ஒரு மாமனிதரின் மரண சாசனம்!

/idhalgal/eniya-utayam/gentlemans-death-certificate

தான் வாழ்ந்த காலத்தில் தன்னுடைய எழுத்தால் முற்போக்குச் சிந்தனையை விதைத்ததோடு, தனது இறப்பையும்கூட உலகுக்குப் பயனுள்ளதாக மாற்றியிருக்கிறார் எழுத்தாளர் தெ.சுந்தரமகாலிங்கம். விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பைச் சேர்ந்த எழுத்தாளர் தெ.சுந்தரமகாலிங்கம், வயது மூப்பு காரணமாக கடந்த ஆகஸ்ட் 30-ஆம் தேதி காலமானார். இவருக்கு திலீபன், கோபி நாத், கவுதமன் என மூன்று மகன்கள் இருக்கி றார்கள்.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் இணைந்து செயல்பட்டு வந்த இவர், 'குருஜி' என்ற சிறுகதைத் தொகுப்பையும், ‘காலத்தை வாசித்தல்’, ‘துரோகம் வெட்கம் அறியாது’ ஆகிய கட்டுரை நூல்களையும் எழுதியுள்ளார். கியூபாவின் முன்னாள் அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோவின் நேர்காணல்களைத் தமிழில் மொழிபெயர்த்து, 'ஆண்டுகள் பல கடந்தாலும்' என்ற நூலாக வெளியிட்டுள்ளார். இவர், வையம்பட்டி என்ற ஊரில் ஆசிரியராகப் பணியாற்றியபோது நடந்த ஓர் உண்மைச்சம்பவத்தை அடிப்படையாக வைத்து எழுதிய 'வெளிச்சங்கள் இருளில் மறைக்கப்படும்போது' என்ற சிறுகதை முதன்முதலில் வார இதழொன்றில் வெளியானது. மேலும், இவர், ‘தினமணி’, ‘ஜனசக்தி’, ‘தீக்கதிர்’, உள்ளிட்ட நாளிதழ்களிலும், ‘உயிரெழுத்து’, ‘அம்ரு

தான் வாழ்ந்த காலத்தில் தன்னுடைய எழுத்தால் முற்போக்குச் சிந்தனையை விதைத்ததோடு, தனது இறப்பையும்கூட உலகுக்குப் பயனுள்ளதாக மாற்றியிருக்கிறார் எழுத்தாளர் தெ.சுந்தரமகாலிங்கம். விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பைச் சேர்ந்த எழுத்தாளர் தெ.சுந்தரமகாலிங்கம், வயது மூப்பு காரணமாக கடந்த ஆகஸ்ட் 30-ஆம் தேதி காலமானார். இவருக்கு திலீபன், கோபி நாத், கவுதமன் என மூன்று மகன்கள் இருக்கி றார்கள்.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் இணைந்து செயல்பட்டு வந்த இவர், 'குருஜி' என்ற சிறுகதைத் தொகுப்பையும், ‘காலத்தை வாசித்தல்’, ‘துரோகம் வெட்கம் அறியாது’ ஆகிய கட்டுரை நூல்களையும் எழுதியுள்ளார். கியூபாவின் முன்னாள் அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோவின் நேர்காணல்களைத் தமிழில் மொழிபெயர்த்து, 'ஆண்டுகள் பல கடந்தாலும்' என்ற நூலாக வெளியிட்டுள்ளார். இவர், வையம்பட்டி என்ற ஊரில் ஆசிரியராகப் பணியாற்றியபோது நடந்த ஓர் உண்மைச்சம்பவத்தை அடிப்படையாக வைத்து எழுதிய 'வெளிச்சங்கள் இருளில் மறைக்கப்படும்போது' என்ற சிறுகதை முதன்முதலில் வார இதழொன்றில் வெளியானது. மேலும், இவர், ‘தினமணி’, ‘ஜனசக்தி’, ‘தீக்கதிர்’, உள்ளிட்ட நாளிதழ்களிலும், ‘உயிரெழுத்து’, ‘அம்ருதா’, ‘காலச்சுவடு’ உள்ளிட்ட மாத இதழ்களிலும் கட்டுரைகள் எழுதியுள்ளார்.

