நல்ல மனைவி - புலவர் அ.ப. பாலையன்

/idhalgal/eniya-utayam/good-wife-puluvar-ap-paalaaiyana

ல்லற மல்லது நல்லறமன்று’ என்பது தமிழர்களிடையே வாழையடி வாழையாக வழங்கிவரும் சொலவடைகளில் ஒன்றாகும். ’பத்தாவுக்கு ஏற்ற பதிவிரதை உண்டானால், எத்தாலும் கூடி வாழலாம் ’எனும் தொடரும் ஆணும் பெண்ணும் மனம் ஒன்றி வாழ்ந்தால் அவ்வாழ்க்கை என்றுமே இனிக்கும்; நிலைக்கும்.

ஆணும் பெண்ணும் அன்றும் இன்றும் உள்ளத்தால் ஒன்றுபட்டு, உடலால் இரண்டு பட்டு வாழ்ந்தனர்.

வாழ்கின்றனர். வாழ்க்கைப் பதையில் சிறு சிறு பிணக்கு கள் ஏற்பட்ட போதிலும் அவற்றில் சிக்கிச் சீரழிந்து விடாமல்-அறிவால்-முயற்சியால்- சமயோஜித புத்தியால் பிணக்குகளைத் தவிடுபொடியாக்கிவிட்டு, அமைதி வாழ்க்கை நடத்துவதில் குறியாக இருந்துள்ளனர்.

wff

இத்தகைய நிகழ்வுகளைப் பண்டைய இலக்கியங் கள், காப்பியங்கள், இதிகாசங்கள் ஆகிய வற்றில் பரவலாகப் பார்க்கமுடிகிறது.

கணவன், மனைவி இருவரும் ஈருடல் ஓருயிராய் வாழ்ந்த செம்மாந்த இல்வாழ்க்கையை நம் அக

ல்லற மல்லது நல்லறமன்று’ என்பது தமிழர்களிடையே வாழையடி வாழையாக வழங்கிவரும் சொலவடைகளில் ஒன்றாகும். ’பத்தாவுக்கு ஏற்ற பதிவிரதை உண்டானால், எத்தாலும் கூடி வாழலாம் ’எனும் தொடரும் ஆணும் பெண்ணும் மனம் ஒன்றி வாழ்ந்தால் அவ்வாழ்க்கை என்றுமே இனிக்கும்; நிலைக்கும்.

ஆணும் பெண்ணும் அன்றும் இன்றும் உள்ளத்தால் ஒன்றுபட்டு, உடலால் இரண்டு பட்டு வாழ்ந்தனர்.

வாழ்கின்றனர். வாழ்க்கைப் பதையில் சிறு சிறு பிணக்கு கள் ஏற்பட்ட போதிலும் அவற்றில் சிக்கிச் சீரழிந்து விடாமல்-அறிவால்-முயற்சியால்- சமயோஜித புத்தியால் பிணக்குகளைத் தவிடுபொடியாக்கிவிட்டு, அமைதி வாழ்க்கை நடத்துவதில் குறியாக இருந்துள்ளனர்.

wff

இத்தகைய நிகழ்வுகளைப் பண்டைய இலக்கியங் கள், காப்பியங்கள், இதிகாசங்கள் ஆகிய வற்றில் பரவலாகப் பார்க்கமுடிகிறது.

கணவன், மனைவி இருவரும் ஈருடல் ஓருயிராய் வாழ்ந்த செம்மாந்த இல்வாழ்க்கையை நம் அக இலக்கியமாகிய குறுந்தொகை ஒரு பாடலில் தெளிவாக விவரிப்பதைப் பார்ப்போம்.

இப்பாடலைப் பாடியவர் அம்மூவனார்.

தலைமகன் பரத்தை மாட்டுப் பிரிந்து போனவன். வீடுவருகிறான். அவனைக் கண்டவிடத்துத் தலைவியின் கோபம் சூரியனைக் கண்ட பனிபோல மறைகிறது. அவன் பள்ளியறையில் இருந்த போது தலைவி சொல்வதாகப் பாடல் அமைந்துள்ளது.

தலைவி கூற்று:

’கழிமுள்ளிச்செடியின் தாது கருமை நிறம் உடையது.

அதன் தாதுமுதிர்ந்த முட்கள், அணிலின் பற்களைப் போல இருக்கின்றன. கடற்கரையில் வாழும் காரணத்தால், நீல நிறமாய் உள்ளன. அத்தகைய கடற்கரைக்குத் தலைவனே, இப்பிறப்பு அழிந்து மறுபிறப்பு எனக்குக் கிடைத்தாலும், நீதான் எனக் குக் கணவனாக இருத்தல் வேண்டும். உன் நெஞ்சில் நீங்கா இடம் பெற்ற மனைவியாக நான் மட்டுமே இருக்கவேண்டும்.’

