமையாப் பெயர்களே விடுபட்டுப் போகலாம் என்கிற காரணத்தால் அம்முயற்சியை நான் தவிர்க்கிறேன்.
நான் ஹைகூக் கவிஞர்களிடையே பேச வாய்ப்பு நேரும்போதெல்லாம் - நம்முடைய இயற்கை, இலக்கியச் சூழலி-ருந்து ஹைகூ படைக்க வாய்ப்பிருப்பதைச் சுட்டிக்காட்டியிருக்கிறேன். எடுத்துக்காட்டாக- ஐம்பெரும் பூதங்கள் பற்றி. ஐவகைத் திணைகள் பற்றி. நாம் காணும் நம் சூழல் பறவைகள் பற்றி. பூச்சிகள் பற்றி. உயிரினங்கள் பற்றி நாம் ஹைகூ செய்யக்கூடாதா என்று நான் கேட்பது உண்டு.
நம் சோளம் பற்றி, நம் கம்பு பற்றி, நம் வீட்டுக்கூரைப் பல்லி பற்றி கொல்லை ஓணான் பற்றி - இப்படி எத்தனையோ நமக்கும் பாடுபொருளாக உள்ளனவே என்று சொல்லியிருக்கிறேன்.
மீண்டும் தொல்காப்பியத்துக்குத் திரும்புவோம். எடுத்துக் காட்டுக்கு ஒரு திணையின் முதல், கரு, உரிப் பொருள் பற்றி அளவாக நாம் இங்குக் காணலாம்.
முல்லைத் திணை- இதனை முதலில் வைத்துத் திணை வரிசையைத் தொல்காப்பியர் நூற்பா வகுப்பார்.
மாயோன் மேய காடுறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் பாலைச் சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே.
தொ.பொருள். அகத். நூற்பா 5.
முல்லைத்திணை என்பது -
காடும் காடு சார்ந்த பகுதியைக் குறிக்கும் பெயர். முல்லை நிலத்துக்குரிய பெரும்பொழுது கார்காலம். மழை பெய்யும் காலம்- அஃது ஆவணித் திங்களும் புரட்டாசித் திங்களும் ஆகும். மாலையாவது இராப் பொழுதின் முற்பகுதி. இதுதான் முல்லை நிலத்தின் சிறுபொழுது, இவ்வாறான நிலமும் பொழுதும் அமைந்த முல்லையில் கருக்கொண்டு உருவாகும் கருப் பொருள்கள், பட்டியல் பார்க்கும் முன் கருப்பொருள் பற்றிய தொல்காப்பிய நூற்பாவைப் பார்த்து விடுவது நல்லது.
தெய்வம் உணாவே மாமரம் புள் பறை செய்தி யாழின் பகுதி யொடு தொகைஇ அவ்வகை பிறவும் கருவென மொழி.
இந்நூற்பாவில் ஒன்பது கருப்பொருள்கள் கூறப் பட்டுள்ளன.
ஒவ்வொரு நிலத்துக்கும் ஒரு தெய்வம் உண்டு (தெய்வமும் கடவுளும் ஒரே பொருளைக் குறிப்பன அல்ல).
1. முல்லைக்குத் தெய்வம்- மாயோன்- (கண்ணன்)
2. உணவு- வரகும் முதிரையும் சாமையும்
3. மாலி மானும் முயலும்
4. மரம் - கொன்றையும், குருந்தும், காயாவும்
5. புள்- கானாங்கோழி
6. பறை- ஏறுகோட் பறை
7. செய்தி (தொழில்) நிரை மேய்த்தல்
8. யாழின் பகுதி (பண்) சாதாரி: யாழ்- முல்லை யாழ்
இந்நூற்பாவில், அவ்வகை பிறவும் என்னும் பட்டியல் இறுதி. கருப்பொருள்கள் இன்னும் பலவாக இருக்கலாம் என்பதற்கு இடம் தருகிறது. உரையாசிரியர் இளம் பூரணர் தம் உரையில் இதனைப் பயன்படுத்தி - முல்லைக் குப் பூ- முல்லையோடு பிடவம். தளவம் என்பனவற்றையும் இணைத்துக் கொள்கிறார். நூற்பாவில் முல்லைக்கு நீர் எது என்று சொல்லப் படவில்லையே என்று மறவாமல் "கான்யாற்றை' நமக்கு உதவுகிறார்.
பின்வருவனவற்றையும் இணைத்துக் கொள்ளலாம்:
மக்கள்: குறும்பொறைநாடன் தோன்றல். இடையர், இடைச்சியர், ஆயர், ஆய்ச்சியர்.
ஊர்: பாடி, சேரி
தொழில்: சாமை, வரகு விதைத்தல், களை கட்டல், கடா விடுதல், ஆநிரை மேய்த்தல் உரிப்பொருள் (அகம்):
பிரிந்து சென்ற தலைவன் வருகைக்காகக் காத்திருத்தல்.
தமிழ் ஹைகூக் கவிஞர்கள் எழுத்து, சொல் அதிகாரங் களைப் படித்து இடர்ப்பட வேண்டாம்; பொருளதி காரத்தையேனும் தெளிவாகப் படித்துப் புரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.