வாழ்க்கையை இந்தச் சமுதாயத்திற்காக ஒப்புக் கொடுத்தவர்களில் முதன்மையானவர்கள் எழுத்தாளர்கள். ஒரு விஞ்ஞானி மேற்கொள்ளும் ஆராய்ச்சிக்கு நிகராகத் தன் வாழ்க்கையை, தன் படைப்பு களைச் சோதனைக்கு உட் படுத்தி அதன் முடிவுகளை உயிர்க்குலத்திற்கான கொடையாகத் தருகின்றனர். குரல் இல்லாமல் போன ஒடுக்கப்பட்டவர்களின் மௌன ஓலங்களை எழுத்தின் ஓசைகளால் உலகத்தின் கவனத் திற்குக் கொண்டுவருகின்றனர். அதிகாரத்தின் நியாயங்களுக்கு வளைந்துபோகாமல் பாதிக்கப் பட்டவரின் நியாயங்களுக்காக வழக்கு தொடுக்கின்றனர். தனித் துவத்தைக் கொண்டாடும் அதே வேளையில் பன்மைத்துவத்திற்கு ஆதரவாகக் கரம் கொடுக்கின்றனர்.
அப்படிப்பட்ட புலவர் களை யானைமீது அமரவைத்து வலம் வரச்செய்து அன்பு பாராட்டிய அரசர்கள் வரலாற்றில் இடம்பிடித்திருக்கின்றனர். பாவலர் களுக்கு ஊர்களைப் பரிசாகக் கொடுத்து மகிழ்ந்த புரவலர்கள் இலக்கியத்தில் காணப்படுகின்ற னர். மகாகவி பாரதியார் விரும்பியதுபோல பொற்கிழி கொடுத்து எழுத்தாளர்களைக் கொண்டாடிய சமூகம் தமிழ் மண்ணில் உண்டு. இன்றைய தமிழக அரசு தமிழறிஞர்களுக்கு வீடு கொடுத்துக் கௌரவித்து வருகிறது.
சமூக மாற்றத்திற்கான வீரியமிக்க விதைகளாகத் தன் எழுத்துக் களைக் கையாளும் எழுத்தாளர் சி. மோகனுக்குத் தனித்த முகவரி உண்டு. அவரின் கலைவாழ்வைக் கொண்டாடும் நிகழ்வு சமீபத்தில் வெகுசிறப்பாக நடந்தது.
தனது இருபத்தியொன்றாவது வயதில் ‘விழிகள்’ என்ற சிற்றிதழை நண்பர்களுடன் தொடங்கி, தன் வாழ்வைச் சிறுபத்திரிகை இயக்கத்தோடும் எழுத்தோடும் பிணைத்துக்கொண்டார். நாவல், சிறுகதை, கவிதை, மொழிபெயர்ப்பு, ஆய்வு, விமர்சனம், கட்டுரை, உரையாடல், சிறுபத்திரிகை இயக்கம், நூல் பதிப்பு, ஓவிய - சிற்பக் கலை எனக் கலை இலக்கியச் செயற்பாட்டாளராக இயங்கி வருகிறார். அவரின் இலக்கியப் பங்களிப்பைப் போற்றும் வகையில் ‘சி. மோகன் கலைவழி வாழ்வு 70’ என்ற நிகழ்வு ஏற்பாடானது. கலையை அறமாகக் கண்ட அவர், தன் வாழ்வைக் கலை நம்பிக்கையின் உருவகமாக அமைத்துக்கொண்டார்.
காலம் செல்வம், அன்னம் கதிர், பத்திரிகையாளர் தளவாய் சுந்தரம், கவிஞர் லார்க் பாஸ்கரன் போன்ற தமிழ் ஆர்வலர்கள் எடுத்த விழாவில் எழுத்தாளரின் அன்பில் மகிழும் அத்தனை வாசகர்களும், நண்பர்களும், தமிழ் உறவுகளும் கலந்து கொண்டு சிறப்பு செய்தனர். இரண்டு அமர்வுகளாக வடிவமைக்கப்பட்ட நிகழ்வில் முதல் அமர்வு கருத்தரங்கமாகவும், இரண்டாம் அமர்வு கொண்டாட்டமாகவும் அமைந்தது குறிப்பிடத்தக்கது. குழந்தைகளைக் கைப்பிடித்து அழைத்துச் செல்வதுபோல நிகழ்ச்சியை உற்சாகமாக நெறிப் படுத்திய பெருமை எழுத்தாளரும் கதைசொல்-யுமான பவா செல்லத்துரைக்கு உரியது.