இப்படலில், கடைசி மூன்று வரிகள், மிகமிக ஆழமும் செறிந்த பொருளும் உடையவை. இவ்வரி களுக்கு இணையான வரிகளைக் காணல் அரிதே.

’இம்மை மாறி மறுமை ஆயினும்

நீ ஆ கியர் என் கணவனை

யான் ஆ கியர் நின் நெஞ்சு நேர்பவளே’

இல்லறம் இனிதே முடிந்து, கணவனும் மனைவியும் பல்லாண்டுகள் இனிதே வாழ்ந்தனர். அப்படி வாழ்ந்த காலத்தில் கணவன், மனவி இடையே சிறு பிணக்கு ஏற்பட்டும் நாளடைவில், முற்றிப் பெரும் பிளவாக வளர்ந்து விட்டது. அப்படிப்பட்ட சூழலில் ஒரு சமயம் தலைவன், அவளைப் பிரிந்துவிடலாமா? என்று யோசிக்கத் தொடங்குகிறான்.

தலைவனின் மன நிலையையும், அவனுக்குள் ஏற்பட்ட ஊசலாட்டத்தையும் தலைவி தெரிந்து கொள்கிறாள். இனி நாம் பூசலை வளர்க்காமல் –கருத்து வேறுபாட்டை மறந்து அவனோடு அமைதியாக வழக்கம் போல் கடைசிவரை பிரியாமல் வாழலாம் என யோசிக்கிறாள்.

நடந்தவற்றை எல்லாம் மறக்கும் படியும், தன் செய்தவற்றைப் பொறுத்துக் கொள்ளும்படியும் மண்றாடி வேண்டுகிறாள்.

இச்சமயத்தில், அவள் நெஞ்சத்தில் இருந்து பீறிட்டு எழுந்த அழகிய-

அருமையான-செறிவான பாடலே இதுவாகும்.

ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னே பிறந்த பாடலாக இருந்தாலும், மானிடக் உலத்திற்கு என்றென்று வழிகாட்டும் பாடல் இது.

காலந்தோறும் இல் வாழ்க்கையை இனிய வாழ்க்கையை நடத்த விரும்பும் ஆணும் பெண்ணும் படித்துக் கடைபிடிக்க வேண்டிய அருமையான நெறி இது.

பாடலைப் பார்ப்போம்.

அணிற்பல் லன்ன கொங்குமுதிர் முண்டகத்து

மணிக்கேழ் அன்ன மாநீர்ச் சேர்ப்ப

இம்மை மாறி மறுமை ஆயினும்

நீ யாகியர் என் கணவனை

யானாகியர் நின் நெஞ்சு நேர்பவளே’

(குறுந்தொகை -49)

அம்மூவனார் பாடிய இன்னொரு படலிலும்

தலைவியின் உயர் பண்மை மிக மிக அ ருமை யாகக் கூறி உள்ளார்.

தலைவன் பொருள் தேடும் பொருட்டுப் பிரிய நினைக்கிறான். அவனிடம் தோழி, தலைவியின் உயர் பண்புகளை நயம்பட எ டுத்துக் கூறி, விரைவில் திரும்புமாறு கூறும் அழகே அழகு.

அரும்புகள் முதிர்ந்து ஞாழல் பூக்கள் (மல்லிகை வகை) திணைமணிகளைப் போன்றன.

அவை நெய்தல் மலர்கள் மீதுய் சிந்தினார்போல், நீர்த் திவளைகள் தூவுகின்ற கடற்கரைக்குத் தலைவனே, பெற்ற தாய் சினந்து குழந்தையை அடித்த போதும், அம்மா என்றே அழும் அக் குழந்தையைப் போன்றவள் தலைவி. அவளுக்கு நீ துன்பத்தையே தந்தாலும் இனிமையாக இன்சொல் கூறி, அன்பு செலுத்தினாலும்,அவள் உன்னையே நினைத்திருப்பாள். உன்னைத் தவிர தன் துன்பத்தை நீக்குவாரையும் அவள் அறியாள். ஆகவே பொருள் தேடச் செல்லும் நீ, விரைவாக வந்துவிடு..’

அந்தப் பாடல்…

நனை முதிர் ஞாழற் தினை மருள் திரள் வீ

நெய்தல் மா மலர்ப் பெய்த போல

ஊதை தூற்றும் உரவு நீர்ச் சேர்ப்ப!

தாய் உடன்று அலைக்கும் காலையும் வாய்விட்டு

அன்னாய்!’ என்னும் குழவி போல

இன்னா செயினும் இனிது தலையளிப்பினும்

நின் வரைப்பினள் என் தோழி

தன் உறு விழுமம் களைஞரோ இலளே”

(குறுந்தொகை.397

இத்தகு பாடல்களால் இல்லறத் துக்கு நல்வழி காட்டுகின்றனர் நம் புலவர்கள்.

uday011021
இதையும் படியுங்கள்
Subscribe