திருவிழாப் பன்றி - உண்ணிகிருஷ்ணன் புதூர் தமிழில் : சுரா

/idhalgal/eniya-utayam/festival-pig-nikrishnan-budoor-tamil-sura

றுமை நிறைந்த சூழல்... மோசமான நிலைவந்தால், புலி புல்லையும் சாப்பிடும் என்ற சூழலில் அவர்கள் இருந்தார்கள்.

அன்றாட வாழ்க்கைக்கு வழியில்லை. வீட்டில் உணவு குறைவாகவே கிடைத்தது. திருவிழா காலம்வந்தது. கோவிலில் பத்து நாட்களுக்கு ஏதாவது வேலை கிடைக்கும். திருவிழா கொண்டாட்டங்களில் பொறுப்பேற்று செயல்படும் நபர்களுக்கு பத்து நாட்களிலும் சமையல் கூடத்திலிருந்து உணவு கிடைக்கும்.

காலையில் வயிறு நிறைய கொள்ளு அவியலும் கஞ்சியும்... கஞ்சியை தென்னை மடலில் ஊற்றித் தருவார்கள்.

திருவிழாவை முன்னிட்டு கஞ்சி கொடுப்பதற் காக ஒரு லட்சம் தென்னை மடல்களை வைத்தி ருப்பார்கள்.

மடல் நிறைய கஞ்சியும் தைக்கப்பட்ட இலை முழுவதும் கொள்ளு அவியலும்... இரண்டு மடல் கஞ்சியும் ஒரு பெரிய தைக்கப்பட்ட இலையில் கொள்ளு அவியலும் கிடைத்தால் வயிறு நிறைந்துவிடும். "அப்பாடா!' என்ற நிம்மதி உண்டாகும். வயிறு நிறைந்துவிட்டால், சாப்பிட்டு முடித்த களைப்பு உண்டாகும். களைப்பு தோன்றும்போது ஓய்வெடுக்க முடியாது.

வேலை செய்யவேண்டும். பகல்நேர தரிசனத் தின்போதும் உச்சிப் பொழுதில் வலம் வரும் போதும் இரவில் காட்சியளிக்கும் வேளையிலும் மணி கட்டப்பட்ட கொடியைப் பிடித்துக்கொண்டு முன்னால் நடக்கவேண்டும். அதுதான் எனக்குக் கிடைத்த வேலை. நான் அதை சந்தோஷத்துடன் ஏற்றுக்கொண்டேன்.

விளையாட்டுப் பிள்ளைகளான எங்களைத்தான் ஊர்வலத்திற்கு முன்னால் கொடியைப் பிடித்துக் கொண்டு போகச் செய்தார்கள். இரண்டு வரிசைகளில் எட்டெட்டு சிறுவர்கள்... மூத்தவர்களையும் எடுப்பார்கள்.

கடவுளின் அருள் என்றுதான் கூறவேண்டும். பதினாறாவது நபராக தேர்வு செய்யப்பட்டவன் நான். அதற்குக் காரணம் இருக்கிறது.

சூப்பிரெண்ட் அய்யாவிற்கு முன்னால் என்னைக் கொண்டுபோய் நிறுத்தியபோது, நான் அழுதேன். ஒரு உயர்ந்த பதவியிலிருந்த கோவில் நிர்வாக அதிகாரியின் மகன் நான். என் தந்தை பணியிலிருந்து பிரிந்து சென்றபிறகு, என் வீட்டிற்குள் வறுமை நுழைந்துவிட்டது. நான் அனைத்து விஷயங்களையும் மனம் திறந்து கூறினேன். "என் தாய்க்கு திருவிழா காலத்திலாவது உணவு கொடுக்கவேண்டும் என்பதற்காகத்தான் கொடியைப் பிடிக்க நின்றேன். வேறு வழியில்லாத நிலையில் இப்படியொரு மோசமான நிலை வந்துவிட்டது.

அய்யா... தயவுசெய்து என்னை எடுக்கணும்.''

இரக்க மனம்கொண்ட செம்பை வைத்தியநாதன் சூப்பிரெண்ட் என்னைத் தேர்ந்தெடுத்தது மட்டுமல்ல... "இந்த பையன் எனக்கு ரொம்பவும் வேண்டியவன். இவனுக்கும் இவனுடைய தாய்க்கும் கைமாறு செய்யணும்.இவனுடைய அப்பா ஓய்வுபெற்ற....'' சுவாமி முழுமை செய்யவில்லை.

பணியாளர்களுக்கு உத்தரவு பிறப்பித்தார். அதைக் கேட்ட ஆள் என் எண்ணை வாங்கிக்கொண்டு சென்றார்.