இன்றைக்கு எல்லாத் துறைகளுக்கும் இருக்கும் பெரிய சவால் எப்படி இளைஞர்களை மரபு சார்ந்த நிகழ்வுகளில் பங்குபெறச் செய்வது என்பதே! அந்தச் சவாலைச் சாதாரணமாக எதிர்கொண்டவர் எழுத்தாளர் சி. மோகன். கலை என்ற பேராற்றலை எந்தச் சமரசமும் இல்லாமல் படைத்துக் காட்டியவர். பெரும்பாலும் இவரின் எளிமை யினாலேயே இளைஞர்களை முழுமையாக ஈர்த்தார். நாவல் குறித்த கறாரான பார்வை கொண்ட இவரின் நாவல் குறித்து அரங்கத்தில் விவாதிக்கப்பட்டது. திருமணம் தாண்டிய உறவுகளை, மனிதர்களின் அக உணர்வுகளைத் துல்-யமாக எழுதியவர் என்று பாராட்டுப் பத்திரம் வாசித் தாலும், சில கதைமாந்தர்களை இன்னும் கூடுதல் கவனத்துடன் படைத்திருக்கவேண்டும் என்ற விமர்சனப் பார்வையையும் மிகுந்த உற்சாகத்தோடு வரவேற்றார்.
இலக்கிய உலகத்தில் தனி பிரதேசத்தை அடையாளம் காட்டியவர் மோகன் என்று தலைமை உரையாற்றிய யூமா வாசுகி குறிப்பிட்டபோது அரங்கமே கரவொ-யால் அதிர்ந்தது. ஒவ்வொரு வரின் வாழ்க்கையும் அந்தத் தருணத்தின் அமிர்தத்தைக் கொடுக்கிறது என்ற வகையில் அமைந்த சிறுகதைகளும், நவீன ஓவியர்கள் முத-ய பல்வேறு பொருள் பற்றிய கட்டுரை நூல்களும், மாய எழுத்தாக உலாவரும் இவரின் மொழிபெயர்ப்பு நூல்களும் அழுத்தமாகப் பேசப்பட்டன.
வாழ்க்கை மீது பெரிய எதிர்பார்ப்பும் ஈடுபாடும் கொண்டவர்கள் கலை இலக்கியத்தைப் பார்த்து ஓடி ஒளியக்கூடும். இந்தக் குற்றச்சாட்டு இவரிடம் காணமுடியாது என்று தொடங்கிய எழுத்தாளர் வண்ணநிலவன், தனது கலைப் பயணத்தை வெற்றிகரமாக மாற்றிக்கொண்டார் சி. மோகன் என்று விளக்கினார். எனினும் இவர் சந்திக்காத பிரச்சினைகளே இல்லை. வாழ்க்கை இவரின் இதயத்தில் ஆணி அடித்துத் துயர ஆடைகளைத் தொங்கவிட்டபோதும் அவற்றை மாலைகளாக மாற்றிக்கொண்டு துயரங்களைக் கடந்து வந்தவர்.
வாழ்க்கையின் மீது புகார் சொல்லாத ஒப்பற்ற கலைஞரான இவர், காலந்தோறும் தமிழ் இலக்கியத்தின் போக்கைத் திருத்திக்கொண்டே இருப்பவர். இவரின் இலக்கிய அணுகுமுறையை- அறிவிய-ல் ராமன் எஃபக்ட் என்று குறிப்பிடுவதுபோல இலக்கியத்தில் மோகன் எஃபக்ட் என்று குறிப்பிடலாம். சிந்தனை வளத்தால் கூட்டத்தில் இருக்கும்போது தனியாகவும், தனியாக இருக்கும்போது கூட்டமாகவும் இருக்கும் எழுத்தளாரை நமக்கு அடையாளம் காட்டினார் இயக்குநர் சீனு. ராமசாமி. தான் கலை வாழ்க்கையில் தோல்வி அடைந்த நேரத்தில் சி. மோகனைச் சந்திக்க வந்தபோது, தன்னை எந்தவிதத்திலும் அவமானப்படுத்தாதவர் என்ற நல்ல குணத்தைப் பகிர்ந்துகொண்டார்.
மனதில் பட்டதைத் துணிச்சலுடன் சொல்-, நவீன இலக்கியத்தின் முன்னத்தி ஏராக இருக்கும் இவரை ஒவ்வொருவரும் தனக்கானவராக நினைக்க வைத்தவர். தன் எண்ணங்களை எழுத்தாக மாற்றவேண்டும் என்று ஆர்வத்தோடு வருபவரை அன்போடு வரவேற்பவர் என்று குறிப்பிட்ட எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், இலக்கிய உலகில் தனக்கான அடையாளத்தை உருவாக்கித் தந்தவர் என்று நன்றியோடு கூறினார். சுந்தர ராமசாமியின் கதை உலகமும், தி. ஜானகிராமனின் கதைகளின் அக உலகமும் ஒன்றாக இணைந்தால் அவருக்குப் பெயர் சி. மோகன் என்று புளகாங்கிதம் அடைந்த எஸ்.ரா., தன் தேர்ந்த வாசிப்பின் காரணமாகத் தமிழ்ச் சமூகத்திற்கு தஸ்தாவெஸ்கியை அறிமுகம் செய்துவைத்தார் என்றும் பதிவு செய்தார். மேலும் மிக முக்கியப் படைப்பாளியான ஜி. நாகராஜன் பற்றிய கட்டுரை எழுதியதுடன், அடுத்த தலைமுறைக்கு எப்போதும் கொண்டு செல்கிறார். அவரைக் கொண்டாடிக் கொண்டே இருப்பதால் இவரே அவரின் மகன் என்று எழுத்தாளரின் பேரன்பைச் சிலாகித்தார்.
