நாணாமை நாடாமை நாரின்மை யாதொன்றும்
பேணாமை பேதை தொழில்.
-என்பது வள்ளுவர் வாக்கு.
அறிவற்றவர்கள் என்றால் யார் என்ற கேள்விக்கு, இதன்மூலம் விடை சொல்லும் வள்ளுவர், "வெட்கப்பட வேண்டியதற்கு வெட்கப் படாமலும், தேடவேண்டிய பெருமையைத் தேடா மலும், போற்ற வேண்டியவற்றைப் போற்றாமலும்.
பாதுகாக்கவேண்டிய பெருமையைப் பாதுகாக்காமல் வாய்பொத்தி நிற்பவர்கள்தான் அறிவற்றவர்கள்' என்று அழுத்தமாகவே சொல்கிறார்.
இந்தக் குறளுக்கு இலக்காகி-அழுக்காகி -இழுக்கோடு நிற்பவர்கள், தமிழக பா.ஜ.க. தலைவரான அண்ணாமலையும் அவரைப் போலவே அவர் கட்சியில் இருக்கும் ஆட்களும்தான் கர்நாடக மாநிலம் சிவமேகா நகருக்கு, கடந்த 27 ஆம் தேதி தேர்தல் பிரச்சாரத்துக்காக பா.ஜ.க. கும்பல் சென்றது. அண்ணாமலை முன்னிலை யில் நடந்த அந்த நிகழ்ச்சியில், அந்த மாநிலத்தின் முன்னாள் துணை முதல்வர் ஈஸ்வரப்பா உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர். அது கர்நாடகத் தமிழர்கள் நடுவே நடத்தப்பட்ட நிகழ்ச்சி என்பதால், கூட்டம் தொடங்கும்போது தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் ஒலிபரப்பப்பட்டது. இதைக்கேட்டு அங்கிருந்த தமிழ்மக்கள் உணர்வு மயமாக எழுந்து நின்ற நேரத்தில்...
திடீரென்று ஈஸ்வரப்பா, கோபமாகி, அந்தப் பாட்டை நிறுத்துங்கள் என்று கூச்சலிட்டு, நிறுத்தச் செய்தார். இதன் மூலம் அவர் தமிழை அவமதித்து இருக்கிறார். இதுதான், அவரைப் போன்ற கன்னடர்களின் மொழி வெறி. மொழி வன்மம்.
*
அவரைப் போன்றவர்களின் மூளை அழுக்கை, எத்தனை சோப்புப் போட்டுக் கழுவினாலும் சுத்தப்படுத்த முடியாது.
ஏனென்றால் "யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்று உலக
நாணாமை நாடாமை நாரின்மை யாதொன்றும்
பேணாமை பேதை தொழில்.
-என்பது வள்ளுவர் வாக்கு.
அறிவற்றவர்கள் என்றால் யார் என்ற கேள்விக்கு, இதன்மூலம் விடை சொல்லும் வள்ளுவர், "வெட்கப்பட வேண்டியதற்கு வெட்கப் படாமலும், தேடவேண்டிய பெருமையைத் தேடா மலும், போற்ற வேண்டியவற்றைப் போற்றாமலும்.
பாதுகாக்கவேண்டிய பெருமையைப் பாதுகாக்காமல் வாய்பொத்தி நிற்பவர்கள்தான் அறிவற்றவர்கள்' என்று அழுத்தமாகவே சொல்கிறார்.
