புதுக்கவிதைக்கு புதுப்பொலிவு தந்து, தன் பின்னே பெரும் கவிஞர் படையையே திரட்டி, தமிழ் மொழியின் வளத்தை மேம்படுத்திய தமிழ்ப் பேரரசனாய் கவியாண்ட, தனது கவிப்புலமையை திரைப்பாடல்கüல் புகுத்தி, திரைப்பாடலையும் கவிப்பாடலாய் உருமாற்றி, மெருகேற்றிய கவிப்பேரரசர் வைரமுத்துவின் பிறந்த நாள் விழா, இது தமிழ்க் கவிஞர்கüன் விழாவன்றோ! கவிப்பேரரசு வைரமுத்துவின் பிறந்தநாள் விழாவை ஆண்டுதோறும் கவிஞர்கள் திருநாளாக. வெற்றித் தமிழர் பேரவை கொண்டாடி வருகிறது. அந்த வகையில் வைரமுத்துவின் 70வது பிறந்தநாள் விழா, ஜூலை 13 அன்று காலை 10 மணியளவில்,சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள அவருடைய பொன்மணி மாüகையில் கோலாகலமாகத் தொடங்கியது. முன்னதாக, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், பெசன்ட் நகர் டைகர் வரதாச்சாரி சாலையில் உள்ள வைரமுத்துவின் இல்லத்துக்கே நேரில் சென்று, சால்வை அணிவித்து வாழ்த்தினார். முதல்வரின் வாழ்த்துக்களோடு,ஏக உற்சாகமாக விழா அரங்குக்கு வைரமுத்து வந்தார். அப்போது வைரமுத்துவின் பாடல்கள் இசைக்கப்பட்டன. வி.பி.குமார் வரவேற்புரை நிகழ்த்த, இந்த ஆண்டுக்கான கவிஞர்கள் திருநாள் விருதை நக்கீரனின் முதன்மை துணை ஆசிரியரும் கவிஞருமான ஆரூர் தமிழ்நாடனுக்கு, பலத்த கைத்தட்டலுக்கு நடுவே வைரமுத்து வழங்கினார். விருதுப் பட்டயத்தை, வெற்றித்தமிழர் பேரவையின் செயலாளர் மரபின் மைந்தன் முத்தையா படித்தார்.
விழாவில் வாழ்த்துரை வழங்கிய டாக்டர் ஜெகத்ரட்சகன், "மணக்கோலம் பூண்டிருக்கிற நாவுக்கரசராகவும், நற்றமிழ் வித்தகராகவும், நடமாடும் பல்கலைக்கழகமாகவும், யாப்பிலா பாடலேனும் யார் தரும் கவிதையேனும் மாப்பலா போல் மடியில் வாங்கி தமிழர் நெஞ்சில் காலமெல்லாம் வீற்றிருக்கும் மூப்பிலா தமிழ், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கüன் சுவாசமாகத் திகழ்ந்துகொண்டிருக்கிற என்னுடைய வணக்கத்திற்குரிய கவிப்பேரரசு பெருந்தகையவர்களே! முத்துக்கடல் பதித்து மூன்று நெறி வளர்த்து கற்றுக் கலைமிகுந்த தாயகமே! நதியில் விளையாடி மன்னன் மடியில் தமிழ்த்தாயின் தலைமகன் நம்முடைய கவிப்பேரரசு அவர்களுக்கு பிறந்தநாள் பெருவிழா! எப்படி வாழ்த்துவதென்று எனக்கு தெரியவில்லை. தாயே தமிழே தலைநாள் அமுதே! எழுதுவதற்கு கொஞ்சம் எண்ணம் கொடு! வானவில்லிலிருந்து கொஞ்சம் வண்ணம் கொடு! அப்பொழுது தான் வைரமுத்துவைப் பற்றி நான் பேச முடியும்! தமிழ்நாடு என்ன தவம் செய்ததோ, வைரமுத்துவை நாம் பெற்றிருக்கிறோம்!
