தேமதுரத் தமிழ் ஓசை உலக மெல்லாம் பரவும்வகை செய்தல் வேண்டும் என்பது மகாகவி பாரதியின் விருப்பம். ஆனால் நாமோ மீண்டும் மீண்டும் நம்மிடையே இந்தியைத் திணிக்கும் மத்திய அரசுடன் மல்லுக்கட்ட வேண்டிய நிலையில் தான் இருக்கி றோம். தமிழ் ஆட்சி மொழி சட்டம் இயற்றப்பட்டும் அது முழுமையாக நடைமுறைக்கு வரவில்லை.

இந்த நிலையில் 27-12-1956-ம் ஆண்டு தமிழ் ஆட்சிமொழிசட்டம் இயற்றப்பட்டது. அந்த நாளை நினைவு கூரும் வகையில் ஆண்டுதோறும் ஆட்சிமொழி சட்ட வார விழாவாகக் கொண்டாடப் படுதல் வேண்டும் என்று அரசால் ஆணையிடப் பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்கüலும் கொண்டாடப்பட்ட இந்த விழா செங்கல்பட்டு மாவட்டத்திலும் ஒரு வார காலத்திற்குக் கொண்டாடப்பட்டது.

ஒவ்வொரு நாளுக்கும் ஒரு நிகழ்வு என்ற அடிப்படையில் நடைபெற்ற இந்நிகழ்வில் முதல் 3 நாட்கள் அரசுப் பணியாளர்களுக்கு தமிழில் வரைவுகள், குறிப்புகள் எழுதுதல், ஆட்சி மொழி மின்காட்சியுரை பயிற்சி வகுப்பு, கணினித் தமிழ் விழிப்புணர்வு கருத்தரங்கம் மற்றும் தமிழில் ஒருங்குறி பயன்பாடு குறித்து பயிற்சி வகுப்பு நடத்தப்பெற்றது.

Advertisment

tt

4-ஆம் நாள் நிகழ்வாக கல்லூரி மாணவர்களுக்கு ஆட்சிமொழி பட்டிமன்றம் நடைபெற்றது. 5-ம் நாள் நிகழ்வாக ஆட்சி மொழித்திட்டவிளக்கக்கூட்டம் நடைபெற்றது.

ஆறாம் நாள் நிகழ்வாக வணிகர் சங்க நிர்வாகி களுடன் தமிழில் பெயர்ப்பலகை வைக்க வலியுறுத்தி கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.

நிறைவு நாள் நிகழ்வாக ஆட்சிமொழி விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது. முன்னதாக மாணவ- மாணவிகüன் கண்கவர் கலைநிகழ்ச்சிகளோடு தொடங்கப்பட்ட இந்தப் பேரணியை மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பேரணியில் தமிழ் அறிஞர்கள். தமிழ் அமைப்புகள், தமிழ் ஆர்வலர்கள், மற்றும் செங்கல்பட்டு, ராஜேஸ்வரி வேதாசலம் அரசு கலைக்கல்லூரி மற்றும் அரசு சட்ட கல்லூரியில் இருந்து 350-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.

செங்கல்பட்டு மாவட்டத் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் பாரதி உள்üட்ட பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.