Advertisment

கொட்டம் அடக்கும்வரை போராடுவோம்! -கோவி. லெனின்

/idhalgal/eniya-utayam/fight-till-end-trench-kovi-lenin

vijayendra

Advertisment

ந்த மடமே உண்மையானதல்ல. அது பேசுவதும் உண்மைக்கு மாறானவை. செயல்களும் நேர்மையற்றவை. ஆதிசங்கரர் நிறுவிய 4 மடங்களில் காஞ்சி சங்கர மடம் இடம்பெறவில்லை. பிற்காலத்தில் உருவாகி, மூலமடம் போல காட்டிக்கொண்டதுதான் கும்பகோணத்திலிலிருந்து காஞ்சிபுரத்துக்கு இடம்பெயர்ந்த இன்றைய மடம் என்கிறார்கள் ஆன்மிகப் பற்றாளர்கள். மடத்திற்குள் போலிசாமியார்கள் இருந்ததை பல செய்திகளில் படித்திருப்போம். மடமே போலிலி என்கிறபோது அதிலுள்ள சாமியார்களின் யோக்கியதை பற்றி சொல்ல வேண்டியதில்லை.

ஆளுநர் பங்கேற்ற புத்தக வெளியீட்டு விழா மேடையில், தனக்கென தனியாக சற்று உயரமான ஒரு மேடை அமைத்து அதில் உட்கார்ந்திருந்த காஞ்சி மடத்தின் இளைய சங்கராச்சாரியார் விஜயேந்திரர், விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டபோது எழுந்து நிற்கவில்லை. ஆளுநர் உள்ளிட்ட அவையோர் அனைவரும் எழுந்து நிற்கிறார்கள். விஜயேந்திரர் மட்டும் கண்ணை மூடிக்கொண்டு உட்கார்ந்திருக்கிறார். விழா நிறைவில், தேசிய கீதம் இசைக்கப்படுகிறது. அப்போது அவையோருடன் விஜயேந்திரரும் எழுந்து நிற்கிறார். அவர் கடைப்பிடித்த இந்த வேறுபாடான நிலைப்பாடுதான் தமிழர்களைக் கொந்தளிக்க வைத்துள்ளது.

தமிழ்த்தாய் வாழ்த்தினை அவமதித்த விஜயேந்திரருக்கு எதிரான கருத்துகள் பல திசைகளிலிலிருந்தும் தீக்கணைகளாகப் பாய்ந்து வந்தன. தமிழ்த்தாயை அவமதித்ததற்கு விஜயேந்திரர் மன்னிப்பு கேட்க வேண்டும்-வருத்தம் தெரிவிக்க வேண்டும் எனக் குரல்கள் அதிர்ந்தன. கடந்த வாரம் வரை இ

vijayendra

Advertisment

ந்த மடமே உண்மையானதல்ல. அது பேசுவதும் உண்மைக்கு மாறானவை. செயல்களும் நேர்மையற்றவை. ஆதிசங்கரர் நிறுவிய 4 மடங்களில் காஞ்சி சங்கர மடம் இடம்பெறவில்லை. பிற்காலத்தில் உருவாகி, மூலமடம் போல காட்டிக்கொண்டதுதான் கும்பகோணத்திலிலிருந்து காஞ்சிபுரத்துக்கு இடம்பெயர்ந்த இன்றைய மடம் என்கிறார்கள் ஆன்மிகப் பற்றாளர்கள். மடத்திற்குள் போலிசாமியார்கள் இருந்ததை பல செய்திகளில் படித்திருப்போம். மடமே போலிலி என்கிறபோது அதிலுள்ள சாமியார்களின் யோக்கியதை பற்றி சொல்ல வேண்டியதில்லை.

ஆளுநர் பங்கேற்ற புத்தக வெளியீட்டு விழா மேடையில், தனக்கென தனியாக சற்று உயரமான ஒரு மேடை அமைத்து அதில் உட்கார்ந்திருந்த காஞ்சி மடத்தின் இளைய சங்கராச்சாரியார் விஜயேந்திரர், விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டபோது எழுந்து நிற்கவில்லை. ஆளுநர் உள்ளிட்ட அவையோர் அனைவரும் எழுந்து நிற்கிறார்கள். விஜயேந்திரர் மட்டும் கண்ணை மூடிக்கொண்டு உட்கார்ந்திருக்கிறார். விழா நிறைவில், தேசிய கீதம் இசைக்கப்படுகிறது. அப்போது அவையோருடன் விஜயேந்திரரும் எழுந்து நிற்கிறார். அவர் கடைப்பிடித்த இந்த வேறுபாடான நிலைப்பாடுதான் தமிழர்களைக் கொந்தளிக்க வைத்துள்ளது.

தமிழ்த்தாய் வாழ்த்தினை அவமதித்த விஜயேந்திரருக்கு எதிரான கருத்துகள் பல திசைகளிலிலிருந்தும் தீக்கணைகளாகப் பாய்ந்து வந்தன. தமிழ்த்தாயை அவமதித்ததற்கு விஜயேந்திரர் மன்னிப்பு கேட்க வேண்டும்-வருத்தம் தெரிவிக்க வேண்டும் எனக் குரல்கள் அதிர்ந்தன. கடந்த வாரம் வரை இதே மன்னிப்பையும் வருத்தத்தையும் கோரி வேறு ஒரு திசையிலிலிருந்து குரல்கள் ஒலிலித்திருந்தன.

