காணக் கிடைக்காத தங்கம், ரத்தன் நேவல் டாடா. இந்தியாவின் பொக்கிஷம். அக்டோபர் 9, 2024-ல் தன் மூச்சுக்காற்றை நிறுத்திக்கொண்டது. எத்தனையோ பேர் இறக்கிறார்கள். அது வெறும் செய்தி. வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்களின் மனதில் நிலைப்பவர் சிலரே. வாழ்நாள் சாதனை யாளர். தன்னைச் சுருக்கி பலரைப் பெருக்கி வாழ்ந்த மனிதர், பிறந்தது டிசம்பர் 28, 1937 பம்பாய். இப்போது மும்பை, இந்தியா- டாடா குடும்பம் கண்டெடுத்த ரத்தினம். இந்திய தொழில் துறையில் ஜாம்பவனாக வலம்வந்தவர்.
பம்பாயிலுள்ள பள்ளிகளில் படித்த பிறகு, 1955-ல், டாடா, நியூமார்க் நகரில் உயர்நிலைப் பள்ளியை முடித்தார். பின்னர் அவர், நியூயார்க். கார்ளெல் பல்கலைக்கழகத்தில் கட்டடக் கலையில் பட்டம் பெற்றார் (1962) வணிகப் பயிற்சியும் மேற்கொண்டார். படிப்பை முடித்து, டாடா குழும வணிக அனுபவங்களைப் பெற்றார். அவற்றில் ஒன்றான நேஷனல் அண்ட் எலக்டரானிக்ஸ் நிறுவனத்தின் இயக்குநராகப் பொறுப்பேற்றார் (1971). பின்னர் டாடா இண்டஸ்ட்ரீஸின் தலைவரானார். ஜே.ஆர்.டி. டாடாவிற்குப் பிறகு டாடா குழுமத்தின் தாய் நிறுவனமான டாடா சன்ஸ் தலைவராக ஆனார்.
டாடா சன்சல் டன்ஸி சர்வீஸ், டாடா மோட்டார்ஸ் மற்றும் டாடா சால்ட் போன்ற முக்கிய துணை நிறுவனங் களை டாடா குழுமம் நிறுவியது. இதன் முன்னோடி சாதனைகளில் முதன்மை யான தாஜ்மஹால் பேலஸ் ஹோட்டலை நிறுவியது (1903, மும்பை) மற்றும் ஏர் இந்தியா (1932) மற்றும் அழகு சாதனம் பிராண்ட் லக்மே (1952) நிறுவியது.
இந்தியாவின் பொருளாதாரம் தாராளமயமாக்கப்பட்ட காலத்தில் ரத்தன் டாடா, டாடா சன்ஸ் நிறுவனத் தின் தலைவரானார். படையெடுத்து வந்த தடைகளை நீக்கி, ஓய்வுபெறும் வயது கொள்கையை அமல்படுத்தி, அறிக்கையில் கட்டமைப்புகளை மாற்றி, சில நிர்வாகிகளை நீக்கி அதிகாரத்தை ஒருங்கிணைத்தார். டாடா குழுமத்தை விரிவுபடுத்த தீவிர மாக முயற்சியெடுத்து அதன் வணிகங் களை உலகமயமாக்குவதில் அதிக கவனம் செலுத்தினார். 2000-ஆம் ஆண்டில் லண்டனை தளமாகக்கொண்ட டெட்லி டீயை 431.3 மில்லியன் டாலருக்கு டாடா குழுமம் வாங்கியது. 2004-ஆம் ஆண்டில் டேவூ மோட்டார்ஸின் டிரக் உற்பத்தி நடவடிக்கைகளை 102 மில்லியன் டாலருக்கு வாங்கியது. டாடா ஸ்டீல் 2007-ஆம் ஆண்டில் மாபெரும் ஆங்கிலோ டச்சு எஃகு உற்பத்தியாளர் கோரஸ் குழுமத்தை 11.3 மில்லியன் டாலருக்கு கையகப்படுத்தியது. ஒரு இந்திய நிறுவனத்தால் மிகப்பெரிய கார்ப்பரேட் கையகப்படுத்துதலை நிறைவு செய்தது. 2008-ல் டாடா மோட்டார்ஸின் உயர்தர பிரிட்டிஷ் கார் பிரண்டுகளான ஜாகுவார் மற்றும் லேண்ட் ரோவரை வாங்குவதை டாடா மேற்பார்வையிட்டது. ஃபோர்டு மோட்டார் நிறுவனத்துடன் 2.3 மில்லியன் டாலர் மதிப்பிலான இந்த ஒப்பந்தம் இந்திய வாகன நிறுவனத்தால் இதுவரை இல்லாத மிகப்பெரிய கையகப்படுத்து தலைக் குறித்தது. டிசம்பர் 2012-ல் டாடா குழுமத்தின் தலைவராக டாடா ஓய்வுபெற்றார். அவரது வாரிசான சைரஸ் மிஸ்திரி வெளியேற்றப்பட்டதைத் தொடர்ந்து 2016-ல் இடைக்காலத் தலைவராக குறுகிய காலம் பணியாற்றினார். டாடா குழுமத்தின் தலைவராக நடராஜன் சந்திரசேகரன் நியமிக்கப்பட்டார். 2017-ல், டாடா ஓய்வுபெற்றார்.
