-பிரிட்டானிய நாடாளுமன்றத்தில் பொங்கிய தமிழ்ப் பொங்கல்!

தொன்மையான தமிழர் பாரம்பரியத்தின் செழுமையை பிரித்தானியா பாராளுமன்றிலும் உலக ளாவிய ரீதியிலும் எடுத்துச் செல்லும் நிகழ்வாக சனவரி 15 அன்று தைப் பொங்கல் விழா, தமிழ் இளையோரின் சிறப்புமிகு பங்களிப்புடன் அரங்கேறியது.

தமிழ்த் தாய் வாழ்த் துடன் ஆரம்பித்த பொங்கல் சிறப்பு நிகழ்ச்சி தமிழர் கலைகளான நாட்டார் பாடல், கரகாட்டம், வீணை, பரதநாட்டியம், கர்நாடக சங்கீதம் என்பனவற்றுடன் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் சிறப்பாகப் பங்களித்த மில்டன் கீய்ன்ஸ் தமிழ் பாடசாலை, வோல்தம்ஸ்டோவ் தமிழ் பாடசாலை, தமிழ் மொழிக் கலைக் கழகம் (Tamil Academy of Language & Arts), நிகழ்ச்சிகளைத் தயார்படுத்தி வழங்கிய ஆசிரியர்கள், ஈலிங் அம்மன் கோயில் மற்றும் இந்து, கத்தோலிக்க மதகுருக்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் பிரித்தானிய தமிழர் பேரவை முதலில் நன்றியைத் தெரிவித் துக்கொண்டது.

Advertisment

pongal

pongal

Advertisment

நெருக்கடியான பாராளு மன்ற நிகழ்ச்சி நிரல்களுக்கு மத்தியிலும் பாராளு மன்ற உறுப்பினர்கள் இவ்விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.

தமிழ் இளையோரின் அரங்க நிகழ்வில் ""உலகில் மிக தொன்மையான மொழி தமிழ், எம் மொழிமீது எமக்கு மதிப்பும் பெருமையும் அன்புமுண்டு, தமிழ் வெறும் மொழி மட்டுமல்ல; அது எம் பண்பாடு, கலாச்சாரம், எம் வாழ்வு, எம் மூச்சு ஆகும். தமிழ் பல நாடுகளிலும் பேசப்பட்டாலும் தமிழுக்கென்று ஒரு நாடில்லை. நாங்கள் ஒரு நாளும் தமிழ் மொழியை அழிய விடமாட்டோம்'' என ஒட்டுமொத்தமாகத் தங்கள் உணர்வுகளை அங்கே பதிவுசெய்தனர்.

அத்துடன் அவர்கள் தமிழ் வளர்த்த சான்றோர் களைப் பார்வையாளர்களிடம் நினைவு கூர்ந்தனர்.

pongal

“தமிழ் இளைஞர்கள், தங்களின் செழுமையான பாரம்பரியத்தை ஆராதிக்கின்றனர் என்பதே இவ் வருட தைத் திருநாள் விழாவின் பெரும்பயனா கும். என்றும் வாழுகின்ற செம்மொழியாகிய தமிழ் மொழிக்குச் சொந்தமான தமிழர்கள், தொன்மையான நாகரிகம், அறிவியல், கலை, பண்பாடு, விருந்தோம்பல், சிற்பம், கட்டிடக் கலை, கடலோடும் திறன், பன்னாட்டு வர்த்தகம் என்பனவற்றைப் பல நூறு வருடங்களாக உலகிற்கு வழங்கியுள்ளார்கள்.

தமிழர்கள் எங்கு சென்றாலும் அவர்கள் கடினமாக உழைக்கிறார்கள், கல்வியைத் தேடுவதில் அதீத நாட்டமுடையவர்கள், தாம் வாழும் நாடுகளுக்கு வள மூட்டுபவர்கள், இது தமிழர் கலாச்சாரத்தில் ஆழமாக வேரூன்றி உள்ளது. ஆனால் தமிழ் இனத்தின் நிலம், அடையாளம் உட்பட அதன் இருப்பையே அழிக்கும் போக்கு இலங்கையில் தொடர்கின்றது. ஆதலால் வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் ஒற்றுமை யுடன் தமிழ் அடையாளத்தையும் மொழியையும் உயிர்ப்புடன் வைத்திருக்க வேண்டும் என்ற கருத்தினை, பிரித்தானிய தமிழர் பேரவையின் இளைஞர்கள் இந்த விழாவில் முன்வைத்தனர்.

இந்த விழாவில் பங்கேற்றுச் சிறப்பித்த பெரு மக்களின் உரையிலிருந்து...

வெஸ் ஸ்ட்ரீட்டிங் எம்.பி. :

அறுவடைக்கு நன்றி செலுத்தும் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளைக் கொண்டாட, இந்த பிரிட்டன் பாராளுமன்றத்திற்கு வருகை தந்திருக்கும் அனைவருக்கும் என் அன்பான வாழ்த்துகள். பல தலைமுறைகளாக இந்த நாட்டுக்கு, தமிழ் மக்கள் வழங்கிய அரசியல், பொருளாதார, கலாச்சாரப் பங்களிப்பு களைப் பாராட்டுகிறேன். பிரெக்ஸிட் (BREXIT) தொடர்பான மிகவும் பாரதூரமான விடயங்கள் குறித்து இந்த நாடே வேறுபட்ட அரசியல் கருத்துக் களுடன் விவாதித்து வரும் இந்த நேரத்திலும் கூட பிரிட்டன் பிரதமர் தெரசா மே அவர்களும் எதிர்க் கட்சித் தலைவர் ஜெரமி கோர்பின் அவர்களும் இந்த விழாவை நன்றியுடன் வாழ்த்துவதற்குக் காரணம் தமிழ் மக்கள் இந்த நாட்டிற்கு அளித்த பங்களிப்பு அளப்பரியது என்பதுதான். காலம் மிக வேகமாக ஓடிக்கொண்டிருக்கும் இந்த வேளையில் சனநாயகத்தின் மையமாகவுள்ள வெஸ்ட் மினிஸ்டரில் இந்த முக்கியமான தமிழர் திருவிழாவைக் கொண்டாடடுவதற்கு என் அன்பான நன்றி.

