க்களின் அன்றாட வாழ்வியலைப் புரட்டிப் போட்டிருக்கும் காலமிது. கொரானாவினால் பாதிப்படைந்தோர் பட்டியல் நாளுக்கு நாள் அதிகமாவதால், ஊரடங்கு 'உலகடங்காகி... மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கியிருக்கின்றனர். இந்த நேரத்தில் தங்களின் மனநிலையையும் உடல்நிலையையும் தகவமைத்துக் கொண்டு தங்களைச் சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ளவும், தங்களைத் தாங்களே உற்சாகமூட்டிக் கொள்ளவும் அவர்கள் வீட்டிற்குள்ளேயே பல வழிமுறைகளைக் கையாளுகின்றனர். அந்த வகையில், ஒரு மாலைப்பொழுதில் எங்கள் பெயர்த்தி பிரவந்திகா கதை சொல்லுமாறு கேட்கவும் , தினமும் வழக்கமாகச் சொல்லும் கதைகளில் இருந்து மாறுபட்டு, புதுமையாகக் கூறலாம் என்ற எண்ணத்தில் வலை ஒளியில் (யூ டியூப்) சிறுவர் கதைகளுக்கான முயற்சியில் இறங்கினோம்.

children

முதலாவதாக குழந்தை இலக்கிய உலகின் முடிசூடா மன்னர் அழ.வள்ளியப்பா, அவர்களின் எழுத்துக்களை அச்சுக்கோர்ப்பதற்கு முன்பே பார்வையிட்டு அச்சுக்கோர்த்த எண்பத்தேழு வயது இளைஞர், ’இலக்கியச்செல்வர்’ பி.வெங்கட்ராமன் நிறுவனத் தலைவராக இருக்கும் ’குழந்தைகள் இலக்கியப் பேரவையின்’ செயலாளராக கன்னிக்கோயில் ராஜா எங்கள் கவனத்தை வெகுவாகக் கவர்ந்தார்.

இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக இலக்கிய உலகில் கோலோச்சிக் கொண்டிருக்கும் ராஜா, ’குழந்தை இலக்கிய ரத்னா’ ‘கதைசொல்லி’ என்ற விருதுகளோடு புகழுடன் திகழ்ந்துகொண்டிருக்கிறார்.

Advertisment

அவரின் வலையொளித் தொடர்பில் சென்று ’மூக்கு நீண்ட குருவி’ என்னும் புத்தகத்திலிருந்து ’சிங்கராஜா’ கதையினைக் காண்டபோது, எங்களை அது கைகளைப்பற்றி, எங்கள் குடும்பத்தையே எங்கள் சின்னஞ்சிறு பருவத்திற்கே அழைத்துச் சென்றது.

cc

அடுத்தடுத்து அவருடைய சிறுவர் கதைகளைப் படிக்கப் படிக்க ஆர்வம் மேலோங்கியது. ஒரு சிறு கதையில் எத்தனை செய்திகளைத் தர முடியுமோ அவ்வளவு விசயங்களைக் கதையுடன் இணைத்துக் குழந்தைகளுக்குப் புரியும் படியாகத் தந்திருக்கிறார். அறிவியல், இயற்கையைப் போற்றுதல், கருணை, பல்லுயிர் நேசித்தல் என அனைத்தும் சிறுவர் கதை நூல்களாக, பாடல்களாக, நாடகங்களாக ஆக்கியிருக் கிறார். இந்த வகையில் 22 நூல்களை அவர் வெளியிட்டுள்ளார். குழந்தைகளை மிகவும் நேசித்து அவர்களுக்காக ’அரும்பின் புன்னகை’ என்ற இதழையும் நடத்திய கன்னிக்கோவில் இராஜா, குழந்தை இலக்கியத்தை நாம் பார்ப்பதை எல்லாம், பிம்பமாய்ப் பிரதிபலிக்கும் கண்ணாடியுடன் ஒப்பிடுகிறார். ஏதோவொன்றைச் சொல்லி சமாளித்து விட இயலாத இவ்விலக்கியத்தின் வாயிலாக இளம் தலைமுறைகளிடம் நேர்மறை எண்ணங்களை விதைப்பது நம் கையில் உள்ளது என்ற நம்பிக்கையை அவரிடம் காணமுடிகிறது. அதற்கான வழிமுறைகளைத் தேடியே தனது ஓட்டம் உள்ளது எனவும் கூறுகிறார்.