ஏனென்றால் ஸ்ரீரங்கமாடி திருப்பாற்கடலாடி, மாமாங்கமாடி, மாசி கடலாடி தவமாய் தவமிருந்து பெற்றிருக்கிற ஒரு மாபெரும் கவிஞனல்லவா! இவரை வாழ்த்துவதற்கு என்னைப் போட்டிருக்கி றார்கள். அதான் எனக்கு விஷயமே புரியல! மணக்கோலம் பார்க்கவந்த என்னை மணமகனாக ஆக்கியிருக்கிறார்கள்! பாபிலோனியாவினுடைய தொங்கும்
புதுக்கவிதைக்கு புதுப்பொலிவு தந்து, தன் பின்னே பெரும் கவிஞர் படையையே திரட்டி, தமிழ் மொழியின் வளத்தை மேம்படுத்திய தமிழ்ப் பேரரசனாய் கவியாண்ட, தனது கவிப்புலமையை திரைப்பாடல்கüல் புகுத்தி, திரைப்பாடலையும் கவிப்பாடலாய் உருமாற்றி, மெருகேற்றிய கவிப்பேரரசர் வைரமுத்துவின் பிறந்த நாள் விழா, இது தமிழ்க் கவிஞர்கüன் விழாவன்றோ! கவிப்பேரரசு வைரமுத்துவின் பிறந்தநாள் விழாவை ஆண்டுதோறும் கவிஞர்கள் திருநாளாக. வெற்றித் தமிழர் பேரவை கொண்டாடி வருகிறது. அந்த வகையில் வைரமுத்துவின் 70வது பிறந்தநாள் விழா, ஜூலை 13 அன்று காலை 10 மணியளவில்,சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள அவருடைய பொன்மணி மாüகையில் கோலாகலமாகத் தொடங்கியது. முன்னதாக, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், பெசன்ட் நகர் டைகர் வரதாச்சாரி சாலையில் உள்ள வைரமுத்துவின் இல்லத்துக்கே நேரில் சென்று, சால்வை அணிவித்து வாழ்த்தினார். முதல்வரின் வாழ்த்துக்களோடு,ஏக உற்சாகமாக விழா அரங்குக்கு வைரமுத்து வந்தார். அப்போது வைரமுத்துவின் பாடல்கள் இசைக்கப்பட்டன. வி.பி.குமார் வரவேற்புரை நிகழ்த்த, இந்த ஆண்டுக்கான கவிஞர்கள் திருநாள் விருதை நக்கீரனின் முதன்மை துணை ஆசிரியரும் கவிஞருமான ஆரூர் தமிழ்நாடனுக்கு, பலத்த கைத்தட்டலுக்கு நடுவே வைரமுத்து வழங்கினார். விருதுப் பட்டயத்தை, வெற்றித்தமிழர் பேரவையின் செயலாளர் மரபின் மைந்தன் முத்தையா படித்தார்.
விழாவில் வாழ்த்துரை வழங்கிய டாக்டர் ஜெகத்ரட்சகன், "மணக்கோலம் பூண்டிருக்கிற நாவுக்கரசராகவும், நற்றமிழ் வித்தகராகவும், நடமாடும் பல்கலைக்கழகமாகவும், யாப்பிலா பாடலேனும் யார் தரும் கவிதையேனும் மாப்பலா போல் மடியில் வாங்கி தமிழர் நெஞ்சில் காலமெல்லாம் வீற்றிருக்கும் மூப்பிலா தமிழ், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கüன் சுவாசமாகத் திகழ்ந்துகொண்டிருக்கிற என்னுடைய வணக்கத்திற்குரிய கவிப்பேரரசு பெருந்தகையவர்களே! முத்துக்கடல் பதித்து மூன்று நெறி வளர்த்து கற்றுக் கலைமிகுந்த தாயகமே! நதியில் விளையாடி மன்னன் மடியில் தமிழ்த்தாயின் தலைமகன் நம்முடைய கவிப்பேரரசு அவர்களுக்கு பிறந்தநாள் பெருவிழா! எப்படி வாழ்த்துவதென்று எனக்கு தெரியவில்லை. தாயே தமிழே தலைநாள் அமுதே! எழுதுவதற்கு கொஞ்சம் எண்ணம் கொடு! வானவில்லிலிருந்து கொஞ்சம் வண்ணம் கொடு! அப்பொழுது தான் வைரமுத்துவைப் பற்றி நான் பேச முடியும்! தமிழ்நாடு என்ன தவம் செய்ததோ, வைரமுத்துவை நாம் பெற்றிருக்கிறோம்!