உப்பு முதல் வானூர்தி வரை தன் எல்லைகளை விரிவு படுத்திய டாடா எப்போதும் பரோபகாரச் சிந்தனையோடு வலம் வந்தார். நடுத்தர வர்க்கமும் பயன்பெறும் வகையில் அறிமுகப் படுத்திய "நானோ' கார் மக்கள் கார். நகரங்களில் வலம்வரும் போதெல்லாம் ஆவலுடன் பார்க்க தோன்றும். நானோ ஆரம்பத் தில் 1,00,000 ரூபாய்க்கு விற்கப்பட்டது. பல சர்ச்சைகளைத் தாண்டி உற்பத்தி பத்து ஆண்டுகள் தொடர்ந்தது.
இரக்கம், நம்பகத்தன்மை, பெருந்தன்மை, பொறுமை, நெகிழ்ச்சி என்ற பண்பு களைக்கொண்ட டாடா, அவரது பரோபகார ஆர்வங் களுக்காக பெரிதும் பாராட் டப்பட்டார். கல்வி, மருத்துவம் மற்றும் கிராமப்புற மேம்பாடு ஆகியவற்றில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடுகளை ஆதரிப்பது, புற்றுநோய் சிகிச்சையை மேம்படுத்த உதவும் மருத்துவமனைகள் மற்றும் ஆராய்ச்சி மையங்களை நிறுவிமேம்படுத்தினார்.
பொருளாதார சமத்துவமின்மை யைக் குறைப்பதிலும் அவர் உறுதியாக இருந்தார்.
அஸ்ஸாம் மாநிலத்தில் இந்தியா வின் முதல் உள்நாட்டு செமி கண்டக்டர் உற்பத்தி ஆலை யைக் கட்டுவதற்கான திட்டங் களை 2024-ல் டாடா குழுமம் அறிவித்தது. இந்த முதலீடு 25,000-க்கும் மேற்பட்ட உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும். டாடா குழுமத்தின் நன்கொடைகள் மற்றும் டாடா அறக்கட்டளைகள் எனப் படும் தொண்டு நிறுவனங்களின் நன்கொடைகள் அமெரிக்க பல்கலைக் கழகங்களில் பல்வேறு துறைகள் மற்றும் உதவி தொகைகளை நிறுவ வழிவகுத்தன. கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் உள்ள உயிரியல் மற்றும் இயற்பியல் அறிவியல் ஆராய்ச்சி வசதி, சான்டியாகோ மற்றும் ஹார்வர்ட் பிசினஸ் ஸ்கூலில் ஒரு நிர்வாகி மையம் ஆகியவை இதில் அடங்கும். இவை இரண்டும் "டாடா ஹால்' என்று பெயரிடப்பட்டுள்ளன. கார்வெனல் பல்கலைக் கழகத்திற்கான உதவித்தொகை இந்தியாவிலிருந்து மாணவர்களுக்கு நிதி உதவி வழங்குகிறது. கார்னகி மெலன் பல்கலைக் கழகத்திற்கு டாடா கன்சல்டன்ஸி சர்வீஸ் வழங்கிய கொடை டாடா கன்சல்டன்சி சர்வீஸஸ் ஹாலுக்கு நிதியளித்தது.
டாடா, விலங்குகள், குறிப்பாக நாயகன் மீதான அவரது அன்பு எல்லை யில்லாதது. ஆதரவின்றி சுற்றித்திரியும் நாய்கள்மீது இரக்கம் கொண்டார்.
மழைக்காலத்தில் அவைகள் நனைவதைக் கண்டு அதற்காக காப்பகம் கட்டிக்கொடுத்தார். 2018-ஆம் ஆண்டில், பிரிட்டிஷ் மன்னர் ஏற்பாடு செய்த வாழ்நாள் சாதனைக்கான விருதுபெறும் விழாவில் அழைக்கப் படும், தனது செல்ல நாய்களுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதன் காரண மாக அதில் பங்கேற்பதைத் தவிர்த்தார். காரணத்தை அறிந்த சார்லஸ் டாடாவின் பரோபகாரச் செயலை எண்ணி வியப்படைந்தார். 2009-ல் ராணி எலிசபெத்-2-ல் மரியாதைக்குரிய க்நைட் கமாண்டர் ஆப்தி பிரிட்டிஷ் எம்பயர்' விருதும் 2014-ல் க்நைட் கிராண்ட் கிராஸ் ஆஃபி ஆர்டர் ஆஃதி பிரிட்டிஷ் எம்பயர் விருதுகளும் பெற்றார். உருகுவே, ஜப்பான், பிரான்ஸ் இறுதியாக ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளும் டாடாவை கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள். கல்விக் கூடங்களில் இவர் வரலாறு நிலைபெற்றிருக்கும். உயர்ந்த உள்ளங்களை உருவாக்க வழிவகுக்கும்.