dd

பெரியாரின் கொள்கைகளிலும், கம்யூனிசக் கொள்கைகளிலும் தீவிரப் பற்றுக்கொண்ட இவர், கடந்த 2014-ஆம் ஆண்டிலேயே கண் தானம் செய்வதற்கும் உடல் தானம் செய்வதற்கும் முடிவெடுத்து, உடல் தானத்துக்காக மதுரை மருத்துவக் கல்லூரியில் பதிவுசெய்துவிட்டார். மேலும், தனது மரணத்துக்குப்பின் தனக்கு எவ்வித ஜாதி, மத அடையாளங்களும் இன்றி இறுதிச்சடங்கு செய்யவேண்டுமென்று மரண சாசனம் ஒன்றை எழுதிவைத்துவிட்டார். அவரது மரண சாசனம் தான் பெரிதும் பேசப்படுவதாக இருந்தது. அதில், 'என் உடலை விட்டு உயிர் பிரிந்த செய்தி தெரிந்த சில நொடிகளுக்குள் எனது கண்களை தானம் செய்வதற்கான ஏற்பாடுகளைச் செய்யவேண்டும். எனது உடலை மதுரை மருத்துவக் கல்லூரி மெய்யியல் கழக ஆய்வுக்கு ஒப்படைக்க வேண்டும். என் உடலைவிட்டு உயிர் நீங்கியதும் உடலின்மீது எவ்வித ஜாதி, மத அடையாளக் குறிகளையும் இடக்கூடாது. நிறை மரக்கால், தேங்காய் உடைப்பது, சூடம் கொளுத்துவது, விளக்கு வைப்பது போன்ற எவ்விதச் சடங்குகளையும் செய்யக்கூடாது. சவம் துர்நாற்றம் வீசுவதைத் தடுக்க சாம்பிராணி, பத்தி ஆகியவற்றைப் பயன்படுத்தலாம்.

வீட்டிலிருந்து சவத்தைக் கொண்டுசெல்லும் முன் என் குடும்ப ஆண்களும் பெண்களும் வீட்டின் முன்புள்ள குழாயில் குளிக்கலாம். அவர்களுக்கு எவ்வித மதச் சடங்கும் செய்யக்கூடாது. நீர்மாலை எடுக்கக்கூடாது. சவத்தைக் கொண்டுசெல்லும் போது மேள, தாளம், ஆட்டம், பாட்டம் கூடாது. மகன்களோ, பேரன்மார்களோ மொட்டை போடக்கூடாது. வாய்ப்பிருந்தால் தனது சவ வண்டியில் தந்தை பெரியாரின் உரையை ஒலிக்கச் செய்ய லாம்' என்றெல்லாம் குறிப்பிட் டிருந்தார்.

தெ.சுந்தரமகாலிங்கம் எழுதிவைத்தபடியே, அவரது கண்களை தானமாக வழங்கிய அவரது மகன்கள், அவரது உடலை, எவ்வித இறுதிச்சடங்கு களும் செய்யாமல், அவர் விரும்பியபடியே மதுரை மருத்துவக் கல்லூரிக்கு தானமாக ஒப்படைத்தார்கள். அவரது இல்லத்திலிருந்து உடலை எடுத்துச் செல்வதற்கு முன்பாக, அவரது இல்லத்தில் த.மு.எ.க.ச. சார்பாக இரங்கல் கூட்டம் நடத்தப்பட்டது.

அக்கூட்டத்தில் த.மு.எ.க.ச. நிர்வாகிகள் எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன், இலட்சுமிகாந்தன், தேனி வசந்தன் உள்ளிட்ட தோழர்கள், அவரது முன்னாள் மாணவர்கள், நண்பர்கள், உறவினர்கள் கலந்து கொண்டு, அவரைப் பற்றிய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டனர்.