வாத்தியம் இசைப்பவர்களின் கூட்டத்தில் என்னை சூப்பிரெண்ட் சுவாமி இருக்கும்படி செய்தார். அது ஒரு உயர்வு என்றுதான் கூறவேண்டும். நான் எதிர்பார்த்திராத ஒன்று அது. அதன்காரணமாக சாயங்காலம் ஐந்தரை மணிக்கு இருக்கக்கூடிய விருந்தில் எனக்கு சாப்பிடும் இடத்தின் தெற்கு மூலையில் இலை கிடைத்தது. பல உணவு வகைகளைக் கொண்ட சாப்பாடாக இல்லையெனினும், அதன் ருசியை மரணம்வரை மறக்கமாட்டேன். பட்டினி கிடந்த ஒரு வயிற்றுக்குத்தான் அந்த ருசியைப்பற்றி தெரியும்.

வாத்தியங்கள் வாசிப்பவர்களுடன் சேர்ந்து அமர்ந்துக்கொண்டு உணவு சாப்பிடுவது...

உண்மையிலேயே கூறுவதாக இருந்தால்....

தரித்திரத்தில் சிக்கிக்கிடக்கும் சிறுவர்களின் கூட்டத்தில்தான் நான் இருந்திருக்கவேண்டும்.

அங்கு இலை கிடைப்பதற்குத்தான் எனக்கு வாய்ப்பும் தகுதியும் இருக்கின்றன. நான் என்றுமே அவர்களின் கூட்டத்தில்தான் இருந்தேன்.

வறுமையின் கொடும்பிடியில் கஷ்டப்பட்டு வாழ்ந்து கொண்டிருக்கும் பிரிவினர்... அவர்கள் என்னை சிறப்பிற்குரிய இடத்தில் அமரவைத்து சோறு தந்தது குறித்து எதிர்ப்பைக் காட்டுபவர்களாக இருந்தார்கள்.

அவர்களின் முக வெளிப்பாட்டின்மூலமும் உரையாடும் முறையிலிருந்தும் நடத்தையிலிருந்தும் என்னால் அதை வேகமாக புரிந்துகொள்ள முடிந்தது.எனினும், கொடியைப் பிடிக்க வேண்டிய நேரம் வரும்போதெல்லாம் நான் அவர்களின் கூட்டத்தில் போய் நின்றேன். அவர்கள் என்னவெல்லாம் எதிர்த்துப் பேசினாலும், நான் அதற்கு பதில் தருவதில்லை.

வேதனையைத் தரும் ஒரு வகையான அமைதியுடன் இருந்தேன். கூறத் தெரியாமலில்லை. பேசினால், பிரச்சினை அதிகரிக்கும். அதன்காரணமாக அடங்கி ஒதுங்கி இருந்தேன். அதுதான் அங்கு நல்லது. எங்களுக்கு கூறிக்கொள்ளும் அளவிற்கு கூலி எதுவுமில்லை.

இரண்டு வேளைகளுக்கு சாப்பாடு கிடைக்கும். திருவிழா முடிந்து செல்லும்போது, சூப்பிரெண்ட் சுவாமி சந்தோஷப்பட்டு காபி குடிப்பதற்காக ஏதாவது காசு தருவார். கொடி பிடிப்பதற்காக ஒரு சிறுவனுக்குத் த

இரண்டு வேளைகளுக்கு சாப்பாடு கிடைக்கும். திருவிழா முடிந்து செல்லும்போது, சூப்பிரெண்ட் சுவாமி சந்தோஷப்பட்டு காபி குடிப்பதற்காக ஏதாவது காசு தருவார். கொடி பிடிப்பதற்காக ஒரு சிறுவனுக்குத் தரப்படும் கூலி இரண்டணா. பத்து நாட்களுக்கு இருபது அணாக்கள். ஒன்றே கால் ரூபாய். இந்த ஒரு தட்சணையைவிட எவ்வளவோ மடங்கு பெரியது எது தெரியுமா?... உணவு. அந்த உணவு எனக்கு மட்டுமல்ல. என் தாய்க்கும்கூட அதிலிருந்து ஒரு பங்கு கிடைக்கும். அதைவிட பெரிய ஒரு சந்தோஷம் வேறு என்ன இருக்கிறது?

தந்தை ஊரில் இருந்திருந்தால், உண்மையாகவே தகவலை அறிய நேர்ந்திருந்தால், பின்பாகத்தில் கரிந்த கொள்ளியால் அடித்திருப்பார்.

"தரித்திரம் இருந்தால்.. நல்ல நேரம் பார்த்து தூக்குல தொங்கிச் சாகலாமே? எது எப்படி இருந்தாலும், மரியாதையை விற்று சாப்பிடக்கூடாது.'' அந்த சூடான வார்த்தைகள் நினைவில் வராமல் இல்லை. ஆனால், பசியும் தாகமும் அதைவிட பல மடங்கு பெரியன. அதன்காரணமாக... "அப்பா, நிலைமை மோசமானபோது, இந்தத் தொழிலுக்குப் போயிட்டேன்.'' கூறி சமாதானப்படுத்திக் கொள்ளலாம் என நினைத்தேன்.

அம்மா அறிந்துகொள்வாளோ என்பதுதான் மிகவும் கவலைக்குரிய விஷயமாக இருந்தது.

அம்மாவிடம் கூறக்கூடாது. ஒருநாள் அம்மா வுக்குத் தெரியாமல் இருக்காது. அதுவரை மூடிவைக்க வேண்டியதுதான்.

திருவிழா அல்ல... அதைவிட பெரிய மகா உற்சவம் வெளியே நடந்து கொண்டிருந்தாலும், வீட்டில் அடங்கி ஒதுங்கி அமர்ந்து புத்தகத்தை வாசித்துக் கொண்டிருக்கவேண்டும். தேர்வு வரப்போகிறது.

பெரிய தேர்வு... கும்ப மாத காலம்...

வெளியே பெரிய கோவிலில் கும்ப மகா உற்சவம் நடந்துகொண்டிருக்கிறது.தேர்வு, வறுமை, கஷ்டங்கள், தந்தை காணாமல் போனது, மறைந்து ஓடிய காலம்.... என்ன வந்தாலும் சரி... இந்த வருடம் திருவிழா முழுவதையும் அனுபவிப்பேன்.

தேர்வில் தோற்றாலும், கவலையில்லை.

தேர்வில் வெற்றிபெற்றுப் பெற்று பல படிகளைக் கடந்தவர்கள், இப்போது தோற்றுத்தோற்று பின்னோக்கிச் செல்லும் காட்சியைத்தான் பார்த்துக்கொண்டிருக்கிறோமே! அதனால்தானே என்னைப்போன்ற ஒருவனுக்கு இப்படிப்பட்ட நிலை வந்திருக்கிறது! ஆறுதல் படுத்திக்கொள்ள முயற்சித்தேன்.

பத்து நாட்கள் நடைபெறும் திருவிழா.... யானை ஓட்டத்துடன் ஆரம்பிக்கும் கொடியேற்றம்...

பொன் ஆசனத்தின்மீது பல வண்ணங்களிலுள்ள கருடனின் வடிவத்திலிருக்கும் பகவான்... மேற்கு திசை கடலை நோக்கி புத்துணர்ச்சி பெறுவதற்காக பொன் நிறக்கொடி, ஆகாயத்தில் பறந்துகொண்டிருக்கும் தெய்வீகக் காட்சி...பள்ளி வேட்டை, ஆறாட்டு, பூதபலி, பிரம்ம வழிபாடு...

எப்படிப்பட்ட மகா அற்புதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன! நான் இதுவரை கூண்டுக்குள் அடைக்கப்பட்ட கிளியாக இருந்தேன். அப்பா என்னை எங்குமே போக அனுமதிக்காமல் கூண்டிற்குள் அடைத்து அடக்கமாக இருக்கும்வண்ணம் வளர்த்தார்.

இப்போது அப்பா ஊரில் இல்லாத நிலையில் எனக்கு சுதந்திரம் இருக்கிறது.

யாருக்கும் பயப்பட வேண்டாம். வீட்டிற்குள் ளிருந்து எப்போது வேண்டுமானாலும், வெளியே செல்லலாம்.

மொத்தத்தில் இருப்பது ஒரு தாய் மட்டுமே...

அம்மாவைப் பொறுத்தவரை...

அப்பா எதுவுமே கூறாமல் போனதால் ஏற்பட்ட கவலை காரணமாக எதையோ இழந்ததைப்போல உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இருக்கிறாள்.

எப்போதும் நிற்காத கண்ணீர்... கவலை காரணமாக கன்ன எலும்புகள் ஒட்டிப் போய் எலும்புக் கூட்டைப்போல இருக்கும் ஒரு உருவம்... பார்த்தால்...யாருக்குமே கவலை உண்டாகும். அந்த அளவிற்கு பரிதாபத்திற்குரிய தோற்றம்...

எந்தவொன்றின்மீதும் ஆசையோ ஈடுபாடோ இல்லாத ஒரு நிலை..எவ்வளவு நாட்கள் வேண்டுமானாலும், பட்டினி கிடப்பதற்கு தயாராக இருப்பவள். தினமும் ஒவ்வொரு வகையான விரதம். பெரும்பாலும் இரவு வேளையில் பட்டினிதான்.

நெஞ்சை எரிக்கும் காரியங்கள் நடைபெற்றுக் கொண்டிருப்பதற்கு மத்தியில் புண்ணில் நெருப்புக் கொள்ளியைக்கொண்டு குத்துவதைப்போன்ற அந்த செய்தியைக் கேட்கிறேன். என் தந்தை காசியில் கிடந்து சித்தியடைந்து விட்டார் என்பதே அது. யாரோ ஒரு அயோக்கியன் காசிக்குப் போய் வந்து விட்டு, கூறிய அந்த பொய்தான் அம்மாவைப் படுக்க வைத்துவிட்டது. இனி வேறு வழியில்லை. தாயும் இறந்தது மாதிரிதான். தாய் இறந்தாலும், இந்த உலகத்தில் வாழவேண்டிய சூழல் மனிதனுக்கு வந்து சேருமல்லவா? பிறகு எதற்கு கவலைப்பட வேண்டும்? துக்கத்தில் மூழ்க வேண்டும்? என்னை நானே ஆறுதல் படுத்திக்கொள்ள முயற்சித்துக்கொண்டிருந்தேன்.

வீடு நெருப்பு பிடித்து எரியும்போது வாழையை வெட்டி ரசிக்கும் யாரோ ஒருவன் பரப்பிவிட்ட செய்தி அது. என் தந்தை இறக்கவில்லை.

திரும்பி வருவார். "அம்மா... அழாம இருங்க.'' நான் தேற்றிப் பார்த்தேன்.காசியில் கிடந்துதான் அப்பாவிற்கு மரணமெனில், அது அப்படித்தான் நடக்கும். இல்லை... வீட்டில் கிடந்துதான் காரியம் நடக்குமெனில், அது அப்படியேதான் நடக்கும். சில நேரங்களில் கிணற்றில் என்று வரலாம். குளத்தில் என்று வரலாம்.

"அனைத்துமே விதிப்படி நடக்கின்றன... அம்மா... விதி!'' என் ஆறுதல் வார்த்தைகளைக் கேட்கும்போது, அம்மா கண்களை அகலத் திறந்து வைத்தவாறு என்னையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள்.

ss2

அந்த பார்வையைப் பார்க்கும்போது, நான் வார்த்தைகளை அடக்கிக்கொண்டு பேசாமல் இருப்பேன்.

திருவிழா காலத்தில் அம்மா பட்டினி கிடக்கவே கூடாது என்ற ஒரே எண்ணத்தை மனதில் வைத்துக் கொண்டுதான் நான் திருவிழா வாத்தியக் குழுவிலேயே சேர்ந்தேன்.

இல்லாவிட்டால்... எந்தக் காலத்திலும் இப்படிப் பட்ட ஒரு வேலையில் சேரவே முடியாது. கோவிலில் திருவிழா நடைபெறும் இடத்தின் முன்பகுதியில்... முன்வரிசையில்... கொடி பிடித்தவாறு நின்றுகொண்டிருக்கும் சிறுவர்களின்மீதும் முதிர்ந்தவர்களின்மீதும் பொதுவாகவே ஒரு கேலியான சிந்தனை உண்டு.யாசித்துத் திரியும் சிறுவர்களுக்கான கொடிபிடிக்கும் செயல்! செடியையும் சாமரத்தையும் பிடிப்பவர்களுக்கு இதைவிட மதிப்பு இருந்தது. தினமும் சம்பளம் நான்கு அணாக்கள்.

அவர்களும் ஒரு வகையான யாசகர்கள்தான். எனினும், கொடி பிடிப்பவர்களைவிட மரியாதை இருந்தது.

எனினும், என்னைப் பொறுத்தவரையில் சிறப்புத் தன்மை கொண்ட கவனிப்பு கிடைத்திருக்கிறது. காசிக்குச் சென்று தற்கொலை செய்துகொண்ட ஒரு ரிட்டயர்ட் அலுவலரின் மகன் என்ற உபசரிப்பு...

அந்த அளவிற்கு அளவற்ற இரக்கம்... இது மற்றவர்களின் பார்வையில் என்னைச் சிறுமையாக காண்பதற்கு உதவுகிறதோ?

காலையில் உற்சவ ஊர்வலம் ஆரம்பித்து மூன்று முறை சுற்றி வருவதுவரை மேளக்காரர்களின் தாளத்திற் கேற்ப அடி பிசகாமல் பிரதட்சிண பாதை வழியாக வரிசை வரிசையாக செல்லவேண்டும்.

அதுதான் அங்கு இருக்கக்கூடிய நியதி. அது இரண்டு... இரண்டரைமணி நேரங்கள் நீண்டு நிற்கும். அது முடிந்த பிறகுதான் கஞ்சி பகிர்தல்...

கோவிலைப் பெருக்கி சுத்தம் செய்பவர்களில் தொடங்கி அதிகாரம் படைத்த சாமூதிரிப்பாடு தம்புரான் முதற்கொண்டு இருப்பவர்களுக்கு பகவானின் திருவிழா காலத்தில் தென்னை மடலில் தான் கஞ்சி... இந்த கஞ்சிக்காகத்தான் இப்போதும் வருடாவருடம் இங்கு தள்ளும்முள்ளும் நடந்து கொண்டிருக்கின்றன.

வாத்தியம் வாசிப்பவர்களுக்கு சாப்பிடும் இடத்திலும், கொடி பிடிப்பவர்களுக்கு சாப்பிடும் இடத்தின் வாசலிலும், பிராமணர்களுக்கு அந்தணர் களுக்கென ஒதுக்கப்பட்டிருந்த கட்டடத்திலும், கோவிலில் பணியாற்றும் நபர்களுக்கு மேற்கு திசையிலிருக்கும் சாப்பிடும் இடத்திலும், கீழ்சாந்திக்கு மாளிகையிலும் என்பது நியமம்.

அலுவலர்களுக்கு பிரம்மஸ்யம் மடத்தில்... இதுதான் எப்போதும் பின்பற்றப்பட்டு வரும் நடைமுறை. ஆனால், கொடி பிடிப்பவர்களில் ஒருவன் சாப்பிடும் கட்டடத்தில்...

சமையல் செய்யும் அந்தணரிலிருந்து அனைவரும் எதிர்ப்பை வெளிப்படுத்த, பரிமாறுதல், பிரதட்சிண வரிசைக்கு மாற்றப்பட்டது.

முதல்நாளின் விருந்தும் மறுநாளின் கொள்ளு அவியலும் கஞ்சியும் விரும்பியதைப்போலவே கிடைத்தன. மூன்றாம் நாளிலிருந்து விஷயம் மொத்தத்தில் பிரச்சினைக்குரிய ஒன்றாக ஆகிவிட்டது. எனினும், தாக்குப்பிடித்து நின்றேன். கோவிலில் பணியாற்றுபவர்கள் இருந்த கூட்டத்திற்குள் வலிய நுழைந்து செல்லவில்லை.

பிச்சைக்காரர்கள் கூட்டத்துடன்தான் இறுதியில் போய்ச் சேர்ந்தேன்.

சூப்பிரெண்ட் சுவாமி அங்கு கையற்ற நிலையில் இருந்தார். ஜாதியும், மதமும் அந்த அளவிற்கு ஆட்சி செய்துகொண்டிருந்த காலம்... கஞ்சி குடித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் மனதை ஆக்கிரமிக்கும் பல்வேறு சிந்தனைகள்...

அப்போது என்ன சாப்பிடுகிறோம் என்ற விஷயத்தைக்கூட மறந்து விடுவேன். ஏதோவொன்றை அள்ளிக் குடிக்கிறேன்.

இல்லாவிட்டால்... பலா இலையை வைத்துக் கொண்டு வெறுமனே இருக்கிறேனா?

"சீக்கிரமா சாப்பிட்டுவிட்டு போடா... எவ்வளவு நேரமாக பலா இலையைக் கையில வச்சிக்கிட்டு இருப்பே? கஞ்சி வேண்டாமென்றால், எழுந்து போடா... உட்கார்ந்து உறங்கிக்கிட்டு இருக்கியா?'' சமையல்காரர் வெங்கிச்ச பட்டரின் அதிகாரக் குரல்...

"நான் என் அம்மாவைப் பற்றிய நினைவில் மூழ்கிட்டேன்... சுவாமி என் தொண்டைக் குழியில் கஞ்சி இறங்க மறுக்குது'' பதைபதைப்புடன் நான் கூறியதைக் கேட்டவுடன், அந்த சமையல்காரரின் உள்ளமும் சற்று கனிந்தது.

அம்மாவுக்கு கஞ்சி கொண்டுசெல்வதற்காக தென்னை மடலில் ஊற்றித் தருவதற்கு வெங்கிச்ச பட்டர் சம்மதித்தார். பத்து நாட்கள் முடியும் வரைக்கும்...

பத்து நாட்களும் திருவிழா கோலாகலமாக இருந்தது. எட்டாம் விளக்கின் நாளன்று இருக்கக் கூடிய அருமையான விருந்திலிருந்து ஒரு பகுதி தென்னை மடலில் வீட்டிற்குக் கிடைத்தது. பாயசம் வைப்பது அன்று மட்டும்தான்.

அனைத்து மனிதர்களுக்கும்... வயது வேறுபாடு பார்க்காமல் இரண்டு கைகளிலும் பாயசம் வெறுமனே கிடைக்கக்கூடிய நாள்...

கோவிலி-ருந்து தரப்படும் அந்த பாயசத்தை தையல்போட்ட இலையில் வாங்கிச் சாப்பிடவேண்டும். எனக்கு கொண்டுபோவதற்காக தந்தார்கள்.இரண்டு கைகளிலும் பாயசம்... அதை நான் அம்மாவிற்குக் கொண்டுபோய் கொடுத்தபோதும், அம்மா அழுதுகொண்டிருந்தாள்.

எட்டாம் விளக்கிற்கு மறுநாள்தான் பள்ளி வேட்டை. பள்ளி வேட்டை நாளன்றுதான் பன்றி வேடம் கட்டி வழிபாடு நடத்துவது வழக்கம். உற்சவ காலத்தில் பெரிய ஒரு சிறப்பு நிகழ்வு இது. நாட்டிலுள்ள... ஊரிலுள்ள பெரும்பாலான வறுமையின் பிடியில் சிக்கிக் கிடக்கும் குடும்பத்தைச் சேர்ந்த மக்கள் திருவிழா காலத்தில் தரித்திரம் நீங்குவதற்காக பன்றி வேடம் கட்டி வழிபாடு நடத்துவார்கள்.

நானும் நேர்ந்திருந்தேன். முள்ளம்பன்றியாக வேடம் கட்டி ஆடுவதாக நேர்ந்திருந்தேன்.

நோயிலிருந்து விடுபடுவதற்கும், சரீரத்திற்கு உண்டாகக்கூடிய துன்பங்களிலிருந்து குணமாவதற்கும் திருவிழாப் பன்றி வேடம் கட்டி பள்ளி வேட்டைக்கு ஓடுவதுண்டு. ஏழு முறை சுற்றிச் சுற்றி ஓடி முடித்தால், தரித்திர நிலைக்கு முற்றுப்புள்ளி விழும் என்று கூறி கேள்விப்பட்டதுண்டு- பதினெட்டு வருடங்கள் தொடர்ச்சியாக பன்றி வேடம் கட்டி ஓட வேண்டுமென அம்மா கூறியிருக்கிறாள்.

மரணத்திலிருந்து மகனைக் காப்பாற்றிய நாளன்று வேண்டியிருக்கிறாள். ஆனால், என்னுடைய விருப்பம் சாதாரணமாக பன்றி வேடம் கட்டி ஆடுவது என்பது அல்ல. வாய்ப்பு கிடைப்பதாக இருந்தால், அது முள்ளம்பன்றியாக இருக்கவேண்டும்.

முள்ளம்பன்றியாக வேடம் கட்டி ஒரே நேரத்தில் ஒன்பது முறை சுற்றிச் சுற்றிவந்து முடிக்கவேண்டும்.

அதுதான் என்னுடைய விருப்பமாக இருந்தது. ஆனால், முள்ளம்பன்றி வேடம் கட்டுவது என்ற பதவி சிறப்புத் தகுதிகொண்ட நபர்களுக்கும், ஊரிலுள்ள பெரிய மனிதர்களுக்கும் மட்டுமே என்றிருந்தது. எனக்கு இந்த இரண்டு தகுதிகளுமே இல்லை.

மீண்டும் நான் சிறிய செம்பை வைத்தியநாதன் சூப்பிரெண்ட் அவர்களைப் போய்ப் பார்த்தேன். என் மனப்பூர்வமான வேண்டுகோளை நேரடியாக சமர்ப்பித்தேன்.

‌‌"பிரச்சினையை உண்டாக்காதே. முள்ளம்பன்றி என்பது உயர்ந்த ஜாதிக்காரர்களுக்கு உரியது. வேண்டுமானால்... சாதாரண பன்றி வேடம் கட்டுவதற்கு அனுமதி தரலாம். தேவைப்பட்டால்... முள்ளம்பன்றிக்குப் பின்னால் நடக்கும் சாதாரண பன்றியாகவும் இருக்கலாம். அவனையும் ஆட்கள் கவனிப்பார்கள்.'' சுவாமி எனக்கு ஒரு வழியைக் கூறினார்.

"பின்னால் நடக்கும்படி சொல்லாதீங்க. முள்ளம்பன்றியின் இடத்தைத்தான் தரணும். இந்த கோவிலில் நீங்கள் நினைத்தால், நடக்காத ஏதாவது காரியமும் உண்டோ?'' மனமில்லா மனதுடன் அந்த வருடத்தின் பிரதான முள்ளம்பன்றியின் வேடத்தைக் கட்டுவதற்கான அனுமதியை எனக்கு அவர் அளித்தார்.

"பிரச்சினையை உண்டாக்கக் கூடாது'' என்ற முன்னறிவிப்பையும் வெளியிட்டார்.

===

மிகவும் முக்கியமான திருவிழா பன்றி வேடத்தைக்கட்ட வேண்டிய நாள்! அதுவும்... பிரதான முள்ளம்பன்றி. என் இரு பக்கங்களிலும் தாங்கிப் பிடித்தவாறு என்னை முன்னோக்கி நடத்திக்கொண்டு வருவது- ஊரிலிருக்கும் ஏதாவது இரண்டு பெரிய மனிதர்கள் ஒன்றாகச் சேர்ந்து என்று இருக்கலாம்.

நல்ல உடல்பலமும் தடிமனும் முரட்டுத்தனமும் உள்ளவர்கள்.முள்ளம்பன்றிக்குச் சுற்றிலும் காவல் போடப்பட்டிருக்கும்.

மற்ற காட்டு மிருகங்களிடமிருந்து தாக்குதல் உண்டாகக்கூடாது என்ற முன்னெச்சரிக்கை உணர்வுடன் செய்யப்பட்டிருப்பது அது. நான்தான் பகவானின் அம்பை ஏற்றுத்துடிக்கும் அந்த வருடத்தின் முள்ளம்பன்றி.

என்னைத்தான் பகவான் வேட்டையாடப்படும் உயிராகத் தேர்வு செய்திருக்கிறார்.

"தங்க பகவானே.... தினந்தோறும் வறுமையை அனுபவித்துக்கொண்டிருக்கும் என்னையும் என் தாயையும் பட்டினியிலிருந்து நிரந்தரமாக விடுதலை செய்யவேண்டும்! பட்டினி கிடந்து மரணமடைய விதிக்கப்படுவதைவிட நல்லது, உங்களின் அம்பை ஏற்று நிம்மதியான மரணத்தை அடைவது.நான் அதற்காகத்தான் இங்குவந்து நிற்கிறேன்.'' என் உடல் முழுவதிலும் ஒரு நடுக்கம் உண்டானது. தாங்கமுடியாத அளவிற்கு ஒரு உணர்ச்சிவசப்படல் எனக்கு உண்டானது. நான் அழுதுவிட்டேன். என்னை முள்ளம்பன்றியாக அந்த நேரத்தில் அதற்கென உள்ளவர்கள் ஆக்கி விட்டிருந்தார்கள்.

கழுத்திலிருந்து பாதம்வரை நீண்டு கிடக்கும் அடர்த்தியான கருப்பு நிறத்திலிருந்த ஒரு துணியைக்கொண்டு அவர்கள் என்னை மூடிக் கட்டி னார்கள். வாலும் தலையும் வைக்கப்பட்டுவிட்டால், நான் பகவானால் வதம் செய்யப்படும் பலி மிருகமாக ஆகிவிடுவேன். என் கால்கள் கிடுகிடுவென நடுங்க ஆரம்பித்தன. யாரோ பின்னாலிருந்து தயார் செய்யப் பட்டு நிறுத்தப்பட்டிருந்த என் கழுத்தில், திடீரென ஒரு சுருக்கைப்போட்டு இழுப்பதைப்போல உணர, மரத்தால் செய்யப்பட்ட முள்ளம்பன்றியின் தலையை வைத்து அழுத்தி இறக்கினார்கள்.

அத்துடன் பேசுவதற்கான ஆற்றல் எனக்கு இல்லாமல் போனது.

நூற்றுக்கணக்கான பச்சை வாழை இலைகளைக் கொண்டும் காய்ந்த சருகுகளைக்கொண்டும் கட்டப்பட்டு வந்திருக்கும் பலவிதமான பன்றிகள், பலி மிருகங்கள் என்னை இலக்காக வைத்து பல்லாயிரம் பேர்களின் ஆரவாரத்துடன் ஓடி வந்து கொண்டிருந்தன.

என்னை திடீரென ஒரு கம்பை பயன்படுத்தி தூக்கியதைப்போல உணர்ந்தேன்.

யானையின்மீது அமர்ந்திருக்கும் பகவானின் பஞ்சலோக சிலையைப் பார்த்து வணங்குவதற்கு என்னால் முடியவில்லை.

கம்பின்மேலேயும் கம்பிலிருந்து இறக்கியும் என்னை இயக்கிக் கொண்டிருந்தார்கள்.

இந்த உலகம் எனும் இருள் நிறைந்த உருண்டைக் குள் கிடந்து நான் அபயம் தேடி ஓடிக்கொண்டே இருக்கிறேன். நான் இப்போது ஓடுவது சன்னிதானத் தின் பிரதட்சிண பாதையின் வழியாக அல்ல. ஏதோவொரு பயங்கரமான வனத்திற்குள் நடைபெறும் பயணம்... ஏராளமான காட்டு விலங்குகள் இரு கால்களில் ஒன்றே ஒன்றை மட்டும் இலக்காக வைத்து ஆரவாரம் எழுப்பியவாறு பின்னால் பாய்ந்து வந்துகொண்டிருக்கின்றன.

சில நிமிடங்களில் பகவானின் கூர்மையான அம்பு என் தலையில் பாய்ந்து விழும். ரத்த வெள்ளத்துடன் உள்ள மரண பாய்ச்சல்... பிறகு அங்கு என்ன நடந்தது என்பதை விளக்கிக்கூறுவதற்கு எனக்கு வார்த்தைகள் கிடைக்கவில்லை.

நான் முற்றிலும் செயலற்ற நிலையில் இருக்கிறேன். சுய உணர்வற்ற என்னை கம்பில் ஏற்றி பகவதி இருக்குமிடத்தில் கொண்டுபோய் படுக்கச்செய்தது மட்டும் ஞாபகத்தில் இருக்கிறது.

என்னைச்சுற்றி பக்த ஜனங்கள் அன்புடன் வந்து நின்று தென்னை ஓலையால் உண்டாக்கப்பட்ட விசிறியால் வீசிக்கொண்டிருந் தார்கள்.நூற்றுக்கணக்கான பெண்களும், ஆண்களும் மூச்சை இழுத்தவாறு... வாயின் வழியாக எச்சிலையும் நுரையையும் வழிய விட்டுக்கொண்டு... அரை உணர்வுடன் கண்களை வெளியே துருத்திக்கொண்டு... விழித்தவாறு படுத்துக்கொண்டிருக்கும் என்னைப் பார்த்துத் தேம்பினார்கள்.

