பெண்ணுரிமைப் போராட்டங்கள் -திருவாரூர் இரெ. சண்முக வடிவேல்

/idhalgal/eniya-utayam/feminist-struggles

பெண்ணடிமை தீருமட்டும் பேசுந் திருநாட்டின் மண்ணடிமை தீர்ந்துவரல் முயற்கொம்பே என்றார் பாவேந்தர் பாரதிதாசன்.

இந்த நாட்டுப் பெண்கள் எவ்வாறு இருந்தார்கள்? மானுடப் பிறவியென மாதரை எண்ணாமல், வீட்டுக்கு வாங்கிவந்த ஆடாக மாடாக எண்ணி, பாடாய்ப் படுத்திவைத்தார்கள்.

கல்வி கற்க அனுமதிக்கவில்லை. தெருவில் காலில் செருப்புப் போட்டுக்கொண்டு நடக்க விடவில்லை.

அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு ஆகிய நாற்குணங்களே நல்ல பெண்ணுக்கு அடையாளம் என்றார்கள். மடம் என்று சொல்லி எதுவும் தெரியாமல்- தெரிந்துகொள்ள முயலாமல்- வாழ்பவளே நல்ல மங்கை என்று வெட்கமில்லாமல் கூறிவைத்தார்கள்.

எதைக் கண்டாலும்

அஞ்சுவது பெண்ணுக்கு

அழகு என்றனர். மாமனார்,

மாமியார், கணவன், கொழுந்தன்

என எல்லாரிடமும்

அஞ்சி ஒடுங்கி இருக்கப் பணித்தார்கள்.

ஐம்பது ஆண்டுகளின் முன்னர் கூட்டுக் குடும்பத் தில் புதிதாகத் திருமணமாகி வரும் இளம்பெண்ணை மாட்டுப்பெண் என்று மாடு என்றால் செல்வம் என்பதால், திருமகளாக வந்திருக்கிறாள் என்றார் களா? மாடுபோல் அடிமை யாய் உழைக்கவந்த பெண் என்றார்களா? புரியவில்லை.

கூட்டுக்குடும்பத்தில் எல்லோரும் ஓர் இளம்பெண்ணை அதிகாரம் காட்டி, அதட்டி, உருட்டி, மிரட்டியதால் அவள் பயந்துபோய் மனநோயாளியாக மாறிவிடுவாள். அவளுக்குப் பேய்பிடித்தது என்றும் பிசாசு பிடித்தது என்றும் சொல்லி, உள்ளூர்ப் பூசாரியைவிட்டு, வேப்பிலை அடிக்கவைத்து, விபூதியால் அடித்து சாட்டையால் அடித்துக் கொடுமைப்படுத்தினார்கள்.

யாராவது எண்ணிப் பார்த்தோமா, அது ஏன் பிசாசும் பேயும் பெண்ணை மட்டும் பிடிக்கிறது? ஆண்களிடம் ஏன் அது வரவில்லை? திருமணமாகி வந்தவுடன் அவள் ஏன் அவ்வாறு ஆனாள்? ஆராய்ந்து பார்த்திருந்தால், பூசாரி வைத்தியமா செய்திருப்போம்? மனநல மருத்துவரிடம் காட்டிக் கலந்தாய்வு செய்து, காரணம் அறிந்து நலம்பெறச் செய்திருக்க மாட்டோமா? அதுசரி, இன்று ஏன் பெண்களுக்குப் பிசாசு பிடிக்கவில்லை? பிசாசுகள் வெளிநாடு சென்றுவிட்டனவா? பேய்கள் பேய் பிடித்து ஓடி விட்டனவா? இல்லை. பெண்களின் நிலையில் மாற்றம் நிகழ்ந்திருக்கிறது.

திருமணம் நடந்தவுடன் தனிக் குடித்தனம்போகிறார்கள். உறவினர்களின் அதிகார அதட்டல் மிரட்டல்கள் இல்லை! பெண்களிடம் விழிப்புணர்வு உண்டாகி யுள்ளது. கல்வி கற்றுத் தெளிவு பெற்றுள்ளார்கள். எனவே அந்த "ஹிஸ்டிரியா' என்ற நிலை இல்லை. கணவனும் மனைவியுமாக ஒய்யார நடை நடந்து செல்வது கண்ணுக்குக் குளிர்ச்சியாக மனத்துக்கு இதமாக இருக்கிறது.

பெண்கள் இந்த நிலையை எவ்வாறு அடைந்தார்கள்?

மந்திரத்தால் விழுந்த மாங்காயா இந்தப் பெண்ணுரிமை? இல்லை, மானம் இழந்து, உயிரைத் துச்சமாக எண்ணிப் பலரும் பட்ட பாட்டின் விளைவே இன்றைய இந்தப் பெண்ணுரிமை.

w

இராஜாராம் மோகன்ராய்

"சமாச்சார் சந்திரிகா' என்ற வங்காள இதழில் பாபாணி சரண் பந்தோபாத்யாயா என்ற இந்துமத வெறியன் எழுதியதைப் பார்த்தால் ராஜாராம் மோகன்ராய் இந்துமத ஆணிவேரை எவ்வாறு ஆட்டி அசைத்திருக்கிறார் என்பது புரியும், அவன் எழுது கிறான்.

""இப்படிப்பட்ட ஒருவரை விட்டுவைப்பது, நமது பாரம்பரியத்தை நாசமாக்கி விடும். நமது ஆச்சார அனுஷ்டானங்களில் தலையிடாமல் அவர் ஒதுங்கியிருக்க வேண்டும். இல்லையெனில் இந்த உலகத்திலிருந்தே அவரை அனுப்பிவிடவேண்டும்.''

ஆம் ராம்மோகன்ராயைக் கொல்லத் துடிக்கிறான் அந்த வெறியன். அந்தப் பந்தோபாத்யாயா என்பவன் ஒரு தனிமனிதன் அல்லன். இந்து மதத் தீவிரவாதத்தின் பிரதிநிதியாகப் பேசியிருக்கிறான். இன்றைய இந்துமதத் தீவிரவாதப் பிற்போக்குத்தனத்தின் அடையாளமாகப் பேசியிருக்கிறான். ஆர்.எஸ்.எஸ். என்றும் பா.ஜ.க. என்றும் இன்று வளர்ந்து வந்திருப்பவர்களின் ஆதிமூலத்தின் அடிநாதமே அந்த பந்தோபாத்யாயா.

சரி, இவர்கள் கூக்குரல் எழுப்பி ஒப்பாரி வைக்கிற மாதிரி அவர் அப்படி என்னதான் செய்துவிட்டார்?

நாம் பள்ளியில் படிக்கிறபோது, வரலாற்றுப் புத்தகத்தில் இராஜாராம் மோகன்ராயைப் பற்றிப் படித்திருக்கிற

நாம் பள்ளியில் படிக்கிறபோது, வரலாற்றுப் புத்தகத்தில் இராஜாராம் மோகன்ராயைப் பற்றிப் படித்திருக்கிறோம். உடன்கட்டை ஏறும் வழக்கத்தை எதிர்த்துப் போராடினார். கணவன் இறந்தால் அவனை எரிக்கும்போதே, அவனோடு சேர்த்து அவன் மனைவியையும் எரிப்பதுதான் உடன்கட்டை ஏறுதல் என்ற சதி. வைஸ்ராயாக இருந்த பெண்டிங் மூலம் ஒரு தனிப்படை அமைத்து அந்த வழக்கத்தை ஒழித்தவர் ராஜாராம் மோகன்ராய். இந்துமத தீவிரவாதிகளின் நெஞ்சம் பதறியது. இந்துமதப் புனிதத்தை அவர் அழித்துவிட்டதாக ஆத்திரப்பட்டனர்.

தன் அண்ணியாரை, அண்ணன் உடலுக்கு எரியூட்டப்பட்டபோது, உடன் தூக்கிப்போட்டு எரித்ததைப் பார்த்து மனம் வெந்தவர் ராம்மோகன்ராய்.

உடன்கட்டை ஏறுவதை மட்டுமன்று, குழந்தை மணம், பெண்ணை இழிவுபடுத்தல், கல்வியில் எல்லோருக்கும் சமவாய்ப்பு என்று சமுதாய சீர்திருத்தக் கொள்கைகளைப் பரப்பினார். ஆரிய சமாஜம் என்ற அமைப்பை உருவாக்கிப் போராடினார்.

ஒவ்வொரு நிலையிலும் மதவாதிகளை எதிர்கொண்டு போராட வேண்டிய நிலையிருந்தது. எதற்கும் அஞ்சாமல் அவர்களை எதிர்த்துப் போராடி வென்றார்.

பெண் கல்வியைப் பெரிதும் ஆதரித்தார். கல்கத்தாவில் முதன்முதலாகப் பொதுப்பள்ளியைத் தோற்றுவித்தார்.

அங்கே எல்லா மதத்தினரும் சாதியினரும் சமமாக அமர்ந்து கல்விகற்றனர். அங்கே பெண்கள் கல்வி கற்றார்கள். இந்தியாவே அதை வியந்து பார்த்தது.

1772-ல் வங்காளத்தின் ரத்னா நகர்ப் பகுதியில் பிறந்து, 1833-ல் இங்கிலாந்தில் இறந்ததுவரை அவருடைய வாழ்க்கை போராட்ட வாழ்க்கையாகவே இருந்தது.

சமயங்களின் கையில் கல்வியை ஒப்படைக்காமல், அரசாங்கமே பொதுவாகப் பள்ளிகளை ஏற்படுத்தி அனைவரையும் சமமாக எண்ணிக் கல்வி வழங்கவேண்டும் என்று வாதிட்டார். இதற்காக இங்கிலாந்துசென்று, அமைச்சர்களைக் கண்டு வாதிட்டு பொதுப்பள்ளிகளை உண்டாக்கினார்.

அதுவரை, இந்துப் பள்ளிகளில் பார்ப்பனர்களே அதிகம் பயிலுவார்கள். போனால் போகிறதென்று உயர்சாதி இந்துக்கள் சிலரைச் சேர்த்துக்கொள்வார்கள். ஆனால், மறந்தும்கூடத் தாழ்த்தப்பட்டவர்களையோ, பெண்களையோ சேர்த்துக்கொள்வதே இல்லை.

ராஜாராம் மோகன்ராயின் பெருமுயற்சியினால் பெண்டிங் காலத்தில் 18-ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 19-ஆம் நூற்றாண்டின் துவக்கத்திலும் பொதுப்பள்ளிகள் தோன்றின. அவற்றில்தான் எல்லா சாதியினரும் எல்லா மதத்தினரும் அத்துடன் பெண்களும் சேர்ந்து கல்வி கற்றார்கள். அந்தப் பள்ளிகளில் எல்லாச்சமயங்களிலும் உள்ள நல்ல செய்திகள் கற்பிக்கப்பட்டன. கணிதம், அறிவியல், தர்க்கம் ஆகிய பாடங்கள் முதன்முதலாக அப்போதுதான் கற்பிக்கப்பட்டன.

ராஜா ராம்மோகன்ராயைப் பற்றிய ஆவணப்படம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் ராஜாராம் மோகன்ராய் முயற்சியால் இந்தியாவில் மட்டுமின்றி, ஆஸ்திரேலியா சிங்கப்பூர் முதல் ஜிம்பாப்வே, பர்மா, ஜிப்ரால்டர் என ஏனைய காலனி நாடுகளிலும் அரசு நடத்தும் பொதுப்பள்ளிகள் ஏற்படுத்தப்பட்டு எல்லோருக்குமான பொதுக்கல்வி வழங்கப்பெற்றது என்பதைக் காட்டுகிறது.

தன்னலம் மிகுந்த மதவெறிகொண்ட கூட்டத் திடமிருந்து மக்களைக் காப்பாற்றி கல்வி வழங்கிய மாமனிதராக நம் ராஜா ராம்மோகன்ராய் விளங்குகிறார்.

அவர் இங்கிலாந்தில் மரணமடைந்தார். பிரிஸ்டனில் உள்ள அவருடைய கல்லறையில், தனது அயராத உழைப்பினால், இந்தியாவில் அனைத்துவகை மக்களுக்கும் சமூக நீதிக்கான பாதையைக் கட்டமைத்த சீர்திருத்த மாமனிதர் இதோ இங்கே உறங்குகிறார். என்று பொறிக்கப்பட்டுள்ளது.