Advertisment

ஆங்கில மொழியில் சிறுவர் இலக்கியங்களை வயது வாரியாகப் பிரிப்பதைப் போல் தமிழ் மொழியில் அப்படியொரு முயற்சி இதுவரை இல்லை. அனைத்தும் பொதுவில் ‘குழந்தைகள் இலக்கியமாகக்’ கருதப்பட்டாலும் இந்நூல்களின் வாயிலாகக் குழந்தைகள் புதிய உலகினைக் கண்டு வியப்பதாகக் கூறுகிறார்.

’அப்துல்கலாம் பொன்மொழிக் கதைகள்,’ காந்தி தாத்தா பொன்மொழிக் கதைகள்’ என்பது போன்ற நூல் களில் சான்றோர்களின் நற்கருத்துகளை எளிமையான முறையில் குழந்தைகளின் மனதில் பதியனிட்டுவருகி றார் ராஜா. அவரது தங்கமீன்கள் சொன்ன கதைகள்’ , ‘இந்திய ஆய்வியல் துறையும், மலேயா பல்கலைக் கழகமும் இணைந்து நடத்திய போட்டியில் வெற்றி பெற்று நூலாக்கம் பெற்று மலேசியாவில் வெளியிடப்பட்டிருக் கிறது. முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் ’எழுத்து’ இலக்கிய அமைப்பின் ccசார்பில் இவரது ’பூமிக்கு வந்த குட்டி மேகம்’ படைப்பு வெற்றி பெற்று நூலாக்கம் பெற்று நீதியரசர் வே.சுப்பிரமணியம் மற்றும் கவிப்பேரரசு வைரமுத்து ஆகியோரால் வெளியிடப்பட்டது. எழுத்தாளர் ’மலர் பதிப்பகம் பன்னீர்செல்வத்துடன் இணைந்து மழலைச் சுவடுகள் ஐந்து, ஆறு ஆகிய தொகுதிகளைக் கொண்டு வந்துள்ளார்.

இவ்வூரடங்கு காலகட்டத்தில் இணையவழி மூலமாக உள்நாடு மற்றும் வெளிநாட்டுக் குழந்தைகளுக்கு கதை சொல்லி வருகிறார் கன்னிக்கோயில் ராஜா . மலேசியாவில் ஆசிரியர் நிர்மலாதேவி பன்னீர்செல்வம், ’கண்ணம்மாவின் கதை நேரம்’ என்ற தலைப்பில் பன்னிரண்டு வாரங்களாக கன்னிக்கோவில் இராஜா அவர்களின் நூல்களிலுள்ள கதைகளை இணையம் வழியாக எடுத்துச் சொல்லி வருகிறார். மேலும் அந்நாட்டின் நான்கு பள்ளிகளில் இவரது கதைகளை ஆசிரியர்கள் குழந்தைகளுக்கு பாடமாக போதித்து வருகின்றனர்.

சிங்கப்பூர் நேஷனல் லைப்ரரியில் இவரது கதைகள் ஒலி-ஒளி பரப்பு செய்யப்பட்டன. கனடா ஆசிரியர் சுஜிதா சிவரூபன் மற்றும் கலிபோர்னியா, மிக்சிகன் இலக்கிய அமைப்பும் இவரது கதைகளை அனிமேஷனில் உருவாக்கி இணைய வெளியில் பதிவிட்டு வருகிறார்கள்.

கன்னிக்கோவில் ராஜாவின் ஒட்டுமொத்த குழந்தை இலக்கியம் பற்றி புதுச்சேரியைச் சேர்ந்த பேராசிரியர் இர.பிரபா, ’கன்னிக்கோவில் இராஜா வின் இலக்கியப் படைப்பும் பங்களிப்பும்’ என்ற தலைப்பில் ஒர் உ நூலை எழுதிவருகிறார். அது டிசம்பர் மாதம் வெளிவரவிருக்கிறது. ராஜாவின் குழந்தைகள் பாடலை மூவரும் சிறுவர் கதைகள் நூல்களை இருவரும் மின்மினி இதழை ஒருவருமாக எடுத்து எம்.ஃபில் பாடத்திற்கான ஆய்வு செய்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அவரது கதைப் பாடல்களை கண்களால் மேய்ந்தபோது,

""காகம் போட்டக் கற்களைப் போல

உன் மனக்குவளையில்

போட்டுக் கொண்டே இருக்கிறேன்!