இந்தக் குறளுக்கு இலக்காகி-அழுக்காகி -இழுக்கோடு நிற்பவர்கள், தமிழக பா.ஜ.க. தலைவரான அண்ணாமலையும் அவரைப் போலவே அவர் கட்சியில் இருக்கும் ஆட்களும்தான் கர்நாடக மாநிலம் சிவமேகா நகருக்கு, கடந்த 27 ஆம் தேதி தேர்தல் பிரச்சாரத்துக்காக பா.ஜ.க. கும்பல் சென்றது. அண்ணாமலை முன்னிலை யில் நடந்த அந்த நிகழ்ச்சியில், அந்த மாநிலத்தின் முன்னாள் துணை முதல்வர் ஈஸ்வரப்பா உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர். அது கர்நாடகத் தமிழர்கள் நடுவே நடத்தப்பட்ட நிகழ்ச்சி என்பதால், கூட்டம் தொடங்கும்போது தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் ஒலிபரப்பப்பட்டது. இதைக்கேட்டு அங்கிருந்த தமிழ்மக்கள் உணர்வு மயமாக எழுந்து நின்ற நேரத்தில்...
திடீரென்று ஈஸ்வரப்பா, கோபமாகி, அந்தப் பாட்டை நிறுத்துங்கள் என்று கூச்சலிட்டு, நிறுத்தச் செய்தார். இதன் மூலம் அவர் தமிழை அவமதித்து இருக்கிறார். இதுதான், அவரைப் போன்ற கன்னடர்களின் மொழி வெறி. மொழி வன்மம்.
*
அவரைப் போன்றவர்களின் மூளை அழுக்கை, எத்தனை சோப்புப் போட்டுக் கழுவினாலும் சுத்தப்படுத்த முடியாது.
ஏனென்றால் "யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்று உலக ஒருமையை, அங்கே எந்த ஒரு பெருதன்மைப் புலவனும் பாடவில்லை. "பிறப் பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்று கூறி. அவர் களைப் பதப்படுத்த அங்கே ஒரு வள்ளுவன் பிறக்கவில்லை. அதனால், ஈஸ்வரப்பா என்கிற மொழிவெறி மனிதர், தமிழ்த்தாய் வாழ்த்தைப் பாதியில் நிறுத்தச்சொல்லி, தன் பண்பாட்டைக் காட்டியிருக்கிறார். இப்படி தமிழ் மீது வன்மத்தைக் கொட்டினால்தான், அங்கே கன்னடர்களின் மொழிவெறியைத் தூண்டி, ஓட்டுவேட்டை நடத்த முடியும் என்பது அவருடைய ஈன புத்தி. எனவே அந்த ஆள் அப்படி நடந்து கொண்டதில் நமக்குப் பெரிய வியப்பு எதுவும் இல்லை.
ஆனால்-
அங்கே அந்த
விழாவில் குட்டிச்சுவர்
போல் நின்று கொண்டிருந்த தமிழக பா.ஜ.க. தலைவரான அண்ணாமலை, நம் தமிழ்நாட்டில் பிறந்தவர்தானே? கர்நாடகத்துக்குச் செல்லும் வரை,
அவர் தமிழ்நாட்டின் விளைச்சலைத் தின்று, தமிழ்க்காற்றை சுவாசித்து வளர்ந்தவர்தானே? அப்படிப் பட்டவருக்கு ஏன் சுரணை வரவில்லை? அவர் ரத்தம் ஏன் துடிக்கவில்லை?.
வெட்கப்பட வேண்டியதற்கு வெட்கப்படாமலும்,, தேடவேண்டிய பெருமையைத் தேடாமலும், போற்ற வேண்டியவற்றைப் போற்றாமலும். பாதுகாக்க வேண்டிய பெருமைகளைப் பாதுகாக்காமலும் வாய்பொத்தி நின்றிருக்கிறார். இதைத்தான் வள்ளுவர். நாம் முன்னமேயே குறிப்பிட்டபடி அறிவற்ற செயல் என்று கண்டிக்கிறார்.
இதற்குக் காரணம் அண்ணா மலைகளிடம் உள்ள காவி மூளை. சங்கிகளுக்கே உரிய சடல புத்தி.