Advertisment

தமிழுக்குப் புகழ்மாலை சூட்டிய சான்றோர் ஒவ்வொருவரையும் பற்றி ஆய்வுரை நிகழ்த்தி வரும் கவிஞர் வைரமுத்து, தமிழை ஆண்டாள் என்ற தலைப்பில் ஆழ்வார்களில் ஒருவராகக் கொண்டாடப்படும் ஆண்டாள் பற்றிய ஆய்வுரையை நிகழ்த்தினார். அதில், தேவதாசி மரபைச் சார்ந்தவராக ஆண்டாள் இருக்கக்கூடும் என்று பொருள்படும் ஓர் ஆங்கிலக் கட்டுரையிலிலிருந்து சில வரிகளை மேற்கோள் காட்டினார்.

அதன் காரணமாக, ஆண்டாளை கவிஞர் அவமதித்து விட்டதாகவும், அதற்குப் பரிகாரம் செய்யும் வகையில் ஆண்டாள் கோவில் கொண்டிருக்கும் திருவில்லிலிபுத்தூருக்கு வந்து அவரது சன்னதியில் கவிஞர் மன்னிப்பு கேட்கவேண்டும் என நூலோர்கள் பல இடங்களிலும் போராட்டங்களை நடத்தினர்.

ஆண்டாளின் தமிழ்ப் பணியைத் தமிழை திரைவணிக முதலீடாக்கிய கவிஞர் வைரமுத்து கொச்சைப்படுத்திவிட்டார் என்று கொந்தளித்தனர். கவிஞரின் நாக்கை அறுப்போம், கையை வெட்டுவோம், அவருக்கு ஆதரவாகப் பேசுவோரின் தலையைக் கொய்வோம் என சபதம் பூண்டனர். தமிழைப் பாடிய ஆண்டாளைக் கொச்சைப்படுத்தியதாகக் குற்றம்சாட்டப்பட்ட கவிஞருக்கே இத்தகைய கொடூர தண்டனைகள் தரப்படும் என்றால், அந்தத் தமிழையே அவமதித்த ஜெயேந்திரருக்கு எத்தகைய கொடூர தண்டனையைத் தரவேண்டியிருக்கும்?

தமிழை உண்மையாக நேசிப்பவர்கள் யாரும் கொடூர தண்டனை தரும் கொடியவர்களல்லர். முரசுக் கட்டிலை அவமதிப்பது கொலைத்தண்டனைக்குரிய அரச குற்றம் என்றபோதும், அதில் படுத்துறங்கியவர் தமிழ்ப்புலவர் மோசிகீரனார் என்பதால் அவருக்குத் தண்டனை தருவதற்குப் பதில், கவரி வீசி குளிர்வித்து, அந்த மென்காற்று உடல் தீண்டியதால் புலவரை கண்விழிக்கச் செய்து, அசதியின் காரணமாக அறியாமல் அவர் செய்த பிழையை அவரே உணரும்படி செய்த மன்னர்கள் வாழ்ந்த மண் இது. தமிழைப் போலவே தமிழை நேசிப்பவர்களின் இதயமும் இனிமையானது.

சங்கர மடத்துக்கு இந்த இனிமை தெரியாது. வாயுத் தொல்லைக்காரன் விடும் ஏப்பம் போன்ற ஒலிலிப்புடன் சமஸ்கிருத மந்திரம் ஓதுவதும், அந்த சமஸ்கிருதமே உயர்வான மொழி என்றும், அது கடவுளுக்குரிய பாஷை என்றும், முந்திப் பிறந்த மூத்த மொழியான தமிழும் அதன் உதிரத்தில் உதித்தெழுந்த பிற மொழிகளும் நீச பாஷை என்றும் காலங்காலமாக சொல்லிலி வரும் பரம்பரையில் வந்தவர்கள்தான் சங்கராச்சாரியார்கள்.

அதனால் தமிழ்த்தாய் வாழ்த்தினை அவமதித்ததோடு மட்டுமல்லாமல், அது இசைக்கப்பட்டபோது விஜயேந்திரர் தியானத்தில் இருந்தார் எனத் திமிர்த்தனத்துடன் சங்கர மடத்திலிலிருந்து பதில் வந்தது.

அத்துடன் நிற்கவில்லை. தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்பது மரபல்ல என்றும் வியாக்கியானம் செய்தது. சங்கர மடத்துக்கு சங்கடம் என்றதும் மத்தியில் ஆளுங்கட்சியாக உள்ள பா.ஜ.க.வைச் சேர்ந்தவர்கள் வலிலிய வந்து விஜயேந்திரருக்கு முட்டுக்கொடுக்க முனைந்தார்கள். தேசிய கீதத்திற்கு எழுந்து நிற்க வேண்டும் என்று சட்டம் சொல்கிறதென்றும், தமிழ்த்தாய் வாழ்த்துக்கு அப்படி இல்லை என்றும் வழக்காடினார்கள். இவை எல்லாமே சொத்தை வாதம்.