ஏனென்றால் ஸ்ரீரங்கமாடி திருப்பாற்கடலாடி, மாமாங்கமாடி, மாசி கடலாடி தவமாய் தவமிருந்து பெற்றிருக்கிற ஒரு மாபெரும் கவிஞனல்லவா! இவரை வாழ்த்துவதற்கு என்னைப் போட்டிருக்கி றார்கள். அதான் எனக்கு விஷயமே புரியல! மணக்கோலம் பார்க்கவந்த என்னை மணமகனாக ஆக்கியிருக்கிறார்கள்! பாபிலோனியாவினுடைய தொங்கும் தோட்டத்தை ஒரு சின்ன குழந்தையின் சிரசிலே வைத்ததைப்போல என்னை அவரை வாழ்த்தச் சொல்லியிருக்கிறார்கள். அன்பு சொந்தங்களே! வரலாற்றுத் தங்கங்களே! சிகரங்களைச் செதுக்கிற சிங்கங்களே! காற்றோடு கைகொடுக்கும் கனல் நெருப்பகளே! மின்னலை விழுங்கி மின்சாரத்தைக் கொப்பüக்கும் வெற்றித்தமிழர் பேரவையினுடைய அருமை உடன்பிறப்புக்களே! உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கங்கள்!
திராவிட நாட்டினுடைய வானம்பாடி நம்முடைய கவிப்பேரரசு அவர்கள்! சொல்லாண்டு பாடி, சுவையாண்டு பாடி, பல்லாண்டு பாடி இன்னும் ஓர் நூறாண்டு வாழவேண்டும் என்று தான் என்னால் வாழ்த்த முடியும்! அடியேன் ஏழை! இதைத்தவிர வாழ்த்துவதற்கு என்னிடம் வேற வழியில்லை! மலர்களை உங்கள் கைகüலே தருகிற பொழுது அந்த மலரின் வாசத்தை நானும் பெறுவதைப்போல, பன்னீரை உங்கள் மீது தெüக்கின்ற போது அந்த பன்னீரின் தூறலை நானும் பெறுவதைப்போலே உங்களை வாழ்த்துகிற போது அந்த வாழ்த்தின் கூடுதலில் நானும் துள்ளுகிறேன். சந்தனக்காடுகüல் சறுக்கி விழுகின்ற சாரல் மழைபோல் திரண்டிருக்கிற பெருமக்களே! வண்ணத்தமிழுக்கு வளைகாப்பு நடத்துகிறோம்! வசந்த காலத்தில் இந்த விழா நடைபெற்றுக் கொண்டிருக்கிறது! மஞ்சள் நிலவாய் மாந்தüர் நிலவாய் மழை தேடி வந்திருக்கின்ற பெருமக்களே! உங்களுக்கு என் பணிவான வணக்கங்கள்! மந்திர சொல்லுக்கும் சுந்தர சொல்லுக்கும் சொந்தக்காரர் கவிப்பேரரசர். இவர் தமிழ் நடை தனி நடை. மது நடை மயக்க நடை! பூமியின் கூரையில் புகழ்கொடி நாட்டிய பெருந்தகை! பூமத்திய ரேகையில் தமிழ்க்கோலம் தீட்டிக்கொண்டிருக்கின்ற பெருமகனார்! பொன்னூஞ்சல் ஆடுகிற வெண்புறாக்களாய் உங்கள் சொல் இன்னும் எங்களை சொக்கவைத்துக் கொண்டிருக்கிறது பெருந்தகையவர்களே! கணக்குப் பார்க்காமல் எங்கள் கழனிக்கு வந்த கன மழையல்லவா நீங்கள்! பூ மணக்க, பால் மணக்க, புதுப்பொங்கல் நெய் மணக்க, வாயார மனதார பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பலகோடி நூறாயிரம் ஆண்டுகள் நீங்கள் வாழவேண்டுமென்று இந்த நேரத்தில் தெரிவித்துக்கொள்கிறேன்!