pongal

ஸ்டீபன் டிம்ஸ் எம்.பி. :

இந்த இரவு நேரத்தில் ஒரு நேர்த்தியான விழாவில் பங்களிப்பதற்காக நாம் அனைவரும் இங்கு வந்திருக்கிறோம். அதே நேரம் 10 வருடங்களுக்கு முன்னர் சிறிலங்காவில், ஈழத் தமிழர்களுக்கு நடந்த மிக மோசமான சம்பவங்கள் நம் நினைவில் நிழலாடு கின்றன. அங்கே தமிழ் மக்களின் அளப்பரிய உயிர்கள் பறிக்கப்பட்டன. காணாமல் ஆக்கப்பட்ட பலருக்கு என்ன நடந்தது என்பதை அறிந்துகொள்ள முடியாத நிலை இன்றும் நிலவுகிறது. அவர்களின் உறவினர்களும் அன்புக்குரியவர்களும் அவர்களை இன்னும் தேடிக் கொண்டிருக்கின்றார்கள் என்பதையும் அவர்களின் ஆழமான துயரத்தையும் இந்தப் புதுவருடமும் நமக்கு நினைவு படுத்துகிறது. சித்திரவதைகள் உட்பட பல கொடுமைகள் அங்கே தொடர்கின்றன. கடந்த செப்டம்பரில் ஜெனீவாவிலுள்ள ஐ.நா மனித உரிமைக் கழகக்UNHRC)கூட்டத் தொடரில், இங்கிருப்பவர்களுடன் இணைந்து நானும் கலந்து கொண்டேன். அடுத்த மாதம் தொடங்கவுள்ள கூட்டத் தொடரில், ஈழ விவகாரத்தில் தீர்வு காண்பதில் நாம் கவனம் செலுத்த வேண்டும். கடந்த காலத் தில் பல சரியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அந்தக் கடமைகளை நிறைவேற்றுவதில் பிரித் தானியாவிற்கு முக்கியமான பங்குண்டு. எனவே அதையெல்லாம் சரிவர நிறைவேற்றுவதில், பிரித்தானியாவிலுள்ள நாம் அனைவரும் கவனம் செலுத்த வேண்டும். அத்துடன் ஜான் ரையன், ஷிவோன் மக்டொன்னா உட்பட பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் தவிர்க்கமுடியாத காரணத்தால் இந்தக் கொண்டாட்டத்தில் கலந்துகொள்ள முடியவில்லை என்றாலும், தம் வாழ்த்துகளை அவர்கள் தெரிவிக்குமாறு கூறியுள்ளார்கள். அதை இங்கே தெரிவித்துக்கொள்கிறேன்.

ஜோன்மான் எம்.பி. :

தைப் பொங்கல் வாழ்த்துகளை தெரிவிப்பதுடன் சர்வதேச நீதியைத் தேடும் தமிழர்களான உங்கள் முயற்சிகளுக்கு என் தொடர்ச்சியான ஆதரவினை உறுதிப்படுத்துகின்றேன். எதிர்காலத்தில் சமாதானத் தையும் நல்லிணக்கத்தையும் உறுதிப்படுத்த ஒவ்வொரு மட்டத்திலும் உங்களுடன் வேலை செய்ய ஆர்வமாக இருக்கிறோம், மனித உரிமைகளுக்காக மனித உரிமை கவுன்சிலுக்கு உங்களை பிரதிநிதித்துவப்படுத்தி பல முறை சென்றுள்ளேன். இனியும் செல்வேன்.

-இந்த விழாவில் பங்கேற்ற, தமிழர்களுக்கான அனைத்துக் கட்சி பாராளுமன்ற (APPGT) அமைப்பின் தலைவரான போல் ஸ்கல்லி எம்.பி., தன்னுடைய உரையில், தமிழ்மக்கள் அனைவருக்கும் தன் பொங்கல் திருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டதோடு, நெருக்கடி நிறைந்த பாராளுமன்ற நிகழ்ச்சிகளால் இந்த விழாவில் முழுமையாக இருந்து பங்கெடுக்க முடியாததற்கு வருத்தம் தெரிவித்தார். மேலும், தமிழ் மக்களின் நீதிக்கும் அவர்களின் வேண்டுகோளுக்கும் உறுதுணையாக, தானும் அனைத்துக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் களும் தொடர்ந்து பங்கெடுப்போம் என்றும் உறுதி யளித்தார்.

புதிய வேகத்தோடும், சவால்களோடும் தொடங்கும் இந்தப் புதிய வருடத்தில், அதிகரித்து வரும் இளைஞர்களின் உணர்வுமயமான பொங்கல் விழாப் பங்களிப்பு, தமிழ் இன்னும் இன்னும் மேலோங்கும் என்ற நம்பிக்கையை அளிக்கின்றது. ஒன்றுபட்ட பலத்துடன் உலக அரங்கில் தமிழர்கள் புத்தெழுச்சியுடன் என்றென்றும் கால் பதிப்பார்கள்.

-பிரித்தானிய தமிழர் பேரவை