அண்ணாமலை தரப்பின் இந்த இழிசெயலை, தி.மு.க. மட்டுமல்லாது, அதன் எதிர்க்கட்சியான அ,தி.மு.க.வும் கூட கண்டித்திருக்கிறது. ம.தி.மு.க., பா.ம.க., கம்யூனிஸ்ட் கட்சிகள் என தமிழகக் கட்சிகள் எல்லாம் ஒட்டுமொத்தமாக அண்ணாமலைக்கு கடும் குரலில் கண்டனம் தெரிவித்திருக்கின்றன. ஆனால் இப்போதும் அதற்காக அண்ணாமலை வருந்தவில்லை, மாறாக நடந்ததை நியாயப்படுத்த முனைவதிலேயே குறியாக இருக்கிறார்.
இதற்கு அண்ணாமலை கொடுத்த முதல் விளக்கமே, முட்டாள் தனமான விளக்கமாகும்.
"அந்த நிகழ்ச்சியில் முதலில் கர்நாடக மாநில பாடலைப் போட சொல்லியிருந்தபோது அங்கிருந்த ஆபரேட்டர் அந்த பாடலை போடவில்லை. தமிழ்த்தாய் வாழ்த்துப் பாட்டை போட்டுவிட்டார். அந்த தமிழ்த்தாய் வாழ்த்து பாடலும்கூட சரியான மெட்டில் இல்லை. அதனால்தான் ஈஸ்வரப்பா நிறுத்தச் சொன்னார்' என்று, வெட்கமில்லாமல் கன்னடக்காரனின் முதுகைச் சொறிந்து கொடுத்தார் அண்ணமலை. இது எவ்வளவு பெரிய புளுகு.
தெரியாத ஒருவர் பாடினால்கூட மெட்டு பிசகுவதற்கு வாய்ப்பிருக்கிறது. ஆனால் அண்ணாமலையின் கூற்றுப்படியே, அங்கிருந்த ஆபரேட்டர் பதிவுசெய்த பாடலைத்தான் ஒலிபரப்பினார். தமிழ்த்தாய் வாழ்த்தான "நீராடும் கடலுடுத்த' பாடலை, எவராவது தவறான மெட்டில் பாடிப் பதிவுசெய்து வைத்திருப்பார்களா? கூமுட்டை...!
அந்த வீடியோ காட்சியிலேயே... அங்கே இசைக்கப்பட்டது உண்மையில், கலைஞர் முயற்சியில் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில், டி.எம்.எஸ். குழுவினர் பாடிய சரியான தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல்தான் என்பது அப்பட்ட மாகத் தெரிகிறது. அது மட்டுமல்ல. அங்கே ஈஸ்வரப்பா, கைகளை நீட்டிக்கொண்டு பாடலை நிறுத்தச் சொல்லிப் பாய்வதும், அண்ணாமலை அசையாது கல்லூü மங்கன் மாதிரி நிற்பதும் தெரிகிறது.
அப்படி இருக்க, தனது குட்டு வெளிப்பட்டு விட்டது என்று தெரிந்ததும்.... அடுத்து தன் கருத்தில் இருந்து பல்டி அடித்த அண்ணாமலை...
"ஒவ்வொரு மாநிலத்திலும் மாநிலப் பாடலைப் பாடிய பிறகுதான் வேறு மாநிலத்தின் வாழ்த்துப் பாடல் இசைக்கப்படவேண்டும் என்பது நியதி.' என்று டுவிட்டரில் குறிப்பிட்டுவிட்டு, , "கன்னடமுங் களி தெலுங்கும் கவின் மலையாளமும் துளுவும்' என்ற வரியை தமிழ்த்தாய் வாழ்த்து பாடலிலிருந்து நீக்கி, மாநிலப் பிரிவினையை விதைத்த சரித்திரம் அல்லவா உங்களது.?' என்று, தி.மு.க. மீது இனத் துவேச குற்றத்சாட்டை வைக்க முனைந்திருக்கிறார்.
அந்த அரைப்புத்தி அண்ணாமலைக்கு ஒரு விசயம் தெரிய வாய்ப்பில்லை.