கற்கள்தான் சேர்த்ததே தவிர

தாகம் தீரவில்லை""

-என்றொரு ’அவளினதிகாரம்’ கவனத்தில் பட்டது.

காதலும் நவீனமுமாய் புதுக்கவிதைகள் எழுதுவதே இவரது இலக்கிய உலகின் நுழைவாயிலாக இருந்துள் ளது . நவீனக் கவிதைகளின் தொகுப்பாக ’சொற்களில் சுழலும் கவிதை’ என்னும் நூலினையும் ராஜா வெளியிட்டுள்ளார். ‘பொதிகை மின்னல்’ இதழின் இணையாசிரியராகவும் ’புதிய செம்பருத்தி’ இதழின் ஆசிரியர்க் குழுவிலும் இணைந்தியங்கும் மரங்களின் காதலரான கன்னிக்கோவில் ராஜா, ’மின்மினி ஹைக்கூ’ இதழின் ஆசிரியராக ஏகத்துக்கும் சாதனைகளைப் புரிந்துவருகிறார். .

ஹைக்கூ மீது இவர் கொண்டுள்ள அதீத ஆர்வம், அதை அடி முதல் நுனி வரை ஆராயச் செய்துள் ளது. ஹைக்கூ, லிமரைக்கூ, சென்றியு, ஹைபுன் என ஹைக்கூ இலக்கியத்தின் அனைத்து வகைமைகளிலும் முத்திரை பதித்ததுடன் ‘லிமர்புன்’ எனும் புதிய கவிதை வடிவத்தையும் தமிழுக்கு அறிமுகம் செய்திருக்கிறார். அது பலராலும் ஏற்கப் பட்டு வருகிறது.

அதேபோல், ’குறுஞ்செய்தி ஹைக்கூ’ என்ற இதழை யும் தொடங்கி ஏறத்தாழ 40 இதழ்களைக் கொண்டு வந்திருக்கிறார். இப்படி 1000 நாள்கள் தொடர்ந்து கைபேசி யில் இவர் வெளியிட்ட கவிதைகள் தொகுக் கப்பட்டு, அவரை நூல்களகவும் வெளி வந்துள்ளன.

அடுத்ததாக ’ஹைக்கூ விசிறி’, ’ஹைக்கூ சாவிக்கொத்து’, ’ஹைக்கூ தேநீர் கோப்பை’ என்று இவரது படைப்புகள் புதுபுது வடிவங்களில் விரிகிறது. மேலும், மரங்களில் ஹைக்கூ கவிதைகளை பதித்து, ஹைக்கூ பூங்கா ஒன்றை உருவாக்க வேண்டும் என்ற கனவிலும் இருக்கிறார் கன்னிக்கோயில் ராஜா. இவரது சேவைக்கான அங்கீகாரமாக கோவை வசந்தவாசல் கவிமன்றம் ’துளிப்பா பரிதி’ என்ற விருதை வழங்கிச் சிறப்பித்துள்ளது. மேலும் எண்ணற்ற விருதுகளையும் இவர் பெற்றிருக்கிறார்.

cc

ஐயன் வள்ளுவர் பிறந்த மயிலாப் பூரில், மகாகவி பாரதியார் பிறந்த நன்னாளில் இவர் பிறந்ததாலோ என்னவோ கதாசிரியராக, பாடலாசிரியராக, கதை சொல்லியாக, நூல் வடிவமைப்பாளராக, கவிஞராக, இயற்கை ஆர்வலராக பன்முககலைஞராக ஒளிவிட்டுக்கொண்டி ருக்கிறார்.

அதேபோல் விழாக்களில் யாரை யேனும் இவர் சிரப்பிக்க நினைத்தால் அவர்களுக்கு புத்தகங்களால் ஆன மாலையையே அணிவித்து சிறப்பிப் பார். இப்படி தமிழ் இலக்கியத்துக்கா கவே அர்ப்பணித்துகொண்டிருக்கும் கன்னிக்கோயில் ராஜாவின் திசைப் பக்கம், சாகித்ய விருதுகள் உட்பட உயர்ந்த விருதுகள் அத்துனையும் திரும்ப வேண்டும். அதுதான் இந்தக் கலைஞனுக்கு தமிழகம் காட்ட வேண்டிய பேரன்பு.