பெருமக்களே! வார்த்தைக்கும் வாழ்க்கைக்கும் வித்தியாசமில்லாமல் வாழ்ந்துகொண்டிருக்கிற ஒரு மாபெரும் கவி! தன்னைப் பற்றி நினைக்கும் மனிதர்கள் மத்தியிலே இந்த மண்ணைப் பற்றி நினைத்துக்கொண்டிருக்கிற ஒரு மாபெரும் கவிஞன்! சொல்லாடும் சுகத்தை சொல்லிக்கொடுத்து விண்ணோடு விளையாடிக்கொண்டிருக்கிற ஒரு வசந்தத்திற்காக மேகத்தையே தரைக்கு இறக்கியிருக்கிற ஆற்றல் உங்களுக்கு மட்டும் தானே இருக்கிறது! வானவில்லின் ஏழு வண்ணம் வார்த்தைகüல் எழுவண்ணம் வாழ்ந்துகொண்டிருக்கிற பெருந்தகையே நம்முடைய கவிப்பேரரசு! பூக்கüன் பேச்சுக்கும் பூகம்ப வீச்சுக்கும் சொந்தக்காரர் நீங்கள்! உங்களை எப்படி சொல்வது! வெல்வெட்டு வார்த்தைகüல் கல்வெட்டுத் தமிழை எழுதிக்கொண்டிருக்கிறீர்கள் இன்னும்! கையிலே இருப்பது எழுதுகோலா? மந்திரக்கோலா? தெரியவில்லையே! கண்ணுக்குத் தெரியாத நட்சத்திரங்களையும், கடலுக்கு அடியிலே இருக்கின்ற முத்துக்களையும் உன்னால் மட்டும் தானே கொண்டுவர முடிகிறது! எல்லாரும் இளம் தென்றலைப் பற்றி பாடியிருக்கிறார்கள். நீங்கள் சூரியனையே பாடிக் கொண்டிருக்கிறீர்கள்! கவிப்பேரரசு அவர்களே, நாவுக்கு சிக்காத அமிர்தம் நீங்கள்! கோடிக்கணக்கான விதைகளை தன்னுடைய மடியிலே வைத்திருக்கிறார்! நம்மைப்போன்ற வறண்ட பூமிக்கு அவரால் மட்டும் தான் விதைகளைத் தர முடியும்! அந்த மகானுக்கு பிறந்த நாள் என்னும்பொழுது மகிழ்ச்சியாக இருக்கிறது!" என்று பாசுரத் தமிழ் மணக்க, உவமை நயத்தோடு வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
அடுத்ததாக வாழ்த்திப் பேசிய கம்பம் செல்வேந்திரன், "நம்முடைய கவிஞரின் விழாக்கüல் நான் கலந்துகொள்ளுவதும், அவர் விழாக்கüல் என்னை அவர் அழைப்பதும் புதிய விஷயம் இல்லையென்பது நண்பர்களுக்கு தெரியும். பல விழாக்கüல் பார்வையாளனாக இருந்து என் பங்கüப்பைத் தந்திருக்கிறேன். என் நினைவு சரியாக இருக்குமானால் அவரது விழாக்கüல் நான் முதன்முறை கலந்துகொண்டது 1986ஆம் ஆண்டு.