மனோன்மணியம் சுந்தரனார் எழுதிய அந்தப் பாடலில் இருந்து, "ஆரியம் போல் உலக வழக்கழிந்து ஒழிந்து சிதையா உன் சீரிளமைத் திறம் வியந்து' என்ற, வடமொழியைப் பழிக்கும் வரிகளையும் நீக்கி, தமிழ்த்தாயை மட்டும் வாழ்த்துகிற வகையில் அதைப் பெருந்தன்மை மிக்க பாடலாக ஒலிக்கச்செய்தவர் கலைஞர். இந்த வரலாறெல்லாம் அண்ணாமலையின் மண்ணாங்கட்டி மூளைக்கு எட்டி இருக்கவில்லை.
ஒருபக்கம் பா.ஜ.க. பிரதமரான மோடி, தமிழ்மொழி பழம்பெருமை வாய்ந்தது என்றும். உலகின் தொன்மையான மொழி என்றும் பறையடித்து, தனக்கு எல்லாம் தெரியும் என்பதுபோல், உலக அரங்கில் காட்டிக்கொள்கிறார். ஆனால் அவர் கட்சியில் இருக்கும் இப்படிப்பட்ட அரை வேக்காடுகளும் அழுகிய தக்காளிகளும், தமிழுக்கு எதிரான உணர்வை வெளிப்படுத்தி வருகிறார்கள்.
இந்தத் தமிழ் அவமதிப்பு என்பது அவர்களின் சனாதன உடலில் ஊறிய உணர்ச்சி. இதைத்தான் சில வருடங்களுக்கு முன் காஞ்சிமடத்தில், பாலும் பழமும் நெய்யுமாகத் தின்று கொழுப்பெடுத்துப்போன பால சங்கராச்சாரி, தமிழ்த்தாய் வாழ்த்தைப் பாடும்போது, அதற்கு எழுந்து நிற்காமல், அதை அவமதிப்பு செய்வதாக நினைத்து அவமானப்பட்டார்.
இப்போது அவரது சனாதன வழியில் வந்த பா.ஜ.க. ஈஸ்வரப்பாக்களும் அண்ணாமலைகளும் தமிழ்த்தாயை அவமதித்திருப்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று.
*
"திராவிட மொழிகளுக்கெல்லாம் தமிழ் மொழியே தாயாகத் திகழ்கிறது' என்றார் மொழியியல் அறிஞரான கால்டுவெல். அந்த வகையில், கன்னடம், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட திராவிட மொழிகளுக்கும் தாயாக இருப்பது தமிழ்மொழிதான்.
தமிழ் நமக்குத் தாய் என்பதுபோல் கன்னடத்திற்கும் அது தாய். அதனால் நம் தாய்மொழி, அவர்கள் தாய்மொழிக்கும் தாய்மொழி. அதை அவமதிப்பது அவர்கள் தங்கள் தாய்மொழியையும் சேர்த்தே அவமதிப்பதற்குச் சமம்.
இதைத்தான் கவிப்பேரரசு வைரமுத்துவும் அழுத்தமாகத் தெரிவித்திருக்கிறார். தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல், பாதியில் நிறுத்தப் பட்டதற்காக சினக்கும் அவர் எழுது கோல், கர்நாடகா மேடையில்
தமிழ்த்தாய் வாழ்த்து
பாதியில் நிறுத்தப்பட்டதுகண்டு
இடிவிழுந்த மண்குடமாய்
இதயம் நொறுங்கியது
ஒலிபரப்பாமல்
இருந்திருக்கலாம்;
பாதியில் நிறுத்தியது
ஆதிமொழிக்கு அவமானம்
கன்னடத்துக்குள்
தமிழும் இருக்கிறது;
திராவிடத்திற்குள்
கன்னடமும் இருக்கிறது.
மறக்க வேண்டாம்
-என்று அழுத்தமாகச் சொல்லியிருக்கிறார்.
இந்த சாதாரண அறிவு கூட சனாதன பக்தர் களான ஈஸ்வரப்பா, அண்ணாமலைகளுக்கு இல்லை என்பது வெட்கக்கேடு.
-ரௌத்திரத்தோடு,
நக்கீரன்கோபால்