வாழ்க்கையை அதன் போக்கில் அனுபவித்து, நம்பிக்கையோடு எழுதினால், அதற்கான அங்கீகாரம் கிடைக்கும் என்று தீவிரமாக நம்பும் சி. மோகனின் மேசை முழுக்க நூல்களே நிரம்பியிருப்பதால் அவரிடம் முதுமையும் தனிமையும் தூரத்தில் இருந்து வேடிக்கை பார்க்கும். இலக்கியவாதிகளுக்கும், ஓவியர்களுக்கும் தோள் கொடுக்கும் இவருக்கு, தமிழ் மனங்களின் அன்பால் திரட்டிய நிதியை நிகழ்ச்சியில் வழங்கியபோது ஒரு சிறுபத்திரிகைக்குத் தரும் மரியாதையாக ஏற்கிறேன் என்று நெகிழ்ச்சியுடன் பேசினார். கலைஞன் என்பவன் எப்போதும் தனித்துவமானவன். அவன் பொதுச் சமூகத்தோடும், பொதுப் புத்தியோடும் கரைந்து போக மறுப்பவன்.
காலத்தைக் கடந்து ஒரு படைப்பாளி சிந்திக்கும் போது அவன் வாழும் காலத்திற்குப் பொருத்தமற்றவ னாக மாறிவிடுகிறான். சமகாலத்துத் தந்திரங்களோடு, மனிதர்களோடு பொருந்தாமல் போகும்போது அவன் தனிமைப்பட்டுப் போகிறான். இந்தச் சூழ-ல் அவனுக்கான உலகியல் வாழ்க்கையின் தேவைக்கான பொருள் தேடும் நிலையில் பின்தங்கிவிடுகிறான்.
அவன் வறுமைக்கு ஆட்படுவது இயல்பாக நடந்து விடுகிறது. அப்படிச் சிந்திப்பவர்களை, எழுத்தாளர்களை, கலைஞர்களைப் பாதுகாக்க வேண்டியது நாகரிக சமூகத்தின் கடமை. ஆனால், நாகரிக சமூகமாகத் தமிழ்ச் சமூகம் இருந்திருக்கி றதா என்றால், கடந்த காலத்தின் வ-கள் வேதனை தருகிறது. மகாகவி பாரதி தொடங்கி, புதுமைப்பித்தன் பிரமிள் வரை படைப்பாளிகள் சமூகத்தால் கைவிடப்பட்டவர்களாக வறுமையில் வாடி ந-ந்த நிலையில் இறந்தவர்களாகப் பார்த்திருக் கிறோம். இந்த அவலம் தற்காலத்தில் நடக்காத வண்ணம் எழுத்தாளர்களைப் பாதுகாக்கும் நாகரிகத்தைச் சமூகம் எட்டியிருக்கிறது. அதன் அடையாளமாகவே இந்த நிகழ்ச்சியல் பணமுடிப்பு வழங்கியதைப் பார்க்கிறேன்.
பணம் கொடுத்து உதவுவதால் ஒரு கலைஞன் பரிபூரணம் அடைவதில்லை. ஆனால் சமுதாயத் திற்காகச் சிந்திப்பவர்களைப் பாதுகாக்கவேண்டிய பொறுப்பு அந்தச் சமூகத்திற்கு இருக்கிறது. அந்த வகையில் எழுத்தாளர் சி. மோகனுக்கு, பணமுடிப்பு வழங்கியதன் வழியாக இந்தச் சமுதாயம் நாகரிகம் பெற்றிருக்கிறது. மொழிபெயர்ப்பில் எதிர்பார்க்கப்படும் மொழியறிவுடன் நின்றுவிடாமல் அடுத்த மொழியின் பண்பாடும் உணர்ந்து அதன் ஆன்மா மாறாமல் மொழிபெயர்த்துத் தரும் திறமையானவர் இவர். தினம் தினம் வானத்தி-ருந்து புதியவற்றைக் கற்றுக்கொள்வது போல, அடுத்த தலைமுறைக்கு இலக்கியம் பற்றிய தெளிவான பார்வையையும், பொறுமையையும் எப்போதும் சொல்-க் கொடுத்துக்கொண்டே இருக்கிறார்.
படம்: குமரேசன்