காரணம்...

பகவானின் பிரதான முள்ளம் பன்றியின் வேடத்தை அணிந்த ஆளின் நிலை மிகவும் பதைபதைக் கக்கூடிய வகையில் இருந்தது தான்.

===

நான் பிழைத்துக்கொண்டேன். அந்த வருடம் அப்பாவும் அம்மாவும் மீண்டும் சந்தித்தார்கள். ஊரை விட்டுச் சென்ற அப்பா திரும்பிவந்தார். சற்று பொருளாதாரரீதியான பத்திரத்தன்மையுடன் திரும்பி வந்திருந்தார்.

இரண்டு ஏக்கர் விவசாயம் செய்துகொண்டிருந்த நிலத்தை அம்மாவின் பெயருக்கு அப்பா சொந்தமாக பத்திரம் எழுதி வாங்கினார்.

பகவானின் கூர்மையான அம்பு பாய்ந்து சுய உணர்வை இழந்து தளர்ந்து விழுந்த திருவிழாப் பன்றிக்கு முதலில் அளித்த ஆழமான ஆறுதல்... "வயிறு நிறைய சாப்பிட்டு, செத்துப்போ...'' என்று அவர் முதல் முறையாக ஆசீர்வதித்த வருடம்... இப்போதும் கோவிலில் திருவிழாப் பன்றியின் வேடத்தைக் கட்டியவாறு ஆட்கள் முன்னால் வந்து நின்றால், நான் தொட்டு வணங்குவேன்.

வறுமை என்னை ஒரு மகா பக்தனாக மாற்றியது.

===

_____________

மொழிபெயர்ப்பாளரின் உரை

வணக்கம்.

அனைவருக்கும் ஆனந்தம் நிறைந்த ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்!

இந்த மாத "இனிய உதய'த்திற்காக மூன்று சிறுகதைகளை நான் மொழி பெயர்த்திருக்கிறேன்.

"திருவிழாப் பன்றி' சிறுகதையை எழுதியவர்... கேரள சாகித்ய அகாடெமி விருதுபெற்றவரும், பிரபல நட்சத்திர மலையாள எழுத்தாளருமான உண்ணிகிருஷ்ணன் புதூர்.

புதுமையான கதைக் கரு... இதுவரை நாம் சந்தித்திராத கதாபாத்திரம்...

ஆன்மிக பின்னணி... இந்த கதை எழுதப்பட்ட காலத்தில் கேரள மண்ணில் நிலவிய வறுமைச் சூழல்... இந்த கதை மிகச்சிறந்த கதையாக இருப்பதற்கு இவை அனைத்துமே காரணங்கள்.

கதையை ஆரம்பத்திலிருந்து இறுதிவரை எந்த அளவுக்கு இயல்புத் தன்மையுடனும் உயிரோட்டத்துடனும் உண்ணிகிருஷ்ணன் புதூர் எழுதியிருக்கிறார் என்பதை நினைக்கும்போது, நமக்கு அவரின்மீது அளவற்ற மதிப்பும் மரியாதையும் உண்டாகின்றன.

"கனஷ்யாம்' கதையை எழுதியவர்... மலையாள பெண் எழுத்தாளர்களின் திலகமும், தேசிய சாகித்ய அகாடெமி விருதுபெற்றவருமான மாதவிக்குட்டி.

கிருஷ்ண பக்தையின் ஆழமான மனவோட்டம்...

ஒரு சிறிய கதையில் எவ்வளவு பெரிய உண்மையை மாதவிக்குட்டியால் வெளிப்படுத்த முடிகிறது! வியக்கிறேன்.

"ஆபத்தான வாயு' கதையை எழுதியவர்... உலக புகழ்பெற்ற எழுத்தாளரான லியோ டால்ஸ்டாய்.

அறிவியல் பின்னணியில் எழுதப்பட்ட கதை. இப்படிக்கூட கதைகளை எழுதலாம் என்பதை உலகிற்கு இதன்மூலம் கூறுகிறார் டால்ஸ்டாய் என்று நான் நினைக்கிறேன்.

இந்த மூன்று சிறுகதைகளும் உங்களுக்கு மாறுபட்ட இலக்கிய அனுபவங்களைத் தருமென்ற திடமான நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

"இனிய உதயம்'மூலம் நான் மொழிப் பெயர்க்கும் அருமையான இலக்கிய படைப்புகளை வாசிக்கும் உயர்ந்த உள்ளங்களுக்கு என் இதயத்தின் அடித்தளத்திலிருந்து நன்றி.

அன்புடன்,

சுரா

s

uday010124
இதையும் படியுங்கள்
Subscribe