அப்பொழுதுதான் அவரது முதல் தேசிய விருதை தனது பாடலுக்காக பெற்றிருந்தார். முதல் தேசிய விருதை அவர் பெற்ற பொழுது அவர் பிறந்த மண்ணான வடுகபட்டியே பூப்பூத்து மகிழ்ந்தது. மகிழ்ந்தவர்கள் தன் மண்ணின் மைந்தனை பாராட்டவேண்டும் என்று ஆசைப்பட்டார்கள். ஆசைப் பட்டார்கள் என்பதைவிட பேராசைப் பட்டார்கள். அவருக்கு விழா ஏற்பாடு செய்யப்பட்டது. அப்பொழுது நான் நாடாளுமன்ற உறுப்பினர். என் நண்பர் ஜெகத்ரட்சகன் அவர்களும் அப்பொழுது நாடாளுமன்ற உறுப்பினர்.
அவரும் நானும் முதன்முறையாக நாடாளுமன்றத்திற்கு போயிருந்த காலம் அது. அப்போது, நாடாளுமன்ற உறுப்பினரான நான் அவரை ஊர் எல்லையிலிருந்தே மேள தாளத்தோடு அழைத்து வந்து மேடையேற்றி பெருமைப்படுத்தி மகிழ்ந்தேன்.,
நான் முதன்முதலாக நாடாளுமன்ற உறுப்பினராகப் பொறுப்பேற்ற நேரம், இலங்கை தமிழர் பிரச்சனை கொழுந்துவிட்டு எரிந்த நேரம். அந்த விவகாரம் குறித்து என் கன்னிப்பேச்சில் 35 நிமிடங்கள் நான் பேசினேன்.அந்த பேச்சில் நம்முடைய கவிஞரின் கவிதையை நாடாளுமன்றத்தில் நான் பதிவு செய்தேன். எப்படி பதிவு செய்தேனென்றால், இலங்கைத் தமிழர் பிரச்சனைகளை பேசிக்கொண்டே வந்த நான் சொன்னேன், எங்கள் தமிழ்நாட்டுக் கவிஞன் வைரமுத்து ஒரு கவிதை எழுதினார். அவன் தீர்க்கதரிசி தான். இந்திய தேச வரைபடத்தில் இந்தியாவோடு இலங்கையையும் சேர்த்தே வரைந்திருக்கிறான் என்று நான் ஞாபகப்படுத்தினேன். இந்த கவிதை வரிகளை நிஜமாக்குவதற்கு இந்திய அரசாங்கம் முயற்சி செய்யுமா? என்றும் வெüயுறவுத்துறை அமைச்சரைப் பார்த்து நான் அன்றைக்கு கேட்டேன். இதையெல்லாம் நினைப் பதற்கு எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. நாற்பத்தைந்துக்கு மேற்பட்ட நூல்கள், ஏழாயிரம் பாடல்களுக்கு மேல் எழுதியவர், ஏழு முறை பாடலாசிரியருக்கான தேசிய விருது, இவருடைய ஒவ்வொரு பாடலும் தோழர்களே, இந்த உலகத்தில் பத்து நிமிடங்களுக்கு ஒருமுறை ஒலிபரப்பாகிக்கொண்டிருக்கிறது. இவரது கவிதைகள், படைப்புகள், தெலுங்கில், கன்னடத்தில், மலையாளத்தில், வங்காளத்தில், ரஷ்யனில், நார்வேஜியன் மொழிகüலும் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. தமிழ்மொழிக்கு ஒரு சர்வதேச அந்தஸ்தை பெற்றுத்தந்தவர் நம்முடைய கவிஞர்.
இந்தியாவின் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம், அவரை காப்பியக்கவிஞர் என்று பட்டமüத்து மகிழ்ந்தார். முன்னாள் பிரதமர் வாஜ்பாயே பெரிய கவிஞர்! அவர் எழுதிய புத்தகம் தமிழில்கூட மொழிபெயர்க்கப்பட்டு வந்திருக்கிறது. அவர் வைரமுத்துவை சொன்னார் கவிசாம்ராட் என்று!. எங்கள் கலைஞர் சொன்னார்...
கவிப்பேரரசர் என்றார். இதில் முக்கியமான விஷயத்தை நான் ஞாபகப்படுத்த வேண்டும். கலைஞர் கொடுக்கிற பட்டம் யாருக்கு கொடுத்தாலும் அது நிற்கும், நிலைக்கும்! எம்.ஜி.ஆர் அவர்களுக்கு மணப்பாறையில் வைத்து ஒரு நிகழ்ச்சியில் புரட்சி நடிகர் என்ற பட்டத்தை அவர்தான் கொடுத்தார். அந்த புரட்சி நடிகர் என்ற பட்டம் 72 வரை கொடிகட்டிப் பறந்தது. 72க்கு பிறகு புரட்சி நடிகர் புரட்சித் தலைவராக மாறிவிட்டது. அதேபோல, கண்ணதாசனுக்குக்கூட கவிஞர் என்ற பட்டத்தை கலைஞர் தான் கொடுத்தார். பொள்ளாச்சி மேடையில் வைத்து, கவிஞர் கண்ணதாசன் பேசுவார் என்று முதன்முறையாக கலைஞர் தான் அவரை கவிஞர் என்று அங்கீகரித்து பேசச்சொன்னார். இதை கண்ணதாசனும் எழுதியிருக்கிறார். நம்முடைய தலைவர் கலைஞர் அவர்களும் எழுதியிருக்கிறார். அவரை கவிஞர் என்று சொன்ன பட்டமும் நிலைத்தது. இவரை கவிப்பேரரசர் என்று சொன்ன பட்டமும் நிலைத்தது! இது கலைஞருடைய ராசி. இன்று உலகத் தமிழர்கள் உள்ளங்கüலும், அவர்கüன் உதடுகüலும் முழுமையாக இடம்பெற்ற கவிஞராக நம்முடைய கவிஞர் அவர்கள் இங்கே இருக்கிறார்.
1991ல் கலைஞரின் ஆட்சியை அன்றைக்கு இருந்த ஒன்றிய அரசு கலைத்தது. அது சமுதாயத்தையே கொந்தüக்க வைத்தது. ஒரு சமுதாயத்தின் சாட்சியாகவே மாறினார் நம்முடைய கவிப்பேரரசர். இவர் சொன்னார், 'அடியே அனார்க்கலி! உனக்குப் பிறகு உயிரோடு புதைக்கப்பட்டது இந்திய ஜனநாயகம் தானடி!' என்றார். அதற்கு அவருடைய தமிழாசிரியர் கலைஞர் எப்படி பதில் சொன்னார் தெரியுமா? 'எனக்கு ஆட்சி போனால் போகட்டும், ஒரு கவிதை கிடைச்சிருக்கு!' என்றார். என்னவொரு ரசிகர் கலைஞர்!" என்று கலைஞருக்கும் கவிப்பேரரசு வைரமுத்துக்குமான பாசப்பிணைப்பை நினைவுகூர்ந்து பாராட்டினார்.
ஏற்புரை வழங்கிய கவிப்பேரரசு வைரமுத்து, "நான் இப்படிப் பிறந்தநாள் கொண்டாடுவது பொன்னாடை, பூமாலைகளுக்காக அல்ல. உன் சுற்றம் இன்னும் உன்னுடன் அப்படியே இருக்கிறதா?
உன் உயரம் வீழாமல் இருக்கிறதா? உன் பணிகள் செம்மையாய்ச் சென்றுகொண்டு இருக்கிறதா? உன் அடுத்த கட்ட திட்டத்திற்கு இந்த சமூகத்தின் ஆதரவு தொடர்கிறதா? என்று என்னை நானே சோதித்துக் கொள்வதற்காகத்தான் நான் பிறந்த நாளைக் கொண்டாடுகிறேன். இதுவரை எனக்கு இந்தத் தமிழ் எவ்வளவோ கொடுத்திருக்கிறது. நான் தமிழுக்கு என்ன கொடுத்தேன்? இனிமேல்தான் கொடுக்கவேண்டும். இதுவரை நான் எழுதியது எல்லாம், நான் நாளை எழுதப் போவதற்கான வெள்ளோட்டம்தான்.' என்று அழுத்தம் கொடுத்துச் சொன்னவர், விருதுபெற்ற தமிழ்நாடனை வெகுவாகப் பாராட்டினார்.
அப்போது அவர்... "இந்த கவிஞர்கள் திருநாüல் விருது பெற்று அமர்ந்திருக்கும் வீறார்ந்த கவிஞர், இனிய உதயம் பத்திரிகையின் மூலம், ஏராளமான கவிஞர்களுக்கு வேடந்தாங்கலாக விளங்குகிறவர். என்னரும் சகோதரர் ஆரூர் தமிழ்நாடனுக்கு இந்த ஆண்டு விருது என்று சொன்னவுடன் தமிழ் இலக்கிய உலகமே அங்கங்கே நின்று கைதட்டியது. நல்ல கவிஞனல்லவா! நல்ல மரபுக்கவிஞனல்லவா! நல்ல புதுக்கவிதையில் தோய்ந்தவன் அல்லவா! என்று அவரை கொண்டாடினார்கள். எந்த பாவும் ஒருவன் எழுதிவிட முடியும். வெண்பாவைத் தவிர. வெண்பா எழுதுவது மட்டும் கஷ்டம். இந்த வெண்பா இலக்கணத்தில் தேர்ச்சிபெற்ற நற்பெருங்கவிஞன் நம்முடைய ஆரூர் தமிழ்நாடன் என்று பெருமையடைகிறேன். அவர் எழுதிய ஒரு வெண்பாவில், அழகான பெண்ணைப் பார்த்து, வேர்வை நிலா என்று வர்ணிக்கி றார். நிலாவுக்கு வேர்வை வராது. ஆனால் இவளுக்கு வேர்வை வருகிறது. அந்த நிலா வெறும் நிலா. நீ வேர்வை நிலா என்கிறார். இப்படி சுரதாவைப் போல் சொற்களால் சொக்கட்டான் ஆடுகிறார் தமிழ்நாடன்.இப்படியெல்லாம் எழுதுகிற ஒரு கவிஞனுக்குத்தான் இந்த மண்டபம் சிறப்புச் செய்து சீர் செய்கிறது' என்றார் பெருமிதமாக. விருதினைப் பெற்று ஏற்புரையாற்றிய நக்கீரனின் முதன்மைத் துணை ஆசிரியர் ஆரூர் தமிழ்நாடன், "கவிஞர்கள் சுரதா, நா.காமராசன், முத்துலிங்கம், ஈரோடு தமிழன்பன், சிற்பி உள்üட்ட பலரும் பெற்றுள்ள இந்த விருதினை தற்போது நானும் பெற்றிருப்பது மகிழ்வைத் தருகிறது. அதிலும் கலைஞர் நூற்றாண்டில், கவிஞர்கள் திருநாள் விருது பெற்றதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்" என்று தெரிவித்தார். இந்த நிகழ்ச்சிக்கு இயக்குநர் பாரதிராஜா உள்üட்ட பிரபலங்கள் பலரும் வந்திருந்து வைரமுத்துவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். நமது ஆசிரியர் நக்கீரன் கோபால், வைரமுத்துவுக்கும் விருதுபெற்ற தமிழ்நாடனுக்கும் சால்வை அணிவித்து வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
விழாவுக்கு வந்தவர்களை வைரமுத்துவின் புதல்வர்களான மதன் கார்க்கியும், கபிலன் வைரமுத்துவும் இன்முகத்தோடு வரவேற்றனர்.