மனோன்மணியம் சுந்தரனார் எழுதிய "நீராருங் கடலுடுத்த' எனத் தொடங்கும் பாடல் உரிய அரசாணையுடன் கலைஞர் தலைமையிலான தி.மு.க. ஆட்சியில் தமிழ்த்தாய் வாழ்த்தாக ஏற்கப்பட்டது. அரசுக்கு கட்டுப்பட்டவர்கள் அது கடைப்பிடிக்கும் மொழி வாழ்த்துக்கும் கட்டுப்படவேண்டும் என்பது சட்டமரபு. சட்டத்தை ஏமாற்றிவிட்டு, சங்கரராமன் கொலை வழக்கில் சந்து பொந்துகளில் நுழைந்து தப்பித்து வந்த சங்கர மடாதிபதிகள் சட்டத்தையும் மதிக்கமாட்டார்கள். தமிழுக்கும் மதிப்புத் தர மாட்டார்கள். அது அவர்களிடம் இயல்பாக உள்ள கொலஸ்ட்ராலின் தன்மை.

விஜயேந்திரருக்காக சம்மன் இல்லாமல் ஆஜராகும் பா.ஜ.க.வின் மைக் மகுடிகள், 2010-ல் நடந்த செம்மொழி மாநாட்டின்போது தமிழ்த்தாய் வாழ்த்துக்கு அப்போ தைய முதல்வர் கலைஞர் கருணாநிதி எழுந்திருக்கவில்லை’‘ எனக் கூறி ‘படம் காட்டுகிறார்கள். தமிழ்த்தாய் வாழ்த்தினை தேர்வு செய்து தற்கான அரசாணை வெளியிட்டு, கவர்னர்-பிரதமர்-ஜனாதிபதி என வேற்றுமொழிக்காரர்களையும் தமிழுக்காக எழுந்து நிற்கச் செய்தவர் கலைஞர். அவருக்கு அந்தப் பாடலின் மதிப்பு தெரியாதா? முதுகுத்தண்டில் அறுவை சிகிச்சை நடந்ததால் எழுந்து நிற்க முடியாமல் சக்கர நாற்காலியில் அவர் உட்கார்ந்திருந்த முதுமை நிலையை சீரிளமைத் திறம் கொண்ட தமிழ்த்தாய் அறிவார். தமிழர்களும் அறிவார்கள்.

கலைஞருக்கு முதுகுத்தண்டில் அறுவை சிகிச்சை நடந்ததால் எழுந்திருக்க முடியவில்லை. விஜயேந்திரருக்கு முன்பக்கம் ஏதாவது அறுக்கப்பட்டு எழுந்திருக்க முடியாமல் ஆகிவிட்டதா?

தமிழையும் தமிழர்களையும் அவமதித்துவிட்டு, விழாவுக்கு வந்த ஆளுநரை அவமதித்து அரசியல் சட்டத்தையும் இழிவுபடுத்திய விஜயேந்திரர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். சங்கரராமன் கொலை வழக்குப் போல சங்கரமடம் தப்பித்துவிடாதபடி இம்முறை சட்டத்தின் கரங்கள் இறுக்கமாகச் செயல்படவேண்டும். மத்திய அரசிடம் மண்டியிட்டுக் கிடக்கும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான மாநில அரசுக்கு அந்தத் துணிச்சல் இருக்கும் என எதிர்பார்க்க முடியாது.

தமிழுணர்வாளர்கள்தான் சட்டரீதியான உறுதிமிக்க போராட்டத்தை வலுப்படுத்த வேண்டும். மாநில அரசின் காவல்துறை சங்கரமடத்துக்கு பாதுகாப்பு தருவதில் முனைப்பாக இருக்கிறது. தனி நபர்களைக் காக்கவேண்டிய பொறுப்பு காவல்துறைக்கு இருக்கிறது. அதே நேரத்தில், தமிழின் பெருமையைப் பாதுகாக்க வேண்டிய கடமை அதைவிட அதிகமாக அரசுக்கு இருக்கிறது.

சங்கரமடத்தின் வாசலில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்த ஜனவரி 25-ஆம் தேதியன்று விஜயேந்திரரும் அவரைச் சார்ந்தவர்களும் மடத்தை விட்டு வெளியே வரவில்லை. அந்த நாள்தான், இந்தி ஆதிக்கத்தை எதிர்த்து நின்று தாய்மொழி காக்க உயிர் ஈந்த மொழிப்போர் தியாகிகளின் வீரவணக்க நாள். தமிழ்த்தாயை அவமதித்தவர்கள் வெளியே வரமுடியாத நிலையில் இருந்ததே மொழிப்போரில் உயிர் ஈந்தவர்களின் தியாகம் வீண்போகவில்லை என்பதைக் காட்டியது.

சங்கர மடத்தின் கொட்டம் அடங்கும்வரை சட்டப்போராட்டமும் உணர்வுமிக்க எதிர்ப்புகளும் ஜனநாயக வழியில் தொடரட்டும்.

இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe