பெண்ணியப் போராளி இளங்கோவடிகள் திகைக்க வைக்கும் சிலம்பு! - கவிஞர் முனைவர் சு.சங்கீதா

/idhalgal/eniya-utayam/feminist-militant-teenagers-stunning-statue-poet-dr-s-sangeetha

தேடல்கள் நிறைந்தது தான் இந்த உலகம். தேடல்களின் முடிவுதான் புதிய மாற்றங்களைக் கொண்டுவரும். மாற்றம் ஒன்றே மாறாதது. மாற்றம் என்பது மானிடத் தத்துவம் என்பது முன்னோர் வாக்கு. மாற்றம் தான் மனித சமூகத்தை நெறிப்படுத்தத் தேவைப்படும் மிக முக்கியமான ஆயுதம்.

முறையான திட்டமிடுதல், புதிய கோட்பாடுகள், சிறப்பான ஒருங்கிணைப்பு மற்றும் நேர மேலாண்மை போன்றவைதான் மனித சமூகத்தில் சிறந்த மாற்றங்களைக் கொண்டு வருவதற்கான மிக முக்கியமான காரணிகள் என்று சொல்லலாம். அன்று முடியாட்சி அவிழ்ந்து குடியாட்சி மலர்ந்தது நம் சமூகத்தின் மறுமலர்ச்சி மட்டுமல்லாமல் அது மிகச்சிறந்த மாற்றம் தான். காலங் காலமாக மாற்றங்கள் தான் மிகச்சிறந்த சமூகத்தைக் கட்டமைத்திருக்கிறது என்றால் அது மிகையாகாது.

dd

மாற்றங்கள் தான் நம் சமூகத்தின் நாகரிக வாசலைத் திறந்து வைத்தது எனலாம். சிறந்த நிர்வாகமும் அமைப்பும் தான் சமூக வளர்ச்சிக்கான அடிப்படைக் காரணம். விவசாயத் துறை, தொழில் துறை மற்றும் சேவைத் துறை என்ற மூன்று துறைகளும் சமமாக வளர்ச்சி அடைந்தால் மட்டுமே நம் சமூகத்தில் பொருளாதாரம் வளர்ச்சி அடையும். பொருளாதாரம் நாட்டின் நிதி நிலையை வளப்படுத்தும். ஆனால் நீதியை வளப்படுத்தினால் மட்டுமே நம் சமூகம் முழுமையான வளர்ச்சியை அடைய முடியும். எத்தனையோ தொண்டு நிறுவனங்களும் தொண்டு அறக்கட்டளைகளும் மற்றும் சேவை மன்றங்களும் இந்தக் கொடிய கொரோனா காலக்கட்டத் தில் ஏற்றத்தாழ்வு இல்லாமல் அனைவருக்கும் உதவி வருவது மிகவும் போற்றுதற்குரியது. இந்த சமூக நீதியை மனிதநேய மாண்பை, தனிமனித ஒழுக்கத்தை மற்றும் சமத்துவ நோக்கத்தை மனித இனம் மறந்து விடக்கூடாது என்பதற்காகத் தான் தமிழ் இலக்கியம் நீதி நூல்கள் வாயிலாக முறையான வாழ்க்கை நெறியை பின்பற்ற வழிகாட்டி இருக்கிறது.

இலக்கினை இயம்புவது தான் இலக்கியம். நம் சமூகத்தின் கலாச்சாரத்தைப் பண்பாட்டைப் பின்பற்றி அதிலிருந்து பிறழாமல் நன்னெறியில் நடத்திச் செல்வது தான் இலக்கியத்தின் பெருமை. தமிழிலக்கியம் மிகப்பெரிய கடல். அதில் பல நூல்களை முத்துக்களாகக் கோர்த்துக் கொடுத்திருக்கிறார்கள் நம் முன்னோர்கள். பெரும்பாலான நூல்களின் கதைகள் காவிய நாயகனை முதன்மைப்படுத்தியே எழுதப்பட்டிருக்கின்றன. ஆனால் காப்பிய நாயகியை முதன்மைப்படுத்தி பெண் என்பவள் 'பேசாப் பொருளல்ல' 'பேசும் பொருள்' என்று பெண்ணை அரசியல் பேச வைத்த காப்பிய நூல் சிலப்பதிகாரம். அதனால் தான் 'சிந்தையள்ளும் சிலப்பதிகாரம்' என்று புகழாரம் சூட்டினார்கள். காலத்தால் இந்த நூல் வேறுபட்டு இருந்தாலும் கருத்தால் இன்றைய தலைமுறைக்குத் தேவையான செய்திகள் சிலம்பில் குவிந்து கிடக்கிறது என்று சொல்லலாம்.

இன்று நீதித்துறையும் நிர்வாகமும் செம்மையாய் செயல்பட என்ன செய்ய வேண்டும் என்பதைத் தமிழின் முதல் காப்பியமும் முத்தமிழ் காப்பியமுமான இரண்டாம் நூற்றாண்டில் உருவான சிலப்பதிகாரத்தில் மிகத் தெளிவாகக் கூறப்பட்டிருக்க

தேடல்கள் நிறைந்தது தான் இந்த உலகம். தேடல்களின் முடிவுதான் புதிய மாற்றங்களைக் கொண்டுவரும். மாற்றம் ஒன்றே மாறாதது. மாற்றம் என்பது மானிடத் தத்துவம் என்பது முன்னோர் வாக்கு. மாற்றம் தான் மனித சமூகத்தை நெறிப்படுத்தத் தேவைப்படும் மிக முக்கியமான ஆயுதம்.

முறையான திட்டமிடுதல், புதிய கோட்பாடுகள், சிறப்பான ஒருங்கிணைப்பு மற்றும் நேர மேலாண்மை போன்றவைதான் மனித சமூகத்தில் சிறந்த மாற்றங்களைக் கொண்டு வருவதற்கான மிக முக்கியமான காரணிகள் என்று சொல்லலாம். அன்று முடியாட்சி அவிழ்ந்து குடியாட்சி மலர்ந்தது நம் சமூகத்தின் மறுமலர்ச்சி மட்டுமல்லாமல் அது மிகச்சிறந்த மாற்றம் தான். காலங் காலமாக மாற்றங்கள் தான் மிகச்சிறந்த சமூகத்தைக் கட்டமைத்திருக்கிறது என்றால் அது மிகையாகாது.

dd

மாற்றங்கள் தான் நம் சமூகத்தின் நாகரிக வாசலைத் திறந்து வைத்தது எனலாம். சிறந்த நிர்வாகமும் அமைப்பும் தான் சமூக வளர்ச்சிக்கான அடிப்படைக் காரணம். விவசாயத் துறை, தொழில் துறை மற்றும் சேவைத் துறை என்ற மூன்று துறைகளும் சமமாக வளர்ச்சி அடைந்தால் மட்டுமே நம் சமூகத்தில் பொருளாதாரம் வளர்ச்சி அடையும். பொருளாதாரம் நாட்டின் நிதி நிலையை வளப்படுத்தும். ஆனால் நீதியை வளப்படுத்தினால் மட்டுமே நம் சமூகம் முழுமையான வளர்ச்சியை அடைய முடியும். எத்தனையோ தொண்டு நிறுவனங்களும் தொண்டு அறக்கட்டளைகளும் மற்றும் சேவை மன்றங்களும் இந்தக் கொடிய கொரோனா காலக்கட்டத் தில் ஏற்றத்தாழ்வு இல்லாமல் அனைவருக்கும் உதவி வருவது மிகவும் போற்றுதற்குரியது. இந்த சமூக நீதியை மனிதநேய மாண்பை, தனிமனித ஒழுக்கத்தை மற்றும் சமத்துவ நோக்கத்தை மனித இனம் மறந்து விடக்கூடாது என்பதற்காகத் தான் தமிழ் இலக்கியம் நீதி நூல்கள் வாயிலாக முறையான வாழ்க்கை நெறியை பின்பற்ற வழிகாட்டி இருக்கிறது.

இலக்கினை இயம்புவது தான் இலக்கியம். நம் சமூகத்தின் கலாச்சாரத்தைப் பண்பாட்டைப் பின்பற்றி அதிலிருந்து பிறழாமல் நன்னெறியில் நடத்திச் செல்வது தான் இலக்கியத்தின் பெருமை. தமிழிலக்கியம் மிகப்பெரிய கடல். அதில் பல நூல்களை முத்துக்களாகக் கோர்த்துக் கொடுத்திருக்கிறார்கள் நம் முன்னோர்கள். பெரும்பாலான நூல்களின் கதைகள் காவிய நாயகனை முதன்மைப்படுத்தியே எழுதப்பட்டிருக்கின்றன. ஆனால் காப்பிய நாயகியை முதன்மைப்படுத்தி பெண் என்பவள் 'பேசாப் பொருளல்ல' 'பேசும் பொருள்' என்று பெண்ணை அரசியல் பேச வைத்த காப்பிய நூல் சிலப்பதிகாரம். அதனால் தான் 'சிந்தையள்ளும் சிலப்பதிகாரம்' என்று புகழாரம் சூட்டினார்கள். காலத்தால் இந்த நூல் வேறுபட்டு இருந்தாலும் கருத்தால் இன்றைய தலைமுறைக்குத் தேவையான செய்திகள் சிலம்பில் குவிந்து கிடக்கிறது என்று சொல்லலாம்.

இன்று நீதித்துறையும் நிர்வாகமும் செம்மையாய் செயல்பட என்ன செய்ய வேண்டும் என்பதைத் தமிழின் முதல் காப்பியமும் முத்தமிழ் காப்பியமுமான இரண்டாம் நூற்றாண்டில் உருவான சிலப்பதிகாரத்தில் மிகத் தெளிவாகக் கூறப்பட்டிருக்கிறது. நடிகர்களுக்கு ரசிகர் மன்றம், நகைச்சுவை மன்றம், முத்தமிழ் மன்றம், மக்கள் மன்றம், இப்படி எத்தனையோ மன்றங்களை இந்த சமூகம் உருவாக்கியிருந்தாலும் சிலப்பதிகாரம் படைத்த இளங்கோவடிகள் அன்றைக்கே கற்பனையில் ஐந்து விதமான அறிவுப்பூர்வமான மன்றங் களைப் படைத்திருக்கிறார் என்பது வியப்புக்குரியது. இதன் மூலம் அவருக்குள் இருக்கும் ஒரு அறிவியல் அறிஞர் நமக்கு ஆச்சரியமாகக் காட்சி தருகிறார்.

இது போன்ற சிந்தனை சிலம்பு தோன்றிய காலத்தில் எந்த இந்திய மொழி இலக்கியத்திலும் இருந்ததாகத் தெரியவில்லை. இந்த ஐந்து விதமான மன்றங்களும் இன்றைய சமூகப் பிரச்சனைகளுக்குத் தீர்வு சொல்லும் அமைப்பாக இருப்பதுடன் நம் நாட்டின் பாதுகாப்பைப் பலப்படுத்தும் முக்கியக் காரணியாக இருக்கிறது என்பது தான் சிறப்பிற்குரியது. எந்த அறிவியல் தொழில்நுட்பத் தாக்கமும் இல்லாத இரண்டாம் நூற்றாண்டின் நுட்பங்கள் அறிவியலில் முளைத்தெழுந்த இருபத்தியோராம் நூற்றாண்டோடு தொடர்புபடுத்த முடிகிறது என்றால் அறிவியல் அறிவும் தொழில்நுட்ப அறிவும் வெகுநாட்களாகவே விதையூன்றி இருக்கிறது என்பது மறுக்கமுடியாத உண்மை. இளங்கோவடிகள் முதலில் வெள்ளிடை மன்றத்தை அறிமுகப்படுத்துகிறார்.

gg

புகார் நகரில் பலவகை சரக்குப் பொதிகள் இருக்கிற பண்டக சாலையின் வாசலில் பூட்டு தாழ் போட்டோ இல்லை காவலாளி களோ இருக்க மாட்டார்கள். ஆனால், அந்த ஊருக்கு வரும் புதியவர் கள் திருட நினைத்தால் அப்பொருளை அவன் தலையில் ஏற்றியவுடன் அவனை ஊரைச் சுற்ற வைக்கும், ஊரில் உள்ளவர்களை ஒலித்து அழைக்கும், அவனிடம் அப்பொருளைக் கொடுத்து விடாது தடுக்கும். இவற்றை எல்லாம் நினைத்துப்பார்த்தால் திருடன் திருடன் நினைக்கமாட்டான். இன்று ஐரோப்பிய நாடுகளில் காரை வேகமாகச் சாலையில் ஓட்டினால் அதைக் கண்டுபிடிப்பதற்கு காவல் துறை ஒரு கருவி வைத்திருக்கிறது. காவல்துறை கருவி வைத்திருக்கிறதா இல்லையா என்று அறிவதற்கு காரில் ஒரு கருவியைப் பொருத்தி யிருப்பார்களாம். உலோக உணர்வி அல்லது உலக அலர்வி என்று சொல்லப் படுகிற "மெட்டல் டிடெக்டர்' உலோகம் கண்டறியும் கருவியாக நடைமுறையில் பயன்படுத்து கிறார்கள்.

வங்கி, நிதி நிறுவனங்கள் மற்றும் பல உயர் அரசு நிறுவனங்களில் பாதுகாப்புக் கருதி இது போன்ற அழைப்பு ஒலிக் கருவிகளை பொருத்தியிருப்பது நாம் அறிந்த ஒன்றே. இந்தத் தொழில்நுட்பத்தைத் தான் வெள்ளிடை மன்றத்தில் இளங்கோவடிகள் சுட்டியிருக்கிறார். திருட நினைப்பவனை நடுங்க வைக்கும் நிலையுடைய தன்மை தான் வெள்ளிடை மன்றம் என்பதை

"வம்ப மாக்கள் தம்பெயர் பொறித்த

கண்எழுத்துப் படுத்த எண்ணுப் பல்பொதிக்

கடைமுக வாயிலும், கருந்தாழ்க் காவலும்,

உடையோர் காவலும், ஒரீஇய ஆகிக்

கட்போர் உளர் எனின், கடுப்பத் தலை ஏற்றிக்

கொட்பின் அல்லது கொடுத்தல் ஈயாது

உள்ளுநர் பனிக்கும் வெள்ளிடை மன்றமும்''

-என்று மிகச்சிறந்த மன்றத்தை ஒரு பாதுகாப்புத் துறை அமைச்சர் போன்று சிந்தித்திருக்கிறார் இளங்கோவடிகள்.

இரண்டாவதாக இலஞ்சி மன்றத்தை அறிமுகப்படுத்துகிறார். இங்கு பிறவிக் கூன், குருடு, ஊமை, செவிடு என்று உடல் ஊனமுற்றவர் களையும் தொழுநோயால் உடல் அழுகியவர்களையும் இந்த சமூகம் அருவருப்பாகவே பார்க்கிறது. இந்த நிலையை மாற்ற இலஞ்சி ஆகிய பொய்கையில் நீராடினால் இந்தக் குறைகள் நீங்கப்பெற்று நல்ல நிறம் பெற்று வாழ்வார்கள் என்கிறார். இன்றைய சூழலில் ஆங்கில மருத்துவத்தைத் தாண்டி சித்த மருத்துவம், ஆயுர்வேத மருத்துவம் என்று மக்கள் இயற்கை சார்ந்த மருத்துவங்களைத் தேட ஆரம்பித்து விட்டார்கள். ஒரு காலத்தில் தினை, வரகு, சாமையை உண்ட நம் சமூகம் வளர்ச்சி மாற்றத்தால் அரிசி, கோதுமை என்று இன்று பீசா, பர்க்கர் வரை உணவில் மிகப்பெரும் மாற்றத்தைக் கண்டிருக்கிறது. அதே நேரத்தில் சத்தான உணவுகளை இந்த சமூகம் புறந்தள்ளி விட்டது. இன்றைக்கும் உடலில் ஏற்பட்ட குறைகளை நிவர்த்தி செய்வதற்கு ஆயுர்வேத மருத்துவத்தையும் மூலிகைக் குளியலையும் பலர் நாடிச் செல்கிறார் கள். இதைத்தான் இளங்கோவடிகள், இலஞ்சிப் பொய்கையில் குளிக்க உடற் குறைபாடுகளைத் தீர்க்க இலஞ்சி மன்றத்தைப் பற்றிக் குறிப்பிடுகிறார்.

"கூனும் குறளும் ஊமும் செவிடும்

அழகு மெய்யாளரும் முழுகினர் ஆடிப்

பழுது இல் காட்சி நல்நிறம் பெற்று

வளம்செயாக் கழியும் இலஞ்சி மன்றமும்''

-என்று ஒரு சுகாதாரத்துறை அமைச்சரைப் போல இலஞ்சி மன்றத்தை மிக அழகாக நிறுவியிருக்கிறார்.

மூன்றாவதாக, நெடும்கல் நின்ற மன்றத்தைக் காட்டுகிறார். உடல் நோய்களுக்கு வழி தேடிய இளங்கோவடிகள் மன நோய்களுக்கும் அதாவது வஞ்சனையால் சிலர் மருந்து ஊட்ட உண்டு மனக் கோளாறு ஆகி பைத்தியம் பிடித்தவருக்கும் பேய் என்ற மாயையால் துன்பத்தை அடைந்தவர்க்கும் தீர்வு சொல்லியிருக்கிறார். அதுமட்டுமல்லாமல் நஞ்சினை உண்டு துயர் அடைந்தவருக்கும் பாம்புக் கடிபட்டவருக்கும் என்ன தேவை என்பதை வலியுறுத்தி இருக்கிறார். ஒளியை உமிழ்கின்ற நெடுங்கல் நின்ற மன்றத்தை சுற்றிவந்து தொழுதால் இத் துன்பங்கள் அனைத்தும் நீங்கும் என்று சொல்கிறார். மேலோட்டமாகப் பார்த்தால் இது ஒரு மூடநம்பிக்கையைப் போன்று தோன்றும். ஆனால், ஆராய்ந்து பார்த்தால் இதற்குள்ளே ஒளிந்திருக்கும் அறிவியல் புலப்படும். இன்றைய நடைமுறையில் மக்கள் அதிகமாக கேரள வைத்தியசாலைகளை நாடுகிறார்கள். அங்கு சூரியக் குளியலை அறிவுறுத்துகிறார்கள்.

ஒளி உடம்பில் பட்டால் தோல் நோய்களுக்கு சரியான தீர்வாகவும் தேவையான வைட்டமின்களும் கிடைக்கும் என்பது தான் அதன் நோக்கம். இயற்கை காற்றை சுவாசிக்கவும் இயற்கையோடு இயற்கையாய் மனிதன் பயணப் படுவதன் மூலம் அவன் மனதிலும் உடலிலும் ஆரோக்கியம் அதிகரிக்கும் என்பது தான் இந்த வைத்தியத்தின் நோக்கம். மனநலம் பாதிக்கப்பட்டவருக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவ மனைகளில் கூட இயற்கை சார்ந்த சூழலை உருவாக்கி அவர்களை ஆசுவாசப் படுத்துவார்கள். மனதை உறுதி செய்து வளப்படுத்த,

"வஞ்சம் உண்டு மயல்பகை உற்றோர் நஞ்சம் உண்டு நடுங்குதுயர் உற்றோர்

அழல்வாய் நாகத்து ஆர்எயிறு அழுந்தினர்

கழல் கண்கூடு கடுநவைப் பட்டோர்

சுழல வந்து தொழில் துயர் நீங்கும் நிழல் கால் நெடுங்காலம் நின்ற மன்றமும்''

என்று நெடுங்கல் நின்ற மன்றம் மூலமாக மனித மனங்களை செழுமைப்படுத்த நினைத்த இளங்கோவடிகள் ஒரு மனநல ஆலோசகர் போல செயல்பட்டிருக்கிறார். நான்காவதாக சதுக்க பூதத்தை அறிமுகப்படுத்துகிறார். போலிச்சாமியார்கள், கணவனை ஏமாற்றி பொய்யொழுக்கம் கொண்ட பெண்கள், அரசனுக்கு உட்பகையாக கேடு செய்கின்ற அமைச்சர், பிறர் மனைவியை விரும்பும் ஆண்கள், பொய் சாட்சி சொல்பவன் மற்றும் புறங்கூறிப் பொய்த்து வாழும் இயல்புடையவர்கள் ஆகியோர் என் கையிலுள்ள கயிற்றில் அகப்படுவோர் என்று கூறி, சுமார் நாற்பது மைல் கேட்குமாறு கடிய குரலை எழுப்பி, அவர்களை அந்த இடத்திலேயே அறைந்து உண்ணுமாம் இந்த சதுக்கபூதம். இன்று பல பேருந்து நிலையங்களின் அருகிலும் ரயில் நிலையங்களிலும் காவல் நிலையங்களிலும் திருடர்கள் ஜாக்கிரதை என்று நாம் முன்னெச்சரிக்கையாக இருக்க அவர்களின் படம் கொண்ட தாளினை ஒட்டியிருப்பார்கள். ஆனால், இந்த முறையை அன்றே குற்றம் செய்தவரைப் பற்றி 40 மையிலுக்கு கேட்குமாறு அம்பலப்படுத்தி நீதியை நிலை நாட்ட மிகச்சிறந்த யுக்தியை சிந்தித்திருக்கிறார்.

இதைத்தான்,

"தவம் மறைந்து ஒழுகும் தன்மையிலாளர்

அவம் மறைந்து ஒழுகும் அலவல் பெண்டிர்

அறைபோகு அமைச்சர், பிறர்மனை நயப்போர்

பொய்க்கரியாளர் புறங்கூற்றாளர், என்

கைக்கொள் பாசத்துக் கைப்படுவோர் எனக்

காதம் நான்கும் கடுங்குரல் எழுப்பிப் பூதம் புடைத்து உணும் பூத சதுக்கமும்"

என்று சமூகத்தில் முறைகேடுகள் நடக்காமல் தடுக்க சதுக்க பூதத்தால் மட்டுமே முடியும் என்று நினைத்திருக்கிறார் இளங்கோவடிகள். வெறுமனே பயமுறுத்தும் பூதங்களைப் பற்றி தான் நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், சமூகத்தில் குற்றங் கள் நடக்காமல் இருக்க சமூகநீதியை காக்கும் மிகச்சிறந்த பூதத்தை நம் கண் முன்னே காட்டியிருக்கிறார்.

இளங்கோவடிகள் பட்டியலிட்டிருக்கும் அனைத்து குற்றங்களும் இன்று நம் சமூகத்தில் தலைவிரித்தாடிக் கொண்டுதான் இருக்கிறது. தனிமனித ஒழுக்கம் சிதைந்து பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகள், போலிச் சாமியாரின் அந்தப்புற அம்பலங்கள் என்று குற்றங்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்க நீதித்துறை அமைச்சர் போல் திட்டமிட்டு இருக்கிறார் இளங்கோவடிகள் என்றால் அது மிகையாகாது. ஐந்தாவதாக பாவை மன்றத்தை அறிமுகப்படுத்துகிறார் இளங்கோவடிகள். அரசன் முறையாக செங்கோல் செலுத்தாமல், கொடுங்கோல் செலுத்தினாலும், நீதிமன்றத்தில் அறத்திற்கு மாறுபட்டு ஒரு பக்கம் சார்ந்து நீதி வழங்கினாலும் நாவால் சொல்லாது, துன்ப கண்ணீரால் கண்ணால் சொல்லும் பாவை நின்று அழுகின்ற பாவை மன்றமும்,

"அரைசு கோல் கோடினும் அறம் கூறு அவையத்து

உரை நூல் கோடி ஒரு திறம் பற்றினும்

நாவொடு நவிலாது நவைநீர் உகுத்துப்

பாவை நின்று அழூஉம் பாவை மன்றமும்

மெய்வகை உணர்ந்த விழுமியோர் ஏத்தும்

ஐவகை மன்றத்தும் அரும்பலி உறீஇ''

-என்று உண்மையான வாழ்வியல் சிறப்பை உணர்ந்த சான்றோரால் போற்றக்கூடிய ஐவகை மன்றங்களையும் மக்கள் வழிபாடு செய்ததாக இளங்கோவடிகள் சுட்டுகிறார். எல்லா மன்றங் களையும் தாண்டி ஐந்தாவதாக அவர் கூறிய பாவை மன்றம் இன்றைய சமூகப் பெண்களின் அவலங்களுக்கு பெருந் தீர்வாகும்.

பெண் இந்த உலகின் ஆதார சுருதி. மனித இனத் தைப் படைக்கும் பிரம்மா தான் பெண்கள் என்று சொல்லலாம். தொடக்கம் பெண்ணிடம் இருந்து தான் என்று சொன்னாலும் இந்த சமூகம் ஆண்களின் எண்ணத் தொகுப்பாலேயே பின்னப்பட்டிருக்கிறது. ஆட்டோ முதல் ஆகாய விமானம் வரை ஏன் அடுப்படி முதல் அனு விஞ்ஞான ஆராய்ச்சி வரை பெண்கள் சிகரம் தொட்டிருக்கிறார்கள் என்பது பெருமைக்குரியது. ஆனால் பெரும்பாலும் நிதர்சன வாழ்க்கையில் இவை எல்லாம் இலைகளின் மேலே விழுந்த பனித்துளி போலே காணாமல் போய்விடுகிறது. நம் சமூகத்தில் பெண்களின் பதவிக்கும் பணத்திற்கும் கிடைத்த அங்கீகாரம் பெண்ணிற்கு கிடைத்திருக்கி றதா என்பது கேள்விக்குறியே. ஒரு சாதாரண சராசரிப் பெண்ணை இந்த சமூகம் அவ்வளவு எளிதில் அங்கீகரிப்பதில்லை. ஒரு குடும்பத்தில் சிறியவர் முதல் பெரியவர் வரை யார் சரியில்லாமல் போனா லும் அதற்கு பெண்ணே காரணக்கருவாக்கப் படுகிறாள்.

பணிக்குச் செல்லும் பெண்களும் இரட்டைச் சுமை கொண்ட சுமைதாங்கிகளாகவே நடத்தப் படுகிறார்கள். அதற்கும்மேல், பெண்களில் குழந்தைகள் முதல் பெரியவர் வரை பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதனால் பறிபோகும் உயிர்களின் பரிதாபங்கள் எல்லாம் பெண் சமூகத்தில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகின்றன. தேசிய குற்ற ஆவணக் காப்பகம் 2019ஆம் ஆண்டு வெளியிட்ட அறிக்கையில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்கள் 62.4 சதவீதம் என்றும் இந்தியாவில் ஒவ்வொரு நாளும் 88 பாலியல் வன்புணர்வு கொடுமைகள் நிகழ்ந்து வருவதாகவும் வெளியிட்டி ருக்கிறது.

புள்ளிவிவரங்களைத் தாண்டி பெண்களுக்கு எதிராக நடைபெற்ற பல கொடுமைகள் மறைக் கப்பட்டும் புதைக்கப்படும் சிதைக்கப்பட்டும் காணாமல் போயிருக்கின்றன என்பது தான் வருத்தத்திற்குரிய உண்மை. 'பெண் வலிமை அற்றவள்; ஆண் வலிமையானவன்' என்ற போர்வையில் இருந்து இன்னும் இந்த சமூகம் வெளிவரவில்லை என்பதுதான் உண்மை. ஆனால் அன்று முதல் இன்று வரை ஆண்களை விட ஆயிரம் மடங்கு அதிக மனவலிமை உடையவர்கள் பெண்களே என்பதற்கு நம் சிலப்பதிகாரமே மிகச்சிறந்த சான்று. பெண் சமூகத்தின் மீது படிந்திருக்கும் கரையான்களை அப் புறப்படுத்தி மேலும், சமூகத்தின் மீது படர்ந்திருக்கும் குற்றங்கள் தீர வழிகாட்டியதோடு பாவை மன்றத் தின் மூலம் பெண்களின் கண்ணீருக்கு அன்றே பெண்ணியப் போராளியாகக் குரல் கொடுத்திருக்கிறார் இளங்கோவடிகள். பெண்களின் முன்னேற்றமே சமூக முன்னேற்றம். சமூக மாற்றத்தின் திறவுகோல் பெண்கள் தான்.

uday010921
இதையும் படியுங்கள்
Subscribe