தாத்தாவும் பணிப் பெண்களும் - மாதவிக்குட்டி தமிழில் : சுரா

/idhalgal/eniya-utayam/grandfather-and-maids-madhavikutty-tamil-sura

தாத்தாவை கவனமாகப் பார்த்துக்கொள்வதற்கு இளமையான எண்ணங்கள்கொண்ட பணிப்பெண்கள் இருந்தார்கள். அவருடைய பாதிக்கப்பட்ட மனநிலை பிள்ளைகளிடம் வெறுப்பை மட்டுமே உண்டாக்கியது.

ஆனால், பணக்காரராக இருந்ததால், அவர்கள் அவருக்கு சேவைசெய்பவர்களுக்கு சம்பளத்தையும், செலவுக்கான பணத்தையும் எல்லா மாதங்களிலும் ஒரு தூதுவன்மூலம் கொடுத்தனுப்பினர்.

கிழவர் தன் பிள்ளைகளை நினைக்கும்போது, கோபத்தால் சிலிர்த்தார். பல்லில்லாத வாயின் வழியாக வித்தியாசமான சத்தங்களை எழுப்பினார். காய்ந்த கிளையைப்போல இருந்த கைகளை உயர்த்தி, கோபத்தை வெளிப்படுத்தினார்.

அவர்களில் ஒருவராவது தன்னைப் பார்ப்பதற்காக வருவார்களென்றும், தன்னுடைய உள்ளங்கையைத் தொடுவார்களென்றும் அவர் நினைத்தார்.

ஒருநாள் மகனின் மனைவி தொலைபேசியில் கூறினாள். மறுநாள் காலையில் அவள் காரில் வருவதாகவும், கிழவரை வீட்டிற்கு அழைத்துப் போவதாகவும்... நர்ஸும் பணிப்பெண்களும் கிழவரை வாழ்த்தினார்கள். '

"பிள்ளைகள்கிட்ட பாசம் உண்டாக ஆரம்பிச்சிடுச்சு அய்யா... நாளை உங்களுக்கு பிரியாணியும் பொரிச்ச நெய்மீனும் கிடைக்கும்.''

கிழவர் சிரித்தார்.

அன்று உறக்கம் குறைவாகவே இருந்தது. இடையில் அவ்வப்போது கண் விழித்தார். சாளர

தாத்தாவை கவனமாகப் பார்த்துக்கொள்வதற்கு இளமையான எண்ணங்கள்கொண்ட பணிப்பெண்கள் இருந்தார்கள். அவருடைய பாதிக்கப்பட்ட மனநிலை பிள்ளைகளிடம் வெறுப்பை மட்டுமே உண்டாக்கியது.

ஆனால், பணக்காரராக இருந்ததால், அவர்கள் அவருக்கு சேவைசெய்பவர்களுக்கு சம்பளத்தையும், செலவுக்கான பணத்தையும் எல்லா மாதங்களிலும் ஒரு தூதுவன்மூலம் கொடுத்தனுப்பினர்.

கிழவர் தன் பிள்ளைகளை நினைக்கும்போது, கோபத்தால் சிலிர்த்தார். பல்லில்லாத வாயின் வழியாக வித்தியாசமான சத்தங்களை எழுப்பினார். காய்ந்த கிளையைப்போல இருந்த கைகளை உயர்த்தி, கோபத்தை வெளிப்படுத்தினார்.

அவர்களில் ஒருவராவது தன்னைப் பார்ப்பதற்காக வருவார்களென்றும், தன்னுடைய உள்ளங்கையைத் தொடுவார்களென்றும் அவர் நினைத்தார்.

ஒருநாள் மகனின் மனைவி தொலைபேசியில் கூறினாள். மறுநாள் காலையில் அவள் காரில் வருவதாகவும், கிழவரை வீட்டிற்கு அழைத்துப் போவதாகவும்... நர்ஸும் பணிப்பெண்களும் கிழவரை வாழ்த்தினார்கள். '

"பிள்ளைகள்கிட்ட பாசம் உண்டாக ஆரம்பிச்சிடுச்சு அய்யா... நாளை உங்களுக்கு பிரியாணியும் பொரிச்ச நெய்மீனும் கிடைக்கும்.''

கிழவர் சிரித்தார்.

அன்று உறக்கம் குறைவாகவே இருந்தது. இடையில் அவ்வப்போது கண் விழித்தார். சாளரத்திற்கு அப்பால் பார்த்தது புலர்காலைப் பொழுதா அல்லது இரவின் நிலவா? ஒருமுறை தனக்குத் தெரியாமலே படுக்கை நனைந்ததாகக் கிழவருக்குத் தோன்றியது. நர்ஸை அழைத்து எழச் செய்வதற்கு துணிச்சல் வரவில்லை. சமீபநாட்களாக பொதுவாகவே நல்ல குணத்தைக்கொண்ட அந்த இளம்பெண்ணும் அவரை வெறுக்க ஆரம்பித்திருக்கிறாள். ஒன்றோ இரண்டோ முறை சாயம் தேய்க்கப்பட்ட விரல் நுனிகளைக்கொண்டு அவள் அவரைக் கிள்ளி வலிக்கச் செய்தாள்.

மூத்திரத்தில் கிடந்தால் பொதுவாக வரக்கூடிய நடுக்கம் வந்தது. பாதத்திலிருந்து தலைவரை நடுக்கமிருந்தது.

காலையில் எதிர்பார்ப்புகளுடன் பணியாட்கள் தாத்தாவைக் குளிப்பாட்டினார்கள்.

"அதிர்ஷ்டமிருந்தா, அய்யா... உங்களுக்கு மகன் பீர் ஊற்றித் தருவார்.''

நர்ஸ் கூறினாள். பீர் வேண்டுமென பிடிவாதம் பிடிக்கும்போது, சமையல்காரி சீரக நீரைக் கொடுப்பாள். அவரை முட்டாளாக்குவதற்கு அந்த இளம்பெண்கள் எல்லா நேரங்களிலும் முயற்சித்துக்கொண்டிருந்தார்கள்.

ஆனால், அவர்கள் அருகில் இருப்பது, தனக்குப் பிடித்திருக்கிறதென்று கிழவர் சிந்தித்தார்.

அவர்களும்கூட இல்லாமலிருந்தால், அவர் அனாதையாகிவிடுவார்.

வெளிநாட்டில் கல்விகற்ற பிள்ளைகள் இன்று பெரிய மனிதர்கள். ஆனால், அவர்களுக்கு அவர் தேவையற்றவராகி விட்டார்- கிழவர் தனக்குள் கூறிக் கொண்டார். மகனின் மனைவி காரை எடுத்துக்கொண்டு வருவாள் என்று கருதி, கிழவர் ஆடையணிந்து சிறிது நேரம் காத்திருந்தார். மதியவேளை வந்தபிறகும் கார் வரவில்லை. பணியாட்கள் தங்களுக்காக தயாரித்திருந்த சோற்றையும் பருப்புக் குழம்பையும் கிழவருக்குப் பரிமாறினார்கள்.

காரில் கிழவரை அழைத்துச் செல்வதற்கு ஏன் வரவில்லை என்ற கேள்வி எஞ்சி நின்றது. மகனின் மனைவி தொலைபேசியில் பேசவில்லை. சில நேரங்களில் கிழவர் முழு நிர்வாணக் கோலத்தில் வீட்டிற்கு வெளியே ஓடுவார். அந்த நேரங்களில் பணியாட்கள் கூப்பாடு போட்டவாறு அவரை இழுத்துப்பிடித்து உள்ளே கொண்டுவருவார்கள். சில நாட்களில் அவர்கள் அவரை இரும்புக்கட்டிலில் புடவையைக்கொண்டு கட்டிப் படுக்கச் செய்துவிட்டு, வெளியே செல்வார்கள். சிறிது தூரம் நடந்தால், கடற்கரை வந்துவிடும். இளம்பெண்களுக்கு கடற்கரையில் அமர்ந்திருப்பதும், காற்று வாங்குவதும் பிடித்திருந்தன.

அவர்கள் மணலில் அமர்ந்து கொண்டு ஐஸ் க்ரீமையும் வறுத்த கடலையையும் சாப்பிட்டார்கள்.

ஒருநாள் இரக்க மனதுடன் நர்ஸ், கிழவருக்கு ஒரு பெப்ஸியைப் பருகுவதற்காகக் கொடுத்தாள். அவர் பல்லில்லாத சிரிப்புடன் அந்த புட்டியை வாங்கிக்கொண்டார். அதைப் பருகுவதைப் பார்த்தவாறு அவள் கூறினாள்: "சில வேளைகள்ல எனக்கு பரிதாபம் உண்டாகும். மூணு பிள்ளைங்க... யாராவது இங்க வர்றாங்களா?'' "காசு இருக்கறவங்ககிட்ட அன்பில்லை.'' சமையல்காரி கூறினாள்.

தான் வீட்டிற்குப் போவதாகக் கூறியபோது, நர்ஸின் தோளைப் பற்றியவாறு கிழவர் மெதுவான குரலில் கூறினார்: "என்னையும் அழைச்சிட்டுப் போ.''

dd

"நான் அழைச்சிட்டுப் போறேன். ஆனா என் வீட்ல பட்டினி.. ஒரு லட்ச ரூபாய் தந்தா, நான் கொண்டுபோய் பார்க்கறேன்.''

ஒரு லட்சம் இருக்கட்டும்... ஒரு நூறு ரூபாய் நோட்டுகூட கிழவரிடம் இல்லை. அதனால் அவர் சிறிதுநேரம் கண்ணீர்விட்டவாறு சுருண்டு படுத்திருந்தார்.

"இளம்வயசுல மகா துஷ்டனா இருந்ததா அந்த அம்மா சொன்னாங்க. பக்கத்து வீட்ல இருக்கற அந்த பிராமணப் பெண்...''

"அவங்க சொன்னது உண்மையாதான் இருக்கும்.'' ஒரு பணிப்பெண் கூறினாள்.

பிள்ளைகளைப் பிடிச்சு அடிச்சிருப்பாரு. இல்லைன்னா... அவங்க இங்க வராம இருப்பாங்களா?''

புண்ணியம் செஞ்சிருப்பாரு. நாம இங்க தங்கி, அய்யாவைப் பார்த்துக்கறோம்ல?''

பணிப்பெண்கள் சிரித்தார்கள். தனக்கு எதுவும் புரியவில்லை என்பதைப்போல அவர்கள் பேசிக்கொண்டிருந்தார்கள்- கிழவர் சிந்தித்தார்.

தன் மகளைப்பற்றி பல நேரங்களில் கிழவர் நினைத்துப் பார்த்தார். அவளும் தன்னை வெறுக்க ஆரம்பித்து விட்டாளோ?

"பிந்து ஃபோன் பண்ணினாளா?'' அவர் நர்ஸிடம் கேட்டார். "நேத்து ராத்திரி ஃபோன் அடிச்சதைக் கேட்டேன். அது பிந்துவா?''

"இல்ல அய்யா. அது ஒரு ராங் நம்பர்.'' தொலைக்காட்சிப் பெட்டிக்கு முன்னால் கிழவரைப் பிடித்து அமரவைத்து, பணிப்பெண்கள் கூறினார்கள்.

"இன்னைக்கு நல்ல தமிழ்ப் படம் இருக்கு... அய்யா, நீங்க பாருங்க'' திரையில் பெண்களும் ஆண்களும் பாட்டு பாடியவாறு குதித்துக்கொண்டிருந்தார்கள். அது இசை என்றோ, அந்த குதித்தல் நடனமென்றோ கிழவருக்குத் தோன்றவில்லை. அதனால் அதை நிறுத்தும்படி அவர் கட்டளையிட்டார். பணிப்பெண்கள் எதிர்த்தார்கள்.

கிழவரின் மரணத்திற்குப்பிறகு, ஒரு பழைய தொலைக்காட்சிப் பெட்டியையும், ஒரு கைக் கடிகாரத்தையும், ஒரு ப்ரஷர் குக்கரையும் மட்டுமே மகனின் மனைவி எடுத்து தன் காரில் வைத்தாள்.

"எஞ்சியிருக்கற பொருள்களை யார் வேணும்னாலும் வந்து எடுத்துக்கட்டும். எனக்கு வேணாம்... உண்மை...'' அவள் கூறினாள்.

அதைக் கேட்டதும், காட்சியைப் பார்த்துக்கொண்டு நின்றிருந்த பிராமணப்பெண் மிகவும் நீளமான பெருமூச்சு விட்டாள்.

uday010821
இதையும் படியுங்கள்
Subscribe