எழுத்தாளர் தெ.சுந்தரமகாலிங்கத்தின் உடலை தானமாக வழங்கும் நிகழ்வில், மதுரை பாராளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கலந்து கொண்டு இறுதி அஞ்சலி செலுத்தினார். அதன்பின்னர், மதுரை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீனிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது. அதற்கான சான்றிதழை அவரது மகன்களிடம் டீன் வழங்கினார்.

அந்நிகழ்வில் கலந்துகொண்ட சு.வெங்கடேசன் எம்.பி. பத்திரிகையாளர்களிடம் பேசும்போது, "தோழர் தெ.சுந்தரமகாலிங்கம், தனது உடலை மருத்துவக் கல்லூரி மாணவர்களின் படிப்புக்குப் பயன்படும்விதமாக தானமாக வழங்கியிருக்கிறார்.

ss

அதேபோல், அவரது மரண சாசனத்தில், தனது இறப்புக்குப்பின் தனது உடலில் எவ்வித சாதி, மதக் குறியீடுகளும் இருக்கக்கூடாது என்று குறிப்பிட்டுள்ளார். தனது உடலைக் கொண்டு செல்லும்போது மேள தாளங்கள் அடிக்கக்கூடாது என்றும், வாய்ப்பிருந்தால் தந்தை பெரியாரின் உரை ஒலிபரப்பப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். அவரது விருப்பப்படியே அவரது உடலினை அவரது புதல்வர்கள் மதுரை மருத்துவக்கல்லூரி முதல்வரிடம் ஒப்படைத்துள்ளார்கள். தோழர் சுந்தரமகாலிங் கத்துக்கு வீரவணக்கத்தைச் செலுத்துகிறோம்" என்று குறிப்பிட்டார்.

மனிதர்கள் அனைவருமே சமூக விலங்குகள் என்பது அறிவியலார் கருத்து. இச்சமூகத் தோடு ஒட்டி உறவாடித்தான் வாழ்ந்து வருகிறோம். அப்போது, அவரவர்க்கென தனிப்பட்ட கொள்கைகள் இருந்தாலும்கூட, தங்களுடைய உறவு களின் பாசத்துக்காக கொள்கைகளில் தளர்வு செய்து வாழ்ந்தாக வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.

அதேபோல எழுத்தாளர் தெ.சுந்தரமகாலிங்கமும் தனது வாழ்நாளில் ஜாதி, மதங்களுக்கு அப்பாற்பட்ட தனது கொள்கையைக் கடைப்பிடிப்பதில் இருக்கும் சிக்கல்கள் குறித்து வெளிப்படையாகத் தனது நூல் வெளியீடுகளில் பேசியிருக்கிறார். சமூகத்தோடு இணைந்து வாழ்வதில் இருக்கக்கூடிய நெருக்கடிகளாக அவற்றைக் குறிப்பிட்டிருக்கிறார். எனினும், தனது மரணம், ஜாதி, மத அடையாளங்களுக்கு அப்பாற்பட்டதாக இருக்கவேண்டும் என்பதில் மிகுந்த உறுதிப்பாட்டோடு இருந்திருக்கிறார். எனவேதான் எட்டு ஆண்டுகளுக்கு முன்பே எழுதிய மரண சாசனத்தில், தனது மரணத்துக்குப் பிறகு செய்யப்படக்கூடிய சடங்குகள் குறித்த தெளிவோடு, அவற்றைக் குறிப்பிட்டு, தவிர்த்தாக வேண்டும் என்று எழுதியிருக்கிறார். அவரது மரண சாசனத் தில் எழுதியவற்றை அதே உறுதிப்பாட்டோடு நிறைவேற்றிய அவரது மகன்களையும், அதற்கு ஒத்துழைத்த உறவினர்களையும் பாராட்டியாக வேண்டும். கண் தானம், உடல் தானம் குறித்த விழிப்புணர்வு பெருக வேண்டும்.

-ஆதவன்

uday011022
இதையும் படியுங்கள்
Subscribe