வெள்ளையர் ஆட்சி மட்டும் இல்லாவிட்டால், உடன்கட்டை ஏறுவதை ஒழித்திருக்க முடியுமா? பெண்களுக்குக் கல்வி சாத்தியப்பட்டிருக்குமா? மதவாதிகளும் அவர்களால் நடத்தப்படும் அரசும் பெண்கள் கோயிலுக்குப் போகலாம் என்று உச்சநீதி மன்றமே ஆணையிட்டாலும் அது நிறைவேறமுடி யாமல் தடுப்பதைப் பார்க்கிறோமே! இப்படித்தானே கணவனின் பிணத்துடன் மனைவியையும் எரிப்பதையும் ஆதரித்துத் தொடர்ந்திருப்பார்கள். நல்லவேளையாகப் பெண்டிங் இருந்து காப்பாற்றினார்.

மகாகவி பாரதியார் கூறுவதை எண்ணிப் பார்ப்போம்.

வேல்ஸ் இளவரசருக்கு நல்வரவு என்ற தலைப்பில் காணும் கவிதையில், வெள்ளையரை வெறுக்கும், வெள்ளையர் ஆட்சியை வெறுக்கும் பாரதியார், மற்றுன் நாட்டினோர் வந்ததன் பின்னர் அகத்தினில் சிலபுண் ஆறுதல் எய்தின ....

....

w

ஆற்றினில் பெண்களை எறிவதூஉம் இரதத்து

உருளையில் பாலரை உயிருடன் மாய்த்தலும்

பெண்டிரைக் கணவர்தம் பிணத்துடன் எரித்தலும்

எனப்பல தீமைகள் இறந்துபட்டனவால்

என்று பாடி ஆங்கிலேயர் ஆட்சியில் மதக்கொடுமை

மாய்ந்ததை எண்ணி மகிழ்ந்து போற்றுகிறார்.

பெக்ராம்ஜி மலபாரி

பொதுப்பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டன. என்றாலும் கல்விபெறப் பள்ளி செல்லும் மாணவ- மாணவிகளையும் அவர்கள் குடும்பத்தாரையும் ஊரைவிட்டே ஒதுக்கிவைத்தனர் மூடப்பழக்க- வழக்கப் பிற்போக்குச் சமயவாதிகள். இதில் இந்து, முஸ்லிம் என்ற பேதமில்லாமல் எல்லாருமே அனைவரும் சமமாக அமர்ந்து கல்வி பயிலுவதை எதிர்த்தனர்.

அக்காலச் சூழலில்தான் பெக்ராம்ஜி மலபாரி தோன்றுகிறார்.

1885-ல் ருக்மாபாய் என்னும் பெயருடைய சிறுமிக்குத் திருமணம் செய்து வைத்தார்கள். அந்தச் சிறுமி நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கிறார். தன்னைக் கணவனிடமிருந்து பிரிந்து வாழ அனுமதிக்குமாறும் கல்விகற்க அனுமதிக்கவேண்டுமென்று வாதாடுகிறார்.

ஆங்கிலேயரான நீதிபதி பின்ஹே என்பவர் அளித்த தீர்ப்பு என்ன?

"கணவனோடு சேர்ந்து வாழு, அல்லது சிறைக்குப் போ' என்பதே நீதிபதி தந்த நீதி. தீர்ப்பை வழங்கிய நீதிபதியின் முன்பாகவே தீர்ப்புக்கு எதிரான முழக்கத்தை முழங்கினார் மலபாரி.

அத்துடன் நில்லாமல் குழந்தைத் திருமணத்துக்கு எதிரான துண்டறிக்கைகளை அச்சிட்டு நீதிமன்றத் திலேயே யாவர்க்கும் வழங்கினார். நீதிபதிக்கும் ஒன்றைத் தந்தார்.

இங்கிலாந்தில் நாடாளுமன்றத்துக்கு முன்னர் நின்று முழக்கங்கள் எழுப்பினார்.

குழந்தைகளை மணமக்கள் ஆக்காதீர்கள் மாணவர்கள் ஆக்குங்கள் என்று தலைப்பிட்டு பத்துநாட்கள் லண்டனில் சொற்பொழிவாற்றினார்.

1885-ல் திருமண வயது வரம்புச் சட்டம் (ஆஞ்ங் ர்ச் ஈர்ய்ள்ங்ய்ற் ஆஸ்ரீற்) இயற்றப்பட்டு, இங்கிலாந்து, இந்தியா, ஏனைய காலனி நாடுகள் என எங்கெங்கும் குழந்தைத் திருமணம் சட்டத்தின்படி தடைசெய்யப்பட்டது.

ஆனாலும் என்ன? இன்றும் அறியாமையாலும் அவசரத்தாலும் அங்கொன்றும் இங்கொன்றுமாக சட்டவிரோதமாக குழந்தைத் திருமணங்கள் நடைபெற்றுக் கொண்டுதானே இருக்கின்றன!

மலபாரி எழுதிய ஒரு புகழ்பெற்ற கவிதையை பிளாரன்ஸ் நைட்டிங்கேல் அம்மையார் பாராட்டி யுள்ளார். அவருடைய உள்ளங் கவர்ந்த கவிதை இதுதான்.

w

குழந்தைகளுக்கு விழிகளைக் கொடுங்கள்;

அவர்கள் உங்கள் எதிர்கால இருளைப் போக்குவார்கள்;

பிள்ளைகளுக்குச் சிறகுகளைத் தாருங்கள்;

உங்களை மேலும் உயரத்திற்குக் கொண்டு செல்வார்கள்;

கல்விக்கு இணையான சிறகுகள் இல்லை- பள்ளிக்குப் போகாதவருக்குப் பார்வை இருந்தும் பயனேதும் இல்லை.

இக்கவிதையைக் காந்தியடிகள் மிகவும் விருப்பத்தோடு பாடுவார். காந்தியடிகளின் சபர்மதி ஆசிரமக் குழந்தைகளைப் பாடவைத்தார்.

குழந்தைத் திருமணங்களைத் தடுத்து நிறுத்தியதிலும் பெண்களின் கல்வியிலும் பெக்ராம்ஜி மலபாரி ஆற்றிய தொண்டு அளப்பரியது.

ஆசிரியராக முதல் பெண்மணி

1813-ல் ஆங்கிலேயரின் பொதுக் கல்விச் சாலைகள் துவங்கின.

1822-ல் கல்வி முன்னேற்றம் எவ்வாறு உள்ளது என்பதைக் கணக்கெடுத்துப் பார்க்கிறார் மதராஸ் கவர்னர் தாமஸ் மன்றோ. அக்கணக்கெடுப்பின்படி இந்தியா முழுவதிலும் இருந்த பள்ளிகளின் எண்ணிக்கை 12,498 மட்டுமே.

பள்ளி வயதிலுள்ள ஆண் குழந்தைகளில் 7.9 சதவீதம் பேர் மட்டுமே பள்ளி சென்றனர்.

1835-ல் இன்னொரு கணக்கெடுப்பு, அதன்படி 400 பேர் உள்ள ஒரு சிற்றூரில் 18 ஆண் குழந்தைகள் மட்டுமே கல்வி கற்றனர். எல்லாப் புள்ளி விவரங்களும் காட்டும் ஒரு துயரச் செய்தி என்னவெனில், ஒரு பெண் குழந்தையாவது கல்விக் கூடம் செல்லவில்லை என்பதுதான்.

இவ்வாறான சூழலில் மராட்டியத்தில் புனே மாகாணச் சிற்றூர் ஒன்றில் பெண்களுக்கான ஒரு பள்ளியைத் தானே ஆசிரியராக இருந்து நடத்துகிறார் சாவித்திரிபாய்.

தனது ஒன்பதாவது வயதில் சாவித்திரிபாய் சமூக சீர்திருத்தவாதியான ஜோதிராவ் பூலே என்பவரை மணந்தார்.

தற்குறியான சாவித்திரிபாய்க்கு ஜோதிராவ், வீட்டில் யாரும் அறியாவண்ணம் கல்வி கற்பித்தார். குடும்பத்தில் உள்ளவர்களுக்கு இச்செய்தி தெரியவந்தவுடன் ஜோதிராவைக் குடும்பத்திலிருந்து விரட்டினார்கள். சாவித்திரிபாயும் அவரோடு வீட்டைவிட்டு வெளியேறினார்.

பைத்வாடா சிற்றூரில் தானே ஆசிரியராக இருந்து பெண்கள் பயிலும் வகையில் பள்ளியைத் துவக்கி நடத்துகிறார்.

அதிகாலைப் பொழுதில் பள்ளிக்கு நடந்துசெல்லும் சாவித்திரி மீது சாதி இந்துக்கள் சாணியையும் மனித மலத்தையும் அழுகிய முட்டையையும் வீசிக் கேவலப்படுத்துகிறார்கள்.

இது சாவித்திரிக்குப் பழக்கமாகி விட்டதால், பள்ளிசென்று குளித்துவிட்டு கையில் கொண்டு வந்திருக்கும் மாற்றுப் புடவையை உடுத்திக்கொண்டு பாடம் நடத்தினார்.

வேறு ஒரு அற்புதம் நிகழ்த்தினார் சாவித்திரிபாய். உயர்சாதி இந்துக்களால் கற்பழிக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட பெண்கள், இளம் விதவைகள் என 75 பேரைச் சேர்த்து அவர்களுக்குக் கல்விக்கண் தந்தார். அத்துடன் இருந்துவிடாமல் அவர்களுக்கு நீல நிறச்சீருடை வழங்கினார். தையல் பயிற்சி, ஓவியப் பயிற்சி முதலிய கைத்தொழில்களைக் கற்றுத் தந்து, அவர்களைத் தன்னம்பிக்கையுடன் வாழச்செய்தார். சாதி இந்துக்களின் எதிர்ப்புகளையும் வழக்குகளையும் கணவரின் துணையுடன் போராடி வென்றார். பிளேக் நோய் தாக்கியபோது, அரசு மருத்துவமனைகள் தாழ்த்தப்பட்டவர்களுக்கு, சிகிச்சை தர மறுத்தன.

அவர்களைத் தன் கல்விக் கூடத்துக்கு அழைத்துவந்து சிகிச்சை செய்து நலம்பெறவைத்தார் சாவித்திரிபாய்.

அதே நோயால் தாக்கப்பட்டு அவர் இறந்தும் போனார். பிளேக் நோய்க்குக் காரணமான எலிகளை ஒழிக்கவேண்டும் என்று அரசாங்கம் முயன்றபோது, லோகமான்ய பாலகங்காதர திலகர் என்ன சொன்னார்?

எலி விநாயகரின் வாகனம், அதனை அழிப்பது விநாயகரை இழிவுபடுத்துவதாகும் என்று ஆணி யறைந்தது போலக்கூறினார். அடடா, திலகரின் நாட்டுப் பற்றைப் பாருங்கள். இந்து என்றால் அவர்தான் இந்து! மக்கள் செத்தால் சாகட்டும்;

எலி மட்டும் செத்துவிடக்கூடாது. ஜீவ காருண்ய சீலர் திலகரல்லவா!

இந்தத் திலகரைத் தீவிரவாதி என்கிறார்கள். அவர் என்ன செய்தார் என்பதை எண்ணிப்பார்த்தால் வேடிக்கையாகவும் வேதனையாகவும் இருக்கிறது.

கோபாலகிருஷ்ண கோகலே ஏழை எளிய மக்கள் யாவரும் கல்வி பெறவேண்டும். அதை வழங்கும் அரசின் கடமை என்று வற்புறுத்திப் போராடினார். அதற்காக, ""எல்லார்க்கும் கட்டாயக் கல்வி; இலவசக் கல்வி பெறுவது எங்கள் உரிமை'' என்று முழங்கினார். அதை ஏற்றுக்கொள்ளவில்லை திலகர். அவர்களிடம் என்ன கெஞ்சுவது? அவர்கள் என்ன வழங்குவது? நாம் சுதந்திரம் பெற்ற பிறகு அதைப் பார்த்துக்கொள்ளலாம் என்று கூறிவிட்டு, "சுதந்திரம் எங்கள் பிறப்புரிமை' என்று மாற்று முழக்கம் எழுப்பினார்.

சுதந்திரம் வேண்டாம் என்று கோகலே சொல்வது போலவும் இவர்தான் சுதந்திரத்துக்காகப் போராடுவதுபோலவும் காட்டிக்கொண்டு ஏமாற்று கிறார். எல்லோரும் சமமாகக் கல்விபெற்றுவிடக் கூடாது என்பதே திலகரின் உள்ளார்ந்த மனநிலை. 1892-ல் குழந்தைகள் திருமணத் தடைச்சட்டத்தைக் கொண்டுவருமாறு ஆங்கிலேய அரசை வற்புறுத்துகிறார் கோகலே. அதை எதிர்க்கிறார் திலகர். இவர்தான் ஒரு தீவிரவாதியாம்!

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி

1886-ல் புதுக்கோட்டையில் பிறந்தவர் முத்துலட்சுமி ரெட்டி. அவருடைய தந்தை நாராயணசாமி புதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் பேராசிரியராக இருந்தார்.

அந்த நாளில் தமிழகத்தில் எந்தப் பெண்ணும் பள்ளி சென்று படிக்கவில்லை. தந்தையார் முத்துலட்சுமிக்கு வீட்டிலேயே கலவி புகட்டினார். தாயார் சுந்தராம்பாள் மகள் முத்துலட்சுமியைப் பள்ளிக்கூடம் அழைத்துப் போய் சன்னலுக்கு வெளியில் அமரவைத்துப் பாடத்தைக் கேட்கவைத்து அழைத்து வருவார். இவ்வாறு கல்வி கற்ற முத்துலட்சுமி தன் 15-ஆம் வயதில் மெட்ரிக்கை முடித்தார்.

பெற்றோர்க்குத் தெரியாமல் கல்லூரியில் சேர விண்ணப்பித்தார். பெண்ணைச் சேர்க்க இயலாது என்றார் முதல்வர். மன்னரே நேரடியாகப் பரிந்துரை வழங்கிக் கல்லூரியில் சேர்க்கப்பட்டார். பின்னர் மருத்துவக் கல்லூரியில் பெரும் போராட்டத்துக்குப் பின் சேர்ந்து 1912-ல் முதல் பெண் மருத்துவராகத் தேர்ச்சி பெற்றார். முதல் பெண் மகப்பேறு மருத்துவராகவும் அவரே திகழ்ந்தார்.

1917-ல் இந்திய மாதர் சங்கம் என்ற அமைப்பைத் தோற்றுவிக்கிறார். தேவதாசிகள் படும்பாட்டைக் கண்டு வேதனைப்படுகிறார். இறைவனின் அடிமையாக நியமிக்கப்படும் அவர்களுக்குத் திருமணம் செய்துகொள்ளும் உரிமை கிடையாது. கோயில் அர்ச்சகர், ஜமீன்தார் போன்றவர்களின் ஆசை நாயகிகளாய் வாழ்ந்தாக வேண்டிய கட்டாயம், கல்விபெறும் உரிமை இல்லை. ஆடல்பாடல் கலைகளில் தேர்ந்து கோயில் விழாக்களில் தங்கள் கலைத் திறனை வெளிப்படுத்தி மக்களை மகிழ்விக்க வேண்டியது அவர்கள் கடமை.

இந்தக் கொடுமையை ஒழிக்க நினைத்தார் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி. இந்திய மாதர் சங்கத்தின் சார்பில் மாபெரும் பேரணி ஒன்றை நடத்தினார். பெண்களுக்கு வாக்குரிமை வழங்கவேண்டும் என்ற தீர்மானம் நிறைவேறியது.

1930-ல் சட்டமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டார். துணைத்தலைவராகத் தேர்வு பெற்றார். உலகிலேயே முதன்முதலாக அவர் பெண் தலைவியாகத் தேர்வு பெற்றதை உலகம் பாராட்டியது.

தேவதாசி ஒழிப்புத் தீர்மானத்தைச் சட்டமன்றத் தில் கொண்டு வந்து, அதன் கொடுமைகளை விளக்கினார்.

அப்போது சட்டமன்றத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் வீற்றிருந்த சத்தியமூர்த்தி தீர்மானத்தை எதிர்த்தார். இளைஞர்களுக்கு தேவதாசிகள் உதவுகிறார்கள்.

அவர்கள் இல்லையென்றால் நல்ல குடும்பப் பெண்களுக்கு ஆபத்து. நகர் சுத்தமாக இருக்கவேண்டுமானால் கழிப்பிடம் அவசியம். அதுபோல சமுதாயம் சீரழியாமல் இருக்க தேவதாசிகள் இன்றியமையாதவர்கள். ஆகவே அந்தச் சாதியினர் அப்படியே தேவதாசிகளாக இருக்கவேண்டும் என்றார்.

அவருக்கு விடைசொன்ன டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி, "சரி இவ்வளவு நாளும் தேவதாசிகளாக அவர்கள் இருந்துவிட்டார்கள். இனிமேல் சத்தியமூர்த்தி அவர்கள் சாதியினரைத் தேவதாசி களாக அமர்த்தி இளைஞர்களுக்கு உதவத் தயாராயிருந்தால் நல்லது. ஒத்துக்கொள்கிறாரா சத்தியமூர்த்தி' என்று கேட்டார். சத்தியமூர்த்தி "கப்சிப்'.

அவ்வை இல்லம் என்ற அமைப்பை சென்னை வேப்பேரியில் உருவாக்கினார். மீட்கப்பட்ட தேவதாசிகள் அங்கே சேர்க்கப்பட்டு அவர்களுக்குக் கல்வியும் தொழிற்பயிற்சியும் தந்து மறுவாழ்வு அளித்தார்.

விதவை மறுமணம், குழந்தைத் திருமண எதிர்ப்பு, பெண் சிசுக்கொலை எதிர்ப்பு உடலால் துன்புறுத்தப்பட்ட பெண்களுக்கு புதுவாழ்வு என்று பெண்ணுரிமைக்கான எல்லாவிதமான நற்பணிகளையும் மேற்கொண்டார். சென்னையில் புற்றுநோய் சிகிச்சை மையத்தையும் நிறுவினார்.

81-ஆவது வயதில் 1968-ஆம் ஆண்டில் முத்துலட்சுமி மறைந்தார். அப்போது அறிஞர் அண்ணா முதலமைச்ச ராக இருந்தார். அவர் கூறினார். ""பகுத்தறிவுப் பாசறை யின் போர்முரசம் ஓய்ந்துவிட்டது.''

இன்று பெண்கள் படிக்கவென்று தனியாகப் பள்ளிகள், கல்லூரிகள் இருக்கின்றன. இன்னும் முழுமையாகப் பெண்ணடிமைத் தனம் ஒழிந்துவிட்டதா என்றால் இல்லை என்பதே மறுமொழி. ஆனாலும், இந்த நிலையை அடைவதற்கு எவ்வளவு பாடுபட்டு இருக்கிறார்கள் என்பதை உணர்ந்து அந்தப் பெருமக்களுக்கெல்லாம் நம் வீரவணக்கத்தைத் தெரிவிக்கிறோம்.

சனாதனமும் வைதீகமும் பெண் விடுதலைக்கு எதிராக எவ்வளவு மூர்க்கமாகப் போராடியிருக்கிறது!

நல்வாய்ப்பாக வெள்ளையர்கள் என்னும் ஆங்கிலேயர்கள் ஆட்சியில் இருந்ததால், கணவன் பிணத்தோடு மனைவியை உயிரோடு எரிக்கும் கொடுமை நீங்கியது. குழந்தைத் திருமணக்கொடுமை அகன்றது. பெண் கல்வி சாத்தியமானது. இன்றைக்கு இருக்கும் ஆட்சியாளர்கள் அன்றைக்கு இருந்திருந்தால் இந்துமத சாஸ்திர சம்பிரதாயம் என்று அவைகளை வளர்த்திருப்பார்கள்.

பெண்களுக்கு உரிமை வாழ்வைப் பெற்றுத் தந்த பெரியவர்களைத் தலை தாழ்த்தி வணங்குவோம்.

uday010419
இதையும் படியுங்